Jump to content

படித்து சுவைத்தவை...........................நன்றி வார்த்தை சித்திரங்கள் ( வலைத்தளம் )

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படித்து சுவைத்தவை.......நன்றி வார்த்தை சித்திரங்கள் ( வலைத்தளம் )

திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து...

"அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அவர்கள் உற்சாகமாக இருப்பர் " என்று அந்த 25 விஷயங்களைப் பற்றிக் கூறியுள்ளார். அவை:

1. கொழுப்பு குறைய வேண்டும் : உடலில் சதை போடுவது பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையைக் குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலைக் கணவர் பாராட்ட வேண்டும் : உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆஹா, ஓஹோ எனப் பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல : வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது. சினிமாவில்தான் அப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான் வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

4. ஆண்மகன் : சிறந்த ஆண்மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்கவேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

5. பொறுப்பு : காலையில் வேலைக்குச் செல்லும்போது, கண்ணாடி எங்கே? சாவி எங்கே? என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக்கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ளவேண்டும்.

6. கட்டுப்பாடு : உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக்கூடாது.

7. விடுமுறை : விடுமுறை நாட்களில் விரும்பியபடி, ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.

8. தொந்தரவு : எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் எனத் தொந்தரவு செய்யக்கூடாது.

9. உதவி : சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு : 'இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது ...' எனப் பாராட்டவேண்டும்.

11. இளமை : நாம் எப்போதும் இளமையாக இருக்கமாட்டோம். அதை நினைவில் கொள்ளவேண்டும்

12. டிரைவிங் : கணவன் கார் ஓட்டும்போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும்போது கணவனோ, பின்சீட்டில் உட்காரக்கூடாது.

13. ஒத்துழைப்பு : குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனைவியைத் திட்டக்கூடாது. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு : தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

15. சம உரிமை : வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை

ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

16. அவசரம்கூடாது : படுக்கைஅறையில் போர் அடிக்கும் வகையில் கணவன் நடந்து கொள்ளக்கூடாது.

17. ஆச்சர்யம் : வைரமோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ் : ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கமுடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை

எடுத்துக் கொடுக்கவேண்டும்.

19. குழந்தைகள் : நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமைபோல் நடத்தக்கூடாது. இதில் கணவரின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம் : நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்கவேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக்கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர் : ' ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகிவிட்டதே! ' எனக் கூச்சல் போடக்கூடாது.

22. சுற்றுலா : அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம் : படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல், ஷெகேசில் உள்ள பொம்மைகள்,பொருட்களையும் சுத்தம் செய்யவேண்டும்.

24. சிக்கல் : பெண்களுக்கு தலைவலி வருவதே, டிரஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவவேண்டும்.

25. பொழுதுபோக்கு : சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் ,நண்பர் களுடன் விருந்துக்குச் செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்கவேண்டும். ' வேலை இருக்கிறது, 'டிவி' யை பார்த்துக்கொண்டு தூங்கு! ' என கணவர்கள் சொல்லக்கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்; இவற்றை நிறைவேற்றினாலே போதும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம்தான்" என்று சொல்லியிருக்கிறார்.

சர்வே பண்ணி,அவர் சொல்லியிருக்கிற, இந்த இருபத்தஞ்சும் செய்ய வேண்டாம்.( அதிகமா ஆசைப் படல!!! ) இதுல இருந்து ஒரு சில விஷயங்கள மட்டும்கூட, இந்த ஹஸ்பண்ட்கள் பண்ணினாப் போதும்; நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்..அப்படித்தான?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு சகோதரி :D

Link to comment
Share on other sites

படித்து சுவைத்தவை.......நன்றி வார்த்தை சித்திரங்கள் ( வலைத்தளம் )

திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து...

"அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அவர்கள் உற்சாகமாக இருப்பர் " என்று அந்த 25 விஷயங்களைப் பற்றிக் கூறியுள்ளார். அவை:

1. கொழுப்பு குறைய வேண்டும் : உடலில் சதை போடுவது பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையைக் குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

இதுக்குத்தான் சொல்லுறது அளவா சாப்பிட வேணும் என்று... சாப்பாடுச் செலவு ஒன்று, அதில வேற கொழுப்பு குறைக்கிறதுக்கு மருந்து செலவு ஒன்று...

2. சமையலைக் கணவர் பாராட்ட வேண்டும் : உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆஹா, ஓஹோ எனப் பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

பெண்களை விட ஆண்களுக்கு பொறுமை அதிகம் என்று அவர்களே நினைத்தால் சரி.

3. ஊமை அல்ல : வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது. சினிமாவில்தான் அப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான் வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

அம்மிக் குளவி தலையில் விழாமல் இருக்க வேற வழி?

4. ஆண்மகன் : சிறந்த ஆண்மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்கவேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

மனைவிக்கு மட்டும் இல்லை, மனைவியின்ர ஆக்கள் எல்லாருக்கும் எல்லா உதவியும் செய்யோணுமாம்.

5. பொறுப்பு : காலையில் வேலைக்குச் செல்லும்போது, கண்ணாடி எங்கே? சாவி எங்கே? என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக்கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ளவேண்டும்.

அட்லீஸ்ட் கண்ணாடி, சாவி தன்னும் எழும்பி எடுத்துக் குடுக்க ஏலாது.

6. கட்டுப்பாடு : உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக்கூடாது.

இது யாருக்கு? பெண்களுக்கா? இல்லை ஆண்ங்களிடம் எதிர் பார்ப்பதா?

7. விடுமுறை : விடுமுறை நாட்களில் விரும்பியபடி, ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.

ஓ... அவையளும் வேலைக்குப் போறவையளா? சரி சரி... அப்படி வேலைக்குப் போறவையள் வேலை நாட்களில் சமைப்பினமோ?

8. தொந்தரவு : எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் எனத் தொந்தரவு செய்யக்கூடாது.

ஆர்... ஆம்பிள்ளையளா அவசரப் படுத்துறது?

9. உதவி : சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

உதவலாம்... சமையலுக்கு மட்டும் தேவைப் படும் உதவியாக இருந்தால் மட்டும்... வேற கதைகள் வராமல் இருந்தால் சரி...

10. பாராட்டு : 'இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது ...' எனப் பாராட்டவேண்டும்.

உண்மையா சொன்னால் பிடிக்காதே...

11. இளமை : நாம் எப்போதும் இளமையாக இருக்கமாட்டோம். அதை நினைவில் கொள்ளவேண்டும்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்...

12. டிரைவிங் : கணவன் கார் ஓட்டும்போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும்போது கணவனோ, பின்சீட்டில் உட்காரக்கூடாது.

அப்ப, சட்லைட் நவகேஷன் வாங்குற செலவு மிச்சம்...

13. ஒத்துழைப்பு : குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனைவியைத் திட்டக்கூடாது. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

19. குழந்தைகள் : நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமைபோல் நடத்தக்கூடாது. இதில் கணவரின் பங்கு முக்கியம்.

சரி!

------

14. நல்ல முடிவு : தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

விவாதிக்க வெளிக்கிட்டு எப்ப நல்ல முடிவு வந்து இருக்கு...??

15. சம உரிமை : வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அது தானே... கஜானவிலையே எப்பவும் குறியா இருங்கோ...

17. ஆச்சர்யம் : வைரமோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தாலே போதும்.

இது எப்பல இருந்து??? சொல்லவே இல்லை...

18. புது டிரஸ் : ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கமுடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்துக் கொடுக்கவேண்டும்.

20. பொருத்தம் : நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்கவேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக்கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர் : ' ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகிவிட்டதே! ' எனக் கூச்சல் போடக்கூடாது.

அது தெரிஞ்சு தானே கணக்கெடுத்து வெளியிட்டு இருக்கினம்..

22. சுற்றுலா : அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

24. சிக்கல் : பெண்களுக்கு தலைவலி வருவதே, டிரஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவவேண்டும்.

25. பொழுதுபோக்கு : சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் ,நண்பர் களுடன் விருந்துக்குச் செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்கவேண்டும். ' வேலை இருக்கிறது, 'டிவி' யை பார்த்துக்கொண்டு தூங்கு! ' என கணவர்கள் சொல்லக்கூடாது.

அது தானே? அவனவன் இரவு பகலா வேலை செய்து, புதுப் புது துணிகளா எடுத்துக் குடுக்க வேணும், மாதக் கடைசில பில் வரேக்க நேரம், மனைவியின் பழைய துணியைத் தலைல போட்டுக் கொண்டு இருக்க வேணும்...

16. அவசரம்கூடாது : படுக்கைஅறையில் போர் அடிக்கும் வகையில் கணவன் நடந்து கொள்ளக்கூடாது.

மனுசருக்குக் வேலைக் களைப்பே வரக் கூடாது...

23. சுத்தம் : படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல், ஷெகேசில் உள்ள பொம்மைகள்,பொருட்களையும் சுத்தம் செய்யவேண்டும்.

:Dஅவை உருப்படியா ஒண்டும் செய்யோணும் என்று நினைச்சதா தெரிய இல்லை...

பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்; இவற்றை நிறைவேற்றினாலே போதும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம்தான்" என்று சொல்லியிருக்கிறார்.

அட இவ்வளவும் தானே? என்ன கொஞ்சமா முடிச்சிடியள்... :o:)

சர்வே பண்ணி,அவர் சொல்லியிருக்கிற, இந்த இருபத்தஞ்சும் செய்ய வேண்டாம்.( அதிகமா ஆசைப் படல!!! ) இதுல இருந்து ஒரு சில விஷயங்கள மட்டும்கூட, இந்த ஹஸ்பண்ட்கள் பண்ணினாப் போதும்; நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்..அப்படித்தான?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த இருபத்தியஞ்சு விசயத்தையும் வாழ்க்கைமுழுக்க மண்டையுக்கை வைச்சு அலைக்கழியிற நேரம்....

பேசாமல் ஒரு போத்தில் பொலிடோலை அமுக்கிப்போட்டு செத்தேன்சிவனே எண்டு மேலோகம் போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோடா, உங்க ஊரில காவித் துணி மலிவாக்கிடைக்குமா? கையோட ஒரு ஆச்சிரமம் அமைக்கவும் மலிவாக இடம் கிடைக்குமா எனப் பாத்துச்சொல்லுங்கோ. மேலே குறிப்பிட்ட எதுவுமே தேவையில்லை ஏதாவதைத் திறந்துவிட்டா எதாவது வரும் பாவிச்சிட்டு மீண்டும் திறந்துவிட்டா ஓடிப்போயிடும் விசயத்தைக் கமுக்கமா முடிச்சிடலாம். இதுக்குப்போய் பத்துக்கட்டளைகணக்கா, எங்கடபாடு பரிதாபமாக இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த இருபத்தியஞ்சு விசயத்தையும் வாழ்க்கைமுழுக்க மண்டையுக்கை வைச்சு அலைக்கழியிற நேரம்....

பேசாமல் ஒரு போத்தில் பொலிடோலை அமுக்கிப்போட்டு செத்தேன்சிவனே எண்டு மேலோகம் போகலாம்.

ஆகா..... அருமை.... 301.giffunny.giforjnfq.gif:o:D

Link to comment
Share on other sites

உந்த இருபத்தியஞ்சு விசயத்தையும் வாழ்க்கைமுழுக்க மண்டையுக்கை வைச்சு அலைக்கழியிற நேரம்....

பேசாமல் ஒரு போத்தில் பொலிடோலை அமுக்கிப்போட்டு செத்தேன்சிவனே எண்டு மேலோகம் போகலாம்.

சிம்பிளி சூபெர்ப்.

யாழ் கள வள்ளுவருக்கு எத்தனை பச்சை குத்தினாலும் தகும். :)

Link to comment
Share on other sites

உந்த இருபத்தியஞ்சு விசயத்தையும் வாழ்க்கைமுழுக்க மண்டையுக்கை வைச்சு அலைக்கழியிற நேரம்....

பேசாமல் ஒரு போத்தில் பொலிடோலை அமுக்கிப்போட்டு செத்தேன்சிவனே எண்டு மேலோகம் போகலாம்.

க க க போ...!!! :)smiley-laughing014.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.