• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அபிராம்

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)

Recommended Posts

பாகம் ஒன்று

சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்..

கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல்.

"தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது.

யார் அவர்கள்..??

காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போது..

"தம்பிமார்..எனக்கு தெரியும் எண்ட பிள்ளை கட்டாயம் இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்று. என்றாலும் இப்போ கந்த சஷ்டி. ஒருவாரம் கழிச்சு வாரீங்களா பாரணை முடிச்சு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அந்த வீரதாய்.

அதற்கு மதிப்பளித்து தான் இன்று அவர்கள் வாறதாக இருக்கிறார்கள்.

இரவு முழுவதும் வீட்டில் ஒரே அழுகை. அவனது இரு தங்கைகளும், "அண்ணா உனக்காக நாங்கள் போகிறோம் நீதான் ஒரே ஆம்பிளை அம்மா அப்பாவை நீதான் பார்க்கணும்" என்றும் அண்ணாவோ, "இல்லை தங்கச்சிகளே சண்டை என்கிறது அவ்வளவு சுலபம் இல்லை, உங்களை அங்கே கஷ்டப்படவிட்டிட்டு நான் இங்கே சந்தோசமாக இருக்க முடியாது" என்று மாறி மாறி பாசமழைகளும் அழுகைகளும் தான் மிச்சம்.

ராணி அம்மாவுக்கோ இனி மகனுக்கு நல்ல சாப்பாடுகள் கிடைக்குமோ... ச்சே இந்த கந்த சஷ்டியாலே மகனுக்கு பிடிச்ச எந்த மச்ச கறிகளையும் சமைச்சு கொடுக்காமல் அனுபிறோமே என்ற கவலை.

காலையில் அவர்கள் வந்திருந்தார்கள். "தம்பிமாரே இருங்கள் அவன் வெளிகிடுறான்.. நீங்கள் சாப்பிடுறீங்களா ?" என்று அன்பாக கேட்டாள் அந்த அம்மா. கொடிய போருக்கு அழைத்து செல்ல வந்திருக்கும் அவர்களையும் அன்பாக உபசரிக்கும் அந்த தமிழ் தாயின் அன்பு யாருக்கு தான் வரும்.

அந்த அம்மாவின் அன்புக்காக அவர்கள் சாப்பிட்டார்கள். அவன் அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் ..தங்கச்சிமாரை கட்டி அணைத்து அறிவுரைகள் கூறிக்கொண்டான். அவன் போக போவது தெரியாமல் வாலை ஆட்டி கொண்டிருந்த நாயை கூட ஒரு முறை கொஞ்சி கொண்டான்.

"தம்பி கவனமாக இருந்து கொள். ஒழுங்காக சாப்பிடு..உனக்காக தான் நாங்கள் இங்கே உயிரோட இருக்கிறம் என்றதை எப்பவும் மறக்காதே"..என்று தாயும் தந்தையும் மாறி மாறி கட்டி அணைத்து அழுதபடியே வழி அனுப்ப அவன் அவர்களோடு புறப்பட்டான் மீளாத பயணத்துக்காக.

வாசல் வரை நடக்கும் போது அவர்களிடம் அம்மா கேட்டாள்." தம்பீ..நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் பெத்த மனசு தம்பி ... தம்பி இவன் வீட்டிலேயே செல்லமாக வளர்ந்த பிள்ளை ..ஒரே ஆம்பிளை பிள்ளை ..இவன் வளர்ந்து தான் ஏலாத எங்களையும் தங்கச்சிமாரையும் பார்ப்பான் என்று பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ..சண்டைக்கு அனுப்பாமல் பார்பீங்களா..??"

அந்த அம்மா தந்த சோறு இன்னும் வயிற்றுக்குள் தான் இருந்தது அவர்களுக்கு. இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவர்கள் பட்ட தவிப்பை உணர்ந்த அம்மா.. "பரவாயில்லை தம்பி ..போயிட்டுவங்கோ" என்று அனுப்பி வைத்தாள்.

அவன் வளர்த்த நாயில் இருந்து அந்த வீட்டில் இருந்த அனைத்து ஜீவராசிகளுமே படலை மட்டும் வந்திருந்தன..திரும்பி வராத அவனை வழியனுப்ப..

(தொடரும்)

பாகம் இரண்டு இங்கே அழுத்துங்கள்

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்...ஒரு குடும்பமே மனம் உவந்து தங்கள் ஒரே மகனை போராட்டத்திற்கு அனுப்பவது என்டால் அது எப்பேற்பட்ட தியாகம்.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கோ அபிராம்.... நீண்ட நாட்களின் பின்பு எழுதுகிறிர்கள் என்று நினைக்கிறேன்... நீங்களும் எங்கேயாவது கொலிடே போயீருந்திங்களோ? பெரிய தியாகம் அம்மாவே அனுப்பி வைப்பது என்பது...

Share this post


Link to post
Share on other sites

தொடர்ச்சியை காண ஆவல்

Share this post


Link to post
Share on other sites

எதுக்கும் ஒரு பச்சைய குத்திட்டு போவம். :lol:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு எதுவுமே சொல்ல தோண இல்லை..smiley-sad010.gif :)

Share this post


Link to post
Share on other sites

மனதில் கனமான உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டவாறு கதை அமைகின்றது...தொடருங்கள் அபிராம்.. எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது

Share this post


Link to post
Share on other sites

பாகம் இரண்டு

வணக்கம்..

நான்தாங்க நேசன் பேசுறேன்..

என்ன அப்படி பார்க்கிறீங்கள்.. சென்ற பாக கதையின் நாயகன் தாங்க..

சரி இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வாறன்.

என்னை கூட்டி கொண்டு போகும் இந்த இரண்டு அண்ணைமாரையும் எனக்கு ஒரு வாரத்துக்கு முதல் தான் தெரியும்.

எப்படியும் பொறியியல் கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்று உறுதியோட, வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிக்கு தனியார் வகுப்புக்காக வரும்போது கோவிந்தன் கடை சந்தியடியில் மறித்து .."தம்பி உங்களோட கொஞ்ச நேரம் பேசவேணும் நேரம் இருக்குமா" என்று கேட்ட போது தான் நான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன்.

என்ன.. என்னை விட நாலு அல்லது ஐந்து வயசுதான் கூட இருக்கும். சிரித்தபடி தான் கேட்டார்கள். எனக்கும் வகுப்புக்கு கொஞ்சம் நேரம் இருந்ததால் அவர்களுடன் பேச ஒத்துக்கொண்டேன்.

"தம்பி உங்களுக்கு தெரியாதது ஒண்டும் இல்லை. இராணுவம் மன்னார் பக்கத்தால உடைச்சு கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டருக்கு மேல முன்னணி காவலரண்கள்..ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண், காவலரணுக்கு மூன்று பேர், மூன்று கடமை நேரம் என்று பார்த்தாலும் தம்பி..எத்தனை பேர் வேணும் என்று நீங்களே கணக்கு பண்ணி பாருங்க தம்பி." அந்த அண்ணா சொல்லி கொண்டே போனார்.

"அண்ணே நீங்கள் சொல்லுறது விளங்குது அண்ணே ..வீட்டிலேயே இரண்டு தங்கச்சி, ஏலாத அப்பா அம்மா, எல்லாரையும் நான் தான் அண்ணே பார்க்க வேணும். நான் படிச்சு பொறியிலாலராக வந்தால் தான் எதுவுமே செய்யமுடியும் அண்ணா. நான் வேணும் என்றால் படிச்சு முடிச்ச பிறகு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா" என்று கேட்டேன்.

"தம்பி நீங்கள் படிச்சால் எங்கட நாட்டுக்கு தான் பெருமை தம்பி.. ஆனால் போற போக்கை பார்த்தால் நீங்கள் படிச்சு சோதனை எழுத முதலே உங்கட வீட்டு வாசலில் வந்து இராணுவம் நிப்பான் தம்பி. நானும் பொறியியாலனாக வரவேண்டும் என்று தான் படிச்சேன். இன்றைய நிலைமை அப்படி தம்பி... இல்லை என்றால் உங்களை படிக்க விட்டு நாங்களே சண்டை பிடிச்சிருப்போம்."

"தம்பி உங்களுக்கே தெரியும். ஜெயசுக்குறு காலத்திலும் சரி, யாழ்பாண சண்டையிலும் சரி, மாணவர்களை சுழற்சி முறையில் தான் களபணிக்கு கேட்டோமே தவிர முழுமையாக கேட்கவில்லை. இன்றைய நிலைமையை உணர்ந்து தான் உங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறோம்" என்று நியாயம் சொன்னார் அந்த அண்ணா.

அவர்கள் சொல்லுவது நியாமாகபட்டாலும் வீட்டு நிலைமையை யோசித்து, இவர்களை வெட்டிவிட வேண்டும் என்று மனசிலே நினைத்து, " அண்ணே வகுப்பு நேரமாச்சு..நான் போகவேணும். வீட்டை போய் யோசிச்சு பார்கிறேன். விரும்பினால் எங்கே வந்து சேரவேண்டும்" என்று நயமாக கேட்டு அவர்களின் முகாம் முகவரியை தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

மாலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர்கள் சொன்னது தான் காதில் ஓடி கொண்டிருந்தது. நான் படிக்க வேண்டும் என்றதுக்காக யாரோ அண்ணாமார் அக்காமார் இரவிரவாக கண்விழித்து காவலரணில் கடமை இருப்பது எனக்கு என்னவோ செய்தது.

அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கும் தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..அன்று என்னை தூங்கவே விடவில்லை. நான் தூங்கும் போது விடிந்திருந்தது வானம் மட்டும் இல்லை என் மனசும் தான்.

காலையில் ஒரு முடிவோட அம்மாவிடம் வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு அவர்களின் முகாமுக்கு போனேன். நேற்று என்னுடன் பேசிய அண்ணா முகாமின் முற்றத்தை கூட்டி கொண்டிருந்தார்.

என்னை கண்டது அருகில் வந்து "என்ன தம்பி ..முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது" என்று மனசை அறிந்து பேசினார். "அண்ணா ..யோசிச்சு பார்த்தேன் உங்களுடன் சேருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். என்னால் என் அம்மாவிடம் நேரடியாக கேட்கவும் முடியாது. அவ தாங்கமாட்டா..சொல்லாமல் ஓடி வரவும் எனக்கு பிடிக்கவில்லை ..நீங்க தான் வந்து அம்மாவிடம் பேசவேண்டும்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பி எதுவுமே நடக்காதது மாதிரி புத்தகத்தை எடுத்து வழமைக்கு மாறாக படிப்பது போல பாசாங்கு காட்ட தொடங்கினேன்.

நான் கஷ்டபட்டு படிக்கிறேன் என்று நினைத்து ,அம்மா விரததோடையும் தேநீர் ஊற்றிவந்து கொடுத்துவிட்டு ,தலையை தடவி நல்லா படியடா என்று சொல்லிவிட்டு போகும்போது எனக்கு உள்ளுக்குள்ளே அழுகை தான் வந்தது.

எனக்கென்ன.. என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கும் வந்திருக்கும் தானே.??

அன்று மாலையே அவர்கள் வந்தார்கள்.

அதுக்கு அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.

நான் செய்தது நியாயம் தானே உறவுகளே..??

இப்போ அந்த அண்ணைமாருடன் உங்கள் விடிவுக்காக போகிறேன்.நாளை நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையுடன் போகிறேன்.

எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக மனசுக்குள்ளே பிரார்த்திப்பீர்கள் என்று..ஒண்டுக்கும் யோசிக்காதீங்க நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடிவு பெற்று தருவோம்.

என்ன.. என்ர அம்மா மாதிரி அழுது கொண்டிருகிறீங்கள்.. அழாதீங்க..

நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக.

போய்வரட்டுமா என் உடன்பிறப்புகளே..!

பாகம் மூன்று இங்கே அழுத்துங்கள்

(விடியல் தொடரும்)

Share this post


Link to post
Share on other sites

அபிராம் நீங்கள் கதை எழுதும் போது கீழே உண்மைக் கதை எனப் போடாமல் எழுதினீர்கள் என்டால் எல்லோருடைய ஆதரவும் அந்த மாதிரி இருக்கும்...உண்மைக் கதையிலும் பார்க்க கற்பனை கதைக்கு பெறுமதி அதிகம்

Share this post


Link to post
Share on other sites

பாகம் இரண்டு

அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கு தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..

(விடியல் தொடரும்)

மனதைப் பிழியும் வசனங்கள்

வாத்தியார்

*********

Share this post


Link to post
Share on other sites

நன்றி தோழர் அபிராம் :)

Share this post


Link to post
Share on other sites

பாகம் மூன்று

நேசனை அழைத்து சென்ற அந்த போராளிகள், அவனை தங்கள் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

"அண்ணே, இந்த தம்பியின் அம்மாவே போராடத்தில் இணைய அனுப்பி வைத்தவ.." என்று சொல்ல "சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னார்" பொறுப்பாளர் சேகர்.

சேகர் , இயக்கத்தின் தொலைதொடர்புக்கு பொறுப்பானவர். இயக்கத்தின் மீதும் தலைவர் மீதும் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். ஜெயசுக்குறு காலத்தில் அவருடன் பணியாற்றி வீரச்சாவடைந்த தளபதியின் பேரையே தனது ஒரே மகனுக்கு வைத்த ஒரு ஆழமான போராளி. இவை எல்லாவருக்கும் மேலாக ஒவ்வொருநாளும் காலையில் அவரது அறையில் இருக்கும் அனைத்து மாவீரர்களின் படங்களுக்கும் பூ வைக்காமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை.வெள்ளிகிழமை தோறும் துயிலும் இல்லம் போய், மாவீரரை வணங்கி, விரதமிருந்து தான் கடமையாற்றும் ஒரு உன்னத போராளி.

என்றுமே சிரித்த முகமும், மிடுக்கான பார்வையும் அவரை ஒரு ஆளுமை மிக்க போராளியாக, தளபதியாக நேசனுக்கு காட்டியது.

"தம்பி உங்கட பெயர் என்ன ? " அன்பாக கேட்டார் தளபதி சேகர்.

"நேசன்.." அடக்கமாக பதில் சொன்னான்.

"உமக்கு இயக்கத்தில் என்ன செய்ய விருப்பம்.?"

"அண்ணே.. ஏதாவது தொழில்நுட்ப துறையில் சாதிக்கணும் என்று ஆசை "

"சரி நான் இப்பொது ஒரு முக்கிய சந்திப்புக்காக போறேன். அங்கே எனக்கு பொறுப்பானவரை சந்திப்பேன். அவருடன் பேசி முடிவெடுத்துவிட்டு உமக்கு சொல்லுறேன். அது மட்டும் உந்த இருக்கையில் இரும்" என்று சொல்லிவிட்டு உந்துருளியில் வெளியில் சென்றுவிட்டார் தளபதி சேகர்.

அவரது அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில், பாலா அண்ணா எழுதிய "விடுதலை வேட்கையை" எடுத்து புரட்ட தொடங்கினான் நேசன். மனசிலே அம்மா, தங்கைகளின் எண்ணங்கள் வாட்ட தொடங்கின.

நேரம் போனது தெரியவில்லை. உந்துருளியின் சத்தம் கேட்டு நிமிர்ந்த போது, சிரித்தபடியே வந்தார் தளபதி சேகர்.

"தம்பி உம்மை எங்கட பிரிவிலையே இணைக்க சொல்லிவிட்டார். நீர் எங்களுடனே பணி செய்யமுடியும். உமக்கு தொலைதொடர்பு துறையில் பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லைதானே" என்ற போது மகிழ்வுடன் தலையாட்டினான் நேசன்.

"தம்பி. இந்த பிரிவு மிகவும் ரகசியமானது. இங்கு நடக்கும் எந்த வேலை திட்டமும் வெளியிலே யாருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது. இந்த ரகசியங்கள் நாங்கள் சாகும்போது எங்களுடன் சாக வேண்டியவை புரிந்ததா..??. எங்கட இயக்கம் இண்டைக்கு இந்தளவுக்கு வளர்ந்திருக்கு என்றால் அதுக்கு இரகசிய காப்பு தான் முக்கியம் என்றதை எப்பவும் மனசிலே வைச்சிருக்க வேணும். சரியா "

"ஓம் அண்ணே".

"சரி தம்பி. உமக்கு ஒரு இயக்க பெயர் தமிழில் வைக்க வேண்டும். உமக்கு ஏதாவது பெயர் விருப்பமா ?"

"ராணி மைந்தன்" என்றான் நேசன்.

"ஏன் தம்பி இந்த பெயரில் ஆரும் உங்கட உறவினர்கள் வீரச்சாவா ?"

"இல்லை அண்ணா. எங்கள் அம்மாவின் பெயர் ராணி".

ராணி மைந்தனுக்கு அந்த வேலை மிகவும் பழகிபோனது. தன்னுடைய அறிவுத்திறமையை வைத்து மேலும் மேலும் அந்த தொடர்பாடல் துறையை விருத்தி செய்தான். தளபதி சேகருக்கும், ராணி மைந்தனை மிகவும் பிடித்து போனது. சில சந்தர்ப்பங்களில் அனைவராலும் கைவிடபட்ட உபகரணங்களை கூட ராணி மைந்தன் தன்னுடைய திறமையால் திருத்திஅமைத்தான்.

அந்த வன்னி நிலபரப்பில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவையை வழங்குவதில் ராணி மைந்தனின் பங்கு அளப்பரியதாக இருந்தது. ராணி மைந்தனின் தேவையை உணர்ந்து அவனது அடிப்படை பயிற்சி தள்ளி போய்கொண்டிருந்தது. ஏனையவர்கள் அடிப்படை பயிற்சியை முடித்து பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும், ராணி மைந்தனுக்கு அவனது வேலை ரகசியம் காரணமாக பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பை இழந்திருந்தான்.

ஒவ்வொரு நாளும் தனது நாட்குறிப்பில் அம்மா, அப்பா, தங்கைகளை பற்றி தான் என்ன நினைச்சேன் என்று எழுதிவருவான். சந்திக்கும் நாளில் கூட பேச நிறைய நேரம் கிடைக்காது என்பதால், இந்த நாட்குறிப்பை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிறையவே எழுதுவான்.

அன்று அவனுக்கு தெரியாது. இந்த நாட்குறிப்பை என்றைக்குமே அவர்கள் பார்க்க போவதில்லை என்று.

(தொடரும்)

பாகம் நான்கு இங்கே அழுத்துங்கள்

Share this post


Link to post
Share on other sites

இப்போது தான் பார்த்தேன், எழுதுவதற்கு வார்த்தைகளே வருது இல்லை மனம் தான் கனத்திருக்கு... :unsure: தொடருங்கள்!

Share this post


Link to post
Share on other sites

மனதை தொட்டபடி எழுதிச் செல்லுகின்றீர்கள்.

போர் என்பது வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஒரு சினிமாதான்.

பங்குபற்றுவனுக்கு தான் அதன் உண்மைநிலை தெரியும்.

Share this post


Link to post
Share on other sites

பாகம் நான்கு

"ஐயா! இந்த கத்தரிக்காய் என்ன விலை.?"

"கால் கிலோ நாற்பத்தைந்து ரூபாய் அம்மா.." என்று சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு தக்காளிபழம் நிறுத்து கொண்டிருந்தார் அந்த மரக்கறி வர்த்தகர்.

"ஒரு கால் கிலோ போடுங்கையா.."

அவர் அதை நிறுத்துகொண்டே "வேற ஏதாவது.." என்று கேட்டபோது தான் ராணியம்மா அவர்களை பார்த்தார்.

"ஓம் அவர்களே தான்.." என்று மனசுக்குள்ளே சொல்லிகொண்டு "ஐயா இந்த மரக்கறி கூடையை கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள் நான் இப்பவே வந்திடுவன் " என்று சொல்லிவிட்டு ஐயாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவர்களை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினார்.

"தம்பி நீங்க தானே அண்டைக்கு வீட்டுக்கு வந்து நேசனை கூட்டி கொண்டு போனீர்கள்..." சிறு ஐயத்துடன் தான் ராணியம்மா கேட்டார்.

"ஓம் அம்மா.. அவர் எங்களுடன் தான் இருக்கிறார். உங்கட பெயரை தான் தனக்கும் வைச்சிருக்கிறார். ராணிமைந்தன் என்று"

ராணியம்மாவுக்கு கண்கள் கலங்கின. ஒருகையால் துடைத்துக்கொண்டே "தம்பி கேட்கிறேன் என்று குறை நினைக்காதீங்க..மற்ற பிள்ளைகள் எல்லாம் இயக்கத்துக்கு போய் ஒன்று இரண்டு மாதங்களிலேயே பெற்றோருக்கு காட்டினார்கள். நேசன் போய் ஐந்து மாதங்கள் ஒரு நாள் கூட அவனை காட்டலை. என் மகனுக்கு ஏதாவது காயம்.. கீயம்..." மனசிலே இருந்த வலிகள் வார்த்தைகளாக..

"அப்படி ஒன்றும் இல்லையம்மா. அவர் சண்டைக்கே போகவில்லை. ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் அதை விட்டு வரமுடியாமல் உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் உங்களை வந்து பார்ப்பார்".

"எப்போ தம்பி .?"

இந்த கேள்விக்கு அவர்களுக்கு என்ன. அந்த ஆண்டவனுக்கே பதில் தெரியாது.

"கூடிய சீக்கிரம் அம்மா. அந்த வேலை முடிஞ்சதும் வருவார்".

"சரி தம்பி. நீங்கள் அவனை கண்டால் அம்மா ரொம்பவும் விசாரித்ததாக சொல்லுங்க. கிழமைக்கு ஒருக்கா எண்ணெய் தேச்சு குளிக்க சொல்லுங்க. நல்லா சாப்பிட சொல்லுங்க. கவனமாக இருக்க சொல்லுங்க. தங்களை பற்றி கவலை படவேண்டாம் என்று சொல்லுங்க.. தங்கச்சிமார் நல்லா படிக்கினம் என்று சொல்லுங்க ... " என்று அடுக்கி கொண்டே போனார்.

"ஓம் அம்மா.. நிச்சயமாக சொல்லுறம்" என்று அவர்கள் புறப்படும் போது..

"தம்பிமார் ..எனக்கு ஒரு உதவி செய்வீங்களா.. நாளைக்கு மதியம் போல ஒருக்கா வீட்டுக்கு வருவீங்களா"

"அம்மா நாளைக்கு பெரும்பாலும் இஞ்சாலை பக்கம் தான் வேலை. நிச்சயமாக வருவோம்" என்று சொல்லிட்டு போய்விட்டார்கள்.

வீட்டுக்கு வந்த ராணியம்மவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. நேசனின் சிறுவயசு படத்தை கொஞ்சியபடியே சொன்னாள் "என் பிள்ளை என் பிள்ளை தான்" என்று கண்களில் நீர்வர ஆனந்தமாக சொன்னாள்.

தங்கைகள் சுபாவுக்கு மதிக்கும் என்னவென்றே புரியவில்லை.

"அம்மா.. என்னம்மா நடந்தது அண்ணாவை பார்த்தியா"

"இல்லையடி.. அண்ணாவை கூட்டி கொண்டு போனவர்களை பார்த்தேன். அவன் என் பெயரைத்தான் தனக்கு வைச்சிருக்கிறான். என் பிள்ளை என்னை மறக்கவே இல்லை."

"சரி மச மச என்று நிக்காமல் அண்ணாவுக்கு கடிதம் எழுதுங்கோ.. நாளைக்கு அவர்கள் வருவார்கள் அவர்களிடம் கொடுத்துவிடலாம்" என்று பிள்ளைகளை துரத்தினாள்.

தானும் கடிதம் எழுத தொடங்கினாள்.

அன்புள்ள தம்பி,

நாங்கள் நலம். தம்பி.. வட்டக்கச்சி முருகன் துணையால் நீயும் நலமாக இருப்பாய். தம்பி உன்னை கூட்டி சென்றவர்களை இன்று சந்தையில் பார்த்தேன். அவர்களிடம் கொடுக்க தான் இந்த கடிதம் எழுதுகிறேன்.

தம்பி..ஒவ்வொரு நாளும் உன் நினைப்பு தான். எந்த நாளும் நான் சாப்பிட ஒரு வாயை வைக்கும்போது... நீ சாப்பிடியா..உனக்கு நல்ல சாப்பாடு கிடைச்சுதா என்ற எண்ணமே என்னை சாப்பிட விடாது தம்பி. எங்க வீட்டு நாய் கூட நீ இல்லாமல் சாப்பிடுது இல்லை..நாங்க மட்டும் எப்படி தம்பி...??

நீ எத்தனை நாள் என்னிடம் கேட்டிருப்பாய் எனக்கு ஊட்டிவிடம்மா என்று. நானும் நீ வளர்ந்திட்டாய் என்று தட்டிகழிப்பேன் .. இப்போ தோணுதையா..உன்னை பக்கத்தில் வைச்சு ஊட்டிவிடணும் போல..எப்போ அப்பா இந்த அம்மாவை பார்க்க வருவாய்.

தம்பி..தங்கச்சிகள் எல்லாம் நல்ல படிக்குதுகள். தங்களுக்காக தான் அண்ணன் இயக்கத்துக்கு போனான் என்று உணர்ந்து படிக்குதுகள். அப்பா வயலுக்கு போய்ட்டார். வந்ததும் சொல்லுறன். அவரும் உனக்கு கடிதம் எழுதணும் என்று சொன்னவர்.

தம்பி..உனக்கு நிறைய எழுதணும் என்று யோசிச்சு வைச்சேன். இப்போ கண்ணீர் மட்டும் தான் வருகுது எழுத்து வருகுதில்ல. குறை நினைக்காதே இந்த அம்மா உன்னை எண்டைக்கும் நினைச்சு கொண்டுதான் இருப்பா.

கவனமாக இருந்து கொள். பதில் போடு. பொறுப்பாளரிடம் கேட்டு வீட்டுக்கு ஒருக்கா வந்திட்டு போ.

அன்புடன்,

அம்மா.

குறிப்பு : தம்பி இந்த கடிதத்துடன் உனக்கு பிடிச்ச பத்து கோழிக்கறி சாப்பாடு பொதிகள் கொடுத்துவிடுறேன்.. நீயும் சாப்பிட்டு மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடு.

"பாவம் அவர்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளோ. அவங்கள் அம்மாவும் என்னை போல தானே கவலைபடுவாங்க. ஒரு அம்மாவின் வலி இன்னொரு அம்மாவுக்கு தானே தெரியும் " என்று மனசிலே சொல்லிக்கொண்டு ராணியம்மா நாளைக்கு சமைபதற்கான ஆயத்தங்களில் ஈடுபட தொடங்கினார்.

மறுநாள் காலையிலையே எழும்பி தன் மகனுக்காகவும், மகன்களுக்காவும் தன் பாசம் எல்லாம் கொட்டி சமைக்க தொடங்கினாள்.

மதியமளவில் எல்லாவற்றையும் பொதிகளாக கட்டி, குடும்பத்தின் கடிதங்களுடன் வாசலில் காத்திருந்தாள் ராணியம்மா... அவர்களுக்காக.

அந்த விழிகளில் இருந்த தேடலும் ஏக்கமும் வார்த்தைகளால் வடிக்க கூடியவை அல்ல.

ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள்.

உங்களுக்கு புரிகிறதா அந்த ஏக்கம்..

ராணியம்மா காத்திருக்கிறாள்.........................!

அவர்கள் வரவில்லை..

வரவேயில்லை..

இனி வரபோவதும் இல்லை..

ஆம்..நேற்று மாலை ஒரு பணிக்காக மல்லாவி போய்வந்தபோது, ஆழ ஊடுருவும் படையினர் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவு என்று, ராணியம்மாவுக்கு உங்களில் யாராவது சொல்லிவிடுவீங்களா..?

(காத்திருப்பு தொடரும்)

பாகம் ஐந்து இங்கே அழுத்துங்கள்

Share this post


Link to post
Share on other sites

தங்கள் ஆக்கத்துக்கு நன்றிகள் அபிராம்..! :unsure:

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் அபிராம்

தாய்மையின் உணர்வுகளையும் தாய்மண்ணின் பாசத்தையும் எம் வீரமறவர்களின் தியாகத்தையும் தரம் குறையாமல் எடுத்து வரும் நல்லதொரு ஆக்கம்.தொடர்ந்து எழுதுங்கள்.பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள்.

இனிமேலும் இப்படியான ஒரு சோகம் எம்மவருக்கு வேண்டாம்......அபிராம் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இதை வாசிக்கும் போது புத்தன் அண்ணா சொன்னது போல நாமெல்லாம் சுழியர் சுழிச்சிட்டம் என்று தான் தோன்றுது.

Share this post


Link to post
Share on other sites

பாகம் ஐந்து

நாயகன்...

ராணிமைந்தனுக்கு இயக்கத்தில் இருந்த ஆறுதலும் அரவணைப்பும் பொழுதுபோக்கும் அவன் தான்.

பெயர் மட்டும் தான் நாயகன். தோற்றத்திலும் செயற்பாட்டிலும் ஒரு நகைச்சுவை நடிகனுக்கு ஒப்பானவன்.இயக்கத்தில் இப்படி விசித்திரமாகவும் பெயர்கள் அமைவதுண்டு. குள்ளமான உயரத்தை கொண்டவனுக்கு நெடியவன், சண்டைக்கே போக பயப்டுபவனுக்கு போர்பிரியன், வார்த்தையிலே என்றைக்குமே அன்பை காட்டாதவனுக்கு அன்பரசன், முப்பது வயசுக்கு மேல் இருப்பவனுக்கு இளையவன், முகத்திலே சிரிப்பே இல்லாதவனுக்கு இனியவன், நீந்த தெரியாதவனுக்கு கடலரசன், வழுக்கையாக தலை இருப்பவனுக்கு முடியரசன்... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

ராணிமைந்தனுக்கு தொழிநுட்ப உதவியாளனாக நாயகன் இணைக்கப்படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத பிணைப்பு. நாயகனின் நகைச்சுவை பேச்சும், குறும்பு செயல்களும் , ராணிமைந்தனுக்கு வீட்டு நினைப்பை கொஞ்சம் தூரவைக்கும்.

நாயகனின் குறும்புகள், இந்த தலைப்பிலேயே ஒரு தனி தொடர்கதை எழுதலாம். அந்த அளவுக்கு அவனின் குழப்படி பட்டியலும் அதற்கான சேகர் அண்ணாவின் தண்டனை பட்டியலும் நீண்டு கொண்டே போகும்.

இருந்தாலும் உங்களுக்கும் சிலது தெரிந்தே ஆகவேண்டும்.

பொருளாதார தடைகள், போரின் தீவிரம் காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் வழங்கல்களின் அளவுகள் குறைந்து கொண்டே போயின. ஐந்து பேருக்கு ஒரு பற்பசை,பாதி சவர்க்காரம், பால்மா இல்லாத தேநீர், குளிர்களி (ஐஸ்கிரீம்), சொக்கிலேட் போன்றவை எல்லாம் கண்ணாலும் காணமுடியாது.

இருந்தாலும் முகாம்களுக்கு, தங்களுக்கு தேவையான சிறு பொருட்களை வாங்குவதற்காக, சிறு பயிர்செய்கையோ(கத்தரி, வெண்டி,தக்காளி..) அல்லது கோழி வளர்ப்போ மேற்கொள்ள கூடிய அதிகாரம் வழங்கபட்டிருந்தது.

சேகர் அண்ணா, கோழி வளர்ப்பு பணியை நாயகனிடம் கொடுத்திருந்தார். அவனும் அதை நன்றாக தான் செய்து வந்தான். அவனது புண்ணியத்திலே எல்லாருக்கும் நாளுக்கு ஒரு முட்டை, வாரந்தோறும் ஒருமுறை குளிர்களி, பிஸ்கட் என்று நல்லாத்தான் போய் கொண்டிருந்தது.

அதிகாலையிலே சரக்கட்டுடன், சைக்கிளில் இரண்டு பக்கமும் சேவல்களை கட்டி தொங்க போட்டு கொண்டு நாயகன் சந்தைக்கு போகும் பாணியை யாராலும் மிஞ்ச முடியாது. சந்தையிலிருந்து திரும்பும் போது கையிலே பொருட்களையும் வாயிலே புன்னைகையும் வைத்தே சொல்லமுடியும் அவனிடம் அம்பிட்ட ஏமாளிகள் எத்தனை பேர் என்று.

இப்படி போன அவனது வியாபாரத்திலும் இடிவிழுந்தது.

அவன் வளர்த்த கோழிகளுக்கு வந்தது தூங்கும் வியாதி. ஒரே நாளில் தூங்கி செத்தது ஆறு கோழி.

சேகர் அண்ணா பார்த்துவிட்டு செத்த கோழிகளை வெட்டி தாக்க சொல்லிட்டு போய்விட்டார்.நாயகன் கிடங்கு வெட்டியதை எல்லோரும்பார்த்தோம். எல்லாரும் அவரவர் வேலைக்கு போய்விட்டோம். மாலை நேரம் கை நிறைய குளிர்களியுடன் வந்தான் நாயகன். எல்லாரும் ஆளாளுக்கு அடிபட்டு வேண்டி சாப்பிட்டு ஏப்பம் விட்டிட்டு கேட்டோம்.

"எதுடா காசு"

"நான் செத்த கோழிகளை வித்திட்டேன் மச்சான்"

"எப்படியடா"

"எல்லாத்தையும் உரிச்சு சிறகுகளை மட்டும் தாட்டுவிட்டு. கோழிகளை கொண்டுபோய் பக்கத்து வீடுகளிலே வித்தேன்" என்றான் நாயகன்.

"சனம் வாங்கிச்சா ?" இது நாங்கள்.

"அது விக்கிறமாதிரி வித்தா சனம் வாங்கும்"

"என்ன சொல்லி வித்தணீ"

"எங்கட முகாமுக்கு தலைவர் வாறது என்று சொன்னவர். நாங்கள் கோழி எல்லாம் உரிச்சு சாப்பாடுக்கு ரெடிப்பண்ண, கடைசி நேரத்திலே தலைவர் வரமுடியாமல் போச்சு. இந்த கோழிகளை என்ன செய்கிறது என்று தெரியலை. அது தான் நம்பிக்கையான ஆட்களிடம் தான் இதை சொல்லி விக்க முடியும். அது தான் உங்களை தேடிவந்தேன்.ஒருத்தருக்கும் சொல்லிபோடாதீங்கள் என்று நாலு வீடுக்கும் ஒரே மாதிரி சொல்லி வித்தாச்சு" என்றான் நாயகன் கூலாக..

இது சேகர் அண்ணாவுக்கு தெரிந்து ஒரு வார சமையல் தண்டனையை வாங்கி கட்டி கொண்டான் நாயகன்.

அடுத்த சம்பவம் சேகர் அண்ணாவுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது.

முகாமில் ஒரு சந்திப்புக்காக இருபத்தைந்து கதிரைகள் தேவைப்பட்டன. எங்களிடம் இருந்ததோ ஆறு கதிரைகள் தான். கதிரை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு நாயகனிடம் விடபட்டது. ஒவ்வொரு வீட்டிலும் போய் இரண்டு இரண்டு கதிரையாக இருபது கதிரை சேர்க்கவேண்டும்.

நாயகனின் குறும்பு மூளை வேலை செய்தது. இருபது கதிரையுடன் நின்றான். சந்திப்பும் இனிதே முடிந்தது. எங்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம். என்ன இருபது கதிரையும் ஒரே மாதிரி இருக்கு என்று. நாயகன் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டான்.

ஆனால் உண்மையில் நாயகன் எங்கட முகாமுக்கு பக்கத்தில் இருந்த தேநீர் கடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம்" எங்கட முகாமுக்கு தலைவர் வாறார், சந்திப்புக்கு இருபது கதிரை தேவை எல்லாரிடமும் கேட்கமுடியாது அண்ணே. இரகசிய பிரச்சனை. உங்களிலே வைச்சிருக்கிற நம்பிக்கை விசுவாசத்தில தான் வந்தனான்" என்று அவிச்சு, அந்தாள் கடையையும் பூட்டிவிட்டு கதிரைகளை கொடுத்திருந்தார்.

இது சேகர் அண்ணாவுக்கு தெரியவர, நாயகன் தலைவரை வைத்து பண்ணிய குறும்பால் கோபமடைந்து, நாயகனுக்கு தண்டனையாக மன்னார் எல்லைக்கு ஒரு மாதம் சண்டைக்கு போக சொல்லிவிட்டார்.

உண்மையிலையே சண்டைக்கு போறதெண்டால் நாயகனுக்கு உள்ளூர பயம் தான்.

ஆனால் அந்த மன்னார் எல்லையில் நடந்த சண்டை அவன் தலைவிதியையே மாற்றியது.

(தொடரும்)

பாகம் ஆறு இங்கே அழுத்துங்கள்

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்...வாசிக்க,வாசிக்க மனது கணக்கிறது

Share this post


Link to post
Share on other sites

பாகம் ஆறு

மன்னார் எல்லை களம் பெரிய பண்டிவிரிச்சான் வரை வந்திருந்தது.

உக்கிரமான சண்டைக்களம் அது. காடு சார்ந்த பிரதேசத்தில் முன்னேறிவரும் ராணுவத்தை புலிகளின் படையணி வழிமறித்து கடுமையாக சண்டை பிடித்து கொண்டிருந்தது.

தளபதி பானுவின் நெறிப்படுத்தலில் தீரமாக போராடின புலிகள் அணிகள்.

நாயகனுக்கு நேரடி சண்டையில் அனுபவம் குறைவு. பல்குழல் எறிகணைகள் என்றால் குலப்பன் நடுங்கும்.

பானு அண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு மாதிரி, எல்லை கோட்டுக்கு பின்னால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைக்கபடிருந்த குட்டிசிறி மோட்டார் மகளிர் அணியின் ,ஒரு ஐந்து இஞ்சி மோட்டாருக்கு, காவல் பணியில் சேர்ந்து கொண்டான்.

கடுமையாக சீறி பாய்ந்து கொண்டிருந்தன மோட்டார்கள். பெண்களும் சளைக்காமல் சொல்லும் குறிக்கு மோட்டார்களை ஏவி கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஆழ ஊடுருவும் இராணுவ அணி தாக்கலாம் என்று காவல் பணியில் நாயகனும் மூன்று தோழர்களும் இருந்தார்கள்.

திடீர் என்று ஒரு சலசலப்புடன், சன்னங்கள் சீறி வரத்தொடங்கின.

ஆமாம், ஒரு பத்து பேர் கொண்ட ராணுவ அணி அவர்களின் நிலையை தாக்க தொடங்கியது. நிலை தடுமாறிய அவர்கள் அப்படியே போட்டது போட்டபடி பின்வாங்கி ஓட தொடங்கினார்கள். நாயகனுக்கு தலை கால் புரியவில்லை.

மற்றவர்களுக்கு அந்த காடு பரிச்சயமானபடியால் பின்னணி நிலை நோக்கி ஓட தொடங்கினார்கள். யாருமே அற்ற நிலையில் நாயகன் மட்டும் மோட்டரை ஒட்டி இருந்த ஒரு மரத்துக்கு பின்னால், கடவுளை வேண்டியபடி ஒளிந்து கொண்டான்.

இராணுவம் மோட்டரை நெருங்கியபடி இருந்தது. நாயகனுக்கு மிக அருகிலையே சிங்கள குரல்கள் ஒலிக்க தொடங்கின. இனி மறைந்தும் சாவுதான் என்று எண்ணிய நாயகன், மரத்திலிருந்து வெளிப்பட்டு சரமாரியாக சுட தொடங்கினான்.

திடீரென தொடங்கிய இந்த எதிர்பாராத தாக்குதலில் ராணுவம் திகைத்தது. புலிகளின் வழமையான தந்திரோபாயமாக (உள்ளே வரவிட்டு தாக்கும்) கருதி பின்வாங்கி ஓடினர். மகிழ்ச்சியுடன் நாயகன் துரத்தி துரத்தி சுட்டான். அவர்களது அச்சுறுத்தல் நீங்கியபிறகு போக இடம் தெரியாமல், மோட்டாருக்கு அமைக்கபட்ட குழியினுள் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அதே நேரம், மோட்டரை விட்டு பின்வாங்கிய போராளிகளுக்கு, அவர்களின் குழு பொறுபாளரிடமிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆயுததுக்காக உயிரையே கொடுப்பது தான் புலிப்படை. எப்பாடு பட்டாலும் சரி, மோட்டரை இராணுவத்திடம் பிடிபடவிடக்கூடாது என்று கடுமையான கட்டளை.

அவர்கள் மோட்டர் இருந்த இடத்தை அடைந்த போது வெற்றி பெருமிதத்தில் நாயகன் தனியனாக நின்றான். அவனுக்கு உள்ளுக்குளே இருந்த பயம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.(இப்போ உங்களுக்கும் தெரியும்)

அன்றைக்கு ஏறியது நாயகனுக்கு காத்து. அந்த சம்பவம் பானு அண்ணாவரை போய், தலைவர் வரை போய்விட்டது. "தனியாளாக மோட்டரை காத்தவனை நான் பார்க்கணும்" என்றார் தலைவர்.

பிறகு என்ன ஆளையே பிடிக்கமுடியவில்லை. சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை நாயகனுக்கு. முகாமுக்கு வந்து சேகர் அண்ணாவுக்கு தான் முதன் முதலில் சொன்னான்.

"சேகர் அண்ணா நான் அண்ணையை பார்க்க போறேன். வர சொல்லி இருக்கிறார்" என்றான் வாயெல்லாம் பல்லாக. எல்லாம் உங்களால வந்தது அண்ணா, நீங்க மட்டும் என்னை சண்டைக்கு அனுப்பி இருக்காவிட்டால் நான் அண்ணையை பார்த்திருக்க முடியுமோ தெரியாது என்று சேகர் அண்ணைக்கு ஐஸ் வைச்சான்.

இரண்டு ஒரு நாளில் அண்ணையை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துகொண்டு மீண்டும் முகாம் வந்தான். அண்ணையுடன் சாப்பிட்டது, படம் எடுத்தது என்று எல்லாருக்கும் இரவு இரவாக வகுப்பெடுத்தான். உற்ற நண்பன் ராணிமைந்தனும் அவன் மகிழ்ச்சியில் பங்கெடுத்தான்.

"மச்சான் அண்ணையிடம் என்னடா கேட்டணீ" என்றான் ராணிமைந்தன் ஆவலுடன்.

"அது ஒண்டும் இல்லை மச்சான். அண்ணே எங்களுக்கு தமிழீழம் கிடைச்சால், நீங்க தானே ஜனாதிபதி, என்னை உங்கட கால்நடை அமைச்சராக போடுவீங்களோ என்று கேட்டேன் மச்சான்" என்றான் குறும்பாக நாயகன்.

"அதுக்கு அண்ணை சிரிச்சு போட்டு உனக்கு இப்பவும் கோழி வளர்கிற எண்ணம் தான் என்றார் நக்கலாக. அந்தாளுக்கு நான் கோழி வளர்த்ததில் இருந்து எல்லாம் தெரியும் மச்சான்" என்றான் பெருமையாக.

"வேற என்ன மச்சான் சொன்னவர்"

"உங்கட சண்டையை பற்றி சொன்னவங்கள். அது மாதிரி எண்டைக்கும் மண்ணிலையும், எங்கட மக்களை காக்கிற ஆயுதத்திளையும் பற்று வைச்சிருக்கணும் என்றும் சொன்னார்"

"அது மட்டும் இல்லை மச்சான். எனக்கு அண்ணையை சந்திச்ச பிறகு மனசிலே ஒரு தைரியமும், மக்களை காக்கணும் என்ற உத்வேகமும் வந்திருக்கு மச்சான். அவனை ஒருக்காலும் உள்ளே வர விடக்கூடாது" என்று சொன்னவன் தான் நாயகன்.

அண்ணையின் சந்திப்பு முடிந்து ஐந்தாம் நாள்.

பண்டிவிரிச்சானில் முன்னேறிவந்த ராணுவத்துடன் தீரமாக சண்டையிட்டு கப்டன் நாயகனாக..ராணிமைந்தனின் அறையில் படமாக..

நீங்காத அந்த உயிர் நண்பனின் நினைவுகள்....

உண்மையிலேயே பெயருக்கு ஏற்ற நாயகனாக, ராணிமைந்தனின் மனசில் மட்டுமல்ல.. உங்கள் மனசிலும் என்றும் வாழ்வான்.

(தொடரும்)

பாகம் ஏழு இங்கே அழுத்துங்கள்

Share this post


Link to post
Share on other sites

பானு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த தளபதி

Share this post


Link to post
Share on other sites

தொடர்வதற்கு மிக்க நன்றி அபிராம்... :)

Share this post


Link to post
Share on other sites

பாகம் ஏழு

சூரியகாட்டின் எல்லையோரம் அது.

வற்றாபளை சந்தியில் இருந்து முன்னேறிவந்த ராணுவத்தை தடுத்து நிறுத்த புலிகளால் அமைக்கபடிருந்த காவலரண்கள் அவை.

நந்திகடலோரம் மாலை மயங்கும் அந்தி அழகை கூட ரசிக்க மனமில்லாமல் காவலிருந்தார்கள் அவர்கள்.

முன்னால் நீண்ட புலிகளின் விமானபடை ஓடுபாதை. அதற்கு அப்பால் இருந்த காட்டுக்குள் அரக்கர்கள் கூட்டமா படையெடுத்து வந்து நிலையெடுத்து இருக்கிறது.

நான்கு நாட்களாக அந்த அரக்கர் படை எடுத்த முயற்சிகள் எல்லாம் இவர்களின் தீரமான சண்டைகளால் முறியடிக்கபட்ட கோபத்தில் , கடுமையாக திட்டம் தீட்டி கொண்டிருந்தது எதிரிப்படை.

புதுக்குடியிருப்பின் முக்கியத்துவம் கருதி, எதிரிக்கு விட்டு கொடுக்காமல் களமாட, முக்கிய பணிகளில் இருந்த போராளிகள் கூட குறுகிய பயிற்சியுடன் களமிறக்கபடிருந்தார்கள்.

இவர்களுக்கு வலதுபுறம் நிதிதுறையும், இடதுபுறம் கடற்புலிகளும் களமாடி கொண்டிருந்தார்கள். ஐம்பது மீற்றருக்கு ஒரு அரண் இருந்தாலும் இரண்டுக்கு ஒரு அரணில் தான் போராளிகள் இருந்தார்கள், மற்றவை எல்லாம் டம்மியாகத்தான் (போலியான) இருந்தன. அவ்வளவு ஆட்பற்றாக்குறை.

பளை, கிளிநொச்சி முதல் அம்பகாமம், விசுவமடு,உடையார்கட்டின் மேற்குபுறம், தேவிபுரம், ஒட்டிசுட்டான், சூரியகாடு, வட்டக்கண்டல் என நீண்டு இருந்த அவ்வளவு எல்லை கூட்டிலும் ஆட்களை நிறுத்த புலிகளும் என்ன தான் செய்வார்கள்.

அந்த முறியடிப்புக்காக அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவனாக ராணிமைந்தன் நிலை நிறுத்தபடிருந்தான். பேனை பிடித்த கை முதன் முதலாக தானியக்க ஆயுதத்துடன்.

பதினைந்து நாட்கள் தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள்.

இன்னுமே சரியான குறி வைப்பதில் சிரமம், ஆயுத துப்பரவாக்களில் சிரமம், இப்படியான கள அனுபவம் கொஞ்சம் கூட இல்லாமல் ராணிமைந்தன் கொஞ்சம் சிரமபட்டுதான் போனான்.

ஒரு அரணில் இரண்டு பெண் போராளிகளுக்கு ஒரு ஆண் போராளி என்ற ரீதியில் இவர்களது பிரிவில் விடபட்டிருந்தார்கள்.

அங்கு சந்தித்தவள் தான் கலையரசி. அரணுக்கு காவலுக்கு வந்த முதல் நாளே ராணிமைந்தனுக்கு அவளின் தங்கையை ஞாபகபடுத்தும் உருவமாக திகழ்ந்தவள் கலையரசி. அவளுக்கும் இவன் ஒரு உடன்பிறவா சகோதரனாகவே தோன்றினான். அவர்களிடையே அப்படி ஒரு பாசபிணைப்பு.

வரும் வழங்கல்களை, மீள் உருவாக்கம் செய்து ருசியாக்குவதில் கலையரசிக்கு நிகர் யாரும் இல்லை. பழைய இடியப்பம், பழைய சோறு, கருவாடு, முறுக்கு துண்டுகள் என இவளின் மீள் உருவாக்க உணவுகளின் ருசிக்கு ராணிமைந்தனும் ஒரு அடிமை.

வீட்டை பற்றி நினைக்க எதிரி அவகாசம் கொடுக்காவிட்டாலும், அவனுக்கு வரும் வீட்டு நினைப்பை ஆற்றுப்படுத்தவல்ல ஆளுமை கலையரசிக்கு இருந்தது.

அன்றும் அப்படி தான்.

முதல் நாள் இரவு சாப்பிட்ட மீள் உருவாக்க வழங்கலின் கோளாறு காரணமாக, ராணிமைந்தனுக்கு வயிறு அவ்வளவு சரி இல்லை. அடிக்கடி வயிற்றாலை போக தொடங்கியது, எதிரி எதற்குமே அவகாசம் கொடுக்காமல், அவனிடம் இருக்கும் அவ்வளவு ஆயுதங்களையும் பயன்படுத்தி கொண்டிருந்தான்.

இவர்களின் அரணை தகர்க்க மட்டுமே, இரண்டு ஆர்.பி.ஜி, இரண்டு பி.கே, ஒரு சின்னைப்பர், மற்றும் ஏ.கே யுடன் நான்கு பேர் கொண்ட எதிரி அணி, இடைவிடாது தாக்கி கொண்டிருந்தது. பறந்து வரும் சன்னங்கள், அருகில் பெண்களின் நிலை, இவற்றுக்கு நடுவில், வயிற்று கோளாறு ராணிமைந்தனை படாத பாடுபடுத்தியது.

ஏன்ரா இயக்கத்துக்கு வந்தோம் என்று இருந்தது அவனுக்கு, மக்களாவது மண்ணாகட்டியாவது. வீட்டு நினைப்பு வேற. கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சு வட்டக்கச்சி வரை வந்திடானாம் என்ற செய்தி வேற இடியாக இருந்தது. இனி சண்டை பிடிச்சு என்னத்தை செய்யுறது என்ற நினைப்பு வேற.

ஓடிவிடலாம் முடிவெடுத்தான் ராணிமைந்தன்.

அலைபேசியில், பின்னணி நிலையில் இருந்த கொம்பனி தலைவருக்கு தொடர்பெடுத்தான்.

"கிலோ மக், கிலோ மக், அல்பா சேரா"

"சொல்லுங்க அல்பா சேரா"

" எனக்கு வயிற்று சிக்கல் , உடம்பிலே ஆயுதம் தூக்கி சண்டை பிடிக்க கூட வலு இல்லை, என்னை பின்னுக்கு எடுக்க முடியுமா"

"விளங்குது அல்பா சேரா, இண்டைக்கு கஷ்டம், ஆளை மாத்தி விடனும் இரவு மட்டும் தாக்கு பிடியுங்கள், நாளைக்கு மாத்திறம்"

"நன்றி கிலோ மக் "

"நன்றி அவுட்"

இரவுக்கு எப்படிதான் தாக்கு பிடிக்கபோறேனோ என்று தலை வெடிக்க யோசித்தான் ராணிமைந்தன்.

கலையரசி தான் ஆறுதலாக இருந்தாள்.

" ராணி அண்ணா, ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ, நாளைக்கு எப்படியும் உங்களை மாத்தி பின்னுக்கு விடுவினம்" .

"கலை சொல்லுறேன் என்று குறை நினைக்காதே. இந்த முறை பின்னுக்கு போனால் மெடிக்சிலே விட்டால், நான் நூறு மீற்றர்.( ஓடப்போறேன் என்றதுக்கு போராளிகள் மத்தியில் இருந்த பரி பாசை அது ). எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு"

"ஒரு மனுஷனுக்கு ஏலாமல் வரும்போது தான் பாசங்களின் நினைப்பு கூட வரும். எனகேண்டால் இந்த சண்டையில நாங்கள் வெல்லுவம் என்ற நம்பிக்கை இல்லை. அம்மாக்கள் எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியலை. அவையோட போய் இருக்க போறேன்."

"இவ்வளவு உன்னோட பழகிட்டு உனக்கு சொல்லாமல் போக கூடாது என்று தான் உனக்கு சொல்லுறேன். யாருக்கும் சொல்லி போடாதே"

"நிச்சயமா அண்ணா சொல்ல மாட்டேன். அம்மாவை கண்டால் நானும் கேட்டேன் என்று சொல்லு. உனக்கு இங்கயும் ஒரு தங்கச்சி இருக்கிறா என்று சொல்லு".

அன்று இரவு முழுவதும், புலிகள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுட்டுகொண்டிருந்த இராணுவ சன்னங்களின் வெடியோசை, நாளை அம்மாவை காண போகிறேன் என்ற சந்தோசத்துக்கு கேட்டதாகவே தோன்றியது ராணிமைந்தனுக்கு.

எப்படா விடியும் என்றிருந்தது ராணிமைந்தனுக்கு.

உடுப்புகள், நாளேடுகள் அடுக்கிவைத்து விட்டு காத்திருந்தவனை எழுப்பியது எதிரியின் சன்னங்கள் தான். இண்டைக்கு அம்மாவை பார்க்க போறேன் என்று அவனுக்கும் தெரிஞ்சிட்டு போல.

காலை பாதினொரு மணிக்கு தான் மாற்று ஆளணி வந்து சேர்ந்தது.

ராணிமைந்தன் மாற்றபட்டு பின்களத்துக்கு வரவழைக்கபட்டான். கலையரசியை பிரிந்தது என்னவோ போலிருந்தது ராணிக்கு. இனி எப்போ பார்க்க போறேனோ..? என்ற கவலை மனசை வாட்டினாலும் அம்மாவை பார்க்க போறேன் என்ற சந்தோசம் எல்லாவற்றையும் வென்றது.

பின்களத்தில் இருந்து மருத்துவ ஓய்விற்காக மூன்று நாட்கள் மெடிக்ஸ் அனுப்பபட்டான் ராணிமைந்தன்.

எப்படியாவது அங்கிருந்து ஓடி அம்மாவிடம் போய்விட வேண்டும். இதை தவிர அவனிடம் வேற எந்த எண்ணமுமே இல்லை.

மூன்றாம் நாளே ஓட வேண்டும். திட்டமிட்டான் ராணிமைந்தன்.

அடுத்தநாள் அவன் திட்டத்தில் இடி விழப்போவது தெரியாமல் அன்று இரவு நிம்மதியாக படுத்துறங்கினான். வெடிச்சத்தம் கேட்காத அந்த இரவு. மறுநாள் ராணிமைந்தன் கனவில் இடிவிழபோகும் அந்த இரவு. மெல்ல கரைந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

பாகம் எட்டு இங்கே அழுத்துங்கள்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில்  வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும்  டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கன்னியா வென்னீரூற்றை பறி கொடுக்க முன்வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் இவர்கள்” என்றும் கூறியிருக்கிறார். விக்னேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில், அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் அறிவித்துள்ளதாக வெளிவந்துள்ள ஊடக செய்திகள் எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிகவும் தெட்டத்தெளிவாக இதனைச் சொல்லியிருக்கின்றார். அத்துடன் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணை தரவேண்டும் என்று துணிந்து வெட்கம் இல்லாமல் கேட்டிருக்கின்றார். எமது தமிழ் மக்களை திரு.சுமந்திரன் அவர்கள் எந்தளவுக்கு முட்டாள்கள் என்றும், சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் முன்னைய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் கூறி இருக்கின்றார். இது எந்தளவுக்கு  சரணாகதி அரசியல் சிந்தனைக்குள்ளும் சலுகை அரசியல் சிந்தனைக்குள்ளும் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் எந்தளவுக்கு இனஅழிப்பு மற்றும் போர்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் வகையிலும் கூட்டமைப்பு இதுகாறும் செயற்பட்டிருக்கின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அத்தகைய ஒரு பெரும் துரோகத்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகிவருகின்றது என்பதை திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சு எடுத்துக் காட்டுகின்றது. அவர் அபிவிருத்திக்காக அமைச்சுப்பதவிகளைப்  பெறவேண்டும் என்று கூறுவது வெறும் முதலைக்கண்ணீர் வடிப்பதாகும். தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் வட மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதற்கு திரு.சம்பந்தனும் திரு.சுமந்திரனும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். முதலமைச்சர் நிதியத்தை நாம் பெற அவர்கள் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. மாறாக முறைமுக எதிர்ப்புக்களையே தெரிவித்து வந்தனர். திரு. சுமந்திரனின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. இது எந்தளவுக்கு அவரின் கண்களை அமைச்சு பதவிகள் மறைக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றமைக்காக திரு.ஜி. ஜி பொன்னம்பலம் அவர்கள் பின்னர் வருந்தியதாகத் தெரிவிக்கும் திரு.சுமந்திரன், தாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதாகக் கூறுகின்றார். ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய அரசாங்கத்துக்கு எதிராக நிலத்திலும் புலத்திலும் எமது மக்கள் அல்லும் பகலும் போராடும்போது தம்மைக் காப்பாற்றும் வகையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைவதற்கு எவ்வாறு திரு.சுமந்திரனுக்கு சிந்தனை தோன்றியதோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அமைச்சரவையில் அங்கம் வகித்து எவ்வாறு எமது மக்களுக்கான இன அழிப்புக்கு நீதி பெறுவார்கள் என்பதையும் எவ்வாறு பொறுப்புக்கூறல் பொறிமுறையை  ஐ. நா ஊடாக முன்னெடுப்பார் என்பதற்கான அவரின் திட்டத்தையும் எமது மக்கள் முன் திரு.சுமந்திரன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதாவது இன அழிப்புக்கு இனிமேல் நான் நீதி கேட்க மாட்டேன். பொறுப்புக்கூறல் பொறி முறையை நான் ஐ.நா ஊடாக முன்னெடுக்கமாட்டேன் என்று அவர் இனி வெளிப்படையாகக் கூறி எம் மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டும். கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் எதைச் சாதிக்க முடிந்தது? திரு.சுமந்திரன் மட்டும் அரசாங்கத்தில் அமைச்சர் ஆகினால் எமது மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க போகின்றாறா? டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்  ஆகியோருக்கும் திரு.சுமந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. இதே டக்ளஸைத்தான் திரு.சுமந்திரன் முன்னைய காலங்களில் வெகுவாக விமர்சித்தார். அவரின் கட்சியினர் டக்ளஸை துரோகி என்றார்கள். இப்போது அவரின் கட்சி திரு. சுமந்திரன் பற்றி என்ன கூறப்போகின்றது? போராடாத எந்த இனமும் விடுதலை பெறப்போவதில்லை என்பது உலக நியதி. உண்மை அப்படி இருக்க, சலுகைகளுக்கும், பதவிகளுக்கும், சரணாகதி அரசியலுக்கும் எமது மக்களை மூளை சலவை செய்ய முயலுகின்றார் திரு.சுமந்திரன். ஆகவே, எனதருமை மக்களே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கன்னியா வென்னீரூற்றை பறி கொடுக்க முன்வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் இவர்கள். நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது.  உங்களை சுற்றி ஒரு பெரும் சதிவலை பின்னப்பட்டு வருகின்றது. அதை முறியடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆசனம்  கூடப்  பெறமுடியாமல் செய்து ஒரு பெரும் வரலாற்றுத் தீர்ப்பினை நீங்கள் அக் கட்சிக்கு அளித்து அதர்மத்துக்கு சாவுமணி அடிக்கும் காலம் வந்துவிட்டது. தம்பி பிரபாகரன் ஒன்றிணைத்த ஐந்து கட்சித் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது குற்றுயிராகக் கிடக்கின்றது. அதனைக் கருணைக் கொலை செய்வது குற்றமில்லை என்பது என் கருத்து. வெறும் அரசியல் போட்டி காரணமாக நான் இந்தக் கருத்துக்களை வெளிக் கொண்டு வரவில்லை. வரலாற்றைப்  பாருங்கள். அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். திட்டமிட்டு எமது மக்களை இனஅழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுக்களைப் பெறுவதால் எமக்கான அதிகாரத்தையோ, நீதியையோ அல்லது அபிவிருத்தியையோ அரசு தரும் என்று எதிர்பார்க்க முடியுமா? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கும் இதேமாதிரியான கதைகளைத் தான் சொன்னார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் காலத்தில் வாய் தவறி கூட எமது மக்களுக்கு ‘இன அழிப்பு’ நடந்தது என்று எங்கேயாவது கூறினார்களா? மாறாக, ஐ. நா மனித உரிமைகள் சபையில்  அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுந் தான் அதனைப் பயன்படுத்தினார்கள்.ஏற்கனவே நாம் எமது காணிகளை இழந்துவிட்டோம். மேலும் காணிகள் பறிபோகின்றன. தமிழ்க் கைதிகள் தொடர்ந்து சிறையில் உள்ளார்கள். இராணுவத்தொகை இன்று வடக்கிலும் கிழக்கிலும் பெருகிவருகின்றது. பௌத்தமயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் அமைச்சர்களாக வந்தால் தமது அமைச்சுக்களை காப்பாற்ற மௌன மடந்தைகளாக இருப்பார்கள். விரைவில் வடகிழக்கின் தமிழ் மக்கட் தொகை கூனிக் குறுகி விடும். ஆகவே இன்று என் மக்கள் முன் இந்த விடயத்தை அவசரமாகக் கூற வேண்டியிருந்ததால் இந்த விபரங்களை நான் உடனுக்குடனேயே பகிர்ந்து கொள்கின்றேன். நீங்கள் யாவரும் வரும் ஆகஸ்ட் 5ந் திகதி காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று மீன் சின்னத்திற்கு உங்கள் புள்ளடிகளை வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது சிற்றுரையை முடித்துக்கொள்கின்றேன்.     http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்புக்கு-வாக்களி/
  • 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை! பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வருகை தந்த  சந்தேகநபர்,  அந்த சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தை அறிந்த  சிறுமியின் தந்தை மற்றும்  மாமன்மார் சந்தேகநபரை கொட்டனால் அடித்து கொன்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/5-வயது-சிறுமியை-பாலியல்-வன/
  • பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று! இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுகுறித்து அமிதாப் பச்சன் ருவிற்றரில் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது குடும்பத்தினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/பிரபல-பொலிவூட்-நடிகர்-அம/
  • இதில் தரவுகள் கள ஆய்வுகள் என்று  என்ன இருக்கிறது கிருபன், நாமேதான் தரவுகள், நாமேதான் சாதிய  களத்தில் நிற்பவர்கள். இந்த சமூக வலிகளுக்கு வக்கீல்களும் நாங்கள்தான், நீதிபதிகளும் நாங்கள்தான், ஆனால் நியாயமான தீர்ப்பு மட்டும் ஒருபோதும் வராது. இங்கே  சாதியம் என்று சொல்லும்போது உயர் சாதியை சேர்ந்தவர்கள்தான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களை கொடுமை படுத்துகிறார்கள்  மனதை உடைக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மீன் பிடிப்பவரா இல்லை அவர்கள் பிடித்த மீனை வாங்கி விறபவர்களா உயர்ந்தவர்கள்  என்ற சாதி போராட்டம்.. குப்பை அள்ளுபவரா  ஆஸ்பத்திரிகளில் மனித கழிவுகளை அகற்றுபவரா  உயர்ந்த சாதி எனும் போராட்டம்.. துணி துவைப்பவரா மயிர் வெட்டுவரா  உயர்ந்தவர்  எனும் சாதி போராட்டம், மரமேறுபவரா மூட்டை சுமப்பவரா சாதியில் பெரியவர் என்ற போராட்டம்... சாதி போராட்டம் என்பது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலானதல்ல.. தாழ்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான போரும் கூட.   புலம்பெயர் தேசத்தில் ஏறக்குறைய  பெற்றோர்கள் நினைத்தால்கூட  பிள்ளைகள் யாருடன் பழகவேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. ஏறக்குறைய அவர்கள் விரும்பியவருடன் சாதியை கடந்து அல்ல நாடுகளை கடந்தே டேற்றிங் போகிறார்கள். இதன் தலைமுறை கடந்த தொடர்ச்சியாக  ஈழதமிழர் வழி வந்த வாரிசுகள் ஆபாச படங்களில்கூட நடிப்பார்கள். அதை தவறு என்று யாரும் சொன்னால் சட்டம் குற்றம் சொல்பவர்களை மட்டுமே தண்டிக்கும். அதைதான் வீதங்களில் ஒப்பிட்டு சொன்னேன்.. முத்தாய்ப்பா சொல்லவேண்டுமென்றால் சாதிய கொடுமை என்பது உயர்ந்த சாதி தாழந்த சாதி சம்பந்தப்பட்ட ஒரு விசயம் அல்ல, தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விசயம்கூட.