Jump to content

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)


Recommended Posts

பாகம் பதினான்கு, பதினைந்து வாசித்து முடியும் போது விழிகளில் ஒரு விதமான வறட்சி ஏற்படுவதை உணரக் கூடியதாக உள்ளது, இணைப்பிற்கு நன்றி அபிராம்!

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகளுக்கு சில வேளைகளில் பதிலளிக்க முடியாது.

இன்றைய நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

ஓ அப்படியா!...சரி மன்னித்து கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

ஓ அப்படியா!...சரி மன்னித்து கொள்ளுங்கோ.

நீங்கள் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே.

இதில் மன்னிக்க எதுவும் இல்லை என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

பாகம் பதினாறு

எனக்கு அன்றைக்கு மனம் நிறைய மகிழ்ச்சியாக இருந்தது.

என்னை ஒரு முக்கியமான பயிற்சிக்கு அழைத்திருந்தது தான் என் மகிழ்ச்சிக்கு காரணம்.

அது எவ்வளவு கடினமான பயிற்சி என்று எனக்கு தெரிந்திருந்தும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஒரு ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்தி, காட்டுக்குள் அடுத்த கட்ட போராளிகளை நகர்த்துவதற்கான திட்டம் தீட்டபட்டிருந்தது.

அதற்கான விசுவாசமான போராளிகளின் அணியில் என்னையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தளபதி அன்பு மாஸ்டர் தலைமையில் எங்களுக்கு பயிற்சி வழங்கபட்டது.

காட்டுக்குள் சென்று, அடுத்தகட்ட போராட்டத்துக்கு தேவையான ஆயத்தங்களை தொடங்குவதற்கான ஏற்பாடுகளுக்கான பயிற்சி.அந்த கால அவகாசத்துக்கு தேவையான பொருட்களையும் முதுகிலே சுமந்து செல்வதற்கான பயிற்சி.

கிட்டதட்ட அறுபது கிலோமீட்டர், முதுகிலே ஐம்பது கிலோ பையுடன் நடைபயிற்சி.

உறவுகளே ....என்ன நீங்கள் வியப்பில் வாயை பிளந்து நிற்பது எனக்கு தெரிகிறது.காரணம் நிச்சயமாக பயிற்சி கடினம் சம்பந்தபட்டதாக இருக்காது.

இராணுவம் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் பிடிச்சு இரட்டைவாய்காலில் வந்து நிற்கிறான், இவர்களிடம் எங்கே அறுபது கிலோமீற்றர் நடக்கிறதுக்கு இடம் இருக்கு என்பது தானே அந்த வியப்புக்கு காரணம்.

உண்மைதான் உறவுகளே, எங்களிடம் வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மட்டும் தான் இருந்தது, நீளமாக பார்த்தால் கூட எங்களிடம் ஒரு ஆறு கிலோமீற்றர் தான் வரும்.ஆனாலும் நாங்கள் நடந்தோம்.

ஆமாம் ஒரு மூன்று கிலோமீற்றர் கடற்கரை பகுதியில் இருபது முறை நடந்தோம். கடற்கரை மணலில் கால் புதைய, புதைய , சிங்களவனின் கொடிய பல் குழல் எறிகணைகளுக்கும், கடலில் இருந்து ஏவும் பிரங்கிகள், நீண்ட தூர சன்னங்களுக்கும் மத்தியிலும், குனிந்த படி கூட நடந்தோம்.

எங்கள் முதுகில் இருந்தது ஐம்பது கிலோ பாரம் மட்டும் இல்லை எங்கள் மக்களின் விடிவு என்று நினைத்து சுமந்தோம்.

சொல்லுங்கள் உறவுகளே. அன்றைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் கூட.. உங்களிடம், எங்கள் மக்களின் அடுத்த கட்ட போராட்டம், எங்கள் மக்களின் விடிவு, ஒப்படைக்க பட்டிருந்தால் ஐம்பது கிலோ என்ன.. ஐநூறு கிலோ என்றாலும் தூக்கும் மனநிலை உங்களுக்கு வராதா..??

ஆனால் என்ன, நல்ல சாப்பாடே கிடைப்பது கடினம், நல்ல சாப்பாடு என்ன.. சாப்பாடே இரண்டு நாளுக்கு ஒரு முறை தான். இதில் நடைபயிற்சியின் போது தண்ணீர் கூட அருந்த தடை. ஒரு போத்தல் தண்ணீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் முடிக்க வேண்டும். காட்டிலே தண்ணீர் கிடைக்காது என்று காரணம் வேறு சொல்லுவார்கள்.

நடந்து முடிய, கடின ஆயுத பயிற்சி. அந்த தன்னியக்க கடின ஆயுதங்களை தூக்கவே உடம்பில் தெம்பிருக்காது, ஆனால் மனசில் இருக்கும் தெம்பால் தூக்குவோம். சுடும்போது வரும் பின்னுதைப்பை தாங்க நெஞ்சிலே பலம் இல்லைவிட்டாலும், உறுதி இருந்தது. நிச்சயம் வெல்லுவோம் உறவுகளே.

கடந்த இரண்டு நாள் பயிற்சியின் போதும் எதுவுமே சாப்பிடவில்லை. அது கட்டாயம் இல்லை.. ஆனால் உண்மையில் சாப்பாடு இல்லை.

இரண்டு நாளைக்கு பிறகு இன்றைக்கு பின்னேரம் தான், எங்களின் முகங்களில் ஒரு சிறு புன்னகை. ஆமாம் எங்களுக்கு சாப்பாட்டு பொதி ஒன்றை தந்திருந்தார்கள்.மூன்று பேருக்கு ஒரு பொதி. அது தான் எங்களின் புன்னகைக்கான காரணம்.

அடுத்த நாட்களை பயிற்சியுடன் தாக்குப்பிடிக்க அந்த உணவு கட்டாயம் தேவை. எங்கே பயிற்சியில் ஏலாமல் விழுந்துவிட்டோம் என்றால் எங்களை அணியில் சேர்க்கமாடார்களோ என்ற பயம் வேற.

எங்கள் மக்களுக்காக, அவர்கள் விடிவு பெறும் வரை போராட வேண்டும். கடவுளே அதற்கான மனத்துணிவு என்னிடம் இருக்கு உடல் பலத்தை மட்டும் கொடு என்று ஒவ்வொரு நாளும் நான் வேண்டாத தெய்வமில்லை. அதன் பலன் தானோ என்னவோ இன்றைய சாப்பாட்டு பொதி.

அதற்குள் என்ன இருக்கு என்று அவிழ்த்து பார்க்கும் ஆசை எல்லாருக்கும் இருந்தாலும், குளித்து விட்டு வந்து ஆறுதலாக ரசித்து சாப்பிடுவோம் என்று அந்த எண்ணத்தை கைவிட்டோம்.

என்ன உறவுகளே..என்னடா இவன் ஒரு சாப்பாட்டு பொதிக்கு இவ்வளவு அலைகிறானே என்று யோசிக்காதீங்கள். அந்த நேரத்தில் அதன் பெறுமதி உங்களுக்கு என்ன என்று புரியாது...

குளித்துவிட்டு வந்து, மூவரும் சுற்றிவர அமர்ந்து அந்த பொதியை பிரித்தோம். பயறும், பருப்பும் கலந்த சோறு. காலையிலையே சுட சுட கட்டியிருப்பார்கள் போலும், கொஞ்சம் குழைந்து போய் இருந்தது. ஒரு ஆறு சிறங்கை தான் வரும்.ஆளுக்கு இரண்டு சிறங்கை என்று பங்கு போட்டு கொண்டோம்.

ஒரு சிறங்கை சோற்றை கையிலே எடுத்து வாயிலே வைக்க போகும் போது..

தம்பீ ..

என்று ஒரு குரல்.

எங்களை கட்டி போட்டது. அந்த கடற்கரை பொட்டல் வெளியில், சோற்றை வாயிலே வைக்கவிடாமல் எங்களை, அந்த குரல் நோக்கி திரும்ப வைத்தது.

அங்கே ஒரு நடுத்தர வயது அம்மா, கையிலே ஒரு குழந்தையுடன்..அந்த அம்மாவின் சேலை தலைப்பை பிடித்தபடி இன்னொரு குழந்தை. எலும்புகளால் மட்டுமேயான குழந்தைகள். அவர்களின் உடம்பில் தோல் எங்கே இருக்கு என்று ஒரு ஆராச்சியே நடத்தலாம். அந்த அளவுக்கு ஒடுங்கி போய் இருந்தார்கள். வயிறு பெருத்திருந்தது. தலை ஒடுங்கி இருந்தது.வாய், மூக்கு, கண்கள் எல்லாம் இலையான்கள் மொய்த்துகொண்டிருந்தன. கண்களில் ஒரு பசி ஏக்கம் அப்படியே தெரிந்தன.

வறுமையான ஆபிரிக்க நாட்டு குழந்தைகளை படங்களாக பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம். இன்று எந்த மக்களுக்காக நாங்கள் போராடுகிறமோ அந்த மக்களே..அந்த மக்களின் குழந்தைகளே , ஒரு தமிழ் குழந்தை எங்கள் கண்முன்னாலே..

நாங்கள் எங்கள் நெஞ்சுக்குள் படும் வேதனை கொஞ்சமாவது உங்களுக்கு புரிகிறதா உறவுகளே..

சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தை தன்னாலான மட்டும் கைகளால் தன்னில் மொய்த்து கொண்டிருந்த இலையான்களை கலைத்து கொண்டிருந்தான். அந்த அம்மாவின் கைகளில் இருந்த குழந்தையோ எதுவுமே செய்யாமல் பேசாமல் இருந்தது.

தம்பீ..மீண்டும் அதே குரல் எங்களை சுய நினைவுக்கு கொண்டுவந்தது. தம்பி சாப்பிட்டு ஆறு நாளாச்சு. எனக்கு வேண்டாம் தம்பி.. இந்த குழந்தைக்காவது கொஞ்ச சோறு தருவீங்களா.?

தம்பி மாட்டேன் என்று மட்டும் சொல்லிபோடாதேங்கோ..உங்கட காலிலே விழுந்து வேணும் என்றாலும் பிச்சையாக கேட்கிறேன்.. கொஞ்ச சோறு தாறீங்களா..?

சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்களை கேட்டால் அந்த மனசின் வலி ஜென்மத்துக்கும் ஆறுமா ..?

எந்த நெஞ்சையும் உருக்கும் அந்த பிச்சை குரலுக்கு உருகாமல் இருக்க நாங்கள் ஒன்று கல் ஜென்மங்கள் இல்லை தானே.. எங்கள் கைகளில் இருந்த உணவு எங்களை அறியாமலே, யாரையும் கேட்காமலே அந்த அம்மாவின் கைகளுக்கு மாறியது.

அவசரமாக கைகளில் இருந்த குழந்தையை அப்பாலே கிடத்திவிட்டு, சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தைக்கு, கைகளால் சோற்றை குழைத்து தீத்த தொடங்கினாள் அந்த அம்மா..

தீத்தியபடியே..தம்பி நீங்கள் நல்லா இருக்கணும் தம்பி. எனக்கு தெரியும் நீங்கள் இந்த வெய்யிலில் முதுகில் பாரங்களுடன் ஓடி திரிந்ததை நான் பார்த்தேன். உங்களுக்கு பசிக்கும் என்று நல்லா தெரியும். உடம்பிலே தெம்பிருந்தால் தான் நாளைக்கு சண்டைக்கு போகலாம் என்றும் எனக்கு தெரியும்.

என்ன செய்கிறது தம்பி.

பசி...... அது எங்களையும் மீறி உங்களை கேட்கவைத்துவிட்டது.

தம்பி. நீங்கள் வென்று தருவீங்கள் என்று தான் நாச்சிகுடாவில் இருந்து உங்கள் பின்னால் வந்தோம். இப்படி தான் எங்கட வாழ்க்கை முடியபோகுது என்றால் நாங்கள் குடும்பமாகவே பூச்சி மருந்தை சாப்பிட்டு அங்கேயே செத்திருக்கலாம் தம்பி.

இப்படி புருசனையும் பறிகொடுத்திட்டு, ஒரு பிடி சோத்துக்காக பிச்சை எடுகிறதை விட அது எவ்வளவோ மேல் தம்பி.

உண்மையான வசனங்கள்.. நெஞ்சை சுட்டன..உங்களுக்கு சுடவில்லையா உறவுகளே..

"அம்மா..நீயும் கொஞ்சம் சாப்பிடன்..."

அந்த பிஞ்சு குழந்தை கைகளிலே கொஞ்ச சோற்றை எடுத்து அம்மாவின் வாய்க்கு கிட்டே நீட்டியது. நெஞ்சையே கசக்கி பிழிந்தது. அந்த பசியிலும் அந்த பிள்ளையின் தாய் பாசம் உலகத்திலே எதுக்கும் ஈடு இணை இல்லை.

நாங்கள் அவர்களையே பார்த்து கொண்டிருந்தோம். எங்களை அறியாமலே எங்கள் கண்கள் குளமாகின. போராளிகள் அழ கூடாது என்று எங்கள் தளபதி அடிக்கடி சொல்லுவார்.

இதை பார்த்தும் நாங்கள் அழவில்லை என்றால் நாங்கள் மனுஷரே இல்லை..

"அம்மா .."

எங்களின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்தார் அந்த அம்மா..

என்ன தம்பி உங்களுக்கு கொஞ்சம் வேணுமா..மிச்சம் வைக்கட்டுமா ..தாய்மையின் பாசம் கொப்பளிக்க கேட்டார்...

"இல்லை அம்மா அந்த மற்ற குழந்தைக்கும் கொஞ்சம் கொடுக்கலாமே .." நா தழதழக்க கேட்டோம்.

அவர் சொன்ன பதில் எங்களை ஆயிரம் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.

எங்கள் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வர நாங்கள் என்ன செய்தோம்.

எங்கள் மக்கள் எங்கள் மேல் இவ்வளவு பாசம் வைக்க நாங்கள் என்ன செய்தோம்.

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் இந்த மக்களுக்கு மத்தியில் பிறந்தது இந்த மக்களுக்காகேவே போராடணும் என்று தோணிச்சு.

உங்களுக்கும் தோணும் உறவுகளே ..ஏன் என்றால் நீங்களும் மனுசர் தான் உறவுகளே..

அந்த அம்மா சொன்ன பதில் ..

நான் அந்த பிள்ளையை காட்டி பிச்சை எடுக்கவில்லை தம்பி. ஏன் என்றால் அது நான் அந்த பிள்ளைக்கு செய்கிற துரோகம்.

காரணம்

இன்றைக்கு காலையில் தான் அந்த பிள்ளை பசி தாங்காமல் செத்து போச்சு தம்பி..

(தொடரும்)

பாகம் பதினேழு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

பாகம் பதினாறு

...

நாங்கள் அவர்களையே பார்த்து கொண்டிருந்தோம். எங்களை அறியாமலே எங்கள் கண்கள் குளமாகின.

....

(தொடரும்)

:) அபிராம் உங்கள் எழுத்துகளுக்கு உயிர் உள்ளது, அதனால் தான் என்னவோ ஒவ்வொரு பாகத்தையும் வாசிக்கும் போது மனம் பாரமாகவும், விழியோரம் கண்ணீரும் வடிகிறது.

Link to comment
Share on other sites

வணக்கம் அபிராம் உண்மையிலேயே பொது மக்கள் இரு பெண் போராளிகளை பிடித்து ஆமியிடம் கொடுத்தார்களா? அல்லது உங்கள் கற்பனையா?...உண்மையாயின் அதற்குப் பழி வாங்கவா இரு கரும்புலி போராளிகளை அனுப்பி ஆமியுடன் சேர்த்து வேறு அப்பாவி பொது மக்களை கொண்டீர்கள் இது நியாயமா?

ஒவ்வொரு போராளியும் ஆயிரம் மக்களுக்கு சமம். மேலும் பொதுமக்களை இலக்கு வைத்தோ அல்லது பொதுமக்களின் பாதுகாப்பினை பற்றி கவலைப்படாது புலிகள் தாக்குதல்செய்வதில்லை. சிலவேளைகளில் வருந்தத்தக்க வகையில் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

பாகம் பதினேழு

காத்திருந்த அந்த நாளும் வந்தது.

நேற்று தான் விடுதலை புலிகளின் தலைமை அந்த முடிவுக்கு வந்தது.

கடந்த பத்து நாளாக நடந்த பயிற்சிக்கான சண்டைகளம் நாளை.

விடுதலைப்புலிகளின் தலைமையும் முக்கிய தளபதிகளும் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நடாத்தி காட்டுக்குள் செல்லும் முடிவானது, காயபட்ட போராளிகள் பொதுமக்கள் , ஏனைய போராளிகள், ஆதரவாளர்கள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்களை என்ன செய்வது தெரியாமல் காலம் தள்ளி போய் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நேற்று அரசியல் பிரிவு, ஜெனிவா சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக நாளை மதியம் இரண்டு மணியளவில் செஞ்சிலுவைச்சங்கம் போராளிகளையும் பொதுமக்களையும் தங்களின் பாதுகாப்பில் கையேற்பதாக உறுதியளித்திருந்தது.

அதனடிப்படையில் நாளை நடு இரவில் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்துவதற்கான தயாரிப்பு பணியில் புலிகள் ஈடுபட்டிருந்தனர்.

கடல் தாண்டிய அந்த தாக்குதலுக்காக, நேற்று இரவு முதல் உலர் உணவுகளையும், பழ ரின்களையும், இறைச்சி துண்டுகள் நிறைந்த ரின்களையும் பொதி பண்ணிகொண்டிருந்தார்கள் போராளிகள்.

கடந்த மூன்று நாட்களாக எதுவுமே சாப்பிடாமல், வயிறுகள் காயும்போதும், பொதிகள் மெழுகுதிரியில் உருக்கி கட்டும்போது வாயில் வரும் உமிழ்நீர்களை கூட அடக்க முடியாத பசி அவர்களுக்கு. இருந்தாலும் அடுத்த மூன்று மாதத்துக்கு தேவையான உணவு என்று ஒரு சொற்ப உணவையே பகிர்ந்தளிதிருந்தார்கள்.

சொல்லுங்கள் உறவுகளே ,மக்களுக்காக போராட உணவு தேவை என்று, பட்டினியோடு பொதி பண்ணும் போராளிகள் கிடைக்க

என்ன தவம் செய்தீர்கள்.?

கொண்டு செல்ல வேண்டிய ஆயுதங்களையும் நன்றாக சுத்தப்படுத்தி பொலித்தீன் பைகளால் சுத்திகட்டி வைத்திருந்தார்கள்.

இன்று மதியம் ஒரு மணியளவில் அந்த சந்திப்பு தொடங்கி இருந்தது.

முள்ளிவாய்க்கால் உண்டியல் சந்திக்கு அருகாமையில் இருந்த பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகே அந்த மூத்த தலைவரின் வழிகாட்டலுக்காக தளபதிகள் உட்பட நானூற்று ஐம்பது விசுவாசமான போராளிகள் காத்திருந்தார்கள்.அதில் ஒருவனாக ராணிமைந்தனும் காத்திருந்தான்.

அந்த மூத்த தலைவர் ஊடறுப்பிற்கான திட்டத்தை விளக்க தொடங்கி இருந்தார். ஆங்காங்கே விழும் செல்களுக்கும், மிக அருகில் கேட்கும் யுத்த டாங்கியின் இரைச்சலுக்கும், பெரும் சண்டை சத்தத்துக்கும் நடுவில், அவரின் மிடுக்கான பேச்சு கொஞ்சம் உரத்தே ஒலித்தது.

"நாங்கள் நாளை இரவு ஒரு பாரிய தாக்குதலை தொடங்க போகிறோம். அந்த வேளையில் இங்கே எந்த மக்களும் இருக்க மாட்டார்கள். எல்லாருமே செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு போயிருப்பார்கள். இந்த இடத்தை சூசை அண்ணை தலைமையிலான போராளிகள் தக்க வைக்க போராடி கொண்டிருப்பார்கள். அவர்கள் இராணுவத்துக்கு இறுதிநேர இழப்பை கொடுத்து கொண்டு எங்கள் ஊடறுப்பு தாக்குதலுக்கு அவனது முழு பலத்தையும் ஒருங்கிணைக்க விடாமல் பார்ப்பார்கள்"

"நீங்கள் எல்லாரும் பதினெட்டு பேர் கொண்ட இருபத்தைந்து அணிகளாக பிரிக்கபட்டு இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த தளபதி தலைமை தாங்குவார். தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இந்த சண்டை முடியும் மட்டும் அவரது கட்டளை தான் உங்களுக்கான இறுதிக்கட்டளை"

"உங்களின் பிரதான இலக்கு, எவ்வளவு கெதியாக முன்னணி நிலைகளை உடைத்து, உங்களை நிலைநிறுத்தி, ஒரு மனித பாதுகாப்பு அரணாக தலைவர் வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி கொடுப்பது தான்".

"உங்கள் எல்லாருக்கும் தெரியும், எங்கள் விடுதலை போராட்டத்தின் உயிர் மூச்சு தலைவர் தான், அவரை நாங்கள் பாதுகாப்பாக நகர்த்தினால் தான் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும், மக்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெற்று கொடுக்கலாம்"

"எனவே உங்களின் கைகளில் தான் தங்கியுள்ளது, எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம், அதற்காக தான் விசுவாசமான உங்களை தெரிவு செய்து இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தி இருக்கிறோம்"

"இந்த சண்டை எங்கள் வழக்கமான சண்டைகள் போல இருக்காது. உங்களுக்கான பின்கள வழங்கல்களோ, சூட்டு ஆதரவோ கிடைக்காது. உங்களின் வீரமும் தியாகமும் தான் காவலரண்களை உடைத்து வழி ஏற்படுத்தும். எதிரி எங்களின் வருவுக்காக அங்கே காத்துகொண்டிருப்பான். தடங்கல் ஏற்படும் இடங்களில் கரும்புலிகள் அதை உடைத்து கொடுப்பார்கள்"

"இன்னொரு முக்கியமான விடயம், இந்த தாக்குதலில் எதிரியிடம் நாங்கள் எக்காரணம் கொண்டும் பிடிபடக்கூடாது, உங்களுக்கு வெடிகுண்டு அங்கிகள் (ஜாக்கெட்) வழங்கப்படும், உங்கள் ஆயுதங்கள் தீர்ந்தாலோ, எதிரியிடம் அகப்படும் நிலை தோன்றினாலோ அதை பாவியுங்கள்"

"இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அண்ணை சந்திப்பார்.."

இவ்வாறு அந்த மூத்த தலைவர் திட்டங்களை தெளிவுபடுத்தி கொண்டிருக்கும்போது, அவரின் பிரத்தியேக அலைபேசி அழைத்தது.

"பப்பா அல்பா ..பப்பா அல்பா .. ரோமியோ ஒஸ்கா "

"பப்பா அல்பா ..பப்பா அல்பா ..ரோமியோ ஒஸ்கா "

"சொல்லுங்க ரோமியோ ஒஸ்கா "

"என்னென்டா பப்பா அல்பா ..ஆமி வன்-வன் இன் (11 இன் ) லைனை உடைச்சு உங்களுக்கு கிட்டே வந்திட்டான். புது பெடியள் விட்டிட்டு ஓடிட்டாங்கள்..உங்களுக்கு முப்பது மீற்றருக்குள்ளே அவன் வந்திட்டான் அண்ணே ..நீங்கள் உங்கட ஆட்களை பின்னுக்கு எடுக்கிறது தான் நல்லது அண்ணே " மூச்சிரைக்க சொல்லி முடித்தான்.

"தம்பி..இப்போ அது சாத்தியம் இல்லை..நிறைய ஆட்கள்.. வில்லுகள் (ஆயுதங்கள்) பொதிக்குள்ளே பின்னுக்கு எடுக்கிறது என்றால் இழப்புகள் வரும். அதை தவிர இந்த இடத்துக்கு சாமி கும்பிட (தலைவர்) வரபோறார் தெரியும் தானே . எதிரியை பின்னுக்கு தள்ள முடியாதோ ?"

"இல்லை அண்ணே அவனின் 8 (8 man team ) வெளிகிட்டான்கள் அண்ணே. எங்கட உடுப்போட வாறாங்கள்.. கிட்டே வந்திட்டாங்கள் என்றால் கலைகிறது கஷ்டம் அண்ணே ..எண்ட ஆக்கள் எல்லாம் சங்கர் (இறந்திட்டார்கள் )..விளங்குதா அண்ணே .."

"சரி பொறுடாப்பா...கொஞ்ச அரிசி (ஆட்கள்) அனுப்புறேன். எண்ட மூட்டையிலே (அணியிலே) இருந்து .."

"சரி அண்ணே விரைவா ..கோயில் முருகன் மூலை (வடகிழக்கு) "

"நன்றி அவுட்'

அந்த அலைபேசி அணைப்பை துண்டித்த அந்த மூத்த தலைவர். தம்பிமார் கேட்டு கொண்டு தானே இருந்தனீங்கள் ..இப்ப்போ உங்களிலே ஒரு அணி எதிரியின் முன்னேற்றத்தை முறியடிக்க போகவேணும் என்று சொல்லி முடிக்க முன்னர் அகிலன் தலைமையில் ஒரு அணி எழுந்து நின்றது.

அண்ணே நாங்கள் போறம் அண்ணே..

அண்ணே ..நாங்கள் உங்கள் கூடவும் தலைவர்கூடவும் கடைசி மட்டும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பினான்கள். இப்போ இந்த சண்டையில் காயப்பட்டால் அந்த அணியில் நாங்கள் இருக்க முடியாது என்றும் எங்களுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு பேரும் உங்களையும் தலைவரையும் காப்பாத்தி எங்கட விடுதலைப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவான்கள் என்ற நம்பிக்கையில் நானும் என்ர அணியும் போறோம் அண்ணே ...

அந்த மூத்த தலைவர் தலையசைக்க .பதினெட்டு பேர் கொண்ட அகிலனின் அணி களமுனைக்கு விரைந்தது. பொதி செய்யப்பட்ட ஆயுதங்களை பொதியிலிருந்து எடுத்தவாறு ஓடிபோனார்கள் அந்த மானமாவீரர்கள் தங்கள் ஆசை துறந்து... தலைவன் உயிர் காக்க.

அந்த மூத்த தலைவர் சண்டைப்பொறுப்பை தளபதி அன்பு மாஸ்டரிடம் கொடுத்தார். அன்பு மாஸ்ரர் அலைபேசியில் சண்டையை நெறிப்படுத்தினார்.

"அல்பா ரோமியோ ..சண்டை நெருக்கமாக நடக்குது எங்களிலே மூன்று சங்கர் ..அவன் வேகமாக வாறான்..வாழைப்பொத்திகள் (ஆர்பிஜி) வைச்சு அடிக்கிறான்.இன்னும் கொஞ்ச நேரம் தான் நிண்டுபிடிக்கலாம்..வேகமாக முடிக்க சொல்லுங்க அண்ணே"

"அல்பா கிலோ ..அப்படி இல்லை உங்களுக்கு என்ன வேணும் என்று சொல்லுங்க ..தரலாம் அவனை ஒரு அடி கூட முன்னுக்கு நகரவிடக்கூடாது..பிறகு எல்லாம் பிழைச்சு போகும் தெரியும் தானே .."

"அல்பா ரோமியோ ..ஒரு கிபிர் (கரும்புலி ) வந்தால் ..நிலைமையை கொஞ்சம் சமாளிக்கலாம் .."

"சரி கொஞ்சம் பொறுங்கள் கிபிருக்கு ஏற்பாடு செய்கிறேன்"..

அன்பு மாஸ்டர் அந்த மூத்த தலைவரை நோக்கி திரும்ப.

"எனக்கு விளங்குதடாப்பா..ஆனால் எல்லா கரும்புலிகளையும் பின்னுக்கு நகர்த்தியாச்சே ..சக்கை மட்டும் தான் இங்கே இருக்கு ..ஆட்கள் பின்னாலிருந்து வர ஒரு இருபது முப்பது நிமிஷம் என்றாலும் ஆகும் (மக்கள் நெரிசல் அப்படி)..என்ன செய்கிறது என்று தாண்டாப்பா யோசிக்கிறேன். "என்றார் அந்த மூத்த தலைவர்.

அப்போது யாரும் எதிர்பாராதவகையில் ஒரு குரல் ..

நான் போகிறேன் அண்ணே ..

ராணிமைந்தன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான் .

(தொடரும்)

பாகம் பதினெட்டு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

பாகம் பதினெட்டு

எல்லோருடைய கண்களும் அவனை நோக்கியே இருந்தது.

ராணி உறுதியோடு நிமிர்ந்தே நின்றான்.

அவன் முகத்தில் எந்தவித கலக்கமோ, குழப்பமோ இல்லாமல் தெளிவாக நின்றான்.

தான் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் முழுசாக தெரிந்தவனாக இருந்தான்.

நேற்று இரவு கூட, உணவுகளை பொதி கட்டும் போது, சந்தோசமாக பேசி கொண்டிருந்தவன்..

" மச்சான் இந்திய இராணுவ காலபகுதியில் நாங்கள் சின்ன பிள்ளைகள், தலைவர் காட்டுக்குள்ளே இருக்கும்போது நாங்கள் அவரின் பக்கத்தில் இல்லை. இப்போ எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. எங்கட மக்களின் போராட்டத்தை கொண்டு நடத்தும் தலையாய பொறுப்பு எங்களுக்கு கிடைச்சிருக்கு. "

" நான் என் வாழ்நாளிலையே பார்க்காத தலைவர் கூட சாப்பிட்டு படுத்துறங்கி அவரை பாதுகாக்கும் கடமை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன் " என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்த ராணிமைந்தன், கரும்புலியாக தான் போகிறேன் என்றால் யாருக்கு தான் ஆச்சரியமாக இருக்காது.

" ராணி இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் இல்லை. இதற்கு நிறைய உறுதி வேணும். பயிற்சி வேணும். திடீர் என்று முடிவெடுத்து இலக்கை துல்லியமாக தாக்க முடியாது..." அந்த மூத்த தலைவர் சொல்லி முடிக்க முதலே ..

"இல்லை அண்ணே ..நான் செய்வேன் ..என்னை நம்புங்க.. உங்கள் மேல் ஆணையாக ..இந்த தாய் மண் மீது ஆணையாக நீங்கள் சொல்லுற இலக்கை தாக்கி அழிப்பேன்" மிகவும் உறுதியாக அவன் வாயிலிருந்து வசனங்கள் வெளிப்பட்டன.

"அப்படி இல்லை ராணி.. உன்னிலே எனக்கு நம்பிக்கை இருக்கு...ஆனால் இது வழக்கமான தாக்குதல் பாணி இல்லை ..ஒரே ஒரு முறை தான் தாக்கலாம். அதுவும் இலக்கை சரியாக தாக்கவேணும். பிழைச்சுதோ அவன் சுதாரிச்சிடுவான். அப்புறம் நாங்கள் தாக்கவே முடியாது. நிறைய பயிற்சி தேவை ..தலைவர் சம்பந்தபட்ட விடயம் வேற..அது தான் யோசிக்கிறேன்.."

"அண்ணே ..நேரம் போகுது அண்ணே ..என்னை நம்புங்க அண்ணே ..நான் நிச்சயமா வெற்றிகரமாக முடிப்பேன்"..

வேறுவழி இல்லாமலும். ராணியின் உறுதியின் பேரிலும் இரண்டுமனசுடன் அந்த மூத்த தலைவர் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார்.

ராணியின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி. அதன் வெளிபாடோ என்னவோ ஒப்புதல் கிடைத்தவுடனேயே அந்த மூத்த தலைவருக்கு ராணுவ வணக்கம் செலுத்தினான்.

சொல்லுங்கள் உறவுகளே ..இவர்கள் பிறந்த இனத்தில் தானே நாங்களும் பிறந்தோம். இவர்களுக்கு இருக்கும் உறுதியும் வேட்கையும் எங்களுக்கும் இருக்கத்தானே வேணும் ..

நேற்றுவரை தலைவருடன் வாழணும் என்று நினைத்த ஒருவனால்..

தன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், தங்கைகளுக்கும் நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதி வந்த ஒருவனால்..

தன் வாழ்நாளில் பொறியிலாலராக வரவேண்டும் என்று இலட்சியத்துடன் வாழ்ந்த ஒருவனால்..

இன்று தன்னுயிரையே உவந்து அளிக்கும் வல்லமையை யார் கொடுத்தது..

சொல்லுங்கள் உறவுகளே..

நாங்கள் பிறந்த அதே மண்ணில் தானே இவர்களும் பிறந்தார்கள்...

நாங்கள் விளையாடிய அதே தெருக்களில் தானே இவர்களும் விளையாடினார்கள்..

நாங்கள் கும்பிட்ட அதே கடவுளை தானே இவர்களும் கும்பிட்டார்கள்..

நாங்கள் படிச்ச அதே பள்ளிகூடத்தில் தானே இவர்களும் படிச்சார்கள்..

இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த உணர்வுகள் வந்தது.. இவர்களுக்கு மட்டும் ஏன் தங்கள் உயிரை சொன்ன நேரத்தில் மக்களுக்காக கொடுக்கும் வல்லமை வந்தது..

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ..

இவர்களா பிழைக்க தெரியாதவர்கள்..

இவர்களா யதார்த்தம் தெரியாதவர்கள் ..

இவர்களா சுழிக்க தெரியாதவர்கள் ..

இவர்களா இரக்கமற்றவர்கள் ...

அந்த எதிரியின் முன்னணி கட்டளை மையம் தான் ராணியின் இலக்கு.

அன்பு மாஸ்டர் ராணிக்கு திட்டத்தை விளங்கபடுத்தி கொண்டிருந்தார்.

"இங்கே பார் ராணி ..அவன் அந்த கட்டளை மையத்தை சுற்றி கடும் பாதுகாப்பு போட்டிருப்பான். நீ எப்படி என்றாலும் சக்கையை அந்த மையத்திலே இருந்து ஒரு முப்பது மீற்றருக்குள் வெடிக்கவை..மிச்சத்தை நாங்கள் பார்க்கிறோம். என்ன பாடு பட்டாலும் முப்பது மீற்றருக்குள்ளே போயிடு..அதில் தான் எங்கட தாக்குதல் வெற்றி தங்கி இருக்கு."

"உனக்கு இலக்கை அடையும் வரை காப்புச்சூடு வழங்க கனிவாளனும், எழில்வண்ணனும் வருவார்கள். அவர்கள் உனக்கான தடைகளை உடைத்து தருவார்கள்."

"சரி அண்ணே "

"ராணி ..உன்னில் தான் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்திலே இங்கே தலைவர் வருவார். அவர் இங்கே வாறதும் ..எங்கட அடுத்த திட்டத்தின்ட வெற்றியும் உண்ட கையிலே தான் இருக்கு..""

"எனக்கு விளங்குது அண்ணே...."

"சரி வெளியிலே சக்கை நிக்குது போய்ட்டுவா ..தொடர்பிலே பேசுவோம்.."

"சரி அண்ணே.."

மூத்த தலைவரிடம் வந்த ராணி அவரை ஆரத்தழுவினான்.

கண்கள் கலங்க.. அண்ணே .. எனக்கு பயத்தாலே கண்கலங்கவில்லை அண்ணே ..

இன்னும் பத்து நிமிஷம் நின்றால் நான் வாழ்நாளிலே காணாத என் தலைவனை காணலாம் அந்த பாக்கியம் கூட என்னக்கு இல்லையே என்று தான் அண்ணே.. கண் கலங்குது.

என்னை இப்படி வழிநடத்தின உங்களை எல்லாம் இனிமேல் பார்க்க முடியாது என்று தான் அண்ணே கண் கலங்குது..

அண்ணே எப்படியாவது தலைவரை பாதுகாப்பாக கொண்டுபோய் சேருங்கள் அண்ணே ..

அண்ணே நீங்களும் தலைவரும் தமிழீழம் கிடைக்கும்வரை உயிரோட இருக்கணும் அண்ணே ..அது தான் அண்ணே என்னுடைய கடைசி ஆசை..

நன்றி வணக்கம் அண்ணே.... சொன்ன ராணி திரும்பி கூட பார்க்காமல் புறப்பட்டு தனக்கு காப்புச்சூடு வழங்கபோகும் தோழர்களிடம் வந்தான்.

தனது பழ ரின்னையும், இறைச்சி துண்டுகள் ரின்னையும் உடைத்து அவர்களிடம் நீட்டினான்.. சாப்பிடுங்க மச்சான் சண்டை பிடிக்க தெம்பு வேணும்..

அவர்கள் இவனுக்கு ஊட்ட வெளிக்கிட ..இல்லை மச்சான் இன்னும் பத்து நிமிசத்திலே சாகபோற எனக்கு, என் வயிற்றுக்கு எதுக்கு மச்சான் சாப்பாடு..நீங்களே சாப்பிடுங்க மச்சான்.. அப்போ தான் தெம்பா சண்டை பிடிக்கலாம்.. நீங்கள் உடைச்சு கொடுத்தால் தான் நான் கடைசி மட்டும் போகலாம் ..சாப்பிடுங்க என்று ஊட்டி விட்டான் ராணி ..

அந்த காட்சியை பார்த்தவர்கள் மனசு இறுகுவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது..

தற்கொலை செய்யபோறவர்கள் கூட கடைசி ஆசைக்கு விரும்பினதை சாப்பிடுவார்கள் ...மக்களுக்காக வெடிக்க போகும் அவன் பசிக்கு கூட சாப்பிடாமல் தோழர்களுக்கு கொடுத்துவிட்டு சென்றான்..

ராணிக்கு இன்னொரு ஆசையும் இருந்தது.. ஆனால் அவன் அதை என்றைக்குமே சொன்னது இல்லை.. அவனுக்கு CBZ ஈருளி ஓடனும் என்று நிறைய நாள் ஆசை...ஆனால் அவனுக்கு அது என்றைக்குமே கிடைத்ததில்லை. இறுதி காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாருமே வைத்திருந்ததும் இல்லை...

ராணி அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தான்..

அவனுக்கான சக்கை வாகனம் காத்திருந்தது.

அது ஒரு CBZ.

(தொடரும்)

பாகம் பத்தொன்பது இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் கதை விறுப்பாக செல்கிறது.எப்படி கதையை கொண்டு செல்லப் போறீர்கள் என்பதை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்...இந்தக் கதைக்கு ஒரு சிலரைத் தவிர மற்றவர் கருத்துக் கூறவில்லை என நினைக்க ஆச்சரியமாய் உள்ளது[ :unsure: ஏன் ஒருத்தரும் கருத்து எழுதவில்லை என தெரியவில்லை?

Link to comment
Share on other sites

பாகம் பத்தொன்பது

எனக்காக காத்திருந்த சக்கை நிரம்பிய CBZ ஈருளியில் இல் ஏறி கொண்டேன்.

எனக்காக கொடுக்கபடிருந்த வெடிகுண்டு அங்கியை (ஜாக்கெட்) அணிந்து கொண்டேன்.

அதை அணியும் போது, சிறுவயதில் பள்ளிக்கூடம் போகாது அடம்பிடிக்கும்போது அம்மா கட்டாயபடுத்தி அணிவிக்கும் பாடசாலை சீருடை தான் ஞாபகத்துக்கு வந்தது.

புத்தக பையை தூக்கி கொண்டு ஓடும்போது வாசல் வரை கலைத்து கலைத்து சோறு ஊட்டும் அன்னை தான் என் கண்ணுக்குளே.

எழிவண்ணன் ரி-56 ரக தானியங்கி துப்பாக்கியுடனும், அதற்கான மேலதிக ரவைகூடுகளுடனும், என் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

கனிவாளன் ஒரு ஏகே எல்எம்ஜி யுடன் புறபட்டு சென்றுவிட்டான்.

வாசல்வரை வந்திருந்த அந்த மூத்த தலைவனையும், என்னை இயக்க போகும் தளபதி அன்பு மாஸ்டரையும், இறுகிய முகங்களோடு விடைகொடுக்க வந்திருந்த என் தோழர்களையும் இறுதியாக ஒரு முறை பார்த்து தலையசைத்து விடைபெற்று கொண்டேன்.

இறுதியாக பேச வேண்டும் என்று எவ்வளவோ வார்த்தைகள், இருந்தும் எதுவுமே பேச முடியவில்லை. கண்களால் மட்டுமே பேசி கொண்டு விடைபெற்றேன்.

என் வாழ்நாளில் ஒரு நாளாவது ஓடி பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த CBZ , இப்போ என் இறுதி வாகனமாக.ஒரு உதையிலேயே இயக்கத்தை தொடங்கியது.

"அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.."

"அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.."

"சொல்லுங்க அல்பா ரோமியோ "

"கிபிர் வெளிகிட்டுது.."

"விளங்கிட்டுது .."

அகிலன், அன்பு மாஸ்டரின் கட்டளைக்கிணங்க, வெடிப்பினால் ஏற்படபோகும் பாதிப்பில் இருந்து தன் அணியினை காப்பாற்ற தன் அணியினை கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினான்.

கனிவாளன் ஒரு வீட்டின் கூரை மேலே நிலையெடுத்து, இறுதி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான்.

எழில் என் பின்னாலே எழுந்து நின்று தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான்.

அலைபேசி அழைத்தது..

"ரோமியோ அல்பா ..ரோமியோ அல்பா ...அல்பா ரோமியோ "

"சொல்லுங்க அல்பா ரோமியோ.."

"எல்லாம் நல்லபடியா போகுதா ..""

"அந்த மாதிரி போகுது அண்ணே .."

"சரி தொடர்பிலே இருந்து கொள் "

"நன்றி அண்ணே .."

அலைபேசியை அணைத்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவிலே வளைத்து வளைத்து என் ஆசை CBZ ஐ ஓடி கொண்டிருந்தேன்.

ஒழுங்கையாலே வந்து இப்போ முல்லை பரந்தன் நெடுஞ்சாலையில் ஏற்றிவிட்டேன்.

இனி எதிரியின் நேரடி எதிர் தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

என்னுள் ஆயிரம் எண்ணங்கள்..என் வாழ் நாளிலே நான் செய்த பிழைகள் எல்லாம் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. அவர்களிடம் எல்லாம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டேன்.

எத்தனையோ பேருடைய முகங்கள் மாறி மாறி வந்தன. அம்மா அப்பா தங்கைகள், சேகர் அண்ணா , என் மடியில் உயிர் துறந்த அம்மா , தங்கை , கலையரசி ..இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

எனக்குள் இருந்த ஆசைகளை எல்லாம் கொன்று புதைத்தேன். எங்கள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று மட்டும் மனசுக்குள் உறுதியாக நினைத்தேன்.

எப்படியாவது சொன்ன இலக்கை அழித்திட வேண்டும் என்று திரும்ப திரும்ப வாயிலே முணுமுணுத்தேன். இறுதி நேரத்தில் கூட என் மனம் மாற கூடாது என்று கடவுளை வேண்டினேன்.

அன்பான உறவுகளே ...

இது தான் நான் உங்க கூட பேசும் கடைசி சந்தர்ப்பம்..

உண்மையில் எனக்கே என்ன பேசுறது என்று தெரியவில்லை.. நிறைய பேசணும் போல இருக்கு..ஆனால் பேச முடியவில்லை..

என் பாசங்களே ..நீங்கள் என் உணர்வுகளை நிச்சயமாக புரிந்து கொள்ளுவீங்கள்..நாங்கள் சாகோணும் என்று பிறக்கவில்லை..ஆசைகள் இல்லாமலும் சாகவில்லை..இது ஒரு உணர்வு ..உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு ..உங்களை நாங்கள் எங்களை விட ஆழமாக நேசிக்கிறோம்.

அன்புள்ளங்களே ...

எங்கள் மண்ணை நேசியுங்கள்.. எங்கள் விடுதலை மீது நம்பிக்கை வையுங்கள் ..எங்கள் தலைவன் மீதும் தளபதிகள் மீதும் பற்று வையுங்கள்..அவர்கள் நிச்சயமாக தங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடுதலை பெற்று தருவார்கள்.

நிச்சயம் எங்களுக்கு நாடு கிடைக்கும்.. நீங்கள் தொடர்ந்து அதற்காக தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் சாகிறேன்.

உறவுகளே .... எனக்கு என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கும் உணர்ச்சி இருக்கு.. எனக்கும் பாசம் இருக்கு ..அழுகை தான் வருகுது ..

பயம் இல்லை ..பாசம் ..

உறவுகளே ..எங்க அம்மா...எங்க அம்மா மட்டும் இல்ல ..என்னமாதிரி இங்கே எத்தனையோ போராளிகள் .... அவங்க அம்மா குடும்பங்கள் எல்லாவற்றையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்.

தயவு செய்து கும்பிட்டு கேட்கிறேன் அவங்களை கொஞ்சம் பார்பீங்களா ..??

கொஞ்சம் பொறுங்கள் உறவுகளே அலைபேசி அழைக்குது ..

"ரோமியோ அல்பா ..அங்காலே கிலோ அல்பா ..தடைகளை உடைச்சிட்டான் ..நீங்கள் போகலாம் "

"நன்றி அல்பா ரோமியோ "

சரி உறவுகளே நேரமாகிவிட்டது..

அடுத்த பிறப்பு ஒன்று இருந்தால் அதுவும் இந்த இனத்திலேயே எங்க அம்மா வயிற்றேலேயே பிறந்து உங்களுக்காகவே போராடி சாகனும் ..

நான் போயிற்று வாறன் ..மன்னிக்கவும் போறேன் ...

நாங்கள் சாவதும் இல்லை வாழ்வதும் இல்லை.

என் பின்னல் இருந்து சுட்டு கொண்டிருந்த எழில்வண்ணன், என்னை தழுவி கொஞ்சிவிட்டு பாய்ந்து கொண்டான்.

எதிரி என்னை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினான்.. சிலர் என்னை கண்டு ஓட தொடங்கினார்கள். நான் எண்ணெய் தாங்கியுடன் என் உடலை அணைத்தவாறே வேகமாக ஓடினேன்.

கட்டளை மையம் என் கண்ணில் தெரிந்தது.

என் சட்டை பையினுள் இருந்த அம்மாவுக்கான நாளேட்டை ஒரு முறை தடவி பார்த்து கொண்டேன்.

என் வாய் என்னை அறியாமலே அம்மா.. என்று முணுமுணுத்தது..

தொடர்பினை அமுக்கி ..

"அல்பா ரோமியோ ..நான் கிட்டே வந்திட்டேன்..""

"ரோமியோ அல்பா.. வேற ஏதும் சொல்ல இருக்கா ..சாமியும் இருக்கிறார் "

"இல்லை அண்ணே ..நான் இண்டைக்கு தான் என் வாழ்க்கையிலே எழுச்சியா இருக்கிறேன்.. இனி எல்லாமே எழுச்சி தான் அண்ணே ..காதை கொடுத்து வடிவா கேளுங்கோ ..எழுச்சி தெரியும் அண்ணே.. எங்களுக்கு தான் வெற்றி அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் "

பட்டோம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் .....

அந்த முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது..

கனிவாளன் தொடர்பெடுத்தான்..

"அல்பா ரோமியோ ...கிபிர் வெடிச்சிட்டுது..அவன்ட மையத்துக்குள்ளே போய் நடுவிலே தான் வெடிச்சான் அண்ணே .."

"அந்த இடமே சக்கையா போச்சு அண்ணே .."

"ரோமியோ அல்பா வீரச்சாவு அண்ணே .."

அலைபேசியை அணைத்து விட்டு கண்ணீருடன் திரும்பிய அன்பு மாஸ்டரிடம், அந்த மூத்த தலைவர் சொன்னார் ..

"ராணி.... அவன் ஒரு மாவீரன் தான்..."

(தொடரும்)

பாகம் இருபது இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

பாகம் பத்தொன்பது

எனக்காக காத்திருந்த சக்கை நிரம்பிய CBZ ஈருளியில் இல் ஏறி கொண்டேன்.

எனக்காக கொடுக்கபடிருந்த வெடிகுண்டு அங்கியை (ஜாக்கெட்) அணிந்து கொண்டேன்.

அதை அணியும் போது, சிறுவயதில் பள்ளிக்கூடம் போகாது அடம்பிடிக்கும்போது அம்மா கட்டாயபடுத்தி அணிவிக்கும் பாடசாலை சீருடை தான் ஞாபகத்துக்கு வந்தது.

புத்தக பையை தூக்கி கொண்டு ஓடும்போது வாசல் வரை கலைத்து கலைத்து சோறு ஊட்டும் அன்னை தான் என் கண்ணுக்குளே.

எழிவண்ணன் ரி-56 ரக தானியங்கி துப்பாக்கியுடனும், அதற்கான மேலதிக ரவைகூடுகளுடனும், என் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

கனிவாளன் ஒரு ஏகே எல்எம்ஜி யுடன் புறபட்டு சென்றுவிட்டான்.

வாசல்வரை வந்திருந்த அந்த மூத்த தலைவனையும், என்னை இயக்க போகும் தளபதி அன்பு மாஸ்டரையும், இறுகிய முகங்களோடு விடைகொடுக்க வந்திருந்த என் தோழர்களையும் இறுதியாக ஒரு முறை பார்த்து தலையசைத்து விடைபெற்று கொண்டேன்.

இறுதியாக பேச வேண்டும் என்று எவ்வளவோ வார்த்தைகள், இருந்தும் எதுவுமே பேச முடியவில்லை. கண்களால் மட்டுமே பேசி கொண்டு விடைபெற்றேன்.

என் வாழ்நாளில் ஒரு நாளாவது ஓடி பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த CBZ , இப்போ என் இறுதி வாகனமாக.ஒரு உதையிலேயே இயக்கத்தை தொடங்கியது.

"அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.."

"அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.."

"சொல்லுங்க அல்பா ரோமியோ "

"கிபிர் வெளிகிட்டுது.."

"விளங்கிட்டுது .."

அகிலன், அன்பு மாஸ்டரின் கட்டளைக்கிணங்க, வெடிப்பினால் ஏற்படபோகும் பாதிப்பில் இருந்து தன் அணியினை காப்பாற்ற தன் அணியினை கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினான்.

கனிவாளன் ஒரு வீட்டின் கூரை மேலே நிலையெடுத்து, இறுதி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான்.

எழில் என் பின்னாலே எழுந்து நின்று தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான்.

அலைபேசி அழைத்தது..

"ரோமியோ அல்பா ..ரோமியோ அல்பா ...அல்பா ரோமியோ "

"சொல்லுங்க அல்பா ரோமியோ.."

"எல்லாம் நல்லபடியா போகுதா ..""

"அந்த மாதிரி போகுது அண்ணே .."

"சரி தொடர்பிலே இருந்து கொள் "

"நன்றி அண்ணே .."

அலைபேசியை அணைத்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவிலே வளைத்து வளைத்து என் ஆசை CBZ ஐ ஓடி கொண்டிருந்தேன்.

ஒழுங்கையாலே வந்து இப்போ முல்லை பரந்தன் நெடுஞ்சாலையில் ஏற்றிவிட்டேன்.

இனி எதிரியின் நேரடி எதிர் தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

என்னுள் ஆயிரம் எண்ணங்கள்..என் வாழ் நாளிலே நான் செய்த பிழைகள் எல்லாம் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. அவர்களிடம் எல்லாம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டேன்.

எத்தனையோ பேருடைய முகங்கள் மாறி மாறி வந்தன. அம்மா அப்பா தங்கைகள், சேகர் அண்ணா , என் மடியில் உயிர் துறந்த அம்மா , தங்கை , கலையரசி ..இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

எனக்குள் இருந்த ஆசைகளை எல்லாம் கொன்று புதைத்தேன். எங்கள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று மட்டும் மனசுக்குள் உறுதியாக நினைத்தேன்.

எப்படியாவது சொன்ன இலக்கை அழித்திட வேண்டும் என்று திரும்ப திரும்ப வாயிலே முணுமுணுத்தேன். இறுதி நேரத்தில் கூட என் மனம் மாற கூடாது என்று கடவுளை வேண்டினேன்.

அன்பான உறவுகளே ...

இது தான் நான் உங்க கூட பேசும் கடைசி சந்தர்ப்பம்..

உண்மையில் எனக்கே என்ன பேசுறது என்று தெரியவில்லை.. நிறைய பேசணும் போல இருக்கு..ஆனால் பேச முடியவில்லை..

என் பாசங்களே ..நீங்கள் என் உணர்வுகளை நிச்சயமாக புரிந்து கொள்ளுவீங்கள்..நாங்கள் சாகோணும் என்று பிறக்கவில்லை..ஆசைகள் இல்லாமலும் சாகவில்லை..இது ஒரு உணர்வு ..உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு ..உங்களை நாங்கள் எங்களை விட ஆழமாக நேசிக்கிறோம்.

அன்புள்ளங்களே ...

எங்கள் மண்ணை நேசியுங்கள்.. எங்கள் விடுதலை மீது நம்பிக்கை வையுங்கள் ..எங்கள் தலைவன் மீதும் தளபதிகள் மீதும் பற்று வையுங்கள்..அவர்கள் நிச்சயமாக தங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடுதலை பெற்று தருவார்கள்.

நிச்சயம் எங்களுக்கு நாடு கிடைக்கும்.. நீங்கள் தொடர்ந்து அதற்காக தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் சாகிறேன்.

உறவுகளே .... எனக்கு என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கும் உணர்ச்சி இருக்கு.. எனக்கும் பாசம் இருக்கு ..அழுகை தான் வருகுது ..

பயம் இல்லை ..பாசம் ..

உறவுகளே ..எங்க அம்மா...எங்க அம்மா மட்டும் இல்ல ..என்னமாதிரி இங்கே எத்தனையோ போராளிகள் .... அவங்க அம்மா குடும்பங்கள் எல்லாவற்றையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்.

தயவு செய்து கும்பிட்டு கேட்கிறேன் அவங்களை கொஞ்சம் பார்பீங்களா ..??

கொஞ்சம் பொறுங்கள் உறவுகளே அலைபேசி அழைக்குது ..

"ரோமியோ அல்பா ..அங்காலே கிலோ அல்பா ..தடைகளை உடைச்சிட்டான் ..நீங்கள் போகலாம் "

"நன்றி அல்பா ரோமியோ "

சரி உறவுகளே நேரமாகிவிட்டது..

அடுத்த பிறப்பு ஒன்று இருந்தால் அதுவும் இந்த இனத்திலேயே எங்க அம்மா வயிற்றேலேயே பிறந்து உங்களுக்காகவே போராடி சாகனும் ..

நான் போயிற்று வாறன் ..மன்னிக்கவும் போறேன் ...

நாங்கள் சாவதும் இல்லை வாழ்வதும் இல்லை.

என் பின்னல் இருந்து சுட்டு கொண்டிருந்த எழில்வண்ணன், என்னை தழுவி கொஞ்சிவிட்டு பாய்ந்து கொண்டான்.

எதிரி என்னை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினான்.. சிலர் என்னை கண்டு ஓட தொடங்கினார்கள். நான் எண்ணெய் தாங்கியுடன் என் உடலை அணைத்தவாறே வேகமாக ஓடினேன்.

கட்டளை மையம் என் கண்ணில் தெரிந்தது.

என் சட்டை பையினுள் இருந்த அம்மாவுக்கான நாளேட்டை ஒரு முறை தடவி பார்த்து கொண்டேன்.

என் வாய் என்னை அறியாமலே அம்மா.. என்று முணுமுணுத்தது..

தொடர்பினை அமுக்கி ..

"அல்பா ரோமியோ ..நான் கிட்டே வந்திட்டேன்..""

"ரோமியோ அல்பா.. வேற ஏதும் சொல்ல இருக்கா ..சாமியும் இருக்கிறார் "

"இல்லை அண்ணே ..நான் இண்டைக்கு தான் என் வாழ்க்கையிலே எழுச்சியா இருக்கிறேன்.. இனி எல்லாமே எழுச்சி தான் அண்ணே ..காதை கொடுத்து வடிவா கேளுங்கோ ..எழுச்சி தெரியும் அண்ணே.. எங்களுக்கு தான் வெற்றி அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் "

பட்டோம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் .....

அந்த முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது..

கனிவாளன் தொடர்பெடுத்தான்..

"அல்பா ரோமியோ ...கிபிர் வெடிச்சிட்டுது..அவன்ட மையத்துக்குள்ளே போய் நடுவிலே தான் வெடிச்சான் அண்ணே .."

"அந்த இடமே சக்கையா போச்சு அண்ணே .."

"ரோமியோ அல்பா வீரச்சாவு அண்ணே .."

அலைபேசியை அணைத்து விட்டு கண்ணீருடன் திரும்பிய அன்பு மாஸ்டரிடம், அந்த மூத்த தலைவர் சொன்னார் ..

"ராணி.... அவன் ஒரு மாவீரன் தான்..."

(தொடரும்)

:( ராணி மைந்தனைப் போல் எத்தனை ஆயிரம் மாவீரர்கள்... அவர்கள் மரணித்தும் வாழ்பவர்கள்!!

உங்கள் ஆக்கத்திற்கும் இணைப்பிற்கும் நன்றி அபிராம்!!

Link to comment
Share on other sites

மனதை மிகவும் நெருடுகிறது. எத்தனை இழப்புக்கள் எத்தனை தியாகங்கள் ஆனால் விடியலோ ............................ :( :( :(

நன்றி அபிராம் தங்கள் ஆக்கத்திற்கு மிகவும் அருமையாக தொடர்கின்றீர்கள் .

உங்கள் ஆக்கம் மூலமாவது நான் தேடும் விடைகள் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நன்றிகள் அபிராம். வார்த்தை இல்லை உங்கள் நிஜ (கதையை) விமர்சிப்பதற்கு. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பாக்கின்றோம்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாகம் இருபது

மே மாதம் பதினைந்தாம் திகதி ....

இரவு ஏழு மணியை தாண்டி இருந்தது....

எங்கும் மரண ஓலங்களும் செல் விழுந்து வெடிக்கும் சத்தங்களும்..

தெருவோரம் எங்கும் உடலில் இருந்து நீர்வடியும் பிணங்கள்.... இறந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்....

அந்த இடமெங்கும் புகை மூட்டமும் சாவின் மணமும் தான்.

உயிரோடு இருந்த மக்கள் கூட பிணமாக தான் நடமாடினார்கள். எங்கே போவது என்று கூட தெரியாமல் வட்டுவாகல் பக்கம் ஒரு கூட்டமும் நந்திக்கடல் பக்கம் ஒரு கூட்டமுமாக மாறி மாறி ஓடினார்கள்..

தங்கள் பாச உறவுகளை தொலைத்துவிட்டு அந்த இடமெங்கும் பெயர் சொல்லி கத்தி கத்தி அலைந்தார்கள்...

அந்த இடத்தில் அந்த கணத்தில் இருந்த எந்த ஒரு மனுசனும் நூறு முறை செத்த அனுபவத்தை கொண்டிருப்பார்கள் ..

அவர்களின் மனசை உலகத்தில் இருக்கும் எந்த மனோதத்துவ வைத்தியனாலும் ஆறுதல் படுத்த முடியாது..

அந்த தெருவோரத்தில் நாய் ஒன்று ஒரு பிணத்தின் (தமிழனின்) குடல்களை தின்று கொண்டிருந்தது.. அதை பார்த்தும் உணர்வற்று மக்கள் அந்த நாயை கூட துரத்தாமல் ஓடி கொண்டிருந்தார்கள்..

எங்களுக்கு தான் உணவே இல்லை அந்த நாயாவது சாபிட்டு பசியாறட்டும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை ..

அதை கூட காண சகிக்காமல் ஒரு முதியவர் தனது ஊன்று தடியால் அந்த நாயை துரத்தினார்..அது நாளைக்கு தேவையான குடல்களையும் கவ்வி கொண்டு ஓடியது..

இன்னுமொரு நாய் யாரோ ஒரு இறந்த குழந்தையின் கையை வாயில் கவ்வியபடி மக்களை போலவே அந்த தெருவெங்கும் அலைந்தது..

அந்த முல்லை - பரந்தன் சாலையில் தெருவோரம் அடையாளம் காணபட்ட பிணங்களை சுற்றி உற்றவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.. அவர்களால் கூட ஒப்பாரி வைத்து அழ முடியவில்லை ..

பசியினால் அவர்களின் வயிறு மட்டுமல்ல நாக்கும் வறண்டு போய் இருந்தது ..

கத்தி கத்தி வறண்டு போன தங்கள் தொண்டையை ஈரபடுத்த தண்ணீர் கூட இல்லாமல் ..ஒரு கிடங்கில் தேங்கி இருந்த நீரும் குருதியும் கலந்த அந்த செந்நீரை பருகிவிட்டு மீண்டும் ஓலமிட்டு கத்தினார்கள்..

நாளை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு அனுப்பி வைப்பதற்காக காயமடைந்த போராளிகளை தூக்கி கொண்டு வந்து அந்த சாலையோரமாக கிடத்தினார்கள் ஏனைய போராளிகள்..

வட்டுவாகல் முன் காவலரணில் இருந்து ஒற்றை பனையடி வரை ஆண் பெண் பேதமின்றி காயமடைந்த போராளிகள் சாலையோரத்தில் வரிசையாக காவலிருந்தார்கள் நாளைய நாளுக்காக..

அவர்களுக்கு ராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு போக விருப்பம் இல்லை என்றாலும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தங்கள் உடல் மற்றும் மன வேதனையோடு காத்திருந்தார்கள்..

மக்கள் சிலர் அவர்களை பார்த்து தூற்றி கொண்டும் , காறி துப்பியும் , சிலர் மனசுக்குள் வேதனை பட்டும், சிலர் விடுப்பு அறியவும், சிலர் அவர்களுக்கு நடுவே தங்கள் உறவுகள் இருக்கிறார்களா என்று அறியவும் அந்த போராளிகளை ஒரு வினோத பிராணிகளாக சுற்றி சுற்றி வந்தார்கள்..

அந்த போராளிகள் ஏற்கனவே மனசளவில் இறந்து போய் இருந்தாலும், இந்த மக்களை இப்படி விட்டுவிட்டு போகிறோமே என்ற எண்ணம், அவர்களை அப்பவும் கொன்று கொண்டிருந்ததை இந்த மக்கள் அறிய வாய்ப்பு இல்லை..

ராணியம்மாவும், சுபாவும் அந்த காயமடைந்த போராளிகள் மத்தியின் தன் மகன்/அண்ணா இருப்பானோ என்ற நப்பாசையில் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள்.

மாலையில் கேட்ட அந்த மிக பெரும் வெடி சத்தத்தை தொடர்ந்து பல மணி நேரமாக வடக்கு பக்கத்தில் எந்த மோதலும் இடம் பெறவில்லை..

பெடியள் சக்கை விட்டு அடிச்சிருகிறாங்கள் என்று தெருவோரத்தில் மக்கள் பேசியதை கேட்ட ராணியம்மா ..."யார் பெத்த பிள்ளையோ ..அந்த மகராசி நல்லா இருக்கனும் " என்று மனசுக்குள் வேண்டி கொண்டாள்..

அது தான் பெற்ற பிள்ளை என்று கூட தெரியாமல் ..

நேசன் ..நேசன் ...நேசன் அண்ணா ...

ராணிமைந்தன் ..ராணி அண்ணா ..

என்று எந்த பெயரை சொல்லி தேடுவது என்று தெரியாமல் தாயும் மகளும் மாறி மாறி பெயர்களை உச்சரித்து தேடினார்கள் ..அழுதார்கள் ..அந்த இரவில் இராணுவம் ஏவிய பரா வெளிச்சத்தில் மகனின்/அண்ணனின் முகத்தை ஒத்திருந்த அனைவரின் பின்னாலும் ஓடி ஓடி போய் பார்த்தார்கள் ..

அண்ணா என்று கூப்பிட்டு வேறு யாரோ என்று ஏமாற்றத்துடன் அலைந்தார்கள் ..

சொல்லுங்கள் உறவுகளே ..இவர்களை பெற்ற மண்ணை நாங்கள் ஒரு முறையாவது தொட்டு கும்பிட வேண்டாமா ..

அந்த மண் எதிரியிடம் நாசமடைவதை பார்த்து கொண்டு சும்மா தான் இருக்க போறீங்களா ..?

அந்த காயமடைந்த போராளிகளில் ஒருவன் ..இவர்களின் தவிப்பை பார்த்து விட்டு சொன்னான் ..

"அம்மா ஒரு அணி ..நந்தி கடல் கரையை நோக்கி நகர்கிறது ..அதில் சில வேளைகளில் உங்கள் மகன் இருக்கலாம் ..போய் பாருங்கள் அம்மா "..

அவனின் கைகளை கண்ணில் ஒற்றி கொண்ட ராணியம்மா ..மகள் சுபாவையும் கூட்டி கொண்டு ..வேகமாக நந்தி கடல் கரையை நோக்கி நடந்தாள்..

வழியில் தனது கணவனையும் மகள் மதியையும் ..ஒரு மரத்தடியை அடையாளமாக சொல்லி அங்கெ காத்திருக்கும் படி கூறிவிட்டு , சுபாவுடன் வேக வேகமாக நடந்தாள்.. இல்லை இல்லை ஓடினாள்...

புலிகளின் பாரிய அணி ஒன்று நகர்வினை தொடங்கி இருந்தது ..அவர்கள் அமைதியாக வரிசையாக நந்தி கடல் முள்ளிவாய்க்கால் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்..

சிவப்பு கீலங்களாக வரும் சன்னகளை பார்த்தும் பயபடாதவர்களாக நேரிய வரிசையில் முதுகிலே சுமைகளுடன் விடுதலைக்காக தங்கள் உயிரை கொடுக்க நிதானமாக நடந்து கொண்டிருந்தார்கள்..

பரா வெளிச்சமடிக்கும் போது வேவு விமானத்தின் கண்ணில் படகூடாது என்று அவர்களின் அணித்தலைவர் மாறி மாறி கத்தி கொண்டிருக்க, வெளிச்சத்தை பார்த்ததும் அந்த சேற்று மண்ணில் விழுந்து படுத்து, வெளிச்சம் ஓய்ந்ததும் எழுந்து நடந்தார்கள் ..

அவர்களுக்கு நடுவே ராணியம்மாவும் சுபாவும் அண்ணா ..அண்ணா ..என்று கத்தி கொண்டு அலைந்தார்கள் ..இவர்கள் மட்டும் அல்ல.. அங்கே மகனை, தம்பியை, தங்கையை , கணவனை தொலைத்தவர்கள் என்று நிறைய பேர் ..அவர்களின் உறவுகள் பெயர் கூறி அழைத்து அழுதபடியே அலைந்தார்கள்..

வரிசையில் சென்ற போராளிகள் இறுகிய முகங்களுடன் யாருக்குமே பதிலளிக்காமல் தங்கள் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். மூத்த காயமடைந்த தளபதிகளை ஒரு கைதாங்கியில் சுமந்து கொண்டும் சென்றார்கள்.

அனைவரும் அமைதியாக நந்திக்கடல் கரையில் அந்த சேற்று நிலத்தில் ஆயுதங்களை அருகில் வைத்துவிட்டு சரியான நேரத்துக்காக காத்திருந்தார்கள்..

எதிரின் பக்கத்தில் ..திருவிழாவுக்கு போட்ட மாதிரி கரை முழுக்க வெளிச்சம் பாய்ச்சியபடி டியுப் லைட்டுகள் மின்னி கொண்டிருந்தன.

கறுப்பு உடை அணிந்த ஆண்கள் பெண்கள் கலந்த சில போராளிகள் முதுகிலே வெடிமருந்துகளை சுமந்தபடி , மெதுவாக கரையை தாலாட்டிய நந்தி கடலைன்னையினுள் இறங்கி எதிரின் திசையை நோக்கி நகர தொடங்கினார்கள்..

கரும்புலிகள் இறங்கிட்டான்கள் கொஞ்ச நேரத்திலே பெரிய சண்டை நடக்க போகுது என்று சனம் அந்த இடத்தை விட்டு வேகமாக நகரதொடங்கினார்கள்..

மகனை தேடியபடி அலைந்த ராணியம்மவையும்.." அங்காலே போகாதீங்க..இவங்கள் அடிக்க தொடங்க அவன் கட்டாயம் செல்லடிச்சே கொன்று போடுவான் ..இஞ்சாலே வாங்கோ " என்று ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி ராணியம்மாவின் கையை பிடித்து இழுத்தபடி நகர்ந்தார்..

அந்த இடத்தை விட்டு நகர மனசில்லாமல் ..திரும்பி திரும்பி பார்த்தபடியே ராணியம்மா அந்த இழுத்த இழுப்புடன் நகர்ந்தார் அந்த மூதாட்டியுடன்..

தூரத்தில் புள்ளிகளாக கையசைத்தபடி அந்த கரும்புலிகள்...

கழுத்தளவு தண்ணீரில் கரைந்தார்கள் ..

(தொடரும்)

பாகம் இருபத்தொன்று இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

வாரா, வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் தொடரை படித்து வருகிறேன். ஒவ்வொரு வாரமும் முன்னைய வாரத்தை விட மனதில் ஒரு தாக்கம் கூடிக் கொண்டே போகிறது... :( தொடருங்கள்!

Link to comment
Share on other sites

பாகம் இருபத்தொன்று

அதிகாலை ஒரு மணியை தாண்டி நந்திகடலின் மேற்கு பக்கமாக இடியென அதிரும் வெடியோசைகளும், இரவை பகலாக்கும் பரா வெளிச்சங்களுமாக இருந்தது.

இயக்கம் இறங்கிட்டுது..மக்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள்.

விடிகாலை ஐந்து மணிவரை இடைவிடாத செல்சத்தங்களும், கனரக ஆயுத வெடிச்சத்தங்களும் கேட்டு கொண்டே இருந்தன.

அந்த கொடிய வேளையிலும் மக்கள் மனசில் ஒரு ஆத்மா திருப்தி..தலைவரும் தளபதிகளும் ..உயிரோட தப்பி போயிடுவார்கள் ..

சிலர் வாய் விட்டே வேண்டினார்கள்..

"வற்றாப்பளை அம்மாவே ..எங்கள் தலைவனையும் அவன் பெடியளையும் நீதான் காப்பாத்த வேண்டும் ..அவங்கள் எங்களுக்காக பட்ட கஷ்டங்களை நீ பார்த்து கொண்டு தானே இருந்தாய்...இதையாவது எங்களுக்காக செய் ..அவங்களை காப்பாத்து தாயே ..""

நெஞ்சுருக வேண்டினார்கள்.

தங்கள் பிள்ளைகள் கணவன்மார் மனைவிமார் என்று பறி கொடுத்தும், தலைவன் உயிரோடு இருக்க, ஆண்டவனை வேண்டின மக்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

ஆனால் காலையில் கேள்விபட்ட செய்தி வேறு விதமாக இருந்தது.

"நேற்று இறங்கின பெடியள் அவ்வளவும் முடிஞ்சுதாம்..முதாவது இரண்டாவது லைனை உடைச்சிட்டாங்களாம். மூன்றாவது லைனிலே வைச்சு அவன் ஒரு பிடி பிடிச்சானாம் ..பெடியளும் என்ன செய்கிறது வேவு தகவல்கள் இல்லை ..செல் இல்லை ..பின்னணி பலம் இல்லை ..எல்லாம் முடிஞ்சு போச்சு .."

ஆனாலும் தலைவருக்கும் தளபதிகளுக்கும் ஒண்டும் நடக்கலையாம்..அவர்கள் பத்திரமாக இக்கரையில் இருகினமாம் என செய்தி ராணியம்மாவின் மனசில் பாலை வார்த்தது..

கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என்று தோணிச்சு..

இருந்தாலும் யார் பெத்த பிள்ளைகளோ தலைவனுக்காக தங்களை ஆகுதியாகுதுகள்.. என்று மடிந்த மறவர்களுக்காக ஏங்கவும் செய்தாள்..

அன்று பதினாறாம் திகதி..மாலை இரண்டு மணிக்காக காத்திருந்தார்கள் மக்கள்..

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சொன்ன நேரத்துக்கு வரும் என்று நம்பி அந்த சுடு வெய்யிலிலும் ..அந்த நடு தார் சாலையில் மூடை முடிச்சுகளுடன்..குஞ்சு குருமங்களுடன் காத்திருந்தார்கள்..

காயமடைந்த போராளிகளும் சாலையோரத்தில் காய வேதனையுடன், இலையாங்களுடன் போராடி கொண்டிருந்தார்கள்.

இரண்டு மணி மூன்றாகி..நாலாகி ஐந்தாகி விட்டது .. அந்த முள்ளிவாய்க்கால் கரையில் சூரியன் மறைய தொடங்கிவிட்டான்..ஆழ் கடலில் கரைய தொடங்கிவிட்டான்... மக்கள் மனசில் இருந்த நம்பிக்கையை போல..

இந்தா வருகிறோம் வருகிறோம் என்று சொல்லி கொண்டிருந்த ICRC கடைசி வரை வரவே இல்லை..

மக்கள் மனசில் விரக்தியும் கோபமும் தான் மிஞ்சின.

புலிகளின் தலைமைக்கும் தங்கள் இறுதி கட்ட தாக்குதலை பதினெட்டாம் திகதிக்கு பின் போட வேண்டிய நிலைமை.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட நம்ப வைத்து கழுத்தறுத்தது..

மக்கள் பொறுமை இழந்தனர்..

மக்கள் நடுவே ஊடுருவி இருந்த புல்லுருவிகளும் நயவஞ்சகர் சிலரும், காவல் கடமையில் இருந்த கடற்புலி போராளி ஒருவனின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்தெடுத்து அவனை சுட்டு கொன்றனர்.

எந்த மண்ணை...எந்த மக்களை அவன் நேசிச்சானோ..அந்த மக்களே சுட்டு கொல்லும் போதும்..அண்ணே ஆமியிடம் போகாதீங்கள் எல்லாம் பிழைச்சு போயிடும்..அண்ணையை காப்பாத்த முடியாமல் போய்விடும் என்று சொல்லி சொல்லியே செத்து போனான்.

சொல்லுங்கள் உறவுகளே..இப்படி போராளிகள் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோம்..

ஏன் இவர்கள் எல்லாம் எங்கள் கூட வந்து பிறந்தார்கள்..

வேறு எங்காவது நாட்டில், வேறு எங்காவது இனத்தில் பிறந்திருந்தால் நல்லா இருந்திருப்பார்களே..

எங்களுக்காக சாகவேண்டும் என்று இவர்களுக்கு என்ன விதி ..

அந்த போராளியின் சாவை தொடர்ந்து நிலைமை கட்டுகடங்காமல் போனது.

புலிகளின் அரசியல் பிரிவு ஒலிபெருக்கி மூலம் மக்களை அறிவுறுத்தியது..மக்களை நிரையாகவும் வரிசையாகவும் செல்லும்படியும், எக்காரணம் கொண்டும் சாலையை விட்டு இறங்காமல் செல்லும் படியும் கேட்டு கொண்டது.

மக்கள் விரக்தியின் விளிம்பில் புலிகளை விட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி, வட்டுவாகல் கரையை நோக்கி நகர தொடங்கினார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து மூன்று மாதகாலமாக கடும் முயற்சி எடுத்தும் கடற்புலிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்படிருந்த ராணுவத்தின் 59 ஆவது படைபிரிவு மக்களுக்கு நடுவாக புலிகளை நோக்கி நகர தொடங்கியது.

தலைவரையும் தளபதிகளையும் வெளியேற்றும் வரை புலிகளுக்கு ஒரு தாய் நிலபரப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதை இல்லாமல் செய்யும் நோக்கோடு ராணுவம் மக்களை பணயமாக்கி மக்களுக்கு நடுவாக தனது நகர்வினை மேற்கொண்டது.

உடனடியாக தலைமைக்கு தெரியபடுத்தபட்டு ஒரு பதில் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினர்.

மக்களோடு மக்களாக வந்து, மக்களூடாக ஊடுருவும் ராணுவத்தை பிஸ்டல் கொண்டு சுட்டார்கள்.

தனது திட்டம் குலைவதை கண்ட ராணுவம், கனரக ஆயுதம் கொண்டு மக்களை நோக்கி சுட தொடங்கியது.

செய்வதறியாத மக்களில் நூற்று கணக்கானோர் அந்த இடத்திலேயே உயிரை விட்டார்கள். ஒரு ஒடுங்கிய பாதையில் விழுந்து படுக்க கூட இடமில்லாமல் துடி துடித்து செத்தார்கள்.

சிலர் பயத்திலே பாதையை விடிறங்கி கண்ணிவெடி வயல்களுக்கு அகப்பட்டு சிதறி செத்தார்கள்.

அந்த காட்சியை வாழ்நாளில் யாருமே பார்க்க கூடாது.

கண் முனாலேயே கைகள் கால்கள் சிதறிபறந்தன. ஒரு கால் சிதறியபடி நொண்டி நொண்டி இன்னொரு மிதிவெடியில் சிக்கி சிதறிய காட்சி..உங்கள் இனத்தில் தான் நடந்தது உறவுகளே.

எங்கே ராணுவம் பாதையை பூட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் கட்டிய கணவன் குண்டடிபட்டு சாகும்போது, அவனை கூட தூக்காமல் இராணுவத்திடம் ஓடிய மனைவி, பெத்த அப்பன் மிதிவிடியில் கால் சிதறி கத்தும் போது, அவரை கைவிட்டு ஓடிய மகன்கள்.. காயப்பட்டு தூக்கி கொண்டு வந்த வயதான அம்மாவை மிதி வெடி வயலில் தூக்கி எறிந்து விட்டு போன பிள்ளைகள் .. இப்படி சொல்லி கொண்டே போகலாம்..

மனித அவலத்தின் வெளிபாடு..மக்களை சுயனலவாதிகாளாக்கி இருந்தது.. அவர்கள் அந்த கோர நிகழ்வுகளில் பின்னர் மனிதர்களாக இருந்தார்களா என்பதே சந்தேகம் தான்..

அன்பான உறவுகளே..இவையனைத்தும் வேறு எங்கோ நடக்கவில்லை ...எங்கள் இனத்தில் எங்கள் மண்ணில் தான் நடந்தன..

எவ்வளவு வலி இருந்ததால் ..எவ்வளவு கோரங்களை கண்டிருந்தால் ..எங்கள் மக்களின் மனம் இவ்வளவு பேதலிச்சிருக்கும்..

ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்..

இந்த மனித பேரவலத்தை தொடர்ந்து புலிகள் சுடுவதை நிறுத்தி பின்வாங்குமாறு கட்டளை வந்தது.

மக்கள் அலையலையாக ராணுவ கட்டுபாட்டு பகுதியை நோக்கி நடந்தார்கள்.

மாலை ஆறுமணியுடன் இராணுவம் மக்கள் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தியது. தனது நகர்வுக்காக படையணியை மாத்தியது..

யுத்த தாங்கிகள், கனரக ஆயுதங்களை தயார்படுத்தியது. அடுத்த நாள் காலையில் தனது இறுதி தாக்குதலை தொடுபதற்கான முழு முயற்சியில் இறங்கியது.

அது தெரியாமல் ..இப்பகுதியில் காலையிலாவது ICRC வரும் என்ற நம்பிக்கையில்...

காயமடைந்த போராளிகளும், இன்னொரு தொகுதி மக்களும் காத்திருந்தனர்.

அவர்களுடன் ராணியம்மாவும் காத்திருந்தார்.

(தொடரும்)

பாகம் இருபத்திரண்டு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சை பிடித்தபடி இதை தொடர்ந்து வாசித்து வருகிறேன்..ஏதாவது கருத்து பதிய நினைப்பேன் ஆனால் கைகள் எழுதமறுத்துவிடுகிறது ஒவ்வொரு தடவையும்..இது என் உங்களின் எங்களின் வலிகளை வாழ்க்கையை ஒரு பாண்டிய சேர சோழ இராச்சியத்தின் வரலாற்றை பதிந்து கொண்டிருக்கும் ஒரு உண்மைப்படைப்பு...பலநூற்றாண்டிகளின் பின்னால் வன்னியின் மண்மேடுகளில் இந்த வரலாற்றுப்பதிவுடன் எங்கள் வீர வரலாறு வீழ்த்தப்பட்ட இடங்களில் என் பேரனும் பேர்த்தியும் நின்று எங்களின் தடங்களை தேடி அந்தப் புழுதி எழும் கடற்கரை வீதிகளில் நாங்கள் பட்ட துயர் வலிகளையும் அந்த மண்ணிற்காக எங்கள் வீரர்களின் தியாகங்களையும் எண்ணி ஒரு சொட்டுக்கண்ணிர் சிந்தலாம்......அதுதான் உங்களுக்கு கிடைக்கப்போகும் உண்மையான பாராட்டு..இங்கு நாங்கள் உங்களுக்கு தருவதல்ல.... இந்தப்பதிவு யாழுடன் நின்றுபோகக்கூடாது எங்களின் வரலாறுகள் வலிகள் எங்களுக்குப்பின்னால் வரப்போகிறவர்களையும் சென்றடையவேண்டும்..இந்தப்பதிவு நூலுருப்பெறவேண்டும்..புத்தகமாக வெளியிடப்படவேண்டியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை பல உண்மைகளை தொட்டுச் செல்கிறது...தொடர்ந்து எழுதுங்கள்...உங்கள் கதைக்கு ஒருவரும் கருத்துகளை வைப்பதில்லை என யோசிக்காதீர்கள் நல்லாய் இருக்குது என பாராட்ட இது ஒன்டும் சாதரண கதை இல்லையல்லவா...மனதை உறைய வைக்கும் உண்மை...சுபேஸ் மேலே எழுதின மாதிரி யாழில் எழுதி முடிந்தவுடன் புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்கள்...நன்றி

Link to comment
Share on other sites

நன்றிகள் அபிராம்.. கதை படிப்பது குறைவு.. விளையாட்டாகத்தான் படிக்கத்தொடங்கினன் ஆனால் இப்போ உண்மையில் ஆர்வத்தோடு படிக்கிறேன் ஒவ்வொரு கிழமை.... முடிவு எப்படி எழுதுவிர்கள் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்...

Link to comment
Share on other sites

பாகம் இருபத்திரண்டு

அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு...

அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின.

ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது..

மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்...

ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு...

உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது...

கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள் போரிட்டு கொண்டிருந்தார்கள்..

இதுக்கெல்லாம் எவ்வளவு ஆன்ம பலம் வேண்டும்..

நான்கு பக்கமும் ராணுவத்தால் சூழப்பட்ட நிலையிலும்..

ஒரு இஞ்சி இடம் விடாமல் கொத்து குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் எறிகணைகளும் ராணுவம் மிச்சம் விடாமல் தாக்கி கொண்டிருந்த நிலையிலும் ...

கைகளில் இருக்கும் துப்பாக்கியையும் ஒரு கொஞ்ச ரவைகளையும் வைத்து கொண்டு இரண்டு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்து கொண்டு ..

மக்களையும் தலைவரையும் ராணுவம் அணுக விடாமல் சண்டை போடுவது என்பது சாதாரண காரியமா உறவுகளே..

எரிந்து கொண்டிருக்கும் ஆயுத லொறிகளுக்கு மத்தியிலும், பிணங்களுக்கு மத்தியிலும் , தலைவரை காப்பாற்றி விட்டால் போதும் நிச்சயமாக எங்களுக்கு ஈழம் கிடைத்து விடும் என்ற மன நிலை தான் அங்கெ இருந்த பெரும்பாலான போராளிகளுக்கு..

ராணுவம் வட்டுவாகலில் இருந்து பாரிய படை நகர்வை தொடங்கி இருந்தது. அதே வேளை கடற்கரை பக்கம் இருந்தும் நந்தி கடல் நோக்கி ஒரு நகர்வை தொடங்கி இருந்தது..

மக்கள் கூட்டம் கூட்டமாக முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நகர தொடங்கினார்கள்.

வீதியோரத்தில் இருந்த காயமடைந்த போராளிகளை ராணுவம் சுட்டு கொண்டு வருகிறது என்று கேள்வி பட்ட ஏனைய போராளிகள் மக்களை பார்த்து கெஞ்ச தொடங்கினார்கள்..

குறிப்பாக காயமடைந்த பெண் போராளிகள் ..எங்களை உங்களுடன் தூக்கி செல்லுங்கள் இல்லை என்றால் இங்கேயே கொன்று விட்டு போங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார்கள்..

சிலர் சில போராளிகளை காவி சென்றார்கள்.. பெரும்பாலானவர்கள் இவர்களை பார்த்தும் பாராமலும் போய் கொண்டிருந்தார்கள்..

மக்களுக்காக தங்கள் அவையவங்களை இழந்து, மக்களின் காலை பிடித்து கெஞ்சும் அந்த பெண் போராளிகளின் நிலை உலகில் எந்த விடுதலை போராளிகளுக்கும் வர கூடாது..

எல்லாரையும் பார்த்து கெஞ்சினார்கள்...

கடுமையாக காயபட்ட போராளிகளுக்கு சயனைட் கொடுப்பதில்லை. வலி தாங்காமல் கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்.. அத்துடன் செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்கும் போது சொன்ன நிபந்தனைகளில் காயமடைந்த போராளிகள் எந்த விதமான இராணுவ அடையாளங்களையும் வைத்திருக்க கூடாது என்பதும் அடங்கி இருந்தது.

சாக கூட வழியில்லாமல் அந்த பெண் போராளிகள் மக்களை பார்த்து கெஞ்சினதை பார்த்த எவனுமே சாவின் வலியை ஆயிரம் தடவை உணர்ந்திருப்பான்.

நேற்று சென்ற மக்கள் கூட்டத்துடன் கலந்து சென்ற போராளிகள் கழட்டி வீசி விட்டு சென்ற சயனைட் குப்பிகளும் கழுத்து தகடுகளும் அந்த வீதி எங்கும் கிடந்தன...

அம்மா ...அக்கா ...அண்ணா ....தம்பி ..அந்த குப்பியையாவது பொறுக்கி தந்துவிட்டு போங்கள் ..கெஞ்சினார்கள் உங்களுக்காக போராடிய அந்த வீர பெண் புலிகள்..

சொல்லுங்கள் உறவுகளே...

உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் ..

உங்கள் ஆன்மாவை உலுக்கவில்லையா ...

தங்கள் குடும்ப உறவுகளை விலகி உங்களுக்காக போராடி, தங்கள் அவையவங்களை உங்களுக்காக கொடுத்து விட்டு இன்று எதிரியிடம் கையகலாமல் கொல்லபடுவதை தடுக்க உங்களால் முடியவில்லை என்று நினைக்கும் போது உங்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது ...

சாவோம் என்று தெரிந்து தான் போராட்டத்திற்கு வந்தார்கள்..

அவர்கள் இன்று சாவுக்காக பயப்படவில்லை ..எதிரியின் காம பசிக்கு இரையாகாமல் மானத்தோடு சாகத்தான் அவர்கள் கெஞ்சினார்கள்..

ஒரு சின்ன பையன் தன்னால் ஆனமட்டும் குப்பிகளை பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு போனான்..

அந்த பையனின் முகம் வாழ் நாளுக்கும் மறக்க முடியாது..

அவன் அந்த பெண் போராளிகளுக்கு ஆற்றிய உதவி ..ஆயிரம் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கு சமன்.

அந்த சிறுவன் அந்த பெண்புலிகளின் மானத்தை மட்டுமல்ல உங்களின் எங்களின்..ஏன் இந்த உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் மானத்தை காத்தவன்...

எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை ராணியம்மாவின் கணவனின் காலை பதம் பார்த்தது...

ஒரு சீலையை எடுத்து வழியும் குருதியை சுத்தி கட்டினார்.

அம்மா ..இனி இங்கே இருந்து அண்ணாவை தேடினால் ..அப்பாவையும் இழக்க வேண்டி வரும்..என்று நா தழுவி தழுக்க சுபா கூறினாள்..

இன்னும் கொஞ்ச நேரம் ...என்று ராணியம்மா இழுக்க ..இல்லை அம்மா ..அப்பாவுக்கு இரத்தம் ஓடுது ..வைச்சிருந்தால் இங்கேயே இழக்க வேண்டி வரும் என்று குண்டை தூக்கி போட்டாள் மற்றவள் மதி ..

என்ன செய்வது என்றே புரியவில்லை ராணியம்மாவுக்கு ...மகனும் மண்ணுமா இல்லை கணவனும் மற்றைய பிள்ளைகளுமா ..

சரி ஆமியிடம் போவோம் .. அரை மனசோடு சொன்னாள் ராணியம்மா ..

ராணுவம் முன்னேறும் திசை நோக்கி தந்தையை காவியபடி நடந்தார்கள் தாயும் பிள்ளைகளும் ..

அந்த வேளையில் ..

எங்கள் வீர குல பெண்களின் உயிரை விட மானமே பெரிது என்று வாழ் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு சம்பவம் நடந்தது ..

ஈர குலையே கருகியது..

குப்பி கிடைக்காத பெண்புலிகள் சிலர் ..எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்ற ..எங்கள் புலிகளின் கொள்கைக்காக ..அத்தனை மக்கள் கண் முன்னாலேயே ..எரிந்து கொண்டிருந்த ஒரு வெடி குண்டு வாகனத்தினுள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்தார்கள் ..

கருகி மடிந்தார்கள் ..

என் இனிய பெண் உறவுகளே ... நீங்கள் இவர்கள் பிறந்த இனத்தில் தான் பிறந்தீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள்..

மானத்துக்காக ..கொள்கைக்காக உயிரையும் கொடுக்கும் பெண்கள் எங்கள் சகோதரங்கள் என்று வாழ் நாள் முழுவதும் மனசிலே நிறுத்துங்கள்..

எதுக்காகவும் மானத்தையும் கொள்கையையும் விட்டு கொடுக்காதீர்கள் ..

இது தான் அந்த வீர பெண்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை...

இந்த காட்சியை நேரில் பார்த்த ராணியம்மாவுக்கு இதயமே உறைந்தது ..கண்ணீர் வரவில்லை ..மனசு மட்டுமல்ல உடம்பே கல்லானது..

சாலையோரத்திலே வாயிலே குப்பியுடன் மேலும் பல பெண் போராளிகளின் உயிரற்ற வெற்று உடல்கள்..

மக்களுக்காகவும் மானத்துக்காவும் மரணித்த அந்த வேங்கைகளின் கண்கள் இராணுவத்திடம் போய் கொண்டிருந்த மக்களை வெறித்து பார்த்தபடி இருந்தன..

இந்த நாள் இன்று விடிந்திருக்க கூடாதோ ..??

(தொடரும்)

Link to comment
Share on other sites

அபிராம் ! உங்கள் ஆக்கத்தினை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அழுது விட்டேன். வேறு எழுத வார்த்தைகள் வருகுதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு எழுத வார்த்தைகளே கிடைக்கவில்லை.

என்ன எழுதுவது?எதை எழுதுவது?

புரியவில்லை.

ஈர மண்ணின் விடுதலைக்காய்

தீரமுடன் போராடிய எங்கள் விடுதலைச் செல்வங்களை------

முடியல்லை,

நெஞ்சகத்தை முட்டும் நினைவாக

உங்களின் யதார்த்தமான வரிகள்

தாங்கவே முடியாத வலிகளாய்

எரிதழலாக -----

தொடருங்கள்.

உலகறியட்டும் எம்உத்தமப் போரளிகளின்,மக்களின் கொடுஞ் சாவை.

பிறிதொரு நாள் தொடர்வேன்.

நன்றி ஐயா.

யாழிவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.