அபிராம்

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)

Recommended Posts

என்ன எழுதுவது என்று தெரியவில்லை.. நன்றி உங்கள் ஆக்கத்துக்கு... :(

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் அபிராம் உங்கள் கதையை வாசிக்கும் போது கையாலாகாத எம் மீது கோபம் தான் வருகிறது.

Edited by ரதி

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்க வேண்டும் மாறி பதிந்து விட்டேன்.

Edited by ரதி

Share this post


Link to post
Share on other sites

பாகம் இருபத்திமூன்று

எனது அன்பிற்கினிய உறவுகளே...

இந்த வேளையில் இந்த பாகத்தை எழுத முடியாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்...

உங்களை ஏமாற்றவோ, உங்கள் மனசை காயப்படுத்துவதற்கோ நான் ஒரு நாளும் எண்ணியதில்லை..

காலத்தின் தேவை கருதி இந்த பாகத்தை இப்போது எழுதுவதை தவிர்த்துள்ளேன்..

நிச்சயம் ஒரு நாள் உங்களுக்காக எழுதுவேன்..

அதுவரை என்னை உளப்பூர்வமாக மன்னித்து காத்திருப்பீர்கள் என்று பணிவன்புடன் நம்புகிறேன்..

நன்றியுடன்,

உங்கள் அபிராம்

(தொடரும்)

Edited by அபிராம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாகம் இருபத்தினான்கு

2009 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒரு நாள்...

சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்..

கந்த சஷ்டி கவசம் லக்சபானாவில் இருந்து வரும் மின்சாரத்தில் ஒலித்து கொண்டிருக்க கணவன் நாதனை தட்டி எழுப்பினாள் ராணியம்மா.

என்னங்க....ஒருக்கா எழும்பி வெளிக்கிட்டு உந்த ICRC அலுவலகம் மட்டும் போயிற்று வாங்கோவன்....புதுசா கொஞ்ச பேரின் பெயர் விபரம் வந்திருக்காம்..எங்கட நேசனின் பெயரும் இருக்கோ என்று பார்த்திட்டு வாங்கோவன்..

வழக்கமாக பாடும் பல்லவியாக இருந்தாலும் ... நாதனுக்கு இன்று ஏதோ மனம் சொல்லியது மகன் கிடைத்திடுவான் என்று..

சரியப்பா ..ஒரு கோப்பியைப் போடு குடிச்சிட்டு ஒரு எட்டு போய் என்ன என்று கேட்டுவிட்டு வாறன்...

அண்டைக்கும் இப்படித்தான் ஒரு கந்தசஷ்டி நாளில் நேசன் இயகத்துக்கு போனான்..அவனைப்பார்த்து இன்றுடன் இரண்டு வருசம்.

இடையிலே தான் எத்தனை துன்பங்கள் துயரங்கள்..கடைசியாக போன மாசம் தான் இராமனாதன் அகதி தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி வவுனியாவில் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்து ஒருமாசம் ஆகிறது.

முள்ளிவாய்க்காலில் இருந்து வந்ததிலிருந்து ராணியம்மா இரவு தூக்கத்தையும் தொலைதிருந்தா...

சொல்லுங்கள் உறவுகளே எப்படி தூங்க முடியும்..

என்னும் எவ்வளவு நாட்கள் எடுக்குமோ அவர்கள் நிம்மதியாக தூங்க...

கணவனுக்கு கோப்பியை போட்டு வழியனுப்பி விட்டு..முருகன் படத்துக்கு பூவை வைத்து..அப்பனே முருகா இன்றாவது அவர் ஒரு நல்ல செய்தியுடன் வரவேண்டும் என்று மனமுருக வேண்டினார்..

சரணடைந்த பெடியங்களை அங்கே வைச்சிருக்கிறாங்கள்..இங்கே வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்ல சொல்ல ராணியம்மா அலையாத இடம் இல்லை..

வைத்திய சாலைகள்..சிறைக்கூடங்கள்..என்று யார் யாருடையதோ கையை காலை பிடித்து தேடியலைந்தாகிவிட்டது..

இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த ICRC யின் பெயர் பட்டியல் தான்..

மதியம் ஒரு மணியை தாண்டி இருந்தது ..

இன்னும் அவரை காணவில்லை..

வாசற் கதவில் தலை சாய்த்தபடி சாலையின் முனையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற நற் செய்தியுடன் வருவார் தன் கணவன் என்று...

காத்திருக்கிறாள்....

ஒரு போராளியின் அம்மா...

(முற்றும்.)

Edited by அபிராம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து 5 மாதங்களாக எழுதி வந்த அபிராமுக்கு நன்றிகள் பல.மனதில் கோபம்,அழுகை,குற்ற மனப்பான்மை போன்ற உணர்வுகள்

உங்கள் தொடரை வாசிக்கும் போது எழும்.ஏதோ காரணத்தால் தொடரை தொடராமல் நிறுத்தி உள்ளீர்கள்.அபிராம் உங்கள் நேரத்துக்கு நன்றிகள்.மேலும் யாழில் தொடர்ந்து எழுதுவீர்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு காலமும் வார, வாரம் உங்கள் நேரத்தை எம்முடன் பகிர்ந்து 'ஒரு போராளியின் அம்மா' என்ற தொடர்/ உண்மைக் கதைக்கு உங்கள் எழுத்து மூலம் உயிர் கொடுத்து எமக்கு கூடவே இருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வை அளித்தமைக்கு நன்றிகள்.

'என் உறவுகளே கொஞ்சம் சிந்தியுங்கள்..., சொல்லுங்கள் உறவுகளே..' என்று எம்மிடம் கேட்கப்பட்ட போது எம்மிடம் கலங்கிய கண்களையும், இரங்கல்களையும் தவிர வேறு பதில்கள் தர முடியாமல் இருந்தது. உங்கள் நேரமும், உங்கள் ஆக்கமும், என்னை மட்டுமல்ல இங்கே பல உறவுகளின் உணர்வுகளையும் தொட்டு சென்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களுக்கு நேரம் அமையும் போது உங்கள் உயிருள்ள எழுத்துக்களை எம்மோடு மேலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். -நன்றி! :)

Edited by குட்டி

Share this post


Link to post
Share on other sites

நன்றி அபிராம்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி அபிராம் உங்கள் ஆக்கத்திற்கு சில எதிர்பார்ப்பிற்களிற்கு விடை கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். எனினும் எமது இனத்தின் நன்மை கருதி இடைநிறுத்தியுள்ளீர்கள் என்பது புலனாகின்றது. காத்திருப்போம்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி அபிராம் உங்கள் ஆக்கத்திற்கு...ஏன் ஒரு பாகம் எழுதவில்லையென்றுதான் புரியவில்லை...முடிவு வேறு மாதிரி இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன்.. :rolleyes:

Edited by சுஜி

Share this post


Link to post
Share on other sites

அபிராம் வெள்ளை முள்ளி வாய்காலில் உங்கள் கதையை முடியுங்கள் நன்றி வணக்கம்

Share this post


Link to post
Share on other sites

நன்றி அபிராம்.

கதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் மனதில் ஒரு வெறுமை. காத்திருக்கின்றோம். :(

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றிகள் அபிராம். இன்னும் பல வெளிவராத உண்மைகள் உங்கள் மூலம் நாம் அனைவரும் அறிந்து கொள்ளனும்....அதற்கான உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கின்றோம்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

அபிராம் வெள்ளை முள்ளி வாய்காலில் உங்கள் கதையை முடியுங்கள் நன்றி வணக்கம்

வெள்ளை முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது என்டு தெரியாமலா வீர வணக்கம் செய்தீர்கள்?...எங்களையும் வீர வணக்கம் செய்ய சொன்னீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

நீண்ட நாட்களாய் கதையை அழகாக கொண்டு சென்று திடீரென முடித்த மாதிரி இருக்கிறது...தொடர்ந்து வேறு கதைகள் எழுத முயற்சி செய்யுங்கள்...பாராட்டுகள்

Share this post


Link to post
Share on other sites

முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் இந்தக் கதையை முகப்பில் போட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்...யாழிற்கு புதிதாக வந்தவர்களும்,இந்தக் கதையை வாசிக்காதவர்களும் வாசிக்கவும்...இது கதையல்ல உண்மை

Share this post


Link to post
Share on other sites

முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் இந்தக் கதையை முகப்பில் போட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்...யாழிற்கு புதிதாக வந்தவர்களும்,இந்தக் கதையை வாசிக்காதவர்களும் வாசிக்கவும்...இது கதையல்ல உண்மை

 

நிர்வாகத்திற்கும் ரதிக்கும் நன்றிகள்.

 

நான் இந்த அபிராம் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்துவரும் வேளையில், மீண்டும் எனது ஆக்கத்தை பிரசுரித்து, என்னை அடையாளபடுத்தியமைக்கு  மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி அபிராம்! இந்த நூற்றண்டில் எந்த ஒரு இனமும் இவ்வாறு போராடியது இல்லை, இவ்வாறு அழிந்ததும் இல்லை. வாசிக்கும்போதே தாளமுடியவில்லை, அனுபவித்த மக்களும், போராளிகளும்.................... நினைக்கவே முடியவில்லை. நீங்கள் முடிக்காவிடினும், முடிவு தெரிந்ததுதான்!

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் மலையான். இந்த மக்களின் போராளிகளின் தியாகங்கள் வீண்போக கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களின் போராளிகளின் கனவுகளை நனவாக்குவோம் என்று உறுதி எடுப்போம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அபிராம் எங்கே? ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை??

Share this post


Link to post
Share on other sites
அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். இந்த கதைக்கு பல இடத்தில் 
நானும் சாட்சியாக இருக்கிறேன்.இன்றுதான் வாசித்தேன் .  

Share this post


Link to post
Share on other sites

அபிராம் எங்கே? ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை??

 

என்னை தேடிய நுணாவிலானுக்கு நன்றி. நான் இங்கே உங்களுடன் தான் என்றும் இருப்பேன்.

 

 

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். இந்த கதைக்கு பல இடத்தில் 
நானும் சாட்சியாக இருக்கிறேன்.இன்றுதான் வாசித்தேன் .  

 

 

நன்றி கரன். இது கதை அல்ல நிஜம் என்பதற்கு சாட்சியாக நீங்கள் என்றும் இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்.

Share this post


Link to post
Share on other sites

திடீரெனக் காணாமற்போயிட்டீங்கள். ஒரு மெயிலாவது போட்டிட்டு மௌனமாகலாம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.