Jump to content

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்


Recommended Posts

நான் என உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும்பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெளவேண்டும். அங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். - ஈகைச்சுடர் திலீபன்.

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனுக்கு வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் - தமிழீழ விடுதலைப் புலிகள்

உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையாளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

26/09/2010

தமிழீழம்

எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம்

இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்பு தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகக் காலி முகத் திடலில் நடந்த சத்தியாகத்துடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் ஆரம்பிக்கிறது. காடையர்களின் தாக்குதலில் அன்று தமிழன் சிந்திய குருதி இன்று கண்ணீராகப் பாய்கிறது.

திலீபன் என்பது காலம் காலமாக இடைவெளியின்றித் தொடரும் போர்முறை. இதனால் எமது விடுதலைப் போர் தடங்கலின்றித் தொடரும் ஈழத்தமிழர் வாழ்விலும் உணர்விலும் தடுமாற்றமும் தளம்பலும் நிலவுகின்றன. எதிர்காலம் பற்றிய திகைப்பும் அச்சமும் எம்மைப் பீடித்துள்ளன சொந்த மண்ணை இழந்து எதிலிகளாக நாடு கடந்து நாடு தாவி அலைகிறோம்.

உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையா ளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக் கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும்.

போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் எமது விடுதலைத் தாகம் எமக்குத் துணை நிற்கும் சவால்கள் நிறைந்த காலகட்டம் என்பது உண்மை சாவல்களைச் சமாளிக்கும் வலுவாய்ந்த ஆற்றல் எமக்கு இருப்பது அதினிலும் உண்மை.

எமது குரல் வலுவடைய வேண்டும் எமது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், பிரசார உத்திகள், கருத்துப் போர்கள், எமது இனக் கோரிக்கையை வலுப்படுத்தும் வழித் தடங்கள் கூர்மை பெற வேண்டும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் பெயரால் நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நிட்சயம் வெற்றி ஈட்டித்தரும்.

திலீபன் ஈழத்தமிழர்களின் போர் முறை பொது மானுடத்திற்கும் பொருத்தமான விடுதலை வழிகாட்டியாக அது இடம்பெறுகிறது. திலீபன் ஒரு சொல் மாத்திரமல்ல அது நலிவுற்ற இனங்களின் ஒட்டுறவாலும் இன்ப துன்பங்களாலும் உருவாக்கப்பட்ட உறுதியான விடுதலை பாதை.

சத்திய விரதம் மேற்கொண்டு வீர வரலாறாகிய தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எமது மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.pathivu.com/news/13370/57//d,article_full.aspx

thilipan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் மட்டுமே இழந்த எமது உரிமைகளை மீட்டுத் தரும்

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம்

வாத்தியார்

**********

  • Like 1
Link to comment
Share on other sites

தன் இனம் வாழ தன்னை மெழுகாய் உருக்கி (தீ) தியாகம் புரிந்த தியாக தீபத்துக்கு என் வீர வணக்கங்கள்....///

Link to comment
Share on other sites

http://video.google.com/videoplay?docid=4973319842600269537#

இந்த மாவீரன் ஒரு காந்தீய, இல்லை அகிம்சை போராளி. குழந்தைகள் முதல் முதியோர் வரை எதிரி முதல் பகைவர் வரை நேசித்த மதித்த ஒரு உன்னத ஒப்பற்ற மாவீரன் !

http://www.tamilcanadian.com/page.php?cat=120&id=5963

வீர வணக்கங்கள் !!!

Edited by akootha
Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப்போராளி திலீபன் நினைவு நாள்

விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்க அஞ்சலி

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.09.2010) ஞாயிறு காலை 10.30 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி திலீபன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். நிறைவாக தொல்.திருமாவளவன் திலீபன் குறித்த நிறைவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர் பாவலன், சேகுவேரா, வெளியீட்டு மைய மாநில துணைச் செயலாளர் நீல.தமிழேந்தி உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திலீபன் நினைவு நாளையொட்டி, தென் சென்னை மாவட்ட மருத்துவர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாமையும் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை மாவட்டச் செயலாளர் மருத்துவர் செ.முரளிதரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

http://www.thiruma.in/2010/09/blog-post_26.html#more

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4208116526_eb9d9fb58d_m.jpg

அகிம்சை போராட்டம் கூட.... இந்தியாவிடம் எடுபடாது, என்பதை நிரூபித்த மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animated_candle1.gif

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 11 months later...

"செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கோ

திலீபனின் பசி அடங்கும்"

என்ற பாடலின் உட்புக முடியா உணர்வுக் குவியலில் மீண்டும் சிக்கிக் கொள்ளும் ஒரு நினைவு நாள்

எனக்கு அப்போது 13 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். பசி என்றால் என்ன என்று தெரியாமல் என் அப்பன் என்னை வளர்க்கும் போது ஒரு யுகத்தின் பசி உணர்வை தன் இரைப்பையுள் கொண்டு எமக்குள்ளும் விடுதலை பசியை ஊட்டியவன் திலீபன்

அவனது சாவு ஏற்படுத்திய மரண வலி இன்றும் என்னுள் உணர முடிகின்றது

******************

இன்று செந்தமிழ் ஈழத்தின் அனைத்து கதவுகளிலும் எதிரியின் துவக்கு நுனி எட்டிப் பார்க்கின்றது

திலீபன் அண்ணா ஒவ்வொரு வீதி தோறும்

ஒவ்வொரு படலை தோறும்

ஒவ்வொரு வாசல் தோறும்

அகோரமாய் பசிக்கும் தன் வயிறு தாங்கி

வந்து போகின்றான்

உங்களுக்கு அவனை அடையாளம்

தெரிகின்றதா

ஒற்றுக் கோவணம் கூட இன்றி

ஆன்மா எல்லாம்

காயங்கள் சுமந்து

அகோரப் பசியில்

வந்து நிற்கின்றான்

சொல்லுங்கள் மக்களே

சொல்லுங்கள்

அவன் கனவின்

ஒவ்வொரு மூலையிலும்

நாம் தீப்பிடிக்க மறுத்து

கருக்கிய சம்பவங்களை சொல்லுங்கள்

அவனது அகோரப் பசிக்கும்

தகிக்கும் தாகத்துக்கும்

பெறுமதி இன்றி

எதிரியின் காலை நாம்

தொழும் சோகத்தையேனும்

சொல்லுங்கள்

அவனது நினைவு தினம்

கூட நினைவை விட்டு

அகன்ற தினமாய்

போன் வாழ்வின் இருப்பை

சொல்லுங்கள்

*************

"செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கோ

திலீபனின் பசி அடங்கும்"

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணா மரணத்தை வென்ற ஒருவர் என்பதுக்கும் மேலாக

அந்த மரணத்தையே ஒவ்வொரு அணுவிலும்

உணர்ந்த பேரியக்கத்தின் பேர் சொல்லும் ஒற்றை நாடி அவன்

***********

அவன் சுவாசித்த காற்றின் எச்சத்தை சுவாசித்த பெருமை கொண்ட சந்ததி நான் என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை சந்தோசம் எனக்கு!!

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கினையடைய நேர்மை மட்டுமே உதவாது என உணர்த்திய நாள்.

எனது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thelipa.jpg

வீர வணக்கங்கள்

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா திலீபா ...

முள்ளிவாய்காலின் பின்னான உன் நினைவு தினங்களில்

என் நெஞ்சிலெழும் வலியெல்லாம்

நீ கண்ட கனவுகள், உனது இலட்சியம்,

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் - சுதந்திர தமிழீழம் மலரட்டும்

என்ற அந்த உன்னத வேண்டுகோள்

இவையனைத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு

இன்று சோரம் போன மனிதர்களாக வாழ்கிறோம் என்பது தான் :(

Edited by காட்டாறு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதமுடியவில்லை ஜயா

என்னவென்று எழுத

எதைத்தருவேன் என்று உறுதிகூற......

உங்கள் தியாகங்கள் வீண்போகாது

அதை நாம் மறவோம்

உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.