• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியபோது, அப்பெண் அலறியுள்ளார். அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், சதீஸ்குமார் அங்கிருந்து தப்பித்துள்ளதாக வழக்கு பதிவுசெய்த விசாரணை அதிகாரி ஜெயா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''சதீஸ்குமார் இதற்கு முன்னர் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்துவருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்ததால், அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்பதால், தற்போதுவரை கிடைத்த தகவலை வைத்து, சதீஷ்குமாரை கைது செய்துள்ளோம். அப்பெண்ணின் உடல்நலம் தேறிய பின்னர், விசாரணை செய்வோம்,'' என ஆய்வாளர் ஜெயா தெரிவித்தார். சதீஸ்குமார் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்தியாக வழக்குப் பதிவாகியுள்ளது என ஜெயா தெரிவித்தார். ''அப்பெண்ணின் பெற்றோர் காலமாகிவிட்டார்கள். அவருடைய உறவினர் ஒருவர் சென்னையில் இருப்பதாக அவர் கூறுகிறார். உறவினர்களிடம் பேசி அவருக்கு பாதுகாப்பு கிடைக்குமா என விசாரிப்போம் அல்லது வழக்கு முடிந்த பின்னர், பெண்களுக்கான அரசு நடத்தும் பாதுகாப்பு இல்லத்திற்கு அவரை அனுப்பிவைப்போம்,'' என ஜெயா தெரிவித்தார்.https://www.bbc.com/tamil/india-51160208
    • படத்தின் காப்புரிமை ARUN SANKAR / Getty தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழக உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஜனவரி14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்ற நிகழ்வு நடத்தப்பட்டது என பொய்யான தகவலை பேசியுள்ளார் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறுகிறார்கள். ''தந்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினிகாந்த் வதந்தியைப் பரப்புகிறார். அவர் குறிப்பிட்டது போன்ற ஒரு நிகழ்வு நடக்கவில்லை. அவர் பரப்பும் வதந்தி பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் செய்துள்ளோம்,'' என திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தெரிவித்தார். அதே போல கோவையிலும் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் நேற்று திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர தலைவர் நேருதாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட புகாரில், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக  திருப்பூரிலும் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினி பேசியது என்ன? கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். தகவல் இல்லை இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று குறிப்பிட்டார். இந்நிலையில், "சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போம்," என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். "உண்மை சம்பவத்தை ரஜினி திரித்து கூறியிருப்பதாகவும், பெரியாரின் வாகனம் நோக்கி ஜன சங்கத்தினர்தான் செருப்பு வீசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தினர் அதே செருப்பை எடுத்து ஜனசங்கத்தினரின் வாகனம் ஒன்றில் இருந்த ராமர் படத்தை அடித்தனர்,"என அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவரும், தி.கவின் பொதுச்செயலாளருமான கலி.பூங்குன்றன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்,"பெரியார் குறித்த தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்," என கருத்து தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-51159843
    • கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணம் -சிவாஜிலிங்கம் வடக்கு முன்னாள் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.எனினும் குறித்த கட்சிகளில் ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது. அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணமாகும். மேலும் 2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு பெயரை மாற்றுவது தொடர்பாக அனுமதியை வழங்கியப் பின்னரே புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். குறித்த கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம்.இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது என மேலும் தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-தன்னிச்சை/
    • பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி.. யாழ்ப்பாணத்தில் அமைச்சா் சந்தித்த பிச்சைக்காரர்களில் ஒருவன் சோறும், தண்ணீரும் கேட்டால் தமிழா்கள் எல்லோரும் சோறும் தண்ணீரும் கேட்கிறாா்கள் என அா்த்தமா ? அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே மானமுள்ள தமிழனை சந்திக்கவில்லையா ? அவனிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லையா? என முன்னாள் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். கடந்த 14ம் திகதி அலாி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும்தான் முக்கியம் என கூறியிருக்கின்றாா். இது குறித்து இன்று காலை அவை தலைவா் ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்ப்பாணம் வந்த அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே இங்குள்ள சில பிச்சைகாரா்களை சந்தித்து என்ன வேண்டும் ? என கேட்டால் அவா்கள் சோறும், தண்ணீரும்தான் கேட்டிருப்பாா்கள். அதற்காக தமிழ் மக்கள் சோறும், தண்ணீரும் கேட்கிறாா்கள். என கூற முடியுமா ? அமைச்சா் மானமுள்ள தமிழனை சந்தித்திருந்தால் அவன் என்ன வேண்டும் என கூறி இருப்பான் என்றார். https://jaffnazone.com/news/15448
    • தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை ஹரோ, லண்டனில் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. தமிழ் மக்களின் காலை, கலாசாரம், வரலாறு, விழுமியங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்றைய நிகழ்வில் நடைபெறவிருக்கிறது என்றும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அன்பான பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே! எமது தாய் மொழியான தமிழின் தொன்மையையும், ஆழமான பரந்த கலை, இலக்கிய பண்பாட்டையும் அறிந்துதான் அதற்க்கு “செம்மொழி” என்ற உயரிய மதிப்பை ஐக்கிய நாடுகள் அளித்தது. தமிழ் என்பது எமக்கு மொழி மட்டுமல்ல. அது எமது வாழ்க்கை முறை. அது எமது அடையாளம். அதனைப் பேணிப் பாதுகாத்து அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டியதும், எமது இளைய தலைமுறையும் எதிர்கால சந்ததியும் “நாம் தமிழர்” என்று பெருமையுடன் கூற வைப்பதுவும் எங்கள் எல்லோருடையதும் வரலாற்றுக் கடமை அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தை மாதத்தை மரபுரிமை மாதமாக எம்மக்கள் ஏற்றுக் கொண்டு, பிரித்தானிய மக்களாலும் பாராளுமன்றத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப் படுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வை நாம் இன்று சனிக்கிழமை RAYNERS LANE ல் நடாத்துகின்றோம். எமது இந்த மரபுரிமைத் திங்கள் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர்கள் கனடா வாழ் தமிழ்மக்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். கனடா ஒரு குடியேற்ற நாடாக இருந்தபோதிலும், விகிதாசார அடிப்படையில் அங்கு தமிழ் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தபோதிலும், கனேடியத் தமிழ் உணர்வாளர்கள், செயற்ப்பாட்டாளர்களின் நீண்டகால கடின உழைப்பாலும், ஒன்றிணைந்த செயற்ப்பாட்டாலும்தான் 2016_ம் ஆண்டில் தை மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக கனேடிய பாராளுமன்றம் அங்கீகரித்து பிரகடனம் செய்தது. பிரித்தானியாவிலும் அந்த திட்டத்தை செயற்படுத்தும் முகமாக நாம் அவர்களை அணுகியபோது அவர்கள் தம் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், எமது முயற்சிக்கு முழு ஆதரவு தந்து ஊக்குவித்தார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு முக்கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும்! என்பது தமிழர் நம்பிக்கை. இந்த மாதத்தில்தான் இயற்கைக்கு நன்றி கூறி பொங்கல் விழா எடுப்பது எமது மரபு. அந்த வகையில் பிரித்தானியாவிலும் பல சமூக அமைப்புக்கள், ஆலயங்கள், வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள் என தைப் பொங்கலை விமரிசையாக கொண்டாடி வருவது நாம் அறிந்தது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் வெறுமனே பொங்கல் விழாவோடு நிறுத்தாமல் தமிழ் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளை தை மாதம் முழுவதும் நடாத்தும்போது எமது கலை, கலாச்சார பண்பாடு மேலும் மெருகூட்டப்படவும், எமது இளைய தலைமுறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரிக்கவும், ஏனைய இனமக்கள் தமிழ் மக்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் என்பது எமது நம்பிக்கை. மரபுரிமை மாதம் என்பது தனியே எந்த ஒரு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ உரித்தானதல்ல. இது ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கும் பொதுவானது. அரசியல், சமய, வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால்பட்டு ‘தமிழால்’ அனைவரையும் ஒன்றிணைய வைப்பது. அந்தப் புரிந்துணர்வோடு கடந்த பல மாதங்களாக இதற்கான ஆயத்த வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்தோம். பிரித்தானியாவில் மரபுத் திங்கள் அங்கீகாரத்திற்கான இந்த ஆரம்ப நிகழ்வை நாம் முன்னின்று ஒழுங்கு படுத்தினாலும் இது எமது தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல. பிரித்தானியாவிலுள்ள பல சமய, சமூக, கல்வி, கலை சார்ந்த பல பொது அமைப்புக்களோடு நாம் தொடர்பு கொண்டு அவர்களின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த மாபெரும் அங்குரார்ப்பணப் பெருவிழா நிகழ்த்தப்படுகின்றது. இந்த வருடம் முதல் தை மாதத்தை “தமிழ் மரபுரிமை மாதத்தின்” தொடர்ச்சியான கொண்டாட்டங்களாக தொடர வேண்டும் என்ற எமது வேண்டுதலுக்கமைய, சில அமைப்புக்களும் நிறுவனங்களும் தமது வழமையான பொங்கல் விழாவைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இம்முறை ‘தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்தது எமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.   http://www.samakalam.com/செய்திகள்/தை-மாதத்தை-பிரித்தானியாவ/