Jump to content

தாயக கோட்பாடு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது எழுதுங்கள் தாயக கோட்பாடு என்டால் என்ன?...மாற்று கருத்துக்காரர் ஆகிய என்னிடம் புலி எதிர்ப்பை தவிர வேறு திட்டம் இல்லை...ஆனால் தற்போது புலிகள் ஈழத்தில் செயற்படவில்லை...புலி ஆதரவாளர்கள் என எழுதுபவர்களிடம் தற்போது என்ன கொள்கைகள்,செயற் திட்டங்கள் உள்ளன...அது எந்த வகையில் ஈழத்தில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் உள்ளன...மீள் குடியேற்றம் அது,இது காசு கொடுக்கிறோம் என எழுத வேண்டாம் அதை மாற்று கருத்தாளார்களும் தான் செய்கிறார்கள்...சும்மா இணையத்தில் வந்து நான் புலிக்கு ஆதரவாய் எழுதுகிற படியால் தேசியத்திற்கு ஆதரவு என்டும் எதாவது நடு நிலையாய் கதைத்தால் தேசியத்திற்கு எந்த வகையிலும் ஆதரவு இல்லை என்டும் எதை வைத்துக் கூற முடியும்...புலிகள் கடவுள் இல்லை அந்த கடவுளே பிழை விட்டாலும் நாங்கள் விமர்சிப்போம்...முருகன் மட்டும் வள்ளியை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்யலாமா என நாத்திகர்கள் கேட்கிறார்கள்...அப்படி இருக்கையில் எதாவது நடு நிலையாய் புலிகள் விட்ட பிழையை விமர்சிக்கையில் ஏன் மனம் ஏற்க மறுக்கிறது?

தயவு செய்து இதில் ஆரோக்கியமான விவாதத்தை முன் வையுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியாததா ரதி? இப்ப இல்லாத புலியை விமர்சிக்கிறது தான் புது fபஷன். அதுவும் தேம்ஸ் நதிக்கரையில இருந்து செய்யேக்க அதுக்குத் தனி மரியாதையே இருக்கு. அது சரி புலி விமர்சனத்துக்கும் தாயகக் கோட்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குத் தெரிஞ்ச வரலாற்றின் படி தாயகக் கோட்பாட்டைப் புலியள் கொண்டு வரேல்ல, மித வாத தமிழ் தலைவர்கள் தான் முதலில முன் மொழிஞ்சவை. இதுக்கும் இல்லாமல் போன புலியளுக்கும் என்ன சம்பந்தம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை நான் நான் எழுதுவதற்கு முன் இங்கு ஒருவர் எழுதியுள்ளார் பார்க்கவில்லையா?...நானே என்னை மாற்றுக் கருத்தாளார் என ஏற்கனவே எழுதி விட்டேனே உங்களுக்கு சிரமம் இல்லாமல் பிறகேன் நீங்கள் திரும்பவும் வந்து சிரமப்பட்டு அதை எழுதுகிறீர்கள்...புலி ஆதாரவாளர் ஆகிய தங்களிடம் கேட்கிறேன் தற்போதைய உங்கள் செயற் திட்டம் என்ன?

தாயகக்கோட்பாடு என்றால் என்ன?

அதில் புலிகளின் பங்கு என்ன?

புலிகள் தாயகத்தில் இருக்கிறார்களா இல்லையா?

என்று தெரியாத ஒருவர்

எப்படி மாத்துக்கருத்தாளராக முடியும்.....?

எனது கணப்பின்படி சம்பந்தப்பட்டவர்

முரளியின் பிரிவுக்கு பின் அவரது நிர்வாகத்தின் கீழிலிருந்த ஏதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கவேண்டும்

அதாவது இவருக்கு 5 வயது இருக்கலாம்

அதற்கு மேற்பட்ட எந்த குழந்தைக்கு கூட

இவற்றுக்கான பதில் தெரியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை விமர்சனம் செய்வது தவறில்லை அது ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச்செல்லுமாய் இருந்தால் தாராளமாக விமர்சிக்கலாம். அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

புலி ஆதரவாளன் என்று சொல்லவில்லை சாதாரண தமிழ்மகனாய் என்னோடை கருத்து என்னவென்றால் தமிழருக்கு என்று ஒரு தனி தாயகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இது அசைக்க முடியாத ஆணித்தரமான நம்பிக்கை. புலிகள் இருக்கும் வரை அவர்களின் செய்ற்பாடுகளில் உந்தப்பட்டு அவர்களுக்கு ஆதரவாய் இருந்தோம் இன்று அந்த நிலை மாறி விட்டதால் தமிழர் தரப்பில் சில குழறுபடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இது என்றோ ஒரு நாள் முடிவடைய ஏதோ ஒரு தலைமை வரும் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் இல்லை எனில் எங்களில் இருந்தே ஒரு தலைமை கூட வரலாம் அதை தீர்மானிக்கப் போவது காலம் தான் அன்று ஆயுதம் தூக்க வேண்டும் எனில் தூக்கலாம் இல்லை அரசியல் மூலம் தீர்க்கலாம் என்றால் தீர்க்கலாம் அது காலத்தின் கட்டாயம். இன்றைய அதி நவீன தகவல் தொழில் நுட்ப உலகில் முப்பது வருடங்களில் செய்த சாதனைகளை மூன்றே வருடத்தில் செய்ய கூடும் அந்தளவுக்கு சகல துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுள்ளார்கள்.

ஆனால் இன்னொரு பிரபாகரனையோ இன்னொரு விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ உருவாக்குவதல்ல, ஏனென்றால் இது என் தனிப்பட்ட கருத்து இன்னும் இன்னும் எம்மக்கள் சிங்களவன் தொல்லையால் வாழமுடியாது என்று எல்லாரும் உணரும் போது நிச்சயம் விடுதலைப் புலிகளை விட பலமான ஒரு அமைப்பு உருவாகும் ஆனால் அதற்கு முன் விடுதலைப்புலிகள் போல அழிந்து போவதற்கான எந்த அமைப்பும் உருவாகப்போவதில்லை கடைநிலை தமிழனும் போராடினால் தான் தீர்வு என்று உணரும் போது அன்றைய காலம் எதை தீர்மானிக்கிறதோ அந்த வழியில் போராடுவோம்.

அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகவேண்டும் ஏனெனில் வரலாறு மிகப் பெரிய பாடத்தை எமக்கு கற்றுத்தந்துள்ளது.

இதை ஒரு நல்ல மாற்றுக்கருத்தாக நான் ஏற்கின்றேன்.

இதைத்தான் நான் வரவேற்கின்றேன்

நடந்தவைகளை ஏற்றுக்கொண்டு.......

இன்றைய நிலையை ஆராயமுடியுமே தவிர

நடந்தது எல்லாமே தப்பு என்று ஒருவர் மீது பழி போட்டுவிட்டு...........

செய்யும் எந்த காரியமும் நிற்காது நிலைக்காது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை நான் நான் எழுதுவதற்கு முன் இங்கு ஒருவர் எழுதியுள்ளார் பார்க்கவில்லையா?...நானே என்னை மாற்றுக் கருத்தாளார் என ஏற்கனவே எழுதி விட்டேனே உங்களுக்கு சிரமம் இல்லாமல் பிறகேன் நீங்கள் திரும்பவும் வந்து சிரமப்பட்டு அதை எழுதுகிறீர்கள்...புலி ஆதாரவாளர் ஆகிய தங்களிடம் கேட்கிறேன் தற்போதைய உங்கள் செயற் திட்டம் என்ன?

ரதி, உங்களை மாற்றுக்கருத்தாளர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அழிந்து போய் ஒரு வருடத்திற்கு மேலாகி விட்ட புலிகள் அமைப்பைப் பற்றி புலத்திலிருந்து இன்னும் விமர்சனம் செய்து தங்கள் சொந்த வாழ்க்கைக்கு இலாபம் தேடிக் கொள்ளும் தற்போதைய நிலையைச் சொன்னேன். புலிகள் இருக்கும் போது "போட்டுத் தள்ளி" விடுவார்கள் என்ற பயத்தில் மா,கள், சொல்லற்று செயலற்று இருந்தார்களாம் (இது அவர்களே சொல்வது, நான் சொல்வது அல்ல!). இப்ப புலிகள் இல்லாத இந்தப் பொழுதில் ஏன் சொல்லோடும் (அல்லது உங்களைப் போல வெறும் கோட்பாட்டு ரீதியான கேள்விகளோடும்!) விமர்சனத்தோடும் நிற்கிறீர்கள், போய் வெட்டிப் புடுங்குங்கோவன் எண்டால் மௌனம் தான் பதிலாகக் கிடைக்கிறது. இந்த மா.களின் மௌனமே அவர்களின் மாற்றுக் கருத்தின் ஊற்றிடம் குறித்து விளாவாரியாக விளங்கிக் கொள்ள உதவுகிறது என நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு, மேலே விசுகு எழுதியது ஒரு பாரதூரமான உண்மை: "கருத்து" என்னவென்று தெரியாத நீங்கள் எப்படி "மாற்றுக் கருத்து" கண்டு கொண்டீர்கள், அது பற்றிப் பேசுகிறீர்கள்?

ஆனாலும் உங்கள் கேள்விகளுக்கு என் பதில் இது தான்:

வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம், அங்கே ஒரு தனி தேசமாக நாங்கள் உருவாக வேண்டிய தேவை சிங்களவர்களால், இந்தியர்களால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கு. இது இப்போதைக்கும், இனி வரும் காலத்திற்கும் பொருந்தக் கூடிய, நான் விளங்கிக் கொண்ட "தாயகக் கோட்பாடு"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜீவா நானும் ஒரு சாதரண மனுசியாய் இருந்து கொண்டு தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து புலிக்கு என் ஆதரவைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்...புலியை ஆதரிப்பதால் புலி செய்யும் பிழைகளை எழுதக் கூடாது என்டு இல்லை....புலியை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்டால் யாருக்கு அந்த தகுதி இருக்குது எனச் சொல்ல முடியுமா?...மற்றும் படி நீங்கள் சொன்ன அனைத்துக் கருத்தும் உண்மை..ஆனால் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்...எல்லோரையும் மாற்றுக் கருத்துக்காரன்,துரோகி என்டால் எப்படி எல்லோரையும் ஒன்றாக ஒருங்கிணைப்பீர்கள்...எல்லோரையும் ஒருங்கிணைக்காமல் திரும்பவும் போராட்டம் வெற்றி பெறும் என நினைக்கிறீர்களா...புலியை விமர்சிப்பதே திரும்பவும் எமது போராட்டம் தோற்று விடக் கூடாது என்பதற்காகத் தான் அதற்காக புலிகள் மீது முழுப் பழியையும் போட்டு விட்டு நழுவுகிற ஆள் நான் இல்லை...எல்லோரும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி,எல்லோரையும் அரவணைத்து சென்றால் எமது போராட்டம் தோற்காது என்பது என் கருத்து...மற்றும் படி நீங்கள் எழுதின மாதிரி மாத விடாய் வராததிற்கு காரணம் புலிகள் என்டு சொல்றது எல்லாம் சின்ன வயதிலே போராட்டத்தில் கலந்து கொள்ள பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த உங்களைப் போல ஆட்களாய் தான் இருக்கும்...நான் எப்போதாவது,எந்த திரியிலாவது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகள் என எழுதினேனா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னை மாற்றுக் கருத்தாளார் என நீங்கள் சொல்லவில்லை ஆனால் சொன்னவர் இங்கு தான் நிற்கிறார்...எங்களால் புடுங்க முடியாது எனத் தெரியும் தானே அது தான் நீங்கள் என்ன செய்யப் போறீங்கள் எனக் கேட்கிறேன் அதற்கு உங்களிடம் பதில் இல்லை...நான் இத் திரியில் புலிகளை எங்கே இழுத்தேன் என எழுதுவீர்களா?...புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்த நிலையில் நீங்கள் இன்னும்,இன்னும் துரோகிப் பட்டம் கொடுப்பதை விட தமிழருக்கு எதாவது உருப்படியாய் செய்தீர்களா?...எல்லோரும் ஒன்றினையாமல் தமிழருக்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை அது இன்னும் இங்கு உள்ள தாங்கள் புலி ஆதரவாளார்கள் என சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புரியாது இருப்பது தான் வேதனை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கோட்பாடு என்பது தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தில் சுதந்திரமான வாழும் உரிமையை வலியுறுத்துவது. புலிகள் இடையில் ஓடும் அஞ்சல் ஓட்டக்காரன் போன்று வேகமாக ஓடினார்கள். எனினும் இறுதியாய் ஓடுவதற்கு வலுவான ஆட்கள் இல்லாததால் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இறுதி இலக்கை எட்டமுன்னரே தோல்வி என்று ஒப்புக்கொண்டு ஒதுங்கமுடியாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னை மாற்றுக் கருத்தாளார் என நீங்கள் சொல்லவில்லை ஆனால் சொன்னவர் இங்கு தான் நிற்கிறார்...எங்களால் புடுங்க முடியாது எனத் தெரியும் தானே அது தான் நீங்கள் என்ன செய்யப் போறீங்கள் எனக் கேட்கிறேன் அதற்கு உங்களிடம் பதில் இல்லை...நான் இத் திரியில் புலிகளை எங்கே இழுத்தேன் என எழுதுவீர்களா?...புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்த நிலையில் நீங்கள் இன்னும்,இன்னும் துரோகிப் பட்டம் கொடுப்பதை விட தமிழருக்கு எதாவது உருப்படியாய் செய்தீர்களா?...எல்லோரும் ஒன்றினையாமல் தமிழருக்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை அது இன்னும் இங்கு உள்ள தாங்கள் புலி ஆதரவாளார்கள் என சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புரியாது இருப்பது தான் வேதனை

மன்னிக்க வேணும் ரதி, நீங்கள் "புலி எதிர்ப்பு" என்று கூறிய போது நான் விடுதலைப் புலிகளைப் பற்றியாக்கும் என தவறாக விளங்கிக் கொண்டிட்டன். இப்ப தான் அது வங்காளப் புலி எதிர்ப்பு என விளங்குது. மன்னிக்கவேணும். உங்களால புடுங்க முடியா விட்டால் மூடிக் கொண்டு போகலாமே? பிறகேன் ஆதரிக்கிறவன் என்ன செய்வான், அந்தரிக்கிறவன் என்ன செய்வான் எண்டு குழம்புவான்? அல்லது "தாயகக் கோட்பாட்டைத்" தவற விட்ட மாதிரி விடாமல் தவறாமல் செய்தி படியுங்கோ, நடக்கிற முயற்சிகள் என்ன, தோற்ற முயற்சிகள் என்ன எண்டு விளங்கும்.இதுக்கெல்லாம் இங்க இருக்கிறவங்கள் ஏன் நேரத்த வீணாக்குவான்?

Link to post
Share on other sites

எனது கணப்பின்படி சம்பந்தப்பட்டவர்

முரளியின் பிரிவுக்கு பின் அவரது நிர்வாகத்தின் கீழிலிருந்த ஏதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கவேண்டும்

நான் குறிப்பிடுவது தலைப்புடன் பொருந்தவில்லையாயினும், இன்னொரு தலைப்பில் விகுசு அவர்கள் 'முரளி' என்று குறிப்பிட்டது நான் உட்பட பலரைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. அது முரளிதரன் தான் என்பது இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவை உண்டாக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேணும் ரதி, நீங்கள் "புலி எதிர்ப்பு" என்று கூறிய போது நான் விடுதலைப் புலிகளைப் பற்றியாக்கும் என தவறாக விளங்கிக் கொண்டிட்டன். இப்ப தான் அது வங்காளப் புலி எதிர்ப்பு என விளங்குது. மன்னிக்கவேணும். உங்களால புடுங்க முடியா விட்டால் மூடிக் கொண்டு போகலாமே? பிறகேன் ஆதரிக்கிறவன் என்ன செய்வான், அந்தரிக்கிறவன் என்ன செய்வான் எண்டு குழம்புவான்? அல்லது "தாயகக் கோட்பாட்டைத்" தவற விட்ட மாதிரி விடாமல் தவறாமல் செய்தி படியுங்கோ, நடக்கிற முயற்சிகள் என்ன, தோற்ற முயற்சிகள் என்ன எண்டு விளங்கும்.இதுக்கெல்லாம் இங்க இருக்கிறவங்கள் ஏன் நேரத்த வீணாக்குவான்?

இதெல்லாம் சாதாரணம் ஐயா

புலிகளை ஒரு பகுதிக்கான ஆட்கள் என்று அவர் விபரிக்க வெளிக்கிட்டுத்தான் அவரை நான் புரிந்து கொண்டேன்

அதைவிட திரு. முரளிதரன் அவர்கள்

இன்றும் அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தால்

இன்றும் அவர்தான் தனது தலைவர் என்றும் இங்கு எழுதியிருந்தார்.

அதனால்தான் தாயகக்கோட்பாட்டை இங்கு முன் வைத்தேன்.

ஏனெனில் திரு. முரளிதரன் அவர்கள்

தமிழருக்கான சகல நடைமுறைகளையும் தற்போது மறுத்துவருகிறார்.

பின் குறிப்பு :- திரு. முரளிதரன் அவர்களை மிக மரியாதையாக எழுதியுள்ளேன்

ஏனெனில் மாற்றுக்கருத்து மாணிக்கங்களையும் மதிக்கவேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலியை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்டால் யாருக்கு அந்த தகுதி இருக்குது எனச் சொல்ல முடியுமா?...

வேலைக்கு போனசமயத்தில கயானீஸ்காரன் வந்து எனக்கு புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறான். வைத்தியரிட்ட போனால் வைத்தியசாலையில புலியைப்பற்றி விமர்சனம் செய்யுறாங்கள். யார் யாரோ எந்த எந்த மொழி பேசுகிறவன் எல்லாம் புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறாங்கள். நல்லமாதிரி விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை.. ஏதோ நாங்கள்தான் இயக்கம் நடத்துறமாதிரி கேள்விகள் கேட்டு கொல்லுறாங்கள். ஆனால்.. தமிழ்பேசும் உங்களுக்கு புலியை விமர்சிக்கக்கூடிய அந்தத்தகுதி இல்லை என்று சொல்லப்படுகிது. :rolleyes:

அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

யோவ் மாப்பு, கொஞ்சம் பார்த்தப்பு.. தாய்க்குலத்திட்ட நல்லாய் முறிவாங்கப்போகிறீர். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு போனசமயத்தில கயானீஸ்காரன் வந்து எனக்கு புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறான். வைத்தியரிட்ட போனால் வைத்தியசாலையில புலியைப்பற்றி விமர்சனம் செய்யுறாங்கள். யார் யாரோ எந்த எந்த மொழி பேசுகிறவன் எல்லாம் புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறாங்கள். நல்லமாதிரி விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை.. ஏதோ நாங்கள்தான் இயக்கம் நடத்துறமாதிரி கேள்விகள் கேட்டு கொல்லுறாங்கள். ஆனால்.. தமிழ்பேசும் உங்களுக்கு புலியை விமர்சிக்கக்கூடிய அந்தத்தகுதி இல்லை என்று சொல்லப்படுகிது. :)

quote]

கயனீஸ் காரனும் கனேடியனும் புலிகள் யாரெண்டே தெரியாத பார்வையாளர்கள். புலம் பெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் அல்லது அவர்களின் தாயக உறவுகள் பின் பொட்டுக்கால ஆமியிட்ட இருந்து தப்பியோடி வரும் போது, அவர்களுடைய முன் வீட்டு வாசலிலயும் ஒழுங்கை மூட்டிலயும் இன்றைக்கு விமர்சனப் பொருளாக இருக்கும் புலிகள் இயக்கக் காரன் ஒருவனாவது செத்து விழுந்திருப்பான். அப்பிடி ஒருத்தன் செத்திருக்காட்டி நாங்கள் இண்டைக்கு அவங்கள் குடுத்த உயிர வைச்சுக் கொண்டு இப்பிடி திடீர் மனிதாபிமானிகளாவும், இராணுவ ஆய்வாளர்களாகவும் உலா வர ஏலாது தானே? அந்த உயிருக்காவது நன்றியுணர்வை மனத்தின்ர ஒரு மூலையில வைச்சுக் கொண்டு விமர்சனத்தைச் செய்யுங்கோ எண்டு மட்டும் தான் நாங்க கேக்கிறம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொட்டுக்கால தப்பி ஓடும்போது உடல்சிதறி ஆயிரம் ஆயிரம் சனம் செத்தது. ஆயிரம் ஆயிரம் சனம் நிரந்தர அங்கவீனர்களானது. ஆயிரம் ஆயிரம் சனம் அகதிகளானது. ஆயிரம் ஆயிரம் சனம் வாழ்க்கையை இழந்தது. ஆயிரம் ஆயிரம் சனம் உளநிலை பாதிக்கப்பட்டது. இதிலை தப்பினதுகளிலை கொஞ்சம் வெளிநாட்டுக்கு வந்து தங்கடை வாழ்க்கையை தங்களுக்கு நடந்த சம்பவங்களை திரும்பிப்பார்க்கிதுகள். தங்கடை வாழ்க்கையை பற்றி சிந்திக்கிதுகள், கதைக்கிதுகள். அதுகளுக்கு ஒரு சிலர் எட்டப்பர் என்று பெயர் வைக்க... இன்னொரு சிலர் துரோகிகள் என்று பெயர் வைக்க.. இன்னும் சிலர் இப்ப மனிதாபிமானிகள்.. இராணுவ ஆய்வாளர்கள் என்றும் பெயர் வைக்கிறீனம். :D

சனங்களுக்கு என்று போராட வெளிக்கிட்ட அனைவரும் இங்கு அடிப்படையில் பின்னூட்டல் விமர்சனம் என்பதே தவறு எனும் வகையில் காலங்காலமாக சனங்களுக்கு ஓர் பயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆளையாள் மண்டையில் போட்டு உருவாக்கப்பட்ட போராட்டத்தில்.. தமக்கும் மண்டையில் விழும் எனும் காரணத்தினால் எல்லோரும் பொத்திக்கொண்டார்கள். மண்டையில் போட வாறவன் புலியோ ஈப்பியோ ஈபீடீபியோ சூப்பியோ அல்லது புளட்டோ அல்லது ரெலோவோ என்ன இழவோ என்று ஒரு கோதாரியும் தெரியாது வாயை வாயை பொத்திப் பழக்கப்பட்ட சனங்கள் தொடர்ந்தும் பொத்திக்கொண்டு வாழவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தாயக கோட்பாடு என்பதற்கும் மண்டையில்போடும் கோட்பாடு என்பதற்கும் நிறைய சம்மந்தங்கள் உள்ளன போலும்.

புலிகளில் மாத்திரமல்ல.. வேறு இயக்கங்களிலும் உண்மையாக போராடிய போராளிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான தியாகங்கள் செய்தார்கள். எனது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என்று கூட்டிப்பார்த்தால் ஆக புலிப்போராளிகளாக இருந்து உயிர்நீத்தவர்களே சுமார் நூற்று ஐம்பதுக்கு மேல் வரும். இங்கு விமர்சனம் என்றால்.. இவர்களை போட்டுத்தாக்குவது என்பது அல்ல அர்த்தம். ஆனால் இங்கு பிரச்சனை என்ன என்றால் சில வால்பிடிகள் அரைகுறைகள் புலிகளை விமர்சனம் செய்யக்கூடாது என்று பூச்சாண்டி காட்டுவதுதான். :)

தலைவர் வன்னியில் இறந்துவிட்டாராம் என்று மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் பேசிய ஓர் கரும்புலியின் சகோதரனைக்கூட நான் பார்த்து இருக்கின்றேன். அவனது வீட்டில் இரண்டு மாவீரர்கள். இன்னொரு நண்பன் எனக்கு சொன்னான் என்ன மச்சான் இவன் இப்பிடி கதைக்கிறான் தூசணத்தால் ரெண்டு குடுக்கவேணும் போல இருக்கிது எண்டு. நான் நன்றியுணர்வுடன் இருப்பது என்று மேலே ஏதோ சொல்லப்பட்டதற்காக இந்தக்கதையை கூறுகின்றேன். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா நானும் ஒரு சாதரண மனுசியாய் இருந்து கொண்டு தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து புலிக்கு என் ஆதரவைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்...புலியை ஆதரிப்பதால் புலி செய்யும் பிழைகளை எழுதக் கூடாது என்டு இல்லை....புலியை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்டால் யாருக்கு அந்த தகுதி இருக்குது எனச் சொல்ல முடியுமா?...மற்றும் படி நீங்கள் சொன்ன அனைத்துக் கருத்தும் உண்மை..ஆனால் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்...எல்லோரையும் மாற்றுக் கருத்துக்காரன்,துரோகி என்டால் எப்படி எல்லோரையும் ஒன்றாக ஒருங்கிணைப்பீர்கள்...எல்லோரையும் ஒருங்கிணைக்காமல் திரும்பவும் போராட்டம் வெற்றி பெறும் என நினைக்கிறீர்களா...புலியை விமர்சிப்பதே திரும்பவும் எமது போராட்டம் தோற்று விடக் கூடாது என்பதற்காகத் தான் அதற்காக புலிகள் மீது முழுப் பழியையும் போட்டு விட்டு நழுவுகிற ஆள் நான் இல்லை...எல்லோரும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி,எல்லோரையும் அரவணைத்து சென்றால் எமது போராட்டம் தோற்காது என்பது என் கருத்து.

ரதி அக்கா,

மீண்டும் ஒருமுறை நான் எழுதியதை வாசியுங்கள் எங்காவது புலிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேனா? இல்லை புலிகளை விமர்சிக்க ஏதும் தகுதி வேண்டும் என்று சொல்லி இருக்கிறேனா? எதுக்கு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறிங்கள்?

இத்தனை அக்கறை எடுத்து புலிகளை விமர்சிக்கும் பலர் என்றாவது மாற்று இயக்கங்களால் படுகொலை செய்யப்பட்ட புலிகள்,புலிஆதரவாளர்கள்,மக்களைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறீர்களா? இன்று புலிகளை அழித்து ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்ட பின்னரும் கூட தமிழர்தாயகத்திலும் கொழும்பிலும் நடந்த கடத்தல்,காணாமல் போதலுக்கு ஒரு கண்டனமாவது தெரிவித்தீர்களா?? புலிகள் இருக்கும் வரை புலிகள் தான் காரணம் என்றீர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்? தவிர அவரவர் அவர்சார்ந்த,பிடித்த‌ அமைப்புக்காய் வக்காளத்து வாங்குகிறோமே தவிர நடுநிலையாய் இருப்பர்வர்கள் குறைவு தான். புலிகள் இல்லை என்றவுடன் புலிகளை விமர்சிக்கும் உங்களால் ஈபிடிபி யோ புளட்டோ மாற்றுக்கட்சிகளை உங்களால் விமர்சிக்க முடியுமா?? ஏனெனில் அவர்களிடம் இன்றும் ஆயுதம் இருக்கிறது அதனால் முடியுது. அவர்களுக்கு எதிராக கருத்துச்சொன்னால் ஊருக்கு போகமுடியாது இல்லை ஊரில் உள்ள உறவுகள் உயிருடன் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது புலிகளை மட்டும் எப்படி உங்களால் விமர்சனம் செய்யமுடியும்?? ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்ற மாதிரிக்கு புலிகள் இல்லை என்றவுடன் தேசியவாதிகளாக,ஜனநாயக வாதிகளாக காட்ட முனைகிறீர்கள் அவ்வளவும் தானே?

அடுத்து துரோகி பட்டம் குடுப்பதென்பது தன்னுடைய தவறை மற்றவன் மீது சுமத்த அல்லது தன் தப்பை மறைத்து தான் தப்பிக்கொள்வதற்காக சிலர் துரோகி என்கிறார்கள் சிலர் உண்மையிலேயே துரோகி ஆக இருக்கிறார்கள். ஒரு இனத்தின் இருப்பையே எதிரிக்கு காட்டிக்கொடுப்பவனை என்ன என்று சொல்வது? இதற்கு ஒரே வழி துரோகி பட்டம் வழங்குவதை விடுத்து அவர்களை விலக்கி விடுதலே நன்று இப்படியானவர்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் விட்டாலே நம்மில் பாதிப்பிரச்சனை குறைந்தது போல ஆகிவிடும். அதே போல நீங்கள் சொல்வது போல எல்லாரையும் இணைத்து செயற்படுவது என்பதும் முடியாத காரியம் இது எமது இனத்திற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை இனக்குழுமங்களிலும் உள்ள ஒரு விசயம் தான்.

பலமான எதிர்க்கட்சிகள் அவசியம் தான் ஆனால் எதிராக செயற்படுகிறோம் என்று எதிரிக்கு துணைபோகும் செயற்பாடுகள் தான் தேவையில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாத விடாய் வராததிற்கு காரணம் புலிகள் என்டு சொல்றது எல்லாம் சின்ன வயதிலே போராட்டத்தில் கலந்து கொள்ள பயந்து நாட்டை விட்டு ஓடி வந்த உங்களைப் போல ஆட்களாய் தான் இருக்கும்...நான் எப்போதாவது,எந்த திரியிலாவது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகள் என எழுதினேனா?

ரதி அக்கா. இதுக்கு உண்மைலேயே ஒரு புலிப்போராளி கேட்டால் பதில் சொல்கிறேன். இல்லை ஊரில் உள்ள என் உறவுகளின் உயிருக்கு இங்கே யாராவது உத்தரவாதம் தந்தால் நான் பதில் சொல்கிறேன்.

வேலைக்கு போனசமயத்தில கயானீஸ்காரன் வந்து எனக்கு புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறான். வைத்தியரிட்ட போனால் வைத்தியசாலையில புலியைப்பற்றி விமர்சனம் செய்யுறாங்கள். யார் யாரோ எந்த எந்த மொழி பேசுகிறவன் எல்லாம் புலியைப்பற்றி விமர்சனம் செய்கிறாங்கள். நல்லமாதிரி விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை.. ஏதோ நாங்கள்தான் இயக்கம் நடத்துறமாதிரி கேள்விகள் கேட்டு கொல்லுறாங்கள். ஆனால்.. தமிழ்பேசும் உங்களுக்கு புலியை விமர்சிக்கக்கூடிய அந்தத்தகுதி இல்லை என்று சொல்லப்படுகிது. :)

கரும்பு அண்ணா,

உங்களுக்கு உரிய பதிலும் ரதி அக்கா கு எழுதியதில் இருக்கு.

யோவ் மாப்பு, கொஞ்சம் பார்த்தப்பு.. தாய்க்குலத்திட்ட நல்லாய் முறிவாங்கப்போகிறீர். :D

:D:):D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் வயதில் பெரியவர் ஒரு தலைப்பில் கருத்துகளை எழுதும் போது வடிவாய் வாசித்து விட்டு எழுதினால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...அடுத்தது தலைப்பு சம்மந்தமாக கருத்துகளை எழுதவும் இணையவனை பார்த்தீர்கள் என்டால் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் சம்மந்தம் இல்லாத செய்தியைப் பதிந்தார்...அடுத்தது நான் கருணாவின் விடயத்தில் எழுதியது கருணா இயக்கத்தை விட்டு வந்து அரசுக்கு எதிராகப் போராடி இருந்தால் நான் எனது ஆதரவை அவருக்கு கொடுத்திருப்பேன் அத்துடன் எப்படியாவது அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்திருப்பேன் என்டு தான் நான் எழுதி இருந்தேன்...கருணா தற்போது அரசுடன் இருக்கிறார் அவர் திரும்பவும் வந்து போராடுறது நடக்கிற காரியம் இல்லை...நான் கடந்த காலத்தை பற்றியே எழுதினேன் எதிர் காலத்தைப் பற்றி இல்லை

ஜீவா நானும் புலிகளோடு சம்மந்தப்பட்டு தான் இருக்கிறேன்...என் தாய்,சகோதரங்களும் ஊரில் தான் இருக்கிறார்கள்...நானும் யாழில் முள்ளிவாய்க்காலுக்கு முன்பாக மாற்றுக் கருத்துக்காரரை பலமாக விமர்சித்தவள் தான் வேண்டுமானால் கருத்துக்களத்தில் உள்ள பழைய பதிவுகளை பார்க்கவும்... ஆனால் எப்ப கைது செய்யப்பட்ட,காயப்பட்ட போராளிகளை விடுவிக்க டக்லஸ் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டதோ,என்னும் தேவைப்படுதோ அப் போதில் இருந்து அடக்கி வாசிக்கிறேன்...அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்த படியால் தான் இலகுவாக எமக்காகப் பாடுபட்ட கொஞ்சப் போராளிகளையாவது விடுவிக்க முடிந்தது...இங்கே நாங்கள் தப்பி வந்து கொண்டு டக்லஸ் கூடாவன்,கருணா துரோகி என எழுதலாம் ஆனால் கடைசி நேரத்தில் கஸ்டப்பட்ட போராளிகளுக்கு தான் உண்மை தெரியும் அதற்காக நான் இவர்களை தியாகி என சொல்லவில்லை.

இன்னும் சில காலங்களின் பின் பெரிய ஒரு போராட்டம் எல்லோரும் சேர்ந்து தொடங்குவார்களாயின் அதில் கட்டாயம் கருணா தொடக்கம் டக்லஸ்சின் பங்கு வரை இருக்க வேண்டும்...எல்லோரையும் நாம் மீண்டும்,மீண்டும் உதாசீனப்படுத்தினால் எமது போராட்டம் மீண்டும் தோற்கும் ...அத்தோடு வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்டு ஆகி விடும்...நீங்கள் நினைக்கிறீங்கள் நான் கருணாவை ஆதரித்து எழுதி புலிகளை தாழ்த்தி எழுதுகிறேன் என்டு உண்மை அது இல்லை...நான் உண்மையாக நடந்ததை தான் எழுதினேன்...எமது போராட்டம் மீண்டும் தோற்க கூடாது என்பதற்காகத் தான் எழுதினேன்...யாழில் வந்து முகமூடி போட்டுக் கொண்டு நான் மற்றவர்களை மாதிரி உசுப்பேற்றும் கருத்துகளை எழுதிப் போட்டு 5,6 பச்சைகளை வாங்கிக் கொண்டு பேசாமல் இருக்கலாம் ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை...உண்மையாக கடைசி வரைக்கும் நின்று போராடின போராளிகள்,அவர்கள் உறவினர்கள்,அங்கு கடைசி வரைக்கும் இருந்த பொது மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது,புரியாது,புரிந்து கொள்ளவும் மாட்டீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

பின் குறிப்பு :- திரு. முரளிதரன் அவர்களை மிக மரியாதையாக எழுதியுள்ளேன்

ஏனெனில் மாற்றுக்கருத்து மாணிக்கங்களையும் மதிக்கவேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசுகு நீங்கள் இணையவன் எழுதியதை தவறாக விளங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயக கோட்பாடு தமிழர்கள் தங்கள் பூர்வீக நிலங்களில் சுதந்திரமாக வாழ்வது.

ஆனால் ஒவ்வொரு சிங்கள அரசும் மிகவும் கெட்டித்தனமாக திட்டமிட்டு பூர்வீக நிலங்களை சுவீகரித்து வருகிறார்கள். சுதந்திரந்தின் பின் டி எஸ் சேனநாயகா கெட்டித்தனமாக கல்லோயா, பட்டிப்பளை குடியேற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் பறி போய்விட்டன. கண்மூடித் திறப்பதற்குள் நான் அறிய தனியே தமிழர்கள் வாழ்ந்த யாழ்ப்பாணமும் பறி போய்க் கொண்டிருக்கிறது.

நான் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவன். பூர்வீக பூமி பறிபோதலின் வலி தெரியும். தங்கள் இனத்த்தின் விடிவுக்காய் இத்தனை போராளிக்கும் செத்து மடிந்தார்கள். சிங்களவன் இன்னும் மகாவம்சதிலிருந்தே சரித்திரத்தை தொடர்கிறான். இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. மாற்றுக் கருத்து இணையங்களை திறந்து பார்ப்பேன். சிங்களவர்களும் முஸ்லிகளும் படும் கஷ்டங்களை எண்ணி கண்ணீர் விடுவார்கள். யாழில் முஸ்லிம்கள் துரத்தப் பட்டதும், காத்தான்குடியில் முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்ட செய்திகளும் ஒவ்வொரு வருடமும் தங்களை தூசி தட்டி புதிதாய் திறக்கப்படும். இந்த மார்க்சிச, பூர்சுவா மக்குரோனி ஜனநாயகவாதிகளுக்கு தங்கள் சொந்த சகோதரர்கள் துரத்தியடிக்கப்பட்டதை பற்றி கவலை இல்லை. உண்மையில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. புலி அழிக்கபட்டு ஒன்றரை வருடங்கள். எந்த தடையும் இல்லை. புலி அழிந்தால் தீர்வு வரும் என்று சொன்னவர்கள் எந்த தீர்வை தந்துள்ளார்கள்.

எங்கள் சொத்தி அரசியல்வாதிகளுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. சரித்திரமும் தெரியவில்லை. பாவம் தமிழன்.

Link to post
Share on other sites
 • 2 months later...

எம் இனத்தின் இருப்பிற்கு, பாதுகாப்பிற்கு தாய கோட்பாடு அவசியம். தமிழ் இனம் சுய நிர்ணைய அடிப்படையில் தம் தலைவிதியினை தீர்மானிப்பதற்கு வரலாற்று ரீதியாக வாழ்ந்த வாழும் நிலப்பகுதியும் மொழியும் தான் ஆதாரமாக உள்ளது.

வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை.

இந்த அடிப்படையில் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் வரலாற்று பூமி அங்கு நாம் காலங்காலமாக தனித்துவமான அடையாளங்களுடன் , தனி ஆட்சி புரிந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு எம் தாயகமாகும். தனித்துவ அடையாளங்கள் என்பது வரலாறு, பண்பாடு, அரசியல் , பொருளாதாரம் , மொழி ஆகியவற்றின் பின்பற்றுதல்களையும் வெளிப்பாடுகளையும் உள்ளடக்குகின்றது.

எம் தாயக கோட்பாட்டை நிறுவ நாம் தான் இலங்கைக்கு முன் வந்துள்ளோம் என்று கூறுதனைவிட அன்னிய ஆட்சிக்கு முன்பாகவும் அதன் பின்னரும் இருந்த நிர்வாக முறைமைகளை வைத்தே நிரூபிக்க முடியும்.

எம் தாயகம் எந்தக்காலத்திலும் ( வடக்கு கிழக்கு) பிரிக்கப்படாத தமிழர் இராட்சியமாக இருந்தது. இஃபையிடையே சில நிர்வாக ஒழுங்குகளுக்காக பலாத்காரமாக இணைக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் சட்ட ரீதியாக அப்படி எப்போதும் நிகழவில்லை ( 2002 இற்கு முன்னர்)

Link to post
Share on other sites
 • 1 month later...

புலியை விமர்சனம் செய்வது தவறில்லை அது ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச்செல்லுமாய் இருந்தால் தாராளமாக விமர்சிக்கலாம். அதை விடுத்து மாதவிடாய் வராமல் விட்டால் அதுக்கும் காரணம் புலி என்று சொல்வதைத்தான் ஏற்கமுடியாது.

புலி ஆதரவாளன் என்று சொல்லவில்லை சாதாரண தமிழ்மகனாய் என்னோடை கருத்து என்னவென்றால் தமிழருக்கு என்று ஒரு தனி தாயகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இது அசைக்க முடியாத ஆணித்தரமான நம்பிக்கை.

இன்றைய அதி நவீன தகவல் தொழில் நுட்ப உலகில் முப்பது வருடங்களில் செய்த சாதனைகளை மூன்றே வருடத்தில் செய்ய கூடும் அந்தளவுக்கு சகல துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுள்ளார்கள்.

எம்மக்கள் சிங்களவன் தொல்லையால் வாழமுடியாது என்று எல்லாரும் உணரும் போது நிச்சயம் விடுதலைப் புலிகளை விட பலமான ஒரு அமைப்பு உருவாகும் ஆனால் அதற்கு முன் விடுதலைப்புலிகள் போல அழிந்து போவதற்கான எந்த அமைப்பும் உருவாகப்போவதில்லை கடைநிலை தமிழனும் போராடினால் தான் தீர்வு என்று உணரும் போது அன்றைய காலம் எதை தீர்மானிக்கிறதோ அந்த வழியில் போராடுவோம்.

அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகவேண்டும் ஏனெனில் வரலாறு மிகப் பெரிய பாடத்தை எமக்கு கற்றுத்தந்துள்ளது.

ஜீவாவுக்கு ஒரு பச்சை.

அந்தக் காலம்வரை எம்மால் முடிந்த தொண்டுகளை, தமிழுக்கும், தாயக உறவுகளுக்கும் செய்வதே சாலச் சிறந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில காலங்களின் பின் பெரிய ஒரு போராட்டம் எல்லோரும் சேர்ந்து தொடங்குவார்களாயின் அதில் கட்டாயம் கருணா தொடக்கம் டக்லஸ்சின் பங்கு வரை இருக்க வேண்டும்...எல்லோரையும் நாம் மீண்டும்,மீண்டும் உதாசீனப்படுத்தினால் எமது போராட்டம் மீண்டும் தோற்கும் ...அத்தோடு வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்டு ஆகி விடும்...நீங்கள் நினைக்கிறீங்கள் நான் கருணாவை ஆதரித்து எழுதி புலிகளை தாழ்த்தி எழுதுகிறேன் என்டு உண்மை அது இல்லை...

அதே போல் அவர்களும்(மாற்று கருத்து வேறு.....தமிழனை அழிக்க வேண்டும் என்ற கருத்து வேறு)புலிகளையும் எம்மையும் உள் வாங்கவேண்டும் தமிழன் என்ற உணர்வோடு மட்டும்.....சிங்களவனுடம் கூட்டிக்கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் அல்ல :D:D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.