கருத்துக்கள உறவுகள் shanthy 1,305 பதியப்பட்டது October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது October 19, 2010 யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன். திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) மறைவு : 18 ஒக்ரோபர் 2010 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும், நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும், பாலகுமார்(கனடா), சுமித்திரா(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும், கதிர், கார்த்திகா(கனடா) ஆகியோரின் மாமனாரும், வைஷ்னவி(இலங்கை), நிருபன், நிதர்சனா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் http://www.lankasrinotice.com/ta/obituary.php?20101018201371 கருத்தாளர் வசம்புவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரதி 3,278 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 உண்மையா?...ஏன் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தாரா?...அன்னாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் Link to post Share on other sites
இணையவன் 1,065 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் arjun 1,750 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 வசம்பு குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் நிலாமதி 1,458 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 கண்ணீர் அஞ்சலிகள். Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் akootha 1,057 Posted October 19, 2010 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 19, 2010 குடும்பதார்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் வாதவூரான் 159 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 கண்ணீர் அஞ்சலிகள் Link to post Share on other sites
ராசவன்னியன் 2,704 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 ஆழ்ந்த அஞ்சலிகள். Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,531 Posted October 19, 2010 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 19, 2010 குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பார்த்தீபன் 0 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்! Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் சுஜி 3 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 கண்ணீர் அஞ்சலிகள் Link to post Share on other sites
இசைக்கலைஞன் 3,138 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 மறைந்த யாழ் சக கருத்தாளர் வசம்புவுக்கு கண்ணீர் வணக்கங்கள்..! அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்..! Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,376 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 அஞ்சலிகள் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரதி 3,278 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 வசம்பு ரகுமானின் தீவிர ரசிகர்...நான் யாழுக்கு வந்த புதிதில் ரகுமான் தொடர்பாக எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையே போனது...நல்ல கருத்தாளார் ஆனால் ஏனோ தெரியவில்லை அண்மையில் எழுதாமல் விட்டு விட்டார்...அவருக்காக ரகுமானின் சோக கீதம் ஏதாவது இருந்தால் இணைத்து விடவும். Link to post Share on other sites
கலைஞன் 562 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 ஆழ்ந்த இரங்கல்கள், இதய அஞ்சலிகள். யாழ் இணையத்தில் வசம்பு அண்ணா அவர்களுடனான பற்றி பல்வேறு நினைவுகள் சுழன்று அடிக்கின்றன. அவரது முகத்தை மரண அறிவித்தலில் முதன்முறையாக வேண்டியுள்ளது துர்ப்பாக்கியமே. குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். புகைப்படம்: லங்காசிறீ இணையம், நன்றி Link to post Share on other sites
கிளியவன் 21 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 அஞ்சலிகள் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரது புகைப்படத்தைப்பார்க்க http://www.tamilmemorials.com/view-details?id=19102010408# Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் புரட்சிகர தமிழ்தேசியன் 2,639 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 தோழர் வசம்புவுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .... Link to post Share on other sites
நிழலி 5,559 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 மிக மிக துயரமான செய்தி. வசம்புடன் பல தடவை யாழ் களத்தினூடாக கருத்துகள் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். தான் சரி என நினைத்ததை எவருக்கும் அஞ்சாமல் சொல்லும் துணிவு கொண்ட சிறந்த கருத்தாளர். அரசியல் தவிர்ந்த வேறு பல விடயங்களில் அவரது ரசனையும் எனது ரசனையும் ஒத்துப் போயிருந்தது ஒரு சிறந்த தோழனை இழந்த உணர்வு வருகின்றது கண்ணீர் அஞ்சலிகள் Link to post Share on other sites
கரும்பு 383 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 ஆழ்ந்த இரங்கல்கள். வசம்பு அண்ணா அவர்கள் யாழில் பங்குபற்றிய இறுதிக்கருத்தாடல்: தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் ஆதங்கம் தான் ஏன் என்று புரியவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுயநினைவும் இழந்து தவிக்கும் ஒரு மூதாட்டியை சிலர் தமது சுயநல அரசியலுக்கு பகடைக்காயாக பாவிப்பது தங்களுக்கு சரியாகப்படுகின்றதா?? இன்றைய நிலையில் அவருக்குத் தேவை ஒழுங்கான வைத்தியமும் பெற்ற பிள்ளைகளின் பராமரிப்புமே. ஆனால் இங்கு பெற்ற பிள்ளைகளை விட வேறு சிலர் அவரைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தியதாலேயே இவ்வளவும் நடந்துள்ளது. பலர் இங்கு கதையளப்பதிலேயே காலம் கடத்துகின்றார்கள். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் அவரைத் தம்முடன் எடுப்பதற்கு பல வருடங்கள் எடுக்குமாம். ஆனால் மதிவதனியின் தாயார் மட்டும் உடன் போய் பிள்ளைகளுடன் இணைந்து விட்டார். தமிழக முதல்வர் கருணாநிதியை மட்டும் குறை கூறச் சிலர் விளைகின்றனர். ஆனால் 2003 இல் ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதமெழுதிய போது வைகோ என்ன செய்தார்?? அன்று ஜெயலலிதாவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த வைகோ, ஏன் அதைத் தடுக்க முன்வரவில்லை?? சரி அன்று செய்யாதவர் தற்போது சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாவது, பழைய தடையால் ஏதாவது பிரைச்சினைகள் ஏற்படலாமென்பதை உணர்ந்து தமிழகச் சட்டமன்றம் மூலம் விவாதித்து அந்தத் தடையை நீக்க வைத்திருக்கலாம். திருப்பியனுப்பிய பின் எடுத்த நடவடிக்கைகளை முதலிலேயே எடுத்திருந்தால், இவ்வளவு பிரைச்சினைகளும் வந்திருக்காது. ஆனால் வைகோவும் நெடுமாறனும் தாம் மத்திய அரசின் கண்ணிலும், தமிழக அரசின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு தாம் நினைத்ததைச் சாதித்து விடடோமென்று தம்பட்டம் அடிக்கவே, இதனைப் பாவிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போனபின் இன்று எத்தனையோ கதையளக்கின்றார்கள். இவர்கள் இப்படியெல்லாம் அவரை வைத்து அரசியல் செய்வது தங்களுக்கு ஏற்புடையதா?? போதாக்குறைக்கு நம்மவர்களும் அவரை வைத்து கடித அரசியல் செய்ய நினைக்கின்றார்கள். இங்கும் சிலர் இந்தியாவைக் கேவலமாக எழுதுவதும் தேவை ஏற்பட்டால் இந்தியாவின் காலில் விழுவதும் கைவந்த கலைபோல கருத்தெழுதுகின்றார்கள். இதில் தங்களுக்கும் உடன்பாடா?? ஆனால் உங்களால் கேடுகெட்ட அரசியல்வாதிகளாகக் குறிப்பிடப்படுவர்களுக்கு பார்வதியம்மா எழுதியது போல கையேந்தி கடிதமெழுதுவது மட்டும் இனிக்கிறது. இதிலேயே முன்னுக்குப்பின் முரண்படுகின்றீர்களே?? வைகோவோ, நெடுமாறனோ முன்பே நீதிமன்றம் சென்று பயணத்தடை சட்டபடி நீக்கிவிட்டு, சிகிச்சைக்காக பார்வதியம்மாவை அழைத்ததிருந்தால் இவ்வளவும் நடந்திருக்குமா?? அல்லது இப்படிக் கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?? முன்பும் ஒருமுறை வைகோ தமிழகம் சென்ற கூட்டடைமப்பினரை, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காமல் தடுத்து, தானே பிரதமர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்து டெல்லி அழைத்துச் சென்றார். ஆனால் மூக்குடைபட்டது தான் மிச்சம். மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் பின்பு தமிழக முதலமைச்சர் மூலமாகவே மன்மோகன்சிங்கை சந்திக்க முடிந்தது. இன்று பார்வதியம்மாவிற்கும் நடந்தது இதுதான். பார்வதியம்மாவிற்குத் தேவை எதுவோ அதைவிடுத்து அனைத்தையும் செய்து அரசியலாக்குகின்றார்கள் சிலர். இது நடக்கும்வரை இந்த அவலமும் தொடரும். அதைத் தானே கடிதம் சுட்டி நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ள தங்களுக்கு 2 பக்கக் கருத்துகள் தேவைப்பட்டுள்ளது. ஏதோ செய்திகளை நீங்கள் மட்டும் தான் பார்ப்பது போல் கதையளக்கின்றீர்கள். பார்வதியம்மா விடயமாக கருப்பன் என்ற வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு முதலிலேயே தமிழ்நாடு சட்டசபையில் இவ்விவ்காரம் எழுப்பப்பட்டு அப்போதே முதல்வர் கருணாநிதி பார்வதியம்மா விரும்பினால் தமிழஇநாடு வந்து சிகிச்சை பெற வேண்டிய நடவடிக்கைகளை தான் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு செய்யத் தயார் என்று அறிவித்து விட்டார். எனவே வைகோ போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் முதல்வரை வாய் திறக்க வைத்தது என்பன போன்றன தங்களின் அபத்தமான கற்பனை. அதுபோல் நீதிமன்றம் பார்வதியம்மா விடயமாக மத்திய மாநில அரசுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு மட்டுமே பணித்திருந்தது. எந்த இடத்திலும் பார்வதியம்மாவை தமிழக அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் ஏழுதுமாறு தங்கள் கற்பனை போல் கூறவில்லை. அதுபோல் பார்வதியம்மா தமிழகம் வருவதற்கு சில தினங்கள் முன்பு தான் உரிய கடவுச்சீட்டு (அதுவும் விஐபி கடவுச்சீட்டு) விசா போன்றன இருந்தும் சிவாஜிலிங்கம் விமானநிலையித்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார். பார்வதியம்மாவிற்கு இந்தியா வர தடையிருப்பது வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா அழைத்துச் சென்று முயற்சித்தார். ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய போது அவருடனேயே வைகோ கூட்ட வைத்திருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வைகோ மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்திருந்தார். அதுபோல் திருமாவளவன் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை விட்டதாகவும் கதையளந்துள்ளீர்கள். திருமாவளவனும் . ஜெயலலிதாவையும் மத்திய அரசையும் கண்டித்தே அறிக்கை விட்டிருந்தார். அது தங்கள் கண்ணுக்கு தமிழக அரசைக் கண்டித்ததாக தெரிகின்றது போலும். அதுபோல் முதலவர் கருணாநிதி எந்த இடத்திலும் பார்வதியம்மா தமிழகம் வர தன்னிடம் அனுமதி பெறிவல்லையெனக் கூறவுமில்லை. எல்லா இடத்திலும் தங்கள் கற்பனை நன்றாகத் தான் புகுந்து விளையாடுகின்றது. வைகோ நெடுமாறன் போன்றவர்களின் நடவடிக்கைகளை சுபவீரபாண்டியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் கூடக் கண்டித்திருந்தது தங்கள் கண்ணிற்கு படவில்லைப் போலும். பார்வதியம்மாவின் வருகையை ஏனையவர்களுக்கும் தெரிவித்திருந்தால் எத்தனையோ விடயங்கள் நடைபெறாது தடுத்திருக்க முடியும். ஆனால் வைகோவும் நெடுமாறனும் ஏதோ இலங்கைத் தமிழரின் விடயங்களை தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்தது போல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதிலிருந்தே தெரியவில்லையா இங்கு பார்வதியம்மாவை வைத்து யார் அரசியல் செய்கின்றார்களென்று?? அதனால் தன் பங்கிற்கு முதல்வர் கருணாநிதியும் அரசியல் காய் நகர்த்துகின்றார். இதற்கு உதாரணமாகத் தான் முன்பு வைகோ கூட்டமைப்பையும் மூக்குடைபட வைத்த சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றித் தாங்களும் வசதியாக வாயே திறக்கவில்லை. முதல்வர் கருணாநிதியுடன் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட இவர் பறுவாயில்லை என்பதே எனது நிலை. அதற்கு தாங்கள் வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக கற்பனையில் கதையளப்பது போல் நான் செய்யவில்லையே?? அது என்ன வசதியாக முக்கியமானவற்றை மறைத்துவிட்டு கதையளக்கின்றீர்கள். ஏற்கனவே சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா சென்று முயற்சித்தனர். இது கூட தவறான முயற்சி என்பது தங்களுக்கு தெரியாதா?? இவ்விடயம் கூட வைகோவிற்கோ, நெடுமாறனுககோ தெரியாதென்று கதையளக்க வேண்டாம். முதலில் வைகோ ஜெயலலிதாவோடு 2003இல் கூட்டில்லையென்று கதையளந்தீர்கள். இப்போ வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரில்லையென அடுத்த கதையளப்பு. அவரின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று இருந்தது தங்களுக்கு இலகுவாக மறந்து விட்டது போலும். தமிழக அரசு ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதென்றால் அதனைச் சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் எடுத்தபின் தான் அதனை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்தத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதிக்கும் போது மதிமுக உறுப்பினர்கள் ஒருவேளை தூக்கத்தில் இருந்தினமோ?? இன்றுவரை இந்த விடயம் தமக்குத் தெரியாதென்று வைகோவோ,நெடுமாறனோ புலம்பவில்லை. ஆனால் தாங்கள் தான் தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடுகின்றீர்கள். நான் ஆரம்பத்திலேயே இதுதான் விடயமென போட்டுடைத்து விட்டேன். ஆனால் 2 பக்கங்களை தாண்டியும், தங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லையென்பது இப்போது புரிகின்றது. ஒரு நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரண்டு விதமாக தீர்ப்பு வழங்கியது இது தான் உலகிலேயே முதல் முறை. ஒரு நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்ய முடியுமே தவிர அதனைச் செய் என்று ஆணையிட முடியாது. அது என்னவோ தங்களைப் போல் நக்கீரனும் கதையளப்பில் கில்லாடி தான். தாங்கள் இணைத்ததை தாங்களே ஒருமுறை படித்துப் பார்ப்பது உத்தமம். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan 5,681 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 மிக மிக அதிர்ச்சியான செய்தி. முகம் தெரியாத போதும் கருத்தால் உறவாடிய ஒரு அன்பான கருத்தாளனை இழந்திருப்பது மிக மிக வேதனைக்குரியதாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் கருத்தால் வேறுபட்டு நின்றாலும் கூட பண்பை இழக்காத ஒரு உயர்ந்த உள்ளம் வசம்பண்ணனிடம் இருந்தது. அது இந்தக் களத்துக்கு மட்டுமன்றி எல்லா மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. அதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அழுதிட்டன் வசம்பண்ணா.. கண்ணீர் விட்டு அழுதிட்டன்..! இதை விட என்ன செய்ய..! Link to post Share on other sites
அபிராம் 44 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 ஒரு அன்பான பண்பான கருத்தாளனுக்கு என் இதய அஞ்சலிகள். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குட்டி 150 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 யாழ் இணையக் கருத்தாளர் வசம்பு அண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! அவரின் பிரிவினால் அதிர்ச்சியிலும் , ஆழ்ந்த துயரத்திலும் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் இந்த நேரத்தில் மனவலிமையைக் கொடுக்கவும் பிராத்திக்கிறேன். (May his soul rest in peace!!) Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் செந்தமிழாளன் 126 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 கண்ணீர் வணக்கங்கள் Link to post Share on other sites
சண்டமாருதன் 1,498 Posted October 19, 2010 Share Posted October 19, 2010 யாழ்கள உறவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் யாயினி 2,004 Posted October 19, 2010 கருத்துக்கள உறவுகள் Share Posted October 19, 2010 கண்ணீர் அஞ்சலிகள் Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.