Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்


Recommended Posts

 • Replies 144
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி. மரணச்செய்தி கேட்டு ஒருவினாடி ஸ்தம்பித்து போனேன்.

சிறந்த கருத்தாளர். தனிமடலில் தொடர்பு கொண்டவர்களில் இவரும் ஒருவர்.

வானொலி நிகழ்சிகளில் இவரின் குரலை கேட்டிருக்கிறேன்.

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

துணிச்சலாகவும் நிதானமாகவும் கருத்துக்களை எழுதுபவர். கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் , உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

யாழ்கள உறவும் அக்களத்தின் காரசாரமான கருத்தாளரமாகிய வசம்பு அவர்களது அமரத்துவம் அறிந்து மிகவும் அதிர்ச்சியுடன்கூடிய வேதனையடைகிறேன். யாழ்களம் தமிழுணர்வுடையோரை அரவணைக்கும் ஒரு களமாகும், அக்களத்தில் காத்திரமானதும், பிறரை விசாலமானரீதில் சிந்திப்பதற்குமான கருத்துக்களைத் தரவிளைந்த ஒரு அருமையான சகோதரனை இழந்துவிட்டது. அவரது பிரிவுத் துயரில் யாழ்கள அன்பர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அதேவேளையில். ஒரு நல்ல குடும்பத்தலைவனை இழந்து தவிக்கும் அவரது உறவுகட்கு ஆழ்ந்த இரங்கலை; தெரிவிக்கு அதேவேளை அத்துன்பச்சுழலில் இருந்து மீண்டுவர, எல்லாம்வல்ல இயற்கை துணைபுரியவேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites

துயரளித்த செய்தி. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். யாழ் கருத்துக்களம் ஊடாக கருத்தாடிய உறவு ஒருவரை இழந்துவிட்டோம். கருத்துக்களில் முரண்பட்ட போதும் - நேர்மையாகவும் பண்பாகவும் கருத்தாடியவர். :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

41rqn-39JNL._SL500_AA280_.jpg

எங்களுடன் இணைந்து கருத்துக்கள் எழுதிய வசம்பு அவர்கள் காலமான செய்தி கேள்விப் பட்ட போது....... மிகவும் கவலை அடைந்தேன்.

தான் கூறிய கருத்துக்களுக்காக இறுதி வரை, நிதானமாக வாதாடுபவர்களில் வசம்புவும் ஒருவர்.

அவரின் பல கருத்துக்களுடன் எனக்கு ஒத்துப் போகாவிட்டாலும், அவரின் கருத்தாடும் நேர்மை பிடிக்கும்.

மே 19ற்குப் பின் பலர் முகம் மாறிய போதும்... இவர் ஆரம்ப காலத்திலிருந்தே..... ஒரே, முகத்துடன் இருந்து வந்தவர்.

இந்த வருடம் இவர் யாழில் கருத்துக்கள் எழுதவில்லை என்று நினைக்கின்றேன்.

இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களும், வசம்பு அவர்களின் ஆத்மசாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைவுப்பூக்களைக் காணிக்கையாக்குகிறேன். கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் அவர் தன்னுடைய கருத்துக்களை எழுதும்பொழுது ஏற்றுக்கொள்ளக் கூடிய பல நியாயங்கள் இருக்கும் நல்ல கருத்தாளர். திறமையுள்ள பலரை ஏனோ இளவயதிலேயே இயற்கை அணைத்துக்கொள்கிறது.அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமரர் வசம்பு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

அவரின் பிரிவால் வாடும் அவர் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாத்தியார்

*********

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணாவின் மரணச் செய்தி அதிர்ச்சியை தருகிறது. யாழ்களத்தில் கருத்துகளை நேர்மையான முறையிலும், தனக்கு சரியெனப் பட்டத்தை வெளிப்படையாக கூறும் தைரியம் மிக்கவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

நல்லதொரு கருத்தாளன்.வசம்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.குடும்பத்தாரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.

vasambu.jpg

அவருக்கு ஜேசுதாசின் பாடல்கள் நல்ல விருப்பம் என எங்கோ தெரிவித்து இருந்தார். அவருக்காக ஒரு பாடல்

http://freecomicbooks.org//mytamilmp3.com/jesudas1/NEEYUM_BOMMAI.mp3

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் உள்ள உறவை பற்றி முதன் முதலில் துயர் பகிர்வோம் பிரிவில் கருத்தாடல் செய்ய வைத்து விட்டு நிம்மதியாய் உறங்கும் வசம்புவே....

என்னை யாழுக்கு வரவேற்ற முதல் உறவு அமரர் வசம்பு அவர்கள், எனது கற்பனை கதைகளில் அவரை தவறவிடுவதில்லை, அவரை எந்த பாத்திரத்திலும் குறிப்பிட்டு எழுதினாலும் கோவப்படாமல் எனது கதைகளை பாராட்டும் நண்பர்,

வசம்பு அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்..அன்னாரின் பிரிவில் துயருரும் அவரின் குடும்பத்தின் பிரிவில் நானும் பங்கு கொள்கிறேன்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது மதிப்புக்குரிய அண்ணா

நான் யாழுக்கு வரும் நேரமெல்லாம் உன்னை நினக்காத நாளே இல்லை.

அண்மையில் காணவில்லை பகுதியிலும் உன்னை தேடினேன் நீ வரவில்லை

ஆனால் என்றாவது ஒருநாள் வருவாய் அதிரடியாக வருவாய் என எதிர்பார்த்தேன்

என் எதிர் பார்ப்புக்கு கிடைத்தது உன் மரணச்செய்திதான்

உனது பிரிவால் துயருபவர்களில் நானுமொருவன்

உன்னை நினைத்து அழுகின்றேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு

எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42226 :icon_idea:

நான் எழுத்து பிழை விட்டு எழுதின கவிதையை.. பிழையை திறுத்தி மறுபடியும் எனக்கு அந்த கவிதையை தனி மடலில் அனுப்பி இணைக்க வைச்சவர்..!!

தமிழிழ் பிழை விடாமல் எழுத முயற்ச்சி பன்ன சொன்னவர். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

kirubananthanvaisi01.jpg

யாழ்கள வசம்பு அவர்களின் மரணத்துக்கு கண்ணீர் அஞ்சலிகள். யாழில் என்னுடன் அதிகளவில் கருத்துக்களில் முரண்பட்டிருக்கிறார். எனினும் தான் கொண்ட கருத்தை தயங்காமல் வெளிப்படையாகச் சொல்பவர். சிறந்த வாதத்திறமை மிக்கவர். யாழில் அடிக்கடி காணாமல் போய்விடுவார். சில நாட்களாக அவரைக் காணவில்லை. வேறு பெயரில் வருவார் என்று நான் நினைத்தேன். ஒரே ஒரு முறை தனிமடலில் பொங்கல் வாழ்த்து சொல்லியிருக்கிறேன். அவரும் எனக்கு வாழ்த்துகள் சொல்லியிருந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

-----------------------------------------------------

வசம்பு பற்றி முன்பு யாழ் கருத்தாளர்கள் சொன்ன பதிவுகள்

தூயா -

யாழில் இணைந்தது: 17-ஓcடொபெர் 04

வேறு பெயர்கள்: வசம்பர்: அழைக்கத் தொடங்கியது சின்னப்பு

குசும்பர்: அழைக்கத் தொடங்கியது முகத்தார்.

வேறு ஐடி: தெரியலை

நண்பர்கள்: சியாம், சின்னப்பு, முகத்தார்

அதிகம் எழுதியது: உலக நடப்பு

அது என்ன சியாம் அண்ணா காலத்து சகோதரன் என கேட்பீர்களே!! சியாம் அண்ணா யாழில் இணைந்தது ஆடிமாதத்தில், வசம்புண்ணா இணைந்தது ஐப்பசியில். மூன்றே மூன்று மாத வித்தியாசங்கள் தான். இது தான் காரணம். அத்தோடு, நான் இணைந்த நேரத்தில் எனக்கு யாழில் நடைபழக்கியவர்களில் இவரும் ஒருவர்.

வசம்பு அண்ணாவோடு யாழில் என் உறவு சற்றே வித்தியாசமானது. அதிகம் பேசிக்கொண்டதேயில்லை. யாழ் தொடர்பான தேவைகள் தோன்றும் போது மட்டும் தனிமடலில் தொடர்புகொண்டுள்ளோம். களத்திலும் ஒருவருடைய பதில்களுக்கெல்லாம் அடுத்தவர் வாதம் செய்ததேயில்லை. தேடி தேடி பதிலும் எழுதியதில்லை. ஆனால் என்னுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் வசம்பண்ணாவிடம் இருந்து உண்மையான விமர்சனம் கிடைக்கும். ஊக்கம் நிச்சயம் கிடைக்கும்.

வசம்பு அண்ணா எப்போதாவது தான் பதிவுகளை ஆரம்பிப்பார். ஆனால் அவை நிச்சயம் சுவாரசியமாக, விவாதத்தை தூண்டுவதாக இருக்கும். கவிஞர் தாமரை பற்றிய பதிவை இதற்கு ஒரு உதாரணமாக எடுக்கலாம்.

வசம்பு அண்ணாவும் சமையல்கட்டில் எழுத தவறவில்லை. எங்க சமையல்கட்டிற்கு அத்தனை மகிமை. செய்முறை எழுதாவிடினும், சில உதவிக்குறிப்புகளை வாரி வழங்கியுள்ளார். (எல்லாம் அனுபவம் போல) படித்து பயன் பெறுங்கள்.

வசம்பு அண்ணாவை பற்றி நான் அவதானித்த ஒரு விடயம், விவாதங்களில் அடிக்கடி "களத்து பெண்கள் என்ன சொல்கின்றார்கள் பார்க்கலாம்" போன்ற ஒரு வரி நிச்சயம் இருக்கும். பொல்லு குடுத்து அடி வாங்குவதில் அவருக்கு அத்தனை பிரியம். முன்னர் தமிழினி அக்கி தான் இதற்கு பல தடவைகள் நல்ல பதில்கள் எழுதியிருக்கின்றார். (கிகிகி)

சியாம் அண்ணாவை பற்றி எழுதிய போது, வசம்பண்ணாவே எங்கள் முதல் பட்டிமன்றத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றது என்ற அணியின் தலைவராக இருந்து, சிறப்பாக செயல்பட்டிருந்தார். சியாமண்ணாவும், வசம்பண்ணாவும் நண்பர்களா என ஆச்சர்யப்பட்டவர்கள் மறக்காமல் இதை படித்து பாருங்கள். யாழின் முதல் பட்டிமன்றமாக அமைந்த இந்த பட்டிமன்றத்தில் பல விடயங்கள் நடந்திருக்கு. அது பற்றி இன்னொரு பகுதியில் விவரமாக பார்க்கலாம்.

களத்தில் சிலர் ஆர்ப்பாட்டமாக நகைச்சுவையாக எழுதுவார்கள். சிலர் அமைதியாக எழுதிவிட்டு சென்றுவிடுவார்கள். வசம்பண்ணா அதில் நிச்சயம் இரண்டாவது வகை தான். அவரில் சில மறுமொழிகளை பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றேன். அவற்றில் சில:

"சூனியத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் செய்வினையில் நம்பிக்கை உண்டு. ஏனெனில் முன்பு தமிழில் செய்வினை செயற்பாட்டுவினை படித்தனான். "

"காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?: " இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை?"

முகத்தார், சின்னப்புவை அடிக்கடி வம்பிற்கு இழுக்கும் பழக்கம் எங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம். இதில் வசம்பண்ணாவும் விதிவிலக்கல்ல என்பதற்கு என்னுடைய ஆதாரம்:

முகத்தாரின் சொந்தக்காரரொருவர் சுண்ணாகம் சந்தையில் முகத்தாரைக் கண்டு கதைத்தார். அப்போ

சொந்தக்காரர்: அட தம்பி இப்ப நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

முகத்தார் : ஊரிலே அப்பாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றேன்.

சொந்தக்காரர் : ஓ நல்லவிடயம். அப்பா என்ன வேலை தம்பி செய்கிறார்?

முகத்தார் : சும்மாதான் இருக்கின்றார்

சொந்தக்காரர் : :ரொல்ல்: :ரொல்ல்: :ரொல்ல்: :ரொல்ல்:

சிலவருடங்கள் தினமும் வசம்பண்ணா எழுதுவதை பார்த்து வருகின்றேன். அதில் நான் அவதானித்த ஒரு விடயம், வசம்பண்ணா அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார். எங்களில் பலர் அண்ணா, அக்கா, தங்கை, தம்பி என குறிப்பிடுவோம். ஆனால் வசம்பண்ணா அப்படியல்ல. சரிதானே வசம்பண்ணா? அனைவரையும் ஒரே முறையில் மரியாதையாக தான் அழைப்பார், கதைப்பார், விவாதங்களில் பங்கெடுக்கும் போது விளிப்பார்.

வசம்பண்ணாவிடம் எனக்கு பிடித்த இன்னொரு விடயம், பாரபட்சம் பாராமல் திறமையாளர்களை ஊக்குவிப்பதும், நன்றி சொல்ல வேண்டிய இடங்களில் யார் என்றாலும் நன்றி சொல்வது தான். இவரை பார்த்து நானும் இந்த நல்ல விடயத்தை கற்றுக்கொண்டு செயல்படுத்த முயற்சிக்கின்றேன்.

ஒரு தடவை குருவி பபா சொன்னவர் "யாழ் ஒரு பேருந்து போல, உறுப்பினர்கள் பயணிகள் போல ஏறி இறங்கிக்கொண்டேயிருப்பார்கள��

�" என. இதில் நான் பேருந்தில் ஏறிய நேரத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கும் வசம்பு அண்ணா, தொடர்ந்து எங்களுடன் பயணிக்க வேண்டும். வாழும் காலம் வரை யாழுடன் பயணிக்க வேண்டும்.

ஆரம்பத்திலிருந்து என் ஆக்கங்களை மறக்காமல் ஊக்கம் தரும் உங்களிற்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் வசம்பண்ணா..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39963&st=120

---------------------------------------------------

பொன்னையா

வசம்பு ஒரு திறமையான கருத்தாளர். நகைச்சுவையானவர். நிறையப் பொது விடயங்களைப் படித்து வைத்திருப்பவர்.

--------------------

nunavilan

வசம்புவின் கருத்துக்கள் வித்தியாசமானவை. சிந்திக்க தூண்டுபவை. பிடித்தது கருத்து எழுதுபவரை( செய்தி இணைப்பவரை) அடிக்கடி கேள்வி கேட்பார். நிறைய வாசிப்பார் போல தெரிகிறது. மொத்தத்தில் நல்ல கருத்தாளர்.

------------------------------

Sabesh

வசம்பு அருமையன கருத்தாளர். அநாகரிகமாக கருத்தெழுதி பார்த்ததில்லை. உண்மை/மனசுக்கு பட்டதை/தனக்கு அறிந்ததை/தெரிந்ததை நேரடியக சொல்வதனால் சிலருக்கு பிடிப்பதில்லை என்பது கசப்பானது.

-------------------------------------

குமாரசாமி

வசம்பு அண்ணணின் கருத்துக்கள் பலது புரிந்துகொள்ளக் கூடியவர்களாலே மட்டும் புரிந்து கொள்ள முடியும்.

நல்ல கருத்தாளன் மட்டுமல்ல ஒவ்வொரு கருத்துடனும் குசும்பையும் புகுத்தி அருமையாக வசனம் எழுதக்கூடியவர்.

எனது முன்னோடிகளில் இவரும் ஒருவர்

--------------------------------

கறுப்பன்

உண்மையில் வசம்பு ஒரு வி்த்தியாசமான கருத்தாளந்தான். அவரின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமான போக்கு ரசிக்க கூடியது.....

அவர் இலங்கை அரசியலை அவ்வளாவாக ரசிக்கவில்லை போல...

உலக நடப்பையே அதிகமாக ரசிப்பவர். யதார்த்தவாதி...அதனாலேயே சிலபேருக்கு [கருத்து] விரோதி.....எந்தநிலையிலும் தன்கருத்தை மாற்றாதவர்.

-----------------------------------

தமிழ் சிறி

வசம்பின் குசும்பு எனக்குப் பிடிக்கும் . நகைச்சுவை உணர்வு மிக்கவர் . அநாகரீகமாக எழுத மாட்டார் .

இந்திய சஞ்சிகைகளை விரும்பி படிப்பார் போல் உள்ளது ...........

இருந்தும் கருணாநிதியை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பார் .

தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் மாவட்ட செயலாளராகவோ , வாரியத்தலைவராகவோ இருந்திருப்பார் .

--------------------------------------

chozhan

வசம்பண்ணாவின் கருத்துக்களை கொஞ்ச நாட்களாக படிக்கின்றேன். அவர் நக்கலை மிகவும் நளினமாக செய்கின்றார். நல்ல ஞாபக சக்தி இருக்கின்றவர் போலும். அதே நேரத்தில் கொஞ்சம் கோபக்காரர் போல் தெரிகிறார்

---------------------------------------

வசம்பு அவர்கள் தன்னைப் பற்றிச் சொன்ன பதிவு

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

சென்ற வியாழனன்று (24.07.08) காலையில் களத்திற்கு வந்தபோது தூயா எனைப்பற்றி பதிந்திருப்பதைக் கண்டேன். அதற்கு ஏனைய கள உறவுகள் விமர்சனம் வைத்திருப்பதையும் கண்டேன். எனவே கள உறவுகளின் விமர்சனங்களுக்கும் சேர்த்துப் பதிலளிப்பதற்காக இன்றுவரை காத்திருந்து எனது பதிலைப் பதிகின்றேன்.

முதலில் தூயாவிற்குத்தான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். இப்படியான ஒரு பதிவினை மேற்கொள்வதால் களத்தில் புதிதாக இணையும் கருத்தாளர்களுக்கு உதவியாக இருக்குமெனவே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இப்பதிவுகளின் பின் வரும் ஏனைய கள உறவுகளின் நாகரீகமான விமர்சனங்களின் மூலம் எம்மை சுயபரிசோதனை செய்யவும் முடிகின்றதென்பது யதார்த்தமான உண்மை. இதனால் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!!

களத்தோடு நெருங்கிய தொடர்புடைய எனது சில நண்பர்களின் தூண்டுதலாலேயே நானும் களத்திற்கு முதலில் பார்வையாளனாக வந்து சில தினங்களிலேயே கருத்தாளனாக இணைந்தும் விட்டேன். எனக்குக் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி என்பதனாலேயும் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரம் இதுவரை மற்றவர்கள் வைக்காதது போலவும் ஒரு பெயரை வைக்க விரும்பினேன். அப்போது மனதில் உதித்தது தான் இந்த வசம்பு. வசம்பில் வம்பும் இருப்பதால் இது குசும்பிற்கும் பொருந்துவதால் சரியாக இருக்குமென்று இதையே தெரிவு செய்தேன். வசம்பு என்பது சில கள உறவுகள் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு மருந்து தான். இது ஒருவகைப் புல்லின் வேரிலிருந்து தயாரிக்கப்படுவது. வசம்பைக் கூடுதலாக மைனா வளர்ப்பவர்கள் அதற்கு வலிப்பு நோய் வராமலிருப்பதற்காக கொடுப்பதை நான் அறிந்திருக்கின்றேன். இஞ்சியைக் காயவைத்தால் வருவது வேர்க்கொம்பு. இதற்கும் வசம்பிற்கும் சம்பந்தமில்லை.

இன்றுவரை எவரையும் புண்படுத்தாது குசும்பாகவும், வம்பாகவும், நட்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அதுபோல் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. என்னையும் அறியாமல் எவரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக இந்தச் சந்தர்பத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். களத்தில் எல்லோரும் நாகரீகமாகக் கருத்தாடுவதையே என்றும் விரும்புகின்றேன். அதனையே அநேகமான கள உறவுகளும் கடைப்பிடிக்கின்றார்கள்.

குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி. அதனால் தம்பி தங்கை இல்லாத ஏக்கம் இருந்தது. சிறுவயதில் இது பற்றி அம்மாவிடம் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளேன். அப்போதெல்லாம் அம்மாவின் பதில் சிரிப்பாக மட்டுமேயிருக்கும். அடிக்கடி கேட்டுத் தொல்லை கொடுத்ததால் ஒரு நாள் அம்மாவே என்னிடம் திருப்பிக் கேட்டா, சரி உன் ஆசைப்படி ஒரு தம்பிப் பாப்பாவோ அல்லது தங்கச்சிப் பாப்பாவோ பிறந்ததாலும், திரும்பவும் அவர்கள் உன் போல் என்னைக் கேட்டால் பிறகென்ன செய்வது?? இந்தக் கேள்வியிலுள்ள நியாயத்தால் தம்பி, தங்கை இல்லையென்ற ஏக்கம் இருந்தாலும் அத்தோடு அம்மாவிற்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் யாழ்க் களத்திற்கு வந்தபின் எனக்கு நிறைய தங்கைகள் இரசிகை, தூயா, வெண்ணிலா, அனிதா என்று நிறையவே கிடைத்தார்கள். ஆனால் தம்பியாக ஒரேயொரு தூயவன் மட்டுமே கிடைத்தார். பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். காரணம் களத்தில் கருத்துக்களால் நாம் மோதிக் கொள்வதே அதிகம். அவை கருத்துக்களில் மாத்திரம் தான். தனிமடலில் என்னை அண்ணாவென தூயவன் அழைக்கும் அழகே தனி. அவர் மடல்களில் உண்மையான பாசம் கொப்பளிக்கும். அதனால் அவர் மீது நானும் உண்மையான பாசத்தையே வைத்திருந்தேன். களத்தில் என் கருத்தைக் கடுமையாகச் சாடி தூயவன் கருத்தெளிதினால், உடன் எனக்கொரு தனிமடலும் அனுப்புவார். அதில் அண்ணா என்னில் கோபிக்கிக்க மாட்டீர்கள் தானே அண்ணாவோடு தானே நான் மோதலாம் எனக் கேட்டிருப்பார். அவர் களத்தை விட்டு விலகுவதாக அறிவித்த போது உண்மையாகவே என் மனது வலித்தது. அவர் மீண்டும் தூயவனாக களம் வர வேண்டுமென்பதே என் பேரவா!!

அது போலவே களத்தில் நிறையவே நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் மூலம் நிறைய அறிவுசார் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

இப்படியான பல நன்மைகளுக்கு வழி சமைத்த யாழ் கருத்துக் களத்திற்கும் இச்சந்தர்பத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

------------------------------------------------

மீண்டுமொரு முறை உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இப்டியொரு பதிவை ஆரம்பித்ததற்காக.

1)வசம்பர் என அழைக்கதம் தொடங்கிய சின்னப்பு இப்ப அதையும் சுருக்கி வம்பர் ஆக்கிவிட்டார். நம்ம ஜம்மு என்னை வசபண்ணா என்றே அழைக்கின்றார்.

2)சமையல் கட்டில் என் கைவரிசையும் உண்டு தான். ஆனாலும் பொதுவாக ஏனைய இணையத்தளங்களில் நான் பார்த்த நல்ல விடயங்களை என் கள உறவுகளும் தெரிந்து பயனடைய இணைப்பது என் வழக்கம்.

3)முன்பு களம் கலகலப்பாக இருந்த காலத்தில் களத்்தில் எழுதும் பெண்கள் குறைவு. ஓரளவு அதிகமாக எழுதி வந்தவர் தமிழினி. அவரை மேன்மேலும் எழுத வைப்பதற்காக அப்பப்போ சீண்டுவேன். அது போல் நான் சீண்டிய இன்னொரு கள உறவு நித்திலா. அவவும் எனக்கு பதில் எழுதுவதற்காக அடிக்கடி எழுதுவா. ஆனால் இருவரும் தற்போது களத்தில் இல்லாதது வேதனையானது. நிறையப்் பெண்கள் (பெண் பெயரில் ஆண்களல்ல) களத்தில் இணைந்து தங்கள் திறைமைகளையும் வெளிக் கொணர வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. எனவே திறைமையுள்ள பெண்கள் களத்தில் இணைந்து உங்கள் திறைமைகளை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை வரவேற்று உற்சாகப்படுத்த பல கள உறவுகள் காத்திருக்கின்றோம்.

4)உண்மையில் நடைமுறையில் நான் பாடசாலை காலத்திலிருந்து பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களில் கலந்து கொண்டிருந்தாலும் களத்தில் முதன் முதலாக நடந்த பட்டிமன்றம் எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது என்றால் அது மிகையாகாது. அதற்கும் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!

5)பொதுவாகவே எமது பெயரை எம்மைவிட அடுத்தவர்கள் தான் அதிகமாகப் பாவிக்கின்றார்கள். அதனால் உறவுகள் தமக்கென வைத்துள்ள பெயரை நாமும் பாவிக்காது விட்டால் எப்படி?? அதனாலேயே எல்லோரையும் பெயரைக் கூறி ஆனால் மரியாதைக் குறைவில்லாமல் அழைப்பது என் வழக்கம்.

6)உண்மையில் பாராட்டுவதென்பது ஒவ்வொரு படைப்பாளியையும் மேலும் பல படைப்புக்களை படைப்பதற்கான ஊக்குவிப்பைக் கொடுக்கும் உன்னதமான ஒரு டானிக்.

7)யாழ்க் களத்தில் உங்கள் எல்லோருடனும் தொடர்ந்து பயனிப்பதே எனது விருப்பமும்.

Link to post
Share on other sites

கந்தப்பு இணைத்த பதிவினைப் பார்க்கும் போது மேலும் மேலும் கவலை வருகுது. நான் முதன் முதலில் எழுதிய அன்று வசம்பிடம் தான் விவாதம் செய்திருந்தேன் என்று நினைவு. என் "ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கான விமர்சனத்துக்கான பதில் தான் அவர் இறுதியாக என் திரிக்கு இட்ட பதில்

இன்று முழுதும் மனசு பாரமாக இருக்கு

Link to post
Share on other sites

வசம்பு அவர்களின் நகைச்சுவைகளில் ஒன்று:

முட்டையில மயிர் பிடுங்குதல் என்றால் என்ன...?

ஓ அதுவா சிலர் மினக்கிட்டு முட்டையில் மயிர்களை நட நாங்கள் வந்து புடுங்குகின்றோமாம். நீங்களே சொல்லுங்கள் பறைவைக் காய்ச்சல் பிரைச்சினையெல்லாம் இருக்க இவங்க போய் முட்டையில் மயிர்களை நடலாமா?? அதைச் சுட்டிக் காட்டினால் தப்பாம்.

Link to post
Share on other sites

ஒஒஒ வம்பன்னா வமபன்னான்டு சொல்லுவனே..நான் இனைக்கின்ற செய்திகளுக்கு எல்லாம் நகைச்சுவையாக கருத்து எழுதுவிங்களே...

குடும்பத்தபருக்கு ஆழ்நத அணுதாபங்கள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் தேடிய போது

67476101501012529189028.jpg

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ; பார்த்தீபனின் பூதவுடல்

20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும்,

23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு,

ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.