Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....

.

Link to post
Share on other sites
 • Replies 144
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

தனது கருத்துக்களைத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்து வைத்த யாழ்கள உறவு வசம்பு அவர்களிற்கு ஆழ்ந்த கவலையுடன் கூடிய வணக்கங்கள்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு கருத்து நிலையில் இருந்து நாம் கருத்துக்களைத் தெரிவித்தாலும் நாகரீகமாகவும் பண்பாகவும் பதிலளிக்கும் ஓர் நல்ல பண்பாளன். அவரின் குடும்பத்தினரிற்கும் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வானொலி நிகழ்சி ஒன்றில் அவரின் குரலை கேட்க

http://www.zshare.net/audio/721954391d8bf148/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசம்பு குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அதிர்ச்சியான செய்தி.அண்மையில் நாவூற பகுதில் அவரின் கருத்துக்களைப்பாத்த போது அவரை வெகுவாக நினைவு கூர்ந்தேன்.அரசியலுக்கப்பால் நல்ல பண்புள்ள ரசனை மிக்க மனிதர்.அன்னாருக்கு அஞ்சலிகளும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் அனுமதிக்குமானால் வசம்பண்ணனை தெரிந்த யாராவது இந்த பதிவை(அஞ்சலி) பிரதி எடுத்து மரணச் சடங்கிற்கு முன் அவர் வீட்டாரிடம் கொடுத்தால் நன்றாயிருக்குமே. யாழில் நிறைய நேரம் செலவழித்துள்ளார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேதனையான செய்தி.

அவர் அன்பாகக் கருத்துப் பரிமாறியதை ஞாபகப்படுத்தமுடிகிறது.

குடும்பத்தார்க்கு அழ்ந்த அனுதாபங்கள்.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருடன் என்றும் முரண்பட்டே கருத்தாடிய போதும், சக கருத்தாளன் என்ற முறையில் அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி!

சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்த

மனிதநேயன் வை சி கிருபானந்தனது

இழப்பின் துயரால் பரிதவிக்கும்

அவரது குடும்பத்தினருக்கும்; நண்பர்களுக்கும் எமது ஆழந்த அனுதாபங்கள்.

வைசீயின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிராத்திப்போம்....

more Photos:

http://www.facebook.com/photo.php?fbid=10150101253878902&set=a.10150101252733902.318617.823993901

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சியையும் வேதனையையும் தந்த செய்தி. நேர்மையான கருத்தாளன் வசம்புவின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணாவின் துயரச் செய்தி வேதனை அளிக்கின்றது... கவிதை என்ற பெயரில் நாம் கிறுக்கிய கிறுக்கல்களுக்கு எல்லாம் தனிமடல் மூலமாகவும் ஊக்கம் தந்தவர்... ஒரு வரி பதில் என்றாலும் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் தன் கருத்தை சொல்லுபவர். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.... அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகி்றேன்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.............

Link to post
Share on other sites

வசம்பு அவர்களின் குடும்பத்தினரிற்கு எனதுஅனுதாபங்களையும் வசம்பு அவர்களிற்கு எனது அஞ்சலிகளையும் செலுத்தும் வேளை யாழ்களத்தில் என்னுடையதும் வசம்பு என்கிற வை.சி .கிருபானந்தனுடையதுமான நட்பு நீண்டது. யாழில் வசம்பு அறிமுகம் ஆவதற்கு முன்னரே வை.சிஎன்கிற அடைமொழியுடன் ஜரோப்பிய ஆரம்ப வானொலியான ரி ஆர்: ரி வானலைகளில் அரசியல் கருத்தரங்களில் அறிமுகமானர். பின்னர் யாழில் நான் சியாம் என்கிற என்னுடைய புனைபெயரில் அறிமுகமான காலங்களில் வசம்புவும் சொந்தப் பெயரில் யாழில் பதிவிட்டு சில சிக்கல் காரணமாக வசம்பு என்கிற புனைபெயரில் யாழில் கருத்துக்களை பதிவிட தொடங்கிய காலம். வசம்புவும் நானும் ஈழப்போராட்டம் பற்றிய விடயத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஆனால் புலிகள் அமைப்பை பற்றிய விடயத்தில் நேரெதிரான கருத்துக்களை கொண்டவர்கள்;. புலிகள் அமைப்பின் பல விடயங்களை நேரடியாக விமர்சிப்பவர் வசம்பு ..ஆனால்லும் அன்றைய கால கட்ட தேவை கருதி நேரடி விமர்சனங்கள் தேவையில்லையென நான் அவருடன் வாதாடிய காலங்கள் பல..ஆனாலும் எவ்வித வக்கிரங்களோ மோசமான வார்த்தைகளோ கெட்ட வாத்தை பிரயோகங்களோ இன்றி விவாததத்தினை நேரடியாக முன்வைத்த சிறந்த மனிதர் அவர். இத்தனைக்கும் மேலால் நான் தொலைபேசியில் தொர்பு கொண்டு வாதிடக்கூடிய மனிதராக இருந்தவர்.நான் சியாம் என்கிற பெயரில் யாழ் இணையத்தில் ஒழுங்கு செய்திருந்த பட்டிமன்றத்திற்கு உறுதுணையாகவும் நடுவராகவும் இருந்து சிறப்பித்தவர்.அந்த பட்டிமன்றத்தின் இணைப்பினை யாழ் நிருவாகம் இங்கு இணைத்தால் நினைவுகளை மீட்டலாம்.அந்த இனிய நினைவுகளுடன்...பிறப்பது மண்மேல் இறப்பதற்கென்றே கூறி யாழ் கள நண்பனின் ஆத்மசாந்திக்காக சில நிமிடங்கள் தலை குனிந்து கொண்டு நன்றி வணக்கம்

Link to post
Share on other sites

யாழில் இந்த செய்தி தேவையா என்ற வெறுப்பை கொடுக்குமளவிற்கு ஒரு உணர்வு!

வசம்பு ஒரு பண்பானவர் என்பதிற்கு அவரினால் பதியப்பட்ட ஒவ்வொரு கருத்துக்களும் சான்றாக அமைகின்றன.

மற்றவர்கள் தனது கருத்தை ஏற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் கருத்துக்களை முன்வைப்பவரல்ல வசம்பு, தனக்கு எது சரியென்று படுதோ அதைமட்டும் கூறுவார், பின் விளைவுகளைப்பற்றி சிறிதேனும் சிந்திப்பவரல்ல வசம்பு அதுதான் வசம்பு

யாழ் தளத்தில் தனக்கென்றும் ஒரு களத்தை அமைத்துக்கொண்டவர் என்பதை இங்கு அனைவரினாலும் பதியப்படும் இரங்கல் செய்தியில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது.

சகோதரன் வசம்புவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன், வசம்புவை இழந்து தவிக்கும் அனைத்து உள்ளங்களிற்கும் எனதுகுடும்பத்தினரின் சார்பில் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஓம் சாந்தி!!!

Link to post
Share on other sites

யாழ்கள உறுப்பினர்களுக்கிடையே சில போட்டிகளை நடாத்தியிருக்கிறேன். அவற்றில் ஒரே ஒரு முறை, முதலாவது போட்டியாக தமிழகத் தேர்தல் சம்பந்தமான போட்டியை நடாத்தியிருந்தேன். 2006ல் நடைபெற்ற இப்போட்டியில் வசம்பு அவர்கள் 3ம் இடத்தைப் பிடித்தார். அவர் அரசியல் போட்டிகளில் தான் ஆர்வம் கொண்டவர். அடுத்து 2011ல் தமிழகத்து தேர்தல் வருகிறது. ஆனால் வசம்பு நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

.... நான் சியாம் என்கிற பெயரில் யாழ் இணையத்தில் ஒழுங்கு செய்திருந்த பட்டிமன்றத்திற்கு உறுதுணையாகவும் நடுவராகவும் இருந்து சிறப்பித்தவர்.அந்த பட்டிமன்றத்தின் இணைப்பினை யாழ் நிருவாகம் இங்கு இணைத்தால் நினைவுகளை மீட்டலாம்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=4990

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் வசம்பு அண்ணா.

நான் இதை முக்கியமாக சொல்ல வேண்டும் யாழ்களத்தில் வசம்பு அண்ணா எது எழுதினாலும் அதை எதிர்ப்பதை தவிர வேற எதுவுமே நான் செய்வது இல்லை அதுவும் சில வேளைகளில் அவர் எழுதியைதை வாசிக்காது கூட எதிர்கருத்து எழுதி இருக்கேன்( அதை கருத்து என்று சொல்ல முடியாது) அவரின் பலமே நான் எவளவு தான் மரியாதை இல்லாது எழுதினாலும் அவர் அப்படி தானும் கீழ் இறங்கி தரக் குறைவாக பேசுவது இல்லை அப்படி ஒரு சிறந்த கருத்தாளர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னால் நம்பமுடியவில்லை சகோதரா உன் இழப்பை

கண்ணீர் அஞ்சலிகள்

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு அழ்ந்தானுதாபங்கள்

உன்னை எண்ணி தவிக்கும் உறவுகளில் நானும் ஒருத்தன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். :blink:

இதயத்தில் பூத்த கண்ணீர்ப்பூக்களைக் காணிக்கையாக்குகிறேன். மேலும் அன்னாரின் ஆத்ம சாந்திவேண்டிப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

வானுறை தெய்வத்துள் வைக்கப்படும்"

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணா,

செய்தி பார்த்தவுடனேயே என்னையறியாமல் என் கண்ணில் கண்ணீர்.

எனக்கு இவரை நினைத்தவுடன் எனக்கு படிப்பித்த ஒரு ஆசிரியர் தான் ஞாபகத்துக்கு வருவார், நான் கூட அவரிடம் கேட்டேன் ஊரில் ஆசிரியராய் இருந்தீங்களா என்று? இங்கையும் பிரம்பும் கையுமாய் திரிகின்றீர்கள் என்று.

இல்லைடா செல்லம் என்று தொடங்கி ஒரு நல்ல விளக்கம் ஒன்று தந்தார்.

ஒருமுறை தனிமடலில் நீங்கள் மீண்டும் யாழுக்கு வரவேண்டும் என்று கேட்டு எழுதினேன். வருவேன் என்று எழுதியிருந்தார்.

வசம்புஅண்ணாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு

எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

சகாறா அக்கா எனக்கு தொலைபேசியூடாக வசம்பு அண்ணாவின் மரணச்செய்தியை கூறியபொழுது தொட்டு அவர் நினைவே அடிக்கடி வந்து செல்கின்றது. நான் ஆரம்பித்த பல கருத்தாடல்களில் வசம்பு அண்ணா தனது கருத்துக்களையும் கூறினார். கீழ்க்கண்ட கருத்தை கதை கதையாம் பகுதியில் நான் எழுதிய ஓர் கதையில் கூறினார். நான் எனக்கு ஆதரவாக அல்லது ஊக்கப்படுத்தி கருத்து வைத்தார் என்பதற்காக கூறவில்லை. ஆனால்.. யாழ் கருத்தாடல் தளத்தை பொறுத்தவரையில் கருத்தியல் பரிமாற்ற நோக்கில் வசம்பு அண்ணாவின் இடம், பணி, சேவை மிக முக்கியமானதொன்று.

vasaumpu.png

ஆரம்பத்தில் உங்கள் கருத்துக்கள் ஏதோ கிறுக்கல்கள் போலவே இருந்தன. ஆனாலும் உங்களிடம் நிறைய விசயஞானம் இருப்பதை அப்போதே உணர்ந்து கொண்டேன். உங்கள் கருத்துக்கள் போலவே உங்கள் தேடல்களும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி. உங்கள்அனுபவங்கள் அனைத்தையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவை எமக்கும் பிரயோசனமாக இருக்கும். நீங்கள் கூறியது போல் இவற்றைத் தொகுத்து எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்கள். ஏனெனில் இன்று என்பது நிச்சயமானது, நாளை என்பது கேள்விக்குறி.

பி.கு: சக கருத்தாளர்கள் பற்றிய தங்கள் பதிவுகளை நீங்கள் முடித்ததும் எனது பதில்க் கருத்தை பகிர்வதற்காக நான் காத்திருக்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அவர்கள் அமரராகிய செய்தி இன்றுதான் அறிந்தேன். முகமறியா உறவென்றாலும் மனம் கனக்கிறது. இவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.