Jump to content

அவலம் + அதில் அரசியல் = சிவசக்தி ஆனந்தன்


Recommended Posts

அவலம் + அதில் அரசியல் = சிவசக்தி ஆனந்தன்

imagessi.jpg

அரசியல் பற்றிய கட்டுரைகளே இனி எழுதுவதில்லையென அடித்துச் சத்தியம் செய்து விட்டு எமது மக்களின் அவல வாழ்விற்கு ஆதாரமாகவும் அவர்களிற்கான பொருளாதாரத் தேடல்களாகவுமே இனிவரும் காலங்களில் இருப்பதென்ற முடிவில் நாம் நேசக்கரம் அமைப்பினுடாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுவதும் அவர்கள் உணர்வுகளை உலகிற்கு எடுத்துச் சொல்வது மட்டுமே பணியாகக் கொண்டிருந்தோம்.

ஆனாலும் மீண்டும் எழுதித் தொலைக்க வேண்டியதானதொரு சூழ்நிலை. அரசியலே எழுதுவதில்லையென முடிவெடுத்த எமக்கு ஒரு அரசியல்வாதியே அரசியலை மீண்டும் எழுதத் தொடங்குவதற்காக அரசியலில் அ எழுதி ஏடு தொடக்கிவைத்துள்ளார்.

ஏடு தொடக்கி வைத்தாலும் எழுதலாமா விடலாமா ? ஆயிரம் மனப்போராட்டங்கள் அவை ஒருநாள் இரண்டு நாளல்ல ஒன்றரைமாத காலப்போராட்டத்தின் பின்னர் மீண்டும் அந்த பாதிக்கப்பட்ட மக்களிற்காக எழுதுவதென முடிவெடுத்துள்ளோம்.

மே மாதம் 19 உலகத்தமிழர் வாழ்வில் மறக்க முடியாததொரு நாள் அன்றைய நாளில் யார் எங்கே என்ன செய்வது?? எதைச் செய்வது ?? செய்வதற்கு இனி எதுவுமே இல்லையா?? இனி என்னத்தைச் செய்து என்னவாகப் போகின்றது?? இப்படி பல்லாயிரம் கேள்விகள் பல சந்தேகங்கள் வெறுப்பு விருப்பு காழ்ப்பு இப்படியான கலவையில் தமிழர்கள் அனைவருமே துவண்டும் துடித்தும் கிடந்த காலத்தில் மனித நேயப்பணி எம்மக்களிற்கான நேசப்பணி நிறையவே கிடக்கின்றது எதுவும் முடிந்து விடுவதில்லை. துளிர்விடுவதற்காகத் தமிழர்கள் தேம்பிக்கிடக்கின்றார்கள் புலம்பெயர் தமிழர்களே தூங்கி கிடக்காதீர்கள் ; கண்ணீர் விடும் எம்மக்களிற்காய் தண்ணீர் விட்டால் துளிர்த்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையினை ஊட்டி உடனடி நடவடிக்கைகளில் இறங்கிய நேசக்கரம் அமைப்பு உறவுகளுக்கு உதவுவதில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் பல மைல்கற்களைத் தாண்டி நிற்கும் நேசக்கரம் அமைப்பிற்கு. இன்று ஒரு தடைக்கல் அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் என்கிற கல்.

சிவனாகவும் சக்தியாகவும் ஆனந்தமாகவும் அவர் வீற்றிருக்கலாம். ஆனால் அவர் எமது மக்களின் அவல வாழ்வில் தானே முழு முதல் கடவுளாக முடிவெடுத்திருப்பது வேதனையானது. இனி ஆலாபனைகள் வேண்டாம் விடயத்திற்கு நேரடியாக வருவோம்.

நேசக்கரம் அமைப்பு 2009 மே18இன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடகாலமாக தாயகத்தில் அவவலமுறும் மக்களைத் தேடி அவர்களுக்கான உதவிகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் செய்து கொண்டு வருகிறது. உதவிகளை அந்த மக்களுக்கு சிறுஅணிலாக நேசக்கரம் உறுப்பினர்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

இக்கட்டு நிறைந்த அந்த நாட்களில் இந்த அரசியல் வியாபாரி தனது அலுவலகத்தில் இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். அறிக்கைகள் மட்டும் போதாது மக்களைச் சென்று சந்தித்து உதவுமாறு பலதரம் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தோம். ஆனால் தமக்கான அனுமதியில்லை ஆகவே தம்மால் எதுவும் செய்ய முடியாதென்று கைவிரித்தது மட்டுமல்ல தங்கள் தேர்தலுக்கான நிதியுதவியை புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்றுத்தரும்படியான வேண்டுதலையும் த.தே.கூட்டமைப்பின் உள்விவகாரங்களையும் தனக்கு ஒவ்வாத உறுப்பினர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக புலம்பெயர் மக்களிடமிருந்து எவ்வாறு பணம் பெற முடியுமென்ற விபரங்களையே பேசிக்கொண்டிருந்தார். ஒரு மக்கள் பிரதிநிதியான அவரால் ஒரு சிறு உதவியேனும் செல்ல வேண்டுமென்ற நோக்கில் சுயநலச் சாக்கடையில் மூழ்கிக்கிடந்த ஆனந்தன் ஊடாக எதையாவது அவலப்பட்டோருக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றே விரும்பினோம். அதனால் பல விடயங்களில் மென்போக்கையும் கடைப்பிடித்தோம்.

வவுனியா முகாம்களில் அவலமுறும் மக்களின் சில தொடர்புகள் ஊடாக சிறு உதவிகளை நமது தொடர்பாளர்கள் சிலரை வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் வவுனியா பொதுவைத்தியசாலையில் பலர் மருத்துவ உதவிகோரிய விபரங்களை எமக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கான சில உதவிகளை சிவசக்தி ஆனந்தனிடம் கோரியபோது புலம்பெயர்ந்த உங்களிடம் இல்லாத பணபலமா என்னிடம் உள்ளதெனத் தட்டிக்கழித்தார். சில உயிர்கள் நிரந்தரமாகப் படுக்கையில் போனதில் கூட பெருமதிப்புக்குரிய சிவசக்தி ஆனந்தனின் பங்குண்டு என்பதை எம்மால் மறக்க முடியவில்லை.

தான் வாழும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது சொந்த செல்வாக்கை வைத்தே சென்று வரக்கூடிய திறமையுள்ளதாக பீற்றியவர் குடும்பங்கள் முகாமுக்குள் இருக்க தற்கொலைக்கு முயற்சித்து தீமூட்டிய ஒருவனைச் சென்று பார்த்து அவனுக்காக சில உதவிகளைச் செய்யுமாறு வேண்டிய பொழுது என்னால் அதுவெல்லாம் முடியாதென ஒதுங்கிக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரை மிகுந்த சிரமத்தின் மத்தியில் அந்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலமையிருந்தது எமக்கு. ஆனந்தனின் சுயநல அரசியல்வியாபாரத்தில் வெளிப்படுத்த முடியாத துரோகத்தனங்கள் நிறையவே இருக்கின்றன. ஆயினும் எமது நோக்கம் அதுவல்ல. சாக்கடையில் மிதப்பவனுக்கு எல்லாம் ஒரேவகைதானே. ஆக அதைவிடுவோம்.

கிட்டத்தட்ட ஒருவருடம் வரை இந்த அரசியல்வாதிக்கு அவலப்பட்ட மக்களின் அவலங்களை வெளியில் கொண்டு வரவோ அல்லது உதவ வேண்டுமென்றோ எண்ணம் வரவில்லை. தேர்தல் நெருங்க வாக்குப் பிச்சை வேண்டி தேர்தல்கால வாக்குறுதிகளைச் சுமந்து கொண்டு மக்களிடம் சென்ற அரசியல்வாதியாகவே இவர் மக்களிடம் செல்லத் தொடங்கினார்.

ஆனால் நேசக்கரம் தன்னால் இயன்ற தன் சக்திக்கு அப்பாற்பட்டு பல திட்டங்களை செயற்படுத்திக் கொண்டிருந்தது. இது சிலரது ஓயாத உழைப்பினால் சிறுசிறுகச் சேர்க்கப்பட்ட உதவிகள். நேசக்கரம் செயற்படுத்திய பல திட்டங்களில் முக்கியமான திட்டம் வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியாசாலையில் அங்கவீனர்களாக அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கானது.

இந்தப் பம்பைமடுவில் உள்ளோரில் பலர் முன்னைநாள் போராளிகளாகவும் மற்றும் சாதாரண பொதுமக்களுமாக உள்ளனர். இவர்கள் யுத்தத்தினால் பாதிப்படைந்து உடல் அவயவங்களை இழந்தது மட்டுமல்லாது பலர் இடுப்பிற்குக்கீழ் நெஞ்சின்கீழ் கழுத்தின் கீழும் இயக்கமற்ற நிலையில் படுத்த படுக்கையாக தங்கள் வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை MSF என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனம் இன்றுவரை பராமரித்து வருகிறது.

ஆயுர்வேத வைத்தியசாலைக்குள் வெளியார் யாரும் செல்ல முடியாத நிலமையிருந்த காலங்கள் அவை. சில நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நேரம் நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக சில நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் ஊடாகவும் நோயாளிகளின் உறவினர் என்ற பெயரில் சிலரை அனுப்பி குறிப்பிட்ட முக்கிய தேவைகளைச் செய்து கொண்டிருந்தோம். சிகிச்சை பெற்று வெளியே வந்த பலருக்கான சுயதொழில் வேலைக்கான உதவி மற்றும் நிரந்தர படுக்கையில் இருப்போருக்கான மாதாந்த உதவிகள் என நேசக்கரமும் இன்னும் சில அமைப்புகளும் செய்திருந்தது.

மருத்துவமனையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு யாரும் சென்று வரும் நிலமை உருவாகிய நேரம் அங்குள்ளோரின் விபரங்களை நேசச்கரம் அமைப்புத் திரட்டியது. அவர்களில் பலருக்கான உதவிகளையும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையை விட்டு வெளியில் வருவோருக்கு கட்டம் கட்டமாக சொந்த வேலைவாய்ப்புக்கான முன்னெடுப்புகளையும் செய்யும் முயற்சிகளும் பலருக்கு தெரிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளும் சத்தமின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த உறவுகளில் குறிப்பிட்ட அளவானவர்களை 30.08.10அன்று தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட மேன்மைதகு வவுனியா த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் சந்தித்திருந்தார். அங்குள்ளவர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்துள்ளார். தனது சுற்றுலாவின் ஞாபகமாக படங்களும் எடுத்துவந்திருந்தார். முக்கியமாக அவர் சந்தித்தவர்கள் தனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அங்கிருக்கும் உறவு ஒருவர் தெரிவித்தார். மிகவும் பாதிக்கப்பட்ட சிலர் இச்சுற்றுலாப் பயணச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தமது எதிர்பினையும் வெளியிட்டிருந்தனர். இன்னும் சிலர் ஏதாவது தமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உரயைாடினர். அதிலும் சிலர் தமது சொந்தத் தொழிலுக்கான உதவிகளை த.தே.கூ செய்து வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.

இவ் அரசியல்வாதியை நம்பி விபரங்களைக் கொடுக்க யோசித்தவர்களை அங்கே மருத்துவம் பெறும் தனது உறவினர் ஒருவர் ஊடாக பேச வைத்து அவர்களது பெயர் விபரங்கள் தகவல்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டார். தன்னால் அரசிடமிருந்தும் தனது கட்சியிடமிருந்தும் முடிந்தளவு உதவிகளைப் பெற்று தருவதாகவும் வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் பெற்றுள்ளார். அங்குள்ளவர்களும் தங்களிற்கு ஏதாவது உதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்க…. அவர்களது விபரங்களைப் பெற்றுக்கொண்ட மேன்மை தங்கிய ஆனந்தன் அவர்கள் அதனை இலங்கையரசிடமோ த.தே.கூ.தலைமையிடமோ கொண்டு செல்லாமல் புலம்பெயர் தேசத்தில் இயங்கும் ஒரு இணையத்தள செய்தி ஊடகமொன்றில் அதன் விபரங்களை வெளியிட்டார். இணையத்தில் தங்கள் விபரங்கள் வரவுள்ளது என்பதை அங்கிருந்தோரில் பலர் அறியவேயில்லை. பின்னர் அது சர்ச்சையை உண்டுபண்ணத் தொடங்க இணையம் ஊடாக பலர் உதவ முன்வந்து கொண்டிருப்பதாகவும் இதோ அதோ என போக்குக்காட்டத் தொடங்கினார் பெரு மதிப்புக்கு உரிய மக்கள் பிரதிநிதி ஆனந்தன்.

ஏற்கனவே அந்த மக்களில் பலருக்கு நேசக்கரம் அமைப்பின் ஊடாகவும் வேறு அமைப்பின் ஊடாகவும் உதவிகளை வழங்கிவரும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் அந்தச் செய்தியினைப் பார்வையிட்டதும் எம்முடன் தொடர்பு கொண்டு தாங்கள் உதவி செய்பவர்கள் பலர் மீண்டும் உதவி கேட்டுச் செய்தித் தளமொன்றில் செய்தி வெளியாகியிருப்பதாகவும் உடனடியாகத் தங்களிற்கு விளக்கம் தரவேண்டும் அல்லாவில் தாங்கள் வழங்கிவரும் உதவிகளை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள்.

அதனையடுத்து நாம் ஆனந்தனுடன் தொடர்பு கொண்டு அச்செய்தி பற்றியும் நாம் செய்துவரும் உதவிகள் பற்றியும் தெரிவித்திருந்தோம். அத்தோடு தற்காலிகமாக அச்செய்தியினை நீக்குமாறும் வேண்டினோம். உதவி கிடைப்போருடன் தொடர்பு கொண்டு உண்மைகளை அறிய அவகாசமும் கேட்டிருந்தோம். அத்தோடு அந்தச் செய்தித்தள ஆசிரியருக்கும் அச்செய்தி பற்றி தெரிவித்து அச்செய்தியை நீக்குமாறும் கோரியிருந்தோம். அச்செய்தி தொடர்பாக உரிய செய்தியாசிரியர் தனது பக்கத் தெளிவுபடுத்தலை மேற்கொண்டிருந்தார். அவ்வாசிரியருடன் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் நாம் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம் யாவும் மின்னஞ்சல் மடல்கள் வைத்திருக்கிறோம்.(தேவையேற்படும் பட்சத்தில் அக்கடிதங்களையும் கொண்டு வருவோம் மக்கள் அரங்கிற்கு)

நீங்கள் உதவிகோரிச் செய்தி வெளியிட்டிருப்பவர்களில் பலருக்கான உதவிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது எனவே அந்தச் செய்தியை நீங்கள் நீக்காவிட்டால் உதவுபவர்கள் உதவிகளை நிறுத்தப்போவதாக எம்மிடம் தெரிவித்துள்ளார்கள் எனவே செய்தியை நீக்குமாறு கேட்டிருந்தோம்; அதற்கு அவர் எம்மிடம் தெரிவித்ததாவது :- இந்த செய்தி உங்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால் நாம் ஒரு செய்தி ஸ்தாபனம் என்ற வகையில் எமக்கு அனுப்பப்படும் ஆதாரபூர்வமான தகவல்கள் படங்கள் கடிதங்கள் மற்றும் அனுப்பப்படும் பொறுப்பு வாய்ந்த நபர்கள் என்பவற்றின் அடிப்படையில் செய்திகளை பிரசுரிக்கிறோம். அவை மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எமது பிரதான இலக்கு. அதற்கு அப்பால் எமக்கு பின்நோக்கங்கள் எதுவும் கிடையாது. இதனை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.குறிப்பிட்ட செய்தியாசிரியர் எழுதிய மடலிலிருந்து ஒருபகுதி இது)

குறித்த ஆசிரியருக்கும் எமக்குமிடையிலான கடிதப்பரிமாற்றம் ஒரு கட்டத்தில் மிகவும் காரசாரமாகவும் அமைய ஒரு செய்தியாசிரியருடன் எம்மை முரண்படும் நிலமைக்கு தள்ளிய சிவசக்தி ஆனந்தன் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவி நின்று போய்விடும் என்பதனை பற்றி கவலைப்படுபவராக இல்லாது தனது செய்தி பொய்யாகிவிடக்கூடாது எனவே அதனை நீக்க முடியாது என்று விட்டார். அல்லது தான் பம்பைமடு வைத்தியசாலையில் சென்று பார்த்து வந்த செய்தியை அறிந்து பலம்பெயர் உறவுகள் பலர் உதவத்தொடங்கியுள்ளனர் என குறித்த இணையத்தள ஆசிரியரிடம் கூறி செய்தியொன்றை போட முடியும் என்றார்.

சரி செய்தியினை நீக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் உதவி கிடைக்காத வேறு பலர் உள்ளனர் அவர்களிற்கான உதவிகள் தேவைப்படுகின்றது என்றொரு செய்தியினைப் போட்டாலாவது தடைப்படப்போகும் உதவிகளைத் தடுத்து நிறுத்தலாமெனக் கோரிக்கை வைத்தோம் அதனையும் மறுத்து மட்டுமல்ல எமது மக்களிற்கு என்ன செய்வேண்டும் என்பது எனக்குத் தெரியும் நான் அந்த மக்களின் பிரதிநிதி அத்தோடு ஒரு அரசியல்வாதி எவரையும் எங்கேயும் சந்திப்பேன் எப்படியும் செய்தி கொடுப்பேன் நீங்கள் எனக்கு சட்டம் போட முடியாது எனவும் தனது அரசியல் முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். குறித்த செய்தியை வெளியிட்ட செய்தியாசிரியர் நம்பிய பொறுப்பான நபர் ஆனந்தன் பொறுக்கித்தனமான தனது அரசியல் வியாபாரத்திலேயே கவனமாக இருந்தார்.

அத்தோடு மட்டுமல்லாது உதவி கிடைக்கின்ற உறவுகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு தன்னிடம் திரும்பவும் விபரங்கள் படங்கள் தரும்படியும் உதவிகள் பெறுகின்ற விபரங்கள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தொல்லைகொடுத்து வருகிறார்.

உதவி கிடைக்காதவர்களுக்கும் நேசக்கரம் கட்டம் கட்டமாக உதவிகளை ஒழுங்கு செய்கிறது இவ்விடயத்தில் நீங்கள் தலைப்போட வேண்டாம் எனவும் தமது வாழ்வோடு விளையாட வேண்டாமெனவும் விபரங்களை வழங்கிய சிலர் தயவுடன் வேண்டியிருந்தார்கள்.

கிட்டத்தட்ட மேர்வின் சில்வாவின் பாணிபோல தண்டனை வழங்கும் தொனியுடன் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகிறார் தற்கால மேர்வின் சில்வாவின் வாரிசாக உருவாகியிருக்கும் மேன்மை தங்கிய சிவசக்தி ஆனந்தன். மற்றும் உதவி பெறுகின்றவர்களுக்கு தனது கட்சிமூலம் நிரந்தர வசதிகளைச் செய்து தரமுடியுமெனவும் சொந்தத் தரவுகள் படங்கள் போன்றவற்றை தன்னிடம் தரும்படியும் கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரசியல்வாதியை எதிர்த்து எதையும் சொல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலமையில் உள்ளதையும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள். இவரது தொடர் தொலைபேசியழைப்புகளின் தொல்லை தாங்காமல் சிலர் கெட்டவார்த்தைகளாலும் திட்டியதையும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.

பம்பைமடுவில் உள்ளவர்களில் சுயதொழில் செய்ய விரும்பும் 22குடும்பங்களுக்கான சுயதொழில் ஏற்பாட்டுக்கான வேலைத்திட்டத்தினை சில ஊர் ஒன்றியங்களை அணுகி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றும் உறவென்று யாருமில்லாது உதவிகள் அற்றவர்களைத் தரம்பிரித்து அவர்களை தனியே பராமரிப்பதற்கான ஒழுங்குகள் , சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோருக்கான அவரவர் திறமைக்கேற்ப தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்யும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வெளியில் சென்ற பலர் சொந்தத் தொழில்களை ஆரம்பித்தும் உள்ளனர்.

இந்நோயாளிகளுடன் உள்ள சிலரை இதற்கென நியமித்து ஒவ்வொருவரின் தகுதி நிலைகளும் பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வகைக்குள்ளிருந்து பலரை விலக்கியுள்ளோம். அவர்கள் உதவிகளை மது அருந்தச் செலவிடுவோர் மாதச்சம்பளம் பெறுவோர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் உதவி உள்ளோரையும் தவிர்த்து மற்றையோருக்கான உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் தனித்து இரவு பகல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

மது அருந்துவோர் , மாத சம்பளம் பெறுவோர் வெளி உதவிகள் பெறுவோரும் சிவசக்தி ஆனந்தனின் விபரக்கோர்வையில் உள்ளார்கள். மது அருந்துவதற்கும் வருமானம் பெறுவோருக்கும் நமது மக்களின் உழைப்பு செல்வதை நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை தெரிவித்த போது அதுபற்றியெல்லாம் தனக்கு எதவித கவலையும் இல்லையெனத் தெரிவித்தது மட்டுமல்லாது, தான் ஒரு அரசியல்வாதி தன்னால் எதுவும் செய்ய முடியும் எனவும் தொடர்ந்து நம்முடன் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரது இந்த நடவடிக்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது, அவலத்தை வைத்துத் தனது அரசியல் வியாபாரத்தைச் செய்வதிலேயே கவனமாக இருப்பதையே உணர்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களில் அவசரமாக உடனடியாக உதவிகள் செய்யப்பட வேண்டியவர்களை தேர்வு செய்தே உதவிகளை கட்டம் கட்டமாக செய்து வருகிறோம் என்பதனையும் பலதரம் வெளிப்படுத்தியும் தனது வியாபாரத்தில் குறியாக உள்ளார் சிவசக்தி ஆனந்தன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக உதவிகளை வழங்கும் மக்களின் உழைப்பை அரசியல் வியாபாரமாக்கும் இந்த வியாபாரிகளின் நரிமுகங்களை மக்கள் அறிந்து கொள்ளவே இவ்விடயத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதனையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

இன்று மக்களின் பிரதிநிதி என்கிற இதே ஆனந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பையே புலம்பெயர் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும் என்கிற ஒரு நிலையில் இருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஓட்டுப் பிச்சை கேட்ட பொழுது த.தே.கூ.மீதிருந்த விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக புலம் பெயர் ஊடகங்களில் மட்டுமல்லாது புலம்பெயர் அரசியல் அரங்குகளிலும் அவர்களிற்கான ஒரு அந்தஸ்தினைப் பெற்றுக்கொடுக்கப் போராடியவர்களின் பின் நாமும் நின்றோம் என்பதை வேதனையுடன் அறியத்தருகிறோம்.

தமிழருக்கான அரசியல் கட்சியாக த.தே.கூ மட்டுமே வேண்டுமென்று விரும்பியது தமிழர்களுக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை அரசியல் செய்து பிழைப்பு நடத்த முடிவெடுத்துள்ள இத்தகைய அரசியல் சாக்கடைகளை நாம் நிராகரிக்கவா அல்லது நேசிக்கவா ? புலம்பெயர் உறவுகளே உங்களிடமே இவ்விடயத்தை முன் வைக்கிறோம்.

இவ்விடயத்தை த.தே.கூ தலைமைக்குத் தெரிவிக்காமல் என் ஊடகங்களில் கொண்டு வருகிறீர்கள் எனச் சில அன்பர்கள் கேட்டிருந்தார்கள். த.தே.கூ இந்த ஆனந்தன் விடயத்தில் மவுனம் கடைப்பிடித்து வருவதை பல உண்மைகள் ஊடாக தரிசித்ததன் விளைவே இன்று மக்கள் முன் கொண்டு வருகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல பொதுமனிதர்கள். எங்களின் சொல் அரசியல் தலைமையாளர்களினால் கேட்கப்படாது. எமது ஆதங்கங்களை அவர்கள் சில சமாளிப்புகளுடன் மெழுகி மறைத்துவிட்ட பல கசப்பான உண்மைகளை நேரடியாகப் பெற்றுக் கொண்டமையினாலேயே மக்கள் முன் மக்கள் பிரதிநிதியெனத் தன்னை அடையாளமிட்டு பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அரசியல் சவாரி செய்ய முனையும் ஆனந்தனின் சாக்கடைத் தனம் நிறைந்த செயல்களை மக்களே உங்கள் முன் தருகிறோம். முடிவு உங்கள் கையில்….

(சிவசக்தி ஆனந்தனுடன் உரையாடிய பல உரையாடல்கள், கடிதப்பரிமாற்றங்கள் மற்றும் அவரது சந்திப்பு குறித்து பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள் யாவும் பதிவுகளாக வைத்திருக்கிறோம். தேவையேற்படும் பட்சத்தில் நிச்சயம் வெளியிடுவோம் என்பதனையும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்)

- சாத்திரி , சாந்தி -

பிற்குறிப்பு :- இச்செய்தி பற்றி மக்கள் பிரதிநிதியான மேன்மைதகு ஆனந்தன் அவர்களிடம் கருத்துக் கேட்கவுள்ள ஊடகங்கள் எமது தரப்பு நியாங்களையும் கேட்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

எமது மக்களின் துன்பங்களை நீக்க முற்படும் ஒரு சிலரையும், சிவசக்தி ஆனந்தன் போன்ற தமிழர்கள் .................... கேவலப்படுத்தி விடுகிறார்கள்.

சிங்களவன் எதிரிதான் ஆனால் தமிழர்களால் தமிழர் படும் பாடு அதிகம்.

சீறீ ரங்கா, .......இன்னும் பலபேர் பட்டியல் போடலாம்.

ஆனால் இவர்களால் உண்மையாக உதவுபவர்களின் மனங்களை மாற்ற முடியாது.

தொடரட்டும் தங்கள் சேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலி பயிரை மேஞ்ச கதையள் அங்கை எக்கச்சக்கமாய் இருந்தாலும்........

இதுகளை யோசிக்க இன்னும் பயமாய்க்கிடக்கு?

Link to comment
Share on other sites

ஏடு தொடக்கி வைத்தாலும் எழுதலாமா விடலாமா ? ஆயிரம் மனப்போராட்டங்கள் அவை ஒருநாள் இரண்டு நாளல்ல ஒன்றரைமாத காலப்போராட்டத்தின் பின்னர் மீண்டும் அந்த பாதிக்கப்பட்ட மக்களிற்காக எழுதுவதென முடிவெடுத்துள்ளோம்.

நன்றி உங்கள் முடிவுக்கு. நீங்கள் எழுதாதவரை யாருக்கும் என்ன நடந்தது என்பது தெரிய வராது.ஆகவே நீங்கள் இத்தகையவர்களால் அரசியல் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளீர்கள்.

உங்கள் தேசத்தொண்டுக்கு சாத்திரி அண்ணாவுக்கும் சாந்தி அக்காவுக்கும் மீண்டும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

சிவசக்தி ஆனந்தனின் நடவடிக்கைகள் உங்கள் பணிக்கு இடையூறாக இருப்பது மிகவும் கவலையானது.

அவர் செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவை விரைவில் அலசப்பட்டும்.

Link to comment
Share on other sites

இந்த போலிஆனந்தன் ஒரு மேர்வின் சில்வா போல்தான் நடந்து கொள்கிறார். நீங்கள் குறிப்பிட்ட உந்த புளொட் ஆதரவு இணையத்தளத்தில் கூட்டணியில் பிளவு எண்ட செய்தியைப்போடுவிச்சதும் உந்த போலிஆனந்தன்தான். உவர் இப்ப புளொட் லிங்கநாதனோடை சேர்ந்து அரசாங்க பக்கம் போறதுக்கு ஓடித்திரிகிறாராம். அது பற்றி மாவை சேனாதிராசா கேட்டபோதுதான் மாவைக்கு அடிக்க போனாராம் உந்த ஈபி போலிஆனந்தன். அவரும் புளொட்ஆதரவு இணையத்தளமான குழப்புற தமிழ்நியூஸ் என்ற இணையத்தளமும் சேர்ந்து கன கூத்துக்காட்டுகினம். அவையின்ர முத்திரைகள் விரைவில் கிளிக்கப்படும்.

Link to comment
Share on other sites

ஈபிகாரரான உந்த போலிஆனந்தன் தமிழரசுக்கட்சியில எலக்சன் கேட்டதாலதான் வெண்டவர். ஈ.பியில கேட்டிருந்தால் வெண்டிருப்பரோ. இப்ப உவருக்கு சண்டித்தனம் வேற . உவரும் உந்த புளொட்கார இணையத்தளகாரரும் கடந்த காலங்களில செய்த அட்டகாசம் கொஞ்சம் இல்ல. அதவிட முக்கியமான விடயம் உந்த புளொட்இயக்கஆதரவு குழப்புற தமிழ்நியூஸ் இணையத்தளத்தை நடத்துறவர் கொழும்பில இருக்கக்க தன்னை கடத்தினதெண்டு ஒரு நாடகம் ஆடினவர். சரி இப்பவாவது தன்னை யார் கடத்தினதென்று சொல்லட்டுக்கு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

எமது மக்களின் துன்பங்களை நீக்க முற்படும் ஒரு சிலரையும், சிவசக்தி ஆனந்தன் போன்ற தமிழர்கள் .................... கேவலப்படுத்தி விடுகிறார்கள்.

சிங்களவன் எதிரிதான் ஆனால் தமிழர்களால் தமிழர் படும் பாடு அதிகம்.

ஆனால் இவர்களால் உண்மையாக உதவுபவர்களின் மனங்களை மாற்ற முடியாது.

சிங்களவர்களுடன் போராடுவதிலும் பார்க்க இந்தத் தமிழ் அரசியல் வியாபாரிகளுடன் போராட வேண்டிய ஆபத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

வேலி பயிரை மேஞ்ச கதையள் அங்கை எக்கச்சக்கமாய் இருந்தாலும்........

இதுகளை யோசிக்க இன்னும் பயமாய்க்கிடக்கு?

வேலியும் நாமே பயிர்களும் நாமே காவலும் நாமே கடமையும் நாமே நீங்களெல்லாம் கட்டளையிடும் அரச அதிகாரிகள் இல்லை அரசியல்வாதிகள் என்றெல்லோ அடக்கிவிட நிற்கிறார்கள்.

இனி பயப்பிடாமல் உண்மைகளைச் சொல்வோம் குமாரசாமி. உண்மையா இத்தகைய போலியா வாழும் என்பதை காலம் சொல்லும்.

Link to comment
Share on other sites

சிவசக்தி ஆனந்தனின் நடவடிக்கைகள் உங்கள் பணிக்கு இடையூறாக இருப்பது மிகவும் கவலையானது.

அவர் செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவை விரைவில் அலசப்பட்டும்.

சிவசக்தி ஆனந்தன் தீட்டிய மரத்தில் கூர் பார்க்க முயற்சிக்கிறார் கவலையான விடயம் ஆனால் காலச்சக்கரம் சுழன்றுகொண்டேதானிருக்கும் தேர்தல் என்பது இன்னொரு தடைவை வரும். அப்போது அந்த மக்கள் பதில் கெடுப்பார்கள் அதுவரை பொறுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் முடிவுக்கு. நீங்கள் எழுதாதவரை யாருக்கும் என்ன நடந்தது என்பது தெரிய வராது.ஆகவே நீங்கள் இத்தகையவர்களால் அரசியல் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளீர்கள்.

உண்மைகளை ஒளிக்கவும் எமது செயற்பாடுகளை முடக்கும் வேலையைச் செய்வதில்தான் அரசியல்வாதம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈபிகாரரான உந்த போலிஆனந்தன் தமிழரசுக்கட்சியில எலக்சன் கேட்டதாலதான் வெண்டவர். ஈ.பியில கேட்டிருந்தால் வெண்டிருப்பரோ. இப்ப உவருக்கு சண்டித்தனம் வேற . உவரும் உந்த புளொட்கார இணையத்தளகாரரும் கடந்த காலங்களில செய்த அட்டகாசம் கொஞ்சம் இல்ல. அதவிட முக்கியமான விடயம் உந்த புளொட்இயக்கஆதரவு குழப்புற தமிழ்நியூஸ் இணையத்தளத்தை நடத்துறவர் கொழும்பில இருக்கக்க தன்னை கடத்தினதெண்டு ஒரு நாடகம் ஆடினவர். சரி இப்பவாவது தன்னை யார் கடத்தினதென்று சொல்லட்டுக்கு பார்க்கலாம்.

இந்த எம்பி மகிந்தருடன் போகப்போவதற்கு ஆன வேலைகள் நடகிறது.புளொட்லிங்கநாதன் அனந்தன் குட்டணி ஆகயுள்ளதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.