Jump to content

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்


Recommended Posts

வணக்கம்,

அண்மையில் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - CTBC மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை சாடி வெளிவிடப்பட்ட தேர்தல் விளம்பரம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. நம்மவன் இடம் கொடுத்தால் மடம் கட்டுவான் என்பதற்கு குறிப்பிட்ட விளம்பரம் ஓர் நல்ல உதாரணம். ஊரில் இருந்து நிர்வாணமாக தப்பினோம் பிழைத்தோம் என்று கவடு கிழிய ஓடிவந்து கனேடிய திருநாட்டினுள் புகுந்து நிம்மதியாய் மூச்சுவிட்டபின்னர்... இப்போது நமது சமயம், நமது கலாச்சாரம் நமது ஒழுங்குமுறை எனும் அடிப்படையில் இங்குள்ள பல்லின கலாச்சாரத்தை, பல்லின மக்களை மலினப்படுத்தும் வகையில் தேர்தல் விளம்பரத்தை கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வெளிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட விளம்பரத்தை யூரியூப் இணையத்திலும் மொழிபெயர்ப்புடன் வெளிவிட்டு தமது கீழ்த்தரமான புத்தியை காட்டியுள்ளார்கள்.

இங்கு கனேடிய திருநாட்டின் பல்லின மக்களுடன், கலாச்சாரத்துடன் ஒன்றாகச் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்றால் ஊருக்கு நடையைக்கட்ட வேண்டியதுதானே? வெவ்வேறு தளங்களில் பின்னூட்டல்களை கூறுபவர்கள் "இவர்கள் தமிழர்கள் தம்மை புறக்கணிப்பு செய்வதாக கூறி அழுகின்றார்கள்.. ஆனால்.. இவர்கள் மற்றவர்களை இப்படி கீழ்த்தரமான வகையில் புறக்கணிப்பு செய்கின்றார்களே" என கூறுகின்றார்கள்.

குறிப்பிட்ட விளம்பரம் இவ்வாறு செல்கின்றது:

நபர் 1: மணியண்ணை மேயர் எலக்சனில யாருக்கு உங்கட ஓட்டுக்கள்?

நபர் 2: கக்க.. (சிரிக்கிறாராம்) என்ன கேள்வி? நான் தமிழனடா! எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் எண்டு இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ, அவற்றை மனுசி ஒரு பொம்பிளை. அதுமட்டுமல்ல வீடுவாங்கேக்க மாற்றுவரி, மற்றவரிகளையும் குறைப்பாராம்.

நபர் 1: அப்ப இமிகிரேசன்?

நபர் 2: கக்க.. (திரும்பவும் சிரிக்கிறாராம்) அது பெடரல் கவர்மண்ட் விசயம். வெள்ளையனிண்ட வோட்டை எடுக்கவாக்கும்.

நபர் 1: நானும் ரொப் போட்டுக்குத்தான் போடப்போறன்.

கனேடிய தமிழ் ஊடகங்களின் இப்படியான பொறுப்பற்ற செயற்பாடுகள் இங்குள்ள அனைத்து தமிழருக்குமே கெட்ட பெயரை களங்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வானொலி நேயர்கள் இது சம்பந்தமாக உங்கள் எதிர்ப்பை இந்த வானொலிக்கு தெரிவியுங்கள்.

இதுவரை கீழ்வரும் கனேடிய ஊடகங்களில் குறிப்பிட்ட வானொலியின் விளம்பரத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவிடப்பட்டுள்ளன:

http://news.google.ca/news/search?pz=1&cf=all&ned=ca&hl=en&q=Tamil+radio&cf=all&scoring=n

இவர்களின் யூரியூப் விளம்பரம்:

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு சொல்ல வேணும் போல இருக்கு

இங்கை மைக்கை பிடிச்சவை எல்லாம் அறிவிப்பாளர்

தமிழிலை எழுத தெரிந்தால் தயாரிப்பாளன்

சிரிச்சால் அவன் நகைச்சுவை நடிகன்

காசிருந்தால் அவன் ரேடியோகாரன்

கோல் பண்ணுரவன் எல்லாம் Fஆன்ஸ்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையம்

ஆட்களில்லா ஊர்களுக்கு அரைகுறை தான் நிறைகுடமாம்

உந்த விளம்பரத்தின் தாக்கம் என்ன என்று புரியிற அறிவு அவைக்கு இருந்திருக்காது , அதுமட்டுமல்ல இனியும் புரியாது , கடைசிவரைக்கும் மன்னிப்பு கேட்க மாட்டினம் பாருங்கோ

இங்கையும் ஒருத்தன் வெள்ளிக்கிழமைகளில் குடிச்சுப்போட்டு கத்துறான் ஆனால் அது தான் ரொம்ப கிட்டு

நெங்சு பொறுக்கிதில்லையே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு சொல்ல வேணும் போல இருக்கு

இங்கை மைக்கை பிடிச்சவை எல்லாம் அறிவிப்பாளர்

தமிழிலை எழுத தெரிந்தால் தயாரிப்பாளன்

சிரிச்சால் அவன் நகைச்சுவை நடிகன்

காசிருந்தால் அவன் ரேடியோகாரன்

கோல் பண்ணுரவன் எல்லாம் Fஆன்ஸ்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையம்

ஆட்களில்லா ஊர்களுக்கு அரைகுறை தான் நிறைகுடமாம்

உந்த விளம்பரத்தின் தாக்கம் என்ன என்று புரியிற அறிவு அவைக்கு இருந்திருக்காது , அதுமட்டுமல்ல இனியும் புரியாது , கடைசிவரைக்கும் மன்னிப்பு கேட்க மாட்டினம் பாருங்கோ

இங்கையும் ஒருத்தன் வெள்ளிக்கிழமைகளில் குடிச்சுப்போட்டு கத்துறான் ஆனால் அது தான் ரொம்ப கிட்டு

நெங்சு பொறுக்கிதில்லையே.....

Link to comment
Share on other sites

எங்கள் எல்லோருக்கும்(???) அங்கு சிங்களவன் செய்யும் அழிவுகளுக்கும், இங்கு ஒட்டு/ஓணான்கள் செய்யும் காட்டிக்கொடுப்புகளுக்கும் கோவம் வரவில்லை, ஓரினச்சேர்க்கை பற்றி கதைத்தவுடன் .... வருகிறது!!!

Link to comment
Share on other sites

எங்கள் எல்லோருக்கும்(???) அங்கு சிங்களவன் செய்யும் அழிவுகளுக்கும், இங்கு ஒட்டு/ஓணான்கள் செய்யும் காட்டிக்கொடுப்புகளுக்கும் கோவம் வரவில்லை, ஓரினச்சேர்க்கை பற்றி கதைத்தவுடன் .... வருகிறது!!!

நடு நிலையோடை பாத்தால் தமிழன் எதையுமே கதைக்க கூடாது செய்யக்கூடாது... ஆனால் மற்றவை க்கு அந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை... தாராளமாய் எதை வேணும் எண்டாலும் செய்யலாம்...

தமிழன் எண்டால் ஒரு இழிகுலம்... அப்படி ஒரு தாள்வு மனப்பான்மை...

எனக்கு விளங்காத கேள்வி என்ன எண்டால் ரொப் போட்(Ford) தமிழரோ....?? இல்லை எண்டு தான் நான் நினைக்கிறன்... கீழை இருக்கும் செய்தி அப்படித்தான் சொல்லுது...

http://www.theglobeandmail.com/news/national/toronto/city-votes/city-votes-news/federal-political-parties-take-notes-on-rob-fords-strategy/article1774197/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்காத கேள்வி என்ன எண்டால் ரொப் போட்(Ford) தமிழரோ....?? இல்லை எண்டு தான் நான் நினைக்கிறன்... கீழை இருக்கும் செய்தி அப்படித்தான் சொல்லுது...

Rob Ford வலதுசாரி பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர். ஜோர்ஜ் ஸ்மிதெர்மன் தமிழர்கள் வழமையாக வாக்குப்போடும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர், எனினும் அவர் ஒருபால் உறவுக்காரர் என்பதால் தமிழர்களின் வாக்கை Rob Ford க்கு திசை திருப்பும் விளம்பரமே இது. மேலாதிக்க சிந்தனையுள்ள தமிழர்கள் உண்மையிலேயே பழமைவாதக் கட்சியின் கொள்கைகளோடுதான் ஒத்துப் போவார்கள், எனினும் குடியேறிய சிறுபான்மையினமாக உள்ளதால் வலதுசாரி பழமைவாதக் கட்சியினர் தேர்தல் நேரங்களைத் தவிரப் மற்றைய காலங்களில் தமிழர்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பது முரண்நகை.

Link to comment
Share on other sites

Rob Ford வலதுசாரி பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர். ஜோர்ஜ் ஸ்மிதெர்மன் தமிழர்கள் வழமையாக வாக்குப்போடும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர், எனினும் அவர் ஒருபால் உறவுக்காரர் என்பதால் தமிழர்களின் வாக்கை Rob Ford க்கு திசை திருப்பும் விளம்பரமே இது. மேலாதிக்க சிந்தனையுள்ள தமிழர்கள் உண்மையிலேயே பழமைவாதக் கட்சியின் கொள்கைகளோடுதான் ஒத்துப் போவார்கள், எனினும் குடியேறிய சிறுபான்மையினமாக உள்ளதால் வலதுசாரி பழமைவாதக் கட்சியினர் தேர்தல் நேரங்களைத் தவிரப் மற்றைய காலங்களில் தமிழர்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பது முரண்நகை.

அது அனேகமாக கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு விளம்பரமாக இருக்க வேண்டும்... அதை வைத்துக்கொண்டு அந்த வானொலி மீது மேலாதிக்கம் செலுத்த நிற்பது அவர்களின் சுதந்திரம் சம்பந்த பட்டது... இதில் ஒட்டு மொத்த தமிழினத்தையும் கேவலப்படுத்த நினைப்பது அதிலும் கேவலமானது...

தமிழன் சுதந்திரமான தனது வியாபாரத்தை கூட பார்க்க கூடாது என்பதும் அதை கேவலப்படுத்தி இனகுணமாக காட்டி அடக்க நினைப்பதை நீங்கள் மேலாதிக்க சிந்தனை எண்டு ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா...?? அதாவது எல்லாத்தையுமே தங்கட சிந்தனைக்குள் கொண்டு வாறதுக்கு பெயர் சமதர்மம் கிடையாது...

வறுமையானவர்கள் யாருமே இருக்கக்கூடாது இது தான் சம தர்மம்.... அதுக்காக வசதியானவர்களும் இருக்க கூடாது என்பது அல்ல... அதே போலதான் சுதந்திரமும்...

Link to comment
Share on other sites

ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும் வலதுசாரி வெள்ளைக்காரர்கள் சொன்னால் நியாயம். அதையே தமிழர்கள் சொன்னால் (ஓடி வந்தார்கள் என்கிற காரணத்தினால்) அநியாயமா? :) கனடாவின் அரசியல் அமைப்பிலேயே கருத்துச் சுதந்திரம் சேர்க்கப்பட்டுள்ளதே..! அந்த உரிமையை நாமே மறுக்கிறோம்? :)

Link to comment
Share on other sites

இங்கு கனேடிய திருநாட்டின் பல்லின மக்களுடன், கலாச்சாரத்துடன் ஒன்றாகச் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்றால் ஊருக்கு நடையைக்கட்ட வேண்டியதுதானே? வெவ்வேறு தளங்களில் பின்னூட்டல்களை கூறுபவர்கள் "இவர்கள் தமிழர்கள் தம்மை புறக்கணிப்பு செய்வதாக கூறி அழுகின்றார்கள்.. ஆனால்..

ம்ம்ம்ம்... நாங்கள் ... கருத்துச்சுதந்திரம், நடுநிலைமை ... எல்லாம் கதைப்போம்! அது புலியை பேசவும், தமிழனுக்கு உரிமை கேட்டால் எதிர்த்து கதைக்கவும், ஊடகங்களில் தமிழர்களுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறல்களை, நியாயப்படுத்தவும், எல்லாவற்ருக்கு மேலாக தமிழனை தமிழனே கேவலமாக்கவே இவைகள்!!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் புரியமாட்டேன் என்கிறது

கரும்பு அவர்கள் நல்லதொரு கருத்தாளர்

அவர் நிடுநிலைமையானவர்.

அவர் இங்கு எதை இணைத்தாலும் அது நடுநிலையாகத்தான் இருக்கும்

நீங்கள் எதிர்க்கருத்தை வைத்தால்

இதிலும் உமக்கு சேட்டையே என்று பணிய வைக்கப்பார்ப்பார். இது அவரது ஆயுதம்தூக்காத, நடுநிலையாக எதிர்வாதமில்லாத, எல்லோரையும் அரவணைத்துப்போகும், மற்றவரது கருத்துக்களை மதிக்கும், தனிமனித சுதந்திரத்தை மதிக்கும், இருப்பவர்களை புண்பட வைத்து, இருக்கும்போது என்ன செய்தார்கள் என்று பாராதுமரித்தவர்களுக்கு தனியே நின்று அஞ்சலி, கவிதை, கட்டுரை, ................ என்று பல்லக்கு தூக்கும் அவரது மிகவும் பெரும் மனம் படைத்த குணாதிசய, குணசீல, குணக்குன்றாகிய,,,,, ..............இளகிய நெஞ்சாகும்.

Link to comment
Share on other sites

ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும் வலதுசாரி வெள்ளைக்காரர்கள் சொன்னால் நியாயம். அதையே தமிழர்கள் சொன்னால் (ஓடி வந்தார்கள் என்கிற காரணத்தினால்) அநியாயமா? :) கனடாவின் அரசியல் அமைப்பிலேயே கருத்துச் சுதந்திரம் சேர்க்கப்பட்டுள்ளதே..! அந்த உரிமையை நாமே மறுக்கிறோம்? :)

ஒருபால் திருமணம் கனடாவில் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றது. ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு ஒவ்வொரு கனேடிய குடிமகனுக்கும் உள்ள உரிமைகள் உள்ளன. நீங்கள் கூறுவதை பார்த்தால்… “இவன் ஓர் தமிழன் எனவே இவனுக்கு வாக்களிக்காதே” என தேர்தல் விளம்பரங்கள் கனடாவின் செய்தி ஊடகங்களில் காண்பிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம் என கூறுவது போல் உள்ளது. சட்டத்திற்கு அப்பால் morality என ஒன்று உள்ளது. ஓர் ஊடகத்திற்கு இது பிரதானமானது. Ethicsஇற்கு அப்பால்பட்டு இப்படியான விளம்பரத்தை பணத்திற்காக ஒலிபரப்பு செய்ததை கருத்துச்சுதந்திரம் எனும் பிரிவில் வைத்து ஆலாத்தி காட்டமுடியாது.

நெல்லையன், விசுகு உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது உங்கள் பிரச்சனைகள் வேறு என தெரிகின்றன. உங்களுக்கு தற்போது முதுகு சொறிவதற்கு எனக்கு நேரமில்லை. மன்னிக்கவும்.

எனினும் குடியேறிய சிறுபான்மையினமாக உள்ளதால் வலதுசாரி பழமைவாதக் கட்சியினர் தேர்தல் நேரங்களைத் தவிரப் மற்றைய காலங்களில் தமிழர்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பது முரண்நகை.

ஓரினச்சேர்க்கையாளர்கள் என இவர்களினால் கிண்டல் செய்யப்படுபவர்கள் இங்குள்ள தமிழ் மக்களிற்கு செய்த உதவிகளை இங்குள்ள தமிழன்கூட சகதமிழனுக்கு செய்து இருக்கமாட்டான்.

Link to comment
Share on other sites

முரளி,

உங்கள் பார்வை இந்த விடயத்தில் கொஞ்சம் தவறானது என்று கருதுகின்றேன். ஒரு வானொலியை வைத்து கனடா தமிழ் மக்கள் அரசியல், கலாசார முறைகளில் இருக்கும் மாற்றங்களை உள்வாங்க மறுக்கின்றார்கள், எனவே ஓடவேண்டும் என்பது தவறானது. ஆரம்ப காலங்களில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பெரிய சவால் தமக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கலாசார சூழ் நிலைக்கு முகம் கொடுத்ததே ஆகும். ஆனால் ஒரு தலைமுறையே இங்கு வந்து வாழ்ந்து முடிவடைந்து கொண்டு, அடுத்த தலை முறையும் வளர்ந்து, தாமும் அப்படிப் பட்ட கலாசார மாற்றத்துக்குள்ளாகி வரும் சூழலில் இந்த வாதம் சரியானது அல்ல. இன்றைய தலை முறையில் சகல கலாசார சூழ் நிலைகளையும் ஏற்றுக் கொண்டு, தம்மை அவற்றுக்கு ஏற்ப மாற்றி கொண்டு வரும் தமிழ் மக்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். முக்கியமாக இளம் தலை முறையில் இவ்வாறு மற்றவர்களின் விருப்புகளுக்கு எதிராக தம் திணிப்புகளை மேற்கொள்ளும் அடிப்படைவாத குணம் அருகி வருகின்றது. அவற்றையும் கொஞ்சம் அவதானியுங்கள்

இசைகலைஞன்,

வலது சாரிகள் சொல்வதால் அந்த வானொலியும் சொல்வது சரி என்கின்றீர்களா? இந்த வானொலி விளம்பரம் மிக அருவருக்கத்தக்க ஒன்று. ஒருவரின் அரசியல் நிலையை பற்றி கருத்தில் கொள்ளாமல் அவரின் தனிப்பட்ட வாழ்வின் பாலியல் தெரிவை அசிங்கப் படுத்துவது தவறென படவில்லையா?

Link to comment
Share on other sites

1. நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் :

அகதிகளாக இல்லை குடும்ப இணைப்பு மூலமே அதிகளவில் தமிழர் புலம்பெயர்ந்தனர். எம்மை நாமே "நிர்வாணமாகவே" வந்தோம் என்பது எம்மை நாமே இழிவு செய்வதாக தெரிகிறது.

2. ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்:

இதை கதைப்பதிலோ இல்லை விவாதிப்பதிலோ பிழை இல்லை. இது கருத்து சுதந்திரம்.

3. இதில் என்ன சிக்கல் என்றால், இந்த வானொலி இதை ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாக சொல்லியுள்ளது. ஆனால் அதை உறுதிப்படுத்த தவறிவிட்டது.

4. இதனால் இந்த வானொலிக்கு பிரச்சனை. தமிழ் மக்களுக்கு அல்ல. இப்படி இங்கு நாளாந்தம் பல வானொலிகள் சிக்கலுக்கு உள்ளாகின்றன. இதனால் இதன் நேயர்களை கோவிக்கமுடியுமா??

5. இந்த "morality" , "ethics" - எல்லாம் இந்த கட்டணம் செலுத்தியவர் தான் அதற்கு மறுமொழி சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

இப்படி படங்களுடன் அவரே கனேடியன் மீடியாவில் தோன்றுகிறார். இது தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்பட்டால் மட்டும் எப்படி பிழையாகும்?? அத்தோடு அவரை பல ஊடகங்கள் ஓரின சேர்க்கையாளர் என கூறுகிறார்கள்.ஏன் தமிழ் வானொலி கூறக்கூடாது??

me-george.jpg

http://gayguidetoronto.com/the-middle-edge/the-candidate-and-the-icon/#more-8428

http://www.torontolife.com/features/george-smitherman-vs-himself/

Link to comment
Share on other sites

அவர் ஓரினச்சேர்க்கை செய்தால் என்ன? ஈரினச்சேர்க்கை செய்தால் என்ன? அரசியல்வாதிகளை பாவித்து எங்கள் இனத்திற்கு ஏதும் பிரயோசனமானதை செய்ய முயற்சிக்க வேண்டும். அதை விட்டுட்டு எதிரிகளைக் கூட்டுவது இன்னும் இன்னும் பின்னடைவையே கொண்டு வரும்.

Link to comment
Share on other sites

அட .... இது ஒரு வானொலியின் கருத்து ... அதுவுமல்ல ... அதில் ஒலிபரப்பப்பட்ட விளம்பரம் ... கட்டணம் செலுத்தியது என்கிறார்கள்!?!? ... அதற்கேனப்பா ... உன் அம்மாவும், அப்பாவும், சகோதர/சகோதரிகளும் அம்மணமாக ஓடியதை இங்கிழுக்கிறீர்?????????? ... வானொலியை கண்டியும், அது சரியோ? பிழையோ? வேறு விடயம்!!!

கரும்பு, நான் முன்னமே வேறொன்றில் எழுதினேன் .... நீர் மல்லாந்து படுத்துக் கிடந்து துப்பும் கூட்டத்தை சேர்ந்தவரென்று!! .. கடந்த சில நாட்களாக அதனை நிரூபிக்கிறீர்!! ..

உவை ஒருபுறம் கிடக்க ... நீர் உம்முடையதை முதலில் சொறியும், பின் என் முதுகுக்கு வாரும், அதுவும் உம்மை வடிவாக கழுவிய பின் வாரும், விடலாமா? இல்லையா? என்பதனை பின் சொல்கிறேன்!

Link to comment
Share on other sites

இந்த "morality" , "ethics" - எல்லாம் இந்த கட்டணம் செலுத்தியவர் தான் அதற்கு மறுமொழி சொல்ல வேண்டும்.

கட்டணம் செலுத்தினால் எப்படியான விளம்பரத்தையும் ஊடகங்கள் பிரசுரம் செய்ய முடியுமா? ஊடகங்களினால் விளம்பரங்கள் மீள்பார்வை செய்யப்படவேண்டியது இல்லையா?

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை வாய்க்கு வந்தவாறு வெள்ளையர்/சிங்களவர் தூசணவார்த்தைகளில் திட்டி பத்திரிகைகளில் பிரசுரிக்கிறார்கள்.அதற்கு ஒரு "morality" , "ethics" இல்லையா? ஆக இந்த விளம்பரத்துக்கு தான் "morality" , "ethics" தேவையா?

Link to comment
Share on other sites

1. நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் :

அகதிகளாக இல்லை குடும்ப இணைப்பு மூலமே அதிகளவில் தமிழர் புலம்பெயர்ந்தனர். எம்மை நாமே "நிர்வாணமாகவே" வந்தோம் என்பது எம்மை நாமே இழிவு செய்வதாக தெரிகிறது.

உங்கள் பகுத்தாராய்வை பாராட்டுகின்றேன். ஆனால், இங்கு நான் நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் என குறிப்பிட்ட விளம்பரத்துடன்

சம்பந்தப்பட்டவர்களையே மேற்கோள் காட்டுகின்றேன். எனவேதான் இங்கு அவர்களின் உரையாடலும் - ஸ்கிர்ப்ட் - இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இங்கு முரளி கருத்தை வைத்த விதத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அந்த விளம்பரம் கருத்து சுதந்திரம் என்ற வகைக்குள் அடக்க முடியாதது, மிக அருவருக்கத்தக்க ஒன்று.

எம்முடன், குறைந்தது எம்மக்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளையும் அவர்கள் சார்ந்த கட்சிகளையும் சிறிது சிறிதாக எம்மிடம் இருந்து விலக்கிவிடும்.

ஒரு எடுகோளுக்கு எதிர்காலத்தில் தமிழார் ஒருவர் மேயருக்கு/ நகரசபை உறுப்பினருக்கு/பாராளுமன்றத்துக் போட்டிஇடுகிறார் என வைப்போம்.

கீழ் உள்ள மாதிரி ஒரு விளம்பரம் ஒரு ஆங்கில FM வானொலியில் வருகிறது.

நபர் 1: .......... எலக்சனில யாருக்கு உங்கட ஓட்டுக்கள்?

நபர் 2: கக்க.. (சிரிக்கிறாராம்) என்ன கேள்வி? நாங்கள் கனடாவை கட்டி எழுப்பிய இனத்தவன், நாங்கள் நாட்டை கட்டி வளத்தபிறகு கப்பலிலை களவாய் வந்து எங்கடை நட்டு சட்டதிட்டங்களை துஸ்பிரயோகம் செய்து குடியேறின போன்னையக்கு வாக்களிக்க மட்டன். ....... க்கு தான் எனது வாக்கு. அதுமட்டுமல்ல ............ கப்பலிலை வந்து பின கதவலை குடியேற போற ஆக்களுக்கு எதிர கடுமையான சட்டம் கொண்டுவருவாரம், கப்பலை கடலிலை வச்சு திருப்பி அனுப்ப அரசை வலியுறுத்துவரம்.

நபர் 1: நானும் .......... போட்டுக்குத்தான் போடப்போறன்.

இது கருத்து சுதந்திரமோ?

இந்த இணைப்புகளில் கனடாவின் பிரதான செய்தி ஊடகங்களில் தமிழ் வானொலி விளம்பரம் பற்றி வந்த செய்திகள்.

http://www.thestar.com/article/880343

http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20101024/nasty-signs-101024/20101024/?hub=TorontoNewHome

http://www.torontosun.com/news/torontovotes2010/2010/10/24/15812921.html

http://www.680news.com/toronto-election/article/119263--homophobic-advertisements-target-smitherman

http://www.680news.com/toronto-election/article/119263--homophobic-advertisements-target-smitherman

http://news.nationalpost.com/2010/10/25/tamil-radio-station-airs-smitherman-smear-ads/

கனடாவின் அனைத்து பிரதான செய்தி ஊடகங்களும் தமிழ் வானொலி எண்டு நல்ல தெளிவாய் சொல்லி எழுதி உள்ளன. இப்படி தமிழர்கள் பற்றி எதிர்மறையான செய்திகள் தமிழ் மக்கள் பற்றிய ஒரு எதிர்மறையான மனபதிவையே வேற்றின மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விரும்பும் தமிழர்களுக்கு வேற்றின மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணக்கருக்கள் உருவாவது உதவிகரமாக இருக்காது.

Link to comment
Share on other sites

உங்கள் பகுத்தாராய்வை பாராட்டுகின்றேன். ஆனால், இங்கு நான் நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் என குறிப்பிட்ட விளம்பரத்துடன் சம்பந்தப்பட்டவர்களையே மேற்கோள் காட்டுகின்றேன். எனவேதான் இங்கு அவர்களின் உரையாடலும் - ஸ்கிர்ப்ட் - இணைக்கப்பட்டுள்ளது.

-- மேற்கோளுக்கு கொஞ்சம் இதைவிட நாகரீகமாக ஒரு தலைப்பை போட்டிருக்கலாம்.

-- ஆனால் ( ஸ்கிர்ப்ட்) இது ஏற்கனவே இணைக்கப்பட்டது. இந்த திரியில் உங்கள் கருத்தை வைத்திருக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76811&view=findpost&p=617122

Link to comment
Share on other sites

கட்டணம் செலுத்தினால் எப்படியான விளம்பரத்தையும் ஊடகங்கள் பிரசுரம் செய்ய முடியுமா? ஊடகங்களினால் விளம்பரங்கள் மீள்பார்வை செய்யப்படவேண்டியது இல்லையா?

- கட்டணம் செலுத்தினால் எப்படியான விளம்பரத்தையும் ஊடகங்கள் பிரசுரம் செய்ய முடியுமா?

கனேடிய சட்டப்படி "ஆம்". விளம்பரதாரர் தான் பொறுப்பு.

- ஊடகங்களினால் விளம்பரங்கள் மீள்பார்வை செய்யப்படவேண்டியது இல்லையா?

சிக்கலே இங்குதான். இதற்கு கட்டணம் செலுத்தியதாக வானொலியால் சொல்லுப்படுவது ஒரு மத சார் அமைப்பு. இதை தந்தவர்களிடம் தாம் மீள்பார்வை செய்ததாக வானொலி சொல்கிறது.

ஆனால் மத சார் அமைப்பு தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறது.

கனேடிய சட்டப்படி இது ஒரு " வெறுப்பு குற்றம்" (Hate crime). இதன் உண்மையை அறிய வேண்டியது காவல்துறை.

Link to comment
Share on other sites

இப்படி படங்களுடன் அவரே கனேடியன் மீடியாவில் தோன்றுகிறார். இது தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்பட்டால் மட்டும் எப்படி பிழையாகும்?? அத்தோடு அவரை பல ஊடகங்கள் ஓரின சேர்க்கையாளர் என கூறுகிறார்கள்.ஏன் தமிழ் வானொலி கூறக்கூடாது??

me-george.jpg

http://gayguidetoronto.com/the-middle-edge/the-candidate-and-the-icon/#more-8428

http://www.torontolife.com/features/george-smitherman-vs-himself/

அவர் வெளிப்படையான ஒரினச்சேர்கையாளர். அவருக்கு கணவர் இருக்கிறார். அவர் மறைக்கவும் இல்லை. அவரை 1999ம் ஆண்டு முதல் ஒன்ராரியோ சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுத்த மக்களிற்கும் தெரியும், துணை முதல்வராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் தெரிவு செய்த ஒன்ராரியோ மாநில முதல்வருக்கும் தெரியும். கனேடிய சட்டப்படி ஒரினச்சேர்க்கையாளருக்கும் மற்றவர்களிற்கும் இருக்கும் உள்ள அனைத்து உரிமையும் இருக்கிறது. அதனை கனேடிய சமூகமும் ஏற்றுக்கொள்கிறது. அதனை நீங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரவில்லைப் போலும்.

ஜோர்ஜ் ஸ்மித்தர்மனை கே என்று வானொலியில் சொல்லியதற்காக யாரும் குறித்த வானொலியை குறை கூறவில்லை. ஆனால் அவர் கே என்பதற்காக வாகக்களிக்கக் கூடாது என்று கூறும் விளம்பரத்தை ஒளிபரப்பியமைதான் பிரச்சினை. இப்படியான ஒரு நாகரிகமற்ற விளம்பரம் வேறெந்த மொழி ஊடகங்களில் வெளியிடப்படவுமில்லை. ஏன் ஸ்மித்தர்மனை எதிர்த்துப் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரது பாலுறவைப் பற்றி எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவுமில்லை. காரணம் அவர் போட்டியிட்டது ரொறன்ரோ மநாகரசபைத் தேர்தலில். ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தவல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மாரே

எனக்கு ஒரு சந்தேகம்

வரது பழக்கங்கள் என்னவாவது இருக்கட்டும்

அவர் எந்த நாட்டின் தலைவராகவும் அந்த நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் இருக்கட்டும்

இங்கு பேசப்பட்டது தமிழ்வானொலியில் ( என்னுடைய கணிப்பு சரியாயின்)

பேசியவர்கள் தமிழர்கள்

அவர்கள் தமக்கு சரி என்பதையும்பிழை என்பதனையும் வாதிடும் உரிமை உண்டு

நடுநிலை சமதர்மம் பேச்சு சுதந்திரம் எந்த வகையிலாவது வைத்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் பேசியதற்கும்

ஒரு இனம் அல்லல்பட்டு உடுத்த உடுப்புமில்லாமல் ஓடி வந்ததுக்கும்

அம்மணமாக வந்தவர்கள் எப்படி கதைக்கமுடியும் என்பதுதான் எனக்கு புரியவில்லை.

இதை அந்த நாட்டுக்காறன் சொன்னாலும் பரவாயில்லை

அதே இனத்தை சேர்ந்த அதேமாதிரி ஓடிவந்த ஒருவர் சொல்வதுதூன் புரியவில்லை.

Link to comment
Share on other sites

-- மேற்கோளுக்கு கொஞ்சம் இதைவிட நாகரீகமாக ஒரு தலைப்பை போட்டிருக்கலாம்.

-- ஆனால் ( ஸ்கிர்ப்ட்) இது ஏற்கனவே இணைக்கப்பட்டது. இந்த திரியில் உங்கள் கருத்தை வைத்திருக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76811&view=findpost&p=617122

விளம்பரத்தில் நல்ல நாகரிகமாகத்தானே கருத்து வைத்து உள்ளார்கள், எனவேதான் நானும் அவர்கள் பாணியில் நாகரிகமாக அவர்கள் விளம்பரம் சம்பந்தமாக கருத்து கூறினேன். நீங்கள் ஆரம்பித்த குறிப்பிட்ட திரியில் ஏற்கனவே கருத்து வைத்துள்ளேன். ஆனால் மீண்டும் இந்த விளம்பர விடயத்தை கிளறி எடுக்கவேண்டியதன் காரணம் சீபீசி நசனல் போஸ்ட் குலோப் அன் மெயில் சீரீவி டொரோண்டோ ஸ்ரார் என மிகவும் பரவலாக ஏராளம் கனேடிய ஊடகங்களில் தமிழ் வானொலி தமிழ் வானொலி என்று சாடி, மேற்கோள் காட்டி செய்திகளும், கருத்துக்களும் கூறப்பட்டு உள்ளதுதான். குடும்பவியல், சமூகவியல் சம்பந்தந்தப்பட்ட ஓர் மருத்துவர் கூறினார் அசிங்கம் வெளியில் இல்லை, எங்கள் உள்ளேதான் உள்ளது என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.