Jump to content

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்


Recommended Posts

... ஒரு ஊடகம் தவறு விடுகிறது, சரி, அது எவ்வாறு அந்த ஊடகம் சார்ந்த இனத்தை பாதிக்கப்பண்ணப்போகின்றது????? அறிவுசாரார் எல்லோரும் எழுதிக்கிழிக்கிறார்கள் ... புரியுதில்லை!!!!!

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு எதிராக ஒலி/ஒளிபரப்பப்பட்ட விமர்சனங்கள்/விளம்பரங்கள் போன்றவற்றை இந்த அழும் கூட்டங்கள் கவணிக்கவில்லைப்போல???? இந்த ஊத்தை அரசியல் மேற்குலகில் சகஜம்!

அதற்கு போய் அம்மணமாக வந்தவர்கள் நாம் ஒண்ணும் கதைக்க கூடாதென்பவர்களும் ...

மீண்டும் சாதியாசாக்கடைகளையும், பிரதேசவாதத்தை தூண்டும் ... குப்பைகளையும் தோண்டி எடுத்து நாற்டித்து கொண்டிருக்கும் ஊடகங்களை நோக்கி ... ஒரு இனத்தின் ஊடகங்களே அந்த இனத்தை பிரதிபலிக்கின்ற கண்ணாடிகள் என்பதை ஊடகங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ... என்று கூற முடியாத அறிவுசார் எழுத்தாளர்கள் எல்லாம் ....

... புகுந்து விளையாடுகிறார்கள்!!!! :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிவனும் விஸ்ணுவும் உறவு கொண்டு ஐயப்பனைப் பெற்றார்களாம். நாரதரும் விஸ்ணுவும் உறவு கொண்டு அறுபது குழுந்தைகளை பெற்றெடுத்தார்களாம். எத்தனையோ கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஓரினச் சேர்க்கையை சொல்லி நிற்கின்றன.

இவற்றை சொல்லுறவனை.. நம்பிறவனை விட.. இவற்றை வைத்து விவாதம் செய்யும் அளவிற்கு அவற்றோடு மிணக்கடுறவன் தான் உண்மையான முட்டாள். :D:lol:

Link to comment
Share on other sites

இது அப்பட்டமான Exaggeration ... ஓரின செயர்க்கை கனடாவில் சட்டத்தின் முன் அங்கீகரிக்க பட்டாலும் எல்லாராலும் ஆதரிக்க ப்படும் செயல் எண்றா சொல்ல வருகிறீர்கள்... அப்படி ஒரு தமிழன் சொன்னால் ஒட்டு மொத்த தமிழனும் சொல்வதாக எடுத்துக்கொள்ள கனடாக்காறன் முட்டாளா இல்லை தமிழன் என்ன ரஜனிகாந்தா...?? :lol:

ஐரோப்பாவில், ஒரு சில இஸ்லாமிய வெறியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு முஸ்லீம் சமுதாயத்தையே கூண்டில் ஏற்றி மதத்தலைவர்களிடம் இருந்து மன்னிப்பு வாங்குவதில்லையா அதுமாதிரிச்செய்கிறார்களாக்கும்..

பிகு.. ஒரு பானும் சம்பல் ரேடியோ நடத்துறவைக்கு, காசை குடுத்தா எதையும் ஒலி பரப்புவார்கள்தானே... கனக்கெடுக்காமா வாழப்பழகுங்கப்பா.. மன்னிப்பும் மட்டையும்.. ஒழுக்கமா தூய்மையா வாழ்ந்து என்னத்தை கண்டோம்...

Link to comment
Share on other sites

TBC , TRT DAN எண்டு மிகக்கேவலமாக விடயங்கலை விவாதித்து எல்லாம் வானொலிகள் நடத்தினவை இப்பவும் நடத்துகினம்... இப்பவும் பல இணையங்கள் நடத்துகிறார்கள் அப்ப எல்லாம் அது அவர்களின் கருத்துரிமை எண்டவை இப்ப ஒரு வானொலிக்கு எதிராக கிளர்ந்து எழும்பினதுதான் ஆச்சரியம்... :lol:

Link to comment
Share on other sites

சபேசன், உங்கள் கருத்திற்கு நன்றி. அடிப்படையில் பார்த்தால்... நம்மவருக்கு உதவி தேவைப்படும்போது, ஆதரவு தேவைப்படும்போது. அப்படியான நிலையில் உதவிகள் கிடைக்கும்போது இவர்கள் கண்களிற்கு தன்னினசேர்க்கையாளர்கள் என்ன பிறஇனச்சேர்க்கையாளர்கள் என்ன.. ஒரு பாகுபாடும் தெரியாது.. எல்லோரும் கடவுள் போல் தென்படுவார்கள். ஆனால்.. தாங்கள் மற்றவனுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும்போது மட்டும் சாதி, இனம், மதம், பாலியல் பழக்க வழக்கங்கள், பணம், பதவி, கல்வி பின்னணி, சமயம், சந்தர்ப்பம் இவைகள் பற்றி ஆராய்வார்கள், மட்டமும் தட்டுவார்கள்.

ஓரினச் சேர்க்கை, சமயம் மற்றும் கலாச்சாரம்

அரசியல் கட்டுரை ஒன்றை எழுதுகின்ற திட்டத்தில் இருந்தேன். ஆனால் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் என்னை இதை எழுத வைத்து விட்டது.

அண்மையில் அங்கே நடந்த நகராட்சித் தேர்தலை ஒட்டி ஒரு அருவருக்கத்தக்க விளம்பரத்தை அந்த வானொலி ஒலிபரப்பியது. ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் தமிழர்கள் சிலர் கட்டணம் செலுத்தி அந்த விளம்பரத்தை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்கள்.

பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டிய அந்த தமிழ் வானொலி பொறுப்பற்றத்தனமாகவும் அறிவுகெட்டத்தனமாகவும் நடந்து அந்த விளம்பரத்தை ஒலிபரப்பியது.

இருவர் பேசுவது மாதிரி உருவாக்கப்பட்டிருந்த விளம்பரம் இதுதான். ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்கிறார், “மேயர் எலக்ஸனில் உங்களுடைய ஓட்டு யாருக்கு?”. அதற்கு மற்றவர் சொல்கிற பதில் இதுதான், “என்ன கேள்வி, நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் இருக்கிறது, ரோப் பேட்டை பாருங்கள், அவருடைய மனைவி ஒரு பெண்…” இப்படிப் போகிறது அவருடைய பதில். ரோப் பேட் என்பவருக்குத்தான் தன்னுடைய வாக்கு என்று விளம்பரம் முடிகிறது.

அதாவது அவர் ஒரு தமிழராம். அவரிடம் சமயம் கலாச்சாரம் எல்லாம் இருக்கிறதாம். அதனால் ஒரு ஆணுடன் வாழ்கின்ற ஜோர்ஜ் ஸ்மிர்தமன்னுக்கு வாக்கைப் போடாமல் ஒரு பெண்ணுடன் வாழ்கின்ற ரோப் பேட்டுக்கு வாக்கு போடப் போகிறாராம்.

இப்படி ஒரு அருவருப்பானதும் முட்டாள்தனமானதுமான விளம்பரத்தை இந்த வானொலி ஒலிபரப்பியது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு செயல் இது.

இது விளம்பரதாரரும் வானொலியும் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சொல்லி யாரும் தப்பிக் கொள்ள முடியாது. இந்த விளம்பரம் புலம்பெயர் தமிழர்களைப் பற்றி சில செய்திகளை சொல்கிறது.



  • மேயர் தேர்தலில் வேட்பாளர் தன்பால் மீது நாட்டம் கொண்டவரா அல்லது எதிர்பால் மீது நாட்டம் கொண்டவாரா என்பதில் தமிழர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்

  • அதை வைத்து வாக்கை போடுகின்ற அளவிற்கு தமிழர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்

  • ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்கின்ற விளம்பரங்களை வெளியிடுவதை அனுமதிக்கின்ற நிலையில் தமிழ் சமூகம் இருக்கிறது

இதில் மூன்றாவது விடயம் முக்கியமானது. தமிழர்களில் யாரோ சிலருக்கு அவர்களின் அறியாமை காரணமாக ஒரு வேட்பாளரின் ஓரினச்சேர்க்கையை வைத்;து கிண்டல் செய்கின்ற எண்ணம் வந்திருந்தால் அதை பெரிதுபடுத்தாது விடலாம். வேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரினச் சேர்க்கை பற்றி சொல்லி புரிய வைக்கலாம்.

ஆனால் அவர்கள் அதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்குகிறார்கள். கனேடியத் தமிழர்களின் முக்கிய வானொலி ஒன்று அதை கட்டணம் பெற்றுக் கொண்டு ஒலிபரப்புச் செய்கிறது. அந்த விளம்பரம் ஓரினச்சேர்க்கையாளர்களை அவமதிக்கிறது என்பது கூட அந்த வானொலியில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை.

விளம்பரத்தை உருவாக்கியவர்களும் வானொலியைச் சேர்ந்தவர்களும்தான் அறிவு கெட்டு நடந்தார்கள் என்றால், வானொலியை கேட்பவர்களுக்கு அறிவு எங்கே போனது? கனேடியத் தமிழர்களிடம் இருந்து இந்த விளம்பரத்திற்கு குறிப்பிடும்படியான எதிர்ப்புகள் வரவில்லை.

காரணம் இந்த விளம்பரத்தின் உள்ளடக்கத்தை ஆதரிப்பவர்களைத்தான் தமிழ் சமூகம் பெரும்பான்மையாக கொண்டிருக்கிறது. அந்தத் துணிவிலேயே இப்படியான விளம்பரத்தை வெளியிட்டு விட்டு எதுவும் நடக்காதது போன்று அந்த வானொலியாலும் இருக்க முடிகிறது.

ஒரு அநீதியை எதிர்க்காதவர்களும் அதற்கு துணை போனவர்களாகவே கருதப்படுவார்கள் என்று சொல்வார்கள். இந்த விளம்பரம் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு குற்றம். இதைக் கண்டித்தே ஆக வேண்டும்.

இங்கே ஓரினச் சேர்க்கை பற்றி சில விடயங்களை சொல்ல வேண்டும். ஓரினச்சேர்க்கை என்பது குற்றமோ, பாவமோ இல்லை. ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையை ஒரு உளவியல் பிரச்சனையாக வரையறுத்த அறிவியல் இன்றைக்கு அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டது.

எப்படி பல ஆண்களுக்கு பெண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில ஆண்களுக்கு ஆண்கள் மீது நாட்டம். எப்படி பல பெண்களுக்கு ஆண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில பெண்களுக்கு பெண்கள் மீது நாட்டம். இதைப் போன்றே இரு பாலிலும் நாட்டம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வலது கையால் எழுதுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக இடது கையால் எழுதுபவர்கள் ஒன்றும் ஊனமானவர்களோ அசாதரணமானவர்களோ இல்லை. அதே போன்று எதிர்பாலின் மீது நாட்டம் கொள்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக தன்பால் மீது நாட்டம் உள்ளவர்களை அசாதரணமானவர்களாவும் குற்றவாளிகளாகவும் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும்.

எனக்கு ஒரு ஆணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக இருக்கிறது. அவனுக்கு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக தெரிகிறது. ஆனால் என்னுடைய விருப்பத்தை அவன் புரிந்து கொள்வது போன்று, அவனுடைய விருப்பத்தை நானும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதை வைத்து அவனை கிண்டல் செய்வதோ, அவனைப் போன்றவர்களை அவமதிப்பதோ மனிதகுலத்திற்கு விரோதமாக அமையும்.

இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகத்தை கிண்டல் செய்து அவமதிக்கின்ற விளம்பரத்தை வெளியிட்ட வானொலி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதே சரியானது. இந்த விளம்பரம் கனடாவின் பல ஊடகங்களில் கண்டனத்தை பெற்று வருகின்றது. இது ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு பாதகமானதாகவே இருக்கும்.

இந்த விளம்பரத்தில் இன்னும் ஒரு அறியாமையும் வெளிப்பட்டு நிற்கிறது. விளம்பரத்தில் ஒரு வசனம். “நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம், கலாச்சாரம் என்று இருக்கிறது”, இப்படி ஒருவர் சொல்கிறார்.

அடே, நீ தமிழனாகவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

இது என்னுடைய மிகப் பணிவான பண்பான கேள்விகள். பணிவும் பண்பும் இல்லையென்றால் இதிலே வேறு சொற்கள் இருந்திருக்கக் கூடும்.

வட இந்தியன் போன்று ஆடைகள் உடுத்தி, ஆரிய விழாக்களை கொண்டாடி, ஆரிய மொழியில் நிகழ்வுகளை செய்கின்ற உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? உடல் உறுப்புகள் எந்தப் பாகத்தில் சேர்கின்றன என்பதற்குள்ளே அடங்கிவிடக்கூடிய ஒன்றா உன்னுடைய கலாச்சாரம்?

அட, கலாச்சாரத்தை விடுங்கள். சமயத்தை கொண்டு வந்தான் பாருங்கள், புல்லரித்து விட்டது.

சமயம் என்ன சொல்கிறது?

தேர்தலிலே போட்டியிட்ட ரெப் பேட்டும் ஜோர்ஜ் ஸ்மிர்தனும் சாந்திருக்கின்ற கிறிஸ்தவ சமயமே ஓரினச் சேர்க்கையை தடை செய்கிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதை பாவம் என்று சொல்கிறது. அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற கன்னியாஸ்திரிகள், பாதிரிமார்கள் இல்லையா என்று இங்கே முட்டாள்தனமாக கேட்க வேண்டாம். இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மதம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற விடயம்.

ஆனால் இந்த விளம்பரத்தை வெளியிட்டவர்கள் பின்பற்றுகின்ற சமயம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் இங்கே முரண்நகையாக நிற்கிறது.

இந்து மதத்தின் வேதங்கள் ஓரினச் சேர்க்கை பற்றி பேசுகின்றன. புராணங்கள் ஆண் கடவுள்கள் உறவு கொண்ட கதைகளை சொல்கின்றன. எங்குமே இந்த ஓரினச் சேர்க்கைய கண்டித்தோ, அதைப் பாவம் என்றோ சொல்லப்படவில்லை.

சிவனும் விஸ்ணுவும் உறவு கொண்டு ஐயப்பனைப் பெற்றார்களாம். நாரதரும் விஸ்ணுவும் உறவு கொண்டு அறுபது குழுந்தைகளை பெற்றெடுத்தார்களாம். எத்தனையோ கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஓரினச் சேர்க்கையை சொல்லி நிற்கின்றன.

சைவ சமயத்திலும் மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாகப் பாவித்து சிவனை தன்னுடைய காதலனாக கற்பனை செய்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றை சிற்றின்பமாக பார்க்காமல் பேரின்பமாக பார்க்கச் சொல்லி சிலர் சமாளித்துக் கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் ஓரினச் சேர்க்கை தமிழ் சமூகத்தில் புரிந்து கொள்ளப்படுகின்ற காலத்தில் மாணிக்கவாசகரின் பாடல்கள் புதிய அர்த்தங்கள் பெற்று நிற்பதை யாராலும் தடுக்க முடியாது போகும்.

இந்து சமயம் ஓரினச் சேர்க்கையை பாவமாகவோ குற்றமாகவோ பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்களே இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் குறிப்பிட்ட விளம்பரம் முட்டாள்தனத்தின் உச்சக் கட்டமாகத்தான் நிற்கிறது. தமிழர்களை முட்டாள்களாகவும் மனிதகுல விரோதிகளாகவும் சித்தரிக்கின்ற விளம்பரங்களை வெளியிடாது கவனித்துக் கொள்கின்ற கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.

ஒரு இனத்தின் ஊடகங்களே அந்த இனத்தை பிரதிபலிக்கின்ற கண்ணாடிகள் என்பதை ஊடகங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சுனாமிக்கு வயோதிபர்களிடம் காசு சேர்த்து பொக்கட்டுக்குள் போட்ட ஆள் இவர்.இவர் ஒரு போதும் தமிழ் இனத்தை பிரதிபலிக்கவில்லை.

சபேசனுக்கு இப்போ கைகடிக்கிறது போல. ஏதாவது எழுதி தொலைக்க வேண்டும் என்று சைக்கிள் காப்பிக்குள்(gap) விளையாடி இருக்கிறார். :lol::D

சுனாமிப் பேரவலம் நடந்தபோது வானொலியில் சிரித்து மகிழ்ந்து காசு சேர்த்தவர் இளைய பாரதி.

சேர்த்த காசிற்கு ஊடகங்கள் வாயிலாக அவர் கணக்குக் காட்டியிருக்கிறார். நான்கு இலட்சம் வரை புனர்வாழ்வுக் கழகத்திற்கு கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டியிருந்தார்கள்.

அனால் நாம்தான் தேசியத்தின் குரல் எண்டு பீற்றிக் கொண்டவர்கள் தாம் சேர்த்த பணத்திற்கு என்ன நடந்தது எண்டதை இதுவரை தெரிவிக்கவில்லை.

Link to comment
Share on other sites

"ரோப் பேட் என்பவருக்குத்தான் தன்னுடைய வாக்கு என்று விளம்பரம் முடிகிறது"

-- இந்த விளம்பரத்துக்கு பின்னால் ரோப் பேட் இல்லை அவரின் ஆதரவாளர்கள் இருந்திருக்கலாம். காரணம் தமிழர்கள் அதிகளவில் வாக்களிப்பதும் அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளருக்கு கூடிய ஆதரவை அளிப்பது வெள்ளிடைமலையாக தெரிந்த்ததும்

-- இந்த விளம்பரத்துக்கு பின்னால் சிறிலங்கா அரசாக கூட இருக்கலாம்.

விளம்பரத்தை உருவாக்கியவர்களும் வானொலியைச் சேர்ந்தவர்களும்தான் அறிவு கெட்டு நடந்தார்கள் என்றால், வானொலியை கேட்பவர்களுக்கு அறிவு எங்கே போனது? கனேடியத் தமிழர்களிடம் இருந்து இந்த விளம்பரத்திற்கு குறிப்பிடும்படியான எதிர்ப்புகள் வரவில்லை.

-- இந்த விளம்பரம் முதலில் ஒலிபரப்பட்பட்டு இரு மணித்தியாலத்தில் நிறுத்தப்பட்டது.

-- பலர் பலவிதமான எதிர்ப்புக்கள் வானொலிக்கும் அதன் இணைப்பாளர்களுக்கும் கனேடிய அரசுக்கும் தெரிவித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

கனடியர்கள் கேட்பதெல்லாம் யார் இந்த விளம்பரத்துக்கு பணம் செலுத்தியவர்கள்? அவர்கள் சேலைக்கு பின்னால் ஒளிப்பதையே அவர்கள் கேவலமாக கருதுகின்றார்கள்.

இதை எவரது தூண்டுதலும் இல்லாமல் தாமாகவே தயாரித்து குறிப்பிட்ட வானொலியே கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் எனும் பெயரில் வானலைகளில் கொண்டுவந்தார்களோ என்னமோ. இவர்களின் மெளனத்திற்கு இப்படியும் ஓர் காரணம் இருக்கலாம். எவராவது கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட விளம்பரத்தை கொடுக்காத சமயத்தில் யாரை பணம் செலுத்தியவர்கள் என்று கூறுவது?

Link to comment
Share on other sites

இதை எவரது தூண்டுதலும் இல்லாமல் தாமாகவே தயாரித்து குறிப்பிட்ட வானொலியே கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் எனும் பெயரில் வானலைகளில் கொண்டுவந்தார்களோ என்னமோ. இவர்களின் மெளனத்திற்கு இப்படியும் ஓர் காரணம் இருக்கலாம். எவராவது கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட விளம்பரத்தை கொடுக்காத சமயத்தில் யாரை பணம் செலுத்தியவர்கள் என்று கூறுவது?

தமக்கு ஒரு தமிழ் கிறிஸ்துவ பாதிரியரே தந்ததாக அவர்கள் ( வானொலி )சொல்லியுள்ளார்கள்.

அதை, தமிழ் கிறிஸ்துவ பாதிரியார், அவர்கள் மறுத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

இந்து மதத்தின் வேதங்கள் ஓரினச் சேர்க்கை பற்றி பேசுகின்றன. புராணங்கள் ஆண் கடவுள்கள் உறவு கொண்ட கதைகளை சொல்கின்றன. எங்குமே இந்த ஓரினச் சேர்க்கைய கண்டித்தோ, அதைப் பாவம் என்றோ சொல்லப்படவில்லை. சிவனும் விஸ்ணுவும் உறவு கொண்டு ஐயப்பனைப் பெற்றார்களாம். நாரதரும் விஸ்ணுவும் உறவு கொண்டு அறுபது குழுந்தைகளை பெற்றெடுத்தார்களாம். எத்தனையோ கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஓரினச் சேர்க்கையை சொல்லி நிற்கின்றன.

You mean Sivan, Vishnu & Narathar are Gays? Very interesting. நாத்திகராக இருந்தாலும் நல்லாய்த்தான் சமயத்தை கரைத்து குடித்து இருக்கிறீங்கள் அப்பு. வாழ்த்துகள். :lol::D :D நாரதரும், விஷ்ணுவும் ஓரினச்சேர்க்கை மூலம் 60 குழந்தைகள் பெற்றார்களா? நாரதர் இவ்வளவு கில்லாடி என்று எனக்கு தெரியாது. :lol: பாவம் விளம்பரத்தில் வரும் மணியண்ணை சமய வரலாறு தெரியாமல் வாயைக்குடுத்துவிட்டார் போல் உள்ளது. :D இனி வேற்று இனத்தவர்களுடன் இதுபற்றி உரையாடும்போது நான் நிச்சயம் இந்து சமயத்தில் உள்ள கே - ஓரினச்சேர்கை கடவுள்கள் பற்றி அவர்களிற்கு கூறுவேன். தகவலுக்கு கோடி நன்றிகள் ராசா.

Link to comment
Share on other sites

You mean Sivan, Vishnu & Narathar are Gays? Very interesting. நாத்திகராக இருந்தாலும் நல்லாய்த்தான் சமயத்தை கரைத்து குடித்து இருக்கிறீங்கள் அப்பு. வாழ்த்துகள். :lol::D:lol: நாரதரும், விஷ்ணுவும் ஓரினச்சேர்க்கை மூலம் 60 குழந்தைகள் பெற்றார்களா? நாரதர் இவ்வளவு கில்லாடி என்று எனக்கு தெரியாது. :D பாவம் விளம்பரத்தில் வரும் மணியண்ணை சமய வரலாறு தெரியாமல் வாயைக்குடுத்துவிட்டார் போல் உள்ளது. :D இனி வேற்று இனத்தவர்களுடன் இதுபற்றி உரையாடும்போது நான் நிச்சயம் இந்து சமயத்தில் உள்ள கே - ஓரினச்சேர்கை கடவுள்கள் பற்றி அவர்களிற்கு கூறுவேன். தகவலுக்கு கோடி நன்றிகள் ராசா.

தமிழர்களில் சைவர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என இன்னும் பலர் உள்ளனர்.

சைவ சமய விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் எல்லாருமே சைவர்கள் அல்லவே :D

Link to comment
Share on other sites

தமிழர்களில் சைவர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என இன்னும் பலர் உள்ளனர்.

சைவ சமய விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் எல்லாருமே சைவர்கள் அல்லவே :lol:

வீழ்ந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று கூறுகின்றீர்கள் அகூதா. சபேசனின் கட்டுரை பலருக்கு நல்ல அடியாக இருக்கும். எங்கள் சமயம், பண்பாடு, கலாச்சாரம் என்று பீலா காட்டுவதைவிடுத்து.. அதற்கு முன்பாக வாழ்வு தருகின்ற கனடா நாட்டிற்கு, கனேடிய சமூகத்திற்கு விசுவாசமாக - நன்றியுணர்வுடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் பிரச்சனைப்படவேண்டி வந்திராது.

Link to comment
Share on other sites

வெட்கப்பட்ட ஒருவரின் கடிதம்

to: procedure.radiodiffusion@crtc.gc.ca, procedure@crtc.gc.ca

cc: complaints@cbsc.ca

Subject: Toronto mayoral campaign and Canadian Tamil Broadcasting Corporation, CTBC

Mr. Konrad von Finckenstein , Chairman

Ms. Amy Hanley , Special Advisor, Operations

Ms.Tina Maisonneuve , Chief Coordinator

Dear all;

I am deeply worried and saddened by the news item in the Globe and Mail ant Toronto Star regarding the advertisement and a talk show broadcasting in Canadian Tamil Broadcasting Corporation [CTBC] about the Toronto Mayoral Election. An ad during a Tamil-language talk show, which was aired by the Canadian Tamil Broadcasting Corporation, feature two people discussing whom they should vote for in the mayoral race.

http://www.theglobeandmail.com/news/national/toronto/city-votes/city-votes-news/toronto-mayoral-campaign-ends-on-a-hateful-note/article1770805/

http://www.thestar.com/article/880343

Several people attributed the spots to a local Christian-Tamil organization called the Miracle Family Temple. However, the church’s pastor and registered owner of its website, David Loganathan, denied it.

Toronto and Tamils feel shame about this broadcast. This radio undermines the individual fundamental rights of a Canadian citizen. And in no way or shape this reflect most Tamils and their view of tolerance.

I hope you continue to investigate to the bottom of this and all options should be on the table, including revoking the license.

Sincerely,

CC: Canadian Broadcast Standards Council

Link to comment
Share on other sites

வீழ்ந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று கூறுகின்றீர்கள் அகூதா.

இல்லை. எனக்கு வாழ்வு தருகின்ற கனடா நாட்டிற்கு, கனேடிய சமூகத்திற்கு விசுவாசமாக - நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என சொல்லுகிறேன்.

-- முதலில் கனடாவில் அரசியலில் மதம் கலக்கப்படுவது இல்லை. :lol:

-- இரண்டாவதாக நாம் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதும் கனேடிய நன்றி, விசுவாசம் :D

Link to comment
Share on other sites

சுனாமிப் பேரவலம் நடந்தபோது வானொலியில் சிரித்து மகிழ்ந்து காசு சேர்த்தவர் இளைய பாரதி.

சேர்த்த காசிற்கு ஊடகங்கள் வாயிலாக அவர் கணக்குக் காட்டியிருக்கிறார். நான்கு இலட்சம் வரை புனர்வாழ்வுக் கழகத்திற்கு கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டியிருந்தார்கள்.

அனால் நாம்தான் தேசியத்தின் குரல் எண்டு பீற்றிக் கொண்டவர்கள் தாம் சேர்த்த பணத்திற்கு என்ன நடந்தது எண்டதை இதுவரை தெரிவிக்கவில்லை.

கணக்கு கேட்ட ஆட்களை சோதி (இளையபாரதி) கேட்டார் "அம்மா எவ்வளவு காசு கொடுத்தனீங்கள் என்று". அந்த அம்மாவும் 50 டொலர் என்று சொல்ல உடனே சோதி நக்கலாக 50 டொலரை கொடுத்துப்போட்டு என்ன கணக்கு கேட்கிறீங்கள் என்று நக்கலாக கேட்டு மழுப்பி விட்டார். காசு கொடுத்த வயோதிபர்களை கேட்டாலே புரியும்.

Link to comment
Share on other sites

டங்கு மதில் மேல் பூனையாய் இருப்பதற்கு ஒருபாலுறவுக்காரரைப் பற்றித் தெரியாமல் இருப்பது காரணமோ? :D

சரி சரி.. இதெல்லாம் இப்ப ஒரு பிரச்சினையா கிருபன்..! :D

ஒருபாலுறவுக்காரர் பொதுவாக மென்மையான இதயம் படைத்தவர்கள் என்பதால், அரசியல்ரீதியாகத் தமிழர்களுக்கு உதவுக்கூடும். :D

:lol:

Link to comment
Share on other sites

எனக்கும் அதுதான்புரியவில்லை

ஒரு வானொலி

அது தமிழர்களால் நடாத்தப்படுவது என்பதற்காக

அது சொல்வது தமிழர்களின் முழுக்கருத்து என்று கருதும் அளவுக்கா கனடியர்கள் உள்ளனர்.

ஊரிலை ஒரு மனநிலை பாதிக்க பட்ட மூதாட்டியை அடிக்கடி காண்கிறனான்... வளியில் போகும் போது காலில் கல் தடக்கினால் கூட அருகில் நிற்பவர்களை பார்த்து திட்ட ஆரம்பிப்பார்... என்னை கீழை விழ வைக்க எண்டு தான் நீ அந்த கால்லை போட்டு வைச்சனீ எண்டு... அப்படித்தான் எனக்கு இதுவும் தெரிகிறது...

எங்கட ஆக்களின் அடிமை தனமான மூளை நிறைய மணல் கோட்டைகளை மற்றவர்களை நம்பி கட்டி வைச்சு இருக்கினம்... அதை நொருக்கி போட்டார்கள் எண்டு தாங்கள் தோற்க்கும் போது எல்லாம் ஒப்பாரி வைக்கினம்...

இதிலை என்ன கேவலம் எண்டால் உயிரை வெறுத்து நாள் தோறும் காவல் காத்து தமிழ் மக்களை பாதுகாத்த புலிகளை கேவலப்படுத்தும் போது இல்லாமல் போன கண்ணியமும் வேதனைப்படுத்தல்களும் வெள்ளைக்காறன்( வேலி(....) அடிக்கிற ) விசயத்திலை வந்திட்டுது... :D :D :D

இதுக்கு எல்லாம் நடு நிலைமை கிடையேவே கிடையாது... :lol:

Link to comment
Share on other sites

யாழில், இருக்கும் நடுநிலைமை வர்ணனையாளர்கள் ... கொட்டன், கம்பி, பொத்து, .... என்றால் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார்கள் ... அங்காலை மக்கள் சீரளிக்கப்படுகிறார்கள்/திட்டமிட்ட குடியேற்றங்கள்/கடத்தல்கள்/ ... போன்ற செய்திகள் வந்தால் மட்டும் முக்காடை போட்டு தம்மை மறைத்துப் போடுகிறார்கள்!

ஒரு ஊடகம்... அதுவும் தனியார் ஊடகம் ... அதுவும் விளம்பரம் ஒன்று ... அதனால் கனடா வாழ் தமிழ் மக்களின் இடுப்பில் இருந்ததுகள் கழண்டு விழுந்து போச்சாம்!!!!!!!!!!!!

சபேசன், நான் நினைத்தேன் நீர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, மூட நம்பிக்கைக்கு எதிரான நிலை கொண்டனீர் என்று(அதாவது கடவுள் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று நம்புபவரென்று, நான் அப்படியல்ல) , ஆனால் உம் நிலைப்பாட்டை/கருத்துக்களை கூற சிவனும், விஷ்னுவும், மாணிக்கவாசகரும் தேவைப்படுகிறது!!!!!!

Link to comment
Share on other sites

முதலில் விசயம் என்னவென்று வாசித்துவிட்டு பதில் எழுதினால் நல்லது.

இளயபாரதி ஒரு வியாபாரி.அது அவரே தன் வானொலியில் அடிக்கடி சொல்லிக்கொள்வது.இருந்தும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் புலிவேசம் போடாமல் இவ்வளவு நேயர்களுடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வானொலி தொடர்ந்தும் நடாத்தப்படுகின்றது

காரணங்கள் பல அதில் உந்த காசு கணக்கு மிகமுக்கியம்.வியாபரியாக இருந்தாலும் ஒழுங்காக காசுக் கணக்கை பகிரங்கப்படுத்துவார்.மற்ற தேசிய புகழ் வானொலிகளும் சரி,டீவீயும் சரி அந்தவிடயத்தில் மூச்சேவிடுவதில்லை.சுனாமிக்கு சேர்த்த காசுக்கணக்கு கேட்டு சனம் அலுத்துபோய்விட்டது.

இப்போது தனியொருவரின் கையில் அனைத்தும் போய் அவர் இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்தியனுடன் சேர்ந்து கொண்டாட்டம் போடுகின்றார்.டீ.வீ வேறு திறக்கப்போகின்றாராம்.

மற்றது மிகவும் பிற்போக்கான அந்த விளம்பரம் போட்டது பற்றி தான் இல்லாதாத வேளையில் கவனிக்காமல் போட்டுவிட்டதாக ஒப்புக்கு சப்பு கொட்டுகின்றார்.பிழை பிழைதான்.மன்னிப்பு கேட்டால் முடிந்துவிட்டது.(எம்மவர் பலருக்கு அதுதான் முடியாத விடயமாயிற்றே).

அதைவிட்டு எதற்கெடுத்தாலும் சிங்கள ஊடுருவல்.ரோவின் சதி என்று இந்த 30 வருடமாக சிந்தித்த மாதிரி சிந்திக்காமல் சுயமாக சிந்தியுங்கள்.

சும்மா ஒரு நிகழ்ச்சியில் யாரு வந்து என்னவாவது சொல்லிவிட்டு போயிருந்தாலோ அல்லது ஒரு பிழையான விளம்பரமென்றாலோ விடயம் இந்தளவு பெரிதாக வந்திருக்க மாட்டாது. எலக்சன் நேரம் ஒருதனிநபர் பற்றிய தாக்குதல் அதுவும் பல செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வானொலியில் வந்தாதால் தான் மிகைபடுத்துபட்டுவிட்டது.

இதில் மிகமுக்கியமான விடயம் எமது சிந்தனைத்தளம் இப்படியாகத்தான் இருக்கின்றது.மிகவும் வெட்கப்படவேண்டியது.

Link to comment
Share on other sites

முதலில் விசயம் என்னவென்று வாசித்துவிட்டு பதில் எழுதினால் நல்லது.

இளயபாரதி ஒரு வியாபாரி.அது அவரே தன் வானொலியில் அடிக்கடி சொல்லிக்கொள்வது.

வானொலி , பத்திகை, இணையத்தளம் என்பன ஒரு சமூக நோக்கம் கொண்டவையாகவும் இருக்க வேண்டம். இந்த வானொலி தொடர்ந்தும் இலாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவது எமது இனத்துக்கு துர்ப்பாக்கியமே!

Link to comment
Share on other sites

கணக்கு கேட்ட ஆட்களை சோதி (இளையபாரதி) கேட்டார் "அம்மா எவ்வளவு காசு கொடுத்தனீங்கள் என்று". அந்த அம்மாவும் 50 டொலர் என்று சொல்ல உடனே சோதி நக்கலாக 50 டொலரை கொடுத்துப்போட்டு என்ன கணக்கு கேட்கிறீங்கள் என்று நக்கலாக கேட்டு மழுப்பி விட்டார். காசு கொடுத்த வயோதிபர்களை கேட்டாலே புரியும்.

யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரின் கணக்கறிக்கையை நானே பத்திரிகையில் பார்த்திருக்கிறேன்.

நான்கு இலட்சம் கனேடிய டொலர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் வழக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டது. தமது அலுவலகத் தேவைக்கோ வேறு எந்தத் தேவைக்காகவோ நிவாரணநிதியில் ஒரு சதம் கூட அவர்கள் எடுத்தாக கணக்கில் காட்டப்படவில்லை. சுனாமிப் பேரவலம் நடைபெற்று நான்கு மாதங்களிற்குப் பின்னர்தான் இது வெளியிடப்பட்டது.

காசு சேர்க்கத் தொடங்கி ஒரிரு நாட்களில் கணக்கைக் காட்டு எண்டு சிலர் வானொலியிலை வந்து கேட்டதற்கு பின்னால் நின்றவர்கள் யாரென்றால் இன்றுவரை தாம் சேர்த்த நிதிக்கு கணக்குக் காட்டாத தேசியத்தின் குரல்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்கள் மாலை நேரம் இலண்டன் கிங்ஸ் குரொஸ் சுரங்க ரயில் நிலையத்தில் பெண்களின் ஆடைகளை உடுத்தியிருந்த 63 வயது நபர் ஒருவரை நினா கனகசிங்கம் என்ற 34 வயது தமிழ்ப்பெண் சுரங்க ரயில் பாதையில் தள்ளியதால் அந்நபர் சுரங்கரயிலில் போதுண்டு இறந்துள்ளார்.

சிலவேளை இவரும் தமிழரின் கலாச்சாரத்தை இறுக்கிப் பிடித்தவராக இருந்திருக்கலாம். ஆதலால் வேறுப்பட்ட பழக்கவழக்கங்கள் / நடையுடைபாவனைகளின் ஒவ்வாமையால் இப்படி நடந்திருக்கலாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

You mean Sivan, Vishnu & Narathar are Gays? Very interesting. நாத்திகராக இருந்தாலும் நல்லாய்த்தான் சமயத்தை கரைத்து குடித்து இருக்கிறீங்கள் அப்பு. வாழ்த்துகள். :lol::D :D நாரதரும், விஷ்ணுவும் ஓரினச்சேர்க்கை மூலம் 60 குழந்தைகள் பெற்றார்களா? நாரதர் இவ்வளவு கில்லாடி என்று எனக்கு தெரியாது. :D பாவம் விளம்பரத்தில் வரும் மணியண்ணை சமய வரலாறு தெரியாமல் வாயைக்குடுத்துவிட்டார் போல் உள்ளது. :lol: இனி வேற்று இனத்தவர்களுடன் இதுபற்றி உரையாடும்போது நான் நிச்சயம் இந்து சமயத்தில் உள்ள கே - ஓரினச்சேர்கை கடவுள்கள் பற்றி அவர்களிற்கு கூறுவேன். தகவலுக்கு கோடி நன்றிகள் ராசா.

இந்து சமயத்தை பழிப்பதில் உள்ள சந்தோசத்தை பார்க்க பெருமையாக இருக்கிறது , இது எப்படி என்றால் தமிழனாக இருந்து கொண்டு தமிழனை இழிவு படுத்துவது போல இருக்கிறது அத்தோடு இவற்றையும் ஏற்று கொள்வீர்கள்தானே.

அபிரகாமுக்கு பிள்ளை பேறு இல்லை என்று பிள்ளை பேறுக்காக ஒரு அடிமைபெண்னை திருமணம் செய்து வைத்து பிள்ளையும் பிறக்கிறது. அதன் பின்னர் அபிரகாமின் மனைவிக்கு பிள்ளை பிறக்கிறது, அதனால் அந்த அடிமை பெண்ணையும் அவருக்கு பிறந்த மகனான ஈசாக்கையும் பாலைவன பிரதேசத்துக்கு துரத்தி விடுகிறார்கள், அந்த அடிமை இனத்தில் இருந்து தோன்றியவர்கள்தான் முஸ்லீம்கள், அதாவது முறையற்ற பிறப்புகள்.

அடுத்தது ஜோசப்புக்கும் மேரிக்கும் திருமணம் முடிந்த பின்னும் அவர்களை இணை சேரக்கூட்டாது என கூறுகிறார்கள் இறை தூதர்கள், அதன்காரணமாக, கன்னியான மேரி கர்பம் தரிக்கிறாள், ஒரு ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் கர்பம் தரிக்க முடியுமா? அப்படி என்றால் மேரியின் மேல் அன்று இரவு இறங்கியவர், ஆண்டவரா? பக்கத்து அறை சிறைக்காவலாலியா? இதை ஒரு ஜெகோவாவின் சாட்சியிடம் கேட்ட போது அவர் சொன்னார், இது கொம்பிளிகேட்டான விடயம்தான் என்று, ஒப்பு கொண்டார் இவற்றையும் உங்கள் தவலுடன் ஏற்றுகொள்ளுகள் ராசா :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரின் கணக்கறிக்கையை நானே பத்திரிகையில் பார்த்திருக்கிறேன்.

நான்கு இலட்சம் கனேடிய டொலர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் வழக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டது. தமது அலுவலகத் தேவைக்கோ வேறு எந்தத் தேவைக்காகவோ நிவாரணநிதியில் ஒரு சதம் கூட அவர்கள் எடுத்தாக கணக்கில் காட்டப்படவில்லை. சுனாமிப் பேரவலம் நடைபெற்று நான்கு மாதங்களிற்குப் பின்னர்தான் இது வெளியிடப்பட்டது.

காசு சேர்க்கத் தொடங்கி ஒரிரு நாட்களில் கணக்கைக் காட்டு எண்டு சிலர் வானொலியிலை வந்து கேட்டதற்கு பின்னால் நின்றவர்கள் யாரென்றால் இன்றுவரை தாம் சேர்த்த நிதிக்கு கணக்குக் காட்டாத தேசியத்தின் குரல்கள் தான்.

கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய சிலருக்கு கணக்கு காட்டமுடியாத சிக்கல்கள். :lol:

அதே நேரத்தில் சிலர் கணக்கு காட்டியதால் அதை அப்படியே நம்புவதும் பிழை. உண்மையில் இந்த கணக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கணக்கு பரிசோதகரால்(auditor) உறுதிப்படுத்தப்படல் வேண்டும். வானொலி நிறுவனத்தின் வருடாந்த கணக்கில் விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.