Jump to content

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

:wub:... ஒன்று புரியவில்லை, .... ஐந்து வழக்குகள்.... அதுவும் தென் இலங்கை தாக்குதல்கள் சம்பந்தமானவை .... பிணை??????!!!!!! புரியவில்லை!!!!!?????

முதலில் இப்படியானவர்களை பிணையில் விடுவார்களா????????? சரி பிணையில் எடுத்தாலும் ... என்ன நிகழப்போகிறது???? தப்பலாமா???? அல்லது வெளியில் வர, சிங்களவன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பானா????? ... ????? பல கேள்விகளுக்கு ... பதில் வெற்றிடமாகவே உள்ளது!!

புரியாத புதிராகப் போகவே போயழிந்தவனின் வாழ்வு பற்றியே இங்கு பேசப்படுகிறது.

பிணை ....???? இதுவும் புரியாத புதிர்தான். ஆனால் வாத்துகள் முட்டையிட்டால் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதுதான் அந்தரிக்கிறோம்.

சிங்களவன் வெளியில விட்டாலும் வெளியிலை நீ வரப்படாதெண்ட முடிவோடிருக்கிற மகாபெரியோர்கள் நிறைந்த அவையில் எப்படித்தான் வாழ முடியும் ?????

ஏன் பணத்தால் பிணையில் வந்தது மட்டுமில்லாமல் பெரும் வசதிகளோடு வாழும் முன்னாள் பெரியவர்கள் அங்கையில்லையோ ?

அண்ணாந்து பாக்க என்ன அணிலோ ஓடுகிறது ? :lol:

கேள்விகளுக்கான பதில்களை இங்கே எழுத முடியவில்லை மன்னிக்கவும். பதில் வெற்றிடமாக உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் இயற்கை வெற்றிடங்களை விட்டுவைப்பதில்லை.

மன்னிக்கவும் நெல்லையன் உங்கள் கேள்விகளிலிருந்து நான் புரிந்து கொள்வது இந்தக்கைதி பற்றி ஒருவரியும் விடாத விளக்கம் தேவைப்படுகிறது. அதை விவரித்தால் இத்திரி நீளுமே தவிர எந்தவித உதவிகளையும் அவனுக்காக இங்கு செய்யப்போவதுமில்லை நாங்கள்.

ஆக நான் நன்றி வணக்கம் சொல்லுகிறேன். :D

இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன்.

நெல்லையன் நீங்கள் சிவப்பு அடையாளமிட்ட வரிகள் இவை. எப்படி இச்செய்தி அவனுக்கு போனது என்பது பற்றிய உங்கள் ஆய்வுக்கான பதில். அவனுடன் தொடர்பில் உள்ள அவன்மீது அக்கறையுள்ள அவனுக்கா எதையாவது செய்ய வேணுமெண்டு ஒரு நண்பன்தான் இதுபற்றி தெரிவித்தான். இதற்குள் சதியுமில்லை வேறெந்த சங்கதியுமில்லை.

சாந்தி ... உங்கள் பதிலுக்கு ... ஆயிரம் கேள்விகள் முன்னெழுகின்றது!!!! ... சந்தேகங்களால் குட்டையை குழப்ப முயலவில்லை!!! ... விடுவோம்!

... உணர்ச்சிகள்/உணர்வுகளுக்கு அப்பால் ... சிங்களத்தின் சூழ்ச்சி வலையில் நாம் அகப்படாமல் புத்தியுடன் செயலாற்றுவோம் ...

சந்தேகங்கள் சந்தேகங்கள் என்று பலரது வாழ்வை அறுத்து அழித்து இரத்தச் சேற்றுக்குள் போட்டாயிற்றே. இனி குழப்ப ஒன்றுமில்லை. சரி விடுவோம்.

திரும்ப திரும்ப விமர்சிப்பதாக எண்ண வேண்டாம் நெல்லையன். நாங்கள் காணுகிற கனவு உலகில் அவர்கள் இல்லை. வாழ விரும்புகிறார்கள். அதற்காகத்தான் இங்கு எழுதுகிறேன். வேறெந்த உள் நோக்கமுமில்லை.

Link to post
Share on other sites
 • Replies 123
 • Created
 • Last Reply

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :wub:

முன்பெல்லாம் பல கேள்விகள் .. மே18 உடன் ... நீங்களோ அல்லது நானோ கேட்கவில்லையா??? இல்லை எழுதித்தள்ளவில்லையா??? :lol:

அப்போதெல்லாம் நாம் மற்றவரை கோபப்படக்கூடாது!! ... என்ற அறிவுரைகளுடன் .. பதிலை தாருங்கள் என்றோம்!!!

எம்மை மட்டும் மற்றவர்கள் கேட்க ஏன் கோபம் வருகிறது???????? :lol:

... எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!! அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!!

அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :D

இதே கேள்விகள் என் மனதிலும் எழுந்தன.

ஆனால் நாம் ஏதாவது செய்யப்போகின்றோம் என்றால்தான் இவற்றுக்கான பதிலை கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.

வெறும் கையுடன் எதைக்கேட்டு என்ன பலன்...?

Link to post
Share on other sites

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :wub:

முன்பெல்லாம் பல கேள்விகள் .. மே18 உடன் ... நீங்களோ அல்லது நானோ கேட்கவில்லையா??? இல்லை எழுதித்தள்ளவில்லையா??? :lol:

அப்போதெல்லாம் நாம் மற்றவரை கோபப்படக்கூடாது!! ... என்ற அறிவுரைகளுடன் .. பதிலை தாருங்கள் என்றோம்!!!

எம்மை மட்டும் மற்றவர்கள் கேட்க ஏன் கோபம் வருகிறது???????? :lol:

... எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!! அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :D

நெல்லையன் இலங்கையில் சிறைச்சாலையில் உள்ளவர்கள் அனைவரிடமும் கைத்தொலைபேசி இருப்பதென்பது சர்வசாதரமானவொரு விடயம்.. பணம் விழையாடும்.அடிக்கடி நீங்களே செய்திகளில் படித்திருப்பீர்கள்.கைதிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் பறிமுதல் என்கிற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் செவ்விகளை தொலைபேசிமுலம் எடுத்து யாழிலும் இணைத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் பல வருடங்கள் அதே நேரம் சம்பந்தப் பட்டவரின் குரலை பதிவு செய்து இங்கு இணைக்க நினைத்திருந்தோம். ஆனால் அதனை தவிர்த்துள்ளோம்.நீங்கள் விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடியதான இலக்கத்தை தரலாம்.மற்றும்படி தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி 5 வழக்குகள் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது என்றுதான் தெளிவாக எழுதியிருக்கிறேன்.மீண்டும் படித்துப்பாருங்கள்.அவன் அத்தனை சம்பவங்களுடனும் சம்பந்தப்பட்டவன் என்று நான் தீர்ப்பு கூறவோ அல்லது அதனை நானே முடிவெடுத்தோ எழுதவில்லை..அந்த வழக்குகளிற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காக அவன் இன்னமும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டபடிதான் இருக்கிறான்..பணப் பிணையும் அவன் கொழும்பில் தங்கியிருந்து வழக்கை எதிர்கொள்வான் என்கிற உறுதியுடன் சரீரப் பிணையும் கொடுத்தால். அவனை பிணையில் எடுக்கலாம்..அதன் பின்னர் அவன் வெளியிலிருந்தபடி அவனது காதல் மனைவியுன் கதைத்தும் குழந்தையுடன் கைகளை பிடித்தபடியும் வழக்கை எதிர்கொளலாமல்லவா??

அதே நேரம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக்கொண்டிருக்கும்வரைதான் பிணை மனு கோரலாம். நீதிபதி தீர்ப்பு கூறிய வழக்கிற்கு பிணை மனு கோரமுடியாது.அந்த வழக்கை மேன்முறையீடுதான் செய்யலாம்..எனவே நான் முதலில் எழுதியிருந்தது பிணைமனு கோரலாம் என்பதே..எனவே இங்கு அண்ணாந்து பார்த்தால் அணில்தான் ஒடவேண்டும் என்றில்லை.சிறையில் படுத்திருப்பவனால் அவன் அண்ணாந்து பார்க்கும் பொழுது அழகான நட்சத்திரங்களை பார்க்கவும் இரசிக்கவும் ஆசைப்படுவானல்லவா???

Link to post
Share on other sites

தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை தொலைபேசியூடாக நானும் சாந்தி அவர்களும் உரையாடிய பெழுது பதியப்பட்ட இரண்டு பதிவுகளை இங்கு இகை;கிறேன் கேழுங்கள்.அதில் ஒரு பதிவிற்கு நெல்லியான் நீங்களே பின்னூட்டமும் பதிந்திருக்கிறீர்கள் நன்றி வணக்கம்.

சிறையிலிருந்து ஒரு குரல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67025&st=0&p=556432&hl=%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D...&fromsearch=1&#entry556432

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66262&st=0&p=552336&hl=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D&fromsearch=1&#entry552336

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல்....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......

இரண்டு கடகம்.. நாலு கதிரை.. மூன்று கோழிக்குஞ்சு.. ஒரு மாடு.. ஒரு தையல் இயந்திரம்.. இதை வைச்சு மக்கள் முன்னேற முடியும் என்று 1960ம் ஆண்டுகள் கால நிலையை தான் நீங்கள் சிலர் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதில திருப்திப்படுறீங்க போல.

உண்மையில் பிரச்சனை இவற்றையும் கடந்து உள்ளன.

முன்னாள் போராளி என்ற காரணத்திற்காக ஒரு குடும்பப் பெண்ணாக வாழ்ந்தவள் இராணுவக் குழுவினரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். இதனை உங்களால் ஏன் தடுக்க முடியவில்லை..???!

வன்னியில் சிங்கள காடையர்களைக் கொண்ட குடியேற்றங்கள் தாறுமாறாக முளைக்கின்றன. இவர்களில் அநேகர் சிங்கள புலனாய்வுத்துறையோடு வேலை செய்பவர்கள்.

ஒரு பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற நிலையில் எப்படி மீளக்கட்டமைப்பு பணிகள் புலம்பெயர் மக்களால் அல்லது அவர்களின் பணத்தால் செய்விக்கப்பட முடியும்..???!

சிறீலங்கா அரச படைகளை தமிழர்களின் வாழ்விடங்களுக்குள் வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அனுமதித்துக் கொண்டு மீளக் கட்டி எழுப்பல் என்பது வெறும் கதை மட்டுமே..!

கிளிநொச்சியை சேர்ந்த பல மக்கள் இன்னும் ஊருக்குப் போக தயங்குகின்றனர். வவுனியாவில் வாழ்ந்து கொண்டு கிளிநொச்சிக்கு போய் வியாபாரம் செய்துவிட்டு உடனே திரும்பும் நிலையிலும் உள்ளன பல குடும்பங்கள்.

இவர்களின் பாதுகாப்புக்கு நீங்கள் நேசக்கரமூடாக என்னத்தை செய்ய முடியும்..???!

பாதுகாப்பாற்ற சூழலில் எப்படி ஒரு போராளிக் குடும்பத்தை நிமிர்ந்து நிற்க சொல்ல முடியும். எத்தனை நாளைக்கு புலம்பெயர்ந்தவர்களின் கைகளில் அவர்களை தங்க வைத்திருக்கப் போகிறீர்கள்..???! இதனால் அவர்களின் வாழ்க்கையை நீங்கள் எப்படி மீட்சிப்படுத்தப் போகிறீர்கள்.

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் அவன் தனது பாதுகாப்பை உணர்தலும் அவசியமாகிறது. அந்த உணர்வற்று தினமும் பயம் நிறைந்த சூழலில்.. அவர்களுக்கு காசு கொடுத்து கோழிக்குஞ்சு கொடுத்து சிங்கள இராணுவத்திற்கு இரையாக்கிக் கொண்டிருப்பதும் இப்போ தேசிய மீட்பாக ஏன் மனித நேயப்பணியாகவே நோக்கப்படுகிறது.

சிங்களம் யுத்தம் செய்தது. சிங்களம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்தும் பயங்கரவாதம் வெல்லப்பட்டும் 150000 சிங்களப் படைகள் தமிழர்களின் நிலமெங்கும் நிறைந்து நிற்கிறது. தினமும் சந்தேக நபர்கள் கண்காணிக்கப்படுவதும்.. கைதாவதும்.. தொடர்கிறது.

இந்த நிலையில்.. வெறும் சில பத்தாயிரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் தையல் இயந்திரங்களையும் வைத்து எப்படி பிழைப்பை ஓட்டுவது.

அண்மையில் பார்த்தேன் வன்னியில் குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. வன்னியில் வாழவே மக்கள் வழி இன்றி உள்ள நிலையில் யாருக்கு தைச்சு யாருக்கு அதை விக்கிறது. எல்லோருக்கும் தையல் இயந்திரத்தை கொடுப்பதால் எப்படி அதை வைச்சு வருவாய் பெறப்பட முடியும்..??!

ஒரு திட்டமும் கிடையாது. ஒரு சமூகக்கட்டமைப்பில் எப்படி பொருண்மியத்தை அடிப்படையில் இருந்து கட்டி எழுப்பிறது என்ற எண்ணக்கருவும் கிடையாது.. சும்மா காசு கொடு கொடு நாங்க நாலு பொட்டலம் கட்டி போட்டு எடுத்துப் போடுறம் என்றால்.. அதன் மூலம் மக்களுக்கு எப்படி நிரந்தர நிம்மதி கிட்டும் என்ற கேள்வியும் எழுகிறது..??!

மக்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கினம். அவைக் கூடாக மக்களின் அடிப்படை தேவைகளை பாதுகாப்பை வெளிநாட்டு தூதரங்களின் உதவியோடு.. சிறீலங்கா அரசு உட்பட வெளிநாட்டு அரசுகளின் பங்களிப்போடு பூர்த்தி செய்வதோடு வன்னி உட்பட போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கை அங்கு வாழும் தமிழர்கள் தான் கட்டி எழுப்ப முடியும்.

புலம்பெயர்ந்த மக்கள் ஒரு எல்லைக்கு மேல் உதவுவார்கள் அல்லது உதவ முடியும் என்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட அவர்களின் உறவுகளுக்கு அவர்கள் உதவக்கூடும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனநிலையை புலம்பெயர்ந்தவர்கள் விரைவாக இழந்து வரும் நிலையில்.. அது சாத்தியமில்லை.

எனவே மாற்று வழிமுறைகளூடு தேவைகளின் சரியான அளவீட்டோடு இந்த மக்கள் அணுகப்பட வேண்டுமே ஒழிய இன்னும் நாலு துணிப்பார்ச்சல்.. நாலு பிளாஸ்ரிக் பாத்திரத்தோடு அந்த மக்களின் வாழ்க்கையை மீள் கட்டுமானப்படுத்த முடியும் என்று நம்ப வைத்துக் கொண்டிருப்பது முட்டாள் தனம். அந்த மக்களின் வாழ்க்கையை நிரந்தரமாக்க அவர்களுக்கு தொடர்ச்சியான வருவாய்க்கு ஏற்ப கட்டுமானங்கள் நிர்மாணங்கள் முதலீடுகள் அவசியம். அவற்றை வெளிநாட்டு அரசுகள் தான் வழங்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் அதில் ஒரு வீதத்தை தான் வழங்கலாம். இந்த யதார்த்தங்களை உள்வாங்காமல் வெறுமனவே எங்களை நாங்களே திட்டிக்கொண்டு ஆத்திரப்பட்டுக் கொண்டும் திரிவதில் எந்தப் பயனும் இல்லை.

போர் முடிந்து 18 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதோடு மக்களை புலம்பெயர்ந்தவர்களின் கையில் தங்கி இருக்க வைத்துக் கொள்வதும் நல்லதல்ல. அந்த மக்களுக்கு போரில் ஈடுபட்ட அரசுகள் நிரந்தர வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர்ந்தவர்கள் எனிச் செயற்பட வேண்டுமே தவிர.. தொடர்ந்து அவர்களுக்கு சில ஆயிரங்களைக் காட்டிக் கொண்டு குடிசைகளில் வாழ வைத்துக் கொள்வது ஏற்புடையதாக அமையாது. அது அந்த மக்களின் வாழ்க்கையை சகஜ நிலைக்கு கொண்டு வரவும் உதவாது.

Link to post
Share on other sites

இங்கு சில கருத்துக்களைப் படித்ததும்தான் எனக்கும் புத்தி வந்தது எனவே சாந்தி அவர்களிற்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் முதலில் நீங்கள். செய்யவேண்டியவை

1. வடக்கு கிழக்கில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துங்கள்

2..அங்கு வாழும் அனைத்து தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்.

3..பெண்கள் வல்லுறவிற்குடுத்தப்படுவதை ஓடிப்போய் தடுத்து நிறுத்துங்கள்.

4..இன்னமும் முகாம்களில் இருக்கும் மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களிற்கு அழைத்துச்செல்லுங்கள்

5.அழைத்துச்சென்றவர்களிற்கு வசதிவாய்ந்த வீடுகளை கட்டிக்கொடுங்கள்

6..வீடு கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது அவைகளிற்கான மின்சார வசதிகள். தொலைபேசி வசதி முடிந்தால் கேபிள் ரி வி வசதிகள் இவற்றை ஏற்படுத்திக்கொடுங்கள்

7.வடக்கு கிழக்கு எங்கும் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவது மட்டுமல்ல அங்குள்ள இராணுவத்தினரையும் உடனடியாக வெளியேற்றுங்கள்.

8அங்குள்ள மக்கள் தொடரச்சியாக வசதியாக வாழ்வதற்கான தொழிற்சாலைகளையும்.மாணவர்களின் எதிரகால தேவைகளிற்கு ஏற்றால் போல் பல்கலைக்கழகங்கள் ஆராச்சி கூடங்கள் என்பனவற்றை கட்டுங்கள்.மன்னாரிலும் நந்திக்கடல் பகுதியிலும் எண்ணெய் வளம் உள்ளதாம் அதனை ஆராய்ச்சி செய்து எண்ணெய் கிணறுகளை நிறுவுங்கள்.

9. இவற்றை நீங்கள் நிறைவேற்றி முடிக்கும் வரை அங்குள்ள மக்களின் பசியை போக்குவதற்காக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் சத்துக்கள் நிறைந்த குளிசைகளை வாங்கி (அதுவும் வருக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கக்கூடயதான குளிசைகள் என்றால் இன்னமும் நல்லது) உடனடியாக கப்பலில் அனுப்பிவையுங்கள்

அதன்பின்னர் இங்கு உதவி கேட்டு வாருங்கள் யோசிச்சு செய்யலாம்.

இப்போதைக்கு இவைமட்டும்தான் எனக்கு தோன்றிய ஆலோசனைகள்..அப்பப்ப ஏதாவது மீண்டும் ஆலோசனைகள் ஊற்றெடுத்தால் அப்படியே இங்கு கொண்டு வந்து ஊற்றுகிறேன் அள்ளிப்பருகுங்கள் நன்றி வணக்கம்.

Link to post
Share on other sites

சாத்திரி அண்ணை, முடியலை.. எப்படி உங்களால்.. இப்படியெல்லாம் முடிகின்றது? சரக்கு அடித்துவிட்டு எழுதுகின்றீர்களோ.. அல்லது சரக்கு அடிக்காமல் இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போதே தன்பாட்டில் கிக்கு ஏறுகின்றதோ? :lol:

உங்கள் பட்டியலில் முள்ளிவாய்க்காலில் கை, கால், உடல் உறுப்புக்கள் துண்டாடப்படாமல் முழுமையான உடலுடன் உயிர்தப்பியவர்களையும், அத்துடன் யாழ்ப்பாணத்தில், வன்னியில், மன்னாரில், மட்டக்களப்பில் ஆடிப்பாடி தற்போது மகிழ்ச்சியாக உள்ள இளைஞர், யுவதிகளையும் அடுத்த கட்ட ஆயுத போராட்டத்திற்கு தயார் படுத்துவதையும் இணைக்கலாமோ?

கரும்பு இங்கு சிலரின் கருத்துக்களை படித்தலே தலை கிறுகிறுக்கிறது இதுக்குமேலை சரக்கு வேறை அடிக்கவேணுமா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணோய் நக்கல் அடிச்சது காணும்..

1987 இல் ஒப்பரேசன் லிபரேசனின் போதும் நீங்கள் தானே ஓடிவந்து புலம்பெயர் நாட்டில இருந்து காசு வாங்கி கன்றுக்குட்டி வாங்கிக் கொடுத்து சனத்தை காப்பாற்றினீங்க..

1987 ஒக்ரோபரில் இந்திய படைகளின் பவான்.. பூமாலைகளிலும் நீங்க தானே பாமொயில் வழங்கி மக்களை காப்பாற்றினனீங்க...

1990 இல் சிங்களம் பொருளாதார தடை போட்டு சனம் பனங்கட்டியோட வாழேக்கையும் நீங்க தானே நேசக்கரம் அமைச்சு வெள்ளைச் சீனியும் மண்ணெண்ணையும் தந்து எங்களை காப்பாத்தினீங்க..

1995 சூரியக் கதிர்களின் போதும் நீங்க தானே தண்ணீர் பந்தல் அமைச்சு.. வன்னிக்கு சனத்தை களைப்பில்லாமல் கொண்டு வந்தனீங்க..

2009 இல் மட்டும்.. கோழிக்குஞ்சு கொடுத்து போராளிகளை வாழ வைக்கிறீங்க..

இத்தனைக்குள்ளும்.. சிங்களவன் கொல்ல நினைச்சதை கொன்றிட்டான்.. விட வேண்டியதுகளை விட்டிட்டான். அங்க காசு தான் பேசுதே தவிர.. கோழிக்குஞ்சும்.. பிளாஸ்ரிக் குடமும்... பாய் தலையணியும் அல்ல.. இது உலகுக்கே தெரியும்.

நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வரேக்க உங்க பிள்ளைகளுக்கு பூங்கா கட்டி வைச்சிட்டோ ஓடி வந்தனீங்க.. இல்லைத் தானே. யாரேன் கட்டினதைத் தானே அனுபவிக்கிறீங்க. அதேன் வன்னிச் சனத்துக்கு மட்டும் இன்னும்.. கோழிக்குஞ்சும்.. குடிசை வீடும்...???! அதுகளுக்கு ஒரு நிரந்தர நிம்மதி வந்திட்டா நாங்க எங்க போறது.. விலாசம் காட்ட..! அதுவும் சரி தான் சாத்திரியண்ண..!

புலம்பெயர் தேசமெங்கும்.. காசு திரட்டி கோழிக்குஞ்சு வாங்கி வன்னி மக்களை மீட்டெடுக்கும் வரை நாம் ஓயமாட்டோம்..! சாத்திரியண்ண.. உங்க கோசம் வெல்ல வாழ்த்துக்கள். வெல்லவிட்டு சொல்லுங்கோ.. நாங்க எங்க திட்டத்தை ஒரு ஓரமா இருந்து செயற்படுத்த முடியுமோ என்று யோசிச்சு சொல்லுறம்..! :lol::)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

மற்றும் சாத்திரி

தயவு செய்து மாறி மாறி எழுதி எமது மக்களின் வாழ்வில் ஒரு சிறு பாதிப்பாவது வருவது போல் நடந்து கொள்ளவேண்டாம்

நன்றி

இத்தனை கேள்விகளையும் நீங்கள் மெனிக்பாமிலையோ அல்லது வன்னி மீள்குடியேற்றகிராமத்திலையோ..அல்லது எங்காவது சிறீலங்கா சிறையிலிருந்தோ கேட்டிருந்தால் அதற்கான சரியான பதில்களை தாராளமாக அள்ளி வழங்குவேன்.. இங்கு ஒரு சின்னத் திருத்தம்..நான் கடைசியாய் இலங்கையை விட்டு ஓடிவந்தது 1996ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்..

மேலே பட்டியலிட்டுள்ள நிகழ்வுகளில் 2009 நிகழ்வைத் தவிர மிச்ச எல்லா நிகழ்வுகளாலும் நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எமக்காக கோழிக்குஞ்சு கொண்டு யாரும் ஓடி வந்ததா தெரியல்லை.. சாத்திரியண்ண.

நல்ல ஞாபகம் இருக்கு.. ரொட்டிக்கும் பருப்புக்கும் ஆகாயத்தை.. கடலை.. பார்த்துக் கொண்டு வயிறு காய்திருந்த வேளைகளை...!

நீங்கள் சிறைகளில் இருப்பவர்கள் குறித்து கருணை காட்டுவது வாஸ்வம் தான். அதேன் இந்தக் கருணை 1983 இல் இருந்து சிறையே வாழ்க்கை என்று வாழும் மற்றவர்கள் மீது இதுகாள் வரை வரவில்லை... என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கொழும்புக்கு தென்னிலங்கைக்கு பல்வேறு நோக்கங்களோடு பல்வேறு காலங்களில் வந்து எத்தனையோ போராளிகள் சிங்களப் படைகளிடம் சிக்கி இன்னும் சிறைகளில் சித்திரவதைப்படுகின்றனர். அவர்களைப் பற்றி முள்ளிவாய்க்காலுக்கு முன் யாரும் கவலைப்பட்டதாக நான் இங்கு அத்துணை விசேசமாகக் காணவில்லை.

ஒருவேளை முள்ளிவாய்க்கால் அந்த கைதிகளின் பாலும் கவனம் செலுத்த வைத்திருந்தால் அதற்காகவாவது முள்ளிவாய்க்காலுக்கு நன்றி கூற வேண்டியதாகிறது.. வலியிலும் ஒரு திருப்தி.

அண்மையில் ஒரு கிறீஸ்தவ மதத்தவர் சொன்னார்.. முள்ளிவாய்க்காலில் பலியானவர்கள் பாவிகளாம்.. இறைவனின் அருளால் மிகுதிப் பேர் தப்பிட்டார்களாம்.. அதற்கு தங்கள் பிரார்த்தனை தான் காரணம் என்று. அதேபோல்.. சாத்திரி அண்ணை சொல்லுறார்.. சிறைகளில் இதுகாள் வரை இருந்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது.. எனி இருப்பவர்களுக்கு குறிப்பாக மெனிக்பாம் நடைமுறைக்கு பின் சிறைகளில் இருப்பவர்களுக்கு.. நாம் வாழ் வளிக்க வேண்டும்.. அது நேசக்கரத்தின் கடமை என்று. இப்பவாவது அந்தக் கடமை உணர்ச்சி வந்திச்சே சந்தோசம். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

அவர்கள் சொல்லோடு மட்டுமல்லாது செயலிலும் காட்டுபவர்கள்

தங்களால் முடிந்தவரை அங்குள்ளவர்களுக்கு செய்கிறார்கள்

தயவுசெய்து நேசக்கரத்தை இதற்குள் இழுத்து எழுதவேண்டாம்

Link to post
Share on other sites

நீங்கள் சிறைகளில் இருப்பவர்கள் குறித்து கருணை காட்டுவது வாஸ்வம் தான். அதேன் இந்தக் கருணை 1983 இல் இருந்து சிறையே வாழ்க்கை என்று வாழும் மற்றவர்கள் மீது இதுகாள் வரை வரவில்லை... என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கொழும்புக்கு தென்னிலங்கைக்கு பல்வேறு நோக்கங்களோடு பல்வேறு காலங்களில் வந்து எத்தனையோ போராளிகள் சிங்களப் படைகளிடம் சிக்கி இன்னும் சிறைகளில் சித்திரவதைப்படுகின்றனர். அவர்களைப் பற்றி முள்ளிவாய்க்காலுக்கு முன் யாரும் கவலைப்பட்டதாக நான் இங்கு அத்துணை விசேசமாகக் காணவில்லை.

ஒருவேளை முள்ளிவாய்க்கால் அந்த கைதிகளின் பாலும் கவனம் செலுத்த வைத்திருந்தால் அதற்காகவாவது முள்ளிவாய்க்காலுக்கு நன்றி கூற வேண்டியதாகிறது.. வலியிலும் ஒரு திருப்தி.

அண்மையில் ஒரு கிறீஸ்தவ மதத்தவர் சொன்னார்.. முள்ளிவாய்க்காலில் பலியானவர்கள் பாவிகளாம்.. இறைவனின் அருளால் மிகுதிப் பேர் தப்பிட்டார்களாம்.. அதற்கு தங்கள் பிரார்த்தனை தான் காரணம் என்று. அதேபோல்.. சாத்திரி அண்ணை சொல்லுறார்.. சிறைகளில் இதுகாள் வரை இருந்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது.. எனி இருப்பவர்களுக்கு நாம் வாழ் வழிக்க வேண்டும்.. அது நேசக்கரத்தின் கடமை என்று. இப்பவாவது அந்தக் கடமை உணர்ச்சி வந்திச்சே சந்தோசம். :lol:

முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் இவர்போன்றவர்களை காப்பாற்றவும் அவர்களிற்கான வழக்குகளை கவனிக்கவும்.அவர்கள் குடும்பங்களிற்கான உதவிகள் வசதிகளை செய்து கொடுக்கவும் அதற்கென்று தனியான ஒரு நிருவாக அலகே இருந்தது. சம்பத்தப்பட்ட கைதியே கதைக்கும்பொழுது சொல்லியிருந்தார்.வன்னியில் அப்படியொரு நிருவாகம் இப்பொழுதும் இருந்தால் நான் கண்டவன் நிண்டவனிடம் கெஞ்சிக்கொண்டிக்கமாடேன். அவர்கள் என்னை வெளியில் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களிற்கொரு நிருவாகம் இருக்கின்றது என்கிறை நினைத்தபடியே காலம் முழுதையும் சிறையில் கழித்திருப்பேன் என்றார்..நானும் அது போன்றதொரு நிலையில் (சிறையில்) இருந்து அதே போல ஒரு நிருவாகத்தால் காப்பற்றப்பட்டுத்தான் இன்று வெளி நாட்டில் உயிருடன் இருக்கிறேன். இன்று அப்படியொரு நிருவாகம் முள்ளிவாய்க்காலுடன் இல்லாது போனபடியால்தான் இப்படி ஒவ்வொருத்தராய் கெஞ்சவேண்டியுள்ளது...நன்றி வணக்கம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :lol:

எம்மை மட்டும் மற்றவர்கள் கேட்க ஏன் கோபம் வருகிறது???????? :)

கேள்வி கேட்பதற்கும் விடுப்பு அறிவதற்கும் வித்தியாசம் இருக்கு நெல்லையன். நீங்கள் விடுப்பு பாக்கவே விரும்பிய கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் எழுதியுள்ளீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் இவர்போன்றவர்களை காப்பாற்றவும் அவர்களிற்கான வழக்குகளை கவனிக்கவும்.அவர்கள் குடும்பங்களிற்கான உதவிகள் வசதிகளை செய்து கொடுக்கவும் அதற்கென்று தனியான ஒரு நிருவாக அலகே இருந்தது.

..நானும் அது போன்றதொரு நிலையில் (சிறையில்) இருந்து அதே போல ஒரு நிருவாகத்தால் காப்பற்றப்பட்டுத்தான் இன்று வெளி நாட்டில் உயிருடன் இருக்கிறேன்

. இன்று அப்படியொரு நிருவாகம் முள்ளிவாய்க்காலுடன் இல்லாது போனபடியால்தான் இப்படி ஒவ்வொருத்தராய் கெஞ்சவேண்டியுள்ளது...நன்றி வணக்கம்.

எவ்வளவு பெரிய உண்மை

ஆதாரம்

ஆதங்கம்

இடைவைளி.....................................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

அவர்கள் சொல்லோடு மட்டுமல்லாது செயலிலும் காட்டுபவர்கள்

தங்களால் முடிந்தவரை அங்குள்ளவர்களுக்கு செய்கிறார்கள்

தயவுசெய்து நேசக்கரத்தை இதற்குள் இழுத்து எழுதவேண்டாம்

விசுகு அண்ணா நேசக்கரம் என்ற அந்த பதத்தை அறிமுகப்படுத்தியதே யாழ் களம் தான். அதை இங்கே உருவாக்கி உருக்கொடுத்து அதற்கு ஒரு செயல்வடிவத்தை காட்டியதும் யாழின் கள உறவுகள் தான். அதற்கு அன்று பல வழிகளிலும் ஒத்துழைத்தவர்களில் சாந்தி சாத்திரி முக்கியமானவர்கள். அவர்களோடு டன் போன்ற உறவுகளும் முக்கியமானவர்கள். அது நேற்றைய மறக்கப்பட்ட கதை. இன்று கதை வேறு..!

நேசக்கரம் தொடங்கியதில் இருந்து.. இன்று வரை.. மக்களின் அன்றாட அல்லது தற்காலிக தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்ய உதவுகிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்கு மேல் அது எதுவும் செய்ய முடியாது.

எனது கருத்து என்பது.. நேசக்கரத்தை செயற்படுத்துவதனால் மட்டும் நாம் மக்களுக்கு போராளிகளுக்கு மீட்சியளிக்கிறோம் என்று காட்ட முனைவதையும் மற்றவர்களை அதை வைச்சு திட்டி கதை வரைவதையும் இட்டுத்தான் அமைகிறதே அன்றி நேசக்கரத்தின் பணிகள் தொடர்பில் அதன் நோக்கம் தொடர்பில் அல்ல.

நாம் நாடு கடந்த அரசையும் இன்னும் பல கட்டமைப்புக்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவர்களை நோக்கி நாம் சொல்ல வேண்டியதை சரியான வடிவில் அணுகிச் சொல்கிறோமா என்றால் அது கிடையாது. ஒரு கதை.. அல்லது ஒரு செவ்வி.. அதை வைச்சு உதவி கேட்டு திட்டு.. இதைத்தான் இப்போ நேசக்கரத்தின் பெயரால் செய்கிறோம் அதிகம்..!

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உணர்ச்சிவசப்படாதீர்கள்!! :)

... எல்லாவற்ருக்கும் மேல் சிறிய சந்தேகம் .... தெனிலங்கை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவன்!!!! ஐந்து வழக்குகள்!!! அதுவும் உள்ளுக்குள் ... சிங்களத்தின் நரகத்தில் ... இருப்பவன், கதைக்கிறானாம்???????????!!!!!!!!! ரெக்ஸ் அனுப்புகிறானாம்???????????!!!!!!!!!!!!!!! அதுவும் சிங்களத்தின் பார்வையில் அதியுயர் பயங்கரவாதி ... அவனுக்கு உள்ளுக்குள்ளேயே கைத்தொலைபேசி கொடுக்கப்பட்டிருக்கிறது!!!!!!!!!!!!!!! ... என்ன இது???????????? இது என்ன அண்ணாந்து பார்க்க அணில் ஓடுகிற கதையா???? :lol:

இந்த கேள்விகுறிகளுக்கும் ஆச்சரியக்குறிகளுக்கும் அர்த்தம் உணர்ச்சிவசப்படாமையா நெல்லையன் ?

அதி உயர் அதுவும் ...பங்கரவாதி.....அவனுக்குத் தொலைபேசி ....? உங்கள் அருமையான விவாதத்துக்கு ஒரு கைதட்டு.

உங்கள் கருத்துக்களை ஒருக்கா ஆரம்பத்திலிருந்து திருப்பி வாசியுங்கோ...காலத்துக்கு ஏற்ப உங்கள் கொள்கை விளக்கங்கள் மாறிமாறித்தான் வருகிறது. எல்லா வசதிகளோடும் வாழும் நீங்களே காலத்துக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றுகிற போது கடைசிவரையும் உங்கள் கனவுக்காகவும் எனது கனவுக்காகவும் தன்னை இழந்தவன் இன்ற தன் கொள்கைகளை மறந்துவிட்டு வாழவிரும்பக்கூடாதுதானே!!!!!

அந்த லூசுப்பயல் பேசாமல் உ(எ)ங்களைமாதிரி காலத்துக்கு ஏற்ப கொள்கைகள் தியாகமெண்டு கதையளக்காமல் போனது தவறுதான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய உண்மை

ஆதாரம்

ஆதங்கம்

இடைவைளி.....................................

அவர் சொல்லுறது.. மகேஸ் அன்ரியையும் டக்கிளஸ் அங்கிளையும் என்று நினைக்கிறேன். டக்கிளஸ் அங்கிள் பிடிச்சுக் கொடுக்க.. மகேஸ்வரி அன்ரி எடுத்து விட்டதை சொல்லுறார் போல. இவருக்கு தெரியாது போல.. அவையின்ற நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இன்னும் இன்னும் ஒட்டுக்குழுக்களின் அரச பினாமிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் பிற.. இருக்கிறது தெரியாம.. எத்தனையோ பேர் சிறைகளில் வருடக்கணக்கா இருக்கினம் என்றது.

முள்ளிவாய்க்கால் உலகமே அறிய நடந்த சங்கதி. உலகின் உத்தரவாதங்கள் சில அளிக்கப்பட்ட சங்கதி. ஆனால் முன்னைய சிறைகள் அப்படியல்ல. உலகம் அறிய நடந்ததற்கே இத்தனை சித்திரவதை என்றால்.. உலகம் அறியாமல் நடந்த கைதுகளால் பாதிப்புக்கள் எவ்வளவு இருந்திருக்கும்..!

இவை குறித்தும் சொல்ல வேண்டும் சாத்திரியண்ண தான்..! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

Link to post
Share on other sites

விசுகு அண்ணா நேசக்கரம் என்ற அந்த பதத்தை அறிமுகப்படுத்தியதே யாழ் களம் தான். அதை இங்கே உருவாக்கி உருக்கொடுத்து அதற்கு ஒரு செயல்வடிவத்தை காட்டியதும் யாழின் கள உறவுகள் தான். அதற்கு அன்று பல வழிகளிலும் ஒத்துழைத்தவர்களில் சாந்தி சாத்திரி முக்கியமானவர்கள். அவர்களோடு டன் போன்ற உறவுகளும் முக்கியமானவர்கள். அது நேற்றைய மறக்கப்பட்ட கதை. இன்று கதை வேறு..!

நேசக்கரம் தொடங்கியதில் இருந்து.. இன்று வரை.. மக்களின் அன்றாட அல்லது தற்காலிக தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்ய உதவுகிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்கு மேல் அது எதுவும் செய்ய முடியாது.

எனது கருத்து என்பது.. நேசக்கரத்தை செயற்படுத்துவதனால் மட்டும் நாம் மக்களுக்கு போராளிகளுக்கு மீட்சியளிக்கிறோம் என்று காட்ட முனைவதையும் மற்றவர்களை அதை வைச்சு திட்டி கதை வரைவதையும் இட்டுத்தான் அமைகிறதே அன்றி நேசக்கரத்தின் பணிகள் தொடர்பில் அதன் நோக்கம் தொடர்பில் அல்ல.

நாம் நாடு கடந்த அரசையும் இன்னும் பல கட்டமைப்புக்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவர்களை நோக்கி நாம் சொல்ல வேண்டியதை சரியான வடிவில் அணுகிச் சொல்கிறோமா என்றால் அது கிடையாது. ஒரு கதை.. அல்லது ஒரு செவ்வி.. அதை வைச்சு உதவி கேட்டு திட்டு.. இதைத்தான் இப்போ நேசக்கரத்தின் பெயரால் செய்கிறோம் அதிகம்..!

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

இங்கு மீண்டும் ஒருதடைவை நீங்கள் சாந்தி எழுதியதை படிப்பது நன்று காரணம்.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…? இது கதையில்லை ஒருவனின் வாழ்வு

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

இதுதான் அந்த இரண்டு அமைப்புக்களை பற்றியும் சாந்தி எழுதியது இதில் எங்கு அந்த அமைப்புக்களை விமரிசனம் செய்திருக்கிறார் அல்லது திட்டியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினால் நாங்களும் தமிழ் மொழி படிக்க வசதியாய் இருக்கும்.

அதுமட்டுமல்லாது முக்கிய விடயம் நாடு கடந்த அரசு ஆனாலும் சரி பேரவை ஆனாலும் சரி அங்கு பலரும் எனக்கு நண்பர்கள்தான் ஆனால் உதவி என்று கேட்டால் மழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் நாடுகடந்த அரசு உருத்திரா ஆகட்டும் அதன் அடுத்த செயற்பாட்டாதளர் சிறீஅண்ணா(சுவீடன்)ஆகட்டும் லண்டன் வசந்தகுமார் ; ஆகட்டும் நான் உதவி கேட்கவில்லை என்பதை மறுக்கமுடியாது இப்போதைக்கு முடியாது நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் என்கிற வசனம் மட்டுமே பதில்களாய் வந்தது அதனை நீங்கள் நேரடியாகவே அவர்களிடம்.கேட்கலாம். பேரவை பற்றி இங்கு சொல்லவே வேண்டாம்.

Link to post
Share on other sites

View Postnedukkalapoovan, on 05 November 2010 - 09:15 PM, said:

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

ஒரு சிலரை திருப்திபடுத்துவதென்பது யாரை தெளிவாக எழுதினால் புரிந்து கொள்ளலாம்..அந்த ஒரு சிலர்யார்??மகிந்தாவா??கோத்தபாயாவா??கருணாவா??டக்லசா??ஆனந்தசங்கரியா??சித்தார்த்தனா?? பிள்ளையானா??கே.பியா??நெடியவனா??அல்லது வேறு சிலரா?? இவர்கள் தவிர்த்து அந்த வேறு சிலர் யாரோ யுத்தத்தால் பாதிக்கபட்ட ஒரு சிலர் சிறையில் வாடும் ஒருசிலர்..கல்வியை இழந்த ஒருசிலர்..தாய் தந்தையரை இழந்த ஒருசிலர்..உடன் அவயவங்களை இழந்த ஒருசிலர்..இவர்களை திருப்திப் படுத்துவதுதான் எமது நோக்கம் என சிலர் குற்றம் சாட்டினால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான் அந்தக் குற்றத்தை மட்டும்தான் எம்மால் மீண்டும் மீண்டும் செய்ய முடியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கு மீண்டும் ஒருதடைவை நீங்கள் சாந்தி எழுதியதை படிப்பது நன்று காரணம்.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…? இது கதையில்லை ஒருவனின் வாழ்வு

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

இதுதான் அந்த இரண்டு அமைப்புக்களை பற்றியும் சாந்தி எழுதியது இதில் எங்கு அந்த அமைப்புக்களை விமரிசனம் செய்திருக்கிறார் அல்லது திட்டியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினால் நாங்களும் தமிழ் மொழி படிக்க வசதியாய் இருக்கும்.

அதுமட்டுமல்லாது முக்கிய விடயம் நாடு கடந்த அரசு ஆனாலும் சரி பேரவை ஆனாலும் சரி அங்கு பலரும் எனக்கு நண்பர்கள்தான் ஆனால் உதவி என்று கேட்டால் மழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் நாடுகடந்த அரசு உருத்திரா ஆகட்டும் அதன் அடுத்த செயற்பாட்டாதளர் சிறீஅண்ணா(சுவீடன்)ஆகட்டும் லண்டன் வசந்தகுமார் ; ஆகட்டும் நான் உதவி கேட்கவில்லை என்பதை மறுக்கமுடியாது இப்போதைக்கு முடியாது நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் என்கிற வசனம் மட்டுமே பதில்களாய் வந்தது அதனை நீங்கள் நேரடியாகவே அவர்களிடம்.கேட்கலாம். பேரவை பற்றி இங்கு சொல்லவே வேண்டாம்.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

சாத்திரி, சாந்தி அக்கா இந்தக் கதையில் சிலவற்றை தானே தனக்கு ஏற்ற வகையில் புகுத்தி இருக்கிறாரா.. அல்லது உண்மையில் அந்தப் போராளி இப்படி சிந்தித்தானா...??!

அன்று.. அவனின் முன்னாள் அவன் அறிய போய் களத்தோடு மாண்டவர்களை எல்லாம் கண்டவன்.. தன் வாழ்க்கைக்காக இப்படி ஒரு இரங்கலை செய்வானா.. சூழ்நிலையை விளங்கிக் கொள்ளாதவனாக இருப்பானா..??!

இன்று இப்படி பேசுபவன்.. அன்று தன் முன்னாள் போய் மாண்டவர்களை ஏன் தடுக்காது விட்டான்.. அதையும் செய்திருக்கலாமே...???!

சாந்தி அக்காவின் தனிப்பட்ட ஆதங்கங்கள்.. அல்லது தனிப்பட்ட கருத்துக்கள்.. போராளிகளின் கருத்துக்களாக நுழைக்கப்பட்டிருக்கின்ற சில ஆக்கங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன். அதுவும் நேசக்கரத்தின் உதவி கோரிய நிலைகளோடு...???!

ஒரு போராளி தான் கரும்புலியாகப் போகும் போது கூட மற்றவர்கள் வாழ வேண்டும் என்று போனததைத்தான் நான் கண்டிருக்கிறேன். மற்றவர்களுக்காக தான் சாகிறேனே என்று வருந்தினதை காணேல்ல. அப்படியான இடத்தில் இருந்து பல தியாகங்களை கண்டு வந்த ஒருவன்.. இப்படி இருந்திருப்பானா.. என்பது எனது கேள்வி.

போராளிகளின் பாதுகாப்பு விடுதலை இவற்றில் அக்கறை இருப்பது அவசியம். அது தவறல்ல. அதற்காக ஒரு இலட்சிய பயணத்தில் பயணித்து மாண்டு போன மறவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக அல்லது அதை மற்றவர்களின் பிழைப்புக்கான ஒரு விளம்பரமாக வரைவதில் எனக்கு உடன்பாடில்லை.

நாடு கடந்த அரசு.. மற்றும் அமைப்புக்கள் குறித்து சாந்தி அக்காவிற்கு வேண்டும் என்றால் உடன்பாடுகள்.. முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையான போராளி தனது சுய நலனிலும் பார்க்க.. தனது இலட்சியத்தின் பால் அதன் நடவடிக்கைகளின் பால் அதிகம்.. அக்கறை காட்டுவான்... என்பதுதான் நிஜம்.

எத்தனையோ போராளிகள் காட்டிக் கொடுத்தால் விடுதலை என்ற போது காட்டிக் கொடுக்காது தமது வாழ்க்கை இழந்து.. அல்லது சிறையில் கழித்திருக்கின்றனர். அப்படியான எடுத்துக்காட்டுக்களும் உள்ளன.

ஒரு போராளியை சராசரி மனிதனாக காட்ட மறவர்களின் புகழை சொல்வதை இழிவு படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. உண்மையில் அவனொரு போராளியாக இருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு இழி பிழைப்பை விரும்பமாட்டான். தன் முன்னாள் மாண்டவர்களின் புகழை இழித்து தான் வாழ விரும்பி இருக்க மாட்டான். அப்படியும் போராளிகள் எம் மத்தியில் வாழ்ந்து போயுள்ளனர் என்பதையும் சாத்திரி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலரை திருப்திபடுத்துவதென்பது யாரை தெளிவாக எழுதினால் புரிந்து கொள்ளலாம்..அந்த ஒரு சிலர்யார்??மகிந்தாவா??கோத்தபாயாவா??கருணாவா??டக்லசா??ஆனந்தசங்கரியா??சித்தார்த்தனா?? பிள்ளையானா??கே.பியா??நெடியவனா??அல்லது வேறு சிலரா?? இவர்கள் தவிர்த்து அந்த வேறு சிலர் யாரோ யுத்தத்தால் பாதிக்கபட்ட ஒரு சிலர் சிறையில் வாடும் ஒருசிலர்..கல்வியை இழந்த ஒருசிலர்..தாய் தந்தையரை இழந்த ஒருசிலர்..உடன் அவயவங்களை இழந்த ஒருசிலர்..இவர்களை திருப்திப் படுத்துவதுதான் எமது நோக்கம் என சிலர் குற்றம் சாட்டினால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான் அந்தக் குற்றத்தை மட்டும்தான் எம்மால் மீண்டும் மீண்டும் செய்ய முடியும்.

வன்னியைப் பொறுத்த வரை.. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போராளிகள் மாவீரர் குடும்பங்கள் என்று பாதிப்புக்கள் பல வகைகளில் பல வழிகளில் உள்ளன.

ஒரு சிலரின் கருத்துக்கள் உங்களை எட்டுவது போல.. பல நூறு பேரின் கருத்துக்கள் உங்களை எட்டாமலும் இருக்கின்றன. அவர்களின் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஆளுக்கு ஒரு தீர்வு தேடிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் மொத்த மக்களுக்குமான தீர்வாக பெற்றுக் கொடுப்பதும்.. பொதுமன்னிப்புக்கு வழி கோலுவதுமே அதிகம் சிறந்தது என்பது எனது நிலைப்பாடு.

போராளிகளின் சரணடைதல் என்பது சர்வதேசத்தின் உத்தரவாதங்களுக்கு உட்பட்டு நடந்ததாகவே தெரிகிறது. ஆனாலும் சிறீலங்கா அரசு உத்தரவாதங்களை மீறியுள்ளது. அப்படியான நிலையில் ஆளாளாய் விடுவித்துக் கொண்டிருப்பதிலும் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய தூண்ட வேண்டியதுதான் உண்மையான கடமை. தனியாள் விடுதலையை காட்டிலும் இது வலிமையானதாக இருக்கும்.

அதுதான் எம்மை அடையாத குரல்களின் விடுதலைக்கும் வழிகோலும். சிறைகளில் பல்லாண்டுகளாக அரசியல் கைதிகளாக வாடும் உறவுகளின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் உதவும்.

இதனை நாடு கடந்த அரசு செய்ய முனைவதிலும் புலம்பெயர் மக்கள் தங்கள் ஒற்றுமையால் செய்யலாம். அதை நேசக்கரம் வலியுறுத்தலாமே...???! இப்படி ஆளை ஆள் பார்த்து திட்டுவதிலும்..???! :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.