• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ஈசன்

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

Recommended Posts

ramakrishna_seated_midsizencdas.jpg

மகாசயர் என்னும் மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடனான தனது சந்திப்புக்களை நாட்குறிப்பில் எழுதி வந்தார்.

அதன் தொகுப்பே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளாகும்.

இத்தொகுப்பு 19ம் நூற்றாண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்பயணத்தில் தூய்மை, அமைதி , நம்பிக்கை, இறை அனுபவம் என்ப‌வற்றை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டு செல்லலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

குருவும் சீடரும்

மாசி 1882

"ம" முதல் முறையாக குருவை சந்தித்தல்

அது ஒரு இளவேனிற்கால ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பிற‌ந்த தினம் ஒரு சில நாட்களின் முன் தான் கடந்திருந்தது, இன்று தான் "ம" எனப்படுகின்ற மகாசயர் முதன் முதலில் ஸ்ரீ இராமகிருஷ்ணரைச் சந்தித்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் கைளிப்பாறையில் தங்கியிருந்தார். அது அன்னை காளியின் கோவில் தோட்டம். கங்கைக் கரையில் தக்சினேஸ்வர் என்னும் இடத்தில் அமைந்திருந்தது.

"ம" விற்கு ஞாயிறு விடுமுறையாகையால் தனது நண்பர் சித்துவுடன் பரநகரில் இருக்கும் பூங்காக்களை பார்வையிடச் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் பிரசன்னாவின் தோட்டதில் நடக்கும் போது சித்து "கங்கைக் கரையில் ஒரு பரமஹம்சர் வாழும் அழகிய இடம் ஒன்று உள்ளது. உனக்கு அங்கு செல்ல விருப்பமா ? " என வினவினார்.

"ம" வும் சம்மதிக்க அவர்களிருவரும் தக்சினேஸ்வர் கோவில் தோட்டத்தை நோக்கி உடனேயே பயண‌த்தை ஆரம்பித்தனர்.

அங்கு அவர்கள் பிரதான வாசலை அடைந்த‌ போது பொழுது சாய்ந்திருந்தது. இராமகிருஷ்ணரின் அறைக்கு நேராகச் சென்றார்கள்.

அறையில் பரமஹம்சர் ஒரு மர நாற்காலியின் மீது கிழக்கு நோக்கி வீற்றிருந்தார். முகத்தில் ஒரு புன்னகையுடன் அவர் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

அறை நிறைந்திருந்தது. எல்லாரும் நிலத்தில் இருந்துகொண்டிருந்தனர். ஆழ்ந்த அமைதியுடன் பரமஹம்சர் வார்த்தைகளை பருகிக்கொண்டிருந்தனர்.

"ம" மௌனமாக பேச்சிழந்து பார்துக்கொண்டு நின்றார். எல்லாப் புண்ணிய ஸ்தலங்களும் அங்கு ஒன்று சேர்ந்தது போல் இருந்தது. பூரியில் சைதன்னியர் கடவுளின் பெயரையும் புகழையும் தன் சீடர்களுடன் சேர்ந்து பாடுவது போல் இருந்தது.‌

சமயத்தின் அடிப்படைகளும் வழமைகளும்

பரமஹம்சர் : "கடவுளின் பெயரை கேட்கும் போது என்று உனக்கு கண்கள் ஈரமாகி மயிர் கூச்சரிக்கின்ற‌தோ அன்று முதல் சந்தியா வந்தனம் போன்ற கிரியைகளை நீ மேற்கொண்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அன்றுதான் கிரியைகளை கைவிடும் உரிமை உனக்கு வருகின்றது... அல்லது கிரியைகள் தாமாகவே அகன்று விடுகின்றன... அப்போது ஹரியின் பெயரையோ அல்லது "ஓம்" என்பதையோ பாராயணம் செய்தாற் போதுமானது."

"சந்தியா காயத்திரியுடன் இணைகின்றது. காயத்திரி ஓமில் சேர்கின்றது."

"ம" தன்னைச் சுற்றி மலைப்புடன் பார்த்துக் கொண்டார். " எவ்வளவு அழகிய இடம். இந்த ஈர்ப்பான மனிதரின் வார்த்தைகள் தான் எவ்வளவு அழகானவை. இந்த இடத்தை விட்டகள மனமேயில்லை."

சில நிமிடங்களின் பின் நினைத்துக் கொண்டார் "இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவோம். பின் மீண்டும் வந்து இங்கு இருப்போம்."

தொடரும்..

.

Share this post


Link to post
Share on other sites

.

அறையை விட்டு சித்துவுடன் வெளியே வரும் பொழுது தட்சினேஸ்வர ஆலய மாலை நேரப் பூசையின் மணி ஓசை, மேளம், தாரை போன்றவற்றின் இனிய ஒலி கேட்டது. தோட்டத்தின் தெற்கு மூலையில் அமைந்திருந்த நஹபத் என்னும் இசை மண்டபத்தில் இருந்தும் இசை ஒலி கேட்டது. இவ்வோசைக‌ள் க‌ங்கையின் மேலாக‌ மித‌ந்த‌ வ‌ண்ணம், க‌ட‌ந்து சென்று தொலைவில் த‌ம்மைத் தொலைத்துக் கொண்டிருந்த‌ன‌.

இள‌வேனிலின் மெல்லிய‌ வாடை பூக்க‌ளின் ந‌றும‌ண‌ங்க‌ளைச் சும‌ந்த‌ வ‌ண்ண‌ம் வீசிக்கொண்டிருந்த‌து. நில‌வு வானில் அப்போது தான் உதித்துக் கொண்டிருந்த‌து. மானுட‌ருடன் இய‌ற்கையும் சேர்ந்து மாலை நேர‌ ஆராத‌னைக்கு ஆய‌த்த‌ம் செய்வ‌து போல் இருந்த‌து.

dakshineswar_1945.jpg

கங்கைக் கரையில் தட்சினேஸ்வர் ஆலயம் 1945

"ம" வும் சித்துவும் அங்கிருந்த பன்னிரண்டு சிவன் கோவில்கள், கிருஸ்ணஇராதை கோவில், பவதாரணி அம்மன் கோவில் போன்றவற்றிற்கு சென்று ஆராதனகளை கண்ணுற்றனர். "ம" வின் இதயம் மகிழ்ச்சியில் நிர‌ம்பிய‌து.

அவ‌ர்க‌ள் மீண்டும் இராம‌கிருஸ்ண‌ர் அறையை நோக்கி பேசிய‌ப‌டி ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இராணி இராச‌ம‌ணி என்ப‌வ‌ரே கோவில் தோட்ட‌த்தை உருவாக்குவ‌த‌ற்கான‌ நிதியை வ‌ள‌ங்கியிருந்தார் என்றார் சித்து. "காளி, கிருஷ்ணர், சிவ‌ன் ஆக க‌ட‌வுள் தின‌மும் இங்கு வ‌ண‌ங்க‌ப் ப‌டுகின்றார். சாதுக்களுக்கும் வ‌றிய‌வ‌ர்க‌ளுக்கும் இங்கு உண‌வு வ‌ள‌ங்க‌ப் ப‌டுகின்ற‌து."

இராம‌கிருஸ்ண‌ரின் அறை வாச‌லை மீண்டும் அவ‌ர்க‌ள் அடைந்த‌ போது, வாச‌ல் மூடியிருப்ப‌தைக் க‌ண்டார்க‌ள். வாச‌லின் வெளியே பிருந்தை என்னும் ப‌ணிப் பெண் நின்றுகொண்டிருந்தாள்.

ஆங்கிலேய நாகரீக‌‌த்தில் ப‌யின்ற‌ "ம" அனும‌தியின்றி அறையினுள் நுழைவ‌த‌ற்கு ச‌ங்க‌ட‌ப் ப‌ட்ட‌வ‌ராய் ப‌ர‌மஹ‌ம்ச‌ர் உள்ளேயா இருக்கின்றார் என அவ‌ளிட‌ம் வின‌வினார்.

"ஆம். அவ‌ர் உள்ளேதான் இருக்கின்றார்."

"எவ்வ‌ள‌வு கால‌மாய் அவ‌ர் இங்கு வாழ்ந்து வ‌ருகிறார் ?"

"ஓ.. அவ‌ர் நீண்ட‌ கால‌மாய் இங்கு த‌ங்கியிருக்கிறார்."

"அவ‌ர் புத்த‌க‌ங்கள் நிறைய‌ வாசிப்பாரா ?"

" புத்த‌க‌ங்க‌ள்..? இல்லை. அவ‌ர் வார்த்தைக‌ள் தான் புத்த‌க‌ங்க‌ள்"

"ம" க‌ல்லூரியில் த‌ன் ப‌டிப்பை சிறிது கால‌த்திற்கு முன்பு தான் முடித்திருந்தார். இராம‌கிருஸ்ண‌ர் புத்த‌க‌ங்க‌ள் எதுவுமே ப‌டித்த‌திலை என்ப‌து அவ‌ருக்கு ஆச்ச‌ரிய‌த்தை ஏற்ப‌டுத்திய‌து.

"அவரது மாலை நேர‌ப் பூசைக்குரிய‌ நேர‌மோ தெரிய‌வில்லை.. நாங்க‌ள் உள்ளே செல்ல‌லாமா ? நாங்க‌ள் அவ‌ரைப் பார்ப்ப‌த‌ற்கு மிக‌வும் ஆவ‌லாய் உள்ளோம் என்ப‌தை தெரிய‌ப் ப‌டுத்துவீர்க‌ளா?"

"பிள்ளைக‌ளே உள்ளே செல்லுங்க‌ள். உட்சென்று அம‌ர்ந்து கொள்ளுங்கள்" என்றாள் பிருந்தை.

உள்ளே செல்லும் போது, இராம‌கிருஸ்ண‌ர் த‌னியாக‌ ம‌ர‌ நாற்காலியின் மேல் இருந்து கொண்டிருப்ப‌தை அவ‌தானித்த‌ன‌ர். ஊதுப‌த்திக‌ள் எரிந்து முடிந்திருந்த‌ன‌. க‌தவுகள் யாவும் மூட‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. நுழையும் போது "ம‌" கூப்பிய‌ கைக‌ளுட‌ன் குருவை வ‌ண‌ங்கினார்.

தொடரும்..

.

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயம் ஈசன்! பகவானின் ஆசி எப்பவும் உண்டு தொடருங்கள் ஈசன் வாழ்த்துக்கள். :unsure:

Share this post


Link to post
Share on other sites

.

அவர் அவர்களை அமருமாறு வேண்ட, தரையில் அமர்ந்தனர். ஸ்ரீ இராமகிருஸ்ணர் அவர்களிடம் "எங்கே வசிக்கின்றீர்கள் ? என்ன தொழில் செய்கிறீர்கள் ? பரநகர் வந்ததன் காரணம் யாது ? என்று வினவினார். "ம" கேள்விகளிற்குப் பதிலளித்தார். பதிலளிக்கும் போது, இடையிடையே பரமஹம்சர் சுய நினைவை இழப்பதையும் கவனித்தார்.

இது பாவனை எனப்படும் பரவச மனநிலை என்பதை பிற்பாடு அறிந்து கொண்டார். தூண்டிலைப் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ஒருவனின் மனனிலை போன்றது; தூண்டிலை மீன் கவ்வ, மிதவை ஆடுகிறது;அவன் உசார் அடைந்து தூண்டில் மரத்தை பிடித்துக்கொண்டு மிதவையை உன்னிப்பாகவும் ஆவலுடனும் கவனிக்கிறான்; அவன் யாருடனும் பேச மாட்டான்; அப்படியான ஒரு நிலையிலேயே ஸ்ரீ இராமகிருஸ்ணரின் மனம் இருந்தது.

மாலை நேரங்களில் பல தடவைகள் இராமகிருஸ்ணர் இப்படியான மனநிலைக்கு செல்வதையும், சில வேளைகளில் முற்றாக உலக உணர்வை இழப்பதையும், பின்னாட்களில் "ம" அவதானித்திருந்தார்; கேள்விப்பட்டும் இருந்தார்.

"ம": "நீங்கள் மாலை நேர வழிபாட்டை செய்ய உள்ளீர்கள் போலுள்ளது. அப்படியாயின் நாங்கள் விடைபெற‌லாமா?"

ஸ்ரீ இராமகிருஸ்ணர்: (பரவச நிலையில்) "இல்லை..இல்லை.. இது மாலை வழிப்பாடல்ல."

சிறிய சம்பாசனையின் பின் "ம" குருவை வணங்கி விடைபெற்றார். "மறுபடியும் வா" ‍ என்று வழியனுப்பி வைத்தார் இராமகிருஸ்ணர்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் "ம" யோசிக்கலானார். "என்னைத் தன்னிடம் கவர்ந்திழுக்கும் இந்த சாந்த சொரூபியான மனிதர் யார் ? கல்விமானல்லாத ஒருவர் மேன்மை அடையச் சாத்தியம் உண்டா ? எவ்வளவு அதிசயமாக இருக்கிறது ! அவரை மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளது. அவரே 'மறுபடியும் வா' என்றாரே. நாளையோ மறுநாளோ மீண்டும் அங்கு செல்ல வேண்டும்."

.

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயம் ஈசன்! பகவானின் ஆசி எப்பவும் உண்டு தொடருங்கள் ஈசன் வாழ்த்துக்கள். :unsure:

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நன்றி சுவி. :unsure:

Share this post


Link to post
Share on other sites

நல்ல பதிவு ...தொட‌ர்ந்து பதியுங்கள் நாங்கள் வாசிப்போம்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல பதிவு ...தொட‌ர்ந்து பதியுங்கள் நாங்கள் வாசிப்போம்.

முயற்சி செய்வோம். ஆங்கில மூலம் 1500 பக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

.

இரண்டாவது சந்திப்பு

"ம" இரண்டாம் முறை ஸ்ரீ இராமகிருஸ்ணரை தட்சினேஸ்வரத்தின் தென்கிழக்கில் அமைந்த‌ தாழ்வாரத்தில் அதிகாலை எட்டு மணியளவில் சந்தித்தார். அவர் முகச் சவரம் செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். குளிர் காலம் இன்னமும் அங்கு உலாவிக் கொண்டிருந்தபடியால் சிகப்புச் சரிகை போட்ட சால்வையால் போர்த்தியிருந்தார்.

"ம" வைக் கண்டதும் புன்முறுவலுடன் "வந்துள்ளாய்..நல்லது..இப்படி உட்கார்" என்றார். பேசும் போது சற்றுத் திக்கினார்.

ஸ்ரீ இரா: "எங்கே வசிக்கிறாய்?"

ம: "கல்கத்தாவில் ஐயா."

ஸ்ரீ இரா: "இங்கே எங்கு தங்குகிறாய் ?"

ம: "பரநகரில் இருக்கும் என் அக்கா இஷான் கவிராஜின் வீட்டில்."

ஸ்ரீ இரா: "ஓ இஷான் வீட்டிலா ? கேசாப் எப்படி உள்ளார் ? மிகவும் சுகவீனமாய் இருந்தார்."

ம:"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், இப்போது அவர் சுகம் அடைந்திருக்க வேண்டும்."

கேசாப் மீது குருவின் பாசம்

ஸ்ரீ இரா: "கேசாப் சுகமடைந்தால் அன்னைக்கு (காளிக்கு) இளநீரும் கற்கண்டும் தருவதாக வேண்டினேன். சில நேரங்களில் அதிகாலையில் எழுந்து அன்னை முன் அழுதுள்ளேன்: 'அன்னையே தயவுசெய்து கேசாப்பை சுகமடையச் செய்து விடு. கேசாப் வாழாவிட்டால் கல்கத்தா செல்லும் பொழுது யாருடன் பேசுவேன்?' அதனாலேயே அவளுக்கு இளநீரும் கற்கண்டும் தருவதாக சொன்னேன்."

"கல்கத்தா வந்துள்ள திரு.குக் என்பவரை உனக்குத் தெரியுமா? அவர் பிரசங்கம் செய்கின்றாரா? ஒருமுறை கேசாப் என்னை நீராவிப் படகில் கூட்டிச் செல்லும் போது அவரும் அங்கு வந்திருந்தார்."

ம: "ஆம் ஐயா, நானும் அப்படித்தான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவர் பிரசங்கங்களிற்கு நான் ஒருபோது சென்றதில்லை. அதனால் அவரைப் பற்றி அதிகம் தெரியாது."

"ம" வின் திருமணம் பற்றி ஸ்ரீ இராமகிருஸ்ணர்

ஸ்ரீ இரா: "பிரதாப்பின் சகோதரன் இங்கே வந்தான். சில நாட்கள் தங்கியிருந்தான்.அவன் தொழில் எதுவும் இல்லாதவன். இங்கே வாழப் போவதாகச் சொன்னான். தன் மனைவி பிள்ளைகளை மாமனார் வீட்டில் விட்டிருப்பதாக அறிந்தேன். அவன் குடும்பம் பெரியது! அவனைத் திருத்த முடிவு செய்தேன். அவன் பல பிள்ளைகளுக்குத் தகப்பன்! அயலவர் அவன் பிள்ளைகளை வளர்த்தெடுப்பார்களா? தன் மனைவி பிள்ளைகளை மற்றவர் உணவு கொடுத்து பராமரிக்கிறார்கள் என்றோ, அவர்கள் மாமனார் வீட்டில் விடப்பட்டுள்ளார்கள் என்றோ அவன் வெட்கப்படவேயில்லை. அவனை நன்றாகத் திட்டினேன். வேலை தேடுமாறும் சொன்னேன். அவன் இங்கிருந்து செல்ல விரும்பினான்."

"நீ திருமணம் செய்துவிட்டாயா?"

"ம": "ஆம் ஐயா."

ஸ்ரீ இரா: சற்று அதிர்ந்தவராய் - "இங்கே பார் ராம்லால்! இவன் திருமணம் செய்துள்ளான்!"

மிகவும் கொடிய குற்றம் செய்தவர் போல் "ம" நிலத்தைப் பார்த்தபடி அசைவற்றிருந்தார். "திருமணம் செய்வது அவ்வளவு பெரிய குற்றமா?" என்றெண்ணினார்.

குரு மேலும் தொடர்ந்தார்."பிள்ளைகள் உள்ளார்களா?"

இம்முறை "ம" விற்கு தன் இதயத்துடிப்பையே கேட்கக்கூடியதாக இருந்தது. நடுங்கிய குரலுடன் "ஆம் ஐயா, எனக்குப் பிள்ளைகள் உள்ளனர்."

மிகவும் கவலை அடைந்தவராய் ஸ்ரீ இராமகிருஸ்ணர் "இவனுக்குப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.."

"ம" அவமானம் அடைந்தவராய் பேச்சின்றி இருந்தார். அவர் ஆணவத்திற்கு அடி விழுந்திருந்தது.

.

Share this post


Link to post
Share on other sites

ramakrishna_seated_midsizencdas.jpg

மகாசயர் என்னும் மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடனான தனது சந்திப்புக்களை நாட்குறிப்பில் எழுதி வந்தார்.

அதன் தொகுப்பே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளாகும்.

இத்தொகுப்பு 19ம் நூற்றாண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்பயணத்தில் தூய்மை, அமைதி , நம்பிக்கை, இறை அனுபவம் என்ப‌வற்றை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டு செல்லலாம்.

எனக்கும் மகான்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை படிக்க வேண்டும் என்னும் ஆவல் இருந்தது.

அது உங்களின் தொடர் மூலம் நிறை வேறட்டும். நீங்கள் படங்கள் மூலம் ஸ்ரீ இராம கிருஷ்ணரின் சந்திப்புக்களை இணைத்திருப்பது, இத் தொடரை தொடர்ந்து வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. நன்றி ஈசன்.

Share this post


Link to post
Share on other sites

.

சில நிமிடங்களின் பின் ஸ்ரீ இராமகிருஸ்ணர் "ம" வை கனிவாகப் பார்த்தபடி "உன்னிடம் நல்ல குணாம்சங்கள் காணப்படுகின்றன. ஒருவருடைய கண்கள் போன்றவற்றைப் வைத்து என்னால் இதைச் சொல்லமுடியும். உன்னுடைய மனைவி எப்படிப் பட்டவள் ? அவளிடம் இறையுணர்வு இருக்கின்றதா ? அல்லது அவள் அவித்தையிடம் (பொருளாசை) அடிமைப்பட்டுள்ளாளா ?

"ம": "அவள் பரவாயில்லை. ஆனால் சற்று அறிவு குறைந்தவள்."

"ஸ்ரீ இரா": ‍முகம் சுளித்தவராய் "நீ மிகவும் அறிவாளியோ ?"

"ம" இது வரை அறிவுக்கும் அறியாமைக்கும் உள்ள வித்தியாசம் ஒருவர் புத்தகங்கள் படிப்பதாலும் பாடசாலை செல்வதாலுமே ஏற்படுகின்றது என்பதாகவே கருதியிருந்தார். பிற்பாடு இது தவறான கொள்கை என்றுணர்ந்தார். க‌ட‌வுளை அறித‌லே அறிவு அவ‌னை அறியாமையே அறியாமை என்ப‌தை க‌ற்றுக் கொண்டார்.

ஸ்ரீ இராமகிருஸ்ணர் "நீ மிகவும் அறிவாளியோ ?" என்ற‌போது "ம‌" வின் ஆண‌வ‌ம் மீண்டும் நொந்துபோன‌து.

க‌ட‌வுள் அருவ‌மாக‌வும் உருவ‌மாக‌வும்

குரு: "க‌ட‌வுளை உருவ‌முள்ள‌வ‌ராக‌வா , உருவ‌மற்ற‌வ‌ராக‌வா ந‌ம்புகிறாய்?"

"ம": - த‌ன‌க்குள் - "ஒருவ‌ர் எப்ப‌டி உருவ‌முள்ள‌ க‌ட‌வுள் மீதும் உருவ‌ம‌ற்ற‌ க‌ட‌வுள் மீதும் ஒரேநேர‌த்தில் ந‌ம்பிக்கை வைக்க‌முடியும் ? ஒன்றிற்கொன்று முர‌ன்ப‌டும் இர‌ண்டு க‌ருத்துக்க‌ள் எப்ப‌டி ஒரேநேர‌த்தில் ச‌ரியாக‌ இருக்க‌ முடியும்? பால் வெள்ளையாக‌வும் க‌ருப்பாக‌வும் இருக்க‌ முடியுமா?"

"ம‌": "ஐயா, நான் க‌ட‌வுளை உருவ‌ம‌ற்ற‌வ‌ராக‌வே நினைக்கிறேன்."

master-mahasaya.jpg

"ம‌" வின் பிற்கால‌த் தோற்ற‌ம்

Share this post


Link to post
Share on other sites

உந்த ராமகிருஷ்ணரை தூக்கித் திரியும் தற்கால துறவிகள் கூடத்தின் கொட்டங்கள், அயோக்கியத் தனங்கள் எல்லை மீறிப் போவதாக பலர் கூறுகின்றனர். உங்கள் காத்தென்ன ஈஸான்?

Share this post


Link to post
Share on other sites

உந்த ராமகிருஷ்ணரை தூக்கித் திரியும் தற்கால துறவிகள் கூடத்தின் கொட்டங்கள், அயோக்கியத் தனங்கள் எல்லை மீறிப் போவதாக பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்தென்ன ஈச‌ன்?

இந்த தொகுப்பிலேயே விலை மாதர்களிடம் செல்லும் ஒரு சிறந்த "குடி" மகன் இராமகிருஸ்ணரின் (அவர் வாழும்போதே) சீடராக இருந்து கொண்டிருப்பதைப் ப‌டிப்பீர்க‌ள்.

இராம‌கிருஸ்ண‌ர் சொல்லுகின்ற‌ விச‌ய‌மே அதுதான். ம‌ன‌த்தை க‌ட‌வுள் மீது (மட்டுமே) குவி. ஆயிர‌ம் கோடி குறைக‌ள் உள்ள‌ உல‌க‌த்தின் மீது அத‌னை சித‌ற‌ விடாதே என்ப‌துதான்.

இத்தொகுப்பை ப‌டித்து முடிக்கும் போது நீங்க‌ள் கேட்ட‌ கேள்வியின் விடையை நீங்க‌ள் அறிவீர்க‌ள். வார்தைக‌ளால் சொல்ல‌ முடியாவிட்டாலும் ம‌ன‌த்தால் மௌன‌மாக‌ உண‌ர‌க்கூடிய‌தாக‌ இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

.

குரு: மிகவும் நல்லது. இவ்விரண்டு அம்சங்களில் ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைத்தாலே போதுமானது. நீ உருவமற்ற கடவுளில் நம்பிக்கை வைத்துள்ளாய். அது சரியானதே. ஆனால் அதுமட்டுமே சரியானது ஏனயவை யாவும் தவறானவை என்று ஒரு போதும் நினைக்காதே. கடவுள் உருவமுடையவர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு உருவமற்றவர் என்பதும் உண்மை. உனக்கு எதில் நம்பிக்கை உள்ளதோ அதை இறுக்கப் பிடித்துக்கொள்.

இரண்டு நிலைகளுமே உண்மையானவை என்பது "ம" வை ஆச்சரியப் பட வைத்தது. இதை அவர் தன்னுடைய புத்தகங்களில் இருந்து ஒரு போதும் படித்ததில்லை. அவர் ஆணவத்திற்கு மூன்றவது முறையாக அடி விழுந்தது;

ஆனாலும் அவர் ஆணவம் முற்றாக நொருங்கி விடவில்லையாகையால் குருவுடன் விவாதம் செய்ய முற்பட்டார்.

கடவுளும் களிமண் உருவமும்

ம: "ஐயா, உருவமுள்ள கடவுளில் ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளார் என்போம். அதற்காக களிமண்ணால் செய்த உருவத்தைக் கடவுள் என்பதா?"

ஸ்ரீ இரா: - ‍குறுக்கிட்டு - "ஏன் களிமண்ணாகப் பார்க்கின்றாய் ? அவ்வுருவம் பரமாத்மாவின் வடிவமே."

ம‌ வினால் இந்த‌ "பரமாத்மாவின் வடிவம்" என்ப‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை விள‌ங்கிக் கொள்ள‌ முடிய‌வில்லை.

"ஐயா, க‌ளிம‌ண் உருவ‌த்தை வ‌ழிப‌டுகின்ற‌வ‌ர்க‌ள், ம‌ன‌க் க‌ண் முன் க‌ட‌வுளின் வ‌டிவ‌த்தை நிறுத்தியே வ‌ழிப‌ட‌ வேண்டும்.க‌ளிம‌ண் உருவ‌ம் க‌ட‌வுள் அல்ல‌ என்ப‌தையும், க‌ளிம‌ண்ணை வ‌ழிப‌ட‌த் தேவையில்லை என்ப‌தையும் அவ‌ர்க‌ளுக்கு அறிய‌த் த‌ர‌ வேண்டும்."

க‌ட‌வுளே உண்மையான‌ ஆசான்

குரு: - அழுத்தமாக - "மற்றவர்களுக்கு பிரசங்க‌ம் செய்வதே கல்‌க‌த்தா வாசிக‌ளின் பொழுது போக்காகி விட்ட‌து. தம்முடைய‌ அறியாமையை வில‌க்க‌ முய‌ற்சி செய்ய‌ மாட்ட‌ர்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளிற்கு போத‌னை செய்ய‌ நீங்க‌ள் யார்?"

"இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் அதிப‌தி எவ‌னோ அவன் எல்லோர்க்கும் போதிப்பான். பிரபஞ்சத்தைப் படைத்த‌ அவ‌ன் ம‌ட்டும் தான் எங்க‌ளிற்குப் போதிப்பான். அவ‌னே ச‌ந்திர‌னையும் சூரியனையும், மனிதனையும் மிருகங்களையும், யாவற்றையும் ப‌டைத்தவ‌ன்;இத்த‌னை செய்த‌ இறைவ‌ன் த‌ன்னை வ‌ழிப‌டுவ‌து எப்ப‌டி என்று ம‌னித‌ர்க்கு போதிக்க‌ மாட்டானா? அவ‌ர்க‌ளிற்கு போத‌னை வேண்டுமாயின் அவ‌ன் ஆசானாவான். அவ‌னே எம் உள்ளார்ந்த‌ வ‌ழிகாட்டி."

"க‌ளிம‌ண் உருவ‌ வ‌ழிபாடு த‌வ‌றான‌து என்று வைத்துக் கொள்வோம்; அப்பிரார்த‌னைக‌ள் யாவும் த‌ன்னை ம‌ட்டுமே நோக்கிய‌து என்று க‌ட‌வுளுக்கு தெரியாதா என்ன‌? நிச்சிய‌ம் அவ‌ன் ம‌கிழ்ந்து போவான். உருவ‌ வ‌ழிபாட்டால் உன‌க்கு ஏற்ப‌டும் துன்ப‌ம் தான் என்ன‌ ? உன்னுடைய‌ அறிவையும் ப‌க்தியையும் வ‌ள‌ர்த்துக் கொள்ள நீ முய‌ற்சி செய்ய‌ வேண்டும்."

இம்முறை "ம‌" த‌ன்னுடைய‌ ஆண‌வ‌ம் முற்றாக‌ நொருங்கிய‌தை உண‌ர்ந்தார்.

.

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் மகான்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை படிக்க வேண்டும் என்னும் ஆவல் இருந்தது.

அது உங்களின் தொடர் மூலம் நிறை வேறட்டும். நீங்கள் படங்கள் மூலம் ஸ்ரீ இராம கிருஷ்ணரின் சந்திப்புக்களை இணைத்திருப்பது, இத் தொடரை தொடர்ந்து வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. நன்றி ஈசன்.

வாசித்து முடிந்ததும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வீர்கள் தமிழ் சிறி. :unsure:

Share this post


Link to post
Share on other sites

"அவர் சொல்வது உண்மையே.மற்றவர்களுக்கு உபதேசிக்கும் தேவை எனக்கு என்ன இருக்கிறது? நான் கடவுளை அறிந்துள்ளேனா ? உண்மையிலேயே கடவுளை நேசிக்கின்றேனா ? நான் தூங்கவே போதிய இடம் இன்றி இருக்க நன்பர்களையும் அங்கு வரவேற்கிறேன் ! கடவுளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது இருந்தும் மற்றவர்களுக்கு போதிக்க முயற்சிக்கிறேன். வெட்கம்! முட்டாள்தனமான செயலன்றோ ! இது கணிதமோ வரலாறோ இலக்கியமோ அல்ல கற்றுத்தருவதற்கு. இது கடவுளைப் பற்றிய ஆழமான புதிர். அவர் பேச்சு என்னைக் கவர்ந்துள்ளது."

இது தான் "ம" குரு நாதருடன் மேற்கொண்ட முதலாவது விவாதம். கடைசி விவாதமும் இதுவே.

குரு: "உருவ வழிபாட்டைப் பற்றி சொன்னாய். அது களிமண்ணால் செய்த உருவமாயினும், அத்தகைய வழிபாடு தேவையானதே. பல வழிபாட்டு வடிவங்களை அவனே தந்துள்ளான். இவ்வழிபாட்டு வடிவங்களை மனிதர்களின் அறிவு நிலைக்கேற்ப இப்பிரபஞ்சத்தைப் படைத்தவன் எவனோ அவன் ஒழுங்கு படுத்தியுள்ளான்."

"ஒரு தாய் பிளைகளுக்கு ஏற்ற வகையில் வித விதமாகச் சமைக்கிறாள். அவளுக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பின் ஒவ்வொரு பிள்ளையின் செறிமானத்திற்கும் சுவைக்கும் ஏற்ப அவள் தயாரிக்கும் உணவு வேறுபடும்."

"நான் சொல்வது உனக்கு புரிகிறதா?"

தனிமையில் தியானமும் நல்லவர்களின் நட்பும்

ம: பணிவாக "ஆம் ஐயா. எப்படி கடவுளின் மேல் எம் மன‌த்தை ஒருமிப்பது ?"

குரு: "கடவுளின் பெயரை மீண்டும் மீண்டும் சொல். அவன் புகழைப் பாடு. நல்லவர்களின் நட்பையே பேண்; பக்தர்களிடமும் புனிதமான மனிதர்களிடமும் சென்று வா. உலகக் கடமைகளில் அல்லும் பகலும் உலாவும் மனம் கடவுளை நாடுதல் கடினம். ஆகவே அவ்வப்போது தனிமையிற் கடவுளை சிந்தித்தல் வேண்டும். தனிமையில் கடவுளைத் தியானிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் அன்றி, கடவுள் மேல் மனத்தை ஒருமித்தல் ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருக்கும்."

"மரக்கன்று சிறிதாக இருக்கும் போது அதனைச்சுற்றி வேலி அவசியம். இல்லையேல் விலங்கினங்கள் அதனை அழித்துவிடும்."

Share this post


Link to post
Share on other sites

.

"தியானிப்பதற்கு நீ உனக்குள் உள்முகமாக பின்வாங்க வேண்டும், அல்லது ஒரு தனிமையான இடத்திற்கோ அல்லது வனத்திற்கோ செல்ல வேண்டும். "

"எப்போதும் உண்மையானதை** உண்மைய‌ல்லாத‌வ‌ற்றில் இருந்து வேறுபடுத்திப் பார்.

க‌ட‌வுள் மாத்திர‌மே உண்மை. என்றும் இருப்ப‌து; ம‌ற்ற‌வை யாவும் உண்மை அற்ற‌வை. அதாவ‌து நிர‌ந்த‌ர‌ம் அற்ற‌வை."

"இப்ப‌டி வேறுப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம் நிர‌ந்த‌ர‌ம‌ற்றவ‌ற்றை ஒருவ‌ர் ம‌ன‌த்தில் இருந்து உத‌ரித் த‌ள்ள‌லாம்."

origins-of-meditation-mohenjo-daro-seal-yogi-meditating.jpg

தியான‌த்தில் சிவ‌ன். கி.மு 2600. மொஹ‌ஞ்ச‌தாரோ.

(இதுவரை கண்டெடுக்கப்பட்ட சிவனின் உருவச் சின்னங்களில் பழமையானது. 4600 வருடங்களிற்கு முற்பட்டது.)

meditation.jpg

த‌னிமையில் தியான‌ம்..

** உண்மை -- தொடக்கமும் முடிவும் இல்லாதது. என்றும் இருப்பது.

.

Share this post


Link to post
Share on other sites

.

ம: பணிவாக "எப்படி நாம் இந்த உலகத்தில் வாழ்வது..?"

குரு:" உன்னுடைய கடமைகளைச் செய், ஆனால் மனத்தை இறைவன் மேல் வைத்திரு. மனைவி மக்கள் தாய் தந்தை என்று எல்லோருடனும் வாழ்ந்து வா. அவர்களுக்கு பணிவிடைகளைச் செய். உன் உயிர் போல் அவர்க‌ளைக் கவனித்து வா. ஆனால்.. அவர்கள் உன்னைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உன் இதயம் அறிந்துகொள்ள வேண்டும்."

"ஒரு செல்வந்தன் வீட்டுப் பணிப்பெண், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறாள், ஆனால் அவள் நினைப்பு முழுவதும் கிராமத்தில் இருக்கும் அவள் வீட்டைப் பற்றியே இருக்கும். செல்வந்தன் பிள்ளைகளை தன் பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருவாள். அந்தப் பிள்ளைகளை 'என் ராமா , என் கிருஷ்ணா' என்றெல்லாம் அழைப்பாள். ஆனால் அவள் மனத்தில் அவர்கள் தன்னைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது நன்றாகத் தெரியும்."

"பெண் ஆமை நீருள் நீந்தித் திரியும். அத‌ன் நினைப்பெல்ல‌ம் எங்கிருக்கும் என்று உன‌க்குச் சொல்ல‌ முடியுமா? அவை க‌ரையில் இருக்கும் அதன் முட்டைக‌ள் மீதே இருக்கும். உன் உல‌க‌க் க‌ட‌மைக‌ள் யாவ‌ற்றையும் செய். ஆனால் ம‌ன‌த்தை இறைவ‌ன் மீது வை."

"இறைவ‌ன் மீது அன்பை வ‌ள‌ர்த்துக் கொள்ளாம‌ல் உல‌க‌ வாழ்க்கையில் இற‌ங்குவாய் ஆயின் அங்கு மேலும் மேலும் சிக்கிக் கொள்வாய். உல‌க‌ வாழ்வின் துன்ப‌ங்க‌ள் , க‌வ‌லைக‌ள் , அபாய‌ங்க‌ள் உன்னை ஆட்கொண்டு விடும். உல‌கியற் பொருட்களை எவ்வ‌‌ள‌வு தூர‌ம் நினைக்கின்றாயோ அவ்வ‌ள‌விற்கு அவ‌ற்றுட‌ன் உன‌க்கு பிணைப்பு ஏற்பட்டுவிடுகின்ற‌து."

"பிலாப் ப‌ழ‌ம் உரிப்ப‌த‌ற்கு முன் உன் கைக‌ளில் எண்ணை பூசிக்கொள்; இல்லையேல் பிலாவின் பால் உன் கைக‌ளில் ஒட்டிக் கொள்ளும். அதுபோல் தெய்வ‌ அன்பு என்னும் எண்ணையைப் பூசிக்கொண்ட‌பின் உல‌க‌ க‌ட‌மைக‌ளில் இற‌ங்கிக் கொள்ள‌லாம்."

"ஆனால் ஒருவ‌ர் த‌னிமையான‌ சூழ்நிலையில் மாத்திர‌மே இந்த‌ தெய்வீக‌ அன்பைப் பெற்றுக்கொள்ள‌ முடியும். பாலில் இருந்து நெய்யைப் பெற‌ அத‌னை த‌னியாக‌ ஒரு இட‌த்தில் வைத்து த‌யிராக‌ அடைய‌ விட‌வேண்டும். அத‌னை அதிக‌மாக‌த் தொந்த‌ர‌வு செய்து கொண்டிருந்தால் அது த‌யிராக‌ அடைய‌ மாட்டாது. அடுத்து உன் ம‌ற்ற‌ க‌ட‌மைக‌ள் அனைத்தையும் விட்டுவிட்டு, த‌யிரை க‌டைய‌ வேண்டும். அப்போதுதான் நெய் திர‌ண்டு வ‌ரும்."

Share this post


Link to post
Share on other sites

.

"மேலும், தனிமையில் கடவுளைத் தியானிக்கும் போது மனம் பக்தி, அறிவு, பற்று அற்ற நிலை என்பவற்றை அடைகின்றது. ஆனால் அதே மனம் உலக வாழ்க்கையில், கீழ் நோக்கிச் செல்கின்றது. உலகியலில் ஒரே ஒரு நினைப்புத்தான் உண்டு: 'காமினியும் காஞ்சனமும்' தான்.

"உலகமும் மனமும் தண்ணீரும் பாலும் போன்றவை. பாலினுள் தண்ணீரைக் கலக்க அவை இரண்டும் ஒன்றாகிவிடும். அதன் பின் பாலை தனியாகப் பிரிக்க முடியாது. ஆனால் பாலைத் தயிராக்கி நெய்யைப் திரட்டி எடு. அந்த நெய்யை தண்ணீரில் விட அது மிதக்கும். அதுபோல் தனிமையில் ஆன்மீகப் பயிற்சியினைச் செய்து அன்பு அறிவு என்னும் நெய்யைப் பெற்றுக் கொள். பின் உலகமெனும் தண்ணீரில் அதனை வைத்தாலும் அவையிரண்டும் கலக்காது. நெய் மிதக்கும்."

பாகுபாடு படுத்தப் பயிற்சி

"இவற்றுடன் பாகுபடுத்திப் பார்க்கவும் பயிற்சி செய். 'காமினியும் காஞ்சனமும்' நிரந்தரம் அற்றவை. கடவுள் மாத்திரமே நிரந்தரமான விடயம். பணத்தால் மனிதனுக்குக் கிடைப்பது என்ன ? உணவு, உடை, இருக்க இடம் அவ்வளவே. அதன் உதவியால் கடவுளை உணர முடியாது. அதனால் பணம் வாழ்க்கையின் குறிக்கோலாக ஒருபோது இருக்க முடியாது. இது தான் பாகுபடுத்திப் பார்த்தல். உனக்குப் புரிகிறதா?"

ம: "ஆம், ஐயா. அண்மையில் 'பிரபோத சந்திரோதயா' என்னும் ஒரு நாடகம் பார்த்தேன். அதிலும் பாகுபடுத்தல் பற்றி நன்கு சொல்லப்படுகின்றது."

குரு: "ஆம், பொருட்களைப் பாகுபடுத்திப் பார்த்தல். யோசித்துப் பார், பணத்திலோ அழகிய உடலிலோ என்ன இருக்கின்றது ? ஓர் அழகான பெண்ணின் உடல் கூட எலும்பு, சதை, கொழுப்பு மற்றும் ஏனய சகிக்க முடியாத பொருட்களையும் கொண்டுள்ளது என்பதை பாகுபடுத்திப் பார்க்கும் போது உனக்குப் புரியும். ஒருவன் கடவுளைக் கைவிட்டு விட்டு இப்படியானவற்றின் மீது ஏன் கவனத்தைச் செலுத்த வேண்டும் ? இவற்றுக்காக கடவுளை ஒருவன் ஏன் மறக்க வேண்டும் ? "

கடவுளை எப்படிக் காண்பது

ம: "கடவுளைக் காண முடியுமா?"

குரு: "ஆம், நிச்சயமாக. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் வாழ்தல், அவன் பெயரைப் மீண்டும் மீண்டும் சொல்லுதல்(பாராயணம் செய்தல்), அவன் புகழைப் பாடுதல், உண்மையானதை உண்மையற்றவற்றில் இருந்து வேறுபடுத்திப் பார்த்தல், இவையே அவனைக் காண்பதற்கான வழிகள்."

இறைவன் மேல் பேராவல்

ம: "எப்படியான நிலமைகளில் ஒருவர் கடவுளைக் காண்கிறார் ?"

குரு: "இதயம் முழுவதும் அவ‌னைக்காணும் பேராவலுடன் அவனை நோக்கி அழு, நீ அவனை நிச்சயம் காண்பாய். மனைவி, மக்கள் என்று குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றார்கள். பணத்திற்காக கண்ணீரிலே நீந்துகிறார்கள். கடவுளுக்காக அழுபவர் யார் ? அவனை நோக்கி அழு."

குரு பாடலானார்:

உன் அன்னை ஷியாமாவிடம் அழு,

மனமே உண்மையோடு அழு,

எப்படித்தான் தன்னை மறைப்பாள் ?

தொலை நிற்பாளோ ஷியாமா ?

உன் அன்னை காளி,

எப்படித்தான் தனை மறைப்பாள் ?

வில்வம் இலையோடு

செம்பருத்திப் பூக்களை

காணிக்கையாய் அவள் பாதங்களில்

மனமே, உன் அன்பெனும்

சந்தனத்தை பூசியே கொடு.

** பாகுபடுத்தல் - descrimination

காமினி - ‍ பெண்

காஞ்சனம் - பொன், பொருள்

Share this post


Link to post
Share on other sites

உந்த ராமகிருஷ்ணரை தூக்கித் திரியும் தற்கால துறவிகள் கூட்டத்தின் கொட்டங்கள், அயோக்கியத் தனங்கள் எல்லை மீறிப் போவதாக பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்தென்ன ஈஸான்?

இந்த தொகுப்பிலேயே விலை மாதர்களிடம் செல்லும் ஒரு சிறந்த "குடி" மகன் இராமகிருஸ்ணரின் (அவர் வாழும்போதே) சீடராக இருந்து கொண்டிருப்பதைப் ப‌டிப்பீர்க‌ள்.

இராம‌கிருஸ்ண‌ர் சொல்லுகின்ற‌ விச‌ய‌மே அதுதான். ம‌ன‌த்தை க‌ட‌வுள் மீது (மட்டுமே) குவி. ஆயிர‌ம் கோடி குறைக‌ள் உள்ள‌ உல‌க‌த்தின் மீது அத‌னை சித‌ற‌ விடாதே என்ப‌துதான்.

இத்தொகுப்பை ப‌டித்து முடிக்கும் போது நீங்க‌ள் கேட்ட‌ கேள்வியின் விடையை நீங்க‌ள் அறிவீர்க‌ள். வார்தைக‌ளால் சொல்ல‌ முடியாவிட்டாலும் ம‌ன‌த்தால் மௌன‌மாக‌ உண‌ர‌க்கூடிய‌தாக‌ இருக்கும்.

பதிலளிக்க முயன்ற உங்களுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

சுவாரசியமாக உள்ளது. ஈசன்.தொடர்ந்து எழுதுங்கள்

1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.

2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4. "என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இதுதான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச் சஞ்சலமே இராது.

9. எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

11. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள தொடர்பு.

12. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

13. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும். குருடு காணும். செவிடு கேட்கும்.

14. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.

15. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.

16. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

17. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.

18. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.

19. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.

20. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.

Share this post


Link to post
Share on other sites

நன்றி நுணா. வருகின்ற‌ கிழமை மீண்டும் தொடரும்.

Share this post


Link to post
Share on other sites

.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் தொடர்ந்த படியே : "கட‌வுள் மேற் கொண்ட பேராவல் (பற்று) செக்கச்செவேல் என்ற அதிகாலை போன்றது. அதிகாலை எப்படி சூரியோதயமாகத் தொடர்கிறதோ அதுபோல் அவன் மேற் கொண்ட பேராவல் அவனுடைய தரிசனமாகத் தொடரும்."

"இந்த மூன்று பற்றுக்கள் -- ‍ பொருளாசை கொண்டவனுக்கு பொருட்களின் மேல் உள்ள பற்று, தாயின் மேல் குழந்தையிடம் உள்ள பற்று, தூய்மையன பெண் தன் கணவன் மேல் கொண்ட விருப்பம் -- இம்மூன்று கவர்ச்சிகளும் ஒன்றுசேர்ந்தளவு கவர்ச்சி கடவுள் மீது ஒருவனுக்கு இருக்குமாயின், இறைவன் தன்னை அப்பக்தனுக்கு வெளிப்படுத்துகிறான்."

"ஒரு தாய் தன் மகவை நேசிப்பது போல, ஒரு புனிதவதி தன் கணவனை நேசிப்பதுபோல, ஒர் உலகாய்தி பொருளை நேசிப்பது போல கடவுளை நேசி. இம்மூன்று அன்புச் சக்திகளையும்; இம்மூன்று கவர்ச்சி விசைகளையும் ஒன்று சேர், சேர்த்து அவனிடம் கொடு. நீ அவனை நிச்சயம் காண்பாய்."

"உள்ள‌முருகி அவ‌னைப் பிரார்த்தி. ஒரு பூனைக்குட்டிக்கு 'மியாவ்','மியாவ்' என்று த‌ன் தாயை அழைக்க‌ மாத்திர‌மே தெரிகிற‌து. அத‌ன் தாய் அத‌னை எங்கு வைத்தாலும் அத‌ற்கு திருப்தியே. தாய்ப்பூனை, குட்டியை சில‌ ச‌ம‌ய‌ம் ச‌ம‌ய‌ல‌றையில் வைத்துக்கொள்ளும்; சில‌ நேர‌ம் த‌ரையில் வைத்துக் கொள்ளும்; சில‌ ச‌ம‌ய‌ம் க‌ட்டிலில் வைத்துவிடும். துன்ப‌ப்ப‌டும் போது குட்டி 'மியாவ்', 'மியாவ்' என்று ம‌ட்டும் தான் அழும். அவ்வ‌ள‌வே அதற்குத் தெரியும். ஆனால், அழுகையை கேட்ட‌ மாத்திர‌மே தாய்ப் பூனை, அவ‌ள் எங்கிருந்தாலும், குட்டியிடம் வ‌ந்து விடுகின்ற‌து."

மூன்றாவ‌து ச‌ந்திப்பு

அது ஒரு ஞாயிற்றுக் கிழ‌மை. மாலை நேர‌ம். "ம‌" மூன்றாவ‌து முறையாக‌ குருவைச் ச‌ந்திக்க‌ வ‌ந்திருந்தார். இந்த‌ அதிச‌ய‌ ம‌னித‌ருட‌னான‌ முத‌லிரு ச‌ந்திப்புக்க‌ளும் அவ‌ர் மீது ஆழ‌மான தாக்க‌த்தை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. அவ‌ர் சிந்த‌னை முழுதும் குருவின் மீதே ப‌டிந்திருந்த‌து. ஆன்மீகத்தின் ஆழமான உண்மைகளை மிக‌ எளிமையான‌ முறையில் அவ‌ர் விள‌க்கமளித்திருந்தார். இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஒருவ‌ரை "ம‌" முன்பொருபோதும் ச‌ந்தித்த‌தேயில்லை.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிறிய‌ நாற்காலியில் அம‌ர்ந்திருந்தார். விடுமுறையாகையால்,ப‌க்த‌ர்க‌ளினால் அறை நிர‌ம்பியிருந்த‌து. "ம‌" அவ‌ர்க‌ள் எவ‌ரிட‌மும் இன்னும் ப‌ரிச்ச‌ய‌ம் ஆக‌வில்லையாகையால், ஒரு மூலையில் அம‌ர்ந்து கொண்டார்.ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிரித்த‌ ப‌டியே ப‌க்த‌ர்க‌ளிட‌ம் பேசிக்கொண்டிருந்தார்.

ந‌ரேந்திர‌ர்

குருநாத‌ர் குறிப்பாக‌ ஒரு ப‌த்தொன்ப‌து வ‌ய‌து இளைஞ்ச‌னைப் பார்த்த‌ ப‌டி பேசினார். அவ‌ன் பெய‌ர் ந‌ரேந்திர‌நாத் (பிற்கால‌த்தில் சுவாமி விவேகான‌ந்த‌ர்). பிரம்ம சமாஜத்திற்கு அடிக்கடி சென்றுவரும் அவ‌ன் ஒரு க‌ல்லூரி மாண‌வ‌ன். அவ‌ன் க‌ண்க‌ள் பிர‌காசித்த‌ன‌; வார்த்தைக‌ளில் ஆன்மீக‌ம் நிர‌ம்பியிருந்த‌து; இறைவ‌னை நேசிப்ப‌வ‌னாக‌க் காண‌ப்ப‌ட்டான்.

Share this post


Link to post
Share on other sites

.

உலகாய்திகள் பற்றி ஆன்மீகவாதிகளின் பார்வை

சம்பாஷனை, உலகாய்திகள் எவ்வாறு ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்களை ஏளனமாகப் பார்க்கின்றார்கள் என்பது பற்றித் தான் இருக்கவேண்டும் என்று "ம" நினைத்துக் கொண்டார். குருநாதர், இப்படிப் பட்டவர்கள் உலகில் நிறைந்து இருப்பதாகவும், அவர்களை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

குரு (நரேந்திரரிடம்) "இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? உலகாய்திகள் ஆன்மீகவாதிகளைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பலவற்றைப் பேசுகின்றார்கள். ஆனால் இங்கே பார்! ஒரு யானை தெருவால் போகும் போது, நாய்களும் பிற விலங்குகளும் அதைப் பார்த்துக் குலைக்கின்றன; ஆனால் யானையோ அவற்றைத் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. பிறர் உன்னை பழி சொன்னால், அவர்களைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொள்வாய் ? "

நரேந்திரர்: "நாய்கள் என்னைப் பார்த்துக் குலைக்கின்றன என நினைத்துக் கொள்வேன்."

உயிர்கள் அனைத்திலும் இறைவன்

குரு (புன்னகைத்தவாறே) "ஓ, அப்படி அல்ல! குழந்தாய், நீ அந்த அளவிற்குச் செல்ல வேண்டியதில்லை! (சிரிப்பு). கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார். ஆனால் நல்லவர்களுடன் தான் நீ நெருங்கிப் பழகலாம; தீய சிந்தனையுள்ளவர்களிடம் இருந்து நீ விலகி இருக்க வேண்டும். புலியிலும் கடவுள் உள்ளார்; அதற்காக புலியை நீ கட்டி அணைத்துக் கொள்ள முடியாது.(சிரிப்பு). 'புலி கூட கடவுளின் வெளிப்பாடே; அதனைக் கண்டு ஓடுவானேன்?' என்று நீ கேட்கலாம். அக்கேள்வியின் பதில்: ' ஓடுமாறு சொல்பவர்களும் கடவுளின் வெளிப்பாடே. நீ ஏன் அவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது ?' "

Share this post


Link to post
Share on other sites

நன்றி ஈசன்! சு. கி . சிவம் கூறுவார்: இராமர் வாழ்ந்து காட்டினார் சொல்லவில்லை, கிருஸ்னர் வாழ்க்கை பற்றி நிறைய சொன்னார் ஆனால் அவர் போல வாழ்வது முடியாதது. இருவரும் சேர்ந்த ஒரு அவதாரமாய் இராமகிருஸ்ணர். சொல்லும், செயலுமே வாழ்க்கையாய் வாழ்ந்தவர். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நன்றி ஈசன்! சு. கி . சிவம் கூறுவார்: இராமர் வாழ்ந்து காட்டினார் சொல்லவில்லை, கிருஸ்னர் வாழ்க்கை பற்றி நிறைய சொன்னார் ஆனால் அவர் போல வாழ்வது முடியாதது. இருவரும் சேர்ந்த ஒரு அவதாரமாய் இராமகிருஸ்ணர். சொல்லும், செயலுமே வாழ்க்கையாய் வாழ்ந்தவர். :lol:

எலும்புத் துண்டின் பின்னால் அலையும் சுகி சிவம் போன்ற களிமண் அறிவாளிகளை காணுவது அரிது.

இந்த ஈனப்பிறவிகளை மேற்கோள் காட்டுவது பாலில் ஒரு துளி விசத்தை சேர்ப்பது போலாகிவிடும்.

தற்கால ராமக்ருஷ்ண மிசன் போலித் துறவிகளுக்குரிய இத்தகைய பித்தலாட்டங்களை விட்டுவிட்டால் அமுத மொழிகள் நல்லாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites