Jump to content

மாலதி டீச்சர் .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

post-5124-0-16483700-1289774790_thumb.jp

மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது. அம்மா அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு விடைபெற ஆரம்பித்தார். தனிமையை எண்ணி கண்கள் கலங்கினாலும் எனது ஒன்று விட்ட் அண்ணா என்னிலும் மூணு மாதங்கள் மூத்தவன் ( பெரியம்ம்வின் மகன்) அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டேன்.

முதல் நாளிலே எல்லோரையும் கைகளை தட்டியவாறு ஒரு புளியமரத்தை சுற்றி வலம் வந்தோம். பின்பு பத்துமணி இடைவெளி நான் கொண்டு சென்ற ஒரேஞ் ஜூஸ் ...தாகம் தீர்த்தது. சிறு பிஸ்கட்டுகளையும் சாபிட்டு , மறுபடியும் வகுப்புக்கு அழைத்து செல்ல பட்டோம் . முதல் நாள் ஓரளவு கலக்கம் ,தயக்கமாய் இருப்பினும் ஜெயந்தி என்னும் நண்பியும் சோபனா என்னும் நண்பியும் பழக் இனிமையானவர்கள். அடுத்த அடுத்த் நாட்களில் என அண்ணவுடன் செல்ல கற்றுக் கொண்டேன் . அது அரை நாள் வகுப்பு ஆகையால் சில சமயம் அம்மவும் சில சமயம் தாத்தாவின் சைக்கிள் சவாரியிலும் மதியம் வீடு வருவேன். பிற்காலத்தில் நல்ல் பாட்டு பாடும் பாடகி யானேன்.வருட இறுதியில் பெற்றார் தின விழா. அது ஒரு மார்கழி மாதம் நடுபகுதி , அப்பாவும் விடுமுறையில் வந்திருந்தார். அப்ப்பா அம்மா அண்ணா எல்லோரும் தொடங்குவதற்கு அறிமணி முன்னமே சென்று எனக்கு ஜோடனை செய்வதில் அம்மா உதவினாள். முதற்பாடல் " கொஞ்சிக் கொஞ்சி பேசி " என்பதற்கு அபிநயம் செய்யவேண்டும்.பின்பு ஒரு ஆங்கில் உரையாலில் ஒரு சிறு நாடகம் . அப்ப்போது தான் தொலைக் காட்சிபெட்டி நம்ம ஊரு க்குவந்த் ஆரம்பம்.அதில் நானும் ஒரு சிறுவனும் அம்மம்மாவுக்கு தொலைக் காட்சி போடுவதை காட்டி கொடுக்கவேண்டும் . அம்மம்மாவுக்கு நடிப்பவர் ஆவலுடன் வந்து இருக்க , சுவிச்சியை போட்டதும் அது ஒளிர வில்லை .காரணத்தை தேடுகிறோம்.(இது கதையின் சுருக்கம் ) .பின்பு தான் சுவருக் கான இணைப்பை கொடுக்க மறந்து விட்டோம். என்பது புலனானது.. விழாமுடிவில் ஆசிரியைகளுடன் நின்று படம் எடுத்துக் கொண்டோம். ஒரு மாலை நேரத்தில் ஆரம்பித்து இரவாகி விட்டது விழாமுடிவில் நான் நித்திரையாகி விட அப்பா என்னை தோளில் சுமந்து வந்தார்.வீட்டுக்கும் பள்ளிக்கும் நடை தூரம். மறு நாள் விபரம் மீண்டும் படமாய் ஓடியது. .

இப்படியான் என சிறுபராய நினைவு குழந்தைகளைக் கண்டதும் இடையில் வந்துபோகும்.உயர்கல்வி கற்று பரீட்சை முடிவுகளை எதிர் நோக்கும் விடுமுறைக்காலம் என் ஆர்வம் காரணமாக் அந்த பள்ளியிலேயே ஆசிரியையாக் சேர்த்து கொண்டார்கள். என முதல் வேலையும் அது தான் .நானும் குழந்தைகளுடன் குழந்தையாகி விடுவேன் . என் பாலர் வகுப்பு நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி . மீண்டும். இளம் பராய நினைவுகள் இலகுவில் மறப்பதில்லை .மறந்தாலும் அம் மா மீண்டும் நினைவூட்டுவார் . மனதில் இருக்கும் அழியாத கோலம்.

Link to comment
Share on other sites

நினைவுப்பகிரல் அருமை. நான் எனது பாடசாலை ஆரம்ப கல்வியை தொடங்கிய இடம் திருகோணமலை கோணேசுவரா கல்லூரி (இப்போது திருகோணமலை இந்துவுடன் இணைந்துள்ளது). முதல் நாள் ஓர் கிடுகு கொட்டகையின் கீழ் பாடம் நடந்தது. என்ன படித்தேன் என்பது நினைவில்லை. ஆனால், பாடம் தொடங்க முன்னர் எங்களுக்கு கேக் அடிக்கும் டிரேயில் வைத்து ஆளுக்கு இரண்டு பேரீச்சம்பழம் தந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு பகிர்வுக்கு நன்றிகள் :unsure:

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்தலுக்கு நன்றி.

வீட்டுச் சூழல் நன்றாக இருந்தபடியால் எனக்கு பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. கொய்யா கம்பால் அடித்துத்தான் அண்ணன் நர்சரிக்கு கூட்டிச்செல்வான். நான் அவனுக்கு கல்லால் எறிவேன். பின்பு அப்பா காரில் கொண்டு விடத்தொடங்கினார். பள்ளிகூட உடைகளை ஒழித்து வைப்பது, காய்ச்சல் வருவதற்காக அக்குளில் வெங்காயம் வைப்பது, இடையில் வகுப்பை விட்டு ஓடிவருவது என கஷ்டம் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

வளர்ந்த பின்பு ஒருநாள் எனக்கு நர்சரி படிப்பித்த டீச்சர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். நிறைய பேருக்கு முன்னாள் என்னைப் பற்றி சொல்லி சிரித்தார். எனக்கு வெட்கமாக போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பள்ளிக்கு அருகில்தான் வீடு. அப்பவே எனக்கு பள்ளிக்கு போவதென்றால் சரியான இஷ்ட்டம். எப்பவும் சின்னம்மா, குன்சம்மாவுடன் தர,தரவென்று இழுபட்டுத்தான் பாடசாலை கேட் வரைக்கும் போவது. பள்ளி விட்டதும் அந்த கேட்டால் வரும் முதல் ஆள் நான்தான்! :unsure:

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்விற்கு,

நான் முன்பே ஊகித்தேன், நீங்கள் ஓர் ஆசிரியை ஆக தான் இருந்திருப்பீர்கள் என‌

ஏனென்றால் களஉறவுகளை எப்பொழுதும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கின்றீர்க‌ள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பள்ளி முதல் நாள் மறந்தே போச்சு. நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பாட்டி  இன்று தான் பார்த்தேன்

 

அது சரி

இது எத்தனையாம் ஆண்டு.....?? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.