Jump to content

என்ன செய்யலாம்


sathiri

Recommended Posts

திருப்பப்பட்ட திசைகளில் உண்மையைத்தேடி ....

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

இப்ப பிரச்சினை ஒரு 30 வயது விதைவை பெண் 56 வயது அப்புவை கல்யாணக் கட்ட போறன் எண்டு நிக்குது அதுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை.... 56 வயது அப்பு தனது வனப்பான சூழலை பாவிச்சு நொந்து போய் இருக்கும் பெண்ணை வளைக்க நிற்பது பற்றியது...

உலகம் அறியாமல் இருக்கின்றீர்கள். வழமையாக திருமணம் என்று வரும்போது வனப்பான சூழலை பாவித்து நொந்து போய் உள்ளவர்களை வளைப்பது காலங்காலமாக நடந்து வருகின்றது. இதை 56வயதில் தாரம் இழந்த தணிகாசலத்தார் மட்டு செய்வதாக கூறமுடியாது. 20 வயது தொடக்கம் வசதிகள், வளங்கள் படைத்த பல இலட்சம் இளைஞர்களும் செய்கின்றார்கள். ஆனால், இங்கு தணிகாசலத்தாருக்கு 56 வயது என்பதே அவரை ஓர் கெட்டவரான தோற்றத்தில் பலரும் உருவகிப்பதற்கு காரணமாகிவிட்டது.

அந்த பெண்களிடம் கேட்டு பாக்கலாமோ வேண்டாமோ எண்ட கேள்விக்கு தான் நாங்கள் வேலையத்த வேலை என்கிறம்...

இதைத்தான் நாங்களும் ஏற்கனவே சொல்லி இருக்கிறம். யாரோ ஒருவர் சாத்திரி அண்ணாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏதோ ஆர்வக்கோளாற்றில் இவ்வாறு உரையாடினார். நேசக்கரம் மூலம் ஊரில் உள்ள தாரம் இழந்த பெண்களிற்கு மறுமணம் முடித்து வைப்பது என்பது சாத்தியமான ஓர் விடயமாக எனக்கு தெரியவில்லை. தேவையில்லாத வீண் வம்புகள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, தணிகாசலத்தாருக்கு மன்னிக்கவும் நன்றி, வணக்கம் என்று கூறுவதோடு விடயம் முடிந்தது.

Link to comment
Share on other sites

மேய்ந்ததில் சிக்கியது 143,000,000 Orphans

Link to comment
Share on other sites

யுரேக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆ :D :D :D:):wub::unsure::wub::mellow:

நேசக்கரம் மூலம் ஊரில் உள்ள தாரம் இழந்த பெண்களிற்கு மறுமணம் முடித்து வைப்பது என்பது சாத்தியமான ஓர் விடயமாக எனக்கு தெரியவில்லை. தேவையில்லாத வீண் வம்புகள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, தணிகாசலத்தாருக்கு மன்னிக்கவும் நன்றி, வணக்கம் என்று கூறுவதோடு விடயம் முடிந்தது.

Link to comment
Share on other sites

உலகம் அறியாமல் இருக்கின்றீர்கள். வழமையாக திருமணம் என்று வரும்போது வனப்பான சூழலை பாவித்து நொந்து போய் உள்ளவர்களை வளைப்பது காலங்காலமாக நடந்து வருகின்றது. இதை 56வயதில் தாரம் இழந்த தணிகாசலத்தார் மட்டு செய்வதாக கூறமுடியாது. 20 வயது தொடக்கம் வசதிகள், வளங்கள் படைத்த பல இலட்சம் இளைஞர்களும் செய்கின்றார்கள். ஆனால், இங்கு தணிகாசலத்தாருக்கு 56 வயது என்பதே அவரை ஓர் கெட்டவரான தோற்றத்தில் பலரும் உருவகிப்பதற்கு காரணமாகிவிட்டது.

தணிகாசலத்தாரின் 56 வயது எண்டது மிகக்குறைந்த அளவான பிரச்சினைதான்... காரணம் தனிகாசலத்தார் நான் ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்க நினைக்கிறன் எனக்கு உதவுங்கோ எண்டு கேட்டது இல்லை இப்ப பிரச்சினை.... அப்படி கேட்டு இருந்தால் தணிகாசலத்தாரை முதலாவது ஆளாக பாராட்டி இருப்பன்...

நான் வாழ்வு குடுக்கிறன் எனக்கு பிள்ளை இல்லாத 30 வயதுக்கு உட்பட்ட பிள்ளை ஒண்டை பிடிச்சு தாருங்கோ எண்டதுதான் பிரச்சினை... 30 வயது பெண் யாராவது உண்மையான விருப்போடை அவரை கட்ட சம்மதிக்க போவது இல்லை... அப்படி கட்டினாலும் வீட்டிலை இருக்கும் பெரிசுகளின் நச்சரிப்புக்கள் புறநிலை சூழல் தான் அந்த பெண்ணை இதுக்கை தள்ளிவிடும்...

அப்படியும் ஒரு பெண் பிரான்ஸ் வரைக்கும் வந்தது எண்டாலும் ஊரிலை இருப்பவர்களுக்கும் தணிகாசலத்தாருக்கும் ஒரு கருவி தான் அந்த பெண்...

அந்த 30 வயது பெண் யாராவது 56 வயது தணிகாசலத்தாரை விரும்பி கட்ட போறன் எண்டு சொல்லுவார் எண்டா நினைக்கிறீர்கள்... அப்படி விரும்பாமல் விட முதல் காரணம் என்னவாக இருக்கும்....??

இதைத்தான் நாங்களும் ஏற்கனவே சொல்லி இருக்கிறம். யாரோ ஒருவர் சாத்திரி அண்ணாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏதோ ஆர்வக்கோளாற்றில் இவ்வாறு உரையாடினார். நேசக்கரம் மூலம் ஊரில் உள்ள தாரம் இழந்த பெண்களிற்கு மறுமணம் முடித்து வைப்பது என்பது சாத்தியமான ஓர் விடயமாக எனக்கு தெரியவில்லை. தேவையில்லாத வீண் வம்புகள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, தணிகாசலத்தாருக்கு மன்னிக்கவும் நன்றி, வணக்கம் என்று கூறுவதோடு விடயம் முடிந்தது.

நாகரீகம் உள்ளை ஒருவரால் இப்படி முன்னபின்ன தெரியாத ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தனது இச்சையை சொல்லி இருக்க மாட்டார்கள் என்பதுதான் எனது கருத்து...

Link to comment
Share on other sites

30 வயது பெண் யாராவது உண்மையான விருப்போடை அவரை கட்ட சம்மதிக்க போவது இல்லை... அப்படி கட்டினாலும் வீட்டிலை இருக்கும் பெரிசுகளின் நச்சரிப்புக்கள் புறநிலை சூழல் தான் அந்த பெண்ணை இதுக்கை தள்ளிவிடும்...

ஒவ்வொருவரையும் அவர்கள் வாழும் சூழ்நிலை, வாழ்க்கை நிலமைகளே அவர்கள் வாழ்வில் எடுக்கும் தீர்மானங்களில் பிரதான பங்கு வகிக்கின்றன. உயிருக்கு உயிராக காதலித்துவிட்டு பெற்றோரின் நச்சரிப்பு காரணமாக வேறு ஒருவரை உண்மையான விருப்பமின்றி திருமணம் செய்த எத்தனையோ பெண்களும், ஆண்களும் காணப்படுகின்றார்கள். வாழ்க்கையில் ஓர் கட்டத்தில் தொடர்ந்து நகரமுடியாமல் தத்தளிக்கும்போது ஓர் தாரம் இழந்த பெண் தணிகாசலம் போன்ற ஒருவரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வாரா என்று நாங்கள் வெறும் ஊகம் மூலம் பதில்கூற முடியாது.

நாகரீகம் உள்ளை ஒருவரால் இப்படி முன்னபின் தெரியாத ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தனது இச்சையை சொல்லி இருக்க மாட்டார்கள் என்பதுதான் எனது கருத்து...

முன்பின் தெரியாதவர் என்பதால் அவர் இவ்வாறு வெளிப்படையாக தனது விருப்பத்தை கூறி இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலம் கேட்டதில் தப்பு எதுவுமே இல்லை.

Link to comment
Share on other sites

இரண்டு துறவிகள் கோவில் வாசலில் நின்றிருந்தார்கள். இருவரும் மேலே கோபுரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் சொன்னார். ‘கொடி அசைகிறது!’

‘இல்லை’ என்றார் அடுத்தவர். ‘காற்று அசைகிறது!’

‘ம்ஹூம். தப்பு’ என்றார் முதல் துறவி. ‘காற்று எங்கேயும்தான் இருக்கிறது. ஆனால் கொடி இங்கே மட்டும்தானே அசைகிறது?’

‘காற்று மட்டும் இல்லாவிட்டால் கொடியால் எப்படி அசையமுடியும்?’ என்றார் இரண்டாவது துறவி.

இவர்கள் இப்படி மாறி மாறிச் சண்டையிட்டுக்கொண்டிருக்கையில் அந்தப் பக்கமாக அவர்களுடைய குருநாதர் வந்தார். ‘உங்களுக்குள் என்ன சண்டை?’

துறவிகள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். தங்களுடைய பிரச்னையைச் சொன்னார்கள். ‘நீங்களே சொல்லுங்கள் குருவே. இங்கே கொடி அசைகிறதா? அல்லது காற்று அசைகிறதா?’

‘இரண்டும் இல்லை’ என்றார் குருநாதர். ‘உங்களுடைய மனம்தான் அசைகிறது.’

மறுவிநாடி, துறவிகள் இருவரும் குருநாதர் அவருடைய காலில் விழுந்தார்கள்.

Link to comment
Share on other sites

வேலையில சும்மா மேலால் பாத்திட்டு இப்ப திறந்து பாத்தா கனக்க விஷயம் கதை பட்டிருக்கு. இது சம்பந்தமான எனது கருத்துக்களை கூறலாம் என யோசிக்கிறேன்.

தணி அண்ணர் அப்பிடிக் கேட்டதில் தப்பில்லை எனத்தான் நான் நினைக்கிறன். ஆனால் 30 வயதுக்கு குறைய இருந்தா நல்லம் எனக் கேட்டது கொஞ்சம் இடிக்குது. அதோட நேசக்கரம் நிறுவனத்திடம் கேட்டதும் சிறிது பிழை என நினைக்கிறன் ஆனால் நேசக்கரம் நிறுவனம், குறிப்பாக சாத்திரி அண்ணா பல தொடர்புகள் (contacts) இருப்பவர் என்ற ரீதியில் அவர் உதவக் கூடும் என தணி யோசித்திருக்கக் கூடும். அவர் கட்டுவது, அவரையும் அந்தக் குறிப்பிட்ட பெண்ணையும் பொறுத்த விடயம். இப்படி நாங்கள் சமூகம் கலாச்சாரம் எண்டு இங்கை அடிபடுவம். ஊரிலை நடக்கிற விசயங்களை அம்மா அப்பாவோட கதைக்கும் பொது அவர்கள் சொல்லும் போது என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது. நாங்கள் ஊரில் இருப்பவர்களை பல வருடங்கள் பின்தங்கிய ஆக்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறம். அங்க நடக்கிற வேலையளில சிலது அவுசில கூட நடக்காது. இதுகளக் கேட்டாப் பிறகு எனக்கு இங்கிருந்து கலாச்சாரம் அது இது எண்டு விசைப் பலகை வீரம் கதைக்கிரதக் கேக்க எரிச்சல் தான் வரும். புலம் பெயர் ஆக்களில பலர் எப்போதும் மற்றவர்களுக்காக தாங்கள் தான் முடிவெடுக்க விரும்புவினம். குறிப்பாக ஊரில இருக்கிற ஆக்கள் இவையள் சொல்லுற படிதான் செய்யோணும் எண்டு நினைக்கிறது மகா தப்பு. ஒரு நெல்சன் மண்டேலா, ஒரு கருணாநிதி செய்ய முடியும் எனின் ஏன் ஒரு தணியால் செய்ய முடியாது. அவர் இதுதான் சாட்டெண்டு தவிச்ச முயல் அடிக்காதவரைக்கும் சரி.

இது மிகவும் மென்மையான (sensitive) விஷயம் எனவே நேசக்கரம் ஒதுங்கியிருப்பது நல்லது என்ன நான் நினைக்கிறன். ஆனால் இன்னொருவர் கூறியது போல யாராவது தொடர்பு இருப்பவர்கள் அந்தப் பெண்களிடம் நிலைமைகளை விளக்கி கூறி அவர்களின் சம்மதத்தை கேட்கலாம். அப்படி யாருக்காவது பிடித்து அவர்களுக்கும் வாழ்க்கையில் துயரங்கள் குறைந்து நல்ல வாழ்க்கை அமைந்தால் எனக்கும் மகிழ்ச்சியே. :)

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விசயம் செய்த சிங்கள அமைச்சன் ஒருவன்.. அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ள நிலையில்.. யாழ்ப்பாணத்துப் பெண்ணையும் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி இருந்தார்.. இதைப் போய் எங்க எழுதிறது...???! அவனைப் போய் யார் திட்டிறது.. சபிக்கிறது..!

இராணுவத்தால் ஒட்டுக்குழுவால் பலாத்காரம்.. கதறக் கதறக் கற்பழித்துக் கொலை.. இளம் பெண் குழந்தையை வீதியில் போட்டுவிட்டு மாயம்... படிக்கிறம்...

இன்னொரு பக்கம்.. போரின் விளைவால்.. முதிர் கன்னிகள்.. விதவைகள் என்றும் அழுகிறம்...

நாளுக்கு நான்கு பெண்கள் தற்கொலை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறம்..

பிறகு ஒருவர் முன் வந்தால்.. அவரை மட்டமும் தட்டிறம்...

26 வயசு வித்தியாசம் வேற பார்க்கிறம்... ஆனால் தற்கொலை செய்ய விடுவம்....!

இடைக்கிடை பெரியாரின் போதனைகளை செருகிறம்...

இப்படியே நீங்கள் முரண்பட்டுக் கொண்டு நில்லுங்கோ..

தணிகாசலத்தார் ஊருக்குப் போய் ஒன்றல்ல.. இரண்டு கட்டிக் கொண்டு வராட்டிப் பாருங்கோ...!

இதில தணிகாசலத்தின் வெளிப்படைத்தன்மையை பாராட்டலாம். எத்தனையோ பேர் எத்தனையோ விசயங்களை களவாச் செய்துபோட்டு நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டு திரியினம்... அவையைக் காட்டிலும்.. தனது விருப்பத்தை முன் வைத்து மறு தரப்பிலும் அப்படியான விருப்பமுள்ளவை இருந்தா சொல்லுங்கோ என்று தானே கேட்கிறார்.

ஏன்.. ஒருவர் 26 வயசு வித்தியாசத்தில ஒரு விதவைக்கு வாழ்வு கொடுக்கிறதில.. யாழ் களத்தில உள்ளவைக்கு என்ன நஸ்டம் வந்திச்சுது...???!

எனக்குப் புரியல்ல.. நீங்களும்.. உருப்படமாட்டீங்க.. உருப்பட விரும்பிறவனையும் விடமாட்டீங்க.. உளறிக்கொண்டு மட்டும் இருங்கோ.. ஒரு பயனும் இல்ல..!

என்னுடைய கருத்து.. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பினால்.. அவர்கள் விரும்பிய படி செய்ய அனுமதிக்கலாம்.. அது தவறல்ல. இதில் 3ம் மவர்கள் கருத்துச் சொல்வது நல்ல விடயம் அல்ல..!

நெடுக்கண்ணா நீங்கள் கூறியவை யதார்த்தமான, சம கால நிகழ்வுகள். இதுக்காக உங்களுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

சஜீவன், தும்ப்ஸ் கூறியதுபோல் அவருக்கு பக்குவமாக சில விடயங்களை கூறலாம் (சாத்திரி அண்ணா அல்ல, தணிகாசலத்துடன் தொடர்பில் உள்ளவர்கள்). தணிகாசலம் பற்றி ஆதரித்து கருத்துக்களை நான் முன்வைத்தாலும் இங்கு தணிகாசலம் விடயமாக இன்னோர் விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதாவது..

இங்கு பலர் எவ்வாறு 56 வயது நபர் 30 வயது பெண் ஒருவரை திருமணம் செய்யக்கூடாது என.. வயது சம்பந்தமாக துவேசமான கருத்துக்களை கொண்டுள்ளார்களோ அவ்வாறே தணிகாசலம் அவர்களிடமும் அதே எண்ணப்பாடு காணப்படுகின்றது. அவரும் அதே அறியாமை மாயையில் சிக்குப்பட்டு உள்ளார்.

இன்னமும் தெளிவாக கூறினால்..

தணிகாசலம் கூட 30வயது பெண் ஒருவர் மூலமே தனது வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைய அல்லது திருப்தி அடைய முடியும் என்று தவறாக எண்ணியுள்ளார். சிலவேளைகளில் முப்பது வயது பெண் ஒருவரை மறுமணம் செய்வதால் கிடைக்கமுடியாத மகிழ்ச்சியும் நிம்மதியும் அவருக்கு 60 வயது பெண்மணி ஒருவரை மறுமணம் செய்வதால் கிடைக்கக்கூடும்.

தணிகாசலம் கூட தனது உளத்தில் நாற்பது வயது பெண் என்றால் அல்லது ஐம்பது வயது பெண் என்றால் முப்பது வயது பெண்ணை விட தகுதியில் குறைந்தவள் அல்லது தனக்கு பொருத்தமானவள் இல்லை என்று நினைத்துள்ளார். சிலவேளைகளில் மறுமணம் மூலம் குழந்தையை எதிர்பார்ப்பதால் இவ்வாறு கூறினாரோ தெரியாது.

இந்த உலகம் வியாபார மயமானது. இதற்கு ஒரு சில விதிவிலக்குகள் தவிர மற்றும் அபூர்வமாக ஒருசில வேறுபாடுகள் தவிர மிகுதி அனைத்திலும் அனைவரும் வியாபார ரீதியான வாழ்வில் கட்டுண்டு கிடக்கின்றோம்.

ஓர் கடைக்கு நாங்கள் செல்லும்போது பொருள் ஒன்றை வாங்கும் விடயத்தில் எவ்வளவு மலிவாகவும், தரமானதாகவும் வாங்க முடியுமோ அவ்வளவு மலிவானதாகவும், தரமானதாகவும் வாங்குவதற்கு முயற்சிக்கின்றோம். இவ்வாறே, கடையில் பொருள் ஒன்றை விற்பவர் எம்மிடம் இருந்து வறுகுவதை வறுகி எவ்வளவு இலாபம் ஈட்ட முடியுமோ அவ்வளவு இலாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றார்.

தணிகாசலம் அவர்கள் முப்பது வயது தாரம் இழந்த பெண்ணை தரமான துணையாக (பொருளாக) நினைத்து அதில் ஆசைப்படுகின்றார். அவர் தனது தேடலின் இறுதியில் தனது அதே வயதை ஒத்த தாரம் இழந்த ஐம்பது வயது பெண் ஒருவரை மணம் முடிக்கக்கூடும். அல்லது நாற்பது வயது பெண் ஒருவரை மணம் முடிக்கக்கூடும். அல்லது தான் எதிர்பார்க்கும் வகையில் துணை கிடைக்காமையால் தற்போது உள்ள நிலமையிலேயே வாழ்க்கையை ஓட்டக்கூடும்.

ஆயினும், எல்லோரும் தமது வரவுகளில் கணக்குகளில் இலாபமிகுதியையே எதிர்பார்ப்பதால் தணிகாசலம் முப்பது வயது பெண் தனக்கு வேண்டும் என்று கேட்டதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தணிகாசலம் என்பது வெறும் ஓர் மனிதனை குறிக்கவில்லை. நமது சமுதாயத்தின் யதார்த்தமான ஓர் முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழப்பிரியன் அண்ணா கூறியது போல் சாத்திரி அண்ணா தன்னுடன் தனிப்பட தொலைபேசியில் உரையாடிய ஒருவர் பற்றிய விபரத்தை இங்கு நாற்சந்தியில் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், தணிகாசலம் என்பது எமது சமூகத்தின் ஓர் முகம், எமது சமூகத்தின் ஓர் முகம் பற்றி பேசுகின்றோம் என்கின்ற வகையில் பார்க்கும்போது சாத்திரி அண்ணாவின் இந்தக்கதை இங்கு பகிரப்பட்டது தவறாகவும் படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலத்தார் இன்னும் 10 வருசத்திலை மண்டையை போட்டால் அந்த 40 வயது பெண்ணுக்கு மூண்றாவது திருமணம் செய்து வைப்பியளோ....??

அவர் விரும்பினால் அவராகவே துணையைத் தேடிக்கொள்வார். மறுமணம் செய்துகொடுப்பதை ஒரு சமூகசேவையாக செய்வதற்கு தமிழ்த் தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லையென்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது அவருக்கு 56வயது என்பதே உங்கள் பிரச்சனை? அவர் 26 வயது இளைஞராக இருப்பின் அது கேவலமான செயலாகாது?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்..

தணிகாசலம் உண்மையிலேயே ஒரு விதவைக்கு மறுவாழ்வு கொடுக்க நினைத்திருந்தால், அது பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால் குழந்தைகள் இல்லாத, முப்பது வயதுக்குக் குறைவான பெண்ணை வேண்டுவது, பெண்ணின் சமூக/பொருளாராத ரீதியிலான பலவீனமான நிலையை சாதகமாக்கி "exploit" பண்ணுவது மாதிரித்தான் தெரிகின்றது.

இதுவே அவர் குறைந்தது இரண்டு குழந்தைகள் உள்ள 30 வயதுக்கு உட்பட்ட/மேற்பட்ட விதவைப் பெண்ணை திருமணம் செய்து, முழுக்குடும்பத்தையும் புலம்பெயர் நாட்டுக்கு எடுக்க முனைந்திருந்தால் வித்தியாசமான பார்வையைத் தரும்.

ஆக, அவரது நிபந்தனைகள்தான் அவரது உள்நோக்கம்மீது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தனி கும்மு வாங்குவதற்க்கான முக்கிய காரனங்கள் என்வென்றால் தவிச்ச முயல் அடிக்க நினைப்பது,பெரிய வயது வித்தியாசத்தில் அதுவும் பிள்ளைகள் இல்லாத விதைப் பெண்ணை தேடுவது.மற்றும் இதை அடைவதுக்கு தனது வசதியை பயன்படுத்த நினைப்பது முக்கியமாக ஒரு உதவி அமைப்பிம் இதை கேட்டது என்பன.இவற்றை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் இங்கு சிலர் வெள்ளைப் பெண்களை கலியானம் கட்டி பிள்ளையும் பெற்று பின் விவாக ரத்து வாங்கி விட்டு.ஊருக்கு போய் விதைவையும் இல்லாத அனாதையும் இல்லாத கன்னியும் களியாத பெண்ணை கலியானம் கட்டுகினம்.இவையும் தங்கள் வெளி நாட்டுக்காறன் என்ட தகுதயையும் பெண் வீட்டாரின் குடும்ப பொருளாதார நிலைமையையும் பாவித்துதான் இதை செய்கினம்.இங்கு என்ன வென்றால் பெண் வீட்டாரின் அனுமதி அல்லது அழுத்தம் காரனமாகதான் நடக்குது.இதில பெண்ணின் விருப்பு வெறுப்பு கேள்விக் குறியே.

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரையும் அவர்கள் வாழும் சூழ்நிலை, வாழ்க்கை நிலமைகளே அவர்கள் வாழ்வில் எடுக்கும் தீர்மானங்களில் பிரதான பங்கு வகிக்கின்றன. உயிருக்கு உயிராக காதலித்துவிட்டு பெற்றோரின் நச்சரிப்பு காரணமாக வேறு ஒருவரை உண்மையான விருப்பமின்றி திருமணம் செய்த எத்தனையோ பெண்களும், ஆண்களும் காணப்படுகின்றார்கள். வாழ்க்கையில் ஓர் கட்டத்தில் தொடர்ந்து நகரமுடியாமல் தத்தளிக்கும்போது ஓர் தாரம் இழந்த பெண் தணிகாசலம் போன்ற ஒருவரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வாரா என்று நாங்கள் வெறும் ஊகம் மூலம் பதில்கூற முடியாது.

நீங்கள் எந்தக்காலத்தின் வாழ்கிறீர்கள்...??? பெற்றவர்கள் நச்சரித்து திருமணம் செய்து வைத்த காலம் எல்லாம் மலை ஏறி ஆண்டுக்கணக்காகி விட்டுது... இப்போ பிள்ளைகளின் விருப்பின் படி தான் திருமணங்கள் நடக்கின்றன... முதலிலை வெளி உலகை வந்து பாருங்கோ.... பிறகு கருத்து சொல்ல முடியும்...

முன்பின் தெரியாதவர் என்பதால் அவர் இவ்வாறு வெளிப்படையாக தனது விருப்பத்தை கூறி இருக்கக்கூடும்.

இன்னும் அது பெரிய அயோக்கிய தனம்... தன் பொட்டுக்கோடுகள் வெளிப்பட்டு விடும் எண்டு தனிமையில் தொலை பேசி எடுத்து பேசுபவன் எந்தவகையில் சிறந்தவன்....??

இங்கு தனி கும்மு வாங்குவதற்க்கான முக்கிய காரனங்கள் என்வென்றால் தவிச்ச முயல் அடிக்க நினைப்பது,பெரிய வயது வித்தியாசத்தில் அதுவும் பிள்ளைகள் இல்லாத விதைப் பெண்ணை தேடுவது.மற்றும் இதை அடைவதுக்கு தனது வசதியை பயன்படுத்த நினைப்பது முக்கியமாக ஒரு உதவி அமைப்பிம் இதை கேட்டது என்பன.இவற்றை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் இங்கு சிலர் வெள்ளைப் பெண்களை கலியானம் கட்டி பிள்ளையும் பெற்று பின் விவாக ரத்து வாங்கி விட்டு.ஊருக்கு போய் விதைவையும் இல்லாத அனாதையும் இல்லாத கன்னியும் களியாத பெண்ணை கலியானம் கட்டுகினம்.இவையும் தங்கள் வெளி நாட்டுக்காறன் என்ட தகுதயையும் பெண் வீட்டாரின் குடும்ப பொருளாதார நிலைமையையும் பாவித்துதான் இதை செய்கினம்.இங்கு என்ன வென்றால் பெண் வீட்டாரின் அனுமதி அல்லது அழுத்தம் காரனமாகதான் நடக்குது.இதில பெண்ணின் விருப்பு வெறுப்பு கேள்விக் குறியே.

இங்கை யாரும் சொன்னவையோ அப்படி ஒரு பெண்ணை ஏமாற்றி கட்டுவது தவறு இல்லை எண்டு...?? :):wub::unsure::wub:

..இங்கு பலர் எவ்வாறு 56 வயது நபர் 30 வயது பெண் ஒருவரை திருமணம் செய்யக்கூடாது என.. வயது சம்பந்தமாக துவேசமான கருத்துக்களை கொண்டுள்ளார்களோ அவ்வாறே தணிகாசலம் அவர்களிடமும் அதே எண்ணப்பாடு காணப்படுகின்றது. அவரும் அதே அறியாமை மாயையில் சிக்குப்பட்டு உள்ளார்.

56 வயது தணிகாசலம் கல்யாணமே கட்டக்கூடாது எண்டு இங்கை யாராவது சொன்னவர்களோ....???

தணிகாசலம் 30 வயது க்குள்ளை ஒரு பெண்ணை தேடுகிறார் , அதுவும் இருக்கும் விபரங்களை எல்லாம் தாருங்கோ நான் போய் பாத்து அலுவலை முடிக்கிறன் எண்டுகிறார் என்பதுதான் பிரச்சினை... !

அதுவும் போரால் பாதிக்க பட்டு அல்லல் படும் பெண்களை தனக்கான advantage ஆக எடுத்துக்கொள்ள நினைக்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை யாரும் சொன்னவையோ அப்படி ஒரு பெண்ணை ஏமாற்றி கட்டுவது தவறு இல்லை எண்டு...?? :):wub::unsure::wub:

தயா இது ஏமாற்றி இல்லை.உண்மையை சொல்லிதான் பெண் எடுக்கப்பட்டது.(எமாற்றியும் நடக்குது)நான் சொல்ல வாறது என்னவென்டால் உண்மை தெரிந்தும் பெண் கொடுக்க ஆடக்கள் இருக்கினம் என்பது தான்.அதுவம் 12 வயது வித்தியாசத்தில்.இதை நாங்கள் எதிர்த்தால் எங்களை முதல் எதிர்ப்பது பெண் வீட்டாராகத்தான் இருப்பினம். :mellow:

Link to comment
Share on other sites

தயா இது ஏமாற்றி இல்லை.உண்மையை சொல்லிதான் பெண் எடுக்கப்பட்டது.(எமாற்றியும் நடக்குது)நான் சொல்ல வாறது என்னவென்டால் உண்மை தெரிந்தும் பெண் கொடுக்க ஆடக்கள் இருக்கினம் என்பது தான்.அதுவம் 12 வயது வித்தியாசத்தில்.இதை நாங்கள் எதிர்த்தால் எங்களை முதல் எதிர்ப்பது பெண் வீட்டாராகத்தான் இருப்பினம். :)

பெண் உரிமை அது இது எண்டு கதைப்பினம் ஆனால் இதுகளுக்கு எதிராக யாரும் வாய் கூட திறக்க மாட்டீனம்... முதல் முதலில் ஒரு பெண் அடிமை படுவது தனது பிறந்த குடும்பத்தில் தான், அடக்கப்பட்டு தன்நம்பிக்கை கொடுக்கப்படாமல் பல பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள்.... இப்படி நிர்பந்தத்துக்கு பணிந்து கட்டும் பெண்களை emotional idiots எண்று தான் சொல்ல வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கிருபன் அண்ணா, சஜீவன் அண்ணா.

உங்கள் புரிதலுக்கு. இங்கு யாரும் தணிகாசலத்தை மறுமணம் செய்யவேண்டாம்,விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கவேண்டாம் என்று சொல்லவில்லை மாறாக அவலத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை சொந்த வசதி,வாய்ப்பைக்காட்டி தமது இச்சைகளை தீர்க்க வடிகாலாகப்பயன்ப்டுத்த நினைப்பதை தான் கண்டிக்கிறோமே தவிர உண்மையான ஒரு விதவைக்கு வாழ்வளிப்பதை அல்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கே சண்டை பிடித்துக் கொண்டு இருங்கோ அங்கே அந்தாள் போய் ஒரு பெண்ணை மணம் முடித்து கொஞ்ச நாளில் கூட்டி வந்து விடுவார் :) ...தயது செய்து யதார்த்தத்தை கதையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வந்தனம்

நான் இத்திரியில் ஆரம்பத்தில் கொஞ்சம் காட்டமாக எழுதியிருந்தேன்

காரணம் அதைப்பார்த்ததும் அவர் எனது சகோதரியை அதிலும் 30 வயது என்பது

அநேகமாக எமது சகோதரிகள் திருமணம் செய்யும் வயது எனவே ஒரு கணக்கு போட்டுத்தான் கேட்கிறார் என்று கோபம் ஏற்படடது எனக்கு...

அந்த கோபம் எனக்குள் இருக்கிறது

அது இருக்கணும் என்று நானும் விரும்புறன்.

ஆனால் இப்ப பார்த்தால் சாகக்கொடுக்கிறதவிட இப்படி ஒருவருக்கு அனுபவிக்கக்கொடுக்கலாம் என்பது போன்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

அவர்களை சாகவிடக்கூடாது என்றுதானே நாங்க இவ்வளவு உழைக்கிறம். நேசக்கரம் ஒவ்வொருவரிடமும் கை கூப்பி இரவு பகலா கேட்குதே எதற்கு...? சாத்திரியரும் சாந்தியக்காவும் வாழ்க்கையில் தங்களுக்காக கை கூப்புகிற ஆக்களே. எல்லாம் எம் மக்களுக்காகத்தானே கை காலைக்கூடப்பிடிக்க தயாராக இருக்கிறார்கள். ஏன் நாம் இதை புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.

இங்கு நெல்சன் மண்டேலாவைக்கூட இழுக்கிறார்கள். சரி அவரைப்போல் உலகத்தில் எத்தனை பேர் நியாயமாக நடப்பார்கள். அதைவிட அவரது கடைசி காலம் என்னாச்சு?

எங்களுக்கு மக்கள் மீதான பாசம் அவர்களை எங்காவது கட்டி தள்ளி விடுவதல்ல. நிரந்தமாக சுதந்திரமாக வாழவிடுவது.

அது எனது பிள்ளையாக இருந்தாலும் எமது தாயக உறவாக இருந்தாலும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

பின்னீட்டிங்கள் சுப்புறா அண்ணை... :wub:

நீங்கள் இங்கே சண்டை பிடித்துக் கொண்டு இருங்கோ அங்கே அந்தாள் போய் ஒரு பெண்ணை மணம் முடித்து கொஞ்ச நாளில் கூட்டி வந்து விடுவார் :) ...தயது செய்து யதார்த்தத்தை கதையுங்கள்

உங்களிட்டை ஒண்டு கேக்க வேணும் போல கிடக்கு குறை நினைக்காதேங்கோ....

நீங்கள் உந்த அப்புவை கல்யாணம் கட்டுவியளோ...??? நீங்கள் ஆணோ பெண்ணோ எண்டு எனக்கு தெரியாது... ஆனால் இரண்டுக்கும் சட்டத்தில் இடம் உண்டு... ஆம் எண்டால் ஆம் எண்டு சொன்னியள் எண்டால் இங்கை வேலை சுலபம்...

இல்லை எண்டால் காரணம் என்ன எண்டும் ஒருக்கா குறை நினைக்காமல் சொல்லுங்கோ...

Link to comment
Share on other sites

தான் திருமணம் கட்டி வாழ்க்கை குடுக்கபோறன் என்று எதுவும் சொல்ல இல்லை, அதனால் இப்படிக் கூட இருக்கலாம்.... அவர் ஊருக்கு போகும் முன்பு விபரங்களை சேகரித்து அந்தப் பெண்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தி அவர் அங்கு நிற்கும் வரைக்கும் அல்லது அவர் ஊருக்குப் போகும் போதெல்லாம் ஒரு பெண்ணின் சுகம் தேவைப்படும் நேரத்துக்கு காசைக் குடுத்து போய்வரலாம்,

ஒருத்தரின் இயலாமையை அடுத்தவன் தனது சுகத்துக்காக அனுபவிப்பதும் கேவலதுக்கும் மேல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னீட்டிங்கள் சுப்புறா அண்ணை... :)

உங்களிட்டை ஒண்டு கேக்க வேணும் போல கிடக்கு குறை நினைக்காதேங்கோ....

நீங்கள் உந்த அப்புவை கல்யாணம் கட்டுவியளோ...??? நீங்கள் ஆணோ பெண்ணோ எண்டு எனக்கு தெரியாது... ஆனால் இரண்டுக்கும் சட்டத்தில் இடம் உண்டு... ஆம் எண்டால் ஆம் எண்டு சொன்னியள் எண்டால் இங்கை வேலை சுலபம்...

இல்லை எண்டால் காரணம் என்ன எண்டும் ஒருக்கா குறை நினைக்காமல் சொல்லுங்கோ...

உண்மையை சொல்ல வேண்டுமானால் இல்லை அண்ணா...நான் கடைசி வரைக்கும் கட்ட மாட்டேன்.ஆனால் ஊரில் இருப்பவர்கள் அப்படி இல்லை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் எப்படா வெளி நாட்டுக்கு வரலாம் எனப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்...ஏதாவது ஒரு துடுப்பு கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு கரை சேரவே விரும்புவார்கள்.தற்போது அங்குள்ள நிலைமையில் விதவைப் பெண் என்டு இல்லை ஏற்கனவே திருமணம் செய்யாத,கன்னி கழியாத,ஆண் சகோதரங்கள் அற்ற,பொறுப்புகள் நிறைந்த,குடும்பத்தின் மூத்த பெண்ணே இவரைக் கல்யாணம் கட்ட ஒத்துக் கொள்ளக் கூடும்.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னால் இதனை ஆதரிக்க முடியாது...ஆதரிக்க கூடாது ஆனால் இது தான் தற்போதைய யதார்த்தம்

Link to comment
Share on other sites

உண்மையை சொல்ல வேண்டுமானால் இல்லை அண்ணா...நான் கடைசி வரைக்கும் கட்ட மாட்டேன்.ஆனால் ஊரில் இருப்பவர்கள் அப்படி இல்லை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் எப்படா வெளி நாட்டுக்கு வரலாம் எனப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்...ஏதாவது ஒரு துடுப்பு கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு கரை சேரவே விரும்புவார்கள்.தற்போது அங்குள்ள நிலைமையில் விதவைப் பெண் என்டு இல்லை ஏற்கனவே திருமணம் செய்யாத,கன்னி கழியாத,ஆண் சகோதரங்கள் அற்ற,பொறுப்புகள் நிறைந்த,குடும்பத்தின் மூத்த பெண்ணே இவரைக் கல்யாணம் கட்ட ஒத்துக் கொள்ளக் கூடும்.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னால் இதனை ஆதரிக்க முடியாது...ஆதரிக்க கூடாது ஆனால் இது தான் தற்போதைய யதார்த்தம்

ஊரிலை இருக்கும் பெண்கள் பொருளாதாரத்தை விட எந்த வகையிலை உங்களை விட தாள்ந்தவர்கள்....?? புலம் பெயர்ந்த கிழவன்கள் என்பதோ , இல்லை கன்னிகளியாத ஆண்களோ , மீட்ச்சியின் அடையாளம் இல்லை... புலம் பெயர்ந்த பெண் ஒருவர் போய் ஊரில் திருமணம் செய்ய பெரிதும் முன்வருவதில்லை, அப்படி நடந்தாலும் அபூர்வமகவே நடக்கிறது... ஆனால் ஆண் போய் திருமண செய்வதை எங்கட சமூகம் மீட்ச்சி என்கிறது... அதை பெரிதும் எதிர்பார்க்கிறது...

புலம் பெயர்ந்த ஆண் என்பது டாக்குத்தர் இஞ்சினியர், போல படித்து வாங்கின பட்டமா...?? இங்கை வந்து தமிழ் கடைகளிலையும் வேலை செய்து கொண்டோ அல்லது அரசாங்க பிச்சை காசிலை வாழ்வதை அந்த பெண்ணின் கரை சேர்தல் எண்று எப்படி எடுத்துக் கொள்ள முடிகிறது....??? பாசையும் தெரியாது பிற மக்களின் தொடர்பு களும் இல்லாமல் எத்தினை பெண்கள் மன உலைச்சலுக்குள் இருக்கிறார்கள்.... இதை எப்படி உங்களால் மீட்ச்சி என அழைக்க முடிகிறது...

இலங்கையை விட்டு தமிழ் மக்கள் வெளியிலை வாறதுதான் மீட்ச்சி எண்றால் அதுக்கு எல்லாருமாக சேர்ந்து பாடுபடலாம்... ஆனால் ஒரு இளம் விதவைக்கு ஒரு கிழவன் எண்டாலும் பறவாய் இல்லை எண்டு கட்ட நினைப்பது மிகவும் வெதனையான செயல்...

Link to comment
Share on other sites

நீங்கள் எந்தக்காலத்தின் வாழ்கிறீர்கள்...??? பெற்றவர்கள் நச்சரித்து திருமணம் செய்து வைத்த காலம் எல்லாம் மலை ஏறி ஆண்டுக்கணக்காகி விட்டுது... இப்போ பிள்ளைகளின் விருப்பின் படி தான் திருமணங்கள் நடக்கின்றன... முதலிலை வெளி உலகை வந்து பாருங்கோ.... பிறகு கருத்து சொல்ல முடியும்...

வெளிநாடுகளில் நடைபெறும் இளம் சமுதாயத்தின் வாழ்வியலின் அடிப்படையில் நான் கருத்து கூறவில்லை. நீங்கள் ஏற்கனவே கூறிய விடயத்திற்குரிய பதில் அது. 30வயது ஊரில் உள்ள விதவைப்பெண் பற்றிய விடயம் அது.

இன்னும் அது பெரிய அயோக்கிய தனம்... தன் பொட்டுக்கோடுகள் வெளிப்பட்டு விடும் எண்டு தனிமையில் தொலை பேசி எடுத்து பேசுபவன் எந்தவகையில் சிறந்தவன்....??

தணிகாசலம் அவர்கள் சிறந்தவர் என்று கூறவில்லையே. அவர் தனியாக உரையாடியபோது தனது உள்ளக்கிடக்கைகளை கூறியுள்ளார்.

56 வயது தணிகாசலம் கல்யாணமே கட்டக்கூடாது எண்டு இங்கை யாராவது சொன்னவர்களோ....??? தணிகாசலம் 30 வயது க்குள்ளை ஒரு பெண்ணை தேடுகிறார் , அதுவும் இருக்கும் விபரங்களை எல்லாம் தாருங்கோ நான் போய் பாத்து அலுவலை முடிக்கிறன் எண்டுகிறார் என்பதுதான் பிரச்சினை... ! அதுவும் போரால் பாதிக்க பட்டு அல்லல் படும் பெண்களை தனக்கான advantage ஆக எடுத்துக்கொள்ள நினைக்கிறார்...

தணிகாசலம் கலியாணமே கட்டக்கூடாது என்று யாரும் சொன்னதாக நான் இங்கு கூறவில்லையே. வயது துவேசமாக கருத்துக்கள் கூறியது பற்றியே நானும் கருத்துக்கள் இட்டேன். தணிகாசலத்திற்கு 56 வயது என்பதே இங்கு பலரின் பிரச்சனை. நீங்கள் மீண்டும் மேற்கண்டது போன்ற கருத்தை எழுதி அதை மீண்டும் மெய்ப்பித்து உள்ளீர்கள். அதாவது 26வயது இளைஞர் இவ்வாறு உரையாடியிருந்தால் நீங்கள் பலர் பூரிப்படைந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் உளத்தில் உள்ள வயது துவேசம்.

தணிகாசலம் உண்மையிலேயே ஒரு விதவைக்கு மறுவாழ்வு கொடுக்க நினைத்திருந்தால், அது பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால் குழந்தைகள் இல்லாத, முப்பது வயதுக்குக் குறைவான பெண்ணை வேண்டுவது, பெண்ணின் சமூக/பொருளாராத ரீதியிலான பலவீனமான நிலையை சாதகமாக்கி "exploit" பண்ணுவது மாதிரித்தான் தெரிகின்றது. இதுவே அவர் குறைந்தது இரண்டு குழந்தைகள் உள்ள 30 வயதுக்கு உட்பட்ட/மேற்பட்ட விதவைப் பெண்ணை திருமணம் செய்து, முழுக்குடும்பத்தையும் புலம்பெயர் நாட்டுக்கு எடுக்க முனைந்திருந்தால் வித்தியாசமான பார்வையைத் தரும். ஆக, அவரது நிபந்தனைகள்தான் அவரது உள்நோக்கம்மீது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இங்கு சந்தேகம் ஏது? அவர் ஊரில் உள்ள பெண் ஒருவரை மறுமணம் செய்வதில் மிக நிச்சயமாக அவரது சுயநலம் அடங்கியுள்ளது. இல்லை என்று கூறவில்லையே! அத்துடன் வயதில் குறைவான பெண் வேண்டும் என்று கேட்பது மறுமணம் மூலம் குழந்தை ஒன்றை பெறுவதற்கான காரணமாகவும் அமையலாம்.

Link to comment
Share on other sites

நான் எனக்குத் தெரிய நடந்த இரண்டு சம்பவங்களை மட்டும் முதலில் எழுதுகிறேன். :D

1) ஒரு அழகிய, படித்த இளம்பெண் (எங்கள் அகராதியில்). திருமண வயது வந்ததும் மாப்பிள்ளை பார்த்தார்கள். வெளிநாடு ஒன்றில் செல்வந்தராக இருக்கும் ஒரு மணமகன் கிடைத்தார். திருமணமும் முடிந்தது. மாப்பிள்ளை எங்கள் எல்லோரது அகராதியில் புற அழகற்ற, தலையில் முடியிழந்த, உடல் பருமனான நடுத்தரவயதில் உள்ள ஒருவர். தம்பதிகள் பிள்ளைகளும் பெற்று இனிமையாக வாழ்கின்றனர். :unsure:

பி.கு.: இதே மாப்பிள்ளை ஊரில் இருந்திருந்தாரென்றால் இவர்கள் யாருமே திரும்பியும் பார்த்திருக்க மாட்டார்கள். :)

2) மாப்பிள்ளைக்கு உடம்பில் பெருமளவில் தேமல். தலையில் முடி கொட்டிவிட்டது. நடுத்தரவயது. வெளிநாட்டில் இருக்கிறார்.சர்க்கரை வியாதி வேறு. இவருக்கும் ஊரில் ஒரு பெண் அமைந்தது. :mellow:

பி.கு.: இதே மாப்பிள்ளை ஊரில் இருந்திருந்தாரென்றால் இவர்கள் யாருமே திரும்பியும் பார்த்திருக்க மாட்டார்கள். :wub:

நீதி:

தகைமையை ஏதோ ஒரு வகையில் உயர்த்தி இலாபமடைய முயற்சிப்பது என்பது எங்குமே உள்ளது. வீடுவாங்கச் சென்றால்கூட விற்பவர் அவசரப்படுகிறார் என்றால் வீட்டை அடிமாட்டுவிலைக்குக் கேட்பது நடைமுறையில் உள்ள ஒன்று.

இங்கே தணிகாசலம் செய்தபிழை, சுவி அவர்கள் சொன்னதுபோல பிழையான இடத்தில் விடை தேடியிருக்கிறார். இவர் செய்வது பிழை என்றால் மேற்கூறிய இரு நிகழ்வுகளிலும்கூட மாப்பிள்ளைமார் பெண்களின் சமூகப் பொருளாதார தாழ்வுநிலையைப் பயன்படுத்தி மணமுடித்துள்ளபடியால், அவர்களிலும் பிழை உள்ளது. இப்படி எம்மக்களில் எத்தனையோபேர். :wub:

சாத்திரியார் செய்யக்கூடியது, தணிகாசலம் அவர்களை அழைத்து, திருமண முகவர் ஒருவரை அணுகுமாறு சொல்வதுதான்..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.