Jump to content

ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மஹிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மஹிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்: பிரான்ஸ்வாழ் தமிழர்களுக்கு அழைப்பு.

[Tuesday, 2010-11-30 16:27:26]

முள்ளிவாய்காலில். தமிழ் மக்களை பாதுகாக்க போர் தொடர்ந்து உள்ளேன் என்று உலகிற்கு சொல்லிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மனித நேயத்தையே குருடாக்கி 40 000 இற்;கு மேற்பட்ட குழந்தைகள் சிறார்கள் வயது மூத்தோர் ஆண் பெண் என்று பாராமல் கொன்று குவித்த ஒரு அரசின் ஜனாதிபதி அந்த ஜனாதிபதி என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இந்த உலக அரசியல் தலைவர்கள் மனிதாபிமான அமைப்புகளுக்குச் சவால் விடுவதை போல் போர்க் குற்றங்களை இழைத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு தேடும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் தூதுகரங்களில் அரசியல் பாதுகாப்பு கிடைக்கக் கூடிய பதவிகளை அளித்து அவர்களின் பாதுகாப்பை ஊர்ஜிதப் படுத்திய பின் மற்றொரு ராணுவ தளபதியை சிறீலங்காவில் சிறையில் அடைத்து விட்டு இன்று சிறீலங்காவில் பத்திரிகையாளர்களிடம் "நான் விரும்பிய நாட்டுக்கு செல்லும் உரிமை எனக்கு இருக்கிறது" என்று இந்த உலகத்திற்கும் உறவுகளை இழந்து தவிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிற்கு சவால் விட்டுவிட்டு இன்று ஒக்போர்ட் பல்கலைகழக சங்கத்தின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து வந்து சேர்த்திருக்கிறார் சிறீ லங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே.

அன்பான தமிழ் உறவுகளே இன்று நாம் எமது மக்களின் விடுதலைக்காக தமது வாழ்கையை கனவுகளை தமது மக்களுக்காக தியாகம் செய்த எமது மாவீரர்களின் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கும் வேளையில் ஒரு இனத்தை அழித்து போர்க்குற்றங்களை செய்த இன்று ஒரு இனப்படுகொலையை செய்துகொண்டிருக்கும் ஜனாதிபதி எம் மக்களிற்கே சவால் விட்டு இங்கிலாந்து வருகை தந்துள்ளார்.

மகிந்த ராஜபச்சே ஆட்சிக்கு வந்தபின் உங்களின் உறவுகள் சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டு இருந்தால் காணாது போயிருந்தால் உடனடியாக மகிந்த ராஜபசவுக்கு எதிராக பல வழக்குகளை லண்டன் ஒக்ஸ்பேர்ட் மற்றும் நீங்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் வழக்குகளை பதிவுசெய்யும் படி கேட்டு கொள்கிறோம்.

மகிந்த ராஜபச்சே விட்டிருக்கும் சவால் புலம் பெயர் தமிழர்களுக்கு விடப்பட்ட சவால் எமது மண்ணில் எமது மக்களை பேச முடியாதவர்களாக ஆகிவிட்டு இன்று அந்த மக்களின் குரலாக இருக்கும் எம்மை பேசமுடியாதவர்களாக எண்ணிக் கொண்டு எம்மையும் அடக்கி விடலாம் என்று நினைக்கும் மகிந்தவின் பயங்கரவாத முகத்தை உலகிற்கு எடுத்து காட்டவேண்டியவர்கள் நாம் தான்.

எந்தவித சவால்களையும் எதிர்கொள்வோம் என்ற உறிதியுடன் நாம் செயல்படவேண்டும்.

சிறீலங்கா அரசை உலக மன்றதிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அரசாக மாற்றும் செயல்திட்டத்தில் நாம் எல்லோரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். அன்பான தமிழ் உறவுகளே ஒக்ஸ்போபர்ட் பல்கலைகழகத்தில் நடைபெறும் கூடத்தில் பங்குபற்றி நீங்கள் இந்த ஜனாதிபதியிடம் கேள்விகளை கேளுங்கள் இந்த நகரத்தில் சிறீலங்காவை புறக்கணிக்கும் ஆர்ப்பாட்ட்டங்களை செய்யுக்கள் புலம் பெயர் உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளில் உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் உங்கள் முறையீடுகளை தெரியப்பபடுத்தலாம்.

இது எமக்கும் உலக நாடுகளுக்கும் மனித நேயதிற்;கும் விடப்பட்ட சவால். இந்தச் சவாலை இன்று நாம் எமது தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்து அதை நாம் எல்லோரும் எதிர்கொள்வோம் வாருங்கள்.

ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மகிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பிரான்ஸ்வாழ் உறவுகள் தமிழ் மக்கள் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும்.

ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து தமிழரின் ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிக்கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

தொடர்புகளுக்கு: 06 15 88 42 21

mte.france@gmail.com

seithy.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.