கிருபன்

மனதைக் கவர்ந்த கவிதைகள்

Recommended Posts

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

யாரின் முகமூடி கிழிக்கவோ

திறந்த முகத்தில்

குத்தி கூர்பார்கவோ அல்ல

எமக்கான விளையாட்டு

காற்றில் கத்தி வீசுவது

என் தூரம் அறிந்தே வீசுகிறேன்

எல்லைக்கு உட்பட்டு

மழுங்கிய கத்தி கொண்டே

வீசுகிறேன்

காற்றை கிழிக்கும்

ஓசை எனக்கானது

காற்றின் அறைகூவல் வீசட்டும்

மணலில் கத்தி சொருகி

நிலை கொண்டிருப்பேன்

அது ஓயும்வரை

ஒளி, ஒலி பிழை

இருக்கலாம்

காற்றை கிழிப்பதில்

இருக்கிறது விளையாட்டின்

வெற்றி எனக்கும்

பிரிகையில் காற்றுக்கும்

இதுவரை தோற்றாலும்

இது ஒரு விளையாட்டு

அவ்வளவே!

http://pakkam5.blogspot.com/2006/05/blog-post_30.html

Share this post


Link to post
Share on other sites

அறிவிலி

பற்றி எரிகையிலும் பூ பூக்க

உன்னால் மட்டுமே முடியும்!

'மத்தாப்பூ'!

சுற்றி எரிகையிலும்

உள்ளே,

பூகம்பம் வெடிக்கையிலும்

சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய்

பாசாங்கு பண்ண‌

என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து!

எள்ளி ந‌கையாடும் எல்லோரையும்

ஏதேதோ க‌தைக்கிறாரென‌

செவிடு பாய்ச்சுவ‌து

எப்ப‌டி அக‌ந்தையாகும்?

புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌

உல‌க‌த்தில்....

பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌

குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து எனக்கு!

கோரிக்கையோ கட்டளையோ

இல்லாத செல்லச் சிணுங்களில்

சிக்குண்டு சிரிப்பதை

ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா?

செய‌ற்கையாய் சிரித்து சிரித்து

க‌ண்ணில் நீர்வர மெய்யாய்

சிரித்த‌து எப்போது?

நினைவேயில்லை!!

வலி நிர‌ப்பி வடித்த

வார்த்தைச் சித்திர‌மெல்லாம்

அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில்

அதே காயாத‌ குருதி வாச‌னை!

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும்

தைக்க‌ப்படவேயில்லை!

சுயமெனும் இருள்வெளி தாண்டி

புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌

வாய்ப்புகளெல்லாம் வாகாய்

வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌!

விரும்பிய‌ திசை எதுவென

தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி....

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை

க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி

ஏனோ,

வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை

வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை!

கூர்மங்கிய நாக்குகளினால்

குத்தப்பட்ட சொற் காயங்கள்!

உயிர் நீங்கலாக

மற்றதை மாய்த்தும்

அவர் மனம் நோகுமென

பதிலடி தராத பரிதாப தருணங்கள்

இந்த அறிவிலி வாழ்க்கையில்

அனேகம் நிகழ்வதால்

இப்பெயர் பெற்றேன்

காரணம் அறிக‌!

http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_19.html

Share this post


Link to post
Share on other sites

சாத்தானின் தாசியன்

- பொன்.வாசுதேவன்

ஆம்

இன்றைக்கு எப்படியாவது

கடவுளைக் கொன்றுவிட

திட்டமிட்டிருக்கிறேன்

இனியும் பொறுமையில்லை

முழுமையாக உதிர்ந்து விட்டன

சகிப்புத்தன்மையின் செதில்கள்

வந்துவிட்டார் கடவுள்

எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது

பின்புறமிருந்து முகத்தில்

துணியைப் போர்த்தி

வசமான பிடியுடன் இறுக்குகிறேன்

திமிறிக் களைத்து தோற்று

உடல் தளர்ந்து பிரிகிறது

கடவுளின் உயிர்

குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்

வழியும் இரத்தத்தை சுவைத்தபடி

தொலைவில் வந்து பார்க்கிறேன்

தகன மேடையில் யாரோ

கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்

எனது உடலை.

http://www.aganazhigai.com/2010/04/blog-post_20.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

வீதியில் நடக்கும்போது வசீகரமான பெண்கள் போனால் தலை தன்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்கும். திரும்பிப் பார்க்க வைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதுபோலத்தான் கவிதையும் முதல் நொடியில் பிடித்துவிடவேண்டும்!

Share this post


Link to post
Share on other sites

பெண்

ladiesdress.jpg

நான் அணிகிறேன்

இரு உள்ளாடைகளும்...

இரு மேலாடைகளும்...

எதிர் வரும் ஆணின்

காமம் மறைக்க!

டவுசர்

கால் மறைக்க

ஆண்களுக்கு.....

கால்வாசி மறைக்க

பெண்களுக்கு .....

pantsw.jpg

கேவலம்

ஓட்டுப்போட துணியில்லாமல்

வறுமையில் வாழ்வது கேவலமல்ல...

ஒட்டுத் துணியோடு

வசதியாய் வாழ்வதே கேவலம் ...

அம்மண சிலைகள்

statuew.jpg

அம்மணமாய் இருப்பதோ நாங்கள்

அவமானப்பட்டுக்

கொள்வதோ நீங்கள் - எங்கள்

இச்சைகள் இறந்துவிட்டன - ஆனால்

இம்சைகள் மட்டும் மீண்டும் மீண்டும்

ரசனைகளின் பேரில் உங்கள் கைகளால்.....

http://thisaikaati.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Share this post


Link to post
Share on other sites

பெண்

நான் அணிகிறேன்

இரு உள்ளாடைகளும்...

இரு மேலாடைகளும்...

எதிர் வரும் ஆணின்

காமம் மறைக்க!

பெண் பிடித்திருக்கு :D

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மறந்து...!

தங்கக் குடுவையில் அமுதம் தந்தால்

“ச்சீ” என முகம் சுளிக்கிறார்!

தகரக் குடுவையில் இனிப்பான விடயமென்றால்

முகம் மலர்ந்து சுவைக்கிறார்!

தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த

ஆங்கில விசம் இனிக்கிறதாம்!

நாகரீக மோகத்திலே சவ்வாது

சாக்கடை பேதமறியா அலறுகிறார்!

தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார்

தட்டி தலைக்குனிவு செய்கின்றார்!

அடுக்குமோ இவ்வநியாயம் - இதுபோல்

நடக்குமோ எந்நாட்டிலும்!

புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள்

புவிமீது பேரன்புத் தமிழ் மறந்தார்!

தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும்

தற்குறி புருசறன்றோ இவர்கள்!

பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை

பாரமெனத் தூக்கி எறிந்தாயோ!

ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய்

தமிழ் மறந்து நடமாடும் கூடானாய்!

நன்றி விஷ்ணுதாசன்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

அதுதான் கவிதை.

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

கிகிகீ..உண்ணாண உதைத்தான் நானும் கேக்க்குறன்..எட்டித்தொடுற மூக்கை ஏனப்பா சுத்தித்தொடுறியள்..?பாரதியின் கவிதைகளைப்பாருங்கள் எவ்வளவு அழகாக எழிமையாக இருக்கும் அதனால்தான் அவன் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பிடித்தான்..வைரமுத்துவின் கவிதைகளைப் பாருங்கள் அப்படி ஒரு அழகும் தமிழ் சுவையும் இருக்கும்..அதனால்தான் அவன் அனைவராலும் விரும்பப்படும் கவிஞ்ஞன்.. இது ஏ.ர் இன் பாடல்களுக்கும் இழையராஜாவின் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம்போலத்தான்..முன்னையது வந்த புதிசில் ரசிக்கப்படும் பின்னர் மறைந்து போய்விடும்..பின்னையது வாழ்ந்து கொண்டே இருக்கும்...

Edited by நெருப்பு நீலமேகம்

Share this post


Link to post
Share on other sites

கடவுளின் குழந்தை

சாத்தான்களும் பிடாரிகளும்

சகஜமாய் புழங்கும் கானகத்தில்

குழந்தையொன்று மந்திரகவசத்தோடும்

உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும்

களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்...

ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம்

அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர்

எப்போதும் இறக்கைகள் முளைத்த

தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன

சாத்தான்களின் பாசறையை

கடவுளின் அரண்மனையாய்

மாற்றுவதாய் ஏற்பாடு!

ஈட்டிகள் துளைக்கையிலும்

மரண அவஸ்தை உச்சத்திலும்

உதவி வேண்டி குழந்தையின் கதறல்

விண்ணைப் பிளந்தும்

தேவதைகள் வரவேயில்லை!

பார்த்தது குழந்தை!

இவ்விடம் வாழ இன்னது ஏற்பு

பகுத்தறிந்து பாந்தமாய் உறவாடியது

இப்போது கடவுளை வரவேற்க

குழந்தை தயார்

ஒரு காட்டேரியின் மடியில்

குருதியை சுவைத்தபடி!

http://kayalsm.blogspot.com/2010/06/blog-post_24.html

Share this post


Link to post
Share on other sites

தனிமை

ந.மயூரரூபன்

முறைக்கிறதா என்னைப் பார்த்து

சிரிக்கிறதா என்னைப்பார்த்து

ஒன்றுமே புரியவில்லை

அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்

பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே

விரோதமாய்ப் பார்க்கின்றன

என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்

ஒட்டியிருப்பது பயந்தானோ?

பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?

என்னுள் துடிப்பு ஏறிக்

குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்

கனவுகள் நெருக்குகின்றன.

கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்

அருட்டிப்பார்க்கிறது என்னை.

ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்

உடல் வறட்டக் கத்தும் சத்தமும்

மூச்சழிக்க வைக்கும் என்னை.

கொப்பில் குதிக்கும் தாட்டானும்

தேடித் திரிவது என்னைத்தான்.

ஊத்தை இளிப்புடன்

ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்

உயிர் கொழுவித் தவிக்கும்.

நான் போகுமிடமெல்லாம்

நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.

காகமும் தாட்டானும் கூடத்தான்.

அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்

நான் மட்டும் தனியே

http://www.vaarppu.com/view/2371/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அத்தனையும் அருமையான கவிதைகள்.

(நிறைய வார்த்தைகள் சுட்டு போட்டன் :rolleyes: )

நன்றி கிருபன் அண்ணா இணைப்புக்கு. :)

Share this post


Link to post
Share on other sites

“புரிஞ்சுக்கோ”

நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.

வீடு மாறி விட்டாயாம்,

உறுதிப்படுத்த,

உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.

இருந்தும் என்ன?

மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.

உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும்

செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.

தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.

நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?

நம் நினைவுகளைத் தாங்கி

உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.

உன்னோடிருந்த வீட்டின் முன்னால்

நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி

குந்தியிருக்கின்றேன்.

யார் கண்டது?

எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று

உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.

“புரிஞ்சுக்கோ” என கண்கலங்க

என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய்.

பின்நவீனத்துவம்,

பிரேம்-ரமேஷ்,

சிக்மென் பிரைட்,

நீட்ஷே

புரிந்துகொண்ட என்னால்

உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை.

பனிப்போர்வைக்குள்

உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே

நான் விறைத்திருக்க

நீ கடந்து போகலாம்

அது நானென்று புரிஞ்சுக்காமல்.

Share this post


Link to post
Share on other sites

தனிமை

ந.மயூரரூபன்

முறைக்கிறதா என்னைப் பார்த்து

சிரிக்கிறதா என்னைப்பார்த்து

ஒன்றுமே புரியவில்லை

அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்

பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே

விரோதமாய்ப் பார்க்கின்றன

என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்

ஒட்டியிருப்பது பயந்தானோ?

பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?

என்னுள் துடிப்பு ஏறிக்

குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்

கனவுகள் நெருக்குகின்றன.

கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்

அருட்டிப்பார்க்கிறது என்னை.

ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்

உடல் வறட்டக் கத்தும் சத்தமும்

மூச்சழிக்க வைக்கும் என்னை.

கொப்பில் குதிக்கும் தாட்டானும்

தேடித் திரிவது என்னைத்தான்.

ஊத்தை இளிப்புடன்

ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்

உயிர் கொழுவித் தவிக்கும்.

நான் போகுமிடமெல்லாம்

நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.

காகமும் தாட்டானும் கூடத்தான்.

அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்

நான் மட்டும் தனியே

http://www.vaarppu.com/view/2371/

கிருபன் இணைப்பிற்கு நன்றி :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதைகள்! இணைப்புக்கு நன்றி கிருபன் & நுணா! :D

Share this post


Link to post
Share on other sites

முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

வித்யாசாகர்

போராட்டத்தின் -

ஒவ்வொரு கிளையாய்

தாவிச் சென்றதில்

உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி

கிளைகள் தீர்ந்தப் பாடில்லை

ஒரு நாளைக் கடப்பதே

போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க

வருடங்களை -

சிரிக்க மறுத்து

சகித்துக் கொண்டே - கடக்கிறோம்

எதிரே வருபவர்களை யெல்லாம்

தனக்கானவர்களாக எண்ணியும்,

கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் -

நிரந்தர ஆசையில் உயிர்விட்டே

மடிகிறதிந்த மனித இனம் அதில்

நானும் மாறுபட்டவனாக இல்லை

அப்பட்டமாய் -

எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்

வாழ்வதற்கான உயிர்காற்று -

தொண்டையை அடைத்துக் கொள்ள,

ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,

ஆசையில் -

நம்பிக்கையில் -

நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்

இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்

எந்த நிலையிலும் -

யார் இறப்பிலும் -

உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,

எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்

சில உண்டு, என்றாலும் -

மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய

மீண்டும் ஒரு புள்ளியாக -

நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!

http://www.vaarppu.com/view/2385/

Share this post


Link to post
Share on other sites

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்

அமைச்சர்கள் வந்தனர்.

'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

பின் ஏன் கொன்றீர்?'

என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை

இவரைச் சுடாமல்

ஓர் ஈயினைக் கூடச்

சுடமுடியாது போயிற்று எம்மால்

ஆகையினால்......

என்றனர் அவர்கள்.

'சரி சரி

உடனே மறையுங்கள் பிணத்தை'

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்

*சிகாலோவாத சூத்திரத்தினைக்

கொழுத்தி எரித்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சே' எனது டீஷர்ட்டில்

சின்னப்பயல்

chepoem.jpg

வாய்க்காலில் கட்டுக்கடங்காத

பிணங்கள்,

அலையடிக்கும் அலைக்கற்றையின்

எண்ண முடியாத கணக்குகள்,

அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென

அடித்துப்புரண்டுகொண்டிருக்கும்

கொரில்லாக்கள்,

காட்டிக்கொடுப்பதையே

தொழிலாகக்கொண்டு

சமாதானப்போர்வைக்குள்

தன்னை முடக்கிக்கொண்ட

முன்னாள் போராளிகள்,

டிஜிட்டல் பேனரில்

சிரிக்கும் எந்திரன்,

என

எல்லாவற்றையும்

பார்த்துக்கொண்டு

சும்மா தான் இருந்தார்

மோட்டர் சைக்கிளில்

பயணித்தவாறே.

சே'

எனது டீஷர்ட்டில்

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4122

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

சிதறிய

எம் மக்களை

இணைப்பதற்காக

சிதறுகிறேன்

நான்

வலிகளேயின்றி!!!

மழையில்

நனைந்தால்

ஆகாதென்று

முந்தானை

குடைப்பிடிக்கிறாள் அம்மா

ம‌க‌ளின்

கல்லறைக்கு!!!

( ஈழத்தமிழரின் வலிகளை சும‌ந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )

பதித்தவர் : எழில்பாரதி

நன்றி : தை கவிதை இதழ் - 2009

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சிதறிய

எம் மக்களை

இணைப்பதற்காக

சிதறுகிறேன்

நான்

வலிகளேயின்றி!!!

நல்ல கவிதை நுணா! இணைப்புக்கு நன்றிகள்!

மகிந்த இப்படிப் பாடலாம்!

சேரும் தமிழ் உறவுகளைப்

பிரிப்பதற்காகச்

சிதறுகிறேன்

சில்லறைகளை

நான்,

பொறுக்குகின்றார்கள்,

வெட்கமேயின்றி!!!

Edited by Punkayooran

Share this post


Link to post
Share on other sites

எடுப்பார் கைப்பிள்ளை

66.gif

அடங்கி நடக்க அம்மா சொன்னார்

பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று

விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்

பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது

காதல் வந்த வேளையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்

கவிதை கற்ற வேளையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது

கம்பியூட்டர் படி என்றான் நண்பன்

காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி

காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்

கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி

வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது

நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்

66.gif

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

மீன்குஞ்சுகள்

துவாரகன்

--------------------

கண்ணாடித் தொட்டியில் இருந்த

மீன்குஞ்சுகள்

ஒருநாள் துள்ளி விழுந்தன

மாடுகள் தின்னும்

வைக்கோல் கற்றைக்குள்

ஒளிந்து விளையாடின

வேப்பங் குச்சிகளைப்

பொறுக்கியெடுத்து

கரும்பெனச் சப்பித் துப்பின

வயலில் சூடடித்து நீக்கிய

‘பதர்’ எல்லாம்

பாற்கஞ்சிக்கென

தலையிற் சுமந்து

நிலத்தில் நீந்தி வந்தன

வீதியிற் போனவர்க்கு

கொல்லைப்புறச் சாமானெல்லாம்

விற்றுப் பிழைத்தன

திருவிழா மேடையில் ஏறி

ஆழ்கடல் பற்றியும்

அதன் அற்புதங்கள் பற்றியும்

நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும்

அளந்து கொட்டின

இப்படித்தான்

வைக்கோலைச் சப்பித் தின்னும்

மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன

தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த

மீன்குஞ்சுகள்.

http://www.vaarppu.com/view/2447/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சரி தவறு

கயல்விழி சண்முகம்

சரியெனப்பட்டது

சத்தமாய் சரிதானென்றேன்

தவறெனப் புரிந்தது

தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்!

ஒத்திசைக்க உற்றவர்கள்

உடனிருந்தார்கள்!

அவர்தம்

கூட்டணி மாறியது

சரியென்றதை தவறெனவும்

தவறென்றதை சரியெனவும்

இம்சிக்கிறார்கள்

பிறழாத நாக்கு வேறு

பொய் நவில மறுக்கிறது

இப்போதும்

முன்னிருந்த நிலைதான்

இடறாத கொள்கையோடும்

பிறழாத நாக்கினோடும்

தன்னந்தனி மரமாய் நான்!

வந்தமரக்கூடும்

என் கிளையிலும்

சில பறவைகள்!

http://kayalsm.blogspot.com/2011/05/blog-post_23.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.