Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

1a8affc306685a57201587ec909d6d2f.jpg





கரியல் சைக்கல்!
................................
"ரெலீ'என்பது கம்பனிப் பேரு
இங்கிலாந்துதான் அது பிறந்த ஊரு 
அதுதான் எங்கு வாப்பாட காறு
என்னை ஊரெல்லாம் ஏற்றியோடும் தேரு!

காலயில கல்முனைக்கு போகும்
அது திரும்பி வர பலமணி நேரமாகும் 
பாதையில காற்றுப்போனா வீடு வந்து 
சேர்வதற்கும் காலதாமதமாகும்!
சைக்களின் பின்னால இருக்கும் 
ஒரு மரக் கரியல்
அதில தெரியும் 
கலம்பக் கயிற்று வரியல் !
கரியலில் ஏறிக்குந்துவோம்
இருபக்கமும் கால்போட்டு அமருவோம் 
சொரியலில் இருந்த அரிசியை 
சாக்கிலே அள்ளிக்கட்டுவோம்
கடைகளுக்கு கொண்டு விற்ப்போம்!
கல்முனை சந்தைக்குப்போய்
வாப்பா வரும்போது 
கரியலின் முதுகிலே ஒரு உரப்பை 
அமர்ந்திருக்க 
அதனுள்ளே சொரியலில் 
பல சாமான்கள் இருக்கும் 
இருபக்கமும் 
அரைவாசி பழுத்த வாழைக்குலைகள் 
தொங்கிவரும் 
சில வேளை அவை நிலத்திலே 
அரைத்துவரும்!
சந்தையில் இருந்து வாப்பா வரும்வரை 
காத்திருக்கும் எங்களை தூரத்தே வரும் சைக்கிள்
கிரீஸ் போடாததால் ஏற்படும் 
கிரீச்சிடும் ஒலி கவர்ந்திடும் !
நன்கு கனிந்த கொய்யா 
நான் உள்ளே இருக்கின்றேன் என்பதை 
பையை அவிழ்க்கமுன்னரே
நாறிச் சொல்லிடும்!
செருப்புப்போடாத சில்லுகள்
தெருப்பொருக்கிகளான 
பளுத்துக்காய்ந்த நெருஞ்சிகளால்
பதம் பார்க்கப்படும்போது 
புஸ்சென்று காற்றுப்போய் 
பயணங்கள் பாதியிலே 
நின்று விடும்! 
ஏற்றங்கள் கால்களுக்கு சவாலாக 
இறக்கங்கள் "பிரேக் "உடன் சண்டை பிடிக்கும் 
மணியடிக்காத சந்திகள் 
மோதலுடன் மட்டுமன்றி 
சண்டைகளையும் பிறப்பிக்கும்!
சொகுசு வாகனமும் அதுதான் 
எங்கள் கனரக வாகனமும் இதுதான் 
புதுசு வாங்க ஏலா நிலைதான் 
இதுவும் காலால் மீன் பிடிக்கும் வலைதான்
கரியல் சைக்கலில்
கன எடை ஏற்றினால் 
கம்பிக்கட்டு விட்டுப்போகும்
பூட்டாத சைக்கிளை 
பெருந்தெருவிலே விட்டால்
அது உன் கைவிட்டுப்போகும்!
அரிகாற்றுப் போனால் 
பரிகாரமாய் கொஞ்சம் 
பட்டுத்தேயிலையை டியூப்பிற்குள் 
போட்டடித்தால் சரியாகிப்போகும்!
கணக்குப்பாடத்துக்கு 
கொண்டு சென்றால் எல்லோரும் 
அதுபோடும் சத்தத்ததையும் 
அதன் அலங்கோலத்தையும் பார்த்து 
ஏளனமாய் சிரிப்பார்கள் ,
அதனால் நான் 
நடந்து செல்வது வழக்கமாகிவிட்டது!
வாப்பா காலஞ்சென்ற பின்னால் 
கவனிப்பரற்றுக்கிடந்தது 
அந்த ஈருருளி!
கனக்க உழைத்து 
கரளாலே கருத்து 
உருக்குலைந்த சைக்கிளை 
ஒவ்வொரு நாளும் பார்க்கையில் 
என் வாப்பாவின் உருவமும் 
நான் கடந்து வந்த பாதையும் தெரியும்!
பாதுகாக்க நினைத்து 
புழக்கடையில் பதுக்கிவைத்தேன் 
பாவி யாரோ எடுத்துவிட்டான் 
என் கனவுகளை கலைத்துவிட்டான்!

 
மு.இ.உமர் அலி 

http://omaaraly.blogspot.ca/

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

**பாவற்காயின் புலம்பல் **
***
இந்த நீதிமன்றத்தில் இருப்போர்
விசித்திரம் நிறைந்த காய் கறிகளை உண்டிருக்கலாம்
புதுவகையான பழ வகைகளைக் கண்டிருக்கலாம் !
என் புலம்பல் வெறும் அலம்பலும் அல்ல--
இந்தப் பூமியில் நான் புதியவனும் அல்ல !
தாவர இனங்களில் நானும் ஒருவன் !!

கடிக்கும் போது உள் நாக்கு வெறுக்கின்றது-
சமைக்கும் போது ..கறி எல்லாம் கசக்கின்றது !
இப்படி எல்லாம் .குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றேன் !!

நீங்கள் எதிர்பாப்பீர்கள் ..நான் இதையெல்லாம்
மறுக்கப் போகின்றேன் என்று
இல்லை --இல்லவே இல்லை --

எனது காய்களில் கசப்பை இணைத்துக்கொண்டேன்
இனிக்கும் காய்கறிகளை நீங்கள் உண்டு
உங்கள் இதயம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக !!

சமைக்கும் பாத்திரம் எல்லாம்--
கசப்பை ஊற்றெடுக்க வைத்தேன்--!!
சக்கரை நோயினால் நீங்கள்
பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக !!

எனக்குப் பந்தல் கட்டி--
எனது குடும்பங்களை சூறையாட முனைந்தவர்கள் ஏராளம்..!!
இதோ உங்கள் முன் நிற்கின்றானே--
உடம்பெல்லாம் தங்கநகை போட்டுக்கொண்டு !!
அன்னிய நாடுகளுக்கு எங்களை அனுப்பி
கொள்ளை இலாபம் அடித்த கொலைகாரன் இவன் !!

நாங்கள் கோபுரத்தில் ஏறியதில்லை..
ஆனால் கோழிக் கூட்டைத் தாண்டியதுண்டு ..!!
வரம்புகளில் வளர்ந்தது இல்லை--
வேலிகளில் படர்ந்ததுண்டு !!

குண்டாக இருக்கும் உங்கள் மேனியினை-
எனது குடிநீர் மூலம்
வாழைத் தண்டாக மாற்றிக் காட்டுபவன் நான் !

நான் வளர்வது ஒரு நாடு..
நீங்கள் வாங்குவது ஒரு நாடு..!
இன்று என்மீது குற்றம் சுமத்துகின்றீர்கள் ..!!

கசப்பாக இருக்கும் உன்னை
விருந்துக்கு வருவோருக்கு--
மருந்துக்கும் உன்னை --
சமைத்துக் கொடுக்க மாட்டோம் என்று !!

கனம் நீதிபதி அவர்களே கருணை காட்டுங்கள்
தமிழர்களின் விருந்தோம்பல்களில்
சன்றோர் சபைகளில் என்னை வீற்றிருக்க வழிசெய்யுங்கள் !!
************************
நன்றியுடன் வேலணையூர் லிங்கா !!

 
Santhalingam Karthygesu's photo.
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை! - II

p90a.jpg


வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியரிப் பிஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய தேசத்தில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

தீபச்செல்வன்

நன்றி - ஆனந்த விகடன்
ஓவியம் ஹப்சிகான்

http://deebam.blogspot.co.uk/2016/04/blog-post.html

  • Like 2
Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

நான் ஸ்ரீலங்கன் இல்லை! - II

பகிர நினைத்தும் பகிராமல்  போன கவிதை  (முகப்புத்தகத்தில் நண்பன் அனுப்பியதால்) - நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை.  நல்ல பகிர்வுக்கு நன்றி1

 

Link to comment
Share on other sites

நான்...இயற்கை பேசுகிறேன்!

 
எங்கு பார்த்தாலும் புலம்பல்
இப்படியா பெய்வதென்ற குமுறல்...

வெள்ளம் என்கிறீர்கள்
வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்
உள்ளும்புறமும் தண்ணீரென்று
ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்...

ஆனால்,
என்ன குற்றம் செய்தேன் நான்?

வாவா என்று
வருந்தி அழைத்தீர்கள்...
வாடுது பயிரென்று
வயலில் நின்று விம்மினீர்கள்...

கடவுளே, உனக்குக்
கண்ணில்லையா? என்று
கையை நீட்டிக் கதறினீர்கள்...

கடனைக்கட்ட வழியில்லாமல்
கடிதம் எழுதிவிட்டுக்
கழுத்தில்
கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்...

கோயில் கண்ட இடமெல்லாம்
யாகத்தீ வளர்த்தீர்கள்,
மழைக்காக ஜெபித்தீர்கள்,
தொழுகையில் அழுதீர்கள்...

கழுதைக்கெல்லாம்
கல்யாணம் பண்ணிவைத்து
வெய்யில் வானத்தை
வெறித்து நின்றீர்கள்...

மரங்களுக்குப் பதிலாக
மாடிவீடாய் அடுக்கிக்கட்டி
இறங்கிவந்து அனைவருமாய்
கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்...

ஏரிகளில் இடம்வாங்கி
எடுப்பாய் வீடுகட்டி
ஏசி போட்டு மாளவில்லை
எப்போ வரும் மழையென்றீர்கள்...

இத்தனையும் கேட்டுவிட்டு
எத்தனை தவிப்பென்று,
ஐயோ என இரங்கி
ஆறுதலாய்ப் பொழிகையில்,
குளமாகுது ஊரென்று
குமுறிக்குமுறி அழுகிறீர்கள்...

ஐப்பசியில் அடைமழை
கார்த்திகையில் கனமழை என்று
அன்றே எழுதிவைத்த
ஆதித்தமிழர் நியதிப்படி
கணக்காக வந்தேன்,
சுணக்கமின்றிப் பொழிகிறேன்...

ஆனால்,
குடத்தைக் கவிழ்த்துவைத்து
நடிப்புக்காய்க் கதறினீர்களென்று
இப்போது தெரிகையில்
எரிச்சல்தான் மிஞ்சுகிறது!

http://kurinjimalargal.blogspot.ca/?expref=next-blog

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

ஆனால்,
குடத்தைக் கவிழ்த்துவைத்து
நடிப்புக்காய்க் கதறினீர்களென்று
இப்போது தெரிகையில்
எரிச்சல்தான் மிஞ்சுகிறது!

நல்லாயிருக்கே. நன்றி நுனாவிலான் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நீ பாதி நான் பாதி

- பெருந்தேவி

 

உன்னருகே படுத்திருக்கும் கணவனின் தொப்பை
முக்கால் குன்றைக்க விழ்த்திருக்கிறது
அவன் குறட்டையில் 
பூமியோடு பக்கத்துக் கிரகமும் நடுங்குகிறது
நீ விழித்திருக்கிறாய்
மணி இரவு ஒன்று, உன் கணவனுக்கு
கட்டிலில் அமர்ந்தாலே மூச்சிரைக்கிறது
இப்போதெல்லாம்
நீ தினந்தோறும் சாமிக்கு விளக்கேற்றுகிறாய்
இரவுணவுக்குப் பின் கைகழுவியவுடன்
உன் கணவனுக்குக் கண் செருகாதிருக்க

சில அபூர்வமான மதியங்களில் அவன்
உன் இடுப்பின் டயர் மடிப்புகளை எண்ணுகிறான்
வேடிக்கையாம்
உன் கன்னம் தோல்பை 
கணக்காகத் தடித்திருக்கிறது
உன் முலைக் காம்புகளுக்கு 
காந்தம் வைக்க வேண்டும்
உன் யோனி நாயர் கடை வடையின் துளை
நாளுக்கு நாள் வளர்கிறதென்கிறான்
துர்நாற்றத்தை
அப்போது கேட்கிறாய்

இப்போதெல்லாம் அவன் குறை கூறுகிறான்:
சின்னத்திரை சீரியல்களைப்
பார்த்து அழுமூஞ்சியாகிவிட்டாய்
வாட்ஸ் அப்பில் எப்போதும் அரட்டை.
ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துவர எத்தனை நேரம்
சிடுசிடுக்கிறான் கள்ளிச் செடி

அவன் ஏவல்களை
உன் கால்களும் கைகளும் குறியும்
பிறவும் மறுப்பதில்லை
அவன் பேசுகிறபோது உன் கற்பனையின்
Mimicry Meme வேகக் குதிரைகள்
இல்லறத் தேரை
சொகுசாகவே இழுத்துச் செல்கின்றன
நீ அதில் ராணி.

 

http://www.kalachuvadu.com/issue-197/page47.asp

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சதுப்பு நாட்களில் மணலும் உருகி விடுகிறது

கருணாகரன்

 

Barack Obama

மூன்று கனவுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன
அவற்றின் கீழ்
குருதியுறைந்த வெண்பாறையொன்று
அதன் கீழ் சிதைகள் உருகும் நெருப்புப் படுக்கை
அதன் கீழ்
யாருமற்ற குழந்தைகளின்
பாதச் சுவடுகள் நிறைந்த மணல் வெளி
அதற்கும் கீழே பிரிவுற்ற காதலின்
முத்தங்களாலான கம்பள விரிப்பு
அதற்கும் கீழே
கைவிடப்பட்ட முதியோர்களின்
முனகலும் வலியும் நிரம்பிய நெகிழ் தகடு
அதன் கீழ் கூடற்ற பறவைகளின் இசையாலான குழையல்
அதற்குக் கீழ்
தளும்பிக் கிடக்கும் இரத்தத் தடாகம்
அதில் புத்திருந்தது ஒரு புத்தகம்
அந்தப் புத்தகத்தில் நிறைந்திருந்தன
மினுங்கித் தகிக்கும் எண்ணற்ற வாள்கள்
அவற்றை யாரோ ஓடிச்சென்று எடுக்கும்போது
அவை துப்பாக்கிகளாகிக் கொண்டிருந்தன

திரும்பியபோது
புன்னகைத்துக் கொண்டிருந்தார், தலைவர்.

http://www.nanilam.com/?p=10176

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”
-
நா. முத்துக்குமார்.

 
Vasu Sangarapillai's photo.
Vasu Sangarapillai's photo.
Like
 
Comment
  • Like 1
Link to comment
Share on other sites

சென்னை: மறைந்த நா. முத்துக்குமார் எழுதிய ஒரு கவிதை வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. உருக வைக்கும் கவி வரிகள்.. நிதர்சமான உண்மையும் கூட.

மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறங்க?" முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி கடைநிலை ஊழியனானான். "அணுசக்தி விஞ்ஞானியாவேன்" என்ற நான் திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசைமாற்றிப் போட, "வாத்தியாராவேன்" என்று சொன்ன குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். "நெனைச்ச வேலையே செய்யற, எப்படியிருக்கு மாப்ளே?" என்றேன். சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க? என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான். - நா. முத்துக்குமார்

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/na-muthukumar-s-poem-on-kids-260632.html

  • Like 3
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

மிகவும் அருமையான கவிதை நுணா. இன்றைய யதார்த்தம்.....! tw_blush:

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

'நாள் தவறி போனதே' என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..

மார்பில் முகம் புதைத்ததும்...
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..


புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..


மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..


ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..


ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..


மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய் விடுமா உன் அழகு தாய்மையில்..


ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?


தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..


நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!


இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..


சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..


தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..


அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..


சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..


இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்.


 பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!


பெண் குழந்தை நீ பெற்றாய்.

 பேரின்பம் நான் பெற்றென்..

முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..


அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்.


 புரியவில்லை அக்கணம்..

வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?


யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..


30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..


பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..


அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..


தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..


ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???


 "..பெண்ணல்ல நீ எனக்கு.."

1111.jpg


குல தெய்வம் அல்லவோ..!!

 

http://alagappanarumugam.blogspot.ca/2016/06/blog-post.html?expref=next-blog

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவர்களும் சிறை செல்லலாம்

தம்பா

தேவர்களும் சிறை செல்லலாம்
 

 

வறுமையை அள்ளிக் கொடுத்து

செல்வத்தை வறுத்தெடுத்த கிராமம்.

 

பட்டினிக்கு நிவாரணமாக

மடாலயங்களில் பால்ய பருவத்தை

அடைவு தந்த தந்தை.

 

பல வர்ண கனவுகளும்

பல வர்ண உடைகளும்

வெளிறி பழுத்து

மஞ்சள் நிறமானது.

 

பகலை இரவாக்கி

இரவை பகலாக்கி

விந்தை புரிந்த துறவி

போரை சமாதானமாக்கி

சமாதானத்தை போராக்கி

காயான மனதை

புகை போட்டு பழுக்க வைத்தார்.

 

பன்பருவத்து ஆத்மீகம்

உடலோடு வளரமறுக்க

'கடவுளையும் நாட்டையும்

உயிரிலும் மேலாய் வை'

என நெற்றியில்

அரச மரத்து கிளை நாட்டி

'எப்போதும் அசுரர்கள்

வட திசையிலிருந்து வருவார்கள்.'

என மந்திரித்து

ஆலமரமாய் செழிக்க வைத்தார்.

 

வெளிறிய கனவும்

வெளிறிய உடையும்

அகிம்சையின் ஆசிர்வாதத்தால்

பல வர்ணம் பூண்டது.

 

நீலவானில் இடி இடித்தது

உச்சி வெய்யிலில் இருள் இருந்தது.

 

வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள்

காடெங்கும்

சிவப்புக் கம்பளமாய் விரிந்தார்கள்.

 

பகைவர் அற்ற போர்

உயிர் பறிக்கும் அகிம்சை

விழியற்ற பார்வை

மொழியற்ற பேச்சு.

 

பணத்தையும் நிலத்தையும்

அவர்கள் எண்ண

பிணத்தையும் மானத்தையும்

இவன் எண்ணினான்.

 

சரணடைந்த சகோதரிகளுக்கு

வன்புணர்வை பரிசாகத் தந்து

உயிரை பண்டமாற்றாக பெற்றவர்கள்

பத்திரிகைகளில் தேவர்கள் ஆனார்கள்.

 

சகோதர சகோதரிகளின்

மானம் காக்க

தன் உடை தந்து

'பரிபூரண நிர்வாணம்' ஆனான் அவன்.

 

பட்டப் பகலில்

வானில் பவுர்ணமி நிலவு

சூரியனை மறைத்து

தீயை உமிழ்ந்தது.  

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=8db7e0b0-323b-48f1-aa8c-d9be87e325f9

Link to comment
Share on other sites

  • 1 month later...

**கலைய மறுக்கும் கனவு !**
தரையில் நீ நடந்து வந்தாய் 
தமிழ்த் திரையுலக 
கலைமகள் நீ என்றேன்--

மயக்கும் மலர்களைச் -சூடி வந்தாய்-
மலைகளை ஆட்சி செய்யும் 
மலைமகள் நீ என்றேன் !!

சிரிப்பொலிகளின் சிதறல்களை
அலைஅலையாய் .அழைத்துவந்தாய்
அலை மகள் தான் -நீ என்றேன்

மழைநீரில் நீ நனைந்து-உன்
மலர்க் கூந்தல் அதை விரித்து
வளைந்தும் நெளிந்தும் .
நீ - ஆடுவது மயிலாட்டம் தான் என்றேன் !!

குத்துவிளக்கு நீ ஏற்றி--உன்
பத்து விரல்களால் அதைப் பற்றி
சுற்றம் சூழ நான் இருக்க--
சுருதி விலகாமல் நீ படிப்பாய் தேவாரம்-
அதை குயில் பாட்டுத் தான் என்றேன்--

இன்று அருகிலும் நீ இல்லை
அண்மித்த நாட்டிலும் உன் வீடில்லை-
கனவில் மட்டும் ஏனோ-
கதவுகள் திறந்து வருகின்றாய்
காலமெல்லாம் வாழ்கின்றாய்
****
நன்றியுடன் வேலணையூர் லிங்கா

 

Link to comment
Share on other sites

காளைகளை நாங்கள் 
கவனித்துக் கொள்கின்றோம்.
நிணம் ஒழுகி வழியும்
உன் ஓட்டைகளை நீ கவனி.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx பொன்னையா விவேகானந்தன்..

மாடும் மானமும் தமிழருக்கொன்றே.
நீதான் சட்டமா?
கொஞ்சம் நில்
நிதானமிருப்பின் கேள்.
மாட்டுக்கும் மனிதனுக்கும்
உண்டான உறவிலிருந்து,
தமிழனுக்கும் மாட்டுக்கும் 
உண்டான உறவை வேறுபடுத்து.
ஆண்டின் அத்தனை நாட்களிலும் 
மாட்டிடம் 
நாங்கள் காட்டும் பரிவை 
நீ பார்த்ததுண்டா?
ஒரு குடும்பத்தில் 
மகவு ஐந்தெனில்
மாடு ஆறாம் மகவு
என்பதை நீ அறிவாயா?
மாடுகளை நேசிப்பது எப்படி என்பதை
எம்மிடம் கற்றுக் கொள்.
ஆநிரை கவர்தலும்
ஆநிரை மீட்டலும்
காலவழி வந்த
தமிழர் மரபு.
கடவுளர்
கண்டறியப்பட முன்பே
கதிரவனுக்கு
முதல் வணக்கமும்
காளைக்கு 
மறு வணக்கமும்
வைத்தோர் 
வழிவந்தவர் நாம்.
‘மாட்டா’ரைக்
கணம் பண்ணுவது
எப்படி என்பதை
‘கணம் கோட்டா’ரை விட
அதிகம் அறிந்தவர் நாங்கள்.
ஆடு கோழி பலியிட்ட தமிழர்
மாட்டைப் பலியிட்டதில்லை.
எம் வீட்டுக்கடுத்து நாம்
உணவூட்டிப் போற்றிய
ஒற்றை உயிர் மாடு மட்டுமே.
மாடு எழுப்பிய
மணியோசைக்காய்
மகனையே பலியிட்டான்
மனுநீதி.
செல்வத்தைக் கூட
மாடென்றே மதித்தவர்
நாங்கள்
வள்ளுவன் கூட
‘மாடல்ல மற்றுப் பிற’ என்றான்.
அஞ்சாநெஞ்சொடு 
நிமிர்ந்து நடை பயிலும் 
காளைகளை
‘ஏறு’ என்றழைத்தல்
எம் வழக்கு. 
ஆண்டிலே ஒருநாள்
ஏறோடு கூடி 
எம் காளையர் ஆடுவர்.
ஏறுகளும் வீழ்வதுண்டு
காளைகளும் கவிழ்வதுண்டு
இது, தோன்றிய காலம் 
எதுவென்றறியா
வீர விளையாட்டு.
தழுவப்படுவதற்காக ‘ஏறு’ களும்
தழுவி மகிழ்வதற்காகவே காளைகளும்
வளர்கின்ற மண் இது.
கழனியிலே ஏர் பூட்டவும்
களத்திலே மார் தட்டவும்
தமிழன் பயில்கின்ற பள்ளி இது.
மாடும் மானமும்
தமிழருக்கொன்றே.
இவை பறிக்கப்படுகின்ற 
போதெல்லாம்
வெறி கொண்டெழுவர்.
ஒப்புக்கு உலா வரும் சட்டமே!
துள்ளியெழும் அலைகளைச்
சுட்டு வீழ்த்தலாம் 
என்று எண்ணாதே.
நாளொன்றில் 
மாடுகளை விடவும் 
மனிதர்களே அதிகம்
வதைக்கப்படுகின்றார்கள்.
காளைகளை நாங்கள் 
கவனித்துக் கொள்கின்றோம்.
நிணம் ஒழுகி வழியும்
உன் ஓட்டைகளை நீ கவனி.
-
தமிழன், பொன்னையா விவேகானந்தன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

அத்துவான வேளை – தேவதச்சன்

தேவதச்சன் கவிதைகள்

 

 

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் 
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன 
சட்டையை தொளதொள வென்றோ 
இறுக்கமாகவோ போடுகிறாய் 
தலைமுடியை நீளமாகவோ 
குறுகவோ தரிக்கிறாய்devathachan 
உன்னிடமிருந்து பறந்து சென்ற 
இருபது வயது என்னும் மயில் 
உன் 
மகளின் தோள் மீது 
தோகை விரித்தாடுவதை 
தொலைவிலிருந்து பார்க்கிறாய் 
காலியான கிளைகளில் 
மெல்ல நிரம்புகின்றன, 
அஸ்தமனங்கள், 
சூரியோதயங்கள் மற்றும் 
அன்பின் பதட்டம்

*

கைலாசத்தில் 
புதரோரம் 
ஒட்டாமல் கிடந்த 
சிவனின் இடது பாகமும் 
பார்வதியின் வலதும் 
சரிந்து பூமியில் விழுந்தன 
சாமிகளின் உடம்பில்லையா 
காலங் காலங் காலமாய் 
அழுகிக் கொண்டிருக்கிறது 
தம் வீடுகளில்.

*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை 
காற்றில் 
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் 
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன 
வெட்ட வெளியில் 
ஆட்டிடையன் ஒருவன் 
மேய்த்துக் கொண்டிருக்கிறான் 
தூரத்து மேகங்களை 
சாலை வாகனங்களை 
மற்றும் சில ஆடுகளை.

*

பழத்தை சாப்பிட்டு விடு 
நாளைக்கென்றால் அழுகிவிடும் 
என்றாள் அம்மா 
வாங்கி விண்டு 
உண்டேன் 
இன்றை.

http://azhiyasudargal.blogspot.ca/2010/08/blog-post_31.html

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • 2 months later...

மாவீரர் நாள் கவிதைகள்!!!     புதுவை இரத்தினதுரை

மாரிமழை பொழியும். மண்கசியும்
ஊர்முழுதும்
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்
கார்த்திகையில்
பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்.
துயிலுமில்லச் சாமிகளுக்கான
சந்தனநாள் வந்தடையும்.
மாவீரச்செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று
நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி
பாடும் நாள்.
விதைத்த பயிர்கள்
நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்.
குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு
என நிமிர்ந்து பேசும்படியான‌
புதுவாழ்வின் புலர்வுதினம்.
புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.
தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச்
சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.
பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர‌
பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ...!!!

http://uthayakumarthamizhan.blogspot.ca/2013/04/blog-post_7070.html

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தனிமை

– கு.அழகர்சாமி

 

panai.jpg

தனிப்
பனை.

ஓர் ஆட்டை
அதில் யாரோ கட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.

வெயிலில்
தனிப் பனையின்
சொற்ப நிழல்.

அது
போதும்;
ஆடு சுகம் காணும்.

எங்கிருந்தோ பறந்து வந்து
ஒரு பருந்தமரும் பனையின் மேல்.

தனிப் பனை
இனியும் உயர்ந்து
தெரியும்.

சூரியன்
பனையின்
தலை மேல் தங்குவான் சிறிது.

பனை செய்யும் தனித்தவத்தில்
சிவந்து மேலும் ஒளிர்வான்.

தனிப் பனையைப் பார்க்கப் பார்க்க
எனக்குப்
புரியும்.

என்
தனிமை
நெட்டுக்குத்தலாயிருப்பது.

 

https://solvanam.com/?p=51373

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பூனைமை-கவிதை

அனார் இசாத் றெஹானா

%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%

புகையிலைத் தோட்டங்களுக்குள்
புதைந்திருக்கும்
கல்லறை வாசியான பூனை
மடிந்த குறுவால் சுழற்றி
தன் தோற்றங்களை பன் மடங்காக்குகின்றது
ஆந்தையின் கண்களில் விடிந்திருக்கின்ற
பௌர்ணமியைப் பிராண்டுகின்றது

கரும் சுருள்களாய்
முகில்கள் சூழும் வேளை
ஆபத்தான சமிக்ஞைகளை
கூறுபோடும் தந்திரங்களை
வேட்கை வாடைகளை மோப்பம் பிடிக்கின்றது

பார்வைக் கூர்மையால்
மன உறுத்தலை அறியும்
பச்சைக் கண் பூனை
பலியின் இரத்தத்தை விடாய் கொண்டு நக்கிடும்

கைகளால் வருடி அளைதல் பொழுதுகளில்
உள்ளங்கை மேலே
மென் பாதம் பதிந்து
“மியா“ என்கின்றது மென்மையாக……

நீல இருளில் உலவும்
வசீகரப் பேயுருப்பூனை விசுவாசமற்றது

 http://www.naduweb.net/பூனைமை/

 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ட நாய்கள்
-முகமூடி

நான் கண்ட நாய்கள் பலவிதம்.
நேற்றுப் பிறந்த
குறிதெரியாத "இள"ம்நாய்களிலிருந்து..
விரைவீங்கித் தொங்கும் 
வாலிப வயோதிக நாய்கள் வரை..
நான் கண்ட நாய்கள் பலவிதம்.

சில நாய்கள்
கொள்கைக்காகக் கத்துவதாய்
சொல்லிக் கொள்கின்றன.
கொள்கை குறித்தி விசாரிக்கப் போனால்
கத்துவதை விடுத்து கடியையே பதிலாக தருகின்றன...

அந்நாய்களின் கொள்கைகளைக்
அவைகளே தீர்மானிப்பதில்லை என்பதைக்கூட
அறியாமலேயே வாழும் நாய்ப்பாடு பெரும்பாடு...

தனக்குக் கொள்கையில்லை 
என்ற பிரகடனத்துடன் 
தன் உள்மன அழுக்குகளையெல்லாம்
கொள்கையாக்கிக்
கத்துகிற நாய்கள் சில இங்குண்டு.

இன்னும் சில நாய்கள்
பொறாமையில் கத்தும்..

சில நாய்கள்
அரசியல் சார்பில்
அடியாட்களாய்க் கத்தும்...

ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்சில நாய்கள் பின்னொருநாள்
ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும்.
அந் நக்கலை நியாயப்படுத்த
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
என்றாலும்
பெண் துவாரம் தேடும்போது
ஜாதியை மறந்துவிடுகிற இவை
தன் ஜோடியை தேடும்போது மட்டும்
ஜாதியை மறக்காத சுபாவத்தை
இயற்கையிலேயே கொண்டிருப்பவை..

இலக்கியச் சேவையென்று
கத்துகிற நாய்கள் சில உண்டு..
எதிரே இல்லாத
பிடிக்காத எழுத்தாளனை
பாய்ந்து பிடுங்குவதாய்
வேஷம் கட்டும் அவற்றை
அவற்றின் கோஷத்தை வைத்தே
எளிதில் அடையாளம் காணலாம்...

பதவிக்காகக்கத்துகிற நாய்களும் சில இங்குண்டு.
இந்நாய்களின் குரலில்
எஜமானன் மீதான நன்றியுணர்ச்சி வழியும்.
பதவி கொடுத்தமைக்கு
நன்றி தெரிவிக்கும் முகமாய்
பரம்பரை பழக்கத்தில்
இவை கத்திக் கொண்டிருக்கின்றன.
இவை
சில நேரங்களில்
எஜமானனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு
எஜமானன் சொல்லாமலே கத்தி
உபத்திரவங்கள் கொண்டு வருவதுமுண்டு.

இனச்சேவை, மொழிச்சேவை என்ற பெயரில்
இருப்பை காட்ட கத்தும் சில நாய்கள்.

சினிமா சான்ஸு என்ற பெயரில்
சில்லரைக்காக கத்தும் சில நாய்கள்.

தன் குரல் தானே கேட்கிற மகிழ்ச்சியில்
குயிலென்று நினைத்துக் கொண்டு
தொடர்ந்து கத்துகின்ற நாய்களும் உண்டு.

பெரிய நாய்களோடு சேர்ந்து கத்தினால்
கவனிக்கப்படுவோமென்று
கத்துகிற குட்டிநாய்களும் உண்டு.

தனியாகப் பார்க்கும்போதுவாலைக் குழைத்து நெளிந்து வளைந்து
பின் -
கூட்டத்தில் தைரியமாகக்
கத்துகிற நாய்களும் உண்டு.

தன் குரலின் அருமை அறியாமல்
அடிக்கடிக் கத்திக்
கல்லடி வாங்குகிற நாய்களும் உண்டு.

கத்துவதற்கு நேரமில்லை
பின்னர் வருகிறேன் என்று
சொல்லிப்போகிற நாய்களும் உண்டு.

நாய்ப்பெருமை பேசித் திரியும்
இந்நாய்களை
யாரும் நாயென்று விளித்துவிட்டால்
இவற்றுக்குப் பிடிக்காது.
"யார் நாயென்று" தன்னினம் தாழ்த்தித்
தானே கத்துகிற சிந்தனைத்திறம் பெற்றவை இவை.

இருட்டில் வாழ்கிற இந்நாய்கள்
வெளிச்சத்துக்கு ஏங்குபவை.
ஆனால்
வெளிச்சத்தைக் கண்டால் அஞ்சுபவை.
அதனால் -
திருடர்களின் துணைகொண்டு
வெளிச்சக் கம்பங்கள்மீது
சிறுநீர் கழித்துச் சிரிக்கின்றன.
பின்னெழுகிற கோபத்தில்
சிலநேரங்களில்
தங்கள் கண்களுக்குள் தங்கள்
சிறுநீரைப் பீச்சிக் கொண்டு
வெளிச்சத்தைத் துரத்திவிட்டதாய்
ஆனந்தப்படுவதுமுண்டு.

தான் தின்றதைத்
தான் கக்கிப் பின்
தானே நக்கித்தின்னும் நாய்கள் அல்ல இவை.
எஜமானர்களின் ஏவலுக்கேற்ப
அவர்கள் சொல்லும் கக்கலை
அதிசுவாரஸ்யமாய் நக்கித் தின்பவை.

இவ்வாறுஇந்நாய்கள்
இருப்பை நியாயப்படுத்த
தொடர்ந்து கத்துகின்றன.
என்றாலும் -
தன்வீட்டைத் தாண்டிவந்து
பொதுமைதானத்தில்
பூனையுடன்
சண்டைபோடுகிற தைரியத்தைக்கூட
தம் விரைகள்
தமக்கு வழங்காத வருத்தம்
இந்நாய்களுக்கு உண்டு.
தன் குறியைத் தான் விறைத்து
தனக்குமுன்னே ஆட்டிக்காட்டி
அவ்வருத்தம் போக்கிக் கொள்ளும்
இந்நாய்கள்.

குரலையும் இரவல் வாங்கிக்
கத்துகிற இந்நாய்கள்
சுயமாய்க் கத்துகிற வக்கில்லாதவை.
கத்தலையே குரைத்தல் என்று 
கற்பனையில் திளைப்பவை
என்றாலும் - 
தங்களை
நாய்களென்று உணராதிருப்பதாலும்
பெரும்பாலான நேரங்களில்
தம்பெட்டையைத் திருப்திபடுத்த மட்டுமே
பிறர்மீது பாய்ந்துபிடுங்குவதாலும்
இந்நாய்களை நேசிக்கலாம் நாம்...

 

http://mugamoodi.blogspot.co.uk/2006/05/blog-post_21.html?m=1

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பலகைக் குறிப்புகள்

By ஜிஃப்ரி ஹாஸன் 
 

ஒரு பக்கச் சுவர் முழுவதும்

நிரம்பியுள்ளது கரும்பலகை

எப்போதும் போலவே அதன் முதுகில்

யார் யாரோ வரைந்த ஓவியங்கள் எழுத்துக்கள்.

கரும்பலகை தனக்கென எதையும்

தனியாகக் குழந்தைகளுக்குச் சொன்னதில்லை-

காட்டுவது மட்டுமே கரும்பலகையின் பணி

குழந்தைகள் விரும்பாத அனைத்தையும் கரும்பலகை

தன்னில் எழுதிக் கொள்கிறது

ஒரு அழிப்பான் விரைவாக அழித்துவிடாதா

என்ற குழந்தைகளின் ஏக்கம்

கண்ணுக்குத் தெரியாத சொற்களால் வரையப்பட்டுள்ளன.

கண்களை மூடிக்கொண்டே

கடந்துவிட முனைகின்றன குழந்தைகள்

கருப்புத் திரையை நீக்கி

சுதந்திரமாய் வரைய காலத்தின் கீதத்தைச் திசைக்கொன்றாய்

பறக்கின்றார்கள்...

 

 

http://neerkoodu.net/Site/news1/50

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.