Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]துரோகம்[/size]

சுழியன்

sword1.jpeg

இந்த கூர்வாள் நண்பர்களுக்கானது.

துரோகத்தால் முதுகில் கிழிக்க

பிரத்யேகமாய் வடிவமைத்தோம்

நாங்கள் சேர்ந்து, சேர்ந்து விளையாடினோம்

துரோகத்தின் ஒவ்வொரு பாடத்தையும்

செயல்முறை விளக்கமாய்

செய்து, செய்து பார்த்தோம்

ஒவ்வொரு முதுகாய் தேடித் தேடி குத்தினோம்

உதிரம் தெறிக்க கொலையாகுபவர்கள்

பதறிச் சரிவதை நிதானமாய் ரசித்தோம்

"ஒருநாள் எங்களுக்குள்ளான

பரஸ்பர நம்பிக்கை

பொய்க்கும் போது

எங்களை நாங்களே

குத்திக் கொல்வோம்"

....

...

...

...

என ஆவலாய் காத்திருக்கும்

உங்கள் முதுகு தான்

எங்களின் அடுத்த இலக்கு !

http://suzhiyam.blog.../blog-post.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]யாதுமாகி …[/size]

[size=4]ஷம்மி முத்துவேல்[/size]

[size=5]
நாற்புறச்சட்டகத்தின் பின் இருப்பது தெரியாமல்

பேசிக்கொள்கிறார்கள் ..

நிறமிகளின் பின்னே நரை மறைத்து நிரந்தரமாகவே

அவை சென்று விட்டதாகவே

நினைத்து கொள்கிறார்கள் …

கண்ணோரச் சுருக்கங்களையும்

மோவாயின் தளர்ந்த தசைகளையும்

நீவி இழந்தவைகளை கண நொடிகளில்

பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்

குழந்தையிடமும் சிறியவர்களிடமும் மட்டுமே

தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து

இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில்

சமைத்து பரிமாறுகிறார்கள் ..

தோல்விகளை திரையிட்டு மறைத்து

வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் ..

புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக

பறைசாட்டுவர் …

சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும்

இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் …

“தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை

சுழலவிடுவர் …

சற்றே அயரும் நேரத்தில்

நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர்

சிலவரிகளில் நீங்கள் வாசிக்கும் பொருட்டு

அவர்கள் உங்கள் அருகிலோ,

அல்லது நீங்களாகவோ

அல்லது நானாகவோ இருக்கக்கூடும் ..
[/size]

http://puthu.thinnai.com/?p=11669

Link to comment
Share on other sites

நல்ல கவிதைகள். நானும் இத்திரியுடன் இணைந்திருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]முலைகளின் ஆல்பம்[/size]

[size=4]
சுகுணா திவாகர்
[/size]

boobs2.jpg

[size=5]பேருந்து படிக்கட்டு விளிம்பில்

நின்றுகொண்டிருந்த நான்

சடாரென்று கோணம் மாற்றினேன்

எனக்கும் மேலே

கைதூக்கி நின்ற பெண்களின்

மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே

மணமாகித் தாய்வீடு வந்திருந்த

எதிர்வீட்டுப்பெண்ணின்

மார்பு ரசித்தேன்

மாசமாயிருப்பாளோ என்னும்

உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட

கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய

கொழுத்த முலைகள்

இன்றைய இரவை

ஈரப்படுத்தக்கூடும்.

திரைகளெங்கும் நாயகிகள்

முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்

சரிசெய்துகொள்வது வேறு

நம் கனவுகளின் பரப்பை

அகலப்படுத்துகின்றன.

மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.[/size]

(நன்றி : கருப்பு 2002)

http://midakkumveli..../blog-post.html

  • Like 1
Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

இது உங்களுக்கு ஆபாசமாக தெரியவில்லையா? :unsure:

இங்கு நல்ல மாதிரி எழுதும் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் நம்பவில்லை. :lol: ஆனால் ஒரு இணைய தளத்தில் எழுதும் போது கொஞ்சம் அடக்கி எழுத வேண்டும். இல்லை அனைத்தையும் எழுத முடியும் என்றால் ஒரு பெண்ணை முழுக்க முழுக்க விபரிச்சு எழுதுவினம். அந்த அளவுக்கு அவர்களின் மன ஓட்டம் இருக்கும். :wub:

இன்று யாழ்களத்தில் பல திரிகளில் பலர் படு கேவலமாக கருத்து எழுதுகிறார்கள். இதையெல்லாம் இன்று அனுமதித்தால் நாளைக்கு இவற்றை வாசிப்பதற்கே இளைஞர் கூட்டம் யாழுக்கு படையெடுக்கும். :D அந்த பெயர் யாழுக்கு தேவையா? :wub:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை இணைக்கும் திரிக்கு பெயர் மனதை கவர்ந்த கவிதைகள்..அந்த அடிப்படையில் அது எப்படிப் பட்ட கவிதையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை..தங்கள் மனங்களை கவர்ந்தால் அதை மற்றவர்களும் பார்க்கட்டுமே என்று இணைக்கிறார்களோ தெரிய இல்லை.எல்லாம் எல்லார் மனதையும் கவரும் என்று யாரும் நினைத்து விட முடியாது..ஆபசமான கதை,கவிதைகளை வாசிக்கலாம் விரும்பியவற்றைப் பார்க்கலாம்..ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது..இப்படியான எழுத்துகளினாலயே ஆண்கள் முன்னாடி பெண்களுக்கு போக தயக்கமாக இருக்கிறது..யாரு,யாரை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்று யோசிக்க முடியாது இருக்கிறது.யாழை,யாழாக இருக்க விடுங்கள்..குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி விடாதீர்கள்..இந்தளத்துக்கு உரிய அண்ணா சொல்லி,சொல்லி களைச்சு போய் மேளனமாகியே விட்டார்.யாரும் சண்டைக்கு வராதீர்கள்..மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.

ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை!

மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்!

கவிதைகளை இணைக்கும் திரிக்கு பெயர் மனதை கவர்ந்த கவிதைகள்..அந்த அடிப்படையில் அது எப்படிப் பட்ட கவிதையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை..தங்கள் மனங்களை கவர்ந்தால் அதை மற்றவர்களும் பார்க்கட்டுமே என்று இணைக்கிறார்களோ தெரிய இல்லை.எல்லாம் எல்லார் மனதையும் கவரும் என்று யாரும் நினைத்து விட முடியாது..ஆபசமான கதை,கவிதைகளை வாசிக்கலாம் விரும்பியவற்றைப் பார்க்கலாம்..ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது..இப்படியான எழுத்துகளினாலயே ஆண்கள் முன்னாடி பெண்களுக்கு போக தயக்கமாக இருக்கிறது..யாரு,யாரை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்று யோசிக்க முடியாது இருக்கிறது.யாழை,யாழாக இருக்க விடுங்கள்..குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி விடாதீர்கள்..இந்தளத்துக்கு உரிய அண்ணா சொல்லி,சொல்லி களைச்சு போய் மேளனமாகியே விட்டார்.யாரும் சண்டைக்கு வராதீர்கள்..மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவுங்கள்.

நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!

Link to comment
Share on other sites

முலைகளின் ஆல்பம்

சுகுணா திவாகர்

boobs2.jpg

பேருந்து படிக்கட்டு விளிம்பில்

நின்றுகொண்டிருந்த நான்

சடாரென்று கோணம் மாற்றினேன்

எனக்கும் மேலே

கைதூக்கி நின்ற பெண்களின்

மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே

மணமாகித் தாய்வீடு வந்திருந்த

எதிர்வீட்டுப்பெண்ணின்

மார்பு ரசித்தேன்

மாசமாயிருப்பாளோ என்னும்

உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட

கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய

கொழுத்த முலைகள்

இன்றைய இரவை

ஈரப்படுத்தக்கூடும்.

திரைகளெங்கும் நாயகிகள்

முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்

சரிசெய்துகொள்வது வேறு

நம் கனவுகளின் பரப்பை

அகலப்படுத்துகின்றன.

மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.

(நன்றி : கருப்பு 2002)

http://midakkumveli..../blog-post.html

நல்லதொரு கவிதை. பகிர்வுக்கு நன்றி கிருபன் !!

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

நல்ல கருத்து !!

Link to comment
Share on other sites

[size=5]மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size]

[size=5]எனக்கு இந்த வரிகள் மிக உண்மையாக தெரிகின்றன [/size].மனம் விட்டு எதுவித சஞ்சலமுமின்றி கதைக்கும் பெண்களிடமும் கூட, சிலவேளைகளில் அன்று அவர்கள் அணிந்திருக்கும் உடை என்னை சற்று தள்ளி வைத்துவிடும் .பிழை என்னில் என்றுதான் நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை!

மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்!

நன்றி உங்கள் பதிலுக்கு. வெளிவேசதாரிகளை விட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை தான்.

அதற்காக இணையதளத்திலும் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றால் ஆபாசத்தை தூண்டும் படங்களை இணைக்க வேண்டாமென்று ஒரு கள விதியை ஏன் கொண்டு வந்தார்கள் என்று தான் தெரியவில்லை. அதையும் வெளிப்படையாக இணைக்க விட்டிருக்கலாமே? அப்படி விடாதது ஏன் என்று உங்களாலும் ஊகிக்க முடியவில்லை.

சபை நாகரீகம் கருதி ஒருவருடன் வாடா போடா என்று கதைக்காமல் விடுவது போல் இணைய தள நாகரீகம் கருதி சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து....

நிர்வாகத்திடம் ஒரு திரியில் கூறியிருக்கிறேன். நிர்வாகத்தின் பதில் வந்த பின் அவர்களுக்கு பதிலளிக்கிறேன்.

நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!

நீங்களே மறைமுகமாக சொல்கிறீர்கள் இது ஆண்களுக்கான இணையதளம் என்று. ஆண்கள் உங்கள் கவிதையை ரசிப்பார்கள் தானே?

ரதி அக்கா பெண் தானே என்று என்னை கேட்க வேண்டாம். அவர் ஆணா பெண்ணா என்று எனக்கு தெரியாது. ஆனால் யாழுக்கு பல பெண் வாசகர்கள் உள்ளனர்.

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை :unsure: ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான்

அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் :D அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் :lol: அவர்களை

நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்

அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...

Edited by தூயவன்
  • Like 1
Link to comment
Share on other sites

(நன்றி : கருப்பு 2002)

நன்றி கரும்பு 2002 என மேலோட்டமாக பார்த்தபோது தென்பட்டது. எனது இதயம் திக் என்று அடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? மிக்க நல்லது ரதி... உங்களது மார்புகளை ரசிக்கலாமா? உங்களின் படங்கள் தரமுடியுமா? நான் ஓரினச் செயர்க்கயாளன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டி உள்ளது. மார்பு ரசிக்கலாம் என்ற பிறகு என்ன சொந்தங்களில் ஏற்றத் தாழ்வு... எல்லோரையும் ரசியுங்கள்...இந்தக் கவிதையை இரசிப்பவர்களின் உறவுக்காரப் பெண்கள் அனைவரினதும் மாரப்பினையும் ரசிக்க ஆசைப்படுகின்றேன்...

நான் மேலே எங்கேயாவது ஆண்களை பெண்களது மார்புகளை ர‌சிக்க சொல்லிக் கேட்டேனா? அல்லது ரசியுங்கள் என்றாவது சொன்னேனா?...உங்கள் மன சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ இது வரை எந்த பெண்ணையும் தப்பான கோணத்தில் உங்கள் கண் பார்க்கவில்லை?...உங்களை அறியாமலே உங்கள் கண் தப்பான எண்ணத்தில் எந்தப் பெண்ணையும் நோக்கவில்லை?...சில ஆண்கள் வேண்டுமென்றே தெரிந்தே இந்த தப்பை செய்கிறார்கள் பல ஆண்கள் தங்களை அறியாமல் இந்த தப்பை செய்கிறார்கள்...அவர்களது வளர்ப்பு,தங்கள் குடும்ப கெளர‌வம் அதை விட முக்கியமான மனக் கட்டுப்பாடு போன்ற கார‌ணங்களால் பல ஆண்கள் அட‌க்கி வாசிக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம்.

பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது.

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???!

கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக..............

Can a girl get wet in school when looking at a hot guy? :lol:

இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

[size=5]மார்புகள் இல்லாது போனால்

எல்லாப் பெண்களோடும்

உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size]

[size=5]எப்போதேனும் தட்டுப்படும்

மார்புகளின் ஸ்பரிசம்

கிளர்ச்சியூட்டும் வேளையில்.

இப்படி எண்ணத்தோன்றும்

வெறித்து நோக்கும்

ஆண்களின் கண்களே

முலைக்காம்புகள் ஆயினவோ.[/size]

ஒரு படைப்பாளிக்கு படைப்பு நேர்மை இருக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கவிதையைப் படைத்தவரின் படைப்பு நேர்மையை பாராட்டுகின்றேன் . ஒருவரின் மன அழுக்கையுஞ் சொல்லி அதன் இறுதி வரியில் பார்பவரின் கண்களை மார்பகத்தின் காம்புகளை உருவகித்துள்ளார் . மேலும் ஆபாசத்திற்கு வரைவிலக்கணம் சொல்வது கடினம் . அத்துடன் கவிதைக்கு மொழியில்லை . எம்மால் ஆபாசமாகப் பார்கப்பட்ட காமசூத்திரமும் , கொக்கோசமும் மேலைநாடுகளில் கலைப்பொக்கிசமாகவே பார்க்கப்பட்டது . அத்துடன் இந்தப் பதிவில் யாழ் ஆண்களுக்கானதா பெண்களுக்கானதா என்பது அர்த்தமற்ற கருத்தாடலாகவே எண்ணுகின்றேன் . இந்த எனது கருத்துக்களுக்காக எல்லோரும் என்னை ஆதரிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டிய கவிதை

சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிழையாகவும் இருக்கிறது.

எனக்கும் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை.

இதை இணைத்திருப்பது கிருபன்

அவர் மேல் தனி மரியயாதையுண்டு.

எனவே பிழையானதை அவரும் இங்கு இணைக்கமாட்டார் என்ற அபிப்பிராயம் என்றும் உண்டு.

துளசி

இத்திரியிலிருந்து தள்ளியிருங்கள். (சுட்டிக்காட்டி விட்டீர்கள். இனி..)

மற்ற கருத்தாளர்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதிலும் நீண்டட கால உறுப்பினர்களின் நீண்ட கால எழுத்துக்குறித்த ஒரு புரிதல் அவசியம் தங்களுக்கு.

நாம் நினைப்பவை மட்டுமே யாழில் வரணும் என்பதும் யாழ் விடுதலைக்கானது மட்டுமே என்பதும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் வேலைதான்.

அதை யாழ் செய்வதை யாழின் வளர்ச்சி கருதி நானும் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு

[/size]

[size=3]

நல்குவதென் இனி நங்கை கொங்கையைப்

புல்குவ பூணும் அக் கொங்கை போன்றன;

அல்குலின் அணிகளும் அங்குலாயின ;

பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே.

[/size]

[size=3]

மேலேயுள்ள பாடல், கம்பராமாயணத்தில் வருகின்றது!

[/size]

[size=3]

இதைவிடக் கேவலமாகவா இருக்கிறது,, கிருபன் இணைத்த கவிதை?

[/size]

[size=3]

கருத்துச் சுதந்திரம், மிகவும் முக்கியமானது!

[/size]

[size=3]

அதில் தலையிடுவது, யாழ் களத்தின் கருத்துச் சுதந்திரத்தை, மறுப்பது போலாகும்!

[/size]

[size=3]

கவிதை, ஆபாசமாக எனக்குத் தெரியவில்லை!

[/size]

Link to comment
Share on other sites

முன்பு வாசித்த பொழுது பிடித்த ஒரு கவிதை. முழுக்க ஆணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

இதே போல மார்பகங்களின் மீது படியும் ஆண்களின் பார்வைக்கெதிரான பெண்ணின் மன உணர்வுகளை கூறிய நல்லதொரு கவிதை முன்பு வாசித்தேன். சரியாக ஞாபகம் வரவில்லை.

Link to comment
Share on other sites

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது.

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?

Edited by கரும்பு
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது.

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?

தாங்கள் இன்னொரு தடவை எங்கள் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை.

நாங்கள் அந்தக் கவிதையை கண்டிக்கவில்லை. ஏதோ முலை பார்த்து... முலைக்காம்பளந்து..ஆண்கள் மட்டும் தான் ஈரக்காய்ச்சல் அடைவது போலவும்.. ஆண்கள் சதா முலை பார்க்கிறதையே கடமையா செய்துக்கிட்டு இருப்பது போலவும் சொல்லப்படும் கருத்தையே மறுதலிக்கிறம்.

ஆண்களைப் போல.. பெண்களுக்கும்.. ஆண்களின் பலதையும் பார்த்து.. ஈரக்காய்ச்சல் வருகின்றன.. கையை.. விரலை..காலை.. இன்னும் இன்னும் பொருட்களை விட்டு குடையுறாங்க.. அதுகளையும் எழுதுங்க சாமியோவ்... என்று தான் சொல்கிறம்.

அதுபோக.. இலக்கியமோ.. புதுக்கவிதையோ.. கலவியலில் காணும் புதுமையை.. நிர்வாண கோலத்திலும் நாங்க காட்டலாம். அதற்கான வழியையும் யாழில திறக்கனும் என்று தான் சொல்லுறம்.

அதுகளை ஆபாசம்.. பாலுணர்வைத் தூண்டுபவை என்று வரையறுக்கிற நாங்கள்.. இந்த வகையான.. கவிதைகளைப் படிச்சு ஜட்டிகள்.... ஜங்கிகள்.. வீக்கமடைவது.. ஈரலிப்படைவது.. பாலியல் தூண்டல் இல்லையோ...! இல்லக் கேட்கிறன்.... நியாயத்தை நியாமமாச் சொல்லனும்..???! ஏதோ திறந்த மனசோட எழுதினம் என்று பாராட்டுறவை.. இதுகளையும் திறந்த மனசோட பகிர்ந்து கொள்ள வேணும்..???! அது தானே தர்மம்..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களின் மார்புகளை இரசிக்கவிடின், அவன் தன்னினச் செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்றோ, அல்லது பச்சைப் பொய் சொல்லுவனாகத் தான் இருப்பான் என்ற கருத்தினையும், உங்களின் எழுமாந்தமான முடிவுக்காகத் தான் அந்தப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படி ஒரு முடிவினை எடுக்க நீங்கள் யார்?? அது ஒரு வகையில் ஆண்கள் பெண்களின் அங்கங்களை ரசிக்கச் சொல்லிச் செய்கின்ற தூண்டுதலே....

அப்படி ரசிப்பது தப்பில்லை எனில், உங்களின் குடும்பத்தினரை முதலில் நினைத்துக் கொண்டு கதையங்கள்

நான் சுத்தமானவனாகக் காட்டவரவில்லை. ஆனால் அந்த உணர்வினைப் பொது இடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை. கலவி எல்லோரும் தான் கொள்கின்றார்கள் . அதற்காக அதை இங்கே வெளிப்படுத்த முடியுமா? அதற்கென்று தளங்கள் இருக்கின்றன. அவ்வகையான தளங்களில் யாழும் இணைந்து கொள்ளுமாயின், வெளிப்படுத்துங்கள்.

பெண்களின் உடலில் உள்ள அங்கங்களையோ, அல்லது ஆணின் உடலில் உள்ள அங்கங்களையோ பாலியல்ரீதியாக வர்ணிப்பது, கதைப்பது எல்லாம் சரியாகத் தோன்றவில்லை.

உங்களுக்கு ஏதாவது பாலியல் பிரச்சனை என்றால் தகுந்த வைத்தியரை நாடுங்கள்... அதை விட்டு விட்டு, ஆண்கள் இப்படி, அப்படி என வரையறை எங்களுக்குத் தரத் தேவையில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

கவுதைப்பக்கம் எனக்கு சுத்த சூனியம் போன்றது...............சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல்.........

இன்றுதான் இந்த திரிக்குள் நோட்டமிட்டேன்.......அப்பாடா கவிதை என்றால் இதுதானா .....என்பதைப்புரிந்து கொண்டேன் ..............முடிவும் எடுத்துள்ளேன் ............இந்தப்பக்கம் வரக்கூடாதடா சுப்பா................

தமிழ்சிறி இணைக்கும் வண்ணத்திரை காட்சிகள் போதும் .......................... :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

துளசி,

நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும்.

இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல.

இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது.

ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் நீங்களும் முதிர்ச்சி பெறுவீர்கள். கருத்துக் களம் அதற்காகத் தானே இருக்கிறது.பலர் வருவார்கள்,போவார்கள்.அவற்றில் எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.