• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கிருபன்

மனதைக் கவர்ந்த கவிதைகள்

Recommended Posts

அசைவ முத்தமா…

 

உன் செவ்விதழ்கள்
     செந்தேன் சுரக்க…
என் செவ்வாயில் 
     முத்தத்தால் 
ஒரு பூகம்பம்…
   கனவில் நீ 
அள்ளி தரும்
     அசைவ முத்தமா…
By…
அவள் விழிகளில் இதயத்தைத் தொலைத்தவன்…
N.AJNESSH 

JAT_20170115_180612.png

Share this post


Link to post
Share on other sites
 

போருக்கு பின் நாங்கள் வளர்த்தது
நாட்டில் குப்பை
வீட்டில் தொல்லை
உடம்பில் தொப்பை

போர் முடிந்து நாங்கள் அள்ளியது
ஆற்றில் மணல்
வீதியில் உடல்
காட்டில் மரம்
வங்கியில் கடன்

போரோடு நாங்கள் விட்டு வந்தது
உதவும் மனசு
பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைப்பது
எப்போதும் இனத்தை காப்பது
இயற்கையின் மேல் கொண்ட பற்று
என்றும் ஓயாமல் உழைப்பது
யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தது
பிறருக்காக அழுதது
எமக்காக எதையும் சேர்க்காதது
பணத்தை தேடி ஓடாதது
பெண்களை சீண்டாதது
வறுமையிலும் மகிழ்வை இழக்காதது
இளமையிலும் மதுவை நாடாதது

போருக்கு பின் நாங்கள் நடிப்பது

மதுக் கோப்பை ஏந்தி தேசியம் பேசுவது
மங்கையர் வீதியில் நடமாட அஞ்சுவது
ஏமாற்று உழைப்பிலே பணத்தை சேர்ப்பது
ஒருவனுக்கு ஒருத்தி நிலையை
இழந்தது
போதையில் வாழ்க்கை அழிந்தே போனது
தமிழன் என்று மார்தட்டிக் கொள்வது
நாய்க்கு வைக்கும் பெயரை
சேய்க்கு வைப்பது
இவையா தலைவன் எமக்கு
சொல்லிப் போனவை என்பது

வட்டக்கச்சி
வினோத்

Image may contain: 1 person

Share this post


Link to post
Share on other sites
 

பசுப்பாலை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு
பச்சையாக பணத்துக்கு
பக்குவமாக விற்று
பைகளில் பண்படுத்தி
பொடியாக வருவதை
மீண்டும் நீர் கலந்து
குடிக்கும் அறிவியல் எம்மிடத்தில்

வெண்ணையை பிரித்து சீஸ் என்றும்
மீதியை பால் பவுடர் எனவும்
கழிவுகளை யோக்கட் போலவும்
மிஞ்சியதை பால் பாணம் ஆகவும்
எஞ்சியதை இனிப்பு என காட்டும்
கண்காட்சி வியாபாரம்
நம்பியே ஏமாருகின்றோம்

நாட்டுப் பசும்பால்
நன்றாக புளித்த தயிர்
மத்தில் கடைந்த மோர்
அள்ளி எடுத்த வெண்ணெய்
பாணி கலந்த பால்கோவா

எங்கே போச்சு எல்லாம்
எங்கள் வருமான வீழ்ந்து போகும்
எப்படி வளரும் பொருளாதாரம் 
பண்பாடு வாழ்வதால் வளமாகும்
அதில் தானே எங்கள் வருமானம்

வட்டக்கச்சி
வினோத்

நன்றி நம்மாழ்வார்

Image may contain: grass, outdoor and nature
 
 
 

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

https://eluthu.com/kavignar-kavithai/1406.html

Share this post


Link to post
Share on other sites

தமிழர் புத்தாண்டு அல்ல
ஆங்கில ஆதிக்க அடிமைத்தனத்தின் வெளிப்பாடு
இழந்ததை மீட்பது எப்போது
இருப்பதையாவது காப்பது நல்லது
இனத்தின் அடையாளம் உன்னது

நாள் காட்டிகளை மாற்றும் போது
தீய குணங்களையும் மாற்றி விடுவோம்
எமக்கான தனித்துவத்தை போற்றி நிற்போம்

வட்டக்கச்சி
வினோத்

 
Image may contain: 1 person, standing

Share this post


Link to post
Share on other sites

அன்பின் தீக்கொடி

அன்பின் தீக்கொடி

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்

விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ

அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய்

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி

ஓயாமல் அலைகின்றேன்-நீயோ

மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய்

வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு

புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென

உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

செ.சுஜாதா,

பெங்களூர்.

Share this post


Link to post
Share on other sites

கண்ணம்மா கவனம் கண்ணம்மா

பாலை வனத்தில் வாழப் பழகிவிடு
பாவிகள் அதையே உருவாக்கிகொண்டு இருக்கிறார்கள்

மூச்சை ஒரு குவளையில் சேர்த்துவை 
காற்றையும் நஞ்சாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்

அடுத்த தேர்தலுக்கு இலஞ்சமாக
நீரையே வாங்கு
அதுவே விலையாக இருக்கும்

பணத்தை சேர்த்து வை அடுப்பு மூட்ட உதவும்
உலையில் நெல்லுக்கு பதிலாக
பூச்சிகளே கொதிக்கும்
ஏனெனில் அவைகளே
உலகில் மீதமாய் இருக்கும்

தொடர் நாடகத்தை பார்த்து
கண்ணீர் விடாதே
உலகில் இருக்கும் கடைசியான
நீராதாரம் அது தான்

வெள்ளத்தை உருவாக்கி அழிப்பார்கள் பின்
தரிசு நிலமென்று அபகரிப்பார்கள்

புயலுக்கு கண்ணீர் வடிப்பார்கள்
அழிவில் இலாபம் காண்பார்கள்

உன் நிழல் தான் உனக்கு இளைப்பாற கிடைக்கும் கடைசி இடம் அதையும் அழித்து விடாதே
கண்ணம்மா கவனம் கண்ணம்மா

வட்டக்கச்சி
வினோத்

Image may contain: 3 people
 

Share this post


Link to post
Share on other sites

வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் – காஸ்மிக் தூசி

என் தோளில் அசைந்தாடியபடி
பயணத்தில் உடன் செல்கிறது
விக்கிரமாதித்தன்
விட்டுச்சென்ற வேதாளம்

விக்கிரமாதித்தன் சுமந்து பழகியது
ஆனால் விக்கிரமாதித்தன்தான் வேண்டும்
என்பதில்லை.
வேதாளத்துக்கு தேவைப்படுவதெல்லாம்
தொங்கிச்செல்ல ஒரு தோள்.

கூரிய நகங்களால்
கூந்தலை கோதி சிக்கெடுத்துக்கொண்டே
சுமந்து செல்பவரின் காலடியின் கதிக்கு ஏற்ப
ஏதாவதொரு பாடலை
மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே வரும்
வழிநெடுக்க.

அவ்வப்போது
பிசிறடிகும் குரலை மட்டும்
பொருட்படுத்தவில்லை என்றால் போதும்
பெரிய தொந்தரவு என ஏதுமில்லை

பாடல்கள் தீர்ந்து பயணம் நீண்டு விட்டாலும்
பிரச்சினையில்லை. சலிப்பில்லாமல்
எதையாவது பேசிக்கொண்டே வரும் என்பதால்
வழித்துணைக்கு மிகவும் ஏற்றது.

வேதாளத்துடன் செல்வதற்கான
விதிகள் மிகவும் எளியவை.
மெதுவாகச் செல்வதை
வேதாளம் விரும்பாது
கால் தடுமாறும் என்பதால்
ஓடுவதும் கூடாது
எடை அழுத்தி
தோள்பட்டை கடுக்கும்போது மட்டும்
கீழிறக்கி அடுத்த தோள்பட்டைக்கு
மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதாளத்தின் பேச்சில்
தன்னிலை மறந்து
தவறிப்போய்
தரையில் சுருண்டு படுத்திருக்கும் சர்ப்பத்தையோ
காய்ந்த இலைகளுக்குள்
மறைந்திருக்கும் நரகலையோ
மிதித்துவிடாமல் நடக்க வேண்டும்.

முருங்கைமரம் அடர்ந்த வழியில்
செல்லும்போது மட்டும்
இன்னும் சற்று
எச்சரிக்கை தேவை.

கவனம் இன்றி நாம் சொல்லும்
பிழையான பதிலில் கோபமுற்று,
சடாரென பாய்ந்து ஏறிக்கொள்ளும்
மரத்தில்.

பிறகு மரமேறி, சமாதானம் கூறி
கட்டுக்களை வெட்டி வீழ்த்தி
தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தை
நிதானமாய் இறக்க வேண்டும்.

கோபம் குறையவில்லை என்றால்
ஒரு முறை மானசீகமாய் கொஞ்சி
மன்னிப்பு கோரினால் போதும்.
உற்சாகமடைந்து
உடனே வந்து ஏறிக்கொள்ளும்
தோளில்.

வழுக்கும் கோந்து கொண்டது
கம்பளிப்பூச்சிகள் அடர்ந்தது
எளிதில் உடையக்கூடியது, என்பதால்
முருங்கை மரத்திடமும்
கவனம் அவசியம்

இவ்வளவு
பிரச்சினைகளை வைத்துக்கொண்டு
ஒரு வேதாளத்தை
ஏன் சுமக்க வேண்டும்?
என்று நீங்கள் கேட்கலாம்

யாருமில்லாமல்
தனியாக செல்வதற்கு பதில்
வழித்துணைக்கு
ஒரு வேதாளத்தையாவது
அழைத்துபோகலாம்தானே?
எனக் கேட்டு நட்பாய் சிரிக்கிறது
வேதாளம்

சரி போகிறது
நம்மை விட்டால்
வேறு எவர்தான் வேதாளத்தை
வெளியே அழைத்துச் செல்வது?

 
 
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தன்னையுண்ணும் ஒருவன்

ராஜேஷ் ஜீவா

04

நீண்ட நாட்களாக
ஊர்ஊராக யாசித்தும்
பசியாற எதுவும் கிடைக்காதவன்
நெடிய யோசனைக்குப் பின்
உண்பதற்குத் தன்னைத்
தேர்ந்து கொண்டான்
மலைக்குகை
தைல ஓவியத்தில்
தொல்குடியொருவன்
கையிலேந்திய கூர்ஈட்டியை
கைமாறாகப் பெற்று
மார்புச் சதையை
கிழித்துச் சுவைத்தவன்
அடுத்ததாக
தன்  கெண்டைக்காலில்
விளைந்திருக்கும்
கொழுத்த திரட்சியினை
அறுத்துத் தின்கையில்
கடல்கன்னியர் சிப்பிகளை
ஆசை ஆசையாகப்
பிரித்துச் சாப்பிடுவதை
நினைத்துக் கொண்டான்
தாது வருஷத்துப் பசியாற்ற
உதரத்தைத் தேர்ந்த அவனுக்கு
பின்னர் தன்னை உண்பதற்கான
அவசியம் நேரவில்லை.

 

http://vallinam.com.my/version2/?p=5886

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கவிதைகள் எல்லாம் நல்ல கவிதைகள்.ஆனால் மனதின் வலிகளையே அதிகம் சொல்கின்றன.......கொஞ்சம் மதுரமான கவிதைகளும் இருந்தால் மனம் இலேசாகும் ......!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

கவிதைகள் எல்லாம் நல்ல கவிதைகள்.ஆனால் மனதின் வலிகளையே அதிகம் சொல்கின்றன.......கொஞ்சம் மதுரமான கவிதைகளும் இருந்தால் மனம் இலேசாகும் ......!  😁

வலிகள்தான் மனதை அதிகம் கவர்கின்றன!

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, கிருபன் said:

வலிகள்தான் மனதை அதிகம் கவர்கின்றன!

உண்மைதான் கிருபன், வலிகள் அடுத்தவர்களுக்கு வரும்போது ரசிக்க முடிகிறது அல்லது கண்ணீர் சிந்த முடிகிறது. நமக்கென்று வரும்போதுதான் உயிர் போகிறது.....!   😒

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்று தாய் மொழி தினம்!!
போராளிகள் கவிதை! ஈழம்

 

 

Share this post


Link to post
Share on other sites

சில காதல் கவிதைகள்

– போகன் சங்கர்

1

கடலை ஒன்றும் செய்யமுடியவில்லை

அது கரையில்

தனித்துவிடப்பட்ட காதலன் போல

பேசிக்கொண்டே செல்கிறது.

2

நிலவொளியின் கீழே

யாராலும் தொடப்படாமல்

ஒரு வைரக்கல் கிடக்கிறது

நான் பார்த்ததும்

ஒரு நண்டு அதன் மேல் ஏறிப் போனது

மவுனம்.

வைரத்தை அது சுரண்டும் ஒலி மட்டும்.

3

நீங்கள் அவளிடம் இதைத் தெரிவித்துவிடக் கூடாது

பின்னப்படாத ஒரு ஆடையென

இது அவள் வாழ்வில் கிடக்கட்டும்

அவள் யாரென அறியா ஊரிலே

இந்த ஆடை பின்னப்பட்டு

அவள் கையில் கிடைக்கட்டும்.

4

அவள் இப்போது

காதலுக்கு வெகு தூரத்தில்

இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறாள்

வெகு தூரத்தில் இருக்கும்

ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாள்

காற்றுக்காக சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு

ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறாள்.

அவளறியாமல் அவள் தலைமுடியைக் கோதும்

குற்றவேலையை காற்று செய்துகொண்டிருக்கிறது

அந்த அறையில் ஒரு கோப்பை தண்ணீரும்

ஒரு பூனையும் அவளுடன் உள்ளன

பூனை சலித்து

அதன் இணையைத் தேடி

வெளியே போகட்டும்

நீங்கள் அதுவரை உங்கள் பாடல்களால்

அவளது கோப்பைத் தண்ணீரை

மதுவாக்கிக் கொண்டிருங்கள்.

5

அன்று அவள் அணிந்து வந்த உடை

அவளுக்குப் பொருந்தவே இல்லை

அந்த குளிர் கண்ணாடியும்.

அவள் நகங்களை சரியாக வெட்டுவதில்லை

சருமத்தைப் பேணுவதில்லை

அவளது கைப்பை நகைக்கும் விதத்தில் இருந்தது

அவள் தனது சரியான அளவில்லாத

செருப்பு தடுக்கி இருமுறை விழுந்தாள்.

எனக்கு ஒரு காட்டுச் செடியை கையில்

வைத்துக்கொண்டு

தனித்து ஒரு சாலையில் நடப்பது போல இருந்தது.

அதன் பெயரைச் சொல்லவரும்

மனிதர்கள் வசிக்கிற ஊர்களிடமிருந்து

விலகுகிற பாதைகளைத் தேர்ந்தெடுத்து நான் நடக்கிறேன்

கவனமாக.

6

மழை ஒரு சரியான பின்புலமாய் இருந்திருக்கும்

குளிரும் நதியும் கூட.

உச்சி வெயில் நடந்து போய்

நிழலுக்காக ஏங்கி நிற்கும் தினமாய்

அது இல்லாமல் இருந்திருக்கலாம்

மழை பின்னால் வந்தது

அவள் சென்ற பின்

புழுதி மணத்தைக் கிளப்பிக்கொண்டு

ஒரு கலியாணத்துக்குத் தாமதமாக வந்து விட்ட

புகைப்படக்காரனைப் போல.

7

அதிகாலையில்

தனது நுரைத்தடத்தையும் அழித்துவிட்டு

பெரிய கப்பலை நோக்கிச்

செல்லும் சிறிய படகில்

எப்போதும் நான் இருக்கிறேன்.

8

ஒரு பெரிய குளத்தின் அருகே உறங்கிக் கொண்டிருக்கிறேன்

குளத்தில் சில நட்சத்திரங்கள்

எனக்குத் தெரியும்.

இரவில் ஒரு சைத்திரிகன் வருகிறான்.

அவனுக்கு எப்படியோ

உன்னைத் தெரிந்திருக்கிறது.

9

குளிர்காலத்தின் பொன்னை எல்லாம் திரட்டி

சரக்கொன்றை

கோடையிடம் அளித்தது.

நான் ஒரு கடிதம் எழுதினேன்.

எழுதவில்லை.

நான் சொல்லிக்கொண்டேன்.

மழைக்காலத்தில்

நீ வேறு விதமான கடிதங்களை எழுதுவாய்

பனிப்புகையை ஒரு நாய்க்குட்டியைப் போல இழுத்துக்கொண்டு

அவள் கண்களின் நிறத்தில் மினுங்கும்

ஒரு சுலைமானித் தேநீரை அருந்தச் செல்லும் போது..

 

http://tamizhini.co.in/2019/03/18/சில-காதல்-கவிதைகள்-போகன்/

Share this post


Link to post
Share on other sites

வாட்சப்பில் வந்த கவிதை!

முஸ்லிம் நண்பா!
உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!
ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!
உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!
உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!
முடியவில்லை என்னால்;

காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான்
உடும்பனில் அவற்றை நீ வெட்டிவிட்டாயே!
நீ மறந்திருப்பாய்.
என்னால் மறக்கமுடியவில்லை.
காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!

நினைவிருக்கிறதா உனக்கு..
நீ மறந்திருப்பாய்.
நீ கொலைவெறியோடு விரட்டும் போது;
ஒரு கையில் குழந்தையும்
இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம்
வீரமுனை, திராய்க்கேணியில்.

நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா?
ஆனால்; மன்னித்துவிடு சகோதரா...
இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!

நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!
நாளை இந்த இனகுரோம் வற்றி நீ நலம் பெறுவாய்!
உனக்காய் உலகமே வரும்!

குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது;
எனக்காய் யாரும் வரவும் இல்லை
நீ வராட்டியும் பரவால்லை
பால்சோறு கொடுத்து கொண்டாடிக்க தேவையில்லை!

முஸ்லிம் சகோதரா!
உனக்காக நான் அழுவதற்கு தயார்
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை.

கொத்துக்கொத்தாய்..
பூவும் பிஞ்சுமாய்...
குஞ்சு குருமனாய்...
குடல் கிழிந்து...
சதை கிழிந்து...
வயிறொட்டி...
உயிரற்ற பிண்டங்களையாய்...
உணர்வற்ற பூச்சிகளாய்...
இதே ஒரு மாதத்தில்தான் ....
வானம் அதிர குழறினோம்!!

உண்மையை சொல்லு உனக்கு கேட்டதா?
இல்லையா??
நீயோ சிங்களத்தின் போர்க்குற்றத்திற்கு துணை போனாய்.
எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே!
எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே!
எனக்காய் ஒரு குரல் கூட
கிழக்கு முஸ்லிம்களிடம் கேட்கவேயில்லையே!!!

உனக்கும் எனக்குமா போர் நடந்தது?
இல்லையே!!!
எதற்காக மெளனமாக இருந்தாய்?
ஏன் திரும்பி நடந்தாய்?
போர் உங்கள் முன்னால்...
எங்களை; கடித்துக்குதறி...
கைகளை பின்னே கட்டி..
கறுப்புத்துணியால் கண்களை மூடி..
முதுகில் உதைத்து பிடரியில் அடித்து...
சப்பித்துப்பி... தின்று... கைகழுவிப்போனபோது...
அம்பாந்தோட்டையிலும்... அழுத்கமவிலும்...
காத்தான்குடியிலும் அக்கரைப்பற்றிலும்
நீங்கள் வெடி கொழுத்தி
கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள்.

பின்னர் ஒரு நாளில்
முட்கம்பி வேலிக்குள்...
நாங்கள் வானம் அதிர..
தொண்டை கிழிய...
குழறிக்கொண்டிருந்தோம்.
நீங்கள் கொழுத்தி கொண்டாடிய
"சீனா வெடிகளில்" ...
எங்களின் கூக்குரல்...
உங்களுக்கு கேக்கவேயில்லை!

இன்று உனக்காக நான் அழுவதற்கு
எனக்கு விருப்பம்.
ஆனால் என்னிடம்
கண்ணீர் கைவசம் இல்லை!

போன கிழமைதான்..
லண்டனில் தமிழனை கழுத்தறுப்பன் காட்டிய
சிங்களவனுக்கு.. நீ வாழ்த்துகின்றாய்.

இன்று அழுதுகொண்டிருக்காய்.
சம்பூரில் தொலைத்த தன் மகனை ...
தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்!
நீயோ! மூதூரின் வீதிகளில்
"பிறை கொடி
சிங்க கொடி கட்டுவதிலும்...

உன்னிச்சையில் பள்ளிவாசல்
அடிக்கல் நாட்டுவதிலும்
மும்முரமாக இருந்தாய்.

கல்முனைக்குடி வீதிகளில்...
வெடி கொழுத்துவதிலும்;
வெற்றிக்கொண்டாட்டங்களில்
"கிரிபத்" தின்பதிலும்...
ஆரவாரமாய் இருந்தாய்!

நீ மறந்திருப்பாய்.
ஆனால் நான் மறக்கவில்லை.
மறக்கவும் முடியாது!
மறக்கவும் கூடாது!

உனக்காய் நான் அழவும்..
உனக்காய் என் கரம் நீழவும்..
உனக்காய் நான் ஓடிவரவும்...
என்னால் முடியாது.

ஏனெனில்; என் கால்களை...
என் கைகளை இதே ஒரு மாதத்தில்தான்
உடும்பன், வீரமுனை நீ வெட்டி எறிந்தாய்.

நீ மறந்திருப்பாய்..
ஆனால் நான் மறக்கவில்லை!
ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை!

முஸ்லிம் நண்பா!
உனக்காய் நான் அழ விருப்பம்தான்..
என்னிடம் கண்ணீர் இல்லையே!
ஆனால்; உன் துன்பத்தில்
நானும் துணையாக வர
இனியாவது உன் கரங்களை நீட்டு...
காத்திருக்கிறேன்!!!

Share this post


Link to post
Share on other sites

 

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

சேரன்

10365752_290070537835509_156691667907585

 

பட மூலம், UK Tamil News

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்
யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது
ஒளியின் ரசாயனம்
அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை
பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை
அது பதிவு செய்யாது
சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி எழுந்த
ஒரே ஒரு அவலக் குரல்
ஆகாயத்தில் மிதந்த சாக்குருவியினுடையது

சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்
அனைவரது பெயர்கள் அறிவோம்
ஊரை அறிவோம்
கனவுகள் அறிவோம்; ஏமாற்றங்கள் அறிவோம்
நெருங்கிய உணர்வின் கையறு நிலை அறிவோம்
சினந்தெழுந்தவரின் இறுதிக் கண்வீச்சை அறிவோம்

மற்றவர் அறியா மொழி அது

எனினும்
இவை உங்களுக்கு உதவாது

நீங்கள் அடையாள அட்டையைக் கேட்கிறீர்கள்
பிறப்புச் சான்றிதழைக் கேட்கிறீர்கள்
எழுத்துமூலமான் பதிவை வலியுறுத்துகிறீர்கள்

இனப்படுகொலைக்கோ உயிராதாரம் உண்டு
கண்ணீர் எரிந்து உணர்வெழுதும்
நுண் சாட்சியம் உண்டு
கதை கதையாய்க் கொலை கொலையாய்
உறங்காத மொழியிலும் உலராத வரலாற்றிலும் நினைவுகள் உண்டு

தரலாம்.

பெறுவதற்கு யாருமில்லை
சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்
குருதி, மழை, சேறு.

சேரன்

 

https://maatram.org/?p=7916

Share this post


Link to post
Share on other sites
On 5/25/2019 at 10:14 PM, Rajesh said:

வாட்சப்பில் வந்த கவிதை!

முஸ்லிம் நண்பா!
உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!
ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!
உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!
உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!
முடியவில்லை என்னால்;

காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான்
உடும்பனில் அவற்றை நீ வெட்டிவிட்டாயே!
நீ மறந்திருப்பாய்.
என்னால் மறக்கமுடியவில்லை.
காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!

நினைவிருக்கிறதா உனக்கு..
நீ மறந்திருப்பாய்.
நீ கொலைவெறியோடு விரட்டும் போது;
ஒரு கையில் குழந்தையும்
இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம்
வீரமுனை, திராய்க்கேணியில்.

நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா?
ஆனால்; மன்னித்துவிடு சகோதரா...
இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!

நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!
நாளை இந்த இனகுரோம் வற்றி நீ நலம் பெறுவாய்!
உனக்காய் உலகமே வரும்!

குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது;
எனக்காய் யாரும் வரவும் இல்லை
நீ வராட்டியும் பரவால்லை
பால்சோறு கொடுத்து கொண்டாடிக்க தேவையில்லை!

முஸ்லிம் சகோதரா!
உனக்காக நான் அழுவதற்கு தயார்
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை.

கொத்துக்கொத்தாய்..
பூவும் பிஞ்சுமாய்...
குஞ்சு குருமனாய்...
குடல் கிழிந்து...
சதை கிழிந்து...
வயிறொட்டி...
உயிரற்ற பிண்டங்களையாய்...
உணர்வற்ற பூச்சிகளாய்...
இதே ஒரு மாதத்தில்தான் ....
வானம் அதிர குழறினோம்!!

உண்மையை சொல்லு உனக்கு கேட்டதா?
இல்லையா??
நீயோ சிங்களத்தின் போர்க்குற்றத்திற்கு துணை போனாய்.
எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே!
எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே!
எனக்காய் ஒரு குரல் கூட
கிழக்கு முஸ்லிம்களிடம் கேட்கவேயில்லையே!!!

உனக்கும் எனக்குமா போர் நடந்தது?
இல்லையே!!!
எதற்காக மெளனமாக இருந்தாய்?
ஏன் திரும்பி நடந்தாய்?
போர் உங்கள் முன்னால்...
எங்களை; கடித்துக்குதறி...
கைகளை பின்னே கட்டி..
கறுப்புத்துணியால் கண்களை மூடி..
முதுகில் உதைத்து பிடரியில் அடித்து...
சப்பித்துப்பி... தின்று... கைகழுவிப்போனபோது...
அம்பாந்தோட்டையிலும்... அழுத்கமவிலும்...
காத்தான்குடியிலும் அக்கரைப்பற்றிலும்
நீங்கள் வெடி கொழுத்தி
கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள்.

பின்னர் ஒரு நாளில்
முட்கம்பி வேலிக்குள்...
நாங்கள் வானம் அதிர..
தொண்டை கிழிய...
குழறிக்கொண்டிருந்தோம்.
நீங்கள் கொழுத்தி கொண்டாடிய
"சீனா வெடிகளில்" ...
எங்களின் கூக்குரல்...
உங்களுக்கு கேக்கவேயில்லை!

இன்று உனக்காக நான் அழுவதற்கு
எனக்கு விருப்பம்.
ஆனால் என்னிடம்
கண்ணீர் கைவசம் இல்லை!

போன கிழமைதான்..
லண்டனில் தமிழனை கழுத்தறுப்பன் காட்டிய
சிங்களவனுக்கு.. நீ வாழ்த்துகின்றாய்.

இன்று அழுதுகொண்டிருக்காய்.
சம்பூரில் தொலைத்த தன் மகனை ...
தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்!
நீயோ! மூதூரின் வீதிகளில்
"பிறை கொடி
சிங்க கொடி கட்டுவதிலும்...

உன்னிச்சையில் பள்ளிவாசல்
அடிக்கல் நாட்டுவதிலும்
மும்முரமாக இருந்தாய்.

கல்முனைக்குடி வீதிகளில்...
வெடி கொழுத்துவதிலும்;
வெற்றிக்கொண்டாட்டங்களில்
"கிரிபத்" தின்பதிலும்...
ஆரவாரமாய் இருந்தாய்!

நீ மறந்திருப்பாய்.
ஆனால் நான் மறக்கவில்லை.
மறக்கவும் முடியாது!
மறக்கவும் கூடாது!

உனக்காய் நான் அழவும்..
உனக்காய் என் கரம் நீழவும்..
உனக்காய் நான் ஓடிவரவும்...
என்னால் முடியாது.

ஏனெனில்; என் கால்களை...
என் கைகளை இதே ஒரு மாதத்தில்தான்
உடும்பன், வீரமுனை நீ வெட்டி எறிந்தாய்.

நீ மறந்திருப்பாய்..
ஆனால் நான் மறக்கவில்லை!
ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை!

முஸ்லிம் நண்பா!
உனக்காய் நான் அழ விருப்பம்தான்..
என்னிடம் கண்ணீர் இல்லையே!
ஆனால்; உன் துன்பத்தில்
நானும் துணையாக வர
இனியாவது உன் கரங்களை நீட்டு...
காத்திருக்கிறேன்!!!

அருமையான கவிதை!

Share this post


Link to post
Share on other sites

நாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்

- காஸ்மிக் தூசி

 

அழுக்கு வெள்ளையில்
அம்மை கண்டது போல்
உடல் எங்கும்
கரும் புள்ளிகள்.
இளச்சிவப்பு
உள் தெரியும்
பெரிய காதுகள்.

கால் முதல்
தலை வரை ஒன்றாய் தைத்து
வெள்ளாடு போல்
வால் வைத்து,
இழுத்து மூடும்
ஆடையில்
நாய் வேடமிட்டு வந்த கடவுள்

நகைக்கடைத் தெருவின்
நடைபாதையில் இறங்கி
சாலையின் குறுக்கே
நடந்து செல்கிறார்,
ஒரு
குல டால்மேஷன்
நாயைப்போல.

மின்கம்பத்தின்
அருகில்
நிதானித்து
பின்னங்காலை
பக்கவாட்டில் தூக்கியதும்
உரக்க சிரிக்கிறான்
ஒரு சிறுவன்

வலது புறம் கிடந்த
வாழைப்பழத் தோலை
முகர்ந்து
இடது
பின்னங்கால் கொண்டு
பிடரியில் சொறிந்து

காற்றடிக்கும்
நாற்றாங்கால் போல
முதுகை சிலிர்த்துவிட்டு
நடக்கையில்,

தனக்கு முன்
சென்ற திரளில்
சும்மா கேட்டுக்கொண்டு
சென்றவனிடம்
இடைவெளிவிடாமல்
பேசிக்கொண்டு சென்ற
குறுந்தாடிக்காரனை
இடை மறித்து
விளக்கிச் சொல்ல
எத்தனையோ விஷயம் இருந்தது
அவரிடம்.

இருந்தும்,
பேசுபவனை பார்த்து நின்று
லொள், லொள் என
தோராயமாக
குரைத்த பிறகு
நிதானமாய் நடந்து செல்கிறார்,
நான்கு கால்களால்.
நாய் வேடமிட்ட
கடவுள்.

மனிதபாஷையில்
மனிதர்களிடம்
விளக்கிச்சொல்ல ஆயிரம்
விஷயம் இருந்தும்,
நாய் வேடமிட்டிருக்கையில்
நாய்போல குரைப்பதன்றி
வேறெதைத்தான் கூற முடியும்?
கடவுளாகவே இருந்தாலும்?

https://padhaakai.com/2019/08/10/நாய்-வேடமிட்டவரின்-நிர்ப/

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்து

- இன்பா அ.

எல்லா வாழ்த்துகளும்
எல்லா நன்றி நவில்தலும்
கொஞ்சம் எச்சரிக்கை செய்கின்றன
 
எல்லாப் பாராட்டுக்களும்
ஏதோ ஒரு தொடக்கத்திற்காகவே
ஆரம்பிக்கின்றன
 
பதில் பாராட்டை எதிர்பார்த்தே
ஒவ்வொரு வாழ்த்தும்
கடந்து போகிறது
 
எல்லாவற்றையும் உதறிவிட்டால்
பிரியத்தின் ஈரம்
காய்ந்துவிடக் கூடும்
 
எல்லாவகை பாராட்டுகளும்
எல்லையற்றது
சில்லிட்ட வார்த்தைகளையே
தேடிக்கொண்டுவருகிறது
 
எச்சரிக்கையாய் இல்லாவிட்ட்டல்.
மனச்சந்துக்குள் புகுந்துகொண்டு
நச்சரித்துவிடுகிறது
 
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
மனத்திற்கு போட்டுவிட்டேன்
வேலி
தேவைப்படும்போது திறந்துகொள்ளட்டும்

 

https://solvanam.com/2019/09/17/கவிதைகள்-இன்பா-அ/

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தனிமை

- கபிலன் வைரமுத்துவின் “ கடவுளோடு பேச்சுவார்த்தை “ கவிதை தொகுப்பிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த கவிதை.

“ உயிர் பிழிந்து..

காலங்கள் சிந்திவிட்டு,

உணர்ச்சிகளைக் கொஞ்சம் உறைய செய்து

என் கதை என்னால் வேடிக்கை பார்க்கப்படும்போது ஒரு தனிமைக்கு தகுதியாகிவிடுகிறேன்.

ஒரு ஒற்றை நட்சத்திரத்தை உள்வாங்கிக் கொள்வது

இலைகளின் அசைவில் இசை பறிப்பது

மயங்கி வரும் காற்றை கண்களுக்குள் கரைப்பது

ஒரு மாயத் தேநீர் கோப்பை கொண்டு மனப்பதம் காப்பது

தனிமையின் துணைகொண்டு நிறைவேற்ற முடிகிறது 

எனைச்சுற்றி ஏற்படும் ஊமை வெளிச்சத்தில்...

உண்மை நுரைக்க நுரைக்க.. ஒரு மெளனம் ஓடிக் கொண்டிருக்கிறது 

ஒரு சில உருவங்கள் ஓவியங்களாய் எழுந்து ஓரிரு நொடிகளில் ஒழுகிவிடுகின்றன

பழைய சில கேள்விகள் பதில்களைத் தொலைத்துவிட்டுத் திரும்பிவருகின்றன

சுதந்திரத்தின் முகமூடி அணிந்து இன்பங்களையும் துன்பங்களையும் பயமுறுத்துகிறது மனம்

ஒரு தனிமையின் தொடக்கத்தில் ஆன்மா மழலை பேசுகிறது

ஒவ்வொரு முழுமையான தனிமையின் இறுதியிலும் ...ஒரு போதிமர இலையின் நறுமணம் நிறைகிறது....”

large.18F9C3AC-B266-402A-A6D6-AC197C5A891F.jpeg.93bfe7910dd8d569cf372efd7fcbe43c.jpeg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இணையத்தில் கண்டெடுத்த ஒரு கவிதை முத்து ...எழுதியவர் வி .சரவணன் என்பவர்

 

76615119_2209301679373436_42510125019084

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

தந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி!

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 
 • ico_fb.png
 • ico_twit.png
 • ico_whatsapp.png
 
 
த‌மி‌ழ் இன உண‌ர்வு‌க் க‌விஞ‌ர் கா‌சி ஆன‌ந்த‌ன் க‌விதையா‌ல் த‌ந்தை பெ‌ரியாரு‌க்கு சூ‌ட்டிய புக‌ழ்மாலை.
 
 பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

http://tamil.webdunia.com/poems-in-tamil-tamil-poems/தந்தை-பெரியாருக்கு-நிஜமான-கவிதாஞ்சலி-109091900021_1.htm

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.