Jump to content

ஆண்டிறுதிப்பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது நேரத்திற்கு இன்னுமொருவன்

என்னுடைய தேசியம் சம்பந்தமான வேட்கைகள் சாதாரணமானவை

அதனால் தேசியத்தின் தூண்களை எவரும் சாட அனுமதிப்பதில்லை.

எமக்காக எல்லாவற்றையும் தந்தவர்கள் எல்லாவற்றையும் சிந்திக்கவில்லை என்ற சிலரது கருத்துக்கள் மீதிருக்கும்கோபமே அது.

அதேநேரம் தோல்விகள் பாதையை மாற்றும் என்றால் இலக்கை அடைய வாய்ப்பில்லை. அதேபோல் தோல்விகள் ஆட்களை மாற்றும் என்பதும் அப்படியே. எனது சகோதரன் பற்றிய எனது பார்வை வேறுவிதமானது. அதைத்தொடர்ந்து எழுதி எனது குடும்பத்தை இங்கு புகுத்தவிரும்பவில்லை. அவரது மூத்த மகன் எப்படி மாவீரர் ஆனார் என்பதும் மற்ற மகன் எப்படி டிமிக்கி கொடுத்துவிட்டு வந்து இன்று பிரான்சில் இருக்கிறார் என்பதும் தெரிந்தால்தான் எனது முடிவுகளை தங்களால் ஆராயமுடியும். ஆனால் எனது தேசியம் சம்பந்தமான முடிவுகளில் குடும்பமாக இருந்தாலும் எனது முடிவை பாதித்ததில்லை. பாதிக்கவும் போவதில்லை. அரைகுறையாக நான் எழுத அதை கால்வாசி புரிந்து கொண்டு நீங்கள் எழுதுவதும் முழுமையல்ல. அந்தந்த திரிகளுக்கு அவை பொருந்தியதா என்பதே முழுமை. மற்றும்படி தேசியத்தின் முழு பொறுப்பாளியல்ல நான். அதேநேரம் தேசியத்தில் நானும் முழுப்பொறுப்பாளி என்பதை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எம் கண் முன்னால் எம் தெய்வங்கள் நிந்திக்கப்பட அனுமதிப்பதும் ஒரு வகையில் அவற்றிற்கு துணை போவதே.

இப்போதெல்லாம்

துரோகி எதிரி போன்ற பட்டங்களை ஒருவர் கொடுப்பதை விடுத்து

முன் கூட்டியே அவரவர் தமக்காக தாமே தெரிவு செய்வது ஒரு புதுவடிவமாகிவருகிறது.

இதன் மூலம் தாம் தப்பிக்க முனைவதும் தெரிகிறது.

100 வருடத்திற்கும் மேலாக கிடைக்கப்பெற்ற அனுபவங்கள், தளும்புகள், வரலாறுகளைச்சுமந்து, அந்த பட்டறிவின் பால் வகுக்கப்பட்ட பாதையை

நாய் கடிக்க கலைத்தபோது நாம்அவசரமாக தெரிவு செய்த பாதையை சரியான பாதையென்று இங்கு எழுதுபவர்களையும் ஏற்கும் நிலைக்கு பலர் வந்த நிற்பது நல்லதல்ல. நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

இன்னுமொருவன்,

முதற்கண் நன்றிகள் உங்கள் பொறுமையான உள்ளார்த்தமான பதிலுக்கு. ஒரு தமிழனாக உங்களுக்கு எழும் கேள்விகளுக்கும், உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்தும், பலன் தரக்கூடியது என்று நீங்கள் கருதி வெளியிட்ட கருத்துகள்/ஆலோசனைகளுக்கு அப்பால்...

உங்களிடம் சிலவிடயங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன்..

இன்று எங்கள் மத்தியில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதேயாகும். இதில் உங்களுக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நான் நம்புகிறேன்.

எங்களுக்கு மத்தியில் இருக்கும் இந்த கருத்து/கொள்கை வேறுபாடுகள் பல்வேறு காரணங்களால் உருவாக்கபட்டவை. அதனால் பல்வேறு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். அவ் அணிகளை இவ்வாறு வகைபடுத்தலாம்

அவற்றுள் எனக்கு தெரிந்தவை/ஊகிப்பவை

- புலி சார்பு/புலி எதிர்ப்பு

- அரசியல் வழி போராட்டம் / இராணுவ வழிப்போராட்டம்

- போராட்டத்தால் பொருளாதார ரீதியில் நன்மை பெற்றவர்கள்

- போராட்டத்தால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கபட்டவர்கள்

- தலைவர் இருக்கிறார்/ இல்லை

- தீர்வை விட மனிதாபிமானம் தான் இப்போ தேவை / நிரந்தர தீர்வு தேவை

- இந்திய சார்பு / இந்திய எதிர்ப்பு

- உலகத்தோடு ஒன்றி எதையும் செய்யவேண்டும் / உலகம் ஒன்றுமே எங்களுக்கு செய்யாது

- அனைத்து மக்களையும் ஒன்றித்து போராடவேண்டும் / இல்லை நாங்கள் தனித்து போராடவேண்டும்

- ஊடகங்களில் வீண்வாதம் செய்பவர்கள்

- எல்லாம் அழிந்துவிட்டது நாங்கள் எங்கள் வழியை பார்ப்போம்

- முன்னாள் போராளிகள்

- அரச உளவாளிகள்

- அரச நிகழ்ச்சிநிரலுக்கு தங்களை அறியாமல் தொழிற்படுபவர்கள்

- உணர்ச்சிவசபட்ட தேசியவாதிகள்

- தமிழ்நாட்டு தமிழர்கள் /அரசியல் வாதிகள்

- தாயக தமிழர்கள் / அரசியல் வாதிகள்

- மாற்று இயக்க ஆதரவாளர்கள் / போராளிகள்

- புத்திஜீவிகள்

- போர்குற்ற விசாரணை போதும் / நிலையான தீர்வு வேண்டும்

இப்படி சொல்லி கொண்டே போகாலாம். இவர்கள் அனைவரையும் திருப்தி படுத்தி ஒரு தீர்வுக்கு எங்களுக்குள்ளேயே வருவது மிக கடினம். அதை பற்றி விவாதிக்க தொடங்கினால் எங்களின் பேர பிள்ளைகளின் காலத்தில் கூட விவாதம் முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் எம்மக்களுக்கு ஒரு நியாயமான காத்திரமான சுதந்திரமான உலகத்தால் ஏற்று கொள்ள கூடிய ஒரு தீர்வை அல்லது இவ்வளவு மக்களையும் ஒன்று படுத்த கூடிய தீர்வை யாரவது முன் மொழிவார்களாக இருந்தால்...

நான் தனிப்பட்ட ரீதியில் சொல்லுகிறேன் என் மனசில் இருக்கும் தமிழீழம் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற கருத்தியலில் இருந்து விடுபட தயார். இது என் போன்ற பெரும்பாலனவர்களுக்கும் பொருந்தும்..

ஆனால் ஒன்று மட்டும் உண்மை அப்படி ஒரு தீர்வை யாராலும் முன்வைக்க முடியாது என்று உங்களுக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழீழம் தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே வழி..

இது குறித்து உங்கள் கருத்தை சொல்லுவீர்களா ..?

Link to comment
Share on other sites

கருத்து / மாற்றுகருத்து

எமது இன்றைய தாயக நிலைமையில் பெரும்பான்மை மக்கள் எமது வாழ்வியல் நிலைக்கவேண்டும் என்றால் நாம் ஏதோ ஒரு விதத்தில், அரசியல் ரீதியாக போராடியோ இல்லை மாற்று வழிகளை சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க தேடவேண்டும் என முயலுகிறார்கள். இந்த பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை உள்வாங்கி இந்த வட்டத்துக்குள் இருந்து அதற்குள்ளேயே கருத்து விவாதங்களை வைத்து முன்னெடுப்பது ஒரு உண்மையான மாற்றுகருத்தாக மக்களால் பார்க்கப்படும்.

அக்கூத்தா,

உங்கள் வரைவிலக்கணப்படி இத்திரியின் ஆரம்பப்பதிவு நீங்கள் குறிப்பிடும் வட்டத்திற்குள் அமைகின்றதா இல்லையா என்று குறிப்பிட்டால் பலன் பெறுவேன்.

அதேநேரம் தேசியத்தில் நானும் முழுப்பொறுப்பாளி என்பதை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

விசுகு,

தேசியத்தில் நீங்களும் முழப்பொறுப்பாளி என்பதை நானும் புரிந்துகொள்வேண்டும் என்ற உங்கள் கருத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். உங்களது இப்பின்னூட்டத்திற்கு முந்தைய எனது பின்னூட்டதில் “நீங்களும் எனது சமூகத்துள் ஒருவர் என்ற வகையில் உங்கள் சிந்தனையும் இவ்விவாதத்திற்கு ஏற்புடையது” என்று எழுதியிருந்தேன், அதைப்படித்தீர்களோ தெரியவில்லை. படித்திருந்தால் உங்களையும் தேசியத்தின் பொறுப்பாளிகளில் ஒருவராக நான் புரியவேண்டும் என்று கேட்கவேண்டிய அவசியமில்லை. உங்களை என்னினத்தவர் என்று நான் கருதாதிருந்திருப்பின் உங்களோடு இவ்வாது விவாதித்துக்கொண்டிருக்கமாட்டேன்.

எமக்காக எல்லாவற்றையும் தந்தவர்கள் எல்லாவற்றையும் சிந்திக்கவில்லை என்ற சிலரது கருத்துக்கள் மீதிருக்கும்கோபமே அது.

எமக்காக எல்லாவற்றையும் தந்தவர்கள் எல்லாவற்றையும் சிந்திக்கவில்லை என்று கூறுபவர்கள் மீது உங்களிற்கு உள்ள கோபம் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை நீங்கள் பொதுவாகத் தான் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பது எனக்கு முற்றாகப் புரிகின்றது. இருப்பினும் எனது இப்பதிவு புலிகளைக் காய்வதற்காக எழுதப்பட்டதாக சில புரிதல்கள் இங்கு தென்படுவதால் ஒன்றைத் திருப்பக் கூறிக்கொள்கிறேன், இப்பதிவு எங்களைப் பற்றிப் பேசுவதற்கானது. எங்கள் பிரச்சினகைள் என்று எங்களைப் பற்றி நான் பேசுவதைப் புலிகளின் மீதான விமர்சனமாகப் புரிபவர்கள் அந்தப்புரிதல்களிற்குத் தாமே பொறுப்பாளிகள் ஆகவேண்டும்.

அரைகுறையாக நான் எழுத அதை கால்வாசி புரிந்து கொண்டு நீங்கள் எழுதுவதும் முழுமையல்ல.

இனி உங்கள் குடும்பம் பற்றிய முழுப்புரிதலையும் நீங்கள் எனக்கு ஏற்படுத்துவதோ அதை நான் புரிந்து கொள்வதோ அவசியமற்றது. இந்தப்பதிவு முன்வைக்கும் சிந்தனை மாற்றத்திற்கு முற்றுமுழு உதாரணமாக யாழ்களத்தில் நீங்கள் பதிந்த உங்கள் சிந்தனை இருந்தமையால் மட்டும் தான் அதை நான் சுட்டிக்காட்டநேர்ந்தது. மார்தட்டிக்கொள்வதற்கு அரைகுறையாக எழுதுவது ஏற்புடையது எனின், அவ்வெழுத்துத் தொடர்பான விமர்சனத்திற்கும் அவ்வரைகுறை மட்டுமே உள்ளாகும் என்பது தவிர்க்கமுடியாதது. எமது சிந்தனைகளிற்கு நாம் பொறுப்பாளிகள் ஆகியே தீரவேண்டும். சும்மா முகமூடியில் சொல்வது தானே என்று குட்டிப்புழுகில் விடயங்களைச் சொல்லிவிட்டுச் சென்று விடமுடியாது. அரைகுறையோ அரைக்கால்வாசியோ, நீங்கள் சொல்லாத எதனையும் நான் உங்கள் கருத்தாக இங்கு சித்தரிக்கவில்லை. நீங்கள் உங்கள் செல்வாக்கைக் காட்டிக்கொள்வதற்காக எழுதிய துணுக்குச் செய்தியில், இப்பதிவு மாறவேண்டும் என்று கூறும் சிந்தனைக்கான உதாரணம் இருந்து, அச்சிந்தனை மாற்றம் அநாவசியமானது என்று நீங்கள் கூறியதால் மட்டுமே அவ்விவாதம் தேவைப்பட்டது.

ுரோகி எதிரி போன்ற பட்டங்களை ஒருவர் கொடுப்பதை விடுத்து

முன் கூட்டியே அவரவர் தமக்காக தாமே தெரிவு செய்வது ஒரு புதுவடிவமாகிவருகிறது. இதன் மூலம் தாம் தப்பிக்க முனைவதும் தெரிகிறது.

இறுதியாக,

விசுகு என்னைத் துரோகி அல்லது எதிரி என்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்சார்ந்து உங்களிடம் இருந்து தப்புவது தான் எனது நோக்கமாயின், உங்கள் கரகோசம் பெறும் கருத்துக்களை மட்டும் எழுதமாட்டேனா? அதைவிட்டுவிட்டு நானே சுருக்கையும் மாட்டி, பிறகு எவ்வாறு சுருக்கில் இருந்து தப்புவது என்றுமா ஆராய்ந்து கொண்டிருப்பேன்?

எம் கண் முன்னால் எம் தெய்வங்கள் நிந்திக்கப்பட அனுமதிப்பதும் ஒரு வகையில் அவற்றிற்கு துணை போவதே.

நாம் சாமி கும்பிடுவதைப்போல் கும்பிடாதர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்றோ, நாம நன்றியறிவது போல் நன்றிபாராட்டதவர்கள் எல்லாம் நன்றி கெட்டவர்கள் என்றோ கூறிவிடமுடியாது. ஒவ்வொருவர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைகள் ஒவ்வொருவகையானவை.

முடிக்கு முன்பு, இவ்விவாதத்தில் உங்களை நோக்கிய கடுமைக்காக உளப்பூர்வமாக வருந்துகிறேன். நீங்கள் அவதானித்தீர்களோ தெரியவில்லை, உங்கள் கருத்திற்கு முதலில் பதிலெழுதவில்லை. உங்களிற்குப் பின் வந்த கருத்துக்களிற்குப் பதில் எழுதி விட்டும் உங்களிற்குப் பதில் எழுதவில்லை. அதற்கான ஒரே காரணம் உங்களைப் புண்படுத்தக்கூடாது என்பது தான். எனினும் பின்னர் இத்தலைப்பு வக்காலத்து வாங்கும் விழைவு சாhந்து உங்களோடு இங்கு இவ்வாறு விவாதிப்பினும் எனக்கு உங்கள் தொடர்பில் நிச்சமயாக ஒன்று புரிகிறது, நீங்கள் இதயசுத்தியாக எம்மக்களின் இன்னல்கள் தீரவேண்டும் என்பதை விரும்பும் ஒருவர். அந்தவகையில் உங்களுடனான இவ்விவாதத்தில் அவசியப்பட்டுவிட்ட கடுமைக்காக வருந்துகிறேன்.

.....இந்த நிலையில் தமிழீழம் தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே வழி..

இது குறித்து உங்கள் கருத்தை சொல்லுவீர்களா ..?

பகலவன்,

எனது பதிவு தமிழீழக்கொள்கை கைவிடப்படவேண்டும் என்ற வகையில் அமைவதாக நீங்கள் மட்டும் அன்றிப் பிறரும் புரிந்துகொள்ளக் காரணமாயிருப்பது தெரிகிறது. சிற்பி கூறியது போல் இது எனது எழுத்தில் ஏற்பட்ட ஏதோ குழப்பமாக இருக்கலாம். அதைத் திருத்துவதற்கு உங்களின் கேள்வியினைக் இயன்றவரை கீளே பயன் படுத்திக் கொள்கின்றென். இக்கேள்விக்கு நன்றி.

இப்பதிவின் ஆரம்பத்தில் ரதிக்குப் பதிலளிக்கையில் கூறியதைப் போல தமிழீழக் கொள்கையினைக் கைவிடக்கூறவில்லை மாறாக தமிழீழம் என்றால் என்ன என்று அடிப்படையில் இருந்து மீள ஆராயப்படவேண்டும் என்றும் தமிழீழத்திற்கு மாற்றான தீர்வுகள் முன்வைக்கப்பட்டால் அவற்றை உள்வாங்கும் (உள்வாங்குதல் என்பது ஏற்றுக்கொள்ளலாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை) மனப்பக்குவம் எமக்கு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டேன். இந்தப்பதிலே இத்தலைப்பின் பெயரிலான பல கோபங்களிற்குக் காரணமாகியது.

“முப்பது வருசத்துக்குப் பிறகு இவர் ஒருத்தர் வந்து தமிமீழம் என்றால் என்னெண்டு ஆராயட்டாம்” என்ற ரீதியிலேயே இதைப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர். எனினும், சிங்களத்திடம் இருந்து புவியியல் ரீதியாக எமது பிரதேசம் பிரிக்கப்பட்டு உலகால் அங்கீகரிக்கப்பட்டு எமது கொடி ஐநா வழாகத்தில் தமிழீழம் என்ற பெயருடன் பறந்தால் மட்டும் தமிழீழம் கிடைத்ததாய் நாம் மகிழ்ந்துவிடமுடியாது என்பதே என்கருத்து. அதாவது, சிங்களம் என்பது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியாய் இருக்கும் நிலை இல்லாது போக வேண்டும் என்பதிலோ அல்லது ஈழத்தில் தமிழரின் வாழ்வு சார்ந்து நிலவுகின்ற அத்தனை கேள்விக்குறிகளும் அகலவேண்டும் என்பதிலோ எனக்கு எந்த அடுத்த கருத்தும் இல்லை. ஆனால் அத்தகைய வெற்றி மட்டும் தமிழீழம் என்ற எமது கனவின் அத்தனை அவாக்களையும் நிறைவேற்றப்போதுமானதாகாது. தமிழீழத்தின் முதல் வளம் தமிழர்கள். அந்தவகையில் தமிழர்கள் தாம் சுதந்திரம் மிக்கவர்களாக முற்றாக உணருகின்ற, தமது உழைப்பு என்பது தமது குடும்பத்தின் உயர்வு மட்டும் அன்றித் தமது நாட்டின் உயர்விற்குமானது என்ற பிடிப்பைத் தாமாக உணரும் வகையிலமைந்த அனைத்துத் தமிழர்க்குமானதாகத் தமிழீழத்தை உருவாக்க வேண்டியதும் எமது போராட்டமே என்பதே அக்கருத்தின் அடிப்படை.

போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் முதலில் பொது எதிரியை வெல்வோம் பிறகு எங்களிற்குள் வழமாவோம் என்ற கருத்தை எங்களிற் பெரும்பான்மையானோர் ஏற்றிருந்தோம். நடந்து கொண்டிருந்த போராட்டத்திற்கு எங்களால் முடிந்ததை எங்கள் எங்கள் அளவில் செய்து கொண்டிருந்தோம். 2009ம் ஆண்டு சனவரி மாத்திலும் கூட எங்களிற் பலரிற்கு முள்ளிவாய்க்கால் என்பது தவிர்க்கப்படக்கூடியதாக நம்பிக்கையிருந்தது. எனினும் எங்கள் முகங்களில் அறைந்தபடி முள்ளிவாய்க்கால் என்ற சந்திக்கு நாங்கள் வந்து விட்டோம். யாரிற்கு என்ன தெரியும், எது உண்மை எது பொய் என்பவை அனைத்திற்கும் அப்பால், எங்கள் அனைவரிற்கும் தெரிகின்ற படி, நாங்கள் அறிந்த எங்களிற்காக நடந்து கொண்டிருந்த எங்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த வடிவத்தில் இப்போது நடக்கவில்லை. இப்போதைய நிலையை ஒரு வகையில் பார்த்தால் நாங்கள் முட்டுச் சந்தியில் நிற்பதாகப் படுகின்றது. இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் எதுவுமே முட்டுச் சந்தியில் இல்லை, வண்டிகள் பிரிந்த பாதைகளில் தத்தமது தெரிவுப்படி பயணிக்கத் தொடங்கிவிட்டனவோ என்றும் படுகிறது. மொத்தத்தில் இத்தலைப்பில் வேறும் கருத்தாளர் சொன்னதைப் போலவும், நீங்களும் உங்கள் பதிவில் ஒத்துக்கொண்டதைப் போலவும், அனைத்துத் தமிழரையும் ஒன்றிணைத்து அனைவரும் அடையாளம் காணமுடிகின்ற ஒரு முனைப்பு என்று எதையும் காணமுடியவில்லை. நின்று நிதானித்து மீளப் பயணிக்கத்தொடங்கவேண்டிய ஒரு காலகட்டமாக இது படுகின்றது. ஆனால், நடந்து கொண்டிருந்த முறைமை எங்களிற்குத் தெரிந்த வடிவத்தில் இருந்து முடிந்து போய், புதிய முறைமை ஒன்று எம்மவரை ஒன்றிணைக்கும் முறைமையாக முன்வரவேண்டி உள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் இனியும் ஆரம்பத்தில் இருந்து முதலில் பொது எதிரியான சிங்களத்தை வெல்வோம் பிறகு எங்களைப் பற்றிக் கதைப்போம் என்ற அடிப்படையில் கிளம்ப முடியாது என்பதே அக்கருத்து.

இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. ஒன்று நாங்கள் எதிர்பார்த்திராத உயரத்தை எட்டிய எங்கள் போராட்டம் நாங்கள் நம்பமுடியாதவாறு முடிவிற்கு வந்துள்ளது. ஏற்கனவே மூன்று தசாப்த்தங்கள் முடிந்து, சந்ததிகள் முன்னேற்றம் தொலைத்து நிற்கின்ற எங்கள் வாழ்வில் புதிய முறைமைகள் எத்தனை வேகத்தில் விடிவைப் பெற்றுத்தரும் என்று கூற முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில் இனிமேல் போராட்டம் என்றால் அது எங்களையும் வளப்படுத்தியபடியே தான் முன்னெடுக்கப்படலாம் என்று படுகின்றது. அவ்வகையில் தான், இன்று எங்கள் கண்முன் எங்கள் தேசியம் என்பது சுருங்கி நிற்பது ஏன் என்று ஆராய்வது தவிர்க்கமுடியாததாகப் படுகின்றது. அதாவது ஈழத்தமிழர்கள் அனைவரும் தமிழராக இணைவதற்கான அந்தப் பிணைப்பைத் தேடுவது தவிர்க்கமுடியாதாக இருக்கின்றது. இது சார்ந்து தான் எங்களிற்குள்ளான குறைந்த பட்ச பொதுமையினைத் தேடுவது பற்றிய பேச்சு எழுகின்றது. எங்களிற்காக ஒருசிலர் மட்டும் போராட மற்றையவர்கள் பார்வையாளராக இருக்கும் நடைமுறை தக்கவைக்க முடியாது என்ற எமது பட்டறிவின் நிமித்தம், எங்களவர் மிகப்பெரும்பான்மையானவர் கரங்கோர்க்கக் கூடிய முறைமைகள் எவை என்ற சிந்தனை அவசியப் படுகின்றது. எங்களிற்கான எங்களது முதல் வளம் நாங்கள், ஆனால் நாங்கள் இன்று ஒன்றுபடமுடியாதவாறு நிற்கிறோம். இதற்கு நாங்கள் அனைவரும் ஏற்கக்கூடிய தலைமைத்துவத்தை எங்களால் காணமுடியாதது ஒரு காரணமாயிருப்பினும், எங்கள் இனம் சார்ந்து நாங்கள் உள்ளுர உணரக்கூடிய அந்த அதிர்வைக் காணவில்லை என்பதும் ஒரு காரணமே.. உணர்வு என்பது நீங்கள் என் மீதும் நான் உங்கள் மீதும் திணித்து வெருட்டி காப்பாற்றப்படுவதாக இல்லாது ஒவ்வொரு தமிழரும் தாங்களாக இவ்வுணர்வை உள்ளுணர்வதற்கு எது தடையாக இருக்கின்றது என்ற விசாரணை அபத்தமானது அல்ல. தற்போதைய நிலையில் ஏகப்பட்டட சண்டைகளும் துரத்தல்களும் பட்டம்சூடல்களும் தான் தாராளமாகக் காணப்படுகின்றனவே அன்றி மேலே குறிப்பிட் அதிர்வை நோக்கிய செயற்பாடுகள் அரிதாகவே தெரிகின்றன. இந்த அடிப்படையில் தான் தமிழீழக் கோரிக்கை என்றால் என்ன என்று அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும் என்ற கருத்து வைக்கப்பட்டது.

அப்படியாயின் தமிழீழத்திற்கு மாற்றான யோசனைகளும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கருத்து எவ்வாறு மேலே சொன்னதோடு ஒத்துப்போகும்?

மேலே கூறியதைப் போன்று தமிழீழம் என்பதை புவியியற் பிரதேசமாக மட்டும் கருதிவிடமுடியாது என்பதன் தொடர்ச்சி தான் இக்கருத்தும். அதாவது ஈழத்தில் எங்கள் நிலங்களில் எங்கள் இருப்புப் பற்றிய அனைத்துக் கேள்விக்குறிகளும் நீங்கி நாங்கள் எங்களிற்காக எங்கள் உயர்விற்காக உத்தரவாதத்தோடு உழைக்கக்கூடிய ஒரு நிலை தமிழீழம் என்ற பெயரின்றி வேறு வடிவத்தில் தரப்படினும் அது மகிழ்ச்சியானதே. அதாவது, எனக்கும் உஙகளிற்கும் அவ்வாறான ஒரு தீர்வினைக் கற்பனை செய்ய முடியவில்லை என்பதற்காக அவ்வாறான தீர்வு இருக்கவே முடியாது என்று நாங்கள் கூறிவிடமுடியாது. குறைந்தபட்சம் அவ்வாறான தீர்வுகள் பற்றிக் கூறக்கூடியவர்களை அக்கருத்துக்களைக் கூற விடுவதும் அவற்றை உள்வாங்குவதும் என்பது, அத்தகைய கருத்துக்களை உடையவர்களும் ஈழத்தமிழர் என்ற பொதுமை சார்ந்து சிந்திப்பதற்கும் அப்பொதுமையோடு தம்மை அடையாளப்படுத்துவதற்கும் வழி வகுக்கும். எங்களின் மிக முக்கிய வளம் எங்கள் மக்கள் என்ற வகையில் எங்கள் மக்களில் எங்களின் பொதுமையோடு தம்மை இறுக்கமாக உணரும் மக்களின் எண்ணிக்கையின் உயர்வு என்பதும் தமிழீழம் என்ற எங்கள் இலக்கு நோக்கிய வெற்றியே. இந்தபதிவு முழவதும் கூறப்படும் முதன்மைக்கருத்து எங்களவரை நாங்கள் சேர்த்துக்கொள்ளல் என்பதுவே.

இறுதியாக நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் எங்களிற்குள் இருக்கும் அணிகள் என்று குறிப்பிட்டு எம்மவர்கள் எவ்வாறெல்லாம் பிரிந்து நிற்கின்றார்கள் இவர்கள் அனைவரிற்கும் ஏற்ற தீர்வு பற்றி விவாதிப்பதென்றால் எங்கள் பேரப்பிள்ளைகளின் காலம் வந்துவிடும் என்று கூறியிருந்தீர்கள். எங்களிற்குள் எங்களை இறுக்கமாகப் பிணைக்கும் பிணைப்புக்கள் தற்போது அரிதாகத் தெரிவதனை மறுக்க முடியவில்லை. தமிழீழம் என்ற ஆசை உடையவர்கள் கூட அது சாத்தியமா என்று அதிக எண்ணிக்கையில் இப்போது சிந்திக்கிறார்கள் தான். ஆனால் பன்மைத்துவம் என்பது எங்கள் சமூகத்திற்கு மட்டுமானது அல்ல.

வேறு நாடுகளில் இருந்து வந்து புதியநாடுகளைதோற்றி சில நூறு ஆண்டுகளிற்குள் அந்த புதிய நாடு சார்ந்த ஈர்ப்பை அம்க்கள் மீது ஏற்படுத்திவிடுகின்ற நிகழ்வுகளை நாம் உலகம் தோறும் காணுகின்றோம். இது போன்றே புதிய சங்கங்கங்களின் அங்கத்துவம் போன்ற விடயங்களிலும் பிணைப்பு அதன் உறுப்பினர்களிற்கு ஏற்படுத்தப்பட்டுவிடுவதனை நாம் பார்க்கிறோம். அது போன்றே நாங்கள் எத்தனை பேர் வெளிப்படையாக ஒத்துக்கொள்வோம் என்பது தெரியவில்லை, ஆனால் எங்கள் புலம்பெயர் வாழ்வில் எங்கள் வாழ்வகங்கள் சார்ந்த பிணைப்பினை நாங்களும் உணர்கிறோம். இந்நிலையில் பல ஆயிரம் வருட சரித்திரம் கொண்ட தமிழ் மீது தமிழரிற்குப் பிணைப்பை ஏற்படுத்துவது கடினமானதல்ல. இந்தப் பிணைப்பை உருவாக விடாது நாங்களே சில சமயங்களில் இருந்து விடுகிறோம் என்பதால் தான் சுயவிசாரணை அவசியமானது என்று இங்கு விவாதிக்கப்பட்டது. ஓயாது சக தமிழர்களை அவர்களது கருத்துச் சார்ந்து நீ தமிழன் அல்ல எட்டப்பன் துரோகி அவனைப்போலிருக்கினறாய், இவனது பெயரைக் கொண்டிருக்கின்றாய் என்றும் வெறும் ஊகங்களின் அடிப்படையிலும், அவசரத்தின் ஆத்திரத்தின் தப்பவிப்பிராயத்தின் அடிப்படையிலும் தூரத்தூர விரட்டிக்கொண்டு ஏன் எஙகளவர் இவ்வாறு விலகிப்போகின்றனர் என்று நாம் கேட்கமுடியாது.

அதுபோன்றே, இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறுகிறார்கள் இவர்கள் ஒவ்வொருவரின் ஆசைகளையும் கேட்பதற்குள் எங்கள் பேரப்பிள்ளை காலம் வந்துவிடும் எனவே எல்லோரும் எனது ஆசையினை ஏற்றுப் பின்னால் வாருங்கள் என்றும் கூறுவது சாத்தியமில்லை. இவ்வகையில் பொதுமை என்பது பலம்மிக்கது என்பதைப்போல் சிக்கலானதுமே. எனினும் நாங்கள் விரும்பாதபோதும் நாங்கள் பயணித்தவேகத்தில் இருந்து முற்றான ஓய்விற்கு வந்து இனிமேல் பயணிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திணிக்கப்பட்ட வேகக்குறைப்பை எமக்குள் நாம் நிதானித்துக் கதைப்பதற்கான எமது எதிர்காலம் பற்றிய வடிவமைப்புக்களிற்கான நாம் ஒன்றுபடுவதற்கான காலமாக்கி எமக்கு ஆதாயமானதாக்கிக் கொள்வதிலேயே எமது எமது வெற்றி தங்கியுள்ளது.

உங்கள் கேள்விக்கு இயன்றவரை பதில் அளித்துள்ளேன் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

சந்தர்ப்பத்திற்கு முதல் நன்றி.

அக்கூத்தா,

உங்கள் வரைவிலக்கணப்படி இத்திரியின் ஆரம்பப்பதிவு நீங்கள் குறிப்பிடும் வட்டத்திற்குள் அமைகின்றதா இல்லையா என்று குறிப்பிட்டால் பலன் பெறுவேன்.

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய மகிந்தரில் இருந்து இன்று தேசியகீதம் சிங்களத்தில் மட்டும்தான் பாடப்படலாம் என்பது வரை தாயக / புலம்பெயர் மக்கள் இந்த பதினெட்டு - பத்தொன்பது மாத கால கட்டத்தில் பலவகையான எண்ணப்பாடுகள் - முடிவுகளை மாற்றியவண்ணம் உள்ளனர். கீழே ஒரு உதாரணத்திற்கு மூன்று நிகழ்வுகளை பார்க்கலாம்:

1. முள்ளிவாய்க்காலில் எழுபது ஆயிரம் மக்களே உள்ளனர் என 2009/05 க்கு முன்னர் பல நாடுகள் சொன்னார்கள். தாம்

பொறுப்பெடுப்பதாகவும் சரணடையவும் சொன்னார்கள், பின்னர் அரசியல் தீர்வும் முன்வைக்கப்படும் என்றார்கள்.

இறுதியாக 320,000 மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டபோது பலரின் கருத்துக்கள் / மாற்றுகருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டன.

2. 2009/12 க்கு முன்னர் சகல மக்களும் விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இன்றுவரை மக்கள் முகாம்களில் உள்ளனர். மக்களுக்கு "புனர்வாழ்வு" என்ற பெயரில் ஒரு இராணுவ அடக்குமுறை வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலரின் கருத்துக்கள் / மாற்றுகருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டன.

3. தாம் இறந்தாலும் தம்மை நம்பி, தாயக விடுதலைக்காக இணைந்த போராளிகளை காப்பற்ற சரணடைந்த 12000 + போராளிகள், பெயர் பட்டியல் இன்றி, எங்கு என்று தெரியாமல் வைக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

தற்கொடை தாக்குதல், சிறுவர்களை படையில் சேர்த்தல் என்பனவற்றை முதன்மை காரணங்களாக வைத்த சர்வதேசம் அரசின் மிக மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அலட்சியம் செய்து வருகின்றது.

இதனால் பலரின் கருத்துக்கள் / மாற்றுகருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டன.

பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நன்றி.

கீழ் வரும் கருத்தை கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்: "கடந்த ஒன்றரை வருடமாக நிறையப்பேசிவிட்டோம். கடமைக்குச் சில செயல்களும் செய்தோம் என்றபோதும் உருப்படியாய் அதிகம் இல்லை. "

தாயகத்தில் மக்கள் தொடர்ந்து ஒரு கொடுமையான இராணுவ கட்டமைப்புக்குள் வைக்கப்பட்டு அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் மறுக்கப்படுகின்றன. புலத்தில் உள்ள மக்கள் பலவாறு குழம்பிய நிலையில் இருந்தார்கள், சரியான பாதை எதுவென் தெரியாமல் தடுமாறினார்கள், சர்வதேசமும் சிங்களமும் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கும் என எதிர்பார்த்தார்கள்.

இத்தனைக்கும் மத்தியில் கீழ்வரும் செயற்பாடுகள் பெரு வெற்றிகரமான செயற்பாடுகள் என பார்க்கப்படலாம்:

- ஐ. நா. க்கு அழுத்தம் கொடுத்தல்: ஒரு பரிந்துரை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதை தமிழர் தரப்பு பயன்படுத்தும் இடத்து முதலில் ஒரு நிரந்தர ஆணைக்குழுவும் அதனூடாக பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம்

- ஜி. எஸ். பி. பிளஸ் நிற்பட்டப்பட்டது, தொடரும் "பகிஸ்கரி சிங்களம்" போராட்டங்கள்

- தமிழகத்தில் தொடர்ந்தும் உணர்வுகள் தக்கவைக்கப்பட்ட வண்ணம் உள்ளன

- தொடரும் மனித உரிமை மீறல்கள், மறுக்கப்படும் அரசியல் தீர்வுகள் பல தரப்பாலும் உலகத்திற்கு சொல்லப்படுகின்றது. இதன் மூலம் எமது மக்களின் அவலங்கள் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றது

- பல காத்திரமான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது ( நாடு கடந்த அரசு, தமிழர் பேரவைகள், உலகத் தமிழர் பேரவை )

காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும்.

1.விடாமுயற்சி

2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை

3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு

இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எமது இனத்திற்கு பயன்படும் விடயத்தில் இன்று என்ன செய்யப்போகிறோம் என்ற நினைவில் காலையில் எழ வேண்டும். அதேபோல் மாலையில் தூக்கத்திற்கு போகும்பொழுது இன்று எதை உருப்படியாக எமது இனத்திற்கு செய்தோம் என்பதை எண்ண வேண்டும் இதுவே எமது இனத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும்.

தாயக மக்கள் அன்றும் இன்றும் விரும்புவது ஒன்றுதான், தாங்கள் தமது தாயக நிலத்தில் சுதந்திரமாக தாமே ஆளக்கூடிய அடிப்படை அதிகாரங்களுடன் வாழவேண்டும் என்பதுதான். தந்தை செல்வாவும் இதையே கேட்டார் அகிம்சை முறையில். தலைவர் பிரபாகரனும் இதையே கேட்டார் ஆயுத போராட்டம் மூலம். ஆனால் சிங்களம் அன்றும் இன்றும் ஒரே கொள்கையை கடைப்பிடிக்கின்றது - தமிழின அழிப்பே அதன் மூலக்கொள்கை.

மேலே சொல்லப்பட்ட காரணிகள் மூலம் தாயக / புலம்பெயர் தமிழர்களை மூன்று வகைக்குள் பிரிக்கலாம்:

1. தமிழீழம் தான் ஒரே தீர்வு - on the right

2. சிங்களத்துடன் சேர்ந்து வாழும் வழிமுறைகளை ஆராய்வது - on the left

3. மேலே சொல்லப்பட்ட இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் மக்கள்

பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் அதிகளவு கருத்துக்கள் 2) சார்பானதாக அமைந்திருக்கலாம். இன்றும் தாயக மக்கள் இந்த முடிவையே விரும்பலாம், ஏனெனில், அவர்கள் அவ்வாறான ஒரு உறங்கு (கோமா) நிலையில் வைக்கப்படுள்ளனர். அவர்கள் ஒரு சுயாதீன முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அப்படியான ஒரு நிலையில் அவர்களின் உறவுகளான புலம்பெயர் மக்களால் தான் அவர்கள் சார்பாக ஒரு நிலைப்பட்டை எடுக்கும் தார்மீக கடமை உண்டு.

நடந்து கொண்டிருக்கும் அரசியல் சதுரங்கத்தில் பலமான நிலையில் உள்ள ( இருந்த) சிங்களம் சில தவறான காய் நகர்த்தல்கள் செய்வதாக உலகம் உணரத்தொடங்கியுள்ளது. சிங்களத்தின் மிகப்பெரும் நண்பனான சீனா, தனது ( பொருளாதார / அரசியல் ) நலத்திற்காக கைவிட்டால், சிங்களத்தின் நிலை இறுக்கமாகி விடும்.

1. தமிழீழம் தான் ஒரே தீர்வு, என்று முடிவெடுத்தவர்கள் தொடர்ந்தும் கடினமாக உழைத்து, சர்வதேச பூகோள - பொருளாதார அரசியல் காய்களை நகர்த்தி அதன் மூலம் 2. சிங்களத்துடன் சேர்ந்து வாழும் வழிமுறைகளை ஆராய்வது, 3. மேலே சொல்லப்பட்ட இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் மக்கள்; என்ற கருத்துக்களை கொண்ட மக்களை தம் வசம் மாற்றியவண்ணம் இருப்பதாக அவர்கள் செயல்பாடுகள் உள்ளன. இதில் வேகம்/ஒற்றுமை குறைவாக இருக்கலாம் ஆனால் விவேகம் உள்ளது.

சிங்களம் எந்த விதமான தீர்வை தராது என்பது உறுதியான நிலையில், மேற்பட்ட புலம்பெயர் மக்களும் தமிழக மக்களும் தொடர்ச்சியாக தாயக மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் விடிவுக்கு சர்வதேச ஆதரவு தேடி, இந்தியா - சீனா உட்பட, நகர்வதே அவர்களின் நீண்ட கால இருப்பை உறுதியாக்கும்.

Link to comment
Share on other sites

அகூதா கோவிக்க வேண்டாம் நீங்கள் எழுதும் கருத்துக்களை வாசிக்கும் போது எனக்கு நடிகர் ஜனகராஜ் நினைவிற்கு வருகின்றார்.நீங்கள் இங்கு இணைக்கும் பல விடயங்கள் மிக பிரயோசனமானவை.நீங்கள் புலம் பெயர்ந்து செய்யும் சேவையும் அளப்பரியது.ஆனால் நீங்கள் யாரோ சொல்லிக்கொடுத்தை அப்படியே நம்பி கருத்தெழுதுபவர் போலிருக்கு.கீழ் மட்ட போராளிகள் கொலைசெய்ய சொன்னால் சரி பிழை பற்றி அறியாமல் கொலைசெய்வார்கள் .மெலிடத்தை நம்பி உத்தரவை நிறைவேற்றுவார்கள்.ஆனால் இங்கு இருந்துகொண்டு மேலிடம் சொல்வதெல்லாத்தையும் நம்பி செயல்படுவது ஏற்கமுடியாத்தது.எனெனில் மாற்றுக்கருத்து பற்றிய உமது விளக்கம் அப்படித்தான் இருக்கின்றது.

"கருத்து / மாற்றுகருத்து

பொதுவாக பெரும்பான்மை மக்களால் விரும்பப்படுவது கருத்தாகவும்

அந்த பெரும்பான்மை மக்களின் எண்ணங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் மாற்றுகருத்துக்களாகவும் பார்க்கப்படுகின்றது.

எமது இன்றைய தாயக நிலைமையில் பெரும்பான்மை மக்கள் எமது வாழ்வியல் நிலைக்கவேண்டும் என்றால் நாம் ஏதோ ஒரு விதத்தில், அரசியல் ரீதியாக போராடியோ இல்லை மாற்று வழிகளை சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க தேடவேண்டும் என முயலுகிறார்கள். இந்த பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை உள்வாங்கி இந்த வட்டத்துக்குள் இருந்து அதற்குள்ளேயே கருத்து விவாதங்களை வைத்து முன்னெடுப்பது ஒரு உண்மையான மாற்றுகருத்தாக மக்களால் பார்க்கப்படும்.

இந்த வட்டத்துக்குள் சேராமல், அந்த பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை உள்வாங்காமல், மாற்றுகருத்துக்கள் என்ற பெயரில் நடைமுறை சாத்தியமற்ற கருத்துக்களை வைப்பது விரைவில் பிசுபிசுத்துவிடும்."

எனகு உண்மையில் நீர் என்ன எழுதியிருக்கின்றீர் என விளங்கவில்லை.மண்ணையை பிய்ய வேணும் போலுள்ளது.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன் ,

உங்கள் எண்ணகருத்தை ஆணித்தரமாக முன்வைக்கும் உங்கள் பொறுமையான பதிலுக்கு மீண்டும் நன்றி.

உங்கள் கருத்துக்கு திரும்ப திரும்ப எதிர் வாதம் வைக்கிறேன் என்று சினம் கொள்ளாதீர்கள். எங்களுக்கு குறிப்பாக எனக்கு மாற்றம் ஏற்பட சில சந்தேகங்களுக்கு விளக்கம் அவசியமாகிறது.

நீங்கள் உங்கள் பதிலில் குறிப்பிட்டது போல, தமிழீழத்துக்கு ஆசைபட்டவர்கள் அல்லது அதனை கொள்கையாக கொண்டவர்கள் நிதானிப்பது, அல்லது அவர்களின் பாதையில் வேகத்தை குறைத்து கொள்வது எனக்கு தெரிகிறது புரிகிறது. அதனை நானும் ஏற்று கொள்கிறேன்.

பொதுவாக எனது இனத்தில்/சமுதாயத்தில் பிறந்த நான், எனக்கு மாற்றம் ஏற்பட ஒப்பீடு அவசியமாகிறது. அதாவது என்னிடம் இப்போது இருக்கும் கருத்துக்கு/கொள்கைக்கு மாற்றீடான ஒரு தீர்வை/கொள்கையை ஒப்பீடு செய்வதன் மூலமே மாற்றம் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் முடிவு, எனது கருத்தியலில்/கொள்கையில் ஏற்பட்ட தோல்வியாக நான் கருதமுடியாமைக்கு, அதற்கு மாற்றீடாக அப்போது வேறு வழி இருக்கவில்லை என்ற சமாதானமாகவே நான் கருதிகொண்டேன். அபோது அதற்கு மாற்றீடாக செயற்படுத்த கூடிய ஒரு நியாயமான வழிமுறை இருக்க புலிகள்/மக்கள் அந்த முள்ளிவாய்க்கால் முடிவை எடுதிருபார்களேயானால் எனது கருத்தியலிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.

தோல்வி என்பது இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை மாற்றுமே தவிர இலக்கை மாற்றாது என்பது என் கருத்து.

சரி தமிழீழம் என்ற கொள்கைக்கு புவியியல் வரையறையை விடுத்து வேறு ஏதாவது வரைமுறையை நீங்கள் சிந்தித்து இருகிறீர்களா.?? அபப்டி இருந்தால் சில அடிப்படைகளை முன்வைத்தால் விவாதம் மூலம் மெருகேற்றலாம் இல்லையா..?

பொதுவாக எமது மக்களின் அரசியல் நாட்டமின்மை, ஏனைய போராடங்கள் பற்றிய அறிவின்மை, தானுண்டு தன் குடும்பமுண்டு என்று வாழும் தன்மைகளை அடிப்படையாக வைத்து மட்டும் மக்கள் தமிழீழம் என்ற புவியியல் வரையறையை தாண்டி வர மறுக்கிறார்கள் என்ற கருத்து உங்கள் கட்டுரையில் வெளிபடுவதாக நான் கருதுகிறேன்.

இருந்தாலும் நீங்கள் எங்கள் மக்கள் மேல் கொண்ட விருப்பினால், அவர்களுக்கு சுந்திரமான, உரிமைகளுடன் கூடிய தீர்வை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருகிறீர்கள். இருந்தாலும் சில கால வரையறைகளை கொண்ட தீர்வை நோக்கிய பயணத்தை முன்மொழிவீர்கள் என்று நம்புகிறேன்.

எங்களின் வளங்கள் என்று பொதுவாக வரையறுக்காமல் அவற்றை தெளிவுபடுத்தி, ஒரு கால அட்டவணையில் அவற்றை பயன்படுத்த கூடிய வழிமுறைகளையும் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறன். இப்போது எங்களுக்கான இறுதி தீர்வை வரையறுப்பது (தமிழீழம் சார்ந்த வரைமுறைகளை) கடினமானது என்பதை நான் உணர்வேன்.

எனக்குள் இருக்கும் ஒரு எண்ணப்படி ஏன் நாங்கள், புலிகள் ஒஸ்லோவில் கையளித்த இடைக்கால நிர்வாக சபை என்னும் ஆரம்ப கட்ட தீர்வில் இருந்து எங்கள் விவாதத்தை ஆரம்பிக்க கூடாது.

அது புலிகளாலும்/அவர்களின் செயற்பாட்டாளர்களாலும் மறுத்துரைக்க முடியாத ஆரம்ப புள்ளியாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இன்றைய நாளில் தமது இன்னுயிரை எங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்தவரும், அந்த இடைக்கால தீர்வு வரைபை வரைந்தவருமான தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் நினைவுதினத்தில் இதை குறிபிடுகிறேன். உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

இப்பதிவு எங்களைப் பற்றிப் பேசுவதற்கானது. எங்கள் பிரச்சினகைள் என்று எங்களைப் பற்றி நான் பேசுவதைப் புலிகளின் மீதான விமர்சனமாகப் புரிபவர்கள் அந்தப்புரிதல்களிற்குத் தாமே பொறுப்பாளிகள் ஆகவேண்டும்.

எங்களைப் பற்றி பேசினால் அது புலிகளைப் பற்றியதாகவும், புலிகளைப் பற்றி பேசினால் அது எங்களைப் பற்றியதாகவும் தான் இருக்கும் இன்னுமொருவன். ஏனெனில் சம காலத்தில் வாழும் எங்களுக்கும் (ஈழத் தமிழ் மக்களுக்கும்) ,புலிகளும் இடையில் வேறுபாடுகள் இல்லையே. எங்கள் மீதான விமர்சனம் புலிகள் மீதான விமர்சனமாகத்தான் பார்க்கப்படும். அது தான் யதார்த்தமும் கூட

----

நல்லதொரு திரி.. ஆனால் பொறுமையாக வாசித்தாலும் அதை விட பொறுமையாக பதில் எழுதி விவாதத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு நேரமும் மன நிலையம் இல்லை என்பதால் மேலே எழுதிய சிறு பதிலுடன் நின்று கொள்கின்றேன்

---

உங்கள் மொழிப் பயன்பாடு சில இடங்களில் புரிதலுக்கு கடினமாக இருக்கு எனக்கு. சில இடங்களில் அதிகக் கனமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றீர்கள் போல இருக்கு. வாசிக்கும் போது இடையிடையே தொடர்ச்சி அற்றுப் போய், மீண்டும் அதே பந்தியை வாசித்து தொடர்ச்சியை கண்டு பிடிக்க வேண்டி இருக்கு. இது எனக்கு மட்டுமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

பகலவன் உங்களுடன் இதற்கு முன் உங்களது இந்தப் பெயரில் யாழ்களத்தில் விவாதிக்காத வகையில், நீங்கள் கோருகின்ற விவாதத்தில் பங்கெடுப்பது அவசியமானது என்று கருதிப் பங்குகொண்டேன். ஒருவரை எம்மை விட மட்டமானவர் என்று கருதிக்கொண்டு அதிமேதாவித்தனத் தளத்தில் தம்மைத்தாமே கண்டுகொண்டு கருத்துப்பகிர்வது எனது பார்வையில் மடைமை என்ற அடிப்படையில் உங்களை சககருத்தாளராகக் கருதி நேர்மையாகவே கருத்துப்பகிர முனைந்தேன். இவ்வாறு நேர்மையாக உங்களது கேள்விகளை நான் அணுகியதை வைத்து, “இவரை எங்க மாட்ட வெளிக்கிடுகிறன் எண்டு தெரியாமல் மச்சான் தூண்டிலைக் கவ்வுறார்” என்று நினைத்துவிடக்கூடாது.; நீங்கள் இங்கு நிறுவ முயலுவது என்னவெனில், வாயுழையும் வரையும் எவரும் எதையும் பினாத்தலாம் ஆனால் செய் அல்லது செத்துமடி என்ற மனநிலையினைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு செயற்திட்டத்தை எந்தக்கொம்பனாலும் வரையறுக்க முடியாது, சுத்திச்சுத்தி அனைவரும் தமிழீழம் என்ற முடிவிற்குத் தான் வரவேண்டும் என்பதுவே. இதைப் புரியாது இவ்வளவு நேரமும் உங்களுடன் கருத்துப் பகிரவில்லை.

அத்தோடு மேற்படி சிந்தனையை நீங்கள் மட்டும் தான் கொண்டிருக்கின்றீர்;கள் என்றோ அல்லது நீங்கள் மட்டும் தான் யாழ்களத்தில் மேற்படி சிந்தனை நோக்கி முயன்று கொண்டிருக்கின்றீர்களோ என்பதுவோ நிலைமை இல்லை. தமிழீழம் என்பது எவரது சொத்தும் சொத்தும் இல்லை, தமிழர்கள் இல்லாத பட்சத்தில் தமிழீழம் இல்லை—அந்தவகையில் தமிழீழம் சார்ந்து சிந்திப்பதும் அனைத்துத் தமிழர்க்குமானது. செய் அல்லது செத்துமடி என்ற கோசத்திற்கு மேலால் புலத்தில் செத்துமடியச் சித்தமாயிருப்பவர்கள் எத்தனைபேர் என்ற புரிதல் பற்றி இங்கு நிறையத் திரிகள் வந்து போயுள்ன. முன்னர் கூறியதைப் போல ஆனையிறவு வெற்றிவிழா பொங்குதமிழ் நிகழ்வுகளில் நாங்கள் கண்ட தமிழ்த்தேசியத்தின் பலம் கடந்த மாதங்களில் எவ்வாறு சுருங்கி வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை எல்லோரும் காணமுடிகிறது. இப்படிச் சொல்வதால் வழக்கமாகப் பலர் இத்தருணத்தில் முண்டியடித்துக் கொண்டு கூறுவதைப் போல, எல்லாத்தையும் தமிழீழம் என்பது புலிகளின் ஆசை புலிகள் எல்லாத்தையும் கெடுத்தார்கள் என்று நான் சொல்லவருகின்றேன் என்ற சலிப்பேற்றும் கருத்தை வைத்துவிடாதீர்கள்;. முன்னரும் பலதடவை இங்கு பகிரப்பட்டது போல், செயலைத் தேடுவதும் செயல்தான். எனக்கு எதையும் கதைக்கப் பிடிக்காது எதையாவது எப்போதும் செய்துகொண்டிருக்கவே பிடிக்கும் என்பது உங்கள் மனநிலையாயின் நீங்கள் கருத்துக் களம் வரவேண்டியது இல்லை. கோவிலிற்கள் போள் நின்று கொண்டு ஐயையோ சாமி சிலை தெரியுது என முடியாது. கருத்துக் களம் என்றால் கருத்துக்களிற்கானது தான்.

எமது சமூகத்தில் குறிப்பிட்ட சாரார் சிந்திப்பதை, எழுதுவதை, பேசுவதை வெட்டித்தனம் என்று நினைப்பது உண்டு தான். இதற்கான முதன்மைக்காரணம் எங்கள் வரலாற்றில் கிரமான விவாதங்கள், எழுத்துக்கள், சிந்தனைப் பரிமாற்றங்கள் சார்ந்து எழுந்த முயற்சிகள் திட்டமிடப்பட்டு வெற்றி பெற்ற உதாரணங்கள் மிகக் கம்மியாக உள்ளன. சமையலைக் கூட நாங்கள் குறிப்பெழுதி வைப்பதில்லை. குறித்த பக்குவத்தில் ஆட்டிறைச்சி வரவேண்டுமாயின் குறித்த ஆட்டிறைச்சிச் சமயல் விண்ணரைக் கூட்டிவருபவர்கள் தான் நாங்கள். தமிழ் சினிமா கூட அண்மைக்காலம் பரை ஸ்கிறீன்பிளே இன்றி உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தப் பாரம்பரியத்தில் செயலில்லா சித்தனைகள் எங்களைக் கடுப்பேற்றுவது எங்கள் இயல்வு. ஆனால் இரு தசாப்தங்ளகிற்கு மேலால் எங்களது வாழ்வு அந்நியதேசங்களில் வளர்கிறது. நல்லதை எங்கிருந்தும் கற்றுக் கொள்வது அபத்தமில்லை. கிரமமான சிந்தனைகள் எழுத்துக்கள் எவ்வாறான, நாங்களும் இன்புற்று மகிழுகின்ற, சமூகங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதனை நாங்கள் பார்க்கின்றோம். இவ்வகையில் எங்கள் வழமையான வழிகளை மாற்றத் தலைப்படுவது ஒன்றும் அபத்தமானது அல்ல.

இறுதியாக, முள்ளிவாய்க்காலிற்கு மாற்றிருந்தும் அதைப் புலிகள் தேர்ந்தனர் என்று நான் கூறுவதாக நீங்கள் புரிய முனைகிறீர்களோ என்று தோன்றுவதனால் ஒன்றைக் கூறிக்கொள்ளவேண்டும். நான் அவ்வாறு கூறவில்லை. நான் இங்கு புலிகளைப் பற்றியே கதைக்கவில்லை. நான் முள்ளிவாய்க்கால் தவிர்க்கப்படக்கூடியதாக 2009 சனவரியிலும் எங்களிற்கு நம்பிக்கை இருந்தது என்று கூறியதானது, எங்கள் பலம் மீது எங்களிற்கு இருந்த நம்பிக்கை என்பதை மட்டுமே என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.

ஆரம்பப் பதிவு, பின் உங்களிற்கான இரண்டு பின்னூட்டங்கள் என்பனவற்றை நேர்மையாக வைத்ததன் பின்னரும் உங்கள் பாணி மாற்றமன்றித் தொடருகின்றது. மேலும்

நான் எழுதும் எதையும் நீங்கள் உள்வாங்காது (வாசிப்பது வேறு உள்வாங்குவது வேறு) உங்களது என்னை நோக்கிய குறியில் மட்டும் முயல்வதும் தெரிகிறது. இந்த அடிப்படையில் நான் எதை எழுதுவதும் இப்போதைக்குப் பலன்தராது என்பதைப்புரிந்து கொள்கிறேன். உங்களிற்கு ஏற்புடைய முறையில் என்னால் எழுதமுடியவில்லை என்று ஒத்துக்கொள்கின்றேன்.

நன்றி

வணக்கம்.

Link to comment
Share on other sites

நிழலி,

புலிகள் என்பவர்கள் தமிழரிற்க்குள் இருந்து தமிழரிற்காகப் போராட எழுந்தவர்கள் என்ற வகையில் தமிழரின் பலங்கள் மட்டும் அன்றிப் பலவீனங்களின் சாயலும் சில தருணங்களில் புலிகளிற் தெரிய முடியும் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அந்தவகையில் நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. எனினும் நான் எங்கள் பலவீனமாகக் குறிப்பிடும் ஒன்றைப் புலிகளிலும் காணும் ஒருவர், அதாவது அப்பலவீனம் புலிகளிலும் இருந்ததை நான் சுட்டிக்காட்டாதபோதும் கண்ட ஒரவர், அச்சிந்தனை சார்ந்து சிந்திப்பதற்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் மேற்படி சாயலைக் கண்டவர் அவர் தான். மேலும் போராளிகள் மட்டும் அன்றி, பல மக்களும் எங்கள் போராட்டக் கனவில் இறந்துள்ளார்கள். எங்கள் கனவிற்காக அவர்கள் இறந்தமையால் அவர்கள் இறந்த பாதை பற்றி நாங்கள் பேசக்கூடாது என்று இருக்கத்தேவையில்லை. அதாவது கடந்தகாலம் பற்றிக் கதைப்பது இறந்தவரை நிந்திப்பதாக இருக்கத்தேவயில்லை என்பதே நான் கூற வந்தது.

எனது எழுத்துத் தெளிவின்மை சார்ந்த உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. உள்வாங்கிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்

தங்களது பெயரைப்போலவே நீங்கள் அப்படியேதான் எழுதுகின்றீர்கள்

யாரையும் புரிந்து கொள்ளவும்

யாரையும் சேர்த்துக்கொள்ளவும்

யாரையும் தங்களுக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளவும்

யாரையும் அரவணைத்துச்செல்லவும்

தாங்கள் தயாராக இல்லாதது மட்டுமல்ல

அவர்களை எடுத்தெறியவும்

அவர்களை மட்டமான சொற்களால் விமர்ச்சிக்கவும்

அவர்களின் கருத்துக்களை ஏற்காது புதுபுது அர்த்தங்களால் மடக்கமுயல்வதும்

எந்த பலனையும் தராது மட்டுமல்ல அதற்கு எதிர் மாறான விளைவுகளையே கொண்டுவரும்.

இது தான் தங்களது குறிக்கோள் எனில் கருத்துக்களத்தில் அதனை எதற்கு பதிகிறீர்கள்....?

நேசத்தோடு

அர்ப்பணிப்போடு

விட்டுக்கொடுப்போடு

வரலாற்றை பாடமாக ஏற்ற, மக்களின் கருத்தை கருத்தில் கொள்ளும் கருத்துக்களும், அதன் எழுத்தாளர்களுமே இலக்கை அடைவர்.

நான் இத்துடன் நிறுத்துகின்றேன். சொற்களில் அல்லது இதுபோன்று நேரங்களை செலவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

தங்களுக்கும் இதனையே பரிந்துரைக்கின்றேன். நேரம் பொன்னானது.

இல்லை என தாங்கள் தொடர்ந்து இது போன்று தொடருவீர்களாயின் இந்த திரியின் முடிவில் நான் தங்களுக்கு பரிந்துரைத்ததே இங்கு தங்களுக்கு விடையாக வரும். நன்றி :lol:

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் இப்போது நான் எழுதும் விடயத்துக்கு பதில் தரமறுத்தாலும், நீங்கள் கடைசியாக என் மீது சொல்லபட்ட கருத்துக்கு பதில் எழுத வேண்டிய கடைப்பாட்டில் உள்ளேன்.

நீங்கள் குறிப்பிட்டது போலவே, நான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், உங்களை திருப்திபடுத்த வேண்டும் என்று என் கருத்துகளை கூற முடியாது. நீங்கள் எப்படி உங்களை சுயவிமர்சனம் செய்து உங்கள் உணர்வுகளை எழுதினீர்களோ, அப்படி தான் நானும் என்னை சுயவிமர்சனம் செய்து எனது உணர்வுகளை எழுதினேன். இது தப்பு என்றால் தங்கள் கருத்துக்கு எப்பவுமே மாற்று கருத்து இருக்காது, என்று கூறும் கூட்டத்துக்கும் உங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக என் மனதுக்கு தெரியவில்லை.

தூண்டில் இல்லாமலேயே , எங்கே மாட்டுபட்டுவிடுவேனோ என்று மீன் நினைத்து வளைந்து வளைந்து ஓடுவதற்கு யாரிலும் குற்றம் சொல்ல முடியாது என்று நினைக்கிறன். இந்த திரியை வாசித்துவரும் ஏனையவர்களுக்கும் இது நன்றாக புரியும் என்றும் நீங்கள் அறிவீர்கள்.

சரி, எங்கள் சமுதாயம் எழுதிவைத்தோ, கருத்துகளை விவாதித்தோ பழக்கமில்லாத சமுதாயமாகட்டும், நான் சில வேளைகளில் சொல்லை விட செயலை மதிபவனாகவே ஆகட்டும், விவாதம் என்று வந்து கருத்துகளை முன்வைக்கும் போது எங்கள் சமுதாயத்தின் வெளிப்பாடாகவே நான் இருப்பேன். சமுதாயத்தில் இருந்து இன்னுமொருவனாக என்னை காட்டுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் என்றால் இந்த திரியின் கருப்பொருளும், இந்த திரியின் இறுதி இலக்கும் எங்கள் சமுதாயதுக்கானதகவே இருக்கிறது.

உங்கள் கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்கலாமே என்று கேட்கின்றபோது நன்றி வணக்கம் சொல்லும் கருத்தாளரை நான் இப்போது தான் முதன் முதலில் சந்திக்கிறேன். நீங்கள் சிறந்த கருத்தாளர் என்பதை நான் மனப்பூர்வமாக ஒத்துகொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் விடயத்துக்கு வருவோம், நீங்கள் குறிப்பிட்டது போல 2009 ஜனவரியில் இதை மாற்றி அமைக்க கூடிய வழி புலிகளிடம் இருந்தது என்ற நம்பிக்கை பலம் அடிப்படையில் அமைந்ததாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அந்த பலம் பற்றிய முழுமையான அறிவு உங்களுக்கு இருந்ததை இட்டு நான் பெருமையடைகிறேன்.

எல்லோரைப்போலவும் ஒரு மாயை அடிப்படையிலான யூகத்தை விடுத்து, அன்றைய நிலையில் எங்கள் பலத்தை முழுமையாக தெரிந்த ஒரிருவரில், ஒருவருடன் நான் கருத்தாடியதை இட்டு தான் அந்த பெருமை எனக்கு.

உங்கள் நிலைக்கு எங்களால் எழுதமுடியாவிட்டாலும், என் மனதில் இருந்த எண்ணங்களை எழுதமட்டுமே எங்களுக்கு தெரியும் என்று பணிவன்புடன் சொல்லி முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அகூதா கோவிக்க வேண்டாம் நீங்கள் எழுதும் கருத்துக்களை வாசிக்கும் போது எனக்கு நடிகர் ஜனகராஜ் நினைவிற்கு வருகின்றார்.நீங்கள் இங்கு இணைக்கும் பல விடயங்கள் மிக பிரயோசனமானவை.நீங்கள் புலம் பெயர்ந்து செய்யும் சேவையும் அளப்பரியது.ஆனால் நீங்கள் யாரோ சொல்லிக்கொடுத்தை அப்படியே நம்பி கருத்தெழுதுபவர் போலிருக்கு.கீழ் மட்ட போராளிகள் கொலைசெய்ய சொன்னால் சரி பிழை பற்றி அறியாமல் கொலைசெய்வார்கள் .மெலிடத்தை நம்பி உத்தரவை நிறைவேற்றுவார்கள்.ஆனால் இங்கு இருந்துகொண்டு மேலிடம் சொல்வதெல்லாத்தையும் நம்பி செயல்படுவது ஏற்கமுடியாத்தது.எனெனில் மாற்றுக்கருத்து பற்றிய உமது விளக்கம் அப்படித்தான் இருக்கின்றது.

எனகு உண்மையில் நீர் என்ன எழுதியிருக்கின்றீர் என விளங்கவில்லை.மண்ணையை பிய்ய வேணும் போலுள்ளது.

எனக்கு அகூதாவின் கருத்துக்களை வாசிக்கும்போது கயிறு இழுத்தல் போட்டியில் ஒரு பக்கம் இழுக்கின்ற வீரர்களிற்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் உடலை வளைத்து இரண்டு கைகளினாலும் உதறி உதறி புல் புல் என்று கத்துபவர் நினைவுக்கு வருகின்றார். :D சிறீ லங்காவில் சிங்களவர்கள் பெருன்பான்மையானவர்கள், தமிழர்கள் சிறுபான்மையானவர்கள். அகூதாவின் மாற்றுக்கருத்திற்கான வரைவிலக்கணம் யாழ் களத்தில் மட்டும் அதாவது யாழ் களத்தின் பெருன்பான்மை மக்களை மட்டும் மையப்படுத்தியுள்ளது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் பற்றி யார் பேசினார் இங்கே......

நீங்கள் இன்னுமொருவனுக்காக உழைக்கும் உழைப்பை பார்க்கும்போது...........

மிகவும் பாவமாக இருக்கிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தர்க்கத்திற்குத் தயாராக இல்லை, குதர்க்கத்திற்கு எப்பவும் தயார்!

பண்டைய காலத்தில் அரசர்கள் தங்களது மாளிகையில் அறிஞர்களை அழைத்து நாட்கணக்கில் தர்க்கங்கள் செய்யவிடுவார்களாம். அவர்களை ஊக்குவிக்க பொன்முடிப்பும் கொடுப்பார்களாம். இந்த நிலை தற்போது இல்லாததால் சிந்திக்காமலேயே செயலாற்றலாம் என்று வந்துவிட்டது..

Link to comment
Share on other sites

நாங்கள் தர்க்கத்திற்குத் தயாராக இல்லை, குதர்க்கத்திற்கு எப்பவும் தயார்!

பண்டைய காலத்தில் அரசர்கள் தங்களது மாளிகையில் அறிஞர்களை அழைத்து நாட்கணக்கில் தர்க்கங்கள் செய்யவிடுவார்களாம். அவர்களை ஊக்குவிக்க பொன்முடிப்பும் கொடுப்பார்களாம். இந்த நிலை தற்போது இல்லாததால் சிந்திக்காமலேயே செயலாற்றலாம் என்று வந்துவிட்டது..

கிருபன்,

தமிழ் மன்னர்கள் காலம் எப்படி இருந்தது என்பதை எங்களில் மிகப்பெரும்பான்மையானோர் இலக்கியங்களில் இருந்து தான் அறிந்துள்ளோம். இவ்விலக்கியங்கள் தமது கதைகளிற்கான தகவல் திரட்டலை நிச்சயம் எங்கோ செய்திருக்கும் என்று கருதலாம் தான் எனினும் அந்தத் தகவல்கள் எங்கள் அனைவரிற்கும் இலகுவில் கிடைப்பனவாக இல்லை. மேலும் இலக்கியம் என்பது கற்பனை கலக்காது சாத்தியமற்றது. இந்த நிலையில், எங்கள் மன்னர்கள் பற்றி இலக்கியங்கள் சொன்ன நிலையில் அல்லது ஏதோ ஒரு அரிய ஆவணத்தை நாங்கள் புரிந்து கொண்ட நிலையில் தான் எங்கள் மன்னர் புரிதல் உள்ளது. இப்புரிதல் எங்களிற்கு நேரடி அனுபவம் மூலம் கிடைத்த புரிதல் அல்ல.

ஆனால், கடந்த இருதசாப்த்தங்கள் எங்களில் இலட்சக்கணக்கானோர் புலத்தில் வாழ்கிறோம். புலத்தின் நடைமுறைகளை நேரடியாக உணர்கிறோம். ஊரிற்குப் போய் வாழ்வதைக் காட்டிலும் இத்தேசங்களில் நிலைப்பதை நம்மவரும் பலர் விரும்பும் அளவிற்குக் கிரமமான சிந்தனைகள் செயற்பாடுகள் இச்சமூகங்களை எங்களிற்கும் ஏற்புடையனவாய் உருவாக்கியுள்ளன. பிறதேசம் இருந்து வந்து இங்கிருந்த பூர்விக குடிகளை பலத்தால் வென்று நாடமைத்துச் சிலநூற்றாண்டுகளிற்கு முன்னர் தான் பிறந்ததான வட அமெரிக்கா நேற்று வந்த எங்களையும் ஈர்க்கிறது என்பதை நாம் கவனிக்காது விடமுடியாது. ஆனால் மூத்தகுடிகளான நாங்கள் தமிழராய் ஒன்றிணையமுடியாத நிலை நன்றாகத் தெரிகிறது. இந்த அடிப்படை சார்ந்து எழுதப்பட்டதே இப்பதிவு என்றநிலையில், வெற்றி பெற்ற சமூகங்களில் தெரியும் எங்களிடம் இல்லாத விடயங்கள் சார்ந்து தான் சிந்தனை, எழுத்து, விவாதம், கிரமமான செற்பாடு என்பவை முன்மொழியப்படுகின்றன. இத்தகைய கிரமமான செயற்பாடுகளின் வெற்றிக்கான உதாரணங்கள் எமது இன்றைய வாழ்வில் எமது நேரடி அனுபவங்களாக நிறைந்து கிடப்பதால் மன்னர் காலம் பற்றிய ஆராய்ச்சி ஒருவேளை எங்களிற்கு அவசியப்படாது.

எந்த ஒரு கருத்துப்பரிமாற்றத்திலும் கருத்தைக் கூறுவது அரைப்பங்கு என்றால் மற்றைய அரைப்பங்கு அதை உள்வாங்குவது. அவ்வாறான நிலை இல்லாத பட்சத்தில் எந்த விவாதமும் சாத்தியமற்றது என்பதே இங்கு சிலவிவாதங்களை நான் தொடராமைக்குக் காரணம். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு கருத்துப்பரிமாற்றத்திலும் கருத்தைக் கூறுவது அரைப்பங்கு என்றால் மற்றைய அரைப்பங்கு அதை உள்வாங்குவது. அவ்வாறான நிலை இல்லாத பட்சத்தில் எந்த விவாதமும் சாத்தியமற்றது.

உண்மைதான். அநேகர் தற்போது "skimming" முறையைத்தான் வாசிக்கப் பயன்படுத்துகின்றார்கள். எனவே ஒரு சில சொற்றொடர்கள், வசனங்களை வைத்து கூறப்பட்ட விடயத்தைக் கிரகிக்க முயல்கின்றனர். அத்துடன் கருத்துக்களை எல்லோரும் ஒரேமாதிரியாக உள்வாங்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது நிலைக்கு ஏற்ப பொருத்திப் பார்ப்பதால், வெவ்வேறான அர்த்தங்களைக் கற்பிக்கக்கூடும். பேலும் கருத்துக் கூறியவரின் பின்புலத்தை ஆராய்ச்சி செய்யாமல் கருத்தை மட்டும் ஆழமாக புரிந்துகொள்ள முயற்சிப்பது இலகுவான காரியம் அல்ல. இதனால்தான் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுவதில்லை.

தமிழர்களுக்குப் புராண கதைகள் எழுதித்தான் சிலவற்றை விளக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குப் புராண கதைகள் எழுதித்தான் சிலவற்றை விளக்கவேண்டும்!

நாங்கள் அந்த புராணா நாயகன் நாயகிக்கு கோயில் கட்டி அவையளை கீரோவாக்கி வழிபாடு செய்வோம்,அதற்கு விளக்கம் வியாக்கியானம் சொல்ல இன்னுமோருவன்,நெடுக்ஸ் பந்தி பந்தியாக எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

துரோகி என்று சொல்வதால் மாற்றுகருத்துமாணிக்கங்களுக்கு ஏதாவது உளவியல் பாதிப்பு ஏற்படுகின்றதா?அவர்கள் உண்மையிலயே தமிழர்களுக்காக உழைப்பவர்கள் என்றால் ஏன் அந்த பட்டத்தை கண்டு பயப்பட வேண்டும்...புலிகளை 75 % தமிழர்களை தவிர எனையவர்களும் முழு சர்வதேசமும் பயங்கரவாதிகள் என்று தான் சொன்னார்கள் இருந்தும் புலிகள் போராடினார்கள்.....

75% தமிழர்கள் அவர்களை துரோகி என்று சொல்லுவதற்கு என்ன காரணம் என்று அவர்கள் சிந்தித்து பார்த்தார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

75% தமிழர்கள் அவர்களை துரோகி என்று சொல்லுவதற்கு என்ன காரணம் என்று அவர்கள் சிந்தித்து பார்த்தார்களா?

தற்போது 75%க்கும் மேலானவர்கள் ஐ-போன் என்னவென்று தெரியாமலேயே அதிலொன்று தாங்களும் வைத்திருக்குவேண்டும் என்று விரும்புகின்றார்களாம். அது போலவே துரோகி என்றும் காரணம் எதுவுமின்றிச் சொல்லலாம். பலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது 75%க்கும் மேலானவர்கள் ஐ-போன் என்னவென்று தெரியாமலேயே அதிலொன்று தாங்களும் வைத்திருக்குவேண்டும் என்று விரும்புகின்றார்களாம். அது போலவே துரோகி என்றும் காரணம் எதுவுமின்றிச் சொல்லலாம். பலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்தானே!

துரோகி என்பவன் என்றும் துரோகியே, ஒரு மக்கள் போராளி எப்போது வேணும் என்றாலும் துரோகி ஆகிவிட முடியும், ஆனால் துரோகி ஆனவன் எப்போதும் துரோகியே ,அவன் எக்காலத்திலும் ஒரு மக்கள் போராளி ஆக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி என்பவன் என்றும் துரோகியே, ஒரு மக்கள் போராளி எப்போது வேணும் என்றாலும் துரோகி ஆகிவிட முடியும், ஆனால் துரோகி ஆனவன் எப்போதும் துரோகியே ,அவன் எக்காலத்திலும் ஒரு மக்கள் போராளி ஆக முடியாது.

ஒரு கொள்கைக்கு கட்டுப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தவர், எடுத்த சத்தியப் பிரமாணத்தை மீறினால் அதைத் துரோகமாகக் கருதலாம். ஆனால் தனது சிந்தனையை வெளிப்படுத்தும் ஒருவரின் கருத்தைப் பிடிக்காதவர், தனக்குப் பிடிக்காத காரணத்தை மட்டும் வைத்து துரோகி என்று சொல்லமுடியாது.

தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லாத ஒருவரை, அவரின் உண்மையான நிலைப்பாட்டைக் கேட்டறியாமல் அவர் விசுவாசமாக இருக்கச் சாத்தியமில்லையென்று தாங்களாகவே கற்பனை செய்து துரோகத்திற்கான எதுவித அளவுகோல்களையும் பாவிக்காது வெறுமனே பட்டங்கள் கொடுப்பதுதான் தற்போது நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கொள்கைக்கு கட்டுப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தவர், எடுத்த சத்தியப் பிரமாணத்தை மீறினால் அதைத் துரோகமாகக் கருதலாம். ஆனால் தனது சிந்தனையை வெளிப்படுத்தும் ஒருவரின் கருத்தைப் பிடிக்காதவர், தனக்குப் பிடிக்காத காரணத்தை மட்டும் வைத்து துரோகி என்று சொல்லமுடியாது.

தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லாத ஒருவரை, அவரின் உண்மையான நிலைப்பாட்டைக் கேட்டறியாமல் அவர் விசுவாசமாக இருக்கச் சாத்தியமில்லையென்று தாங்களாகவே கற்பனை செய்து துரோகத்திற்கான எதுவித அளவுகோல்களையும் பாவிக்காது வெறுமனே பட்டங்கள் கொடுப்பதுதான் தற்போது நடக்கின்றது.

தமிழ் தேசியத்துக்கு விசுவாசமாக இருக்காதவர்கள் அனைவரையும் மக்களால் துரோகி என நோக்கபடுவதில்லை, தமிழ் தேசியத்துக்கு துரோகம் செய்பவர்களையே தமிழ் சமூகத்தால் துரோகி என கருதபடுகிறது, அது நீங்கள் நான் என, யாரையும் பேதம் பார்பதில்லை,

"யூதாஸ் சில வெள்ளிப்பணத்துக்காக ஜீசசை காட்டி கொடுத்தான், ஜீசஸ் கொல்லபட்ட பின்னர் அவன் மனந்திருந்தி காட்டி கொடுத்தற்காக, கொடுக்க பட்ட வெள்ளிபணத்தை திருப்பி கொடுத்தபோதும், அவர்கள் வாங்கவில்லை, அவற்றை வீசி எறிந்துவிட்டு வந்து மரத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான், தான் செய்த துரோகத்தை தாங்கமுடியாது, ஆனால் இந்த உலகம் அவனை இன்றும் துரோகியாகவே பார்கிறது, அந்த துரோகத்தனம் ஒரு துரோகியின் மனத்தை எவ்வளவு வேதனை படுத்துகிறது என்பதுக்கு நல்ல உதாரணம், யூதாஸின் தற்கொலை. அதனால்தான் துரோகிகளை நாம் துரோகி என்று சொல்லும் போது எல்லாம், அவர்கள் துடிக்கிறார்கள், பதை பதைக்கிறார்கள், வலிந்து வலிந்து பந்தி பந்தியா எழுதுகிறார்கள், தாம் செய்த துரோகத்தனம் அவர்களது மனத்தை எவ்வளவு வேதனை படுத்துகிறது என்பதுக்கு இதுவே நல்ல உதாரனம், அத்துரோகம் யூதாஸை மரனம் வரை அழைத்து சென்றது, எவ்வளவு வருந்தினாலும் வரலாறு துரோகிகளை மன்னிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு விசுவாசமாக இருக்காதவர்கள் அனைவரையும் மக்களால் துரோகி என நோக்கபடுவதில்லை, தமிழ் தேசியத்துக்கு துரோகம் செய்பவர்களையே தமிழ் சமூகத்தால் துரோகி என கருதபடுகிறது, அது நீங்கள் நான் என, யாரையும் பேதம் பார்பதில்லை,

"யூதாஸ் சில வெள்ளீப்பணத்துக்காக ஜீசசை காட்டி கொடுத்தான், சீசஸ் கொல்லபட்ட பின்னர் அவன் மனந்திருந்தி காட்டி கொடுத்தற்காக, கொடுக்க பட்ட வெள்ளிபணத்தை திருப்பி கொடுத்தபோதும், அவர்கள் வாங்கவில்லை, அவற்றை வீசி எறிந்துவிட்டு வந்து மரத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான், தான் செய்த துரோகத்தை தாங்கமுடியாது, ஆனால் இந்த உலகம் அவனை இன்றும் துரோகியாகவே பார்கிறது, அந்த துரோகத்தனம் ஒரு துரோகியின் மனத்தை எவ்வளவு வேதனை படுத்துகிறது என்பதுக்கு நல்ல உதாரணம், யூதாஸின் தற்கொலை. அதனால்தான் துரோகிகளை நாம் துரோகி என்று சொல்லும் போது எல்லாம், அவர்கள் துடிக்கிறார்கள், பதை பதைக்கிறார்கள், வலிந்து வலிந்து பந்தி பந்தியா எழுதுகிறார்கள், தாம் செய்த துரோகத்தனம் அவர்களது மனத்தை எவ்வளவு வேதனை படுத்துகிறது என்பதுக்கு இதுவே நல்ல உதாரனம், அத்துரோகம் யூதாஸை மரனம் வரை அழைத்து சென்றது, எவ்வளவு வருந்தினாலும் வரலாறு துரோகிகளை மன்னிக்காது.

எனக்கு சின்ன வயதில் படித்த "யார் அந்தப் பாவி?" என்ற கதைதான் இப்படியான விவாதங்களில் ஞாபகம் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சின்ன வயதில் படித்த "யார் அந்தப் பாவி?" என்ற கதைதான் இப்படியான விவாதங்களில் ஞாபகம் வருகின்றது.

இதுக்கு உந்த கதை பொருந்தி வாற மாதிரி எனக்கு தெரியவில்லை, அதில் யார் பாவம் செய்யவில்லை என கேட்பார்கள், அனைவரும் ஏதோ ஒரு பாவம் , கடைசி ஒரு எறும்பையாவது நசிச்சு கொண்று இருப்பார்கள், ஆனால் இதில் எல்லோரும் தேசியத்துக்கு எதிராக காட்டி கொடுத்தார்கள் என்று என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை, உங்கட கதைப்படி பாத்தால் தேசிய தலைவரே தேசியத்துக்கு எதிராக காட்டி கொடுத்தவர் என்றுதான் வரும், இது காமடியாக இல்லையா? :icon_idea::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதைப்படி பாத்தால் தேசிய தலைவரே தேசியத்துக்கு எதிராக காட்டி கொடுத்தவர் என்றுதான் வரும், இது காமடியாக இல்லையா? :wub: :wub: :wub:

யார் கண்டார்கள்?

"கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்" :wub:

Link to comment
Share on other sites

நீண்டகாலம் இயக்கத்தில் இருந்த எனது நண்பர் ஒருவர் தமிழரிடம் "உயர்குழாம்" (elite society) இல்லாததுதான் மிகப்பெரிய பலவீனம் என்றார். புலிகள் ஒன்றை ஒருவாக்க முயன்றார்கள், ஆனால் முள்ளிவாய்க்காலில் அழிந்துவிட்டது.

ஏன் அப்படி ஒரு Elite குழாம் வேண்டும் அதுக்கு புலிகள் அனுமதிக்க வேண்டும் என்கிறீர்கள்...?? அதுக்கும் சாதிச்சாயம் பூசி , சாதி வெறியர்கள் எண்டு புலிகளை சுகன் பாணியில் ஒரு பிடி பிடிக்கவோ...??

சரி எல்லாத்தையும் கடந்து ( செயற்கையாக ) அறிவாளிகளை கொண்டதாக ஒரு குலாமை அமைக்க முடியும் எண்டே வைத்துக்கொள்ளுங்கள்... அதுக்குள் ஒரு தலைமை சண்டை க்கு விலக்கு பிடிக்கவே காலம் போதுமானதாக இருக்கும்... புலிகள் தலையீடு என்பது அதுக்குள்ளும் தவிர்க்க முடியாதது ஆகி இருக்கும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.