Jump to content

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாய் வந்து உதவிப்பணத்திலை படிக்கிறதுகளும் தாங்கள் மாணவ விசாவிலைதான் வந்தனாங்களெண்டு கெப்பர் அடிச்ச ஆக்களையும் இன்னும் அடிக்கிற ஆக்களையும் எனக்கு எக்கச்சக்கமாய் தெரியும்.

இண்டைக்கு ஊரிலை எத்தினையோ வீட்டிலை அடுப்பு எரியுறதுக்கு காரணம்...... அகதியள் இஞ்சை இரவுபகல் பாராமல் குளிருக்கையும் கக்கூஸ் கழுவி சம்பாதிச்ச காசுதான்.

அதுவும் கேவலம் ஒரு அகதித்தமிழன் தன்ரை வாயைவயித்தை கட்டி ஊர்பேர் தெரியாத உறவுகளுக்கெல்லாம் பொறுக்கிபொறுக்கி குடுக்கிறானே இதெல்லாம்.....அட தூ....இதை விளங்கிக்கொள்ளாத மாணவசமூகம்?

பந்திபந்தியாய் எழுதினாப்போலை...எழுதுறதெல்லாம் சரியெண்டு ஒருசில ஜென்மங்கள் நினைக்குதுகள்...குலைக்கிற நாய் கடிக்காது

இனிவரும் காலங்களில் மட்டுறுப்பினரிடம் அதிக வெட்டுவாங்கும் உறுப்பினர் நான்.முடியுமாயின் இனிமேல் அகதிதமிழனைப்பற்றி கேவலமாக எழுதுங்கள் பார்ப்போம் பார்க்கலாம்!

மைக்கு எபம்.தமிழிச்சு

Link to comment
Share on other sites

  • Replies 271
  • Created
  • Last Reply

கு.சாண்ணா கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை என்ற முதுமொழி இருக்குது. அதுமட்டுமன்றி சபையறிந்து பழகோனும் என்று சொல்லி இருக்குது.

வெளிநாடு என்று சொல்லி.. பந்தி பந்தியா குந்தி இருந்து சாப்பிடுவம்.. ஆனால் அது அடுத்தவன் சிந்திய இரத்ததால் வந்த பிச்சை என்றதை மறந்திடுவம். எங்களை நியாயப்படுத்த அடுத்தவனை திட்டுவம். ஏன்னா நாங்க எப்பவும் செய்யுறது எங்களுக்கு சரியே.

கள்ளுக் கொட்டிலல வந்து கல்விக் கூடத்துக் கதை கதைக்கிறது.. தப்புத்தான்.

கஸ்மாளம் ரேஞ்சில கதைச்சா தான்... அகதித் தமிழனுக்கு இனிக்குமோ என்னமோ...!! :D :D

கு..சா கூல்டவுண் எங்களின்ரை யாழ்ப்பாண சமூகத்தை இன்னும் புரிந்:து கொள்ளாத அப்பாவியாய் இருக்கிறியே. அடப்பாவி இப்படித்தான் நாங்கள் வீரம் விவேகம் விடுதலை எண்டு எழுதுவம். அவும் இங்கை வெளிநாட்டிலையிருந்து. அதுக்கை அகதியெண்டும் சொல்லமாட்டம் அது கேவலம். வேலைக்கு வந்ததெண்டும் சொல்லமாட்டம் கௌரவ குறைச்சல்.. நாங்கள் படித்த புத்திமான்கள்(புள்ளிமான் அல்ல) நாங்கள் அறிவுரை மட்டும்தான் சொல்லுவம் கேக்கிற கேனையன்கள் மட்டும்தான் நீங்கள். அதுதான் உங்கடை வேலை :D :D :D

எல்லாரும் நினைப்பினம் நீங்கள் கு சாமியை வைச்சு நெடுக்கால போனவரை குத்துவது போல ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால்? என்னை எல்லாம் ஒரு மனிசர் எண்டு கன்னகில எடுக்கிறிங்களோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சாண்ணா கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை என்ற முதுமொழி இருக்குது. அதுமட்டுமன்றி சபையறிந்து பழகோனும் என்று சொல்லி இருக்குது.

வெளிநாடு என்று சொல்லி.. பந்தி பந்தியா குந்தி இருந்து சாப்பிடுவம்.. ஆனால் அது அடுத்தவன் சிந்திய இரத்ததால் வந்த பிச்சை என்றதை மறந்திடுவம். எங்களை நியாயப்படுத்த அடுத்தவனை திட்டுவம். ஏன்னா நாங்க எப்பவும் செய்யுறது எங்களுக்கு சரியே.

கள்ளுக் கொட்டிலல வந்து கல்விக் கூடத்துக் கதை கதைக்கிறது.. தப்புத்தான்.

கஸ்மாளம் ரேஞ்சில கதைச்சா தான்... அகதித் தமிழனுக்கு இனிக்குமோ என்னமோ...!! :D :D

என்னராசா? நான் ஏதோ கதைக்க...நீங்கள் என்னவோ சொல்லுறியள்?????

என்னை விட பயங்கரவெறி போலை கிடக்கு :D

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணா,

உங்கள் சுயபுராணம் கண்டு நான் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன். இவ்வளவு நாளும் நீங்கள் எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்புக்கு லண்டனுக்கு கொலஸ்ப்பில் வந்ததாக நான் நினைத்தேன். முதலில் மன்னிக்கவும்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், அகதியாவந்தவன் எல்லாம் கோழிகடையிலும் பெற்றோல் செட்டிலையும் வேலை செய்து கொண்டிருக்கவில்லை. அவர்களும் படிச்சு உங்களை விட பெரிய படிப்பெல்லாம் படிச்சு இங்கே பெரிய வேலைகளிலும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதே வேளை உங்களை மாதிரி படிக்க வந்தவங்கள் கோழிகடையில் நிற்பதையும் நான் உதாரணம் காட்ட முடியும்.

நீங்க மட்டும் தான் அங்கே போரினால் கஷ்டப்பட்டீங்கள் என்று மூக்கால் அழாதீங்க. இரண்டாயிரத்துக்கு பிறகு இங்கு வந்தவங்களுக்கும், ஏன் அதற்கு முந்தல் வந்தவங்களுக்கும் உங்களை விட நிறைய சோக கதை இருக்கும், ஆனால் உங்கள மாதிரி ஓட்டை வாய் இல்லை அவர்களுக்கு.

படிக்க வந்துபோட்டு ரவுடியாகவும், பெண்கள் பார்க்கவும் அலையும் பெடியங்களை நீங்கள் பார்க்கவில்லையா.? கண்ணாடி முன் நின்று மனசாட்சியுடன் பேசி விட்டு கருத்து எழுத வாருங்கள்...

அங்கே நடக்கும் படுகொலைக்கு எதிராக லண்டனில் கூடின ஒரு லட்சத்துக்கும் மேலான மக்களை உங்களை மாதிரி சிங்களவன் கொலஸ்ப்பில் அனுப்பி வைச்சவனா.?

அங்கே புலிகள் போராட இங்கே காசு கொடுத்த மக்கள் எல்லாரும் உங்கள மாதிரி பி எச் டி படிக்க வந்தவர்களா.?

நீங்கள் அகதி கேட்காமல், புலிகளை காட்டி கொடுக்காமல்,நாட்டுக்காகவும் புலிகளுக்காகவும் செய்த சாதனையை பாராட்டி நாங்கள் எல்லாருமாக சேர்ந்து ஒரு விருது வழங்கும் வைபவம் ஒழுங்கு செய்தால் நீங்கள் கலந்து கொள்ளுவீங்களா.?

ஒரு தமிழன் படித்து உயர்ந்த நிலையில் இருந்தால் பார்த்து சந்தோசப்படுகிறவர்கள் நாங்களாத்தான் இருப்போம்... முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்..

மற்றவனுக்கு மரியாதை குடுக்கதெரியாவர் நீங்களெல்லம் படித்தவர்கள். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லுவார்கள். கறிக்கு மட்டுமல்ல எதுக்குமே உதாவது என்று இன்றைக்கு தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படித்த புத்திமான்கள்(புள்ளிமான் அல்ல) நாங்கள் அறிவுரை மட்டும்தான் சொல்லுவம் கேக்கிற கேனையன்கள் மட்டும்தான் நீங்கள். அதுதான் உங்கடை வேலை :D :D :D

படிச்சா படிப்பறிவு வளருமே தவிர புத்திமான் ஆக முடியாது. இப்போ நாலு தகவல்களை ஊரடிபட எடுத்திட்டு ஊடக அவியலாளர் என்று சொல்லுறது போன்று படிப்பை வைச்சுக் கொண்டு புத்திமான் பலவான் என்பது பலவீனமானது.

படிப்பு பாடம் தான் சொல்லித் தருமே அன்றி... புத்திமானோ.. புள்ளிமானோ ஆக்காது. அப்படி தமக்குத் தாமே முடிசூடிக் கொள்வது சிலருக்கு பெருமையாக இருக்கலாம்.. இப்போ ஊடக அவலியாளர்கள் தாமே தமக்கு முடிசூடிக் கொள்வது போல..! :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா,

உங்கள் சுயபுராணம் கண்டு நான் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன். இவ்வளவு நாளும் நீங்கள் எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்புக்கு லண்டனுக்கு கொலஸ்ப்பில் வந்ததாக நான் நினைத்தேன். முதலில் மன்னிக்கவும்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், அகதியாவந்தவன் எல்லாம் கோழிகடையிலும் பெற்றோல் செட்டிலையும் வேலை செய்து கொண்டிருக்கவில்லை. அவர்களும் படிச்சு உங்களை விட பெரிய படிப்பெல்லாம் படிச்சு இங்கே பெரிய வேலைகளிலும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதே வேளை உங்களை மாதிரி படிக்க வந்தவங்கள் கோழிகடையில் நிற்பதையும் நான் உதாரணம் காட்ட முடியும்.

நீங்க மட்டும் தான் அங்கே போரினால் கஷ்டப்பட்டீங்கள் என்று மூக்கால் அழாதீங்க. இரண்டாயிரத்துக்கு பிறகு இங்கு வந்தவங்களுக்கும், ஏன் அதற்கு முந்தல் வந்தவங்களுக்கும் உங்களை விட நிறைய சோக கதை இருக்கும், ஆனால் உங்கள மாதிரி ஓட்டை வாய் இல்லை அவர்களுக்கு.

படிக்க வந்துபோட்டு ரவுடியாகவும், பெண்கள் பார்க்கவும் அலையும் பெடியங்களை நீங்கள் பார்க்கவில்லையா.? கண்ணாடி முன் நின்று மனசாட்சியுடன் பேசி விட்டு கருத்து எழுத வாருங்கள்...

அங்கே நடக்கும் படுகொலைக்கு எதிராக லண்டனில் கூடின ஒரு லட்சத்துக்கும் மேலான மக்களை உங்களை மாதிரி சிங்களவன் கொலஸ்ப்பில் அனுப்பி வைச்சவனா.?

அங்கே புலிகள் போராட இங்கே காசு கொடுத்த மக்கள் எல்லாரும் உங்கள மாதிரி பி எச் டி படிக்க வந்தவர்களா.?

நீங்கள் அகதி கேட்காமல், புலிகளை காட்டி கொடுக்காமல்,நாட்டுக்காகவும் புலிகளுக்காகவும் செய்த சாதனையை பாராட்டி நாங்கள் எல்லாருமாக சேர்ந்து ஒரு விருது வழங்கும் வைபவம் ஒழுங்கு செய்தால் நீங்கள் கலந்து கொள்ளுவீங்களா.?

ஒரு தமிழன் படித்து உயர்ந்த நிலையில் இருந்தால் பார்த்து சந்தோசப்படுகிறவர்கள் நாங்களாத்தான் இருப்போம்... முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்..

மற்றவனுக்கு மரியாதை குடுக்கதெரியாவர் நீங்களெல்லம் படித்தவர்கள். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லுவார்கள். கறிக்கு மட்டுமல்ல எதுக்குமே உதாவது என்று இன்றைக்கு தெரிந்து கொண்டேன்.

சுய சரிதை எழுதினால்.. அதை பாராட்டுவீர்கள். அதையே திட்ட வேண்டின்.. சுயபுராணம் என்றும் சொல்வீர்கள்.

அகதியா வந்து இங்கு படித்து பெரிய பதவிகளில்.. என்ன வெஸ்டமினிஸ்டரில.. மினிஸ்டரா இருக்கினமோ...???! சும்மா விடாதேங்கோ அம்மாடி கதை. நமக்கு நமக்கு அளந்துதான் படி அளக்கிறாங்க..அதுக்குள்ள தான் நாங்கள். எங்களுக்க எழுதி பெரிசா காட்டிக்க முனையாதேங்கோ..???!

இன்றும் எமது சமூகத்திற்கு ஒரு மதிப்பு இருக்கென்றால் அது அகதியாக வந்தவர்களால் அல்ல. படித்தவர்களால் மட்டுமே. அகதி என்று வந்து ஊரைக் கொள்ளை அடிச்சு.. ஏன் சொந்த சமூகத்தையே அச்சுறுத்தி கொள்ளை கொலை செய்யும் நிலை வளர்ந்திருக்குது. அதற்கும் உங்கள் போன்றோரின் இந்த குருட்டுத்தனமான வாதம் தான் காரணம்.

அங்கு புலிகள் போராட நீங்கள் காசு கொடுத்தீர்களா.. அல்லது அங்கு புலிகள் போராட நீங்கள் உங்கள் குடும்பங்களை வரவழைக்க காசு கொடுத்தீர்களா..????! அங்கு போராடி மாண்டது மண்ணின் மறவர்கள். அவர்களின் உயிர் இழப்பில் அகதி அந்தஸ்து வாங்கினது நீங்கள். உங்களின் பணம்.. அவர்களின் இழந்து போன ஒரு உயிரை மீட்க உதவி இருக்குமா..???! ஆனால் நீங்களோ குடும்பம் குடும்பமாக உங்கள் உறவுகளுக்கு அகதி அந்தஸ்தும்.. வெளிநாட்டு வதிவிடமும் வாங்கி இருப்பீர்கள்..! அதற்கான முதலீடே புலிகளுக்கு போராட என்று நீங்கள் கொடுத்த பிச்சை.

இன்றைக்கு பிரித்தானியாவைப் பொறுத்தவரை 300000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றால்.. அதில் பாதிப்பேர் வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து அங்கு அகதி அந்தஸ்துப் பெற்று பின்னர் கொள்ளையடிக்க பிரித்தானியாவுக்குள் புகுந்தவர்கள். அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் கிட்டத்தட்ட லண்டனில் அனைத்து கவுன்சில்களுக்கும் தெரியும். இந்த நிலையை உருவாக்கியது.. உங்களைப் போன்ற இந்தக் குருட்டுத்தனமான வாதங்களை முன் வைப்பவர்களே.

போரால் பாதிக்கப்பட்டதற்காக நாம் மூக்கால் அழுதிருந்தால்.. உங்களைப் போல அகதி என்ற போர்வையில் சுகபோகம் தேடி ஓடி வந்திருப்பம். ஆனால் நாம் போரை எதிர்கொண்டு அந்த மண்ணிலேயே வாழ்ந்தோம். இறுதிவரை போரை போராட்டத்தைக் காரணம் காட்டி ஓடி வரவில்லை. அதுதான் வேறுபாடு. உங்களுக்கும் எங்களுக்கும்.

நிச்சயம் மதிப்போம். மதிக்க வேண்டிய மனிதர்களை மதிக்கலாம். ஆனால் மனித உருவில் அலையும் சுயநலப் பிசாசுகளை.. பிணங்களை வைத்து தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க விளையும் கொடூர ஜந்துகளை மதிக்கக் கேட்பது அபந்தம். அறிவிலித்தனம். :D

Link to comment
Share on other sites

இப்போதுதான் நிலாமதி அக்கா மேலே இணைத்த கதையை முழுமையாக வாசித்தேன். இளைய அப்துல்லா தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அனுபவம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஊரில் வாழ்ந்தால்கூட எல்லாருக்கும் ராஜபோக வாழ்க்கை என்று சொல்வதற்கு இல்லை. நாம் கஸ்டப்பட்டு முயற்சி செய்தாலே எங்கு சென்றாலும் முன்னேற முடியும். வரட்டு கெளரவம் பார்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. அத்துடன், வரட்டு கெளரவம் மூலம் பயன் ஏதும் இல்லை. ஊரிலேயே வெளியாரை வரவேற்பது இல்லை. யாரோ பிறத்தியான் என்றுதான் கூறுவோம். இப்படியான நிலையில் லண்டனில் வரவேற்பை எதிர்பார்ப்பது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இங்கே நீங்கள் எப்படி கெட்டிக்கார தனமாக பாஸ் பண்ணி ஹொலசிப் வந்தீர்கள் என்டு ஆராயவில்லை...சிங்களவன் உங்களை படிக்க அனுப்பி வைத்ததாக எழுதினீர்கள் அப்படி என்டால் உங்களை பொறுத்த சிங்களவன் ரொம்ப நல்லவனாய் இருக்க வேண்டுமே!...நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படியுங்கள்.படிப்பு முடித்து விட்டு ஊருக்குப் போக விருப்பம் இல்லா விட்டாலும் பரவாயில்லை இங்கேயே இருங்கள் அது எமக்கு தேவையில்லாத விசயம் ஆனால் அசேலம் அடிப்பவர்களை குறை சொல்வதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் ஏற்கனவே எழுதின மாதிரி புலியை சாட்டி அசேலம் அடித்தவர்கள் குறைவு.அரசையும்,ஆமியையும் தான் பெரும்பாலும் குற்றம் சாட்டி இருப்பார்கள்.அவர்கள் புலம் பெயர்ந்து வந்ததால் உங்களுக்கு என்ன குறைந்து போய் விட்டது?...உங்களை புலிகள் போய் படி என விட்ட மாதிரித் தான் அவர்களையும் விட்டார்கள்...ஏன் புலிகள் சொன்னார்களா? அகதி அந்தஸ்து கோர வேண்டாம் என?..ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் மனச்சாட்சிக்கு உட்பட்டு உண்மை சொல்லுங்கள் புலிகள் மாணவ விசாவில் செல்பவர்களையும்,தொழில் விசாவில் செல்பவர்களையும் மாத்திரம் புலம் பெயர்ந்து போக அனுமதித்து இருந்தால் போராட்டம் இந்தளவிற்கு வளர்ந்திருக்குமா?...எல்லோரும் ஆயுதம் தூக்கி போராடினால் மட்டும் காணாது போராடுவதற்கு ஆயுதமும் வேண்டும் :D

நீங்கள் சமுக அந்தஸ்து என்டு எதை வைத்து சொல்கிறீர்கள் என எனக்குப் புரியவில்லை!உங்களை எப்படி புலம் பெயர் அரசோ மக்களோ பார்க்கிறார்களோ அதே மாதிரித் தான் அகதியாய் வந்தவர்களையும் பார்க்கிறார்கள்.நீங்கள் படிக்க வந்தவர்கள் படித்து விட்டு போய் விடுவீர்கள் என்டு உங்களை இங்கே தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கவில்லை...படிக்க என இங்கு வந்தவர்கள் தான் தங்கள் அறிவை வைத்துக் கொண்டு கள்ளக் கிரடிட் போன்ற கள்ளமான,சுலபமாக பணம் சம்பாதிக்கும் வேலைகளை செய்பவர்கள்.இவர்களால் தான் உண்மையில் தமிழருக்கு கெட்ட பேர்.2009ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்த போது உங்கள மாதிரி படிக்க என மாணவ விசாவில் வந்த எத்தனை பேர் கலந்து கொண்டீர்கள்?...அதை முன் நின்று நடத்தியவர்கள் நீங்கள் ஏளனமாய் பார்க்கும் அசேலம் அடித்தவர்களின் இங்கே பிறந்த பிள்ளைகள் தான்...போராட்டத்திற்கு காசு கொடுக்கிறது என்டாலும் இந்த அசேலம் அடித்த மக்கள் தான்,ஆர்ப்பாட்டம் செய்யுறதும் இவர்கள் தான் ஏன் ஆயுதம் தூக்குவது கூட இந்த அசேலம் அடித்த மக்கள் தான்...அசேலம் அடித்தவர்கள தங்களால் இயன்றதைப் போராட்டத்திற்கு செய்தார்கள் ஆனால் உங்களைப் போல படிக்க வந்தவர்கள் என்ன செய்தார்கள் :D

இதில் ஏன் பெண்களை தேவை இல்லாமல் இழுத்து இருக்கிறீர்களோ தெரியவில்லை?...அவர்கள் திருமணம் செய்து வந்தால் உங்களுக்கு என்ன?...ஊரில் இருக்கும் பெண்கள் திருமணம் செய்து இங்கே வரக் கூடாதா அவர்களும் போய் ஆயுதம் தூக்கி சாகவேனும் அல்லது அங்கே போரினால்,ஆமியின் கைதினால் சிக்குப்பட்டு சாக வேண்டும் நீங்கள் இங்கே இருந்து படிக்க வேண்டும்...பெண்களை இதில் விட்டு விட்டு பொதுவான உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...இன்றும் கூட ஊரில் படித்த மாப்பிள்ளைமார்[வைத்தியர்,பொறியலாளர்]புலம் பெயர் நாட்டுக்கு ஏதோ ஒரு விதத்தில் வரத் தான் பார்க்கிறார்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது வாதத்தை பார்த்தால்

பிரதேசவாதம் பிறதேசவாதம் (நன்றி கிருபன்)

நன்றி தீபம் தொலைக்காட்சியின் "பிடிக்கல பிடிக்கல" சாம் பிரதீபனுக்குப் போகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் ஊர் திரும்புவன். எனது நண்பர்கள் பலர் இப்போதும் பல துறைகளில் அங்கு தான் வேலை செய்கின்றனர்.. ஊரோடு இப்போதும் வைத்தியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஓடி வரத்தெரியாது என்றில்லை. பலர் அங்கும் படிக்கின்றனர். உண்மையில் ஊரை விட்டு அகதி ஓடி வந்த அரைகுறையளும் அவர்களின் தங்கி வாழ வந்ததுகள் மட்டும் தான் வெளிநாட்டுக்கு ஓடி வந்து தேசத்தின் துயரை காட்டி பிழைச்சிருக்குது. :D

நிச்சயமாக ஊர் திரும்புவீர்கள் என்று தெரியும். திரும்பும்போது பிரித்தானிய நிரந்தர வதிவுட உரிமையை அல்லது பிரித்தானியப் பிரிஜாயுரிமையையும் எடுத்துவிட்டுச் செல்லுங்கள் (மூன்று துறைகளில் படித்திருப்பதால் கட்டாயம் எட்டு - ஒன்பது வருடங்கள் தாண்டியிருக்கும், பத்து வருடங்களைத் தாண்ட பி.எச்.டி உதவும் என்பது தெரிந்திருக்கும்தானே!)

என்னுடைய நண்பன் ஒருவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்து "ஸ்கொலசிப்" இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு பி.எச்.டி செய்ய வந்து மூன்று வருடத்திற்குள் பி.எச்.டி முடித்துவிட்டு ஊருக்குப் போனான். அங்குள்ள சிங்களப் பேராசிரியர்களுடன் ஒத்துவராததால், மீண்டும் இங்கு வந்து ஒரு பன்னாட்டுக் கம்பனியில் ஆராய்ச்சியாளாராக உள்ளான். நெடுக்குவிற்கு கொழும்புப் பேராசியர்கள் ஒத்துவராவிட்டால் எனது நண்பனைப் போன்று திரும்பவர முயற்சிக்கவேண்டும். பல வருடங்கள் இருந்து பழகின இடம்தானே. எனவே இங்கிலாந்து வாழ்க்கை கட்டாயம் பிடிக்கும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாய் வந்து உதவிப்பணத்திலை படிக்கிறதுகளும் தாங்கள் மாணவ விசாவிலைதான் வந்தனாங்களெண்டு கெப்பர் அடிச்ச ஆக்களையும் இன்னும் அடிக்கிற ஆக்களையும் எனக்கு எக்கச்சக்கமாய் தெரியும்.

இண்டைக்கு ஊரிலை எத்தினையோ வீட்டிலை அடுப்பு எரியுறதுக்கு காரணம்...... அகதியள் இஞ்சை இரவுபகல் பாராமல் குளிருக்கையும் கக்கூஸ் கழுவி சம்பாதிச்ச காசுதான்.

அதுவும் கேவலம் ஒரு அகதித்தமிழன் தன்ரை வாயைவயித்தை கட்டி ஊர்பேர் தெரியாத உறவுகளுக்கெல்லாம் பொறுக்கிபொறுக்கி குடுக்கிறானே இதெல்லாம்.....அட தூ....இதை விளங்கிக்கொள்ளாத மாணவசமூகம்?

ஊரில் போன் அடித்துச் "சொப்பிங்" செய்த குடும்பத்தில் இருந்த வந்தவருக்கு ஊரில் இருந்தவர்கள் பலரே இழிவாகத் தெரிந்திருப்பார்கள். எனவே அகதித் தமிழனை இழிவாகக் காண்பது அவருடைய குற்றம் இல்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு பிரித்தானியாவைப் பொறுத்தவரை 300000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றால்.. அதில் பாதிப்பேர் வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து அங்கு அகதி அந்தஸ்துப் பெற்று பின்னர் கொள்ளையடிக்க பிரித்தானியாவுக்குள் புகுந்தவர்கள். அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் கிட்டத்தட்ட லண்டனில் அனைத்து கவுன்சில்களுக்கும் தெரியும். இந்த நிலையை உருவாக்கியது.. உங்களைப் போன்ற இந்தக் குருட்டுத்தனமான வாதங்களை முன் வைப்பவர்களே.

நெடுக்கர் இன்னமும் இலண்டன் சிற்றி அல்லது டொக்லாண்ட் பகுதி பக்கம் "ரஷ் அவர்" நேரம் போகவில்லை என்று தெரிகின்றது. எத்தனையோ தமிழர்கள் (சிலரைத் தமிழர் என்று மட்டுக்கட்டுவது கடினம்) மிகப் பெரிய நிறுவனங்களில் சீனியராக வேலை செய்கின்றார்கள். இவர்கள் எல்லாம் "விசா"வில் வந்துதான் படித்தார்கள் என்றா சொல்ல முடியும்?

இங்கிலாந்தில் அகதியாக வந்து வளமான வாழ்வில் இருக்கும் தமிழரைப் பார்த்து பொறாமைப்படும் கருத்துக்களாகத்தான் நெடுக்கின் கருத்துக்கள் உள்ளன. கஷ்டப்பட்டு ஒருவன் முன்னுக்குவந்தால், அதைப் பெருமையாக எண்ணுவதை விடுத்து, முன்னுக்கு வந்தவன் எல்லோரும் கள்ளவழியால்தான் முன்னுக்கு வந்தார்கள் என்ற "பார்வை" வெறும் பொறாமைதான்.

Link to comment
Share on other sites

அங்கு புலிகள் போராட நீங்கள் காசு கொடுத்தீர்களா.. அல்லது அங்கு புலிகள் போராட நீங்கள் உங்கள் குடும்பங்களை வரவழைக்க காசு கொடுத்தீர்களா..????! அங்கு போராடி மாண்டது மண்ணின் மறவர்கள். அவர்களின் உயிர் இழப்பில் அகதி அந்தஸ்து வாங்கினது நீங்கள். உங்களின் பணம்.. அவர்களின் இழந்து போன ஒரு உயிரை மீட்க உதவி இருக்குமா..???! ஆனால் நீங்களோ குடும்பம் குடும்பமாக உங்கள் உறவுகளுக்கு அகதி அந்தஸ்தும்.. வெளிநாட்டு வதிவிடமும் வாங்கி இருப்பீர்கள்..! அதற்கான முதலீடே புலிகளுக்கு போராட என்று நீங்கள் கொடுத்த பிச்சை.

நெடுக்கண்ணா,

நாங்கள் புலிகளுக்கு காசு கொடுத்தோமா..? இல்லையா ? அல்லது எங்கள் குடும்ப உறவுகளை வரவழைக்கவும் காசு கொடுத்தோமா இல்லையா என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை என்ன..??

நீங்கள் தான் இப்போ புலிகளின் நிதி பொறுப்பாளாரா.?? காசை கொடுத்துவிட்டு நாங்கள் தம்பட்டம் அடிக்க நாங்கள் ஒன்றும் உங்களைபோன்ற ஆட்கள் இல்லை என்று உங்களுக்கு தெரியுமா.??

சரி புலிகள் அங்கு போராட கொழும்பில் வந்து ஒளிச்ச எலிகள் எல்லாம், இன்றைக்கு புலிகளை பற்றி பேச வந்துவிட்டுகள்.... இதை தான் கலி காலம் என்று சொல்லுவார்களோ..??

ஒருவரை பற்றிப்பேச முதல் அவர்களின் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு பேசுவது நல்லது நெடுக்கண்ணா..

நான் பகிரங்கமான சவாலுக்கு தயார். நாங்கள் புலிகளுக்கு பங்களித்ததை நிரூபித்தால், நீங்கள் உடனே இந்த நாட்டை விட்டு வெளியேறி அங்கே போய் மக்களுக்கு சேவை செய்ய தயாரா ..??

அப்படி தயார் என்றால் தொடர்ந்து பதில் எழுதவும் இல்லை.. இல்லையென்றால் பேசாமல் போய் வேறு வேலையை பாருங்கள்

இப்போ தெரிகிறது ஏன் இவ்வளவு போராடியும் எங்களுக்கு நாடு கிடைக்கவில்லை என்று. உங்களைப்போல ஆட்கள் இருந்தால் அது எண்டைக்குமே சாத்தியமே இல்லை..

பொய்யை 100தடவை உண்மை போல் உரைத்தாலும் பொய் பொய்தான்.... :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்தாளுக்கு ஏகப்பட்ட காச்சல்.எல்லாருமா சேர்ந்து கல்லெறியாதையுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர் இன்னமும் இலண்டன் சிற்றி அல்லது டொக்லாண்ட் பகுதி பக்கம் "ரஷ் அவர்" நேரம் போகவில்லை என்று தெரிகின்றது. எத்தனையோ தமிழர்கள் (சிலரைத் தமிழர் என்று மட்டுக்கட்டுவது கடினம்) மிகப் பெரிய நிறுவனங்களில் சீனியராக வேலை செய்கின்றார்கள். இவர்கள் எல்லாம் "விசா"வில் வந்துதான் படித்தார்கள் என்றா சொல்ல முடியும்?

இங்கிலாந்தில் அகதியாக வந்து வளமான வாழ்வில் இருக்கும் தமிழரைப் பார்த்து பொறாமைப்படும் கருத்துக்களாகத்தான் நெடுக்கின் கருத்துக்கள் உள்ளன. கஷ்டப்பட்டு ஒருவன் முன்னுக்குவந்தால், அதைப் பெருமையாக எண்ணுவதை விடுத்து, முன்னுக்கு வந்தவன் எல்லோரும் கள்ளவழியால்தான் முன்னுக்கு வந்தார்கள் என்ற "பார்வை" வெறும் பொறாமைதான்.

இது நெ இல் மட்டும் உள்ள பிழையல்ல, பலரில் உள்ளது. சிலோன் இல் படித்தவர்கள்தான் படித்தவர்கள், மர்ரைவர்கள்/ மற்றைய தமிழர்கள் அரைகுறை என்ற மனப்பாங்கு. இது சிந்தித்து வருவதல்ல, யாழ்பாணத்தில் இருந்து வந்தால் இப்படித்தான். நான் இங்குள்ள USA உள்ள நல்ல நிலையில் உள்ள தமிழர் ஒருவரை சில காலத்திர்ற்கு முன்பு சந்தித்தேன், சொன்னார், "பயப்பிடாமல் கதைக்கவேன்ட்டும், இங்கே உள்ள ஆக்கள் எல்லாம் சும்மா தெரிஞ்ச்சு போல கதைப்பினம் அப்படியில்லை, ஒரு சாம்பலும் தெரியாது, கதைச்ச சரி, ஆன அப்படி கதைக்கிறது படிக்கவேணும் " உண்மையில் அவர் எனக்கு சொன்னது 2 விடயங்கள் , இங்கே உள்ளவர்கள் போல கதைக்க வேண்டும், மற்றது அதுக்கு படிக்க வேண்டும். இங்கே உள்ளவர்கள் சும்மா கதைக்கிறது என்பது "யாழ்ப்பாணத்து குணம் - அது பிழையென்று தெரிந்தும் 20 - 30 வருடம் கழிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கும் யம்பம்.

மற்றது வெளிநாடுகளில் ஒவ்வொருவரினது வாழ்க்கை முறை வித்தியாசமானது, ஒருவரது கேஸ் 6 மாதத்தில் முடியும், இன்னுமொருவரினது 10 வருடம் கடந்தும் இழுபடும். அந்த நேரத்தில் அந்த 10 வருடமும் சிலோனில் படித்தவர்கள், படித்தவர்கள் தான், அவர்களையும் 10 வருடமாக கஸ்ரபடுவவர்களையும் ஒப்பிட முடியாது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்யும் எல்லாப் பிழைகளும் எல்லோரையும்தான் பதிக்கிறது. இலங்கையில் மயக்க மருந்து கொடுக்கும் (தமிழ்) டாக்டர்கள் மிகக்குறைவு, காரணம் அந்த ட்ரைனிங் உள்ளவர்களுக்கு இங்கு வேலை எடுப்பது சுகம், மேல் படிப்பிற்காக இங்கே வருவார்கள் திரும்பி போவது குறைவு/இல்லை . இவர்கள் திரும்பி போகாதால் அரசாங்கமும் அதை உக்குவிபதில்லை..ஒரு நச்சு வட்டமாய் உள்ளது..

தமிழர்களில் ஸ்கில் மிக்ராதியன் அல்லது வெளிநாட்டு புலமை பாரிஸில் என்பது, கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். சமீபகாலமாக கனடாவிற்கு சிலர்/ பலர் வந்தார்கள், சிலர் திரும்பி போய்விட்டார்கள்...யாழ்ப்பாணத்தவர்களின் அதி உச்ச புலமை பரிசில், புலி இருக்கேக்க, A L பாஸ் பண்ணி பாஸ் எடுத்து கொழும்பு சேரியில் வாழுவது..இப்ப என்னவோ தெரியாது... கொழும்பு பிரமிப்பு அடங்குவதர்ற்குல்லேயே 2 இயர் முடிந்து விடும்... பிறகு என்ன அங்கேயுள்ள ஓரலை பார்த்து கலியாணம் கட்டி (பொடியள்) செட்டிலே ஆக, மற்றைவை பார்த்து கார்டு உள்ளக்க்காயல் பார்த்து கலியாணம் கட்டி, சிங்கே வந்து திரும்ப சோதினை எடுத்து, நம்பிக்கைஓடு எதிர்காலத்தை எதிபாகிரார்கள்..தங்கள் பிள்ளைகள் இங்கே சாதிக்கும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வருந்தத்தக்க வகையில் இந்த திரி செல்கிறது

எமக்குள் எத்தனை முகங்கள்

எத்தனை வகைகள்

எத்தனை பிரிவினைகள்

ஒரு கொடுமைக்காறனிடமிருந்து தப்பிக்க ஓடிய மக்கள் எவ்வளவு இன்னல்களுக்கு முகம் கொடுத்தார்கள்

எப்படி வாழ்ந்தார்கள்

தமது மண்ணுக்கு என்ன செய்தார்கள்

எல்லாவற்றையும் தாண்டி எப்படி உயர்ந்தார்கள்

இன்று என்ன நிலையிலிருக்கிறார்கள் (பிரான்சில் லா சப்பலில் சின்ன யாழ்ப்பாணம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு பகுதியை நிறுவி அங்கு வர்த்தக சங்கம்ஒன்றையும் நிர்வகித்து அதன்மூலம் தாயகத்தின் தேவைகளுக்கு கொடுத்த கோடிக்கணக்கான உதவிகள் நான் கண்டவை)

இவற்றையெல்லாம் எடுத்தெறிந்து....

படிப்பதால் மட்டுமே மரியாதையும் கௌரவமும்கிடைப்பதாக சொல்வதும் மார்தட்டுவதும் அத்துடன் மற்றவர்களை

இழிபிறவிகளாகப்பார்த்து கொக்கரிப்பதும் எமது இனத்துக்கு பிடித்த கேடு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

இன்றையநிலையில் போராட்டமா படிப்பா முக்கியம் என்று கேட்டால் போராட்டம்தானே முக்கியம். அப்புறம் பிரித்தானியாவில் என்ன ஆயுதக்கிடங்கையா கிண்டுகின்றீர்கள்.....?

என்ன படித்தோம் எவ்வளவு பணம்வைத்திருந்தோம் எவ்வளவு ஆட்டம்போட்டோம் என்பது முக்கியமில்லை

இருக்கும்போது மக்களை நேசித்தோமா....

அந்த மக்களின் மனங்களில் வாழ்ந்தோமா

அந்த மக்கள் உயிர் வாழ ஏதாவது செய்தோமா என்பதுதான் முக்கியம்.

மக்களை நேசிப்பது என்பது அவர்களைவிட நான் மேலானவன் என்று சொல்வதில் இல்லை. அந்த மக்களுடன் நானும் இருந்தேன் என்பதில்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு சில தரவுகளைத்தந்திருக்கிறது

அதன்படி படித்தவர்களிடம் தமிழன் ஏமாந்தவை அதிகம்

சேர் பொன் ராமநாதனிலிருந்து ஜீ ஜீ பொன்னம்பலம்

அதை அடுத்து

பஞ்சலிங்கங்களிலிருந்து நீலன் திருச்செல்வம் வரை

தமிழகத்தில் சிதம்பரம்வரை................

இன்று நல்ல படிப்பிலிருக்கும் நெடுக்சிடம் நாம் எமது பொறுப்புக்களை கொடுத்தால் எப்படி எம்மை விற்பார் என்பது புரிகிறது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இன்னமும் இலண்டன் சிற்றி அல்லது டொக்லாண்ட் பகுதி பக்கம் "ரஷ் அவர்" நேரம் போகவில்லை என்று தெரிகின்றது. எத்தனையோ தமிழர்கள் (சிலரைத் தமிழர் என்று மட்டுக்கட்டுவது கடினம்) மிகப் பெரிய நிறுவனங்களில் சீனியராக வேலை செய்கின்றார்கள். இவர்கள் எல்லாம் "விசா"வில் வந்துதான் படித்தார்கள் என்றா சொல்ல முடியும்?

இங்கிலாந்தில் அகதியாக வந்து வளமான வாழ்வில் இருக்கும் தமிழரைப் பார்த்து பொறாமைப்படும் கருத்துக்களாகத்தான் நெடுக்கின் கருத்துக்கள் உள்ளன. கஷ்டப்பட்டு ஒருவன் முன்னுக்குவந்தால், அதைப் பெருமையாக எண்ணுவதை விடுத்து, முன்னுக்கு வந்தவன் எல்லோரும் கள்ளவழியால்தான் முன்னுக்கு வந்தார்கள் என்ற "பார்வை" வெறும் பொறாமைதான்.

தமிழர்கள் மட்டும் தானா சீனியர்களாக வேலை செய்கின்றனர்..???! எத்தனை தமிழர்கள் ஊரை சுருட்டிக் கொண்டு திரிகிறார்கள்..??! இவர்களால் யாருக்கு என்ன இலாபம்.

இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது. சொந்த தேசத்தைக் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம்.. அது எந்த நிலைக்கு வந்தாலும்.. காட்டிக் கொடுத்து பிழைத்தது மறையவோ மறக்கவோ படமாட்டாது.

கருணாவும் தான் இன்று அமைச்சர் பதவில்.. முன்னேறி இருக்கிறார். டக்கிளஸ் அப்படி. அவர்கள் மட்டும் துரோகிகளாகி நிற்க.. வெளிநாடு வந்து காட்டிக் கொடுத்தோர்.. சீனியர்களாமெல்லே. எத்தனையோ சீனியர்கள்.. அகதி அந்தஸ்துக்கு அப்பாலும் தேசத்தை காட்டிக் கொடுக்காமலும் வந்து முன்னேற்றங்களை தந்திருக்கிறார்கள். அண்மையில் ராணியால் சேர் பட்டம் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட தமிழ் மருத்துவர் ஒருவர் கூட இதற்குச் சான்று. இந்த வரிசையில்.. அகதியாக தேசத்தின் துயரில் பிழைப்பை ஓட்டியவர்கள் எத்தனை பேர் நிற்கினம்..???!

தமிழர்களை விட யூதர்கள் சீனியாரிற்றி பதவிகளில் அதிகம் இருக்கிறார்கள். இந்தியர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள்.. கொலை கொள்ளை குற்றவாளிகளாக கூண்டுக்குள் இருப்பதும் அதிகம். அதையும் நோக்க வேண்டும். அதிலும் நம்மவர்கள் சீனியர்கள் தானோ என்னவோ...! :):D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு சில தரவுகளைத்தந்திருக்கிறது

அதன்படி படித்தவர்களிடம் தமிழன் ஏமாந்தவை அதிகம்

சேர் பொன் ராமநாதனிலிருந்து ஜீ ஜீ பொன்னம்பலம்

அதை அடுத்து

பஞ்சலிங்கங்களிலிருந்து நீலன் திருச்செல்வம் வரை

தமிழகத்தில் சிதம்பரம்வரை................

இன்று நல்ல படிப்பிலிருக்கும் நெடுக்சிடம் நாம் எமது பொறுப்புக்களை கொடுத்தால் எப்படி எம்மை விற்பார் என்பது புரிகிறது. நன்றி

உங்களிடம் தலைவர் ஒப்படைத்த பொறுப்புக்களை நீங்க எந்த வகையில கவனிக்கிறீங்க என்ற இலட்சனம் தெரிஞ்சுமா.. உங்களின் பொறுப்புக்களை யாரும் ஏற்க நினைப்பினம். :lol::)

இராமநாதன்.. ஜீ ஜீ பொன்னம்பலம்.. நீலன் திருச்செல்வம்.. போன்றவர்கள்.. நாங்கள் விரும்பாவிட்டாலும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் தலைவர்களாக இருந்திருக்கின்றனர். ஜனநாயகப் பாதையில் நின்றிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் சில கருத்தியலோடு அவர்கள் ஒருங்கிணைந்து செயற்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் செயற்பாடுகள் முழுமையும் தவறென்று இனங்காட்டப்பட முடியாது.

நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்ட விடயத்தில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஏனெனில்.. அவரின் அறிவுக் கூர்மையை நாம் பயன்படுத்தக் கூடிய வகைக்கு அவரை எம் பக்கம் கொண்டு வருவதில் இருந்து நாம் தோற்றுவிட்டோம். சிங்களம் ஒரு நல்ல தமிழ் அறிவு ஜீவியை கொன்றுவிட்டது. அது அதற்கு கிடைத்த வெற்றியும் கூட. அதேபோல் குமார் பொன்னம்பலம். இப்படிப் பலர். இறுதியில் முள்ளிவாய்க்காலில் நாம் ஒரு சிறுபரப்புக்குள் அடங்கி நின்று ஆயுதத்தை தூக்கி எறிந்த போதும் எதிரி எம்மை மன்னிக்கவில்லை. கொன்று குவித்தான். இன்றும் குவிக்கிறான்.

இதை தடுக்க.. வெளிநாட்டுக்கு ஓடி வந்தவை என்னத்தை வெட்டி விழுத்தினவை..???! கூச்சல் போட்டதைத் தவிர... எந்த படுகொலைகளையும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாறாக ஆளாளுக்கு கட்சி நடத்திக் கிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கினம். இதே காரணங்களுக்காகத்தான் நீலன் போன்றவர்களும் கொல்லப்பட்டனர். அது ஒரு மதிநுட்பமான நகர்வா என்பது இன்று கேள்விக் குறியாகி நிற்கிறது.

கதிர்காமர் சரி நீலன் சரி.. அவர்களை எம்மை நோக்கி தமிழ் மக்களின் கொள்கை நோக்கி இழுத்துவர முடியாமல் போனது எமக்கு பெரிய தோல்வியே. அவர்களை பாவித்து படுகொலைக்குள் தள்ளிவிட்டு தமிழ் மக்களிடம் இருந்த அரசியல் அறிவுஜீவிகளை தமிழர்களைக் கொண்டே கொல்லுவித்தது சிங்களத்துக்கு கிடைத்த வெற்றி.

இன்று அரசியல் வெற்றிடத்தில்.. யார்.. தெளிவான துரோகிகள். நாங்கள்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு... காட்டிக் கொடுத்ததை விட வேறு எதை உருப்படியா செய்திருக்கிறம்..??! போராட காசு கொடுத்தமாம்.. அதற்கு கூலிக்கு போய் யாரோ போராடினாங்களாம். நாங்கள் சொகுசா கலியாணம் கட்டி பிள்ளை குட்டி பெத்துக்கொண்டிருந்திட்டு.. இப்ப சுற்றுலா போறமாம்.

யாரை ஏமாற்றப் போகிறீர்கள்.. இன்னும் இன்னும்..?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ஊர் திரும்புவீர்கள் என்று தெரியும். திரும்பும்போது பிரித்தானிய நிரந்தர வதிவுட உரிமையை அல்லது பிரித்தானியப் பிரிஜாயுரிமையையும் எடுத்துவிட்டுச் செல்லுங்கள் (மூன்று துறைகளில் படித்திருப்பதால் கட்டாயம் எட்டு - ஒன்பது வருடங்கள் தாண்டியிருக்கும், பத்து வருடங்களைத் தாண்ட பி.எச்.டி உதவும் என்பது தெரிந்திருக்கும்தானே!)

என்னுடைய நண்பன் ஒருவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்து "ஸ்கொலசிப்" இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு பி.எச்.டி செய்ய வந்து மூன்று வருடத்திற்குள் பி.எச்.டி முடித்துவிட்டு ஊருக்குப் போனான். அங்குள்ள சிங்களப் பேராசிரியர்களுடன் ஒத்துவராததால், மீண்டும் இங்கு வந்து ஒரு பன்னாட்டுக் கம்பனியில் ஆராய்ச்சியாளாராக உள்ளான். நெடுக்குவிற்கு கொழும்புப் பேராசியர்கள் ஒத்துவராவிட்டால் எனது நண்பனைப் போன்று திரும்பவர முயற்சிக்கவேண்டும். பல வருடங்கள் இருந்து பழகின இடம்தானே. எனவே இங்கிலாந்து வாழ்க்கை கட்டாயம் பிடிக்கும்! :D

பிரித்தானியாவில் வதிவிட உரிமை பெறுவதற்கு 10 வருடமோ 14 வருடமோ இருக்க வேண்டியதில்லை. 5 ஆண்டுகால தொழில் விசா இருந்தால் போதும். நான் எனது முதற்படிப்பை முடித்துவிட்டே அதை செய்திருக்கலாம். அதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம் இருந்தன. அதுமட்டுமன்றி பிரித்தானியாவில் வாழும் உங்களுக்கு பிரித்தானிய உயர்கல்வி நடைமுறைகள் தெரியாதது வியப்பளிக்கிறது.

பிரித்தானிய உயர்கல்வி முதுமாணி ஆராய்ச்சி 1 வருடமும் பி எச் டி 3 வருடங்களும் ஆகும். நான் எனது துறையில் இரண்டு பாடப்பரப்புக்களை சிறப்புத் தெரிவுகளில் உள்ளடக்கியதால் நீண்ட காலம் அவற்றிலும் மருத்துவ ஆராய்ச்சி துறைசார்ந்து எனது படிப்பை கொண்டு செல்லவும் professional membership அங்கீகாரத்துக்காக மூன்று வருட கல்வி அனுபவமும் 2 வருட ஆராய்ச்சி அனுபவமும் வேண்டி தொடர்ந்து படிக்க வேண்டி ஏற்பட்டது. இந்த நடைமுறைகளைக் கூட அறியாமல் இருந்து கொண்டு தமிழர்கள் பிரித்தானியாவில் சீனியாரிற்றியில் அலங்காரம் செய்கின்றனர் என்று சொல்கிறீர்கள். அது எப்படி..???!

நான் பார்த்த அளவில் professional body membership.. fellowship பெற விண்ணப்பிப்பவர்களில் தமிழர்களை விட சிங்களவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தமிழர்கள் பலர் கல்வி சார்ந்து இல்லை. அவர்கள் தாம் காட்டிக் கொடுத்து பெற்ற அகதி அந்தஸ்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற குறுக்கு வழி சீனியாரிற்றிகளில் அக மகிழ்ந்து கொள்கின்றனர். இதுதான் நடக்கிறது பல இடங்களில்..! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா,

ஒருவரை பற்றிப்பேச முதல் அவர்களின் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு பேசுவது நல்லது நெடுக்கண்ணா..

நான் பகிரங்கமான சவாலுக்கு தயார். நாங்கள் புலிகளுக்கு பங்களித்ததை நிரூபித்தால், நீங்கள் உடனே இந்த நாட்டை விட்டு வெளியேறி அங்கே போய் மக்களுக்கு சேவை செய்ய தயாரா ..??

அப்படி தயார் என்றால் தொடர்ந்து பதில் எழுதவும் இல்லை.. இல்லையென்றால் பேசாமல் போய் வேறு வேலையை பாருங்கள்

இப்போ தெரிகிறது ஏன் இவ்வளவு போராடியும் எங்களுக்கு நாடு கிடைக்கவில்லை என்று. உங்களைப்போல ஆட்கள் இருந்தால் அது எண்டைக்குமே சாத்தியமே இல்லை..

பொய்யை 100தடவை உண்மை போல் உரைத்தாலும் பொய் பொய்தான்.... :D:)

மேலே தடித்த எழுத்தில் நீங்கள் எழுதியதை உங்களிடத்திலேயே கேள்வியாக விடுகிறேன்.

உயர்கல்வியில் மெரிட் கிடைப்பதே அரிதானது. அதை சிறீலங்காவில் இருந்து கல்வி கற்றிருந்தால் அறிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு வாய்ப்பில் தான் நாங்கள் கொழும்புக்கு வந்தோம். அதுவும் சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு ஓடி வரல்ல. வெளிநாட்டுக்கு பொய் சொல்லி காட்டிக் கொடுத்து அசைலம் அடிக்க ஓடிவந்த ஆக்கள் போல..!

நாங்களும் புலிகளுக்கு நிறையவே உதவி செய்திருக்கிறம். அதை நாங்கள் நிரூபித்தால்.. நீங்கள் பொய் புழுகு சொல்லி.. பெற்ற அகதி அந்தஸ்தை கிழித்தெறிந்துவிட்டு ஊரில் போய் போராட்டத்தை முன்னெடுக்க எம்மோடு உதவிக்காவது வருவீர்களா..???! அதற்கு தயார் என்றால் சொல்லுங்கள்.. உங்கள் சவாலுக்கு நாங்களும் தயார்..! :huh::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இங்கே நீங்கள் எப்படி கெட்டிக்கார தனமாக பாஸ் பண்ணி ஹொலசிப் வந்தீர்கள் என்டு ஆராயவில்லை...சிங்களவன் உங்களை படிக்க அனுப்பி வைத்ததாக எழுதினீர்கள் அப்படி என்டால் உங்களை பொறுத்த சிங்களவன் ரொம்ப நல்லவனாய் இருக்க வேண்டுமே!...நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படியுங்கள்.படிப்பு முடித்து விட்டு ஊருக்குப் போக விருப்பம் இல்லா விட்டாலும் பரவாயில்லை இங்கேயே இருங்கள் அது எமக்கு தேவையில்லாத விசயம் ஆனால் அசேலம் அடிப்பவர்களை குறை சொல்வதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் ஏற்கனவே எழுதின மாதிரி புலியை சாட்டி அசேலம் அடித்தவர்கள் குறைவு.அரசையும்,ஆமியையும் தான் பெரும்பாலும் குற்றம் சாட்டி இருப்பார்கள்.அவர்கள் புலம் பெயர்ந்து வந்ததால் உங்களுக்கு என்ன குறைந்து போய் விட்டது?...உங்களை புலிகள் போய் படி என விட்ட மாதிரித் தான் அவர்களையும் விட்டார்கள்...ஏன் புலிகள் சொன்னார்களா? அகதி அந்தஸ்து கோர வேண்டாம் என?..ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் மனச்சாட்சிக்கு உட்பட்டு உண்மை சொல்லுங்கள் புலிகள் மாணவ விசாவில் செல்பவர்களையும்,தொழில் விசாவில் செல்பவர்களையும் மாத்திரம் புலம் பெயர்ந்து போக அனுமதித்து இருந்தால் போராட்டம் இந்தளவிற்கு வளர்ந்திருக்குமா?...எல்லோரும் ஆயுதம் தூக்கி போராடினால் மட்டும் காணாது போராடுவதற்கு ஆயுதமும் வேண்டும் :)

நீங்கள் சமுக அந்தஸ்து என்டு எதை வைத்து சொல்கிறீர்கள் என எனக்குப் புரியவில்லை!உங்களை எப்படி புலம் பெயர் அரசோ மக்களோ பார்க்கிறார்களோ அதே மாதிரித் தான் அகதியாய் வந்தவர்களையும் பார்க்கிறார்கள்.நீங்கள் படிக்க வந்தவர்கள் படித்து விட்டு போய் விடுவீர்கள் என்டு உங்களை இங்கே தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கவில்லை...படிக்க என இங்கு வந்தவர்கள் தான் தங்கள் அறிவை வைத்துக் கொண்டு கள்ளக் கிரடிட் போன்ற கள்ளமான,சுலபமாக பணம் சம்பாதிக்கும் வேலைகளை செய்பவர்கள்.இவர்களால் தான் உண்மையில் தமிழருக்கு கெட்ட பேர்.2009ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்த போது உங்கள மாதிரி படிக்க என மாணவ விசாவில் வந்த எத்தனை பேர் கலந்து கொண்டீர்கள்?...அதை முன் நின்று நடத்தியவர்கள் நீங்கள் ஏளனமாய் பார்க்கும் அசேலம் அடித்தவர்களின் இங்கே பிறந்த பிள்ளைகள் தான்...போராட்டத்திற்கு காசு கொடுக்கிறது என்டாலும் இந்த அசேலம் அடித்த மக்கள் தான்,ஆர்ப்பாட்டம் செய்யுறதும் இவர்கள் தான் ஏன் ஆயுதம் தூக்குவது கூட இந்த அசேலம் அடித்த மக்கள் தான்...அசேலம் அடித்தவர்கள தங்களால் இயன்றதைப் போராட்டத்திற்கு செய்தார்கள் ஆனால் உங்களைப் போல படிக்க வந்தவர்கள் என்ன செய்தார்கள் :huh:

இதில் ஏன் பெண்களை தேவை இல்லாமல் இழுத்து இருக்கிறீர்களோ தெரியவில்லை?...அவர்கள் திருமணம் செய்து வந்தால் உங்களுக்கு என்ன?...ஊரில் இருக்கும் பெண்கள் திருமணம் செய்து இங்கே வரக் கூடாதா அவர்களும் போய் ஆயுதம் தூக்கி சாகவேனும் அல்லது அங்கே போரினால்,ஆமியின் கைதினால் சிக்குப்பட்டு சாக வேண்டும் நீங்கள் இங்கே இருந்து படிக்க வேண்டும்...பெண்களை இதில் விட்டு விட்டு பொதுவான உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...இன்றும் கூட ஊரில் படித்த மாப்பிள்ளைமார்[வைத்தியர்,பொறியலாளர்]புலம் பெயர் நாட்டுக்கு ஏதோ ஒரு விதத்தில் வரத் தான் பார்க்கிறார்கள் :lol:

1. எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் புலிகளை குறை சொல்லி அசைலம் அடித்தவர்கள் குறைவு என்று. என்னிடம் ஆதாரத்துக்கான இடம் இருக்கிறது. அங்குள்ள சட்ட ரீதியான ஆவணங்களில் 75% மேலான அசைலம் அடித்த தமிழர்கள் புலிகள் தங்களை துன்புறுத்தியதாக வாக்குறுதி அளித்து அதனால் தாம் அங்கிருந்து ஓடி வந்ததாகச் சொல்லி இருக்கின்றனர். இன்னும் சில பேர் வன்னியில் இருந்து இரவோடு இரவாக புலிகளுக்கு பயந்து ஓடி வந்ததாகக் கூட வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னும் சில பேர் புலிகள் வற்புறுத்தி குண்டு வைக்கச் சொன்னதாகச் சொல்லி ஓடி வந்ததாக சொல்லி இருக்கின்றனர். அப்படிச் சொன்னவரில் ஒருவர் நீண்ட நெடுங்காலமாக கொழும்பில் வாழ்ந்தவர் என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். இருந்தாலும் அதை மறைத்து புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள். புலிகளுக்கு எதிராக வழங்கி தங்கள் அகதி அந்தஸ்து வழக்கு அல்லது கோரிக்கை வெல்ல வேண்டும் என்பதற்காக தமிழர்கள் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளனர். இவற்றிற்கான ஆதாரங்கள் போதிய அளவு என்னிடம் உண்டு. ஆனால் அவை சட்ட ரீதியான ஆவணங்களாக பதியப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பெயர் விபரங்களோடு வெளிச் சொல்ல முடியாது. ஏன் புலிகளோடு சேர்ந்தியங்கிய முக்கியமான நபர் ஒருவர் கூட அப்படிச் சொல்லி இருக்கிறார். ஆனால் நீங்களோ ஒரு சிலர் தான் என்று சொல்கிறீர்கள் எதனடிப்படையில்.

எனது தரவு.. ஒரு பிரித்தானிய அரசு நியமன சட்ட ஆலோசனை மையத்தில் இருந்து மட்டுமான ஆவணங்களில் சொல்லப்பட்ட படி உள்ளது. இப்படி எத்தனையோ தனியார் சட்ட ஆலோசனை சட்டத்தரணிகளூடும் தமிழர்கள் அகதி அந்தஸ்துக் கோரி உள்ளனர். அங்கு என்னென்ன பொய்களோ...???!

வெளிநாட்டுக்கு வந்து தான் ஆயுதம் வேண்ட வேண்டி இருந்திருப்பின்.. பிரபாகரன் வெளிநாட்டுக்கு வந்து உழைச்சுத்தான் பின்னர் போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்..??!

அதுமட்டுமன்றி ஊரோடு எல்லோரும் அசைலம் அடிக்க.. ஏழைகளும் ஊரைவிட்டு போக முடியாதவர்களும் மட்டும் ஆயுதம் தூக்கி அடிபடனும்.. நீங்கள் ஆயுதம் வாங்க காசு கொடுத்ததோடு நின்று விடுப்பு பார்ப்பீங்க. யாரேனும் பிள்ளைகள் அடிப்பட்டு சாகனும். இதைத்தானே விரும்பினீர்கள்.. இவ்வளவு காலமும். உங்களைப் பொறுத்தவரை தமிழீழம் கிடைத்தால் அது ஒரு களியாட்டம். ஏனெனில் உங்களுக்கு அகதி அந்தஸ்து தந்த சுகமான வாழ்வு வெளிநாடுகளில் நிரந்தரம் என்பதை புலிகள் மீதே பொய் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டுதான் நீங்கள் காசு கொடுத்தீர்கள்.

அப்படி வந்த காசு என்ற படியால் தான் அந்தக் காசு முள்ளிவாய்க்காலில் எமக்கு உதவவில்லை. மாறாக எமது சொந்த நிலத்தில் சொந்த பொருண்மியத்தில்.. அது அமைத்த ஆயுத பலத்தில் நின்றிருந்தால் கப்பல்கள் மூழ்க நாமும் நந்திக் கடலில் மூழ்க வேண்டிய நிலை வந்திருக்காது.

அதுமட்டுமன்றி.. திறந்துவிட்டால் போதும்.. நாங்கள் ஓடிப்போய் பொய் சொல்லி அசைலம் அடிப்பம்.. எங்களுக்கு போராட்டம் வேண்டாம் என்ற நிலையை ஏற்படுத்தியதும்.. இந்த பொய் சொல்லி வாங்கிய அகதி அந்தஸ்துத்தான். போராட்டம் காலப் போக்கில் நலிவடைந்து மக்கள் வாழ்ந்த இடங்கள் வெற்றிடங்களாக போராட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து போனது.

எனிப் போராடினால் இறுதி முடிவோடுதான் போராடனும் என்ற நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டதற்கு காரணமும்.. அகதி அந்தஸ்துத்தான். புலிகள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டதும்.. அகதி அந்தஸ்துக்காகத்தான். இதனை மறுதலிக்க முடியுமா..??!

பெண்கள் வகை தொகை இன்றி வெளிநாட்டு மாப்பிள்ளை மாரைத் தேடி ஓடி வந்தது இல்லை என்றீர்களா. கொழும்பில் விடுதிகளில் இந்தப் பெண்கள் செய்த தில்லாலங்கடி.. சிங்களப் பொலிஸாருக்கு தெரியும். இதுவும் தமிழ் பெண்களை சிங்களவர்கள் இலக்காரமாக நடத்த ஒரு காரணம். இதற்கும்.. அகதி அந்தஸ்துதான் காரணம்.

இறுதியாக தமிழர்கள் பெருமளவில் பொய் சொல்லி அசைலம் அடித்த வெளிநாடுகள், பொய் சொல்லி தமிழர்கள் அகதி அந்தஸ்தை வாங்க வர புலிகள் அவர்களை கடத்தி வருவதாக.. ஆட்கடத்தல் வியாபாரம் செய்கின்றனர் என்ற பெரிய குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேற்கு நாடுகளில் அகதிகளாக நிரம்பி வழிந்த தமிழர்களால் அந்த நாடுகள் இக்கட்டுக்குள் தள்ளப்பட்ட புலிகளின் முடிவில் தான் இதற்கு தீர்வு வரும் என்று மேற்கு நாடுகள் நம்பின. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் முள்ளிவாய்க்காலில் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆக தமிழீழத்தின் மீது கொண்டிருக்காத பக்தியை வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து மேல் எம்மவர்கள் கொண்டதன் விளைவே எமது போராட்ட அழிவுக்கு முக்கிய காரணம்.

இதையெல்லாம்.. காசு கொடுத்தம் கொடி பிடிச்சம் ஒரு மாத உண்ணா நோன்பிருந்தம்.. எங்கட அகதிப்பிள்ளைகள் மேற்குலகில் பிறந்து பெரிய சாதனை படைச்சு.. மனித உரிமைகளை நிலைநாட்டி.. சாவுகளை தடுத்திட்டினம்.. என்று நீங்கள் கூவலாம். ஆனால் அது அல்ல உண்மை. இன்றும் தாயக மண் அகதி அந்தஸ்துக்காரர்களின் சுயநலத்தால் இரத்தம் சிந்திக் கொண்டே இருக்கிறது. இதுதான் கள யதார்த்தம். எமது போராட்ட அழிப்புக்கு அகதி அந்தஸ்தும் ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வதிவிட உரிமை பெறுவதற்கு 10 வருடமோ 14 வருடமோ இருக்க வேண்டியதில்லை. 5 ஆண்டுகால தொழில் விசா இருந்தால் போதும். நான் எனது முதற்படிப்பை முடித்துவிட்டே அதை செய்திருக்கலாம். அதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம் இருந்தன. அதுமட்டுமன்றி பிரித்தானியாவில் வாழும் உங்களுக்கு பிரித்தானிய உயர்கல்வி நடைமுறைகள் தெரியாதது வியப்பளிக்கிறது.

பிரித்தானிய உயர்கல்வி முதுமாணி ஆராய்ச்சி 1 வருடமும் பி எச் டி 3 வருடங்களும் ஆகும். நான் எனது துறையில் இரண்டு பாடப்பரப்புக்களை சிறப்புத் தெரிவுகளில் உள்ளடக்கியதால் நீண்ட காலம் அவற்றிலும் மருத்துவ ஆராய்ச்சி துறைசார்ந்து எனது படிப்பை கொண்டு செல்லவும் professional membership அங்கீகாரத்துக்காக மூன்று வருட கல்வி அனுபவமும் 2 வருட ஆராய்ச்சி அனுபவமும் வேண்டி தொடர்ந்து படிக்க வேண்டி ஏற்பட்டது. இந்த நடைமுறைகளைக் கூட அறியாமல் இருந்து கொண்டு தமிழர்கள் பிரித்தானியாவில் சீனியாரிற்றியில் அலங்காரம் செய்கின்றனர் என்று சொல்கிறீர்கள். அது எப்படி..???!

நான் பார்த்த அளவில் professional body membership.. fellowship பெற விண்ணப்பிப்பவர்களில் தமிழர்களை விட சிங்களவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தமிழர்கள் பலர் கல்வி சார்ந்து இல்லை. அவர்கள் தாம் காட்டிக் கொடுத்து பெற்ற அகதி அந்தஸ்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற குறுக்கு வழி சீனியாரிற்றிகளில் அக மகிழ்ந்து கொள்கின்றனர். இதுதான் நடக்கிறது பல இடங்களில்..! :):D

எனக்கு மருத்துவத்துறையைப் பற்றி அதிகம் தெரியாது!

எனினும் இலங்கையில் பொறியியல் படித்தவர்கள் முதல் வகுப்பில் தேறியிருந்தால், இங்கு வந்து உடனடியாகவே பி.எச்.டி ஆரம்பித்து மூன்று வருடங்களில் முடிக்கலாம். எனது நண்பர் அப்படித்தான் பி.எச்.டி முடித்தார்.

ஸ்கொலசிப்பில் வந்ததால் நீங்களும் எனது நண்பரைப் போன்று மூன்று வருடத்தில் பி.எச்.டி முடித்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் இரு துறைகளில் மீண்டும் 3 வருட கல்வியனுவத்தைப் பெறயிருக்க வேண்டிவந்தது என்பதும் அதன் பிறகும் இரண்டு வருடம் ஆராய்ச்சி மாணவனாக இருந்து, மீண்டும் ஏதாவது படித்து கலாநிதிப் பட்டமும் எடுக்கவேண்டும் என்று தெளிவித்ததற்கு நன்றி.

இன்னமும் நீங்கள் படித்த கல்வியின் பலாபலன்களை எட்டவில்லை என்பதும் இன்னமும் சமூகவியல் படித்துமுடிக்கவில்லை என்பதும் உங்கள் சிந்தனையூடு வருகின்ற எழுத்துக்களில் இருந்து தெரிகின்றது. எனவே தொடர்ந்தும் நன்றாகப் படித்து இலங்கை சென்று கெளரவமான பிரஜையாக வாழ வாழ்த்துக்கள். எல்லாத் திருட்டுப் பயல்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் அகதித் தஞ்சம்கோரி மேற்கு நாடுகளில் வந்து நிரம்பி வழிவதால் எஞ்சியிருக்கும் கெளரவமானவர்களுடன் ஓர் அறிவுஜீவியாக வாழ்வது உங்களுக்கு நல்லதுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.