சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
நிலாமதி

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Recommended Posts

உங்களின் லண்டன் என்ற கனவுலகத்திற்கு வந்தவுடன் உங்களை எல்லோரும் பவுண் காசு கொடுத்து வரவேற்பார்கள் என்றுதானே நினைத்திருந்தீர்கள்.

இங்கு வாழ்க்கையை இழுத்து பிடித்து வாழ்வதற்கு பலர் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். லண்டன் உங்களை பாராட்டி, சீராட்டி வளர்க்கும், பணத்தை அள்ளித்தரும் என்று நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.ஹீத்ரோ எயார் போட் உங்களை செங்கம்பளம் போட்டு வரவேற்காது உங்களை குத்தி குடையும். போனகிழமை வெளிநாட்டுக்கு போய்விட்டு ஹீத்ரோ எயார் போட் இமிக்கிறேசன் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து கவுண்டரில் ஒரு நேபாள தேசத்து பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இளம் பெண் ஸ்ருடன்ட் விசாவில் வந்திருக்கிறாள்.இமிக்கிறேசன் ஒபிஸர் கேட்கும் கேள்விக்கு கூட ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணுக்கும் பதில் சொல்ல தெரியாது. முழித்துக்கொண்டிருக்கின்றாள். வந்து என்ன படிக்கப்போகின்றாய் என்று அவர் கேட்கின்றார். அதற்கு அந்தப்பெண் “ஐ நோ” “ஐ நோ” என்றுதான் பதில் சொல்லுகின்றாள். அதற்கு அந்த இமிக்கிறேசன் ஒபிசர் தனது பெருவிரலையும் சுட்டுவிரலையும் காட்டி மிகக் கொஞ்சமாக இவ்வளவுதான் உனக்கு தெரியும் ஆங்கிலம் என்கிறார். எனக்கு பாஸ்போட்டில் சீல் பண்ணி தந்துவிட்டார்கள் பிறகு அந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

நேரடியாக விசா எடுத்து வருகின்றவர்களுக்கே பெரும் திண்டாட்டமாக இருக்கின்றது.தற்பொழுது 80 சதவீதமான சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுத்துவிட்டதாக பிரிட்டன் குடிவரவுதுறை அமைச்சு மார்தட்டிக் கொள்கின்றது அது மட்டுமல்ல சட்ட விரோதமாக பிரட்டனுக்கு உள்ளே நுழைகின்ற எல்லா வாசல்களையும் அடைத்து கண்காணிப்பை இறுக்கி விட்டார்கள். பிரிட்டனுக்குள் அண்டை நாடுகளிலிருந்து வருகின்ற கெண்டயினர்கள் எல்லாம் முழு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எக்ஸ்ரே பரிசோதனை செய்கின்றார்கள்.

கோன்சவேட்டிவ் கவர்மெண்ட் வந்ததில் இருந்து இந்த நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.அண்மையில் இங்கு வந்த ஒரு முஸ்லீம் பையன் எனக்கு போன் பண்ணி தனக்கு ஒரு வேலை எடுத்து தரமுடியுமா? எனக்கேட்டுக்கொண்டே இருக்கின்றார். நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் கிடைக்குதில்லை.இன்னொருவர் எனக்கு தெரிந்தவர் இங்கு வந்து அகதி அந்தஸ்து கோரிவிட்டு ஊரிலுள்ள மனைவியிடமும் அவரின் சொந்தக்காரர்களிடமும் ஐ.சி.ஆர்.சி லெட்டர், பொலீஸ் லெட்டர்; வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.பொலீஸ் பிடித்துக் கொண்டு போய் சிறையில் இருந்ததாக இங்கு அகதிகள் தொடர்பான விசாரணையின் போது சும்மா சொல்லி விட்டார். எனவே பொலீஸ் பிடித்து கொண்டு போனதாக ஒரு லெட்டர் கேட்கின்றார்கள். இல்லாத ஒன்றை பெறுவதற்கு அவர் ஆலாய் பறக்கின்றார். இப்பொழுது எல்லா விசாவையும் இறுக்கிப்போட்டார்கள் பிரிட்டன் வருவதற்கு. ரூறிஸ்ட் விசா மட்டும்தான் கொடுக்கின்றார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்னாலிருந்த இமிக்கிரேசன் நிலமையும் இப்பொழுது உள்ள நிலமைக்கும் எவ்வளவு வித்தியாசம். முதல் என்றால் தமிழ் அகதிகள் ஒவ்வொருநாளும் வந்து கொண்டிருப்பார்கள். கெண்டயினரில் ஒழிந்துகொண்டு . காரில் ஒழிந்துகொண்டு, பெரிய பஸ்களில் ஒழித்துக்கொண்டு கொண்டு, வேறு யாருடையவராவது ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போட்டில் ஒழித்துகொண்டு, பெல்ஜியத்திலிருந்து ரயிலில் ஆனால் ஒழிந்து கொண்டு என்று ஏதோ ஒருவகையில் வந்துகொண்டே இருப்பார்கள்.ஆனால் இப்பொழுது பெரும் சிரமம் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை சரி இருக்கவிட்டாலும் 5வருட விசா மட்டுமே கொடுக்கின்றார்கள். 5 வருடத்திற்கு பின்னர் என்ன செய்வார்கள் என்பது தெரியாது. இங்கு அகதிகளாக இருக்கின்றவர்களில் மனைவிமார்கள் சிலோனில் இருந்து பிரிட்டனுக்கு எடுப்பதற்கு மனைவிமார்கள் ஆங்கிலப் பரீட்சையில் பாஸ்பண்ண வேண்டும். இனிமேல் எல்லாம் சிக்கலாகிக் கொண்டே இருக்கின்றது.

12 வருடத்திற்கு முன்னர் ஒரு தமிழர் இங்கு வந்தால் ஏதாவது ஒரு வேலை எங்காவது கிடைக்கும். இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு ஒவ்பிஸில் இருந்து தனது படிப்புக்கு இங்கு வேலை இல்லை என்று விட்டு கோபித்து கொண்டு போய்விட்டார்.ஆனால் அவர் இப்பொழுது ஒரு ஆட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார். ஆடுகளுக்கு புல்லு போடுதல் முடிக்கு பிறஷ் பண்ணுதல்,பட்டிக்குள் ஒருங்கிணைத்தல் என்று வேலை. அது கிடைத்ததே பெரிய விடயம். நான் வந்த ஆரம்பத்தில் ஆறுமாதம் மட்டில் வேலைக்காக அலைந்தேன். பிறகு தேடித் தேடி ஒரு உருளைக்கிழங்கு கொம்பனியில் வேலை கிடைத்தது. அந்த உருளைக்கிழங்கு கொம்பனி என்றால் ஏதோ பெரிய பக்டரி மாதிரி அல்ல.உருளைக்கிழங்கு பக்கட் பக்கட்டாக அங்குவரும் அதனை பெரிய சிமெந்து குழைக்கும் மெசின் மாதிரியான ஒரு மெசினுக்குள் கொட்ட வேண்டும். அதற்கு முதல் உருளைக்கிழங்கை பெரிய தண்ணீர் தொட்டியில் ஊறப்போட்டு வைத்திருப்பார்கள் அந்த தொட்டியில் மழை குளிர் வெயில் எல்லாக் காலங்களிலும் குளிர் தண்ணீர்தான் இருக்கும். விறைத்துப்போகும். குளிரில்தான் தண்ணீர் இருக்கும். அதில் கையை வைத்து வேலை செய்ய வேண்டும். கை விறைத்துப் போய் இருக்கும் எல்லா நேரங்களிலும்.

பெரிய மெசினில் உருளைக்கிழங்கை போட்டால் அது சுத்தி சுத்தி உருளைக்கிழங்கின் தோலை உரித்து தரும் இங்கு வெள்ளைக்காரர்களுக்கு உருளைக்கிழங்குதான் தேசிய உணவு. நாங்கள் உங்களின் தேசிய உணவு என்னெண்டு பாடசாலையில் கேட்கும்பொழுது நெல்லரிசி சோறு என்று சொல்லுவேமே அதைப்போல இங்கு கேட்டால் அவர்கள் சொல்வார்கள் ”ஃபிஸ் அன்ட் சிப்ஸ்” என்று தோல் உரித்து மெசின் தரத்தர அந்த கிழங்கை எடுத்து அதிலுள்ள கறுப்பு புள்ளிகளை சிறிய கத்தியால் வெட்டி வெட்டி இன்னொரு தண்ணீர் தொட்டியில் போடவேண்டும். அங்கு இன்னும் பலர் வேலை செய்தார்கள். எல்லோருமே என்னைப்போல நம்பர் இல்லாமல் வேலை செய்தவர்கள்தான். எல்லோரும் இந்தியர்கள் உருது,ஹிந்தி தெரிந்தவர்கள் எனக்கும் உருது தெரியும் என்பதனால் தான் அந்த வேலையை போய் கேட்க முடிந்தது.

அந்த வேலைத்தலத்து மனேஜர் வலு உசாரான மனிதர் கொஞ்ச நேரம் அங்கு இங்கு பார்க்க முடியாது. உடனே கத்துவார் “ வேலையை செய் வேலையை செய்” என்று அரை மணிநேரம் தான் பகல் சாப்பாட்டிற்கு தருவார். ஊரில் ஐஸ் அடிக்கிறமாதிரி லண்டனில் முடியாது. அரைமணிநேரம் முடிந்த உடனேயே வேலையை ஆரம்பித்துவிட வேண்டும். ஒரு மணித்தியாலயத்திற்கு அடிமாட்டுவிலை இரண்டரை பவுண்தான் தந்தார்.கூரிய சிறிய கத்தி வெட்டி கைமுழுக்க காயம். இரண்டு கிழமைதான் போனேன். அதற்கு பிறகு எனக்கு ஒரு பெற்றோல் ஸ்டேசன் வேலை கிடைத்துவிட்டது.போன கிழமை திருகோணமலையிலிருந்து எனக்கு தெரிந்த ஒருவர் போன்பண்ணி தனது சொந்தக்காரர் இங்கு டயர் கொம்பனி ஒன்றில் நல்ல வேலை செய்வதாக சொன்னார். நானும் தேடிப்பார்த்தேன் அவர் இங்கு காருக்கு டயர் மாத்தும் ஒரு கடையில் வேலை செய்கிறார். சும்மா பொய்யுக்கும், பெருமைக்கும் இங்கு அது செய்கின்றேன் இது செய்கின்றேன் என்று சொல்பவர்களை நான் கண்டிருக்கின்றேன். அது அவர்களுக்குதான் இடைஞ்சலாக முடியும். ஏனெனில் ஊரில் இருந்து 10 ஆயிரம் கேட்பவர்கள் டயர் கொம்பனி பெருமை பேசிவிட்டால் 50 ஆயிரம் அனுப்பு என்பார்கள்.

இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் ஒவ்வொருவரும் எப்படி நாயாய் பேயாய் அலைகின்றார்கள் என்று. பணம் சும்மா இருந்தால் கிடைக்காது. கள்ள வழியில் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது பலரை எனக்கு தெரியும் கிறடிற் காட் மோசடி, வங்கி எக்கவுண்ட் திருட்டு என்று செய்தவர்கள் 16 வருடம் 20 வருடம் சிறையில் இருக்கின்றார்கள்.மட்டக்களப்பு பல்கலைக்கழக புறொபஸர் ஒருவரை கண்டேன் இங்கு. இலங்கையில் மரியாதையான மனிதர் இங்கு ஒரு சில்லறை கடையில் சாமான் அடுக்குகின்றார். எல்லாம் லண்டன் ஆசைதான்.

எனக்கு கிடைத்த முதல் பெற்றோல் ஸ்டேசன் மனேஜர் பெருமை பிடித்த மனிதர் அவருக்குதான் எல்லாம் தெரியும். அவரைவிட்டால் வேறு ஆட்கள் இல்லை என்று நினைக்கும் தமிழ் மனிதர். எனக்கு தெரிந்த எதனையும் அவருக்கு சொல்ல முடியாது அவருக்குதான் அதனைவிட எல்லாம் தெரியும் என்று சொல்வார். அங்கு வேலைக்கு போன கொஞ்சநாளில் இதனை தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு அவரோடு பெரிசாக கதைப்பதற்கு நான் போவதில்லை.எனக்கு தெரியும் யாருடன் எப்படி பழக வேண்டும் என்பது. உண்மையில் அது ஒரு கலைதான். அது இந்த உலகத்தில் மிக முக்கியம். அவர் தன்னை பெரியவராக காட்டி கொண்டால்தான் சந்தோசப்படுவார். அது அவரின் குணம்.பெற்றோர் ஸ்டேசன்கள்தான் எப்பொழுதும் அகதிகளுக்கு மிகவும் விருப்பமான இடங்களாக இருந்தது அந்தக்காலம். ஏனெனில் நம்பர் இல்லாத அகதிகளுக்கு தமிழர்கள் மனேஜராக இருந்த பெற்றோல் ஸ்டேசன்காரர் பெரிதும் உதவின. ஆனால் இப்பொழுது கடைகள்,பெற்றோல் ஸ்டேசன்கள், வேலை கொடுக்கும் இடங்கள் எல்லாம் நம்பர் இல்லாமல் வேலை கொடுத்தால் உரிமையாளருக்கு தலைக்கு பத்தாயிரம் பவுண் தண்டம் விதிக்கிறார்கள் அந்த இடத்தில்.எனது இரண்டாவது தொழிலும் பெற்றோல் ஸ்டேசன்தான் அந்த மனேஜர் ஒரு ஆபிரிக்கர். அவருக்கு ஒரு வெள்ளைக்கார பெண் கேள் பிரண்டாக இருந்தார். ஏற்கனவே அவர் ஆபிரிக்க பெண்மணியை திருமணம் முடித்திருந்தார்.

வெள்ளைக்கார பெண்ணுக்கு நான் வேலை செய்த பெற்றோல் ஸ்டேசனில் வேலை போட்டு கொடுத்திருந்தார். நல்ல மனிதர் வேலை கெடுபிடி ஒன்றும் இல்லை. நேரத்துக்கு வேலைக்கு வந்து போனால் சரி. வேலை ஒன்றும் கஷ்டம் இல்லை சிறிய பெற்றோல் ஸ்டேசன்தான். அதனை ஓய்வு நேரங்களில் கூட்டி துப்பரவாக்கினால் சரி. மற்றப்படி கஷியரில் நிற்கவேண்டும்.மனேஜர் அனேகமாக காலை நேரங்களில் பெற்றோல் ஸ்டேசனுக்கு வரும் நேரங்களில் மனைவியை பற்றிய புலம்பல் ஒன்றோடுதான் வருவார். மனைவி தனக்கு இரவு அடித்தது, அல்லது ஏசியது, அல்லது தள்ளிப்படுத்தது என்ற ஒரு குற்ற சாட்டையும் சுமந்துதான் வருவார். அவருக்கு ஆறுதல் சொல்ல அவரின் காதலிக்கு ஏதாவது சாட்டு கிடைத்துவிடும். காலையில் அவரின் கேள் பிரண்டிற்கு இரவு மனைவியின் கொடுமைகளில் ஒன்றைச் சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்வார்.கேள் பிரண்ட் ஆறுதல் படுத்துவது சிலவேளை கஷியரில் நிக்கும் எங்களுக்கு இடஞ்சலாக இருக்கும். இப்படியே போய்கொண்டிருந்த எங்களின் மனேஜருக்கு வந்தது இடிமாலை.அவரது மனைவிக்கு இந்த விடயம் கேள்விப்பட்டுவிட்டது. ஒருநாள் எங்கள் பெற்றோல் ஸ்டேஸனுக்கு வந்து மனேஜர் ரூமுக்குள் வைத்து அவருக்கும் அவரது கேள் பிரண்டிற்கும் அடி என்றால் அப்படி ஒரு அடி. ஆபிரிக்க மனிசி கொழுத்த பெரிய உருவம்.மனேஜராலோ அல்லது அவரது வெள்ளைக்கார கேள்பிரண்டாலோ எதுவும் செய்ய முடியவில்லை. பிறகு கொஞ்சக்காலத்தில் அந்த பெற்றோல் ஸ்டேசனை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்.

அதற்கு பிறகு வேலைக்கு அலைந்து திரிந்து இன்னுமொரு பெற்றோல் ஸ்டேசன் கிடைத்தது. இரவுவேலை முழுநாளும் இரவுவேலை பகலில் தூங்குவது இரவில் வேலை. இது கொஞ்சகாலம் போக பழகிவிட்டது. மனேஜர் நல்ல மனிதர்.

பிறகு இன்னுமொரு வேலை கிடைத்தது. பேற்றோல் ஸ்டேசனைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். அது ரெலிபோன் காட் விக்கிற வேலை. என்னோடு சிலோனில் டொக்ராக வேலை பார்த்த ஒருவரும் வந்து சேர்ந்தார் இலங்கையில் டொக்ரராக இருந்தவர் இங்குவந்து மெடிக்ல் எக்ஸாம் எடுக்கும் வரைக்கும் ஏதாவது வேலை செய்தால்தான் வாழமுடியும். அதற்காக ரெலிபோன்காட் விற்க்கும் வேலைக்கு வந்தார்.காலையில் அலுவலகம் போவது மாதிரி ரை கட்டி முழுக்கை சட்டை போட்டு ரெலிபோன்காட்டை எண்ணி எடுத்துக்கொண்டு போய் கடைகளில் போடவேண்டும். இது காசு அதிகம் புழங்குகின்ற வேலை. நான் வேலைசெய்த கொம்பனியில் எத்தனையோ பேர் பணத்தை களவு கொடுத்திருக்கிறார்கள்.

ரெலிபோன் மினிஸ்ட்களை வாங்கி அதனை பிரித்து காட்டுக்களில் பதிந்து அதனோடு பின் நம்பரும் இருக்கும் சிஸ்டம் இது. ஊரிலுள்ள “றீலோட்” காட்டுகள்மாதிரி இந்த காட்டுகளில் இலங்கைக்கு இந்தியாவுக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பேசும்போது மலிவான மினிட்ஸ்கள் கிடைக்கும்.இந்த பிஸ்னஸ் முழுவதும் காசோடு சம்பந்தப்பட்ட பிஸினஸ். ரெலிபோன் காட்டை கடையில் கொடுத்துவிட்டு முழுக்காசையும் வாங்கிவருவோம்.என்னிடம் ஒரு நாளைக்கு ஐயாயிரம் பவுணுக்கு அதிகமாக இருக்கும். காலையில் அவ்வளவு காட் கொண்டு போனால் மாலையில் ஊர் ஊராக திரிந்து அலைந்து விற்று முடித்து அலுவலகம் வந்து மீதி காட்டையும் விற்ற காசையும் கொடுக்க வேண்டும். தினமும் இதுதான் வேலை. ஓவ்வொருநாளும் லண்டன் முழுவதும் கால்நடையாகவே சுற்ற வேண்டும்.

நான் வேலைக்கு சேர்ந்தபொழுது எனக்கு வேறு என்ன மொழி தெரியும் என்று கேட்டார்கள். உருது தெரியும் என்ற சொன்ன உடனேயே வேலைக்கு சேர்த்து விட்டார்கள். லண்டன் சிற்றியிலுள்ள குறோசறி கடைகளில் நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் குஜராத்திகளுடையது. அல்லது பஞ்சாபிகளுடையது. எனக்கு உருது, ஹிந்தி தெரிந்தது மிகவும் நல்லதாகி போய்விட்டது. அவர்களின் மொழியில் பேசி அவர்களோடு பிஸினஸ் செய்ய இது வலு இலகு. வியாபாரிகளும் என்னை விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.ஒருமுறை ரூட்டிங் பகுதியில் நான் வேலை செய்யும் கம்பனியில் இருந்து காட் பிஸ்னஸிற்கு போன ஒரு பையனிடம் இருந்த 25ஆயிரம் காசையும் பறித்து ஆளுக்கும் அடித்துவிட்டார்கள் கள்வர்கள். அவன் பல நாட்கள் கோமாவில் இருந்து பிறகுதான் எழும்பினான்.பிறகு பிறகு இங்கு அகதிகளாக வந்த தமிழர்களுக்கு கே.எப்.சி போன்ற கோழி பொரிக்கும் கடைகள் வேலை கொடுத்தது. இப்பொழுது வேலை பெரும் திண்டாட்டம்.

நானும் மனைவியும் வழமையாக போகும் தமிழர் கடையில் மூன்றுபேரை திடீரென்று காணவில்லை. எங்கே என்று விசாரித்தால் அவர்களை நிப்பாட்டியாச்சு என்று சொன்னார்கள். இமிக்கிரேசன் காரர்களும் வரி கொம்பனிக்காரர்களும் வந்து செக் பண்ணியதில் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நம்பர் இல்லாதது கண்டு பிடித்து மூன்றுபேரை வைத்திருந்நதற்கு தமிழ் முதலாளிக்கு 30ஆயிரம் பவுண் தண்டம் விதித்து விட்டார்களாம்.லண்டன் இப்பொழுது வேலை என்பது முன்னையதைப்போல இல்லை அகதிகளும். இங்கு லண்டனுக்கு வருகின்றவர்களும் இந்த விடயத்தை கேள்விப்பட்டிருக்கின்றார்களோ என்னவோ வருகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டுதான் பேகின்றது. இப்பொழுது லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

படித்ததில் பிடித்து . நன்றி .........ஈழ நேசன் - இளைய அப்துல்லா

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

லண்டனில் மட்டுமா இப்படி நடக்குது?...எல்லா புலம் பெயர் நாடுகளிலும் இப்படி தான் நடக்கிறது :D

Share this post


Link to post
Share on other sites

பின்னர் ஏன் நாங்களெல்லாம் லண்டனை விட்டுவிட்டு கனடா வந்தனாங்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

லண்டனிலும் பார்க்க கனடாவில் வடிவாய் பிடிபடாமல் களவு செய்யலாமாம் அது தான் அங்கே[கனடா] போனீர்களோ தெரியாது :D

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எப்படி வரவேற்ப்பார்கள்... வந்தால் சும்மா இருக்கவேண்டும்... திருட்டு , களவு ,கொலை , இல்லாதா சுத்து மாத்து பண்ணினால் எப்படி வரவேற்ப்பார்கள்... இப்படித்தானே இறுக்கிப்பிடிப்பார்கள்.... தப்பை நம்மேல் வைத்து விட்டு லண்டனை சொல்லி என்ன பயன்...

Share this post


Link to post
Share on other sites

லண்டனில் மட்டுமா இப்படி நடக்குது?...எல்லா புலம் பெயர் நாடுகளிலும் இப்படி தான் நடக்கிறது :D

நாடு கடந்த தமிழீழத்திலுமா? :lol:

எப்படி வரவேற்ப்பார்கள்... வந்தால் சும்மா இருக்கவேண்டும்... திருட்டு , களவு ,கொலை , இல்லாதா சுத்து மாத்து பண்ணினால் எப்படி வரவேற்ப்பார்கள்... இப்படித்தானே இறுக்கிப்பிடிப்பார்கள்.... தப்பை நம்மேல் வைத்து விட்டு லண்டனை சொல்லி என்ன பயன்...

வருங்கால லண்டம் மேஜர் போல பேசுறா சுஜி :D

Share this post


Link to post
Share on other sites

எங்கெங்கு என்னென்ன எடுக்கலாம் எனபதில் எம்மவர்கள் நல்ல விளக்கமாகத்தான் இருக்கின்றார்கள்.

இயக்கத்தைவிட்டு வந்து கீத்துறூவில் இமிகிரேசன் லைனில நிற்கும்போது எனக்கு என்னடாப்பா எல்லாம் இப்படியாய் போயிற்றே என்ற யோசனை,அதைவிட அண்ணை வீராப்பா போனவர் திரும்பி வந்துவிட்டார் என நக்கல் வேறு அடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்கு பின்னால் நின்றவர் எனது முதுகை தட்டுகின்றார்.திரும்பி என்ன விடயம் என்று கேட்டார்.அண்ணைக்கு லண்டனில யாரும் இருக்கினமோ எனக்கேட்டார்.அண்ணையும்,அக்காவும் இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.

ஒருத்தரும் இல்லை என்று சொன்னால்தான் கூடக்காசு தருவார்களாம் என்று சொன்னார்.

இது எப்படி இருக்கு?

Share this post


Link to post
Share on other sites

இயக்கத்தைவிட்டு ,

:D:D

Share this post


Link to post
Share on other sites

உலகநாடுகளில் எல்லாம் தான் தனக்கு என்று அவர்கள் தீர்மானிக்கத்தொடங்கி பலவருடங்களாகிவிட்டன. இனி இன்னொருத்தருக்கு தன் நாட்டுக்குள் இடம் கொடுக்கவோ அல்லது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவோ அவர்களுக்கு நேரமில்லை பணமும் இல்லை. அத்துடன் கொஞ்சமாக இருந்த அவர்களின் மனிதாபிமான நடவடிக்கைகளையும் எமது செய்கைகளால் இழந்து விட்டோம். எமது என்று நான் குறிப்பிடுவது ஒத்து மொத்த வெளிநாட்டுக்காறர்களது நடவடிக்கைகளைத்தான். இதில் ஈழத்தவர் பங்கு மிகமிகக்குறைவு.

Share this post


Link to post
Share on other sites

பின்ன, வாறவங்கள் எல்லாம் சகல வழியிளையும் சுத்தி காசையும் அடிச்சிட்டு, நாட்டையும் பழுதாக்கினா செங்கம்பள வரவேற்பா தருவாங்கள்.

Edited by thappili

Share this post


Link to post
Share on other sites

எனக்கு பின்னால் நின்றவர் எனது முதுகை தட்டுகின்றார்.திரும்பி என்ன விடயம் என்று கேட்டார்.அண்ணைக்கு லண்டனில யாரும் இருக்கினமோ எனக்கேட்டார்.அண்ணையும்,அக்காவும் இருக்கின்றார்கள் என்று சொன்னேன். ஒருத்தரும் இல்லை என்று சொன்னால்தான் கூடக்காசு தருவார்களாம் என்று சொன்னார். இது எப்படி இருக்கு?

யதார்த்தமாய் இருக்கிது.

Share this post


Link to post
Share on other sites

யதார்த்தமாய் இருக்கிது.

அது உண்மையாக இருந்நா இதுவும் உண்மை தானே? முன்பு வெளிநாடுகள் வந்தவர்கள் படிக்காமல் வேலை வெட்டி இல்லாம தண்டமாக இருந்தா ஆக்களாம்? ^_^

Share this post


Link to post
Share on other sites

கனடா காறர் வாற நேரம் போல இருக்கு தெரியாமல் கருத்தை எழுதி போட்டன் மன்னிச்சு கொள்லுங்கோ, உண்மை எப்போதும் சுடும் ^_^:D:(

Share this post


Link to post
Share on other sites

வடிவேலு

தங்களது மெடிகல் லீவு எப்ப முடியுது

முதல்ல நீங்கள் வேலைக்கு போங்கள்.

யாழில ஒரே பிரச்சினையாக கிடக்கு உங்கள அதிகம் இங்க காணுவதால்......? ^_^:D

Share this post


Link to post
Share on other sites

கனடா காறர் வாற நேரம் போல இருக்கு தெரியாமல் கருத்தை எழுதி போட்டன் மன்னிச்சு கொள்லுங்கோ, உண்மை எப்போதும் சுடும் ^_^:D:(

எனக்கு சுடாது..! ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..! விசா. விசா..! :lol:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சுடாது..! ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..! விசா. விசா..! ^_^

இசை எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்

இது உள் குத்தா.....? :D

வெளிக்குத்தா.....? :(

டிஸ்கி :-

அவசியம் ஏற்படின்

புரட்சியின் உதவி நாடப்படும்

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சுடாது..! ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..! விசா. விசா..! :D

அப்ப எங்களைப்போல அகதியா ஓடிவராமல் நீங்களும் ஸ்கொள்ளில விசா எடுத்து வந்தநீங்களா? ^_^

Edited by thappili

Share this post


Link to post
Share on other sites

ம் வரவேற்பினம்.போற இடமெல்லாம் , சுத்துமாத்து பொய் , களவு , கொள்ளை ,கொலை கிறடிட்காட் மோசடி,ஆள்மாறாட்டம் ,பாஸ்போட் சுத்துமாத்து, வங்கி மோசடி, இப்படி எத்தனை? நாறிப்போய் கிடக்கிது.உலகத்தில எந்த ஏயர்போட்டில இறங்கினாலும் அவ்வளவு மரியாதை. வாழ்க தமிழர் வளர்க தமிழர்.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சுடாது..! ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..! விசா. விசா..! ^_^

நீங்க யாரு, உங்களை நான் சொல்வேனா? நீங்கள் மனிதருள் மாணிக்கம் அல்லவா. :D

Share this post


Link to post
Share on other sites

எங்கெங்கு என்னென்ன எடுக்கலாம் எனபதில் எம்மவர்கள் நல்ல விளக்கமாகத்தான் இருக்கின்றார்கள்.

இயக்கத்தைவிட்டு வந்து கீத்துறூவில் இமிகிரேசன் லைனில நிற்கும்போது எனக்கு என்னடாப்பா எல்லாம் இப்படியாய் போயிற்றே என்ற யோசனை,அதைவிட அண்ணை வீராப்பா போனவர் திரும்பி வந்துவிட்டார் என நக்கல் வேறு அடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்கு பின்னால் நின்றவர் எனது முதுகை தட்டுகின்றார்.திரும்பி என்ன விடயம் என்று கேட்டார்.அண்ணைக்கு லண்டனில யாரும் இருக்கினமோ எனக்கேட்டார்.அண்ணையும்,அக்காவும் இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.

ஒருத்தரும் இல்லை என்று சொன்னால்தான் கூடக்காசு தருவார்களாம் என்று சொன்னார்.

இது எப்படி இருக்கு?

இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்டு சொல்பவர்களை லண்டனிற்குள் விட்டது தான் தப்பாய் போச்சு...லண்டன் ஒரு மாதிரி இப்ப தப்பிட்டுது கனடா மாட்டுப்பட்டு முழுக்கிது ^_^

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சுடாது..! ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..! விசா. விசா..! :D

தானும் தன்பாடுமா போய்க்கிட்டு இருக்கிறவன இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க நிற்கிறீங்க.

நீங்க விசாவில பிளேனில வந்திருப்பீங்க..!

நாங்க ஸ்கொல"சிப்"பில வந்தனாங்க ஆக்கும்.

எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கேல்ல. ஏன்னா நான் லண்டனில வசிக்கவோ.. வந்த விடயத்தை கவனிக்கவோ விரும்பல்ல. தூர இடத்துக்குப் போய் நிம்மதியா இருந்தன். வந்த காரியத்தில முதல் கட்டத்தை வெற்றி கரமா முடிச்சன். வந்து 3 கிழமை கொஞ்சம் கஸ்டப்பட்டு வேலை (சட்டப்படி பகுதி நேர வேலை) செய்தன். அப்புறம்.. நல்ல சுப்பர் மார்க்கெட்டில வெள்ளையளோட வேலை கிடைச்சுது. வெள்ளையள் கள்ளம் வேலைக்கு. நாங்க அதை பாவிச்சு கிட்டம்.

எல்லாரும் லண்டனுக்க தான் குந்தனும் என்றால் அவங்க என்ன செய்யுறது. பிரித்தானியாவில எவ்வளவோ இடமிருக்குது. எவ்வளவோ வேலை வாய்ப்புக்கள் லண்டனுக்கு வெளில இருக்குது. படிப்பும் வெளில மலிவு. லண்டனுக்க விலை. வெளில யுனியல் படிக்க நல்ல வசதி மலிவா செய்து தருவினம்.

என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அரசை நான் குறை சொல்லமாட்டன். அவை அவரவருக்கு ஏற்றமாதிரி வசதி அளிக்கினம். நாங்க வந்த உடன பிரிட்டிஷ் என்ற நினைப்பை வளர்த்துக் கிட்டு அலைஞ்சா இப்படித்தான் கதை என்று ஒப்பாரி வைச்சுக்க வேண்டியதுதான். ^_^:(

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

பழைய லண்டன் நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.

நான் வந்தவுடன் இருந்தது நீஸ்டனில். பாடசாலைக்கும்,சனி காலை வேலைக்கும் டுயுப்பில போவேன்.ஞாயிறு காலையும் வேலை செய்ய கேட்டார்கள் அந்த அதிகாலை நேரம் டியூப் இல்லை.அதற்காக ஒரு சைக்கில் வாங்கி நீஸ்டன் இருந்து நயிற் பிறிட்யுக்கு (கரட்ஸிற்கு பின்னால்) சைக்கிலில் கிட்டத்தட்ட ஒருவருடம் ஞாயிறு மாத்திரம் சைக்கிலில் சென்றுவந்தேன்.போன முறை லண்டன் வந்தபோது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே தூரத்தை காரில் போய் காட்ட அவர்களால் நம்பமுடியவில்ல, ஏன் என்னால் கூட நம்பமுடியவில்லை.52 பஸ் போகும் ரூட்டில் போவேன்.

அதைவிட நான் வேலை செய்த கொட்டேல் எப்படி இருக்கின்றதென்று சும்மா கூகிலில் போய் நேற்று பார்தேன்.அவர்களும் ஒரு வெப் வைத்திருக்கின்றார்கள்.அதிலிருந்த போன் நம்மரில் அடித்து ஜோர்ஷ் இருக்கின்றாரா எனக் கேட்டேன்.6 மணிக்கு இரவு வேலைக்கு வருவார் என்றார்கள்.அடப்பாவி நான் இந்தியாவிற்கு போகும் போது உன்னை கொண்டுபோய் அதில் போட்டேன்(84 ஆம் ஆண்டு) இப்பவும் அதில் வேலைசெய்கின்றான்.

இன்றிரவு ஜோர்சுடன் கதைக்க இருக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு  In இலங்கை      November 19, 2019 4:56 am GMT      0 Comments      1082      by : Dhackshala சீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஒரே-நோக்கம்-ஒரே-பாதை-என்ற/
  • 'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க   'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange (Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 14வது அத்தியாயம் இது.) தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவின்முறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in India) மாசிலாமணி. கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டில், அவர் வாழ்ந்து வந்த பகுதியிலேயே வசித்து வந்த கவியரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் மதிவதனி எனும் பெயர் கொண்ட மகளும், 2 வயதில் நீலவேந்தன் எனும் பெயர் கொண்ட மகனும் உள்ளனர். Image captionமாசிலாமணி மதிவதனி பிறந்த ஆறு மாதத்தில் அவளுக்கு தலசீமியா என்கிற ஹீமோகுளோபின் குறைபாடு நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. iamthechange தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க: “எம்மதமும் சம்மதமில்லை” - சாதி,மதமற்றவர் என சான்றிதழ் பெற்றவர் கூறுவது என்ன? இதனால் அன்று முதல் குறைந்தது மாதந்தோறும் ஒருமுறை ரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை சேர்ந்த மருத்துவரான ரேவதிராஜ் அறிவுறுத்தல்படி, 'ஸ்டெம்செல்' சிகிச்சை எடுக்கும் முயற்சியை முன்னெடுத்தனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மகள் மதிவதனிக்கு தாய், தந்தை, தம்பி என உறவினர்கள் எவருடைய குருத்தணு பொருந்தவில்லை. அதனால் கொடையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பதிவு செய்ய சென்ற மாசிலாமணி மற்றும் அவரது கணவர் கவியரசன் என இருவரும் தங்களையும் கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டனர். இது நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு, மாசிலாமணியிடமிருந்து 3 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடை தேவைப்படுகிறது என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைக்கு இத்தனை ஆண்டுகளாக நன்கொடை கிடைக்கவில்லையே என்று காத்திருந்த அவர், குடும்பம் மற்றும் சுற்றம் காட்டிய எதிர்ப்புகளையும் மீறி கணவரின் ஒத்துழைப்போடு எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்த பெண் என்கிற பெருமை எனக்கு கிடைத்திருப்பதை காட்டிலும், தன்னால் ஒரு குழந்தையின் உயிரை காக்க முடிந்ததையே தான் பெருமையாக கருதுவதாக கூறுகிறார் மாசிலாமணி. உலகத்தில் பல கோடி கணக்கானவர்கள், தன்னை போன்ற கொடையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறும் இவர், இதற்காகவே தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் 'ஸ்டெம்செல்' தானம் குறித்தான முக்கியத்துவம் தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் செய்கிறேன் என்கிறார். https://www.bbc.com/tamil/india-50465481
  • ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர். மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார். https://www.virakesari.lk/article/69217
  • ஒரு சமாதானத்திற்காக நோபல் பரிசை வென்றவர் இந்த அம்மையார்.  எவ்வளவுதூரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னராக இவரோ இல்லை இவர் தளபதிகளோ நிறுத்தப்படுவார்கள் என தெரியவில்லை.    அதேவேளை பல தலைவர்கள் நிறுத்தப்பட்டும் உள்ளார்கள்.