• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பொன்னி

பொக்கிசம்

Recommended Posts

என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன்.

குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என்னை அறியாமலே சிரிப்பு வரும். வருடங்கள் பல கடந்து விட்டாலும், நினைவுகள் என்னமும் பசுமையாகவே இருக்கிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு.

உன் அக்கா கோயில் அடியால் போகும் போது உன் பெயரை உரக்க கத்தி அவரை வெறுப்பேத்த எண்ணிய நாட்கள். அந்த சைக்கிள். ஒரே காற் சட்டை. ஒரே சேட். அம்மா அது இரண்டையும் எடுத்து ஒழித்து வைத்த நாட்கள். எல்லாவற்றையும் தொலைத்தது போல ஒரு ஏக்கம்.

காலப் பரபரப்பு. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆணித்தரம், ஊர்ப்பிரச்சனை, எங்களை எல்லாம் கண்டத்துக்கு கண்டம் அலைய விட்டு விட்டது. உன் வீடு வந்த நாள், இன்னமும் நல்ல ஞாபகமாய் இருக்கிறது. தரையில் இருந்து எமது பழைய நாட்களை அசை போட்டது ஒரு இனிய அனுபவம். அப்படியான ஒரு நாள் இனி எப்ப வரும் என்ற ஏக்கமும் இருக்கிறது. நீ கொழும்பு வந்த போழுது உன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு இன்னமும் இருக்கிறது. அன்றைய சூழ் நிலை.அதற்காக நீ என்னை மன்னித்து இருப்பாய் என்று நம்புகிறேன்.

நன்றி, உனது 25 வருட கால நட்புக்கு. என்னை செதுக்கிய உளிகளில் நீயும் ஒருத்தி!

பிரியமுடன் பொன்னி.

Share this post


Link to post
Share on other sites

பொன்ஸ்,

ஆரம்பத்தில் வாசிக்கும்போது நகைச்சுவையாக காணப்பட்டது. ஆனால்.. நடுப்பகுதி தொடக்கம் முள்ளாக குத்துகின்றது. யதார்த்தமான வரிகள்: கதைக்காக எழுதப்பட்டதோ.. அல்லது நிஜமோ.. உங்கள் உணர்வுகளை கிரகித்துக்கொள்ள முடிகின்றது.

Share this post


Link to post
Share on other sites

சேரனின் பொக்கிசம் அவரது மற்றைய படங்கள் அளவுக்கு எனக்கு பிடிக்காவிட்டாலும் கடிதம் எழுதுதல் என்றகோணத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

சுய புராணமோ தெரியவில்லை.76 களில் லண்டன் போன எனது அண்ணர் நான் நாட்டைவிட்டு வெளிக்கிடமட்டும்(81) அந்த 5 வருடங்களில் எழுதிய கடிதங்கள் ஒரு 5 ஆக இருக்கலாம்.ஜேர்மன் போன எனது தம்பி(80) அந்த ஒரு வருடத்தில் ஒரு 6 கடிதம் போட்டிருக்கலாம் அதுவும் மிக சுருக்கமாக.

நான் 81 போய் 84 வரை ஒவ்வொரு கிழமையும் பெற்றோருக்கு ஒருகடிதம் எப்படியும் போட்டுவிடுவேன்.காலை சாப்பிட்ட கோர்ன் பிளக்ஸ் இல் இருந்து பஸ்,டுயுப் பயணம் தொட்டு பின்னர் சாப்பிடும் மக்டொனட்ல்ஸ் அல்லது கென்டக்கி பற்றி பின்னர் இரவு வீடு வந்து சாப்பிடும் சோறு கறி முதல் சந்தித்த நபர்கள்,காலநிலை,பார்த்தபடங்கள் (மூன்றாம் பிறை பார்த்து சிறிதேவிக்கு தேசியவிருது என எழுதினேன் ஆனால் கமலுக்கு கிடைத்தது)வேலையில் பாடசாலையில் சந்திக்கும் நபர்கள் என எனது கடிதம் ஒரு குமுதம் போல் வீட்டிற்கு ஒழுங்காக போகும்.

பின் இந்தியா போக எழுதுவது கொஞ்சம் குறைந்தாலும் பிரான்ஸ் இல் இருக்கும் எனது நண்பனுக்கு சகலதையும் எழுதிவந்தேன்.

பின்னர் திரும்ப லண்டன் வந்து காதலி,மனைவி ஆகப் போகின்றவருக்கு வீட்டிற்கு என்ன மாதிரி கடிதம் போட்டேனே அதே மாதிரி ஒவ்வொரு கிழமையும் அனைத்தும் எழுதுவேன்.மனைவியின் அத்தான் கேட்பாராம் மனைவியிடம் இன்று ஏது புத்தகம் வந்ததா நான் டொய்லெட்டில் இருந்து வாசிப்பதற்கு என்று.

நேரம் இல்லை என சிலர் புலுடா விடும் போது எனக்குள் நான் சிரித்துக்கொள்வேன்.

பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதுவது போல் சந்தோசம் வேறெதிலும் இல்லை

Share this post


Link to post
Share on other sites

நன்றாக இருக்கின்றது பொன்னியின் பொக்கிஷம்!

எங்கே காண நாளைக் காணவில்லை, நலமா! உங்களுடைய "காகம்" அவதார் என் மனதில் பொக்கிசமாய்.... ^_^:D

Share this post


Link to post
Share on other sites
:D:)

Share this post


Link to post
Share on other sites