Jump to content

நான்கு வருசங்கள் படுக்கையில் இருந்த நாட்கள் – விக்ரம்


Recommended Posts

நான்கு வருசங்கள் படுக்கையில் இருந்த நாட்கள் – விக்ரம்: முழுமையான நேர்காணல்

-மு.ராமசாமி

vikramstills07.jpg

“ராவணன் படத்தின் வணிகரீதியான வெற்றியைப் பொறுத்தவரை சலசலப்புகள் இருந்தாலும் ராவணனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்தவர் – விக்ரம்.

அடுத்தடுத்து இரண்டு படங்களுக்காகத் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் விக்ரம் தன்னுடைய பயணத்தின் சிரமங்களை விவரிக்கிற விரிவான நேர்காணலை இங்கே தருகிறோம். பேட்டி கண்டவர் வஸந்த் செந்தில்.

இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. 14 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த விருதை அடைந்திருக்கும் விக்ரம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. தன்னம்பிக்கையின் வேரை அசைத்துப் பார்க்கும் புயல் வீசிய போதும் தன் தீட்சண்யத்தால் கரை கடந்திருக்கிறார் விக்ரம்.

சமூகம் புறக்கணித்த இதயங்களின் வலி மிகுந்த வேதனையை இவருடைய கதாபாத்திரங்கள் கண்முன்னே நிறுத்துகின்றன. தமிழில் வசூலில் சாதனை செய்த மிகப்பெரும் படங்கள் இவருடையது. மக்களின் ஏகோபித்த அன்புக்குக் காரணமாக இருக்கிற அதே நேரத்தில் தீவிர சினிமா தேடும் கலைஞனாகவும் இருக்கிறார்.

தமிழ் திரைக்கலை மறுபடியும் ஒரு தங்கத்தாமரையைச் சூடிக்கொள்வதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளலாம். விருது அறிவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிற தருணத்தில் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் விக்ரமைச் சந்தித்தோம். அதே பழைய உற்சாக விக்ரம். கர்வத்தின் நிழல் இல்லை. உழைப்புத் தந்த பெருமிதத்தில் முகம் சிவந்து மின்னுகிறது. ‘அந்நியன்’ சுருள் முடிகள் அலைபாய நொடிக்கு மாறும் முகபாவங்களுடன் நம்மிடம் உரையாடினார். இடையே வீட்டின் கலைப்பொருட்கள் சரியான இடத்தில் அவரால் வைக்கப்படுகிறது. சாய்ந்த சுவர்ப்படம் நேராக்கப்படுகிறது. இதுவரை பெற்றிருக்கிற பரிசுக்கோப்பைகளும், விருதுகளும் தங்கத் தாமரைக்காக தனி ஒரு இடத்தை தயார் நிலையில் வைத்துக் காத்திருக்கின்றன. மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த உரையாடல் வெறும் ஒரு நடிகனின் வாழ்க்கைப் பதிவு அல்ல. போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த கலைஞனின் தளராத தன்னம்பிக்கை பறித்துக் கொடுத்த வெற்றிகரமான வாழ்க்கையின் ஆவணம். அவரது குடும்பப் பின்னணியிலிருந்து இயல்பாகத் துவங்குகிறது நேர்காணல்...

என்னுடைய பூர்வீகம் பரமக்குடி. அப்பா நடிக்கிற ஆசையில சென்னைக்கு வந்து நிரந்தரமாக செட்டில் ஆனவர். இப்பக்கூட நடிச்சுக்கிட்டு இருக்கார். விஜய்க்கு அப்பாவா ‘திருப்பாச்சி’ படம் பண்றார். அவரோட ஆர்வத்தோட ஒப்பிட்டால் என்னோட ஆர்வம் பாதிதான் இருக்கும். நாடி நரம்பெல்லாம் ஒரு நடிகனா ஜொலிக்கணும்கிற வெறி இப்பவும் அவர்கிட்ட இருக்கு. ஆனா அவர் விரும்பின இடத்தை அவர் அடையலைன்னுதான் நினைக்கிறேன். அம்மா டெபுடி கலெக்ட்டரா இருந்து ரிட்டயர் ஆனவங்க. நாம புத்தகங்கள், கதைகள், புராணங்களிலெல்லாம் படிக்கிற அம்மாவைவிட பத்து மடங்கு மேல் எனக்கு அவங்க. இப்படிக்கூட யாராவது தன் பிள்ளைகளைப் பார்த்துக்க முடியுமான்னு இப்ப நினைச்சா வியப்பா இருக்கு. அவங்களோட ஆன்மாவே தாய்மையில செஞ்சது. என்னோட வலி சந்தோஷம் இரண்டிலேயும் அவங்களோட கண்ணீரும் சிரிப்பும் உறைஞ்சிருக்கு.

தவிர வீட்ல நான்தான் பெரிய பையன். அப்புறம் தங்கை, தம்பி. தங்கை திருமணமாகி வீட்டோட சந்தோஷமா இருக்காங்க. தம்பி மூணாறுல ஒரு ரிசார்ட்ல வேலை பாக்கறான். எனக்குப் பின்னால இரண்டு பசங்க இருந்தாலும் வீட்ல நான்தான் ரொம்ப வால்தனம் பண்ணுவேன். சமாளிக்க முடியாத அளவுக்குன்னு இப்பக்கூட அம்மா சொல்றாங்க. ஒரு தடவை எதிர்வீட்டுப் பையனை கூப்பிட்டு வச்சிக்கிட்டு பிளேடால கையைக் கீறி ‘இரத்தம் பாத்திருக்கியாடா நீ...?’ன்னு கேட்டபோது அவன் அலறி ஓடிட்டான். ஆனா அப்பா பார்த்திட்டாரு. ரெண்டு அடி. சின்னதா ஒரு கட்டு. கொண்டு போய் ஏற்காடு போர்டிங் ஸ்கூல்ல விட்டுட்டாரு. Of all the animals, the boy is the most unmanageable – னு பிளேட்டோ சொன்னது ஞாபகத்துக்கு வருது.

பள்ளி நினைவுகளை ஞாபகத்தில் வச்சிருக்கீங்களா?

ரொம்ப பசுமையா இருக்கு. தேர்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்து ஏற்காடு மான்ட்போர்ட் ஸ்கூல்தான் என் உலகம். எப்போதும் குளிரும் பனியுமா ஈரம் அடிச்சுகிட்டே இருக்கும். சின்னச் சின்ன ரைம்ஸ்ல ஆரம்பிச்ச நாள் அது. லேசா வீட்டைப் பிரிஞ்ச துக்கம் கண்ணுல தளும்பும். இங்கிலீஷ் டீச்சர் தட்டிக் கொடுப்பாங்க. அவங்களோட இதமான பேச்சே ஒரு ரைம்ஸ் மாதிரி இருக்கும். ‘புஸி புஸி கேட்’டெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். வேர்ட்ஸ்வர்த்தோட வரிகளை பாடச் சொல்லுவாங்க. இப்பக் கூட ஞாபகத்தில் இருக்கு. There was a little girl / who had a little curl / Right in the middle of her forehead னு ஒரு வெஸ்டர்ன் மாடல்ல பாடுவோம். அந்த வயசுக்கே ஸ்கூல்ல சின்னச் சின்ன ப்ளே எல்லாம் உண்டு.

மூணாவதுதான். நீ ஒரு ப்ளேல ஆக்ட் பண்றேன்னு எங்க டீச்சர்ஸ் சொல்லிட்டாங்க. ஸ்டீம் போட்னு பெயர்.

அது ஒரு மியூசிகல் ப்ளே சும்மா அனுப்பினாங்க. நான் போய் நின்னேன். நடிச்சேன். அந்த டைம்ல என்ன நடிப்பு? சும்மா பாட்டு எல்லாம் பாடனும். வசனம் எல்லாம் எதுவும் கிடையாது. லேசா மியூசிக்கின்போது ஆடனும். அங்க ஒரு மியூசிக் பேன்ட் இருந்துச்சு. அந்த நாடகம் நடக்கும்போது ஒவ்வொரு நாடகத்துக்கும் நடுவுல அந்த மியூசிக் இருக்கும். சிம்பள், ஹார்ன் கத்துக் கொடுத்தாங்க. நாடகத்தையும் விட மனசில்லை. அந்த பேன்ட் வாத்தியார் வந்து, ‘அவனுக்கு எல்லா பக்கமும் ஆசை. நாடகம் அப்படி இப்படின்னு போறான்’னு சொல்லி மியூசிக் பக்கம் வேண்டாம்னு சொல்லிட்டார். கண்ணுல தண்ணி முட்டுது. அப்ப அந்த வயசுல அது ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

ஆனா நல்லா யோசிச்சுப் பார்த்தா மனசு எல்லாத்தையும்விட நடிக்கறதைத்தான் விரும்பி இருந்திருக்கு. அப்புறம் ஆறாவது, ஏழாவது வரைக்கும் ஒண்ணு ரெண்டு ப்ளே அவ்வளவுதான்.

ஸெவன்த் ஸ்டாண்டர்ட்ல மறுபடியும் ஒரு நல்ல நாடகம் போட்டாங்க. ‘க்ரீம்ஸ் அன்ட் கோக்கனெட்’னு ஒரு ப்ளே அது. நான் ஒரு டிடெக்டிவ் மாதிரி ஹீரோ. மெயின் கேரக்டர்ஸ் தீவிரவாதிகள் ஜெர்மன்ஸ். அப்ப மஹிந்தான்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்குச் சொந்த ஊர் ஸ்ரீலங்கா. அவன் பிரமாதமாச் செய்வான். கூடவே அமித் மித்தா, அனில் குமார்னு நிறையப் பேர் இருந்தாங்க. என்னோடது சின்ன ரோல். ஆனா முக்கியமான ரோல்.

அப்புறம் அடுத்த வருஷம் ஒரு பெரிய நாடகம் நடந்துச்சு. Doctor Inspite of himself. ஒரு சாதாரண ஆள் சந்தர்ப்பச் சூழ்நிலையால் டாக்டர் மாதிரி ஆகிடுவான். லத்தீன் கிரீக்லலாம் ஏதேதோ உளறுவான். நல்ல நகைச்சுவையான நாடகம் அது. வழக்கம்போல மஹிந்தாதான் ஹீரோ கதாபாத்திரம். எனக்கு ஒரு சப்போர்டிங் கேரக்டர். நாடகம் போடற அன்னைக்கு மஹிந்தாவுக்குப் பிரச்சினை. உடம்புக்கு முடியலை. டீச்சர்ஸ்க்கு என்ன பண்றதுன்னு புரியலை. அடுத்த ஆளை உடனே தயார் செய்ய முடியாது. எனக்குதான் நாடகத்தோட லைன் தெளிவாத் தெரியும். சரி இவனே செய்யட்டும்னு முடிவு செஞ்சாங்க.

நானும் தைரியமா செஞ்சேன். ஹீரோவாயிட்டோம்னு மனசுக்குள்ள ஒரு தெம்பு. நாடகம் பெரிய ஹிட். பள்ளி முழுக்க ஒரே பாராட்டுதான். டெரிக்வாட்னு எங்க மாஸ்டர் இருந்தார். இப்பப் பாக்கற என்னோட ஸ்கூல் ப்ரண்ட்ஸ் எல்லாம் ‘நீ டெரிக் ஸாருக்குத்தான் தாங்க் பண்ணனும்’னு சொல்லுவாங்க. ஏன்னா அந்த நாடகம் முடிஞ்ச அடுத்த நாள் அவர் பெரிய ஸ்பீச் கொடுத்தார். முடிக்கும்போது அவர் சொன்னது இன்றும் ஞாபகம் இருக்கு. Star is born அப்படீன்னு சொன்னார். ஸ்கூல் ஆண்டு மலர்ல கூட அதையே தலைப்பா வச்சு என்னைப் பத்தி ஒரு கட்டுரை எழுதினார். திடீர்னு வந்து ரொம்ப பிரமாதமா நடிச்சேன்னு நம்பிக்கையுடன் சொன்னார். முதல் தடவையா ‘சிறந்த நடிகன்’ பரிசு வாங்கினேன். அப்புறம் தொடர்ந்த வித்தியாசமான நாடகங்கள். ஏதாவது ஒரு கதாபாத்திரம் விநோதமா இருந்தா இதை விக்ரம் செய்யட்டும்னு டிராமா டீச்சர்ஸ் முடிவு பண்ணிடுவாங்க.

அப்ப நடிச்ச நாடகங்கள் பெரும்பாலும் காமெடிதான். சில நாடகங்களை இன்னும் மறக்க முடியலை. எப்படின்னா ஒரு நோயாளி இருப்பான். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மாட்டான். எந்த நோயை லிஸ்ட் எடுத்தாலும் அவன்கிட்டே இருக்கும். யாருக்கும் என்ன பண்றதுன்னே புரியாது. வெறுத்துப் படுக்கையில இருந்து குதிச்சு ஓடிப்போயிடுவான். இந்தமாதிரியெல்லாம் செய்தோம்.

அப்புறம் அப்பா இறந்து போயிட்டிருப்பார். ஆனா அவர் உயிரோட இருக்கிற மாதிரி அவரை சோபால உட்கார வச்சி அவன் பேசிக்கிட்டே இருப்பான். நாடகம் முடியும்போதுகூட தெரியாது.

நாடகங்கள் தவிர எல்லா விளையாட்டுலேயும் ஆர்வமா இருந்தேன். ஒரு சீசன் முழுக்க கால்பந்து விளையாடுவேன். திடீர்னு தொடர்ச்சியா கூடைப்பந்து. இப்படி மாறிகிட்டே இருக்கும். எல்லாத்திலேயும் இருப்பேன். Jack of all trades, master of none மாதிரி. இப்படி இருந்த நேரத்திலதான் மெல்ல சினிமா ஆசை தீவிரமா மனசுக்குள்ள நுழைய ஆரம்பிச்சது.

எங்க மாமா ஒருத்தர் இருந்தார். நடிக்கிறதுலே ஆர்வம் உடையவர். அப்ப அவர் அலைகள் ஓய்வதில்லை படத்தில் சின்ன ரோல் செஞ்சிருந்தார். அந்த விஷயம் எனக்கு ஒரு கவர்ச்சியை ஏற்படுத்திச்சு. அவரைப் பத்தி பத்திரிகையில் செய்தி வந்தா அதை வாங்கி வச்சுக்கிட்டு ரெண்டு மூணு தடவை படிப்பேன். நண்பர்கள்கிட்ட எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு படிச்சுக் காமிப்பேன். போட்டோ வந்திருந்தா எல்லார்கிட்டயும் இவர்தான் எங்க மாமான்னு காட்டுவேன். கொஞ்சங் கொஞ்சமா சினிமா என்னை அப்ப டெம்ப்ட் பண்ண ஆரம்பிச்சுது.

நடிகனாகனும்கிற ஆசை என் மனசைக் கிளற ஆரம்பிச்ச உடனே கராத்தே, நீச்சல்னு எல்லாத்தையும் கத்துக்க இதெல்லாம் தேவைப்படும்னு தோணுச்சு. ஒரு கோல் போஸ்ட் பக்கம் போனா கூட அதைப் பிடிச்சு ஒரு தொங்கு தொங்கி எகிறிக் குதிப்பேன். சிரிக்கிற ப்ரண்ட்ஸைப் பார்த்து ‘டேய்.. சினிமால நான் இப்படி பண்ண வேண்டியிருக்கும்டான்னு சொல்லுவேன். மரத்தடி மரத்தடியாகக் கனவுகளைச் சேர்த்து வைப்பேன். பெரிசா படிப்பு பக்கம் மனசு போகலை.

தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் ஆரம்பிச்சேன். ரன்னிங் போவேன். அப்பவே ஜிம்மிங் வேற ஆரம்பிச்சுட்டேன். ஒன்பதாவது படிக்கும்போதே உடம்பை ஜிம்முக்குப் போய் பக்காவா ரெடி பண்ணனும்னு தோண ஆரம்பிச்சுட்டுது. அப்பவே வெயிட் லிப்ட் எல்லாம் பண்ணுவேன். அதனாலவோ என்னவோ உயரம் கொஞ்சம் தடைபட்ட மாதிரி தோணும். என்னோட தம்பி என்னைவிட உயரமா இருந்தான். அப்ப ஒரு வாத்தியார் கிட்ட போய் ஸார் சினிமாவுல நடிக்க ஹைட் பாதிக்குமான்னு கேட்டேன். அவரு ‘யாரு சொன்னா? அதெல்லாம் கிடையாது போ...’ன்னார். பசங்ககிட்ட வந்து சொன்னா, அவன் சொல்றான். ‘டேய் அவரே குள்ளம். அவருகிட்ட கேட்டா அப்படித்தான் சொல்வாருன்னு. இவன்தான் பொறாமையில நம்மைக் கவுக்கப் பாக்கறான்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

அடுத்த வருஷ சினிமாவுக்கு நடிக்கிற மாதிரி நான் தயாராகறதைப் பார்த்து வீட்ல மிரண்டாங்க. அப்பா சொன்னார். கொஞ்ச நாள் அப்படித்தான் இருப்பான். தானா சரியாயிடும் விட்டுருங்கன்னு. ஆனா சுத்தமா முழுமையா தீவிரமா நான் சினிமாங்கற கனவுக்குள்ள இருந்தேன்.

அப்ப தமிழ் சரியா வராது. காரணம் ஆங்கிலோ இன்டியன் ஸ்கூல். காம்பௌன்ட் சுவருக்கு உள்ள ஆங்கிலம்தான் பேசணும். காலேஜுக்குப் பிறகுதான் தினத்தந்தி படிச்சுப் படிச்சு தமிழ் கத்துக்க ஆரம்பிச்சேன். வீட்ல என்ன சொன்னாலும் கேட்காம நாடகத்திலேயே இருந்தேன். அப்ப பள்ளிகளுக்கு இடையில எல்லாம் நாடகப் போட்டி நடக்கும். ஜெயிக்கற ஸ்கூலுக்கு வி.கோபாலகிருஷ்ணன் கோப்பை. அது ஒரு சுழற்கோப்பை வெற்றி பெறுகிற பள்ளிகளுக்கு மாறிகிட்டே இருக்கும். அதை வாங்கறதுக்கு ஒரு போட்டி. மூன்று முறை எங்களுடைய பள்ளிக்காக நான் அதை வாங்கினேன். மறுபடியும் சிறந்த நடிகன் விருது.

அந்த கோப்பைக்கு போராடினதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அதை ஜெயிக்கிற நாடகத்தைப் பெண்கள் பள்ளியில போடச் சொல்லுவாங்க. எங்களுக்குள்ள அதனால இன்னும் பெரிய போட்டி. பொண்ணுங்களுக்கு முன்னால கலக்கற வாய்ப்பு இல்லையா?

இதுதவிர ஸ்கூல்ல நிறைய பெட்ஸ் இருக்கும். வளர்ப்பு மிருகங்கள், புறா, அணில், குருவி மாதிரி. நான் எப்பவும் அதுங்க பக்கத்திலேயே இருக்கப் பார்ப்பேன். சாப்பிட்டுட்டு வந்தா மங்கிகேஸ் பக்கத்தில நின்னு அரை பிஸ்கட் போட்டுக்கிட்டு இருப்பேன். போர்டிங்ல இருந்ததாலவோ என்னவோ, பெட்ஸ் ரொம்ப பிடிக்கும். கூடவே அங்க இங்க உட்கார்ந்துகிட்டு கனவு காணறதுதான் வேலை. டோட்டலா இர்ரெஸ்பான்ஸிபிள். அது இல்லாம இரண்டு முறை காப்டனா இருந்திருக்கேன். ப்ளஸ் டூ படிக்கும்போது நான்தான் ஹவுஸ் கேப்டன். சுமாரா படிச்சாலும் நம்ப மாட்டீங்க ப்ளஸ் டூல நான் பர்ஸ்ட் க்ளாஸ் எடுத்தேன். என் க்ளாஸ்ல நூறு சதவிகிதம் பர்ஸ்ட் க்ளாஸ் ஆனா அந்த நூறு சதவிகிதம் பர்ஸ்ட் கிளாஸ்ல நான்தான் கடைசி மார்க். இங்கிலீஸ் மாஸ்டர் சொன்னார், ‘ஏதாவது ஒரு சாதனை உன்கிட்ட இருக்குடா...’

வீட்ல நீங்க படிக்கிறதை விட்டாச்சுன்னு மனசைத் தேத்திக்கிட்டாங்களா?

இல்லை. இல்லை. ஸ்கூல்ல நான் குறைவான மார்க் எடுத்தாலும் மற்ற பள்ளி மாணவர்களோட ஒப்பிடும்போது அது நல்ல மார்க்தான். அறிவியல் கணக்கு வேற படிச்சேன் இல்லையா? டாக்டருக்கு ட்ரை பண்ணலாம்னு வீட்ல யோசிச்சாங்க. கிடைக்கலைன்னு சரி, பல்டாக்டர் சீட் முயற்சி செய்தால் அதுவும் கிட்டத்தட்ட கிடைக்கற மாதிரி இருந்து விழுந்துடுச்சி. அம்மா ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்லி ஐடியா கொடுத்தாங்க. அதுக்கு பி.எஸ்சி. படிக்கணும்னு கெமிஸ்ட்ரி எடுக்கச் சொன்னாங்க. அமோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைட்னு யோசிச்சாலே எனக்கு டெஸ்ட் ட்யூப் வெடிக்கிற சத்தம் கேக்கும். யோசிச்சேன். பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் எடுத்துக்கிட்டேன். அப்படி இப்படிப் படிச்சா போதும்னு தோணுச்சு. லயோலா கல்லூரியில சேர்ந்தேன். அங்க லயோலா தியேட்டர் சொஸைட்டி இருந்துச்சு. எல்.டி.எஸ். மறுபடியும் நாடகங்கள்.

பள்ளி நாட்களில் Jack of all Trades–னு சொன்னீங்களே?... கல்லூரி வந்ததும் நிறைய விஷயங்களைக் கை கழுவிட்டீங்களா?

லயோலால சேரும்போது நடிக்கணும்னு வெறித்தனமாக இருந்துச்சு. பசங்க என்னோட மத்த விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டு இங்க வா, அங்க வான்னு கூப்பிடுவாங்க. ஸ்கூல் படிக்கும்போது லெவன்த், டுவெல்த் ரெண்டு வருஷமும் நான்தான் பாக்ஸிங் சாம்பியன். இதைத் தெரிஞ்சதும் பசங்க வாடா பாக்ஸிங்குக்குன்னு கூப்பிட்டாங்க. எனக்குப் பயம். நாம நடிக்கலாம்னு இருக்கோம். இவனுங்க பாக்ஸிங்னு கூப்பிட்டு வைச்சு மூக்கை உடைச்சிட்டா என்ன பண்றதுன்னு யோசனை. நசுங்கின மூக்கை வச்சிருந்தா அதிகபட்சம் நாலு கேரக்டர்தான் பண்ணமுடியும். வேணாம். ஆளை விடுங்கன்னு சொல்லிவிட்டு நாடகம் பக்கம் மட்டும் இருந்துகிட்டேன்.

கல்லூரியில் சுலபமா உங்களை நாடகப் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததா?

எல்.டி.எஸ்ல சேர்ந்தேனே தவிர உடனே கவனத்துக்கு வரமுடியலை. துக்ளக்னு ஒரு நாடகம். ஆடிஷனுக்குப் போனேன். ரோல் கிடைக்கலை. அப்புறம் பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டாங்க. பிறகு ரெண்டு மூணு நாடகத்தில் சின்னச் சின்ன ரோல். நிறைய தியேட்டர் வொர்க்சாப்பில் கலந்துக்கிட்டேன். இப்பக் கூட அந்த விஷயங்கள் ரொம்ப உதவியா இருக்கு. வீடு அப்ப வள்ளுவர் கோட்டம்லதான் இருந்தது. நடந்தே கல்லூரிக்குப் போய் விடுவேன். பொதுவா வெளியில எங்கேயும் போகமாட்டேன். க்ளாஸ்ல எல்லோருமே நல்ல நண்பர்கள்தான். ஆனா யாரோடவும் வெளிய போய் சுத்தறதில்லை. என் ப்ரண்ட் ரமேஷ் இருப்பான். இப்போ சன் டி.வி.யில இருக்கான். அவன் மட்டும் நெருக்கம். சில நேரத்தில ஸ்டெர்லிங் ரோடு முனையில உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்திட்டு வருவேன். நேரா வீடுதான். எப்பவும் வீடுதான். க்ளாஸ் கட் அடிக்கறதே இல்லை. பி.ஏ.லே டிஸ்டிங்ஷன் வாங்கினேன். வீட்டுக்குள்ளேயே இருந்ததால அதுக்குத் தோதா ஷட்டில் விளையாடுவேன். அது வெளியே போய் விழுந்தாகூட அம்மாவைக் கூப்பிட்டு ‘மம்மி போய் எடுத்திட்டு வந்திரவா’ன்னு கேட்டுட்டுத்தான் போவேன். ரமேஷ் இதுக்கு மட்டும் ரொம்ப கிண்டல் செய்வான்.

கொஞ்ச நாள்ல லயோலால நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு நாடக ட்ரூப் ஆரம்பிச்சோம். நிறைய நாடகங்கள் போடுவோம். அப்ப மெட்ராஸ் ஐ.ஐ.டி.ல ஒரு டிராமா காம்பெடிஷன் அறிவிச்சாங்க. நாங்க Black Comedyனு ஒரு நாடகம் தயாரிச்சோம். நான்தான் ஹீரோ. அதுக்குள்ளவே பசங்க எல்லாம் நீதான்டா சூப்பர். நீதான்டா ஹீரோன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரே உற்சாகமா கிளம்பி ஐ.ஐ.டி.க்குப் போயிட்டோம். நாடகம் ஆரம்பிச்சுது. அந்த நாடகம் ஒரு வித்தியாசமான கான்ஸெப்ட். அப்ப கமல் சார் கூட அந்தமாதிரி ஒரு ஐடியாவை டி.வி.யில செய்தார். என்னன்னா நாடகம் ஆரம்பிச்சா ஒரே இருட்டா இருக்கும். பேசிகிட்டே இருப்போம். திடீர்னு அச்சச்சோ கரண்ட் போயிடுச்சேன்னு சொல்லும்போது லைட் வரும். வெளிச்சத்தில நடக்கிறதை எல்லாம் இருட்டில நடக்கிற மாதிரி எடுத்துக்கணும். உல்டா பண்ணியிருப்போம். நாடகம் ஜாலியா இருக்கும். இரண்டு பேர் இருப்பாங்க. ஒருத்தன் ஹோமோசெக்சூவல் பர்ஸன். இன்னொருத்தனுக்கு மூணு பெண் நண்பர்கள். திடீர்னு மாமனார் வந்துடுவார். பக்கத்து ரூம் ஆள் வெளியில போயிருக்கான்னு நினைச்சு அங்க இருந்த பர்னிச்சர எல்லாம் இவன் கொண்டு வந்திடுவான். திடீர்னு அவன் வந்துடுவான். மாமனாரும் வந்துடுவாரு. மூணு பொண்ணுங்களும் மாத்தி மாத்தி வந்துடுவாங்க. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஒளிச்சு வச்சு ஒரே காமெடியா இருக்கும்.

ஆனா நாடகம் தொடங்கும்போது இருட்டுல தானே ஆரம்பிக்கும். இருட்டில் வசனம் பேசிக்கிட்டிருந்தா, பசங்களுக்குப் பொறுமை இல்லை. லேசா ஆரம்பிச்ச சத்தம் எங்களை வெறுப்பேத்தற அளவுக்கு பயங்கரமா ஆயிடுச்சு. அதைக் கேட்டுக்கிட்டே சமாளிச்சு நடிச்சு முடிச்சோம். லைட் போட்ட உடனே புதுசா இருக்கேன்னு கவனிச்சாங்க. நாடகம் முடிஞ்சதும் பயங்கரக் கைத்தட்டல். ஐ.ஐ.டி. நோட்டிஸ் போர்டில் யாரோ எழுதிட்டுப் போனாங்க First time we have seen such an excellent playன்னு. மனசுக்குள்ள ஒரே உற்சாகம். உடனே வீட்டுக்குப் போகணும்னு தோணலை. பேசிகிட்டே ஐ.ஐ.டி.யில பெரிய கேம்பஸ் இல்லையா? அதுலே நடந்துவந்தோம். அப்புறம் ஒரு ப்ரண்டோட கார்ல வீட்டுக்கு வர்றதா இருந்துச்சு. திடீர்னு வெங்கட்னு ஒரு பிரெண்ட், அவன் வந்து என்னோட கேர்ள் ப்ரண்ட் வந்திருக்கா. நான் கார் எடுத்துப் போறேன். நீங்க பைக்ல போங்கன்னான். சரி. அவனாவது என்ஜாய் பண்ணட்டுமேன்னு சொல்லி நாங்க பைக்ல கிளம்பினோம். அந்த ராத்திரியில திரும்பி வரும்போது எதிரே ஒரு லாரி வந்து சர்வசாதாரணமா இடிச்சது.

விபத்தா?

ஆரம்பத்திலே அது பெரிய விபத்து மாதிரி தோணலை. லாரி இடிச்ச நேரத்தில மயக்கம் போட்டு விழலை. அவனும் விழுந்திட்டான். நானும் விழுந்துட்டேன். பைக்கோட முன்சக்கரம் பின்சக்கரத்தைப் பார்க்குது. லாரிக்காரன் போதை தெளிஞ்சு வண்டியை ஒழுங்கா ஓட்டிக்கிட்டுப் போயிட்டான். என்னடா இது இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்சிக்கிட்டு எழுந்திருக்கப் பார்த்தா முட்டி முதுகுப்பக்கம் திரும்பிக்கிட்டு இருக்குது. கைல திருப்ப முடியாத மாதிரி குழப்பமான கோணல். ஒரே வலி. மெல்லமா பக்கத்திலிருந்த ஒரு ஆஸ்பிடலுக்குப் போனா காலை உடனே எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. பிறகு அங்கிருந்து தப்பிச்சு விஜயா ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தோம். டாக்டர் மோகன்தாஸ் இருந்தார். மூன்று மணி நேரம் தாமதமா வந்திருந்தா காலை எடுத்திருப்பேன்னு சொன்னார். சரி, காலை எப்படியும் நம்மகிட்டயே குடுத்திடுவாருன்னு தோணுச்சு. அப்புறம் இருபத்திமூன்று ஆபரேஷன். ஒரே இடத்தில் நிறைய இன்பெக்சன். மூணு வருஷம் ஹாஸ்பிடலுக்கு வீட்டை மாத்திட்டாங்க. தொடர்ச்சியா இல்லை. ஆறுமாசம் ஹாஸ்பிடல் ஒரு வாரம் வீடு. திரும்ப ஹாஸ்பிடல் இப்படியே இருந்தேன். Real tough time in my life.

மனசளவில் தளர்ந்து போகாம இருக்க முடிந்ததா?

இருந்தேன். அப்பக்கூட நடிகனாகணும்கிற வெறி குறையவே இல்லை. இப்ப எல்லோரும் கேக்கிறாங்க. சினிமாவில வெற்றி கொடுக்க பத்துவருஷம் காத்திருந்தீங்களேன்னு சொல்லும்போது இந்த பத்து வருஷம் எனக்கு கஷ்டம் இல்லை. ஹாஸ்பிடல்ல இருந்த நாலு வருஷம்தான் வேதனை, துயரம், நம்பிக்கை இழப்பு எல்லாம். Tough times never last but tough people do னு சொல்ற மாதிரி ஒரு நெருப்பை அணையாம பொத்தி பொத்திக் காப்பாற்றினேன். நீங்க நம்ப மாட்டீங்க. நாலு வருஷம் நான் நடக்கவேயில்லை. படுக்கையிலதான் இருந்தேன்.

கால் பெரியதா வீங்கிக் கிடக்கும். கீழ் கால்ல ஆபரேஷன் பண்ணியிருப்பாங்க. அளவுக்கு அதிகமான வீக்கம். டாக்டர் வீக்கம் குறையறதுக்காக மாசக் கணக்குல வெயிட் பண்ணாங்க. வீங்கின காலை வேற யார் கால் மாதிரியோ பார்ப்பேன். யாருக்கோ வலிக்குது. விக்ரம் இது உன்னுடையதில்லைன்னு சொல்லிக்குவேன். அப்படி நம்பிக்கையா இருந்தபோது காங்கிரீன் வந்துடுச்சு. காங்கிரீன் வந்தா அந்த இடத்துல இரத்தம் சுத்தமா தடைபட்டுப் போயிருக்கும். காலையே வெட்டி எடுக்க வேண்டியதுதான். கெட்டதிலயும் ஒரு நல்லது மாதிரி. எனக்கு வந்த காங்கிரீன் மேலோட்டமா இருந்தது. கால் தப்பிச்சுது. அம்மா கூடவே இருந்தாங்க.

சுத்தமா மடக்க முடியாத இந்த காலை வச்சுகிட்டு எப்படி சினிமாவுல நடிக்கறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். டாக்டர் மோகன்தாஸ்கிட்ட ‘என்ன சார்... காலை மடக்கவே முடியலையேன்னு?’ கேட்டா அவர் பதிலுக்கு ‘உன்னோட கால் உன்கிட்டே இருக்கே, அதை நினைச்சுப்பார்’னு சொல்லிச் சிரிச்சுக்கிட்டே போவார். க்ரச் வச்சுக்கிட்டு ஒருநாள் முழுக்க முயற்சி பண்ணா பத்து அடி போகமுடியும். அவ்வளவுதான், காலை கீழே வைக்க முடியாது. லேசா வச்சா பெரிய நரம்பு இழுத்து வலி சுண்டும். காலை எடுத்துட்டா ஒரு வேளை சுதாசந்திரன் மாதிரி கட்டைக்கால் வைச்சுக்கிட்டு சினிமால நடிக்கலாம்னு நினைச்சு அம்மாகிட்ட ஒருநாள் கேட்டேன். ஒரே அறை. கண்ணுல பூச்சி பறந்துச்சு. அவ்வளவு வேகம். அம்மா என்னை முதலும் கடைசியுமா அடிச்சது அன்னைக்குத்தான்.

ஒரு வருஷம் ரெண்டு க்ரச் வச்சுக்கிட்டு அங்கயும் இங்கயும் நகர்வேன். டாக்டர் மோகன்தாஸ் சொல்லிட்டார். இனிமே இவனால நடக்க முடியாதுன்னு. எனக்கு உள்ள வைராக்கியம் விடப்போறதில்லை. நான் நடக்கலைன்னா எப்படி சினிமாவுல நடிக்கறது? அந்த டைம்ல என்ன பண்ணப் போறீங்கன்னு யாராவது கேட்டா – பெரிய நடிகனா வரப்போறன்னு சொல்வேன். நீ நடந்து, அப்புறம் வாய்ப்புக் கிடைச்சு, அப்புறம் படம் ஹிட் ஆகி, அதுக்கு அப்புறம் நிறைய படம் பண்ணி எப்பப் பெரிய ஸ்டாராகிறது? இது பெரிய இல்யூஷன்னு சொல்வாங்க. நான் தீர்மானமா இருந்தேன்.

லயோலால எக்ஸாம் எழுத க்ரச்லதான் போவேன். ரெண்டு பக்கமும் கட்டை வச்சுகிட்டு டக்டக்னு சத்தத்தோட போனா ஒட்டுமொத்த காலேஜும் எட்டிப் பார்க்கும். வேட்டியை மடிச்சுக் கட்டியிருப்பேன். கால்ல ஆபரேஷன் பண்ணி நீளநீளமா கம்பி பத்து பதினைந்து குத்தியிருக்கும். ‘ச்சோ ச்சோ’ சத்தம் எல்லாம் கட்டைச் சத்தத்தில எனக்கு கேட்காது.

இது ஒரு பக்கம். இது இல்லாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப வேறமாதிரி ஹீரோ ஆயிட்டேன். அப்ப நடிக்கறதுக்கு எல்லா கல்லூரியிலிருந்தும் இரண்டு பேர் இரண்டு பேரா ஒரு க்ரூப் சேர்த்திருந்தோம். எல்லோரும் சேர்ந்து போய் பிரிட்டீஷ் கவுன்சில்ல நாடகம் போடுவோம். WCC, எத்திராஜ், ஸ்டெல்லா மேரிஸ் இப்படி எல்லா கல்லூரியும் உண்டு. அதனால எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாகிடுச்சு.

ஹாஸ்பிடல்ல நான் அட்மிட் ஆனது தெரிஞ்சு எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. சாயந்திர நேரத்தில விஜயா ஹாஸ்பிடல் ஏதோ காலேஜ் வகுப்பு மாதிரி மாறியிருக்கும். ஸ்டூடன்ஸ், ஹெட் மிஸ்ட்ரஸ், பிரின்ஸ்பல் எல்லாரும் வந்துருவாங்க. ஏகப்பட்ட கூட்டத்தைப் பார்த்து வெறுத்துப்போன டாக்டர் மோகன்தாஸ் ‘நான் நடிகர்கள், அரசியல்வாதிகள்னு நிறையப் பேரை பார்த்திருக்கேன். ஆனா இப்படிக் கூட்டம் கூட்டுற ஆளை இப்பத்தான் பார்க்கிறேன்’னு அம்மாகிட்டே சொல்லிட்டு, ‘வேணும்னா நீங்ககூட போயிடுங்க உங்கப் பையனை நானே பார்த்துக்கறேன்னு’ சொன்னார். காரணம் விசிட்டர்ஸ் நிறைய வந்தா இன்பெக்சன் வரும். அப்படியும் பசங்க அவர் வரும்போது போயிட்டு அப்புறம் திரும்ப வந்துடுவாங்க.

அவ்வளவு மோசமான நிலைமையிலும் ஹாஸ்பிடலில் ரொம்ப உற்சாகமா இருப்பேன். ஒரே கலாட்டாதான். சிஸ்டர்ஸ் எல்லோரையும் அக்கா, தங்கச்சின்னு கூப்பிட்டு வம்பு பண்ணுவேன். எல்லாம் ரொம்ப நட்பாயிட்டாங்க. ஹாஸ்பிடல் ரூமுக்குள்ளேயும் சும்மா இருக்கறதில்லை. சாப்பாடு டேபிளை வச்சு ‘அப்பர் பாடி எக்ஸர்ஸைஸ்’ பண்ணுவேன். மத்த நோயாளிகள் எல்லாம் வந்து எட்டிப் பார்ப்பாங்க. காலைப் பார்த்தா ட்ராக்சன் எல்லாம் போட்டு கம்பில கட்டி வெய்ட் வச்சு தொங்க விட்டிருப்பாங்க. அதைக் கண்டுக்காம கைக்கும், மார்புக்கும் உடற்பயிற்சி செய்வேன். சில நேரத்துல லேசான சுளுக்குக்குக்கூட சிலர் கத்துவாங்க. அந்த மாதிரி ஆளுங்க வந்தா டாக்டர்ஸ் என் ரூமுக்குக் கூட்டிட்டு வந்து காட்டுவாங்க.

அப்புறம் எவ்வளவு வலி இருந்தாலும் வலிமாத்திரை சாப்பிடவே மாட்டேன். அம்மா பயந்துபோய் பி காம்ப்ளக்ஸ்னு சொல்லி தெரியாம கொடுக்கப் பார்ப்பாங்க. வலிமாத்திரை சாப்பிட்டா உடம்பு கெட்டிடும்னு ஒரு பயம். உடம்பு கெட்டுட்டா எப்படி நடிகனா மாறுவது? வலியில் உயிர் போகும். அம்மா முன்னால உட்கார்ந்திருப்பாங்க. காட்டிக்கக்கூடாதுன்னு சாதாரணமா இருப்பேன்.

இந்த கஷ்டங்களோட படிப்பை முடிக்க முடிஞ்சுதா?

ம். டிகிரி முடிச்சேன். கட்டை வச்சிக்கிட்டு ஊனிக்கிட்டே போய் எக்ஸாம் எழுதி வெளிய வந்தாச்சு. கம்யூட்டர் க்ளாஸ் போனேன். க்ரச்சஸ்ஸோடதான். அதைப் படிச்சு முடிச்சுட்டு அங்கேயே ரெண்டு மாசம் க்ளாஸ் எடுத்தேன். அவங்க அதுக்கு சம்பளமே தரலை. சம்பளத்தை கேக்கலாம்னு நினைச்சா காலை நல்லா பார்த்துக்குங்க ஸார். காபி குடிக்கறீங்களான்னு மாத்திடுவாங்க. அப்புறம் மெதுவா இரண்டு கட்டையில இருந்து ஒரு கட்டைக்கு வந்தேன். அப்புறம் ஒரு கட்டையிலிருந்து சிவாஜி சார் படத்தில் வச்சிருப்பார் இல்லை? அந்த மாதிரி ஸ்டைலான ஸ்டிக்குக்கு மாறினேன். அப்புறம் அதுக்கும் பெரிய கும்பிடு. நான் நடக்க நாலு வருஷம் ஆச்சு.

மறுபடியும் நடிக்க முயற்சி செய்தீர்களா?

ஆமாம். மறுபடியும் நாடகப் பயிற்சி. அப்பப்போ வாய்ப்புத் தேடுதல். அம்மாகூட எதுக்குப்பா நடிக்கணும்? வீட்ல இருந்து உடம்பைப் பார்த்துக்கக்கூடாதான்னு கேப்பாங்க. என் நெஞ்சில இருக்கிற தீ என்னை எரிச்சிடும்னு சொல்வேன். அமைதியாயிடுவாங்க.

திடீர்னு ‘கலாட்டாக் குடும்பம்’னு ஒரு சீரியல் வாய்ப்பு வந்துச்சு. பிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்ச ராஜேஸ்வரிராஜன் டைரக்ட் செய்தாங்க. பதிமூன்று எபிஸோட். எனக்கு ஆறு எபிஸோட்ல நடிக்கிற வாய்ப்பு. ஸ்ரீவித்யா அம்மா, ஏ.ஆர்.எஸ்., ஸ்ரீராம்னு ஒரு பையன், பிஜிலின்னு ஒரு பொண்ணு. எனக்கு அந்தப் பெண்ணோட பாய்பிரண்ட் ரோல். மிடில் க்ளாஸ் குடும்பத்துப் பிரச்சினை அது. என்ன சுவாரசியம்னா சீரியல்ல யாருக்கும் வசனமே கிடையாது. டைரக்டர் சூழலை மட்டும் விவரிப்பாங்க. நாம அதுக்குத் தகுந்தமாதிரி பேசிக்க வேண்டியதுதான். வந்து, அப்புறம் மாதிரியெல்லாம் பேசுவோம். அதைச் சொல்லும்போது எனக்கு ஒரு அசாத்திய நம்பிக்கை. இதை வச்சு கண்டிப்பா பட வாய்ப்பு வரும்னு நம்பினேன். அப்ப ரகுவரன் சார் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ செய்தார். சீரியல் எல்லாம் கவனிப்புல இருந்தது.

திரைப்பட வாய்ப்புகள் வந்ததா?

இல்லை. ஆனா விளம்பரப்பட வாய்ப்புகள் வந்தது. சிவாஜி புரொடக்சன்ஸ் ராம்குமார் சார், சத்யா மூவிஸ் தியாகராஜன் சார், ஏ.ஆர்.ரஹ்மான், அப்ப அவர் திலீப் எல்லாரும் சேர்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு விளம்பரப்படம் எடுத்தார்கள். எனக்கு அதில் நடிக்கிற வாய்ப்பு. ஒருநாள்தான் ஷூட்டிங் நடந்தது. Friend who gives you drug is not your friendனு முடியும். தியாகராஜன் சார் “விக்ரம் ரொம்ப நல்லா நடிக்கறீங்க, சீக்கிரமே என் படத்துக்கு கூப்பிடறேன்”னு சொல்லிட்டுப் போனார். ஆறு மாசத்துக்கு எந்த போன்காலும் வரவில்லை. இடையில் பேப்பர், தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்தேன்.

திடீர்னு ஒருநாள் சத்யா மூவிஸ்ல இருந்து போன். ‘நிலாப் பெண்ணே’ ஆரம்பிக்க முடிவு செஞ்சாங்க. திவ்யபாரதி கதாநாயகி. போனேன். தரணி அங்கே அஸிஸ்டென்டா இருந்தார். தரணி லயோலால என்னோட க்ளாஸ்மெட். தரணி ‘மே’மாதம் பாலு, நடிகர் செல்வா, நான் எல்லோரும் ஒரே பாட்ச். அரவிந்தசாமி எனக்கு ஜூனியர். தரணி வந்து ரொம்ப நெர்வஸாக உனக்குக் கண்டிப்பா ஓ.கே. ஆயிடும்னு சொன்னான். அஞ்சாறு மாசம் ஆச்சு.

ஒரே அமைதி. அப்ப இண்டியன் பாங்குல இருந்து ஐந்துபேர் வந்து பார்த்தாங்க. நாங்க எல்லாம் பாங்க் ஸ்டாஃப். படம் பண்ணலாம்னு இருக்கோம்னாங்க. டீ சாப்பிட்டுட்டு ஓ.கே. சொல்லிட்டேன். ‘என் காதல் கண்மணி’ ஆரம்பிச்சது. பூஜை போட்டு முதல்நாள் ஷூட்டிங் லஞ்ச் ப்ரேக்ல தரணிகிட்ட இருந்து போன், உடனே கிளம்பி வா, நீதான் நிலாப் பெண்ணே ‘ஹீரோன்னான். அன்னைக்குத்தான் முதல்நாள் ஷூட்டிங். நிலைமையைச் சொன்னேன். போடான்னு கோவிச்சுகிட்டு போனை வச்சுட்டான்.

என் படத்துக்கு ஷூட்டிங் நினைச்சா நடக்கும். பணம் இல்லை. அப்புறம் ஒரு லட்சத்தோட வர்றவங்ககூட புரடியூஸரா ஆயிட்டாங்க. பத்து தயாரிப்பாளருக்கு மேல சேர்ந்தும் படம் வரலை. எடுக்க முடியலை. விதியை நொந்துகிட்டேன். கடைசியா அவங்களே படம் நின்னுடுச்சின்னு சொல்லிட்டாங்க.

அந்த நேரத்திலதான் ஸ்ரீதர் படம் வாய்ப்பு வந்ததா?

bheems1500x375.jpg

ஆமாம். ஆனால் உடனே இல்லை. ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு. அடிக்கடி அப்பவே இந்தப் படத்தை விட்டுட்டு நிலாப் பெண்ணேவுக்கு போயிருக்கலாம்னு தோணும். ‘ச்சே நம்மை நம்பி இருந்தவங்களை ஏமாத்தற மாதிரி ஆகிடாதா’ன்னு நானே ஆறுதல் சொல்லிக்குவேன். அப்பதான் நண்பர் ஒருத்தர் ‘ஸ்ரீதர் ஒரு படம் ஆரம்பிக்கப்போறார்... ஹீரோ தேடறார்... போய்ப் பாருங்கன்னு’ சொன்னார். பார்த்தேன். ஏவிஎம் ஸ்டுடியோ. சித்ராலயா கோபு சார் இருந்தாங்க. அடுத்தநாள் ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு வரச்சொல்லிட்டார். டெஸ்ட் பண்ணும்போதே கேமராமேன் சொல்லிட்டார். இவருகிட்ட ஏதோ குறை இருக்குது. சரியா வரமாட்டார்னு. ஸ்ரீதர் சாருக்கு அவசரம். பரவாயில்லை. அடுத்தநாள் காலையில் ஷூட்டிங் வந்துடுன்னு சொன்னார். தப்பிச்சேன் நான்.

அந்தப் படத்தின்போது கவனத்திற்குரிய நடிகராக மாறினீர்களா?

அந்தப் படத்தில் என்னுடைய வெற்றி ஒன்றுதான். அது இயக்குனருடைய கவனத்திற்குரிய நடிகனாக மாறியது. ஸ்ரீதர் சார் ஷூட்டிங் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சரியான இடத்தில் சரியா நகர்ந்து டயலாக் பேசி நடிக்கணும். ஸ்ரீதர் சார் ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்னார். அவனுக்கு கேமரா கவனம், லைட்டிங் சென்ஸ் இருக்கு. கூடவே ஏதோவொரு இயற்கையான ஆற்றல். கண்டிப்பா பிரமாதமா வருவான்னு சொன்னார். எல்லோரும் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷின்னு சொன்னாங்க. அப்படி ஒரு saying இருக்கறதையே நான் அதன்பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன்.

அதன்பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்ததா?

1989ல ‘தந்துவிட்டேன் என்னை’ வெளிவந்தது. அதன்பிறகு கொஞ்சம் பரவாயில்லை. 1991ல மீரா வந்தது. படம் தெளிவா எடுக்கப்பட்டது. நிறைய விளம்பரம். நான் பெரிய நடிகனாயிட்டேன்னு என்னை உறுதிப்படுத்திக்க வச்ச படம் அது. ஆனா சரியாப் போகலை.

அந்த நேரத்தில் பிறமொழிப் படங்கள் வாய்ப்புகள் வந்ததா?

நிறைய வந்தது. நான் தெளிவா ஒரு முடிவோட இருந்தேன். மலையாளப் படமா இருந்தா பெரிய கம்பெனி, பெரிய டைரக்டரா இருந்தா ஓ.கே. சொல்றது என்று. இதனால் ஷாஜி கைலாஷ், ஜோஷி மாதிரி டைரக்டர்களோட செய்ய முடிந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களில்கூட நல்ல ரோல் பண்ணியிருக்கேன். தெலுங்கா இருந்தா யாராயிருந்தாலும் ஓ.கே. ஒரே கண்டிஷன், பாம்பு படம், சாமி படம் பண்ணமாட்டேன். மலையாளத்தில் நல்ல படங்கள், தெலுங்குல காசு, தமிழில் நல்ல படத்திற்காக காத்திருப்பு. இதுதான் அன்றைய சூழ்நிலை.

இடையில பெரிய இடைவெளியா? அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக்கிட்டீங்களா?

மொத்தத்தில் சரியா அமையலை என்று சொல்லலாம். பாலுமகேந்திரா சார் ‘ராமன் அப்துல்லா’ படத்துக்காகக் கூப்பிட்டார். பயங்கரமாகத் தேதிகள் குழப்பம். அவர் சொல்ற தேதிதான் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டார். எதுவும் செய்ய முடியலை. அப்ப விக்கிரமன் படம் ‘புதிய மன்னர்கள்’ செய்திட்டிருந்தேன். இடையில திடீர்னு மணிரத்னம் சார் கூப்பிட்டார். மூன்று முறை சந்திப்பு. விக்ரமை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னதாகக் கேள்விப்பட்டு சாப்பிட முடியாம தூங்கமுடியாம சந்தோஷத்தில் இருந்தேன். பம்பாய் படம். காலையில் மனிஷாகொய்ராலாவுக்கு ஸ்டில்ஸ் எடுப்பாங்க. மாலையில் எனக்கு ஸ்டில்ஸ் எடுத்தாங்க. இப்பக் கூட எனக்கு ஸ்டில் செஷன்னா டென்ஷன். வீடியோ கேமராவா இருந்தா வர்ற வசதி மத்ததில எனக்கு இல்லை. தாடிவேற முரடா காமிச்சது. ‘ஷேவ் பண்ணா புதிய மன்னர்கள் கன்டினியூட்டி போயிடும்னு கவலை. ஜெல் போட்டா இன்னும் முரடா தெரிஞ்சது. மென்மையா வரலை. கடைசியில I will tell youன்னு சொன்னாங்க. அதுவரைக்கும் மணி சாரைச் சுலபமா பார்ப்பேன். அதுக்கு அப்புறம் போன்லகூட பிடிக்க முடியாது. அடடா... இப்பதான் கிளம்பினாருன்னு சொல்லிடுவாங்க. நம்மைக் கழட்டிவிட்டுட்டாங்கன்னு புரிஞ்சது. தாங்கவே முடியலை. அடுத்து ஒருமாசம் வீட்ல தூங்கும்போது திடீர் திடீர்னு முழிச்சுக்குவேன். நெஞ்சு அடைச்சுக்கும். ரொம்ப மனம் உடைஞ்ச நேரம் அது. மெல்லத் தேறி வந்தேன்.

சேது வாய்ப்பு எப்படி வந்தது?

அதுவரைக்குமான போராட்டங்களோட நான் இருந்தது சரியாச் சொன்னா பத்து வருஷம். ராமன் அப்துல்லா சமயத்திலதான் பாலாவைச் சந்திச்சேன். ஒரு படம் செய்யலாம்னு சொன்னார். I thought he is also a another say! அப்புறம் கொஞ்ச நாள் பேச்சே இல்லை. சினிமா அப்படித்தானே? ஏற்கனவே அந்த பட ஹீரோவா விக்னேஷ், கரண், முரளி, செல்வான்னு மாத்தி மாத்திப் பேச்சு அடிபட்டது. அகிலன்னு தலைப்பு வைச்சிருந்தார். கார்ல உட்கார்ந்து பேசினோம். ஓ.கேன்னு சொல்லிட்டேன். திடீர்னு பார்த்தா நிஜமாவே பூஜை. மறுபடியும் கதை கேட்டேன். திரும்பக் கதை கேட்ட போது உள்ளே நெருப்பு பத்திகிச்சு. ஷூட்டிங். பாலா முதல் ஷாட் வைக்கிறார். பயங்கரத் தெளிவு. நல்ல ஆள்கிட்டதான் சேர்ந்திருக்கோம்னு தோண ஆரம்பிச்சது. அப்ப ‘உல்லாசம்’ படம் பண்ணி கொழுகொழுன்னு இருந்தேன். பாலா சொன்னார். ‘இதெல்லாம் சரிபடாது. உடம்பைக் குறைங்க’ன்னு. ஹீரோயினா வந்த கேரளாப் பெண்ணும் எடை பிரச்சினையில மாறி அபிதா வந்தாங்க. பாலாகிட்ட எவ்வளவு வெயிட் குறைக்கன்னு கேட்டேன். நான் உங்களை ஈஸியாத் தூக்கணும் அவ்வளவுதான்னு ஈஸியாச் சொல்லிட்டார். இருபத்தியோருநாள். ஒரு காரட் ஜூஸ். சர்க்கரை இல்லாம. ஒரு பீட்ரூட் ஜூஸ். ஒரு முட்டை. ஒரு முழுநாள் சாப்பாடே இவ்வளவுதான். பாலா தெலுங்கு, மலையாளம் படம்கூட பண்ண வேண்டாம்னு சொல்லிட்டார். வர்ற பாக்கெட் மணியும் கட். அந்த வருத்தமும் சேர்ந்து எடை எக்கச்சக்கமா குறைஞ்சது.

சேது படத்தை ஆரம்பத்திலிருந்தே சீரியஸாக எடுத்துக் கொண்டீர்களா?

ஆரம்பத்தில கொஞ்சம் லைட்டாத்தான் இருந்தேன். ஒரு வாரத்தில மாறிவிட்டது. அதுவும் மொட்டை அடிச்ச உடனே ரொம்பத் தீவிரமாக இறங்கிட்டேன். ஷூட்டிங் நடக்கிற இடத்துக்குப் பதினாறு கிலோமீட்டர் நடந்தே போவேன். ரொம்ப நலிஞ்சு தெரியறதுக்காக. ப்ரேக்ல இங்க வந்தா பாக்கறவங்க என்ன விக்ரம் என்னாச்சு? என்று கேட்பாங்க. படமே இல்லைங்க. இப்ப நான் டிரைவரா மாறிட்டேன்னு சொல்லுவேன்.

இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகும் சேது ரிலீஸ் ஆகாம சோதனை கொடுத்ததில்லையா?

ஆமாம். படம் முடிஞ்சு 67 ஷோ போட்டாங்க. யாரும் வாங்கலை. ஆனா பாராட்டு மட்டும் கிடைக்கும். படம் பார்த்துட்டு அழகாகக் கைதட்டுவாங்க. அவார்ட் கிடைக்கும்னு சொல்வாங்க. படம் மட்டும் ரிலீஸ் ஆகவே இல்லை. போட்டுப் போட்டு காட்டியே மெட்ராஸ்ல இருக்கற அஸிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாம் பார்த்திட்டாங்க. எனக்கோ பயம். படம் ரிலீஸானா எப்படி இருந்தாலும் இவங்கதான் பார்ப்பாங்க. இவங்களே எல்லாரும் பார்த்திட்டா மெட்ராஸ்ல யாரு பார்ப்பான்னு கவலை. படம் எப்படியோ ரிலீஸ் ஆச்சு. கிருஷ்ணவேணியில ரெகுலர் ஷோ. அபிராமி சின்ன தியேட்டர்ல மதிய ஷோ மட்டும். ஒரு வாரம் யாருமே கண்டுக்கலை. அபிராமில இருந்து போன் பண்ணி ‘படத்தைத் தூக்கப்போறோம்னு’ சொல்லிட்டாங்க. வெயிட் பண்ணுங்க சார்னு சொன்னா ‘ஸாரி சார்... அசிங்கமா இருக்கு... பத்து பேர்தான் இருக்காங்க’ என்றார்கள். வெறுத்துப்போயிட்டேன்.

கிருஷ்ணவேணியில போய் தினமும் ஷோ பார்ப்பேன். நூறு முறைக்கு மேல படத்தைப் பார்த்தாச்சு. இரண்டாவது வாரம். அபிராமில இருந்து மறுபடியும் போன். ‘சார்... படம் ஹிட்’னு சொல்றாங்க. தியேட்டருக்குப் போனா மக்கள் அடையாளம் பார்த்து ஒரே கூட்டம் கூடிப்போச்சு. கூட வந்த அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர். என்னைப் பார்க்கக் கூட்டம் தள்ளுனதில அம்மாவுக்கு லேசாக் காயம்பட்டு ரத்தம். டாக்டர்கிட்டப் போலாம்னு சொன்னா அம்மா கண்ணீரோட ‘வேணாம்டா... இது இப்படியே இருக்கட்டும்’னு சொல்லிட்டாங்க. A Star is bornனு டெரிக் சார் சொன்னது மறுபடியும் ஞாபகம் வந்தது.

இடைப்பட்ட நேரத்தில் நிறைய டப்பிங் செய்தீர்கள் இல்லையா?

பிரபுதேவாவுக்கு காதலன், மின்சார கனவு, ராசய்யா படம் செய்தேன். அப்பாஸு-க்குப் படையப்பா வரைக்கும் எல்லா படத்துக்கும் நான்தான் டப்பிங். வினித்திற்குப் ‘புதிய முகம்’ படத்திற்காக செய்தேன்.

சேதுவிற்குப் பிறகு பார்த்தால் ‘ஜெமினி’ இவ்வளவு தூரம் கமர்ஷியலுக்குப் போகவேண்டுமா என்று நினைத்திருக்கிறீர்களா?

அது அப்படி இல்லை. ஒரு நடிகனுக்கு எல்லா பொறுப்பும் இருக்கிறது என்று நினைக்கிறேன். தீவிரமான இயக்குனர்களின் விருப்பமாக இருக்கிற அதே நேரத்தில் நான் மக்களின் கலைஞனாகவும் இருக்க ஆசைப்பட்டேன். ஜெமினி பெரிய வசூல். பெரிய சாதனை. என்னைக் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்தி வைத்தது.

காசி படத்தை முடிவு செய்ததுடன் உங்களுடைய அக்கறை எப்படி இருந்தது?

மற்ற படங்கள் போல் இது இல்லை என்று முன்பே முடிவு செய்துவிட்டேன். மலையாளத்தில் வேற வெற்றிகரமாகக் கவனிக்கப்பட்டது. தமிழில் நான் செய்யப்போகிறேன். என்று முடிவானதுமே சில முன்தயாரிப்புகளைச் செய்ய முடிவுசெய்து விட்டேன். முதலில் இது வழக்கமாகத் தமிழ் சினிமாவில் வருகிற ஒரு பார்வையற்ற பாத்திரமாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தோம். பார்வையற்றவரா? உடனே அவருக்கு ஒரு கருப்புக்கண்ணாடி போட்டுவிடுங்கள் என்பது பொதுவாகவே சினிமாவின் மரபாக இருந்தது. இம்மாதிரி பார்வையற்ற பாத்திரங்கள் உருவாக்கி வைத்திருந்த மனபிம்பங்களை இந்தப் படத்தில் தவிர்க்கலாம் என்று நினைத்தோம். இதன் வெற்றி ஏற்கனவே வேறு மொழியில் பரிசோதிக்கப்பட்டிருந்ததால் மனதில் கொஞ்சம் தைரியமும் இருந்தது.

ஷூட்டிங் தொடங்குவதற்குப் பல நாட்கள் முன்பாகவே பல பார்வையற்றவர்களைச் சந்தித்து அவர்களுடைய நடை, உடை, பாவனைகளைக் கவனித்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். பார்வையற்ற குழந்தைகளுக்கும், பார்வையற்ற இளம்வயதினருக்கும் வேறுபாடு இருந்தது. குழந்தைகளைவிட இளம் வயதினரின் பார்வையற்ற சிரமங்கள் சற்றே குறைந்திருந்தன. அவர்கள் அந்த வயதிற்குள் ஒரு உள்ளுணர்வைப் பெற்றிருந்தார்கள். அந்த உணர்வு அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. அந்த உணர்வை படத்தில் பிரதிபலிக்க முடிவு செய்து நடித்தேன். ஆரம்பத்தில் கண்ணை இமைகளுக்குள் சுருட்டி ஒரு பார்வையற்ற வெறுமையை உருவாக்குவதில் சிரமம் இருந்தது. முதல் பத்து நாட்கள் கடும் கண்வலி ஏற்பட்டுத் தினமும் டாக்டரைப் பார்க்கப்போவேன். டாக்டர், “விக்ரம் இவ்ளோ கஷ்டப்படணுமா?” என்பார். கண் இல்லைன்னா கஷ்டம்தானே சார்... என்று சிரிப்பேன். அப்புறம் மெல்லப் பழகிவிட்டது. ஷூட்டிங் பார்க்க வர்ற பலபேர் எனக்கு நிஜமாவே பார்வை இல்லைன்னு நினைச்சு வருத்தப்படுவாங்க. படம் வந்ததும் எல்லோரும் பாராட்டினதில் கண்வலி எங்கே ஞாபகத்தில் வருது?

பிதாமகன் கதை கேட்ட உடனே முடிவு செய்து விட்டீர்களா?

ஆமாம். தவிர, பாலா ஏற்கனவே ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கார். எனக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்தது. பெரும் நம்பிக்கையில் தொடங்கப்பட்ட படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அந்தப் புதுமையான கதாபாத்திரம் சொல்லப்பட்டபோதே எனக்கு ஒரு ஈர்ப்பைக் கொடுத்தது. இந்திய சினிமாவில் இந்தக் கதாபாத்திரத்தினுடைய நிழல்கூட பதிவாகலைன்னு நினைக்கிறேன். வசனம் வேற இல்லை. படத்தில ‘சக்தி கொடு’ன்னு ஒரே ஒரு வசனம்தான் உங்களுக்குன்னு பாலா சொன்னபோது ரொம்ப சுவாரசியமா இருந்தது.

அந்தvikram2.jpg

படம் நடந்துகிட்டு இருந்தபோது என்னுடைய நண்பர்களே என்னோட சரியா பேசமுடியாம தடுமாறினாங்க. இது விக்ரம் மாதிரி இல்லைன்னு ஒரு நண்பர் அப்புறம் பேசறேன்னு போயிட்டார். படத்துக்காகப் பல மிருகங்களின் குரலைப் பயன்படுத்திக்கிட்டேன். ஏற்கனவே எனக்கு மிருகங்கள் பறவைகள் மேல ஒரு அபார காதல். அவற்றோட குரலை இடம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி உணர்வுகளை வெளிப்படுத்தற அந்த அலறலை படம் முழுக்கப் பயன்படுத்தினேன். படம் முழுக்க டப்பிங்க்காகச் சொல்லைப் பயன்படுத்தாம குரலைப் பயன்படுத்தினோம். அந்தப் பாத்திரம் பாலாவோட கற்பனையைப் பூர்த்தி செஞ்சது. நடிகனாக எனக்கு அது பெரிய வெற்றி. அதற்கான அங்கீகாரம்தான் உங்களுக்கே தெரியுமே?

இந்தியாவின் சிறந்த நடிகர் விருதை எதிர்பார்த்தீர்களா?

சேது படத்திற்கே எல்லோரும் சொன்னார்கள். மனசில லேசா ஆசை இருந்தது. கிடைக்கலை. அப்புறம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமதான் இருந்தேன். ‘பிதாமகன்’ வெளிவந்ததும் இப்படி ஒரு பேச்சு தொடங்கியது. எனக்கும் சேது, காசிக்குப் பிறகு அப்படி ஒரு எண்ணம் தோன்றியது. ஆனா கேள்விப்பட்டபோது நிஜமாகவே ஒரு நிமிஷம் கட்டுப்படுத்த முடியாம சந்தோஷப்பட்டேன். அதைவிட விருது கிடைத்ததைக் கேள்விப்பட்ட பிறகு பலர் சொன்னாங்க. ‘இந்த விருதுக்கு நீங்க தகுதியானவர்தான்னு’ அது ஒரு பெரிய மனநிறைவைக் கொடுத்தது. என்னுடைய ரணங்களின் மேல் சூட்டப்பட்ட ரோஜா மலர் அது.

சற்றே ஒதுக்கப்பட்ட வினோதமான, ஏதோ ஒரு நாவலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது போலத் தோன்றுகிற கதாபாத்திரங்களில் மிளிர்கிறீர்களே?

நிச்சயமாக. இந்த இடத்தில் நான் இயக்குனர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அம்மாதிரி கதாபாத்திரங்கள் கிடைத்த உடனே இதை விக்ரமிடம் பொருத்திப் பார்க்கலாம் என்கிற அவர்களுடைய எண்ணம்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.

என்னுடைய குழந்தைப்பருவ நாடக அனுபவத்தில் இருந்தே இம்மாதிரி கவனிக்கப்படாத கதாபாத்திரங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராக நான் இருந்திருக்கிறேன். இது எப்படி நடந்தது? என்பதைத் தெளிவாக விவரிக்க முடியவில்லை. ஆனால் இம்மாதிரி நாவலில் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் இன்னமும் என்னிடம் பெரிய சவாலை முன்வைக்கின்றன. அதை நான் ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். தவிர ஆரம்ப காலத்தில் முழுமையான நாவல்கள் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது. இப்போது அப்படி ஒரு சூழல் இல்லாததால் அதன் பிரித்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் சுவாரசியத்தை அளிக்கின்றன என்று நினைக்கிறேன்.

A day with jackal என்று ஒரு பழைய ஆங்கிலப்படம். இது ஒரு நாவல். படம் அப்படியே நாவலைப் படிப்பது போலவே படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் Sleeping with pretty woman படமும் நாவலை வைத்துத்தான் எடுக்கப்பட்டது. நான் மிக ரசிக்கிற ஜூலியா ராபர்ட்ஸ் வேறு. நாவலை நவீன சினிமா எப்படி தனக்காக மாற்றிக் கொள்கிறது என்பதற்கு அந்தப் படம் சரியான உதாரணம்.

உங்களைப் பொறுத்தவரை சினிமா என்பதை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆரம்பத்தில் அதன் மேல் இருந்த வசீகரமும், அலங்கார அழைப்புகளும் குறைந்த அந்த அற்புதத்தைத் தரிசித்த, உணர்ந்து கொண்ட நிலையில் இருக்கிறேன். ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ என்று ஒரு படம். சாந்தாராமுடையது. சிலர் பார்த்திருக்கலாம். அதில் ஒரு பாடல் காட்சி. பிருந்தாவன் தோட்டத்து நடனக்காட்சி. முதல் ஷாட்டில் பவுண்டனில் நீர் இருக்காது. நடிகை சந்தியா தனது மிளிர்வான நடனத்துடன் வருவார். பவுன்டன் அருகில் அவர் வரும்போது அதில் நீர் பீய்ச்சி அடிக்கும். மெல்ல நடனமும், நீர் பாய்ச்சலும் அலுக்கிறமாதிரி தோன்றும்போது தண்ணீர் பல நிறங்களில் மாறத் தொடங்கும். சந்தியா நடனம் போலவே, பவுன்டன் நடனமும் அந்தக் காட்சியில் நடக்கும். சினிமாவில் பவுன்டனையும் நடிக்க வைக்க முடியும் என்பதற்கு அந்தக் காட்சி சாட்சி.

பணம், பொழுதுபோக்கு என்பதையெல்லாம் மீறி சினிமாவிற்குப் பல்வேறு விதமான சக்திகள் இருக்கின்றன என்பதை நம்புகிறேன். சினிமாவிற்குப் பலர் பல்வேறு விஷயங்களைக் கொடையாகத் தந்ததாகச் சொல்வார்கள். உதாரணமாக கிரிபித். சினிமாவிற்கு ஒரு அகராதியைத் தந்தார். அதற்கு அறிவைத் தந்தது ஐஸன்ஸ்டைன். இதைப்போன்ற விஷயங்களை விட என்னைப் பாதித்தது ஹுயூமானிட்டி. சினிமாவிற்கு மனிதாபிமானத்தைத் தந்தது சாப்ளின் என்பது நிறைய பேருக்குத் தெரியும். சினிமாவின் இந்த இடத்தை நான் மிக விரும்புகிறேன்.

சாப்ளின் என்றதும் நினைவுக்கு வருகிறது. இன்னும் காமெடி படங்கள் செய்யாமல் இருக்கிறீர்களே?

நல்ல கதை அமையாததுதான் காரணம். ஒரு கலைஞனாக என்னை முழுமைப்படுத்திக் கொள்ள அது உதவும் என்று நினைக்கிறேன். காமெடி மட்டும் இல்லை. நல்ல காதல் படங்கள் கூட இன்னும் நான் செய்ய விரும்புகிறேன். ஆங்கிலத்தில் இரண்டையும் மிக விரும்பிப் பார்க்கிறேன். ஏனோ தமிழில் ஆக்சன் தான் அமைகிறது. பார்க்கலாம்.

ஹாலிவுட் படங்கள் பார்க்கிறீர்களா?

நாவல்கள் படிப்பது, ஹாலிவுட் பங்கள் பார்ப்பது என்கிற இரண்டையும் என்னுடைய தினசரிக் கடமைபோல செய்கிறேன். நாவல்கள் என்னுடைய கதாபாத்திரங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ள உதவுவதை என்னால் உணரமுடிகிறது.

ஹாலிவுட் எல்லாவிதங்களிலும் என்னைக் கவர்வது. எனக்குப் பிடித்த பலர் அதில் உண்டு. முதன்மையானவர் இயக்குனர் ஜோசப் லோசி. அடக்குமுறைக்கு எதிரான அவரது படங்கள் உலக சினிமாவிற்குப் புதிய பார்வையைத் தந்ததாக நினைக்கிறேன்.

பொதுவாக உலக சினிமாவில் பலருக்கு நான் ரசிகன். காட்பாதரின் பிரான்ஸிஸ் ஃபோர்டுகப் போலோ, அகிரா குரசேவா, அவருக்குப் பிறகு நபிஷா ஒஷிமா, இயக்குனர் மைக்கேல் கே, நடிகை ஜுலியா ராபர்ட்ஸ், நடிகை ஆஞ்சலினா சோலி, ப்ரூக்ஸ் என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய ஜாம்பவான்களில் சேகர் கபூர், மீரா நாயர், சத்யஜித்ரே, தமிழில் மகேந்திரன், மணிரத்னம், பாலா, ஷங்கர் எனக்கு பிரமிப்பைத் தருபவர்கள்.

மூடப்பட்ட பல சினிமா தியேட்டர்கள் உங்கள் திரைப்படங்களால் திறக்கப்பட்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அப்போது என்ன மனநிலையில் இருந்தீர்கள்?

என் வாழ்வில் விருதைப் பெற்ற நேரத்தைவிட நான் மிக மிக மகிழ்ச்சியாக இருந்த தருணம் அது. இந்தத் துறை எனக்குக் கொடுத்த கௌரவத்திற்கு நான் திரும்பச் செய்த பரஸ்பரக் கடமையாக அந்த நிகழ்வைக் கருதினேன். பெரிய பெரிய விஷயங்களைச் சாதிப்பதைவிட சக மனிதனுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கக் காரணமாக இருப்பது பெரிதுதானே? இப்போது தமிழ் சினிமா புதிய பொலிவுக்கு வந்துவிட்டது. விசிடி போன்ற துயரங்கள் இருந்தாலும் இயக்குனர்களும், நடிகர்களும் வெற்றிகளை ஈட்டுகிறார்கள். இது தனிப்பட்ட நபர்களுக்கு வெற்றி மட்டுமல்ல. சினிமாத் துறைக்கான வெற்றி. அதில் எனக்கும் சிறிது பங்கு என்பதில் நிறைவு.

ஒரு கலைஞனுக்குச் சமூக நிகழ்வுகளில் எவ்வளவு தூரம் பங்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுவாகவே கலைஞர்கள் கனவு நிலையில் இருப்பவர்கள். ஏதேதோ நினைத்துக்கொண்டு அன்றாடம் வீட்டில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறப்பவர்கள். இது குற்றம் அல்ல. அது கலை மனநிலை. அவ்வளவுதான. ஆனால் அவர்களுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. தம்முடைய கலாச்சாரத்தை, பண்பாட்டை, சமூகத்தை ஏதோ ஒருவிதத்தில் காக்கிற பொறுப்பு அவர்களுக்கும் உண்டு. அவர்களை முன்வைத்து பல நல்ல காரியங்களை செய்ய முடியும். அதனால்தான் WHO போன்ற அமைப்புகள், UNICEF அமைப்புகள் தங்கள் தூதுவர்களாகக் கலைஞர்களை அமைத்துக் கொள்கின்றன. இங்கேகூட போலியோவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்தமாதிரி அரசியலில் கலைஞர்களுடைய பங்கு பற்றி இப்போதைக்கு என்னிடம் கருத்து எதுவும் இல்லை. தவிர அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அபிப்ராயம் என்றும் கருதுகிறேன்.

மறுபடியும் டாக்டர் மோகன்தாஸைச் சந்தித்தீர்களா?

சந்தித்தேன். “உன்னை அடிக்கடி டி.வி.யில பார்க்கிறேன். சௌகர்யமா காலுக்கு நடந்ததை எல்லாம் மறந்துட்டு இஷ்டத்திற்கும் ஆடற... அடிதடி செய்யற... ஓ.கே. ஓ.கே. குட்... இந்த வில்பவரை வச்சிக்கிட்டு நீ இன்னும் நிறைய சாதிப்பே”ன்னு சொன்னார்.

கடைசியா ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்...உங்கள் வெற்றியின் சூட்சுமம் என்ன?

தீவிரமான ஆசை.

புதிய பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கிட்டே இவ்ளோ விஷயம் இருக்கா? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.