Jump to content

39 பில்லியன் டாலர் ஊழல் – கருணாநிதி வியாபாரக் கோட்டக்குள் சிக்கல் : ஜமீலா


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்றான அலைக்கற்றை மோசடியின் பிரதான சூத்திரதாரி முத்துவேல் கருணாநிதியும் அவரின் குடும்ப அரசியல் வியாபாரிகளும் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வியாபார அரசியல் அமைப்பின் தலைவருமான மு.கருணாநிதி வன்னிப் படுகொலைகளின் போது இந்திய மத்திய அரசு மற்றும் இலங்கை அரசுகளுடனான வியாபார அரசியல் ஒப்பந்தங்களுக்காக தமிழ் நாட்டில் அரசியல் எழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நாடகமாடியவர்.

39 பில்லியன் டாலர் பெறுமானம் மிக்க அதிர்ச்சி தரும் இந்த ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் பல உள்ளூர் பிரமுகர்களிலிருந்து வெளிநாட்டுத் தலைகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்திய அரசியல் வியாபரமும் வியாபாரத்திற்கான அரசியலும் ஒரு சில ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதி குடும்பமும் வியாபார அரசியலில் ஆளுமைமிக்க புள்ளிகள். தனது ஊழல் சாம்ராஜ்யத்தின் பணபலத்தால் இந்தியப் பிரதமாராவதற்கான கனவுகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெயலலிதா என்பதும் இங்கு சுட்டிக்காகட்டத் தக்கது. அரசியல் வியாபாரத்தைத் தலமை வகிக்கும் இவ்வாறான முக்கிய புள்ளிகள் அல்லது பிரமுகர்கள் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பதவியில் அமர்த்துவது தான் ஊழலின் ஆரம்ப நிலையாக அமையும்.

அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமனிதர்கள் பின்னதாக மோசடியில் ஈடுபடுவதற்கான பொறிமுறைகளுக்காகப் பயிற்றுவிக்கப்படுவார்கள். பன்னாட்டுக் கம்பனிகளின் தொடர்புகளை ஏற்படுத்தல், இடைத் தரகர்களை அறிமுகம் செய்தல் ,இன்னொரன்ன வசதிகளை ஏற்படுத்தல் போன்ற பயிற்சிகள் ஒழுங்குசெய்யப்படும். இறுதியாக ஊழலில் ஈடுபடுத்தப்படும் அதிகாரி அல்லது அமைச்சருக்கான தரகுத் தொகை தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர் அதிகாரத்தில் அமர்த்தப்படுவார்.

இந்த எல்லா வழிமுறைகளும் மு.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்திமுத்து ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட முன்பதாகவே ஊழலின் பெறுமானம் குறித்து அறிந்து வைத்திருந்தார். இதனால், ராஜா தன்னார்வ நிறுவனங்கள், குடும்ப நம்பிக்கை நிதி நிறுவனங்கள், ரியால் எஸ்டேட் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஹவாலா நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டார். கருணாநிதியின் வியாபார அரசியலில் ஈடுபட்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே மிகத் தந்திரமான வகையில் அ.ராஜா தனது சொந்த அரசியல் வியாபாரத்திற்கான சாம்ராஜ்யத்திற்கான அத்திவாரக் கற்களை நாட்டிக்கொண்டார். தவிர, கருணாநிதியின் மகளாண கனி மொழியுடனான தனிப்பட்ட உறவுகளும் பல வேறுபட்ட நம்பிக்கைகளை கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தது.

மோசடியின் மூலகர்த்தாவான கருணாநிதிக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் ராஜா மிகத் தந்திரமாக காய்களை நகர்த்திவந்தார். அ.ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் அவர் ஒரு தலித் என்பதனாலேயே அவதூறுகளுக்கு உள்ளாகிறார் என்று கருணாநிதி அவரை நியாயப்படுத்தி வந்தார். இந்த ஆண்டு மே மாதத்தில் ராஜாவை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது கருணாநிதி இதையே மறுபடியும் கூறிவந்ததார்.

ஆனால் ராஜாவின் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் மத்திய அரச உளவுத் துறைகளின் ஊடாக வெளியான போது நிலைமை முற்றாக மாறிவிட்டது. 2010 டிசம்பரில் கருணாநிதி ராஜா குற்றம் செய்திருந்தால் தண்டனலி அனுபவிக்க வேண்டியவரே எனக் கூறியுள்ளார். ஆக, ராஜாவின் சொத்து விபரங்கள் வெளியான போது மிகவும் விலையுயர்ந்த வியாபார சாம்ராஜ்யத்தைக் கருணாநிதி குடும்பத்திற்கு வெளியில் உருவாக்கியுள்ளார் என்ற தகவல் வெளியான பின்னரே லஞ்சம், காட்டிக்கொடுப்பு, ஊழல், மோசடி, போன்ற அனைத்து அயோக்கியத் தனங்களிலும் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த கருணாநிதிக்குத் தானும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது தெரியவந்தது. இன்று ராஜாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அழகிரி மற்றும் ஸ்டாலின் போன்ற கருணாநிதியின் அரசியல் வியாபார சிம்மாசனத்தைச் சுற்றியிருக்கும் அவரது மகன்களிடமிருந்து எழுந்துள்ளது. ஏமாற்றப்பட்டதன் எதிரொலியே இது.

ராஜா தனது சொந்த வியாபாரச் அரசாட்சியைத் தனது உறவினர்களைக் கொண்டே உருவாக்கிக் கொண்டார். ராஜாவின் மனைவி, மூன்று சகோதரர்கள், நான்கு தங்கைகள், ஏனைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பல வியாபார நிறுவனங்கள் உலகிற்கு அறிமுகமாகின. வீடுவீடாகச் சென்று சேலைவியாபாரம் நடத்திக்கொண்டிருந்த ராஜாவிற்கு நெருக்கமான பாட்சா என்பவரின் பெயரில் சென்னையில் பல ரியல் எஸ்டேட் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. பாட்சாவின் கம்பனிகளின் இன்றைய பெறுமதி 2000 கோடிகளாகும். 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இந்திய ரூபாய்கள் செலவில் உருவான இவரின் கம்பனி சிங்கப்பூரில் தனது கிளையை 2006 இல் திறந்தது. 2007ம் ஆண்டு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி அதன் டைரக்ரர்களுள் ஒருவராக்கப்பட்டார்.

குறுகிய காலத்துள் கம்பனியின் பெறுமதி பல கோடி ரூபாய்களானது. 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கிளை அந்த நாட்டின் நாணைய மாற்று நிர்வாகத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு மூடப்பட்டது. இவ்வாறு மேலும் பல சொத்து விபரங்களையும் டீல்களையும் சீ.பி.ஐ விசாரித்துள்ளது. கருணாநிதி குடும்பத்தாலும் கைவிடப்படும் நிலையிலுள்ள ராஜா அரசியல் வியாபாரத்தில் உறுதியான நண்பர்களற்ற நிலையில் காணப்படுகிறார். இதே வேளை ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்குள்ள தொடர்பைப் பயன்படுத்தி காங்கிரஸ் அவரோடு தேர்தல் பேரத்திற்கு விலை பேசிக்கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் கருணாநிதி ராஜாவை மிரட்டிப் பங்குகளை தன்வசமாக்க கங்கிரஸ் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் மக்கள் பணம் அரசியல் வியாபாரிகளின் சூதாட்டத்திற்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தலைமை ஊழல் தாதாக்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அதிகாரத்திற்கு வெளியில் ஒட்டுக் கட்சிகளுக்கு வெளியிலான சமூக ஜனநாயக எழுச்சியை மக்கள் அக்கறை கொண்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

==========================================================

http://netindian.in

http://www.tehelka.com

http://www.vinavu.com

http://www.savukku.net/

Link to post
Share on other sites

இண்டக்கு இருக்கும் நிலையிலை இந்தியா முழுவதுமாக சேர்ந்து கருணாநிதிக்கு ஆப்படிக்காமல் இருக்காது போல கிடக்கு...

ஈழத்தமிழர் மீது கொண்ட கரிசனையால் தான் கடிதம் எழுதினேன் அதனால் ஆத்திரம் கொண்ட அரசு மத்திய அரசின் நடவடிக்கை... ஈழத்தமிழருக்காக நான்காவது முறையாக ஆட்ச்சியை இளந்தோம் எண்டு கலைஞர் அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்பட ஒண்டும் இல்லை....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிபிஐ நடத்தும் ரெய்டுகளால் பலரது டவுசர்கள் கழற்றப் பட்டு வருகின்றன. அவ்வகையில் நேற்று கழற்றப் பட்ட முக்கியமான இரண்டு டவுசர்கள் யாருடையது தெரியுமா ?

முதல் டவுசர் குருமா ராஜ் மற்றும் இரண்டாவது டவுசர் போலிப் பாதிரி ஜகத் கஸ்பர்.

இந்தப் போலிப் பாதிரியின் முகத்திரையை சவுக்கு ஜுலை மாதமே கிழித்தது. அந்தப் பதிவு, சவுக்கு வாசகர்களுக்காக மீண்டும் தனியாக மறு பதிவு செய்யப் படுகிறது.

கடந்த மாதம், ஆ.ராசாவுக்கு ஆதரவாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய போலிப் பாதிரி பேசியதை சற்றே நினைவு படுத்திப் பார்ப்போம்.

காவல்துறை அதிகாரிகளால் அழைத்து வரப்படும் காமராஜ்

‘இந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ? அது போலத்தான் இதுவும் என்றார். (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.

தப்ப முயற்சி செய்து பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிய கஸ்பர்.

இதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது. ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம். அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம். பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)

இப்படி புயல் போல முழங்கிய பாதிரியை நேற்று சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக, விசாரணையில் துளைத்து எடுத்தனர். பாதிரி பதட்டமில்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், பதட்டத்தில் கைகளை மேசையில் தட்டியபடி இருந்தார். பாதிரியின் தமிழ் மையம் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை. 12 மணி நேரம் சோதனை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறியதும் பாதிரி அலுவலகத்தின் பணியாளர்கள் மட்டும் வெளியேறினர். வெளியே பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் காரர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்த பாதிரி, விளக்கை அணைத்து விட்டு இருட்டறையில் அமர்ந்திருந்தார். பாதிரியின் உதவியாளர்கள், வெளியே வந்து புகைப்படக் காரர்கள் போய் விட்டார்களா இல்லையா என்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியாக, 1 மணி நேரம் கழித்து, பாதிரி திருடன் போலவே அவசர அவசரமாக வெளியேறினார். பத்திரிக்கையாளர்கள் மடக்கி கேள்வி கேட்டதும், சிபிஐ அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள் என்றார் (உங்ககிட்ட அவங்க சர்ட்டிபிக்கேட் கேட்டாங்களா ?) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். (குடுக்கலன்னா, கைது செய்து ஒத்துழைப்பை வாங்கியிருப்பார்கள்.) இப்படி ஒரு மணி நேரம் ஒளிந்திருந்து திருடன் போல வெளியேறிய போலிப் பாதிரி இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். ஏன் அவரை சிபிஐ ரெய்டு செய்தது என்று அவருக்குத் தெரியாதாம். கணக்கு வழக்குகள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதாம். போலிப் பாதிரியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் பிசினாரிப் பாதிரி, கொரியர் சர்வீசுக்குக் கூட பணம் பாக்கி வைத்திருக்கிறார். நேற்று சோதனை நடந்து கொண்டிருந்த போது, கொரியர் பையன் வந்தான். அவன் வந்த உடன், சார் கொரியருக்கு 2000 ரூபாய் பாக்கி என்று கத்தினான். இங்கே ரெய்டு நடக்குது போயிட்டு அப்புறம் வாப்பா என்று உள்ளிருந்து குரல் வந்தது. அப்போது அங்கிருந்த தொலைக்காட்சி கேமரா மேன், அந்த கொரியர் பையனிடம் பேட்டி எடுக்க முயன்றார். இது தெரிந்ததும், அவசர அவசரமாக ஷட்டரை திறந்து 2000 ரூபாய் பணம் கொடுத்தார்கள்.

இவ்ளோ துட்டு அடிச்கீங்களா பாதர்

இன்று நிருபர்களை சந்திக்கும் போது, கஸ்பர் சொன்னது, தமிழ் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரே ஒரு கோடி ரூபாய் மட்டும் வைத்திருக்கிறாராம். ஒரு கோடி ரூபாய் வைத்திருக்கும் நபர், கொரியர் பையனுக்கு பாக்கி வைத்திருக்கும் அவலத்தை பார்த்தீர்களா ?

கஸ்பர் அலுவலகத்துக்கு கீழே, கஸ்பர் ஆண்டுதோறும் நடத்தும் சென்னை மராத்தான் ஓட்டப் பந்தயத்துக்கான விளம்பரம் வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்த வாசகமான RUN என்பது போலவே, கஸ்பர் ஓடியது சிறப்பான விஷயம்.

அடுத்தது நம்ப குருமாராஜ். இவரைப் பற்றி ஜுன் மாதம் எழுதிய பதிவையும் சவுக்கு தனியே மீள் பதிவு செய்யப் படுகிறது. ஒரு மனிதன் ஊழல் செய்து ஊரே அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த மனிதர் ஊழல் செய்யவில்லை, அவர் தலித் என்பதால் ஊடகங்கள் அவரை தாக்குகின்றன என்று அனைத்து நாளேடுகளிலும் விளம்பரம் கொடுத்து, ஒரு கருத்தரங்கத்தை முன்னின்று நடத்துகிறார் என்றால் இந்த குருமாராஜ் எப்படிப் பட்ட மனிதராக இருப்பார் ?

சிபிஐ அதிகாரிகளால் வங்கிக்கு அழைத்துச் செல்லப் படும் காமராஜ்

சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணிக்கே வந்து காமராஜ் வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே நுழைந்த அதிகாரிகள், வீட்டில் இருந்த காமராஜ் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை அணைத்து தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டனர். காலை 9.30 மணி முதல் அனைத்து செய்தியாளர்களும், காமராஜ் வீட்டில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

மாலையில் 3.30 மணியளவில், காமராஜை அவரது ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக் கிளைக்கு அழைத்துச் சென்ற சிபிஐ, அவரது லாக்கரை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் ஒரு பெரும் தொகை கைப்பற்றப் பட்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் கூறுகின்றன.

காமராஜ் அவரது மனைவி மற்றும் உறவினர்களின் 11 வங்கிக் கணக்குகளை முடக்கிய சிபிஐ அதிகாரிகள், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி காமராஜை திருப்பி அனுப்பினர்.

காமராஜ் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் ஒரு பகுதி

காமராஜுக்கு ஆதரவாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் அருண் என்பவர் வந்து சோதனை நடைபெறும் போது காமராஜுக்கு ஆதரவாக இருந்தார். வங்கிக்கும் சென்றார்.

வந்திருந்த பத்திரிக்கையாளர்களின் நக்கீரன் நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைத் தவிர, ஒருவர் கூட, இந்த சோதனையை குறை கூறி பேசவில்லை. அனைவரும் வரவேற்றனர். மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு இதுதான் மரியாதை காமராஜ். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தோளோடு தோள் நின்று, ஒன்றாக சரக்கடித்து, உயிருக்கு உயிரான உங்கள் தொழில் கூட்டாளி ஜாபர் சேட் தப்பித்து விட்டார் பார்த்தீர்களா ? உங்கள் சோதனைகள் இத்தோடு முடியவில்லை. மேலும் தொடரும். காத்திருங்கள்.

ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கையில் அதை வைத்து காசு பார்த்தீர்களே…. காமராஜ்… கஸ்பர் போன்றதொரு கடைந்தெடுத்த அயோக்கியப் பேர்விழியை வைத்து மறக்க முடியுமா என்று தொடர் போட்டீர்களே… அடுக்குமா… தமிழா தமிழா பாண்டியன் என்ற நபரை இலங்கைத் தூதரகத்தில் காசு வாங்கி இலங்கைக்கு அனுப்பி அதை கவர் ஸ்டோரி செய்தீர்களே. நியாயமா காமராஜ்….. ஈழத் தமிழர்களின் அத்தனை சாபங்களும் உங்களை சுற்றிச் சுற்றி வரும். நீங்கள் எங்கும் ஓட முடியாது..

அடுத்ததாக, பெசன்ட் நகரிலேயே இருந்த ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்த அகிலன் ராமனாதன் என்பவரின் வீடு.

கல்வித் தந்தை அகிலன் ராமநாதன் வீடு

இந்த நபர் மத்திய அரசுப் பணியில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். மத்தியப் பணியில் இருந்த போது, ஆ.ராசாவின் செயலாளராக இருந்தார். (ராசா வனம் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த போது) அப்போது ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையை போட்டதாக தகவல். பிறகு ராசாவோடு கருத்து வேறுபாடாகி, விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு கல்வித் தந்தை ஜெகதரட்சகன் கல்லூரியை நிர்வகிக்கிறார்.

சிறிது நாளில், கல்வித் தந்தை ஆவது எவ்வளவு எளிது என்று கண்டுகொண்ட அகிலன், அவரே ஒரு கல்லூரியை தொடங்கி பின்னாளில் அதை நிகர்நிலை பல்கலைகழகமாகவும் மாற்றினார். இவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இதைத் தவிர சோதனை நடைபெற்ற இடங்கள்.

1) க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்

2) ஈக்வாஸ் எஸ்டேட்ஸ்

3) கதிர்காமம் பிரைவேட் லிமிட்டெட்

4) சிவகாமம் ஏஜன்சீஸ்

5) கோவை ஷெல்டர்ஸ் அன்டு ப்ரமோட்டர்ஸ்

6) ஏஜிஎம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

7) வெல்கம் இந்தியா

8) எக்சிம் வென்சர்ஸ்

9) ஜெனெக்ஸ்

10) சாலி தெர்மோ ப்ளாஸ்டிக்ஸ்

11) ஐயப்பா என்டர்பிரைசஸ்

12) ஜேஜி எக்ஸ்போர்ட்ஸ் (மகேஷ் ஜெயின்)

13) ஆண்டிமுத்து கலியபெருமாள்

14) ஆர்.ராமச்சந்திரன்

15) டாக்டர் ராமச்சந்திரன்

16) சின்ன கிருஷ்ணமூர்த்தி

17) அகரம் தெரு சின்ன கிருஷ்ணமூர்த்தி

18) டி.செல்வராஜு

19) சி.சத்யநாராயணன்

20) வளவன்

21) அகமது ஷகீர்

22) முகம்மது ஹசன்

23) மகேஷ் ஜெயின்

24) அலோக் ஜெயின்

இதில் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகிய இருவரும் ஹவாலா தரகர்கள்.

சிபிஐ சோதனைகளில் மிகத் தாமதமாக நடைபெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் குறை சொன்னாலும், ஹோம் வொர்க்கை சரியாக செய்து, ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் சோதனை நடத்தியதன் மூலம், சிபிஐ இந்தியாவின் முன்னணி புலனாய்வு நிறுவனம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாகவே சவுக்கு உணர்கிறது.

சிபிஐ நிறுவனத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இருப்பினும், சிபிஐ அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது. சிபிஐ கண்ணில் மண்ணைத் தூவிய ஜாபர் என்னென்ன செய்தார் என்ற விபரங்களை சவுக்கு விரைவில் வெளியிடும்.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=246:2010-12-16-19-39-57&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய இந்திய பிரதமர் முன்னைய நிதி அமைச்சர், மற்றும் சோனியாவுக்கு மிகவும் நம்பிக்கையானவர். இவரின் மிகப்பெரிய கனவு இந்தியாவை ஒரு பொருளாதார வல்லரசாக உருவாக்க அதற்கான ஒரு பாதையை முன்னெடுத்து செல்வது.

அந்த வகையில், உலகத்தின் பார்வையில் இந்தியாவில் முதலீடு செய்ய செய்யவும் அதன் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதில் ஊழல் முக்கிய இடம் வகிக்கின்றது.

எனவே, இது, இரண்டாம் தலைமுறை காற்றலை ஊழல், மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒரு சவால். இதில் அவரின் அணுகுமுறையை, எவ்வாறு இந்த ஊழல் சிக்கலை கையாள்கிறார் என்பதில் இந்தியாவின் பொருளாதார வெற்றி தங்கி உள்ளது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா  கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார். ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்  ஒத்துக்கொண்டிருந்தார். சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார். 1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது. 2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது. 3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது. 4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல். கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.  இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை  பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது. 
  • இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நேற்றைய தினம் 1038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 140 இலட்சத்து 74 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124  இலட்சத்து 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந் துள்ளனர், 14 இலட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     Thinakkural.lk <p>இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 […]</p>
  • 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மீண்டும் ஆரம்பம் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   Thinakkural.lk <p>புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் […]</p> இதுவரையில் 18 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் சுமார் 75 சதவீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு அடுத்த சில நாட்களில் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்   இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகiளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.  Tamilmirror Online || 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்  
  • மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்...   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... (adaderana.lk)    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.