Jump to content

எந்த தொலைக்காட்சி வாங்கலாம்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்கள் பயனுள்ள இணைப்பிற்கு நன்றி.

அநேகமாக LG தொலைக்காட்சி வாங்கத்தான் யோசிக்கின்றேன்.

ஆனால்.... இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லுறன்.

நான் இஞ்சை வந்தநாள் தொடக்கம் சொனி ரிவி தான்.

வந்த புதிசிலை சொனி குழாய்ரிவி

இப்ப தட்டை சொனி ரிவி.இப்பவெல்லாம் ரெக்னிக்கிலை கிட்டத்தட்ட எல்லா கொம்பனியளும் ஒரேமாதிரித்தான் தெரியுது.என்ன விலைதான் பேரைவைச்சு வித்தியாசப்படுது?

இப்ப சொனியைமாதிரித்தான் எல்ஜியும் சம்சுங்கும் தெரியுது.இருந்தாலும் சொனியிலை கொஞ்ச அமசடக்கான ரெக்னிக்குகள் வெளியிலை தெரியாதமாதிரி இருக்குது?

விசயத்துக்கு வருவம் சிறித்தம்பி?

இப்பவெல்லாம்....

ரிவியிலையே... சற்ரலையிற் ரிசீவர்,நோமல் அன்ரெனா ரிசீவர்,யுஎஸ்பி தொடுப்புகள்...எண்டு கன விசயத்தோடை கனசாமானுகள் வருது.நல்லவடிவாய் யோசிச்சு வாங்கவும்

இப்பவெல்லாம் அது திறம் இல்லாட்டி இது திறம் எண்டெல்லாம் சொல்லேலாது.விலையைப்பத்தியும் பெரிசாய் கதைக்கேலாது?விலை கூடின ரிவியெண்டு நான் வீட்டுக்கை கொண்டுவந்து வைச்சு தம்பட்டம் அடிக்க......வாறகிழமை....அரைவிலைக்கு அதேரிவியை பக்கத்து வீட்டு ஏகாம்பரத்தின்ரை சின்னன் வாங்கிப்போட்டு என்னைப்பாத்து நக்கலாய்ச்சிரிக்கும்.இதை நான் ஏன் சொல்லுறனெண்டால் :rolleyes:

உண்மை தான்...... குமாரசாமி அண்ணை.

கன ரெக்னிக்குக்காக... கன காசை அநியாயமாக கொடுக்க விருப்பமில்லை. விரலுக்கேற்ற வீக்கம் மாதிரி சாதாரண விலையிலேயே பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ, தற்போதைக்கு இதிலுள்ளவற்றில் அள்ளி எடுத்துக்கொள்ளவும்! :unsure:

52325_C_290.jpg

ராஜவன்னியன், இந்த குழாய் தொலைக்காட்சிப் பெட்டியெல்லாம் வருகின்ற வருடம் ஜேர்மனியில் பாவிக்க முடியாது.

மியூசியத்திலை தான் இனி இதை பார்க்க வேணும். :lol:

சில மாதங்களுக்கு முன் ஒரு கடையில்... இந்த குழாய் தொலைக்காட்சிப் பெட்டியை கொடுத்து, தட்டை தொலைக்காட்சி வாங்கினால் 100€ விலைக்கழிவு கொடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி testberichte.de இதில் விலை மற்றும் தரம் போன்றவற்றை புள்ளிகளோடு வரிசைப்படுத்தியிருப்பார்கள். பெரும் உதவியாகவிருக்கும். அத்தோடு guenstiger.de இங்கு சென்றால்மலிவான விலையில் எங்கு கிடைக்குமென்பதையும் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி சிற்பி.

சனி, ஞாயிறுக்கிழமை ஆறுதாலாக இருந்து வாசிக்கப் போகின்றேன். coffee_pc.gif

தொலைக்காட்சி வாங்கிட்டியளா?

இன்று வாங்குவதாக இருந்தேன் கறுப்பி. பலர் தங்களது அபிப்பிராயங்களை சொன்னதால் வடிவாய் யோசிக்க வேண்டி உள்ளது.

அநேகமாக திங்கள்கிழமை வீட்டில் புதுத் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் என நினைக்கின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரத்தை குறைவாக பாவிக்கக் கூடியதாகவும் புதிய தொழில் நுட்பங்களையும் (இணையங்கள் இப்போ அழகாக TV யில் இயங்குகின்றன youtube ஒளிக்காட்சிகள் உட்பட)

3D தொழில் நுட்பத்தையும் பார்த்து வாங்க.... நானும் வாங்க வேண்டியுள்ளது இந்த தகவல்களை மேலும் எதிர் பார்கிறேன்...... 100HZ என்றால் எதுக்கானது 300HZ, 400HZ, இருந்தால் என்ன பிரச்சனை நன்றி :)

இணைய நண்பரே,

LCD விட, LEDல் மின்சாரம் குறைவாக எடுக்கும்.

100 HZல் தெரிகின்ற படத்தை விட 300 HZல் படம் துல்லியமாகத் தெரியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி! நான் சோனிதான் வைத்திருக்கின்றேன். சோனியில் கலர் தரமாக இருக்கும்!

_ திரையில் ஆங்கிலப் படங்கள் நீளமாகவும், எமது தமிழ் படங்கள், நாடகங்கள் சதுரமாகவும் மாற்றும் வசதியுள்ளதா எனப் பார்க்கவும்.

-- தொம்சன் தொ.கா. பெட்டியில் திரையை பாதியாகப் பிரித்து ஒருபக்கம் கால்பந்தும் மறுபக்கம் செய்தியையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுண்டு . அவ் வசதி மற்றவற்றிலும் இருக்கலாம் கவனிக்கவும்.

எல். யி யும் நல்லதுதான். போர்டபிள் கணணியை பொருத்தி படங்கள் பார்க்கும் வசதி இருக்கா என்பதைக் கவனிக்கவும்.

-- இந்த வாரங்களில் பெரிய கடைகளில் கூடிய விலைக்கு தொல்லைக்காட்சிப் பெட்டி எடுக்கும் போது கூட 1 € வுக்கு கோம் சினிமா போன்ற ஏதாவது மலிவாய் கிடைக்கும் அதையும் விற்பனைப் பிரதிநிதியிடம் கேட்டு வாங்குங்கோ.

-- நல்ல மார்க்குள்ள தொ. கா. பெட்டிகள் விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பாவிக்கும் காலங்களில் மின்சாரங்களில் சிக்கனமும், நீடித்த உழைப்புமாய் இருக்கும். :D:D

சுவி, சொனி தொலைக்காட்சி Bravia ஒன்றின் விளம்பரம் பார்த்தேன். LED, 101 செ.மீ. இணைய வசதியுடன் 800 €

இன்று மாலை நேரம் இருந்தால்.... நேரில் சென்று பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி பெரிய மனப் போராடத்தின் பின்.....

இன்று மாலை,வீட்டிற்குப் புதிய வரவாக 350€ற்கு ரொஷிபா தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கியுள்ளேன்.

இரண்டு வருடம் கரன்டியுடன்... பாவித்த பின் பழுதானாலும் கவலை இல்லை.

நான் நல்ல நாள்பார்த்து, வாங்க நினைத்த தொலைக்காட்சி எல்லாம் விற்று முடிந்து விட்டது.

இது தான் அந்த ரி.வி.Bild0-1929667906-433_400.JPG

http://www.technikdirekt.de/main/de/451024/-/article-toshiba-32-sl-738-g-82cm.html?t=1&referer=Froogle_VKNR_493&campaign=Froogle&language=de&landingCountry=de

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபடியா டிவி வாங்கிட்டிங்கள். நாம தான் தவித்துக்கொண்டிருந்தோம் டிவி வாங்கலையா எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபடியா டிவி வாங்கிட்டிங்கள். நாம தான் தவித்துக்கொண்டிருந்தோம் டிவி வாங்கலையா எண்டு.

ஏன் கறுப்பி தவித்தனீங்கள் :D

ஆலோசனை கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி. :wub::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நீங்கள் டிவி வாங்கியது மிக்க மகிழ்ச்சி.அது சரி புது டிவியில் முதல்முதல் என்ன பாத்தீங்கள் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நீங்கள் டிவி வாங்கியது மிக்க மகிழ்ச்சி.அது சரி புது டிவியில் முதல்முதல் என்ன பாத்தீங்கள் :lol::lol::lol:

இன்னும் பெட்டி உடைக்கவில்லை சஜீவன்.

வெள்ளிக்கிழமை பக்திப்படம் பார்ப்பம், என்று யோசிச்சிருக்கிறன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழையும் அதில் இணைத்து தட்டுங்கள்..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பெட்டி உடைக்கவில்லை சஜீவன்.

வெள்ளிக்கிழமை பக்திப்படம் பார்ப்பம், என்று யோசிச்சிருக்கிறன். :D

கையோடை ஒரு முடித்தேங்காயும் அதை உடைக்க ஒரு பவுண்டேசன்கல்லும் கட்டாயம் வேணும் அதோடை தேசிக்காயையும் செத்தல்மிளகாயையும் சேர்த்து ஒரு நூலிலை கோர்த்துக்கட்டி ரிவிக்கு மேலை கட்டி தொங்கவிடோணும்.

அரோகரா...அரோகரா :lol:

கற்புரத்தை ரிவிக்கு கிழே எரிக்க வேண்டுமா அல்லது ரிவிக்கு மேலே எரிக்க வேண்டுமா? :wub:

எல்லாருமா சேர்ந்து சிறியின் புது டிவி ஐ ஒரு வழிபண்ண நிற்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருமா சேர்ந்து சிறியின் புது டிவி ஐ ஒரு வழிபண்ண நிற்கிறீங்கள்.

சாதாரணமாக

கோயிலுக்கு உள்ளதானே கற்பூரம் கொழுத்துவது........ :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பெட்டி உடைக்கவில்லை சஜீவன்.

வெள்ளிக்கிழமை பக்திப்படம் பார்ப்பம், என்று யோசிச்சிருக்கிறன். :D

ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய கடவுள் நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளலாமா?

எனக்கென்றால் என்ன வாங்குறோமோ உடனே பாவிக்க வேண்டும் இல்லாவிட்டால் தலையே வெடிச்சுடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய கடவுள் நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளலாமா?

எனக்கென்றால் என்ன வாங்குறோமோ உடனே பாவிக்க வேண்டும் இல்லாவிட்டால் தலையே வெடிச்சுடும்.

எனக்கும் தான்

நித்திரை வராது

அத்துடன் வாங்கிய பொருளில்; பழுதிருப்பின் காலம் கடந்துவிடும்........ :(

Link to comment
Share on other sites

ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய கடவுள் நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளலாமா?

எனக்கென்றால் என்ன வாங்குறோமோ உடனே பாவிக்க வேண்டும் இல்லாவிட்டால் தலையே வெடிச்சுடும்.

நானும் தான் எதை புதுசா வாங்கினாலும் அதை உடனே உருண்டு பிரண்டு ஏறி கடிச்சு குதறி எல்லாம் பாவிச்சுவிடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் எதை புதுசா வாங்கினாலும் அதை உடனே உருண்டு பிரண்டு ஏறி கடிச்சு குதறி எல்லாம் பாவிச்சுவிடுவேன்.

கடிச்சி குதறுவதை நினைத்தால் என்னவெல்லாமோ நினைக்கத்தோணுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிச்சி குதறுவதை நினைத்தால் என்னவெல்லாமோ நினைக்கத்தோணுது. :lol:

அப்படி தாங்கள் நினைப்பதே வடிவேலின் வெற்றிதானே........... :lol::D

Link to comment
Share on other sites

அப்படி தாங்கள் நினைப்பதே வடிவேலின் வெற்றிதானே........... :lol::D

என்க்கு என்னமோ வடிவேல் என்னத்துக்கோ ப்ளன் பன்னுவது போல் தெரிகிறது ஆனால் கொஞ்சம் பிசகினாலும் வீட்டிலும் அடிவிழும் கறுப்பியிடமும் வாங்கி கட்டவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்க்கு என்னமோ வடிவேல் என்னத்துக்கோ ப்ளன் பன்னுவது போல் தெரிகிறது ஆனால் கொஞ்சம் பிசகினாலும் வீட்டிலும் அடிவிழும் கறுப்பியிடமும் வாங்கி கட்டவேண்டும்.

கறுப்பி என்று பெயர் வைத்துக்கொண்ட கறுப்..... க்கும் இது வெற்றி தானே................. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையோடை ஒரு முடித்தேங்காயும் அதை உடைக்க ஒரு பவுண்டேசன்கல்லும் கட்டாயம் வேணும் அதோடை தேசிக்காயையும் செத்தல்மிளகாயையும் சேர்த்து ஒரு நூலிலை கோர்த்துக்கட்டி ரிவிக்கு மேலை கட்டி தொங்கவிடோணும்.

அரோகரா...அரோகரா :lol:

கற்புரத்தை ரிவிக்கு கிழே எரிக்க வேண்டுமா அல்லது ரிவிக்கு மேலே எரிக்க வேண்டுமா? :wub:

கற்பூரம் வாங்குவம் எண்டு தமிழ்கடைக்குப் போனால்... ஒரு கடையிலேயும் கற்பூரம் இல்லை.

பிறகு, சாம்பிறாணி குச்சி வேண்டி கொண்டு வந்தனான். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.