-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர். இந்த காணொளி வந்தது தேர்தலுக்கு முன். இவர்கள் வெற்றி பெற்றதும் வீடியோ வெளியிட்டதாக புனைகிறார்கள். கூடவே பகுதி நேர தமிழ் ராஜதந்திரிகள் வேறு ஜோன்சனுக்கு எம் போராட்டத்தை புரிய வைக்க போகிறார்களாம். இவர்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் புரிய வைக்க இங்கே ஏதும் இல்லை. நம் புவிசார் பலம் அல்லது பிரித்தானியாவில் நம் வாக்குப் பலம் இவை இவர்களுக்கு தேவைபடும் போது, இவர்களை ஒரு பொது மேடைக்கு அழைத்து, ஜோன்சன், கோபின் வராவிட்டாலும் அடுத்த நிலை, குரல்தரவல்ல நபர்கள் வந்து, இதுதான் எம் அணுகுமுறை, இதை இப்படி செய்து தருவோம் என வாக்கு கொடுக்கும் படி, வலியுறுத்தி. கொடுத்த வாக்கை காப்பாற்ற நிர்பந்திப்பதே பயனுள்ள ராஜத்ந்திரம். கோபி யூத விரோதி என்றதும், கட்சி பேதமின்றி தலைமை ரபாய் தொட்டு சகல யூதர்களும் ஓரணியில் திரண்டு அளுத்தம் கொடுத்தனர். ஆனால்,தேர்தலுக்கு தேர்தல், sensational வீடியோ, படங்களை போட்டு, தமிழர்களின் வோட்டுக்களை இரெண்டு கட்சிகளுக்கும் "கூட்டிக் கொடுக்கும்" "மாமா வேலை"யை மட்டுமே பிரிதானிய தமிழர் பிரதிநிதிகள் என கோட், சூட் போடுவோர் செய்கிறனர். ஜோன்சனும், லேபரும் இன்னும் 5 வருடத்து இதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் வரும்போது வந்து நன்றி, வணக்கம் என்பார்கள் நாமும், பச்சை தமிழனை பாருங்கள் கோபால், நீலத் தமிழனை பாருங்கள் கோபால் எனப் புல்லரிபோம். இதுக்கு பேசாம நித்தியிண்ட கைலாசாவில "தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சராக" போகலாம் 😜 -
வரலாற்றை ஆவணப்படுத்தல் கூட ஒரு பரப்புரை. வாழ்த்துக்கள்.
-
குற்றப்புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த டீ சில்வா இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவுக்கும் தொடர்புள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவிதந்துள்ளார். இலங்கையை தமது இராணுவ தளமாக செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். சுவிஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டும் ஒன்றிணைந்தே இந்த சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் நாடகத்தை முன்னெடுத்துள்ளன என சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம், இலங்கையில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறினார். அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்; அதற்கான இராணுவ மத்திய தளமாக இலங்கையை பயன்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். பல நாடுகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த தாக்குதலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் இலங்கையில் காணப்படுவதால் அமெரிக்கா இவ்வாறான வேலைகளை செய்கிறது. அதனை சாதிக்கவே அமெரிக்கா முயல்கிறது. எனவே இவ்வாறான அழுத்தங்களை அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கொடுத்து வருகிறது. இந்த அரசாங்கத்தோடு விளையாட முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தோடு இவர்களுக்கு வேண்டிய மாதிரி விளையாடினார்கள். யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து நாம் மனித படுகொலைகளை செய்தோம் என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதனை நிரூபிக்க தேவையான ஆவணங்களை இவர்கள் சேமிக்கிறார்கள். நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார். அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது. அவை அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவற்றைக்கூட இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கு எதிராக ஆதாரங்களாக உபயோகிக்க முடியும். நிஷாந்த டீ சில்வா நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரை நாம் தேடுவதை நிறுத்தி எமது கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த வெள்ளை வான் சம்பவம் அரங்கேற்றப்பட்த்துள்ளது. இதுவரை ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளையும் நாம் சமாளித்தோம். ஆனால் எமக்கு வரும் பாரிய சிக்கலானது இனிவரும் காலங்களில் நிஷாந்த டீ சில்வாவின் மூலமே வரும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.tamilwin.com/uk/
-
"வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்." இது ஒரு 'சிம்போலிக்' செயலாக இருந்தாலும் எமது அடுத்த தலைமுறைக்கு பலம் சேர்க்கும் செய்தி.