Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெளனமாய் ஒரு காதல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மெளனமாய் ஒரு காதல்

அந்த பள்ளி நாட்கள் நீண்டு போகாதா என் அங்கலாய்க்கும் ஒரு மாலைபொழுதில் ..............

கிராமத்தின் முக்கியமான்( இருபாலாருக்குமான )கலவன் பாடசாலைகளில் ஒன்றில் ராகவன் உயர்வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். பணி நிமித்தம் இடம் மாற்றலாகி வந்தவர்கள் தான் .கேசவ வாத்தியார் குடும்பம். அவர்களுக்கு அழகான் ஒரே ஒரு பெண . அன்று ஒரு தை திங்கள் முதலாம் வாரம் , இவர்கள் பாட்சாலை யின் அனுமதிக்காக காத்திருந்தார்கள் அப்பாவும் பெண்ணும். தலைமை ஆசிரியர் அன்றைய பணியில் மூழ்கி இருந்ததால் , ராகவன், அவர்களுக்கு உதவும் முகமாக , வரவேற்பறையில் ஒரு ஆசனத்தில் இருத்தி , காத்திருக்கும்படி சொன்னான். அவன் வகுப்புக்கு சென்றுவிடான். சில மணி நேரங்களில் வகுப்பு ஆசிரியரை இடை மறித்த தலைமை ஆசிரியர் தேவகியை அறிமுகம் செய்தார். ராகவனுக்கு ஒரே ஆச்சரியம் அவள் தன் வகுப்பில் இணைந்தது . . காலப்போக்கில் சக மாணவர்களுடன் கலந்து கொண்டாள்.

ஆரம்பத்தில் கண்ட அறிமுகம் ராகவன் மீது ஒரு மதிப்பை தேவகிக்கு கொடுத்து இருந்தது. நல்ல அறிவாளியான பெண . விரைவில் கற்று கொள்வாள். சக தோழியருடன் கல் கலபாக் பேசுவாள். மாணவர்களுடன் பேச சற்று வெட்க படுவாள் . ராகவனுடன் மட்டும் ஒரு அறிமுக புன் முறுவலுடன் சென்று விடுவாள். ஒரு நாள் இவர்கள் வகுப்பு ஒரு சுற்றுலா புறப்பட ஆயத்தமானது. மூன்று விஞ்ஞான ஆசிரியைகளுடன் ,இருபது மாணவிகளும் பதினைந்து மாணவர்களுமாக் பயணம் புறப்பட்டார்கள். அது ஒரு தாவரவியல் பூங்காவுக்கான , பயணம். செல்லும் வழி எல்லாம் பாட்டும் நக்கல் நளினங் களுமாக் சந்தோஷமாக் சென்றது. அங்காங்கே ஆசிரியை நிறுத்தி விபரித்தார். விபரங்களுடன் குறிபெடுத்து கொண்டனர். மாலை வீடு திரும்பும் நேரம் குறித்த் நேரத்துக்கு மிகவும் தாமதமாகியது . வீடு செல்லும் போது மிகவும் இருட்டிவிட்டது. அது ஒரு கிராமமாகையால் பெருந்தெருக்களில் மட்டும் வெளிச்சம் இருக்கும் . தேவகி வீடு ராகவன் வீடுக்கு அடுத்த் தெருவில் இருந்தது. எல்லோரையும் பாதுகாப்பாக் சேர்ந்து போகும்படி ஆசிரியை வழிகாட்டினார். இறுதியாக் தேவகியின் முறை வந்த்தும் அவள் தனித்து விடபட்டாள். ராகவன் முன் வந்து அவளை பாதுகாப்பாக அவள் வீடுக்கு அழைத்து செல்வதாக் சொன்னான்.

காலம் உருண்டோடியது ஆண்டின் இறுதிப்பரீட்சைக்கு ஆயத்த காலம் . ஒரு நாள் நண்பன் வீட்டில் பாடங்களை ,இணைந்து படித்து விட்டு ( group study ) வீடு திரும்பி கொண்டு இருந்த போது தேவகி எதிர்ப் பட்டாள். நட்பு நிமித்தம் பேசிக்கொண்டே சென்றார்கள். பரீட்சையும் முடிந்தது . எல்லோரும் அவரவர் பாட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள். தேவகியும் அவள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னே வேகமாக் வந்த சைக்கிள் வண்டி சற்று தாமதித்தது ...பின்னே திரும்பி பார்த்தவள், ராகவன் தன்னை காரணமில்லாமல் பின் தொடர்வதை உணர்ந்தாள். எதுவுமே பேச்வில்லையே என் ஆரம்பித்தவளுக்கு ராகவனின் எண்ணம் புரிந்தது . அவளது குண இயல்புகள் தன்னை மிகவும் கவர்ந்த்ததாக்வும். அவளை விரும்புவதாகவும் சொன்னான். அமைதியான் ஒரு புன்னகையுடன் அவள் வீடு வரவே அவன் விடைபெற்றான்

பின்பு ஒரு நாள் , ராகவன் அவளை கோவில் ஆலமரத்தடியில் சந்தித்து , தான் தலை நகருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து செல்வதாக் சொல்லி விடை பெற்றான். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி சென்றது. பரீட்சை முடிவு வந்தது. இருவரும் மிகவும் திறமையாக் சித்தி பெற்று இருந்ததனர். தேவகி ஒரே ஒரு பெண என்பதால் விரைவில் திருமண் பேச்சை ஆரம்பித்தனர். அந்த ஆண்டு திருவிழாவுக்கு ராகவன் ஊருக்கு வந்திருந்தான். திருவிழாவின் இறுதி நாளன்று தேவகி சேலை அணிந்து தேவதை போல காட்சியளித்தாள். அன்று தான் அவன் அவளை சேலையில் பார்த்தது. அழகாய் இருப்பதாக சைகையால் தெரிவித்தான். அவள் நாணத்தால் சிவந்தாள். மீண்டும் வார விடுப்பு முடியவே தன் பணிக்கு சென்றுவிடான். அந்த மாத இறுதியில் ஒரு நாள்அவன் அலுவலகத்துக்கு , .இவன்பெயருக்கு ஒரு மடல் வந்திருந்தது , அதில் தேவகி தனக்கு திருமணம் நிச்சயமாகி வருவதாகவும் , அவனது நிலைமையில் அவனை பற்றி எதுவும் தன்பெற்றாருக்கு சொல்லி முடிவெடுக்கக் முடியாதிருபதாக்வும் அவனது தங்கை , குடும்பபொறுப்பு ..அவன் பெற்றாரின் நிலை என்பது பற்றி விளக்கி, தன்னை மறந்துவிடும்படி எழுதியிருந்தாள். ராகவன் மிகவும் மனமொடிந்து போனான். தன் கையாலாகாத தனத்தை எண்ணி கலங்கினான். அந்த வருட திருவிழாவுக்கு செல்ல வில்லை. தேவகியின் கணவன் அவ்வூரின் பல்கலைகழக விரிவுரையாளர் எனவும் , திருமணத்தின் பின் அவ்வூருக்கு மாற்றல் பெற்று வார இருபதாகவும் ராகவனின் தங்கை மடல் மூலம் சேதி கண்டான்.

அவன் ஊருக்கு சென்று வருடங்கள் மூன்று உருண்டோடி விட்டது. இடையிடையே அவ்ளை பற்றி ராகவனின் தங்கை எழுதுவாள். ஒரு முறை அவளுக்கு அழகான் பெண குழந்தை கிடைத்திருப்பதாக எழுதினாள். வருடங்கள் பல உருண்டோடின . ஒரு நாள் ராகவனின் தாயிடமிருந்து ஒரு மடல் . தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருபதாக்வும் அம்முறை திருவிழாவோடு பெண பார்க்க வர இருக்கிறார்கள் எனவும் ராகவனை ஊருக்கு வந்து தந்தையில்லாத அவளுக்கு , ஆறுதலாய் இருந்தது , காரியத்தை ஒழுங்கு செய்யும்படி தாயார் மிகவும் வற்புறுத்தி கேட்டு எழுதினார். ராகவன் தங்கைக்காக புறப்பட ஆயத்த்தமானான் . ஊருக்கு புறபட்ட்வனின் எண்ண அலைகள் ஒருவித சோகம் ,ஏமாற்றம் வெறுமையால் சூழப்பட்டது. தங்கையின் அலுவல்கள் பேச்சுவார்த்தை போன்றவை சுபமே நிறைவடைந்த்து. அடுத்த முகூத்த்தில் திருமண் ஏற்பாடாகி இருந்தது.

மறுநாள் , ஊர்க்கோவிலின் இறுதி திருவிழா வீதியெங்கும் சிறு கடைதொகுதிகளால் நிறைந்து இருந்தது. பலூன்கள் , ஊது குழல்களின் சத்தம் சிறு விளையாட்டு பொருட்களின் வியாபரம் என் ஒரே ஜனக்கூட்டம். அவன் அருகில் மூன்றுவயது சிறுமி ..ஒரு பலூனை துரத்தியவாறு எட்டிப்பிடிக்க் வந்து கொண்டு இருந்தாள். ராகவி ...என் அழைத்தவாறு , தாயார் ...அவள் பின்னே . திரும்பி பார்த்தவன் ஆச்சரியத்தால் பிரமித்தான். அவன் அருகில் தேவகியும் குழந்தையும்... பேச நாக்கு அசையவில்லை. அவள் தான் பேசினாள் " நல்லாய் இருகிறீங்களா? " .......எதோ இருக்கேன். ...குரலில் சோகம் இழையோட .....ராகவி ...........ராகவி .........அவன் வீடு வரும் வரை ஒலித்து கொண்டே இருந்தது. அவள் குழந்தைக்கு என் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள். மெளனமாய் அவன பெயர் , அவன் காதல் அவள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லோருடைய காதலும் நிறைவேறுவதில்லை.சில காதல்கள் தான் நின்று நிலைத்து வெற்றியடைகின்றன . இளமையில் காதல் இல்லாத வாழ்வும் இல்லை. இருப்பினும் மெளனமாய் அவர்கள் காதல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ...என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒன்று

Link to comment
Share on other sites

அவன் அருகில் மூன்றுவயது சிறுமி ..ஒரு பலூனை துரத்தியவாறு எட்டிப்பிடிக்க் வந்து கொண்டு இருந்தாள்.ராகவி ...என் அழைத்தவாறு , தாயார் ...அவள் பின்னே . திரும்பி பார்த்தவன் ஆச்சரியத்தால் பிரமித்தான். அவன் அருகில் தேவகியும் குழந்தையும்... பேச நாக்கு அசையவில்லை. அவள் தான் பேசினாள் " நல்லாய் இருகிறீங்களா? " .......எதோ இருக்கேன். ...குரலில் சோகம் இழையோட .....ராகவி ...........ராகவி .........அவன் வீடு வரும் வரை ஒலித்து கொண்டே இருந்தது. அவள் குழந்தைக்கு என் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள். மெளனமாய் அவன பெயர் , அவன் காதல் அவள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லோருடைய காதலும் நிறைவேறுவதில்லை.சில காதல்கள் தான் நின்று நிலைத்து verriyadaikinranaகின்றன. இளமையில் காதல் இல்லாத வாழ்வும் இல்லை. இருப்பினும் மெளனமாய் அவர்கள் காதல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ...என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒன்று

அழுதுவிட்டேன் அக்கா.....அருமை..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீல மேகம் . ( நெருப்பை விட நீல மேகம் பிடித்து இருக்கிறது ) .

ஒருவாரத்துக் குள் 68 ..பதிவுகள்.

ஆர்வவமுள்ள பதிவர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகான காதல் கதை.

காதல்..................அது தரும் நினைவுகள் எப்போதும் அழிவது இல்லை. காதல் தோற்றுப் போகும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர்களில் காதலனின் பெயரோ காதலியி்ன் பெயரோ அமைந்து விடுகிறது.

வாழ்த்துகள் நிலா மதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி..........உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். அழகிய ஒரு காதல் கதை.

திருமணத்தில் வந்து முடியாத காதலே வெற்றிகரமான காதல் என இக்கதையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. :lol:

Link to comment
Share on other sites

அவன் அருகில் மூன்றுவயது சிறுமி ..ஒரு பலூனை துரத்தியவாறு எட்டிப்பிடிக்க் வந்து கொண்டு இருந்தாள்.ராகவி ...என் அழைத்தவாறு , தாயார் ...அவள் பின்னே . திரும்பி பார்த்தவன் ஆச்சரியத்தால் பிரமித்தான். அவன் அருகில் தேவகியும் குழந்தையும்... பேச நாக்கு அசையவில்லை. அவள் தான் பேசினாள் " நல்லாய் இருகிறீங்களா? " .......எதோ இருக்கேன். ...குரலில் சோகம் இழையோட .....ராகவி ...........ராகவி .........அவன் வீடு வரும் வரை ஒலித்து கொண்டே இருந்தது. அவள் குழந்தைக்கு என் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள். மெளனமாய் அவன பெயர் , அவன் காதல் அவள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லோருடைய காதலும் நிறைவேறுவதில்லை.சில காதல்கள் தான் நின்று நிலைத்து வெற்றியடைகின்றன .. இளமையில் காதல் இல்லாத வாழ்வும் இல்லை. இருப்பினும் மெளனமாய் அவர்கள் காதல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ...என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒன்று

இப்படித்தான் காதல் நிறைவேறாதவர்கள் தமது குழந்தைகளுக்கு தமது காதலன்/காதலியின் பெயரை வைத்து காதலை காக்கிறார்கள் போல. நல்ல கதை.

எழுத்து பிழைகளை திருத்தி விடுங்கள் என தாழ்மையாக கேட்கிறேன்.நன்றி நிலாமதி உங்கள் கதைக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் காதல் நிறைவேறாதவர்கள் தமது குழந்தைகளுக்கு தமது காதலன்/காதலியின் பெயரை வைத்து காதலை காக்கிறார்கள் போல. நல்ல கதை.

இது கணவன் அல்லது மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையோ? :-)

Link to comment
Share on other sites

இது கணவன் அல்லது மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையோ? :-)

நீங்க வேற எனக்கு தெரிந்த ஒருவரின் மனைவி சில நேரம் கனவனிடம் , தனது நண்பியும் கனவனின் முன்னால் காதலியும் ஆனவரின் பெயரை சொல்லி தான் திட்டுவிழும்( கிட்ட தட்ட நம்ம சின்மாவாழ்க்கை போல இருக்கும்) :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மௌனமான காதல் எல்லாம் குழந்தையின் பெயரில்தான் வடிகால் தேடும்! தப்பில்லை!!

வாழ்த்துக்கள் சகோதரி!! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுவி ...வடிவேலு ..நுனாவிலான்..ஈசன்...தப்பிலி ..உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

சில் எழுத்துப்பிழைகள் உண்டு. திருத்தி இருக்கிறேன்.

அரிசிக்குள் கல் போல ....அரிசியை தான்பார்பார்கள்.

ஆனால் கல் இல்லாத அரிசி தான் ஆரோக்கியமானது . :D

Link to comment
Share on other sites

சுவி ...வடிவேலு ..நுனாவிலான்..ஈசன்...தப்பிலி ..உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

சில் எழுத்துப்பிழைகள் உண்டு. திருத்தி இருக்கிறேன்.

அரிசிக்குள் கல் போல ....அரிசியை தான்பார்பார்கள்.

ஆனால் கல் இல்லாத அரிசி தான் ஆரோக்கியமானது . :D

அப்போ கடிக்கிற பல்லு பற்றி அக்கறை இல்லையா?

மரத்துக்கு முக்கியம் கிளைகள் தான். கிளைகு முக்கியம் இலைகள் ஆனால்க் அந்த இலைகள் உதிர்வதால் மரமே அம்மணமாக நிக்கும் என்பது மரத்துக்கு தெரியாத்து இல்லை :D

ஏதோ அடுக்கு மொழியில் நானும் எதுவும் சொல்லனும் என்று தோனிச்சு அது தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது வடி வேலுவுக்கு ..............காலப்போக்கில் மரங்கள் மீண்டும் துளிர்க்கும். பூக்கும் காய்க்கும் கனி தரும்.

அப்போது அம் .......... மண்ங்கள் மறைக்கக் படும். காலப்போக்கில் நல் மாற்றங்கள் வரும் என் சொல்ல வந்தேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட காதல் பலவற்றை கண்டிருக்கின்றோம்

கேட்டிருக்கின்றோம்

நாமும் அனுபவித்திருக்கின்றோம்

ஆனால் பெயர் வைத்தல் என்பது தப்பு.

அது ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கான இடைவெளியைச்சொல்லியபடியே இருக்கும்.

நான் திருமணம் செய்யும்வரை......

எனது மனைவியுடன் சேர்த்து 3 பேரை தெரிவு செய்து வைத்திருந்தேன் (மனதளவில்)

ஆனால் திருமணம் முடிந்ததும் மற்றவற்றை முற்றாக அழித்துவிட்டேன். இது எனது மனைவிக்கும் தெரியும்.

அவர்கள் சம்பந்தமான எந்த ஞாபகார்த்தமும் இல்லை எனது இன்றைய வாழ்க்கையில்.

அவர்களிடமும் இருப்பதை நான் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சம்பந்தமான எந்த ஞாபகார்த்தமும் இல்லை எனது இன்றைய வாழ்க்கையில்.

அவர்களிடமும் இருப்பதை நான் விரும்பவில்லை.

மறக்க முடியுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் மனைவியின் அன்பிலும் அதுவும் தாயாகும் போது முன்னால் காதலி எல்லாம் நினைவில் வராது மனைவியை விட்டு கொடுக்க்கவும் மனது இடம் தராது.

Link to comment
Share on other sites

எனது மனைவியுடன் சேர்த்து 3 பேரை தெரிவு செய்து வைத்திருந்தேன் (மனதளவில்)

கதைய வாசிச்ச உடன அண்ணணுக்கு பழசெல்லாம் கடகடவெண்டு கண்ணுக்க வருதுபோல..... :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் மனைவியின் அன்பிலும் அதுவும் தாயாகும் போது முன்னால் காதலி எல்லாம் நினைவில் வராது மனைவியை விட்டு கொடுக்க்கவும் மனது இடம் தராது.

மறந்தாகணும்

நிம்மதியான வாழ்க்கைக்கு இது முதல்படி

இதையே எனது மனைவியின்எனது காதலரின் பெயரை எனது பிள்ளைக்கு வைக்க அனுமதித்தால்..........

எனது வாழ்க்கை என்னாவது...?

அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னாவது....?

நாம் எல்லாவற்றையும் போட்டுக்குழப்பக்கூடாது. பருவவயது காதல் மற்றும் குறும்புத்தனங்களை திருமணம் எனும் பந்தத்தின் பின் தொடருவோமாயின் நாம் இந்த வாழ்க்கையை தொடர லாயக்கற்றவர்கள். அப்படியானவர்கள் அந்த நினைவுகளுடனேயே இருந்துவிடவேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேவகி ராகவனைக் காதலித்தாள் .நிறைவேறாத காதல். பிரிந்தனர் ........தேவகி மகளுக்கு ராகவி என் பெயர் வைத்தாள். ராகவன் அது தன பெயரின் முதல் எழுத்துக்கள் என எண்ணிக் கொண்டான். அது பள்ளிக்காதல் ....நீங்கள் உங்கள் முன்னாள் காதலியை (இருந்தால்)கண்டால் பேசமாடீர்க்ளா? பெரும்பாலும் காதலர்கள் ஒன்று சேர்வதில்லை விதிவசமோ பிரிந்தோ பிரிக்க பட்டோ இருப்பார்கள். ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் காதல் பூப்பூக்கும் அது ஒரு உணர்வு .பல வகைக் காதல் ,நிலை மாறும். சில நிறைவேறும். நினைத்து கிடைகாவிடால் கிடைத்தை நினைப்பது தான் வாழ்க்கை. ராகவனும் திருமணத்தின் பின் வேறு நிலை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூகக்கதைக்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னதான் காதல் என்ராலும் ஒரு பெண் தனது பிள்ளைக்கு காதலன் பெயரை வைப்பது தவறு....என்கன்ட டமிழ் கல்சரை எப்படி நாங்கள் காப்பாற்றுவது....பிள்ளை வளர்ந்து என்னுடைய பெயரின் அர்த்தம் என்னஎன்று கேட்டால் ,அது என்னுடைய காதலின் பெயர் என்ற சொல்லுறது......

கதை நல்லாயிருக்கு ஆனால் கருத்து எனக்கு பிடிக்கவில்லை......

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் மனைவியின் அன்பிலும் அதுவும் தாயாகும் போது முன்னால் காதலி எல்லாம் நினைவில் வராது மனைவியை விட்டு கொடுக்க்கவும் மனது இடம் தராது.

உங்கள் உண்மையான பதில் வரவேற்கத்தக்கது.

சிலர் சொல்வது போல் காதலியை மறக்க முடியும் என்பது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கமுடியும்? ஒருவரது வாழ்க்கையின் ஒரு பகுதியையும் அல்லவா மறக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புனை கதை தானே ..........கருத்து வேறுபாடு இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி ..

... :D ...இது" ஜில்லு "ன்னு குளிர்மையாக இருக்க வில்லை தான .நன்றி .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அக்கா

நீங்கள் ஒரு கருத்தை வைத்து எழுதியிருக்கின்றீர்கள்

நான் அதன்அடுத்த கட்டம் பற்றி எழுதியுள்ளேன்.

உங்கள் கரு முடிவடைய எனது கரு ஆரம்பிக்கிறது

அதன்படி எனது கரு அந்த பெண்ணை திருமணம் புரிந்தவருக்காகவும் அவர்களுக்கு பிறந்த குழந்தையின் எதிர்காலம் பற்றியது.

சொல்ல நல்லாயிருந்தாலும் குடும்பத்தை குலைக்க பெரிதாக ஒன்றும் தேவையில்லை தெளிந்த நீரோடையில் சிறு கல்லுப்போல் இது போதும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புனை கதை தானே ..........கருத்து வேறுபாடு இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி ..

... :D ...இது" ஜில்லு "ன்னு குளிர்மையாக இருக்க வில்லை தான .நன்றி .

கதை நல்லா இருந்தது ஆனால் கதலனின் பெயரை மகனுக்கு வைத்து விட்டதால் தான் பிரச்சனை.

எனது மகனுக்கு பெயர் வைத்து நான் தான் , 2 வது மகளாக பிறந்தால் எனக்கு பிடித்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று கேட்டேன் மனைவியும் சரி என்றால் ஆனால் தனக்கு பிடித்த பெயராக இருக்க வேண்டும் என்றார் . சரி நானும் பெயரை சொன்னேன் அவர் பார்வையில் புரிந்தி கொண்டேன் இது வேலைக்கு சரிவராது இறுதியில் இருவருக்கும் பிடித்த பெயர் சொன்னோம் ஆனால் அதிலும் மனைவியும் , மகனும் ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சில் வந்த கீர்த்தியை நினைத்து சொன்னார்கள் ஆனால் நான் மானாட மயிலாட கிர்த்தியை நினைத்து சொன்னேன் ஆக எனது மகளுக்கு பெயர் கீர்த்தி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.