Jump to content

காலத்திற்குத் தேவையான போராட்டம்


Recommended Posts

எமது மக்களுக்கான விடிவு என்பதும் அதனை ஒட்டிய போராட்டம் என்பதும் பலவகைகளாக வகுக்கப்படதுண்டு, வகுக்கப்பட்டும் வருகின்றது. விடுதலைப்புலிகள் என்கின்ற அமைப்பு பலமாக ஈழதேசத்தில் இருந்தபோது சர்வதேசம் எங்கும் வாழும் மக்களிடத்தில் இருந்த ஒற்றுமையும், புலம்பெயர் போராட்டங்களும், இன்று ஏன் முடங்கிப் போய்க்கிடக்கின்றன?

ஈழத்தில் ஆயுதப்போரட்டம் என்பது நாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. சிங்களப் பேரினவாதத்தினால் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றே. விடுதலைக்காகப் போராடிய அமைப்பை திட்டமிட்டு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தியமையால் தொடர்ந்து இயங்கவிடாது தடுத்தது சர்வதேச நாடுகள். சிங்கள அரசும் திட்டமிட்டே சிறுவர் படை சேர்ப்பு என்று நடக்காத ஓர் வதந்தியைப் பரப்பி எமது இனத்தினை அதன் சுதந்திரப் போராட்டத்தினை திசை திருப்பின. தற்கொலைத் தாக்குதல் என, கரும்புலித் தாக்குதல்களுக்கு முத்திரையிட்டன. இதனால் தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டே இருப்போமானால், சர்வதேச அரங்கில் இருந்து ஒதுக்கி ஓரங்கட்டப்படுவோம் என்பதை நன்கு அறிந்த விடுதலைப்புலிகள் அமைப்பு, அதன் கொள்கைப் பிரகடனமான கார்த்திகை 27 2008 ஆம் ஆண்டில், கொள்கை விளக்கவுரையில் தமது போராட்டத்தை புலம்பெயர் வாழ் தமிழ்ச் சமூகம் முன்னெடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

அதன்படி தொடர்ந்த சில மாதங்கள் கடுமையான போராட்டங்கள் இடம்பெற்றன. வலியின் வேதனையாற் துடித்தது போன்று போராடிய எம்மினம் வைகாசி இறுதியில் ஓய்ந்தது ஏன்? இன்று வரை தமது பரப்புரையை திட்டமிட்டு, வெற்றிகரமாக அரங்கேற்றிவரும் சிங்கள அரசு, அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. ஒவ்வொரு தமிழனும் உணர மறுக்கும் ஓர் செய்தி இதுதான். "இது எனக்கான உரிமைப்போர், இதில் என்னுரிமையைக் கேட்கும் உரிமை எனக்கிருக்கின்றது" என்கின்ற ஓர் அடிப்படைவாதம். இன்று புலம்பெயர்ந்த சமுதாயம் இருக்கும் சர்வதேச நாடுகள் எங்கணும், உனக்கான உரிமையைக் கேட்கும் தகுதி உனக்கிருக்கின்றது. இன்னமும் நாம் இலங்கையின் பழமைவாதத்திலும், இலங்கையில் நாம் காணாத மக்களாட்சியிலும், நாம் கண்ட இராணுவ ஆட்சி என்ற குழிக்குள்ளும் இருந்து கொண்டு சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம். விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே போரிட்டுப் பெற்றுக்கொடுப்பதற்கு இது ஒன்றும் போரிடுபவர்களின் உரிமைப் போர் மட்டுமில்லையே! இது ஒவ்வொரு தமிழனுக்குமான, தனது வாழ்வியல், உரிமைக்கான, தனது பிறப்பின் நீதிக்கான போர்.

இன்று எமது இனம் சந்தித்துவரும் வன்னி அவலங்களை எடுத்துக்கொண்டால் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பது எமக்கே கவலையளிக்கின்றது. சிறுவர்கள் அன்று சர்வதேச ஒழுங்கில் படையணியில் சேர்க்கப்பட்டார்கள் என்று கொகரித்த சிங்களம் அதே சிறார்களை வேலைக்கமர்த்திப் பழிவாங்குகின்றது. பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையினை இழந்து உண்ண உணவின்றி நிர்க்கதியாகி நிற்கின்றார்கள். அவர்களையும், குறிப்பாக இராணுவத்தின் அடக்கு முறைகளுக்குள்ளும் பாலியற் தொல்லைகளுக்குள்ளும் இருந்து தப்பிப்பதற்கான திருமணங்கள் நிகழ்ந்தேறிவருகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் 16 வயதுப் பெண் 14 வயது அங்கவீனனான ஓர் இளைஞனை மணந்து கொண்டாள். இது அவளது காலத்தின் கட்டாயமாக மாறி இருந்தது. பெற்றோரை எதிர்த்து செய்யவில்லை. பெற்றோர் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்த இந்தத் திருமணம், நடந்து 8 மாதத்தில் பிள்ளை பெற்றுக்கொண்டாள். அங்கவீனனான கணவனோ ஏதுமறியாது இருந்தான். பின்னர் ஊரார் சந்தி சிரிக்க, உண்மை வெளிப்பட்டது. பாடசாலையால் திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை இராணுவ வீரன் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றான். இது தொடர்பாக காவற்துறையில் முறையிடச் சென்ற அந்த சிறுமியை காவற்துறை கிளிநொச்சிப் பொறுப்பாக இருக்கும் காவற்துறை அதிகாரி, தனது அலுவலகத்தில் விசாரணை என்னும் பெயரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியற்பலாத்காரம் நிகழ்த்தி இருக்கின்றார். இதனை தன் பெற்றோரிடம் கதறி அழுத அந்தச் சிறுமியை மனதளவில் தேற்ற எண்ணியே தாம் திருமணம் ஒழுங்கு செய்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார் அந்த சிறுமியின் தந்தை. இதனை எல்லாம் கேட்டுச் செவிமடுத்த அந்த உடல் ஊனமுற்ற இளைஞனும் சம்மதித்தே இந்த திருமணம் அரங்கேறியது.

இதனைப் பற்றி ஊரார் அறிந்து பேசியதைக் கேட்டு சகிக்க முடியாத அந்தச் சிறுமியும், அவள் பிள்ளையுமாக இருவரும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்கள்.

இவ்வாறான பல சம்பவங்கள் அங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ஏன் சர்வதேச அரங்கில் எமது போர், எமது போராட்டம் வீழ்ச்சி கண்டது? இப்போதுதான் புயலெனப் போராட்டம் கிளம்பவேண்டிய தருணம். சிங்கள அரசின் உண்மை முகமூடி கிழிக்கப்படவேண்டிய தருணமிது. இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகள் மீது போட்டுவிட்டுத் தப்பித்த சிங்கள அரசிற்கு இப்போது ஏதும் காரணங்களில்லையே! ஏன் இன்னமும் அமைதியாக இருக்கின்றது இந்த புலம்பெயர் உறவுகள்?

போராட்டக் களம் என்பது எமது விடுதலைக்கான களம். அது ஆயுதவழி இன்றிய களம். இதுதான் இன்றைய காலத்தின் தேவை. ஆயுதமின்றிய போராட்டக்களம் என்றால் என்னவகை என்று சிலவேளைகளில் குழம்பக்கூடும். இதிலேதான் இருக்கின்றது தந்திரோபாயக் களம், அரசியற் களம், பொருளாதாரக் களம் போன்றன.

தந்திரோபாயக் களம்: இது எம்மால் பல காலகட்டங்களில் தவறவிடப்பட்ட ஒன்று. ஆனால் இதனை சிங்கள அரசு வெற்றிகரமாக நிகழ்த்தி இருந்தது. இந்தக் களத்தை நாம் முழு நாடியாக எடுத்தேயாகவேண்டிய தருணமிது. இதிலே, உள்ளடக்கப்படுவதுதான், எமது இனத்திற்கு உண்மையிலேயே விடுதலை தேவை என்ற கருத்தினை சர்வதேசத்தின் அனைத்து மக்களுக்கும், அனைத்து அரசுகளுக்கும் எடுத்துச் சொல்லவேண்டிய களம். இந்தக் களம் தவறவிடுப்படும் பட்சத்தில் அண்மையில் கனடா அறிவித்திருந்தது போன்று அனைத்து நாடுகளும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்சனை இல்லை என்கின்ற செய்திதான் அறிவிக்கும் என்பதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லை. அத்தோடு இதனை எவ்வாறு முன்னெடுப்பது? அமைதி வழியில் அந்த அந்த நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படவேண்டிய போர். அண்மையில் சில உறவுகள் மேற்கொண்டது போன்ற நடை பயணங்கள் மூலமான விழிப்புணர்வுப் பிரச்சாரம், கூடப் படிக்கும் வேலை செய்யும் நண்பர்களிடம் பகிரப்படும் கருத்துக்கள், பன்மொழியிலான துண்டுப் பிரசுரங்கள், வேற்று மொழி ஊடகங்களுக்கான ஆக்கங்கள். வேற்று மொழி ஊடகங்களில் இடப்படும் வேற்றுமொழியிலான விளம்பரங்கள் என்று எத்தனையோ வழிமுறைகளில் எமது மக்களுக்கான நீதியினையும், இப்போது இல்லாதிருக்கும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு மீதான தடையும் அதனை நீக்கு வது தொடர்பான பிரச்சாரங்களும்

அரசியற்களம் : புலம்பெயர் தமிழ் உறவுகள், கூட்டாகவோ, தனியாகவோ அந்த அந்த நாட்டு அரசியல்வாதிகளை அந்த அந்த நாட்டுக் கலாச்சார அமைப்பில் கௌரவித்து, தமிழர் பண்பாட்டையும் கலந்து அவர்களை உரிய முறையிற் கௌரவித்து, அவர்களுடனான சந்திப்புக்கள், கருத்துப் பகிர்வுகள், தமிழ் மற்றும் மாற்று மொழி ஊடகங்களில் அவர்களுடனான கலந்துரையாடல்கள், ஊடக விளக்கங்கள். இவற்றைச் செய்யும் முன்னர் எமது ஈழத்தின் வரலாறும், அது எவ்வாறு சீரழிக்கப்பட்டது, சீரழிக்கப்படுகின்றது என்கின்ற செய்திகளையும் மிகவும் ஆளமகப் படித்தறிந்த பின்னர் செய்வது நீதியான நியாயமான வழியில் எமது வெற்றிக்குப் போடும் அடித்தள்ம், இல்லையேல் எதிரிக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் இலவசப் பிரச்சாரமாகிவிடும்.

பொருளாதாரக் களம்: நாங்கள் இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பு செய்தோம். எவ்வளவு காலம்? இன்று அவை மீண்டும் அந்தக் கடைகளில் இல்லையா? அப்படியானால் ஏன் அந்தப் புறக்கணிப்பை மேற்கொள்ளவேண்டும்? இதிலே நாம் செய்தது ஒன்றுதான், அதாவது இலங்கையின் ஏற்றுமதி தொடர்பான புறக்கணிப்பு. ஏன் இறக்கு மதி தொடர்பான புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது? எப்படி எங்கள் தமிழர் தாயகம் மீது இலங்கை பொருளாதாரத் தடை விதித்ததோ? அவ்வாறு ஒட்டு மொத்த இலங்கையின் மீதும் பொருளாதாரத்தடையை சர்வதேச நாடுகள் ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு நாம் தள்ளவேண்டும். இலங்கை அரசினை எமது பலத்தினைக் கொண்டு பொருளாதார ரீதியில் தாக்கவேண்டும். அதுவும், அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு நடாத்தவேண்டும். எமது உறவுகளுக்கான தத்தெடுப்புக்களை அதிகரிக்கவேண்டும், எமது உறவுகளுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இவை அனைத்தும் இலங்கை அரசு நிதானித்துக் கொள்வதற்குள் இடம்பெற்றாக வேண்டும்.

சர்வதேச ரீதியில் எமது பயணம், எமது போராட்டம் தொடரவேண்டும். எமது மக்களுக்கான சுதந்திரமானதும், நீதியானதுமான வாழ்வினை நாம் பெற்றுக்கொடுக்கவேண்டும். இதற்கு தமிழர் யாவரும் ஒன்றிணையவேண்டும். தமிழக அரசியலில் ஓர் புரட்சி வெடிக்க இருக்கின்றது. அந்தப் புரட்சி வெடிக்கும் போது, எமது புரட்சி சர்வதேச அரங்கில் ஓங்கி இருக்கவேண்டும், பலமாக இருக்கவேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் எமது ஈழம் அமையும். இது திண்ணம். தாமதம் வேண்டாம். இந்தியத் தேர்தலைப் பார்த்திருக்க வேண்டாம். இந்தியத் தேர்தலுக்கு முன்னர் சர்வதேச அரங்கில் புதிய பரிமாணம் பெறவேண்டும் எமது போராட்டம். விரைந்து செயற்படுவோம். வீழ்ச்சிக்காக அல்ல, எமது இனத்தின் எழுச்சிக்காக. தயவுசெய்து புலம்பெயர் தமிழர்களே! இது அரிய தருணம். இதனையும் நாம் தவறவிடக்கூடாது. துரோகிகள் என்பதைத் தூக்கி எறியுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக எழுச்சி கொள்ளுங்கள். இது உங்களின் காலம், உங்களால் முடியும். உங்கள் கரங்கள் ஒன்றுபட்டால் ஈழம் என்கின்ற உடல் உருப்பெறும். போட்டிகள் இருக்கட்டும், பொறாமைகளைப் புறந்தள்ளுங்கள். தலைமை என்பதை இப்போது எண்ணாதீர்கள், வென்றெடுத்தபின்னர் ஈழம் என்கின்ற திருநாட்டில் நின்று தலைமைத்துவம் யாருக்கு என்கின்ற ஜனநாயகப் போராட்டத்திற்குள் இறங்குவோம்....

Link to comment
Share on other sites

முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு தாயக விடுதலை இன்று எல்லோராலும் உணரப்படுகின்றது.

தாயகத்தை, தமிழீழ மக்களை, மண்ணை நேசிப்பவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒற்றுமையாக செயல்பட்டால் விடுதலை நிச்சயம் கிடைக்கும். அந்த உழைப்பின் மூலம் எதிரிகளை வெல்லலாம்.

Link to comment
Share on other sites

முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு தாயக விடுதலை இன்று எல்லோராலும் உணரப்படுகின்றது.

தாயகத்தை, தமிழீழ மக்களை, மண்ணை நேசிப்பவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒற்றுமையாக செயல்பட்டால் விடுதலை நிச்சயம் கிடைக்கும். அந்த உழைப்பின் மூலம் எதிரிகளை வெல்லலாம்.

எல்லோராலும் உணரப்படுகின்றது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். அந்தத் தவறிலிருந்து மீளவேண்டும். கோடானு கோடி மக்களில் 2,3 பேர் உணர்ந்திருக்கின்றார்கள். மிகுதிப் பணி எம்மிடம் விடப்பட்டுள்ளது என்கின்ற நினைப்பினில் முழுமூச்சுடன் ஈடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

உன்பணி எண்ணிக்கிடக்கிறது

நின்பணி நித்திப்பதுவோ?

என்பணி முடிந்ததல்ல...

நம்பணி தொடர்ந்தாகவேண்டும்...

Link to comment
Share on other sites

தமிழனின் இருப்பே கேள்விக்குறியாகிக்கொண்டுவருகின்றது.இதற்குள் இன்னமும் ஈழக்கனவு.

ஒளித்துவைத்தை எடுப்பதற்கான போராட்டம் தான் இப்போது நடைபெறுகின்றது.இன்னமும் சிலவருடங்களில் ஒருவிதமான தீர்வும் கொடுக்காமல் அனைத்து இனங்களும் சுமுகமாக வாழும் நாடாகவே இலங்கையை உலகிற்கு காட்டிக்கொள்ள முனையும்.அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுவிடுவார்கள்.இல்லை தமிழனுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று நினைத்து அதனால் தான் கூட்டமைப்பு இந்தியாவின் காலில் வீழ்ந்துகிடக்கின்றது.அதைவிட வேறு வழியுமில்லை.

புலம் பெயர்ந்த அனைத்து போராட்டங்களும் புஸ்வாணமாகிப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.நடந்து முடிந்த எழுத்தாளர் மகாநாட்டின் வெற்றி அதற்கு சாட்சி.

ஆயுதத்தை போட்டு சரணடைந்ததுதான் உண்மை.விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது மாதிரித்தான் ஆயுதத்தை மவுனித்தது என்பது.மே 18 வரைக்கும் நடேசனின் பேட்டிகளை வாசித்தவர்களுக்கு விளங்கும்."போஸ்ட் எல்டீடீ" அப்படி என்ற ஒரு பேச்சுக்கே இடமில்லை என்றார்

Link to comment
Share on other sites

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான்.

"பன்றிக்கு கனவிலும் குப்பைகளை கிளருகிறமாதிரித் தான் கனவுவரும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

தமிழனின் இருப்பே கேள்விக்குறியாகிக்கொண்டுவருகின்றது.இதற்குள் இன்னமும் ஈழக்கனவு.

ஒளித்துவைத்தை எடுப்பதற்கான போராட்டம் தான் இப்போது நடைபெறுகின்றது.இன்னமும் சிலவருடங்களில் ஒருவிதமான தீர்வும் கொடுக்காமல் அனைத்து இனங்களும் சுமுகமாக வாழும் நாடாகவே இலங்கையை உலகிற்கு காட்டிக்கொள்ள முனையும்.அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுவிடுவார்கள்.இல்லை தமிழனுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று நினைத்து அதனால் தான் கூட்டமைப்பு இந்தியாவின் காலில் வீழ்ந்துகிடக்கின்றது.அதைவிட வேறு வழியுமில்லை.

புலம் பெயர்ந்த அனைத்து போராட்டங்களும் புஸ்வாணமாகிப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.நடந்து முடிந்த எழுத்தாளர் மகாநாட்டின் வெற்றி அதற்கு சாட்சி.

ஆயுதத்தை போட்டு சரணடைந்ததுதான் உண்மை.விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது மாதிரித்தான் ஆயுதத்தை மவுனித்தது என்பது.மே 18 வரைக்கும் நடேசனின் பேட்டிகளை வாசித்தவர்களுக்கு விளங்கும்."போஸ்ட் எல்டீடீ" அப்படி என்ற ஒரு பேச்சுக்கே இடமில்லை என்றார்

வீழ்ந்தாலும் மண் ஒட்ட வில்லை என்பதற்கு அப்பால், ஒரு இனத்தின் விடுதலைக்காக அனைவரும் சேர்ந்து இணைந்து செயற்படவேண்டிய காலமிது. விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் இதர அமைப்புக்களுக்கான ஆதரவாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலமிது. இத்தனை அமைப்புக்களும் எந்த ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப் பட்டதோ? எந்த ஒரு குறிக்கோளுக்காக ஒன்றிணைந்தார்களொ அவ் அனைவரும் தமக்கான உரிமையை தனிநபராகக் கேட்கவேண்டிய காலமிது.

எதிரியின் ஊடறுப்புக்களையும் தாண்டி, எமது இனத்தின் விடுதலை என்பதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு செயற்பட்டால் வெற்றி நிச்சயம்

Link to comment
Share on other sites

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான்.

"பன்றிக்கு கனவிலும் குப்பைகளை கிளருகிறமாதிரித் தான் கனவுவரும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் என்று கூறினீர்கள், அதுபோன்றுதான், உரிக்க உரிக்க தமிழனாக இருக்கவேண்டும். அந்த வெங்காயத் தோல் கூட உயிர் பெற்று வெங்காயக் குமிழாக ஆகின்றதில்லையா? அதே தோல் தானே மனிதனின் கண்ணை அழ வைக்கிறது? அதே தோல் சேர்ந்தால் தானே நிங்கள் வெங்காயம் என்கின்ற ஒன்றை உண்ணுகின்றீர்கள்? அதுபோன்றுதான் வெங்காயத்தின் தோல் போன்று இருக்கும் ஒவ்வொரு தமிழனும் ஒன்றிணைந்து, தமிழினம் என்கின்ற வெங்காயக் குமிழாகி சர்வதேசத்தின் கண்களை அழவைக்க வேண்டும். தங்களால் முடியுமா? சேர்ந்து இயங்க? எமது இனத்தின் விடுதலையில்?

அடுத்துக் கூறி இருந்தீர்கள், பன்றி பற்றி, அதனுடைய நிலையில் இருப்பவர்களுக்குத்தான் அதன் எண்ணம் தோன்றும். அது கனவில் கூட தனது அடுத்த நாள் உண்விற்கு எதைக் கிளறி எதை எடுக்கலாம் என்று நினைக்கின்றது. மனிதனாக, தமிழனாகப் பிறந்த நாங்கள், எமது அடுத்த சந்ததிக்கான விடுதலையக் கூட கனவில் கூட சிந்திக்க அருகதையற்றவர்களாக நின்றுகொண்டு, வீராப்புப் பேசுவதில் காலத்தைக் கழிக்கின்றோம் போலும். போதும் பட்ட இன்னல்கள், இனியாவது ஒற்றுமையாக உழைப்போமா எமது விடுதலைக்காக...

Link to comment
Share on other sites

ஒவ்வொரு தமிழனும் தானாக உணர்ந்து முன்வந்து செய்யவேண்டும், இதை விடுத்து மற்றவன் மேல் குறைகளைச் சாடிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதுமில்லை

Link to comment
Share on other sites

ஒவ்வொரு தமிழனும் தனது இனத்தின் அழிவின் அவலத்தை உணர்ந்து, அதிலிருந்து புதிதாகப் பிறக்கவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.