Archived

This topic is now archived and is closed to further replies.

விசுகு

எது சரி? எது பிழை? நல்லவனா கெட்டவனா?

Recommended Posts

எது சரி?

எது பிழை?

நல்லவனா கெட்டவனா?

யாரையும் தாக்குவதற்காகவோ அவமானப்படுத்துவதற்காகவோ அல்ல இது. அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்லது கெட்டதை தெரிந்து கொள்வதற்கு.

தங்கள் பாடங்களை நீங்களும் எழுதலாம்.

ஒரு குடும்பத்தின்மூத்தமகன். பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் 3ம் ஆண்டு படித்துவந்தார். அந்தவேளையில் அவருடன் படிக்கும் ஒரு வெள்ளைக்காறியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளையும் இருந்தது. இது பெற்றோருக்கு தெரியவர தகப்பனார் பல்கலைக்கழக வாசலில் வைத்து வாள் எடுத்து வெட்டினார். அந்த வெட்டை தாய் வாங்கினார். அத்துடன் அந்த வெள்ளையுடன் அவர் வாழத்தொடங்கினார். அவளுக்கு வயது கூடியதாலும் இவர்வீட்டை மறக்கமுடியாதிருந்ததாலும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்கினாள். படிப்பு போனது. மனமுடைந்த தகப்பனார் தற்கொலை செய்து கொண்டார். அவனை பல காலத்துக்கு பின்அன்று தான் கண்டேன். 100 வீதம் அந்நியனில் வந்த விக்ரமின் தோற்றம். ஆனால் அந்த படத்தை அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தலையை குனிந்தபடி தலை மயிருக்கால் ஆட்களை முறைத்துப்பார்த்தபடி இருந்தான்.

யார் தப்பு இது...?

இவன் நல்லவனா கெட்டவனா?

Share this post

Link to post
Share on other sites

மருத்துவனாக இருக்க வேண்டியவன் இன்று பைத்தியமாக இருப்பது கவலை அளிக்கும் விடயம்.

இரண்டு வருடம் கழித்து காதலித்திருக்கலாம். அதுகும் படிக்கும் காலத்தில் பிள்ளை பெற்றவளை காதலிக்கும் போது..... பெற்று வளர்த்த அந்தத் தாய், தகப்பனின் மனம் என்ன வேதனைப் பட்டிருக்கும். அவர்களின் சாபமே... இவன் பைத்தியமானதற்கு காரணம்.

Share this post

Link to post
Share on other sites

ஒரு குடும்பத்தில் 5 ஆண்களுக்கு ஒரு பெண். செல்லமாகவும் அதேநேரம் வீரியாகவும் வளர்த்தார்கள். பல்கலைக்கழகத்தில் பல் வைத்தியத்திற்கு படித்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் சொந்த மைத்துணன் தனக்கு கல்யாணம் செய்து தரும்படியும் ராசாத்தி போல் வைத்துப்பார்ப்பேன் என்றும் பெண் கேட்டான். நம்பிய பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தனர். திருமண அடுத்த நாளே அவன் சொன்ன வசனம் பெண் கேட்டதிலிருந்து அத்தனையும் நாடகம். இனித்தான்இருக்கு வில்லத்தனம் என்று. முதலாவதாக என்னைவிட கூட படிக்கக்கூடாது படிப்பை நிறுத்து என்றான். இவளும் அது சரிதானே அவருக்கு கீழ்தான் நான்இருக்கணும் என்று சம்மதித்து படிப்பை நிறுத்தினாள். அடித்தான்உதைத்தான். பெற்றோருக்கோ சகோதரங்களுக்கோ தெரிந்தால் கவலைப்படுவார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் மறைக்கத்தொடங்கினாள். அவன் அதையும் தனக்கு சாதகமாக்கத்தொடங்கினான். இரு பிள்ளைகள்பிறந்தும் நிலை இன்னும்மோசமே தவிர குறைந்தபாடில்லை. அவளது பெற்றோர் 500 யார் பக்கத்திலிருந்தும் அந்த பிள்ளைகளை பார்க்கக்கூடாது கொஞ்சக்கூடாது. அப்படி ஏதாவது இவர்கள்செய்தால் தனக்கு பிரச்சினை என்று அழுகின்றாள்.

யார் தப்பு?

இவள் நல்லவளா கெட்டவளா?

Share this post

Link to post
Share on other sites

ஒரு வீட்டில் 4 ஆண் சகோதரர்கள் ஒரு பெண். இதில் இரண்டாவது மகன் பல்கலைக்கழகத்தில் 4ம் பொறியியலாளர் படித்துவந்தார். அந்த நாட்டுச்சட்டப்படி நாலு வருடம் முடித்ததும் ஒரு வருடம் லீவு எடுத்துவிட்டு படிப்பை தொடரமுடியும். அந்த அடிப்படையில் லீவு எடுத்துவிட்டு ஊர்சுற்றிவிட்டு வந்து அவரது படிப்பு சம்பந்தமான ஒரு வேலைக்கு போய் 4 மாதம் பாரீய சம்பளம் பெற்றார். அந்த வேளையில் எம்மின பெண் ஒருத்தியுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் நடத்தை பற்றி அறிந்திருந்த பெற்றோர் இதை எதிர்த்தனர். பெற்றோர் சொன்னவற்றை ஏற்றுக்கொண்ட அவர் ஆனால் அவளுக்கு வாழ்வு கொடுக்கப்போவதாகச்சொன்னார். எதிர்ப்பு முற்றவே பெண்ணைக்கூட்டிக்கொண்டு வேறு நாட்டுக்கு ஓடினார். அங்கு போய் பெற்றோருக்கு வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்காக 3 வேலை செய்து சொத்துக்குவித்தார். வீடு, வாகனம், சொந்த தொழில் என வளர்ந்தார். அதன் மூலம் பெற்றோரை திருப்திப்படுத்தி அவர்களுடன் இணையமுடியும் என நம்பினார். வினை வேறு விதமாக வந்தது. எவளுக்காக எல்லோரையும் விட்டுவிட்டு சென்றாரோ, ஒரு பிள்ளைக்கு தாயான அவரது மனைவி இன்னொருவருடன் கம்பி நீட்டினார். உடைந்து போய் உட்கார்ந்தவரை பெற்றோர் போய் பொறுப்பெடுத்தனர்.

இதில் தப்பு யாரிடம்?

இவர் நல்லவரா கெட்டவரா?

Share this post

Link to post
Share on other sites

எனது நண்பர் ஒருவர் உளவியல் படிக்கின்றார். படித்து முடித்தவுடன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உளவியல், குடும்பப் பிரச்சினைகளில் உதவி செய்வதுதான் இலட்சியம் என்று வேறு சொல்லியிருக்கின்றார். அவர் இலட்சியம் ஈடேற பலர் உதவி செய்வார்கள் போலிருக்கின்றது!

இன்னும் சில இருக்கின்றன. இவற்றில் சிலதுக்கு நான் பொறுப்பெடுத்தேன். ஆனால் சத்தியமாக சொல்கின்றேன். அவர்களது நியாயங்களைக்கேட்டால் அவர்களை வெட்டி சாய்க்கச்சொல்லும். அந்த அளவுக்கு மூடத்தனமான நம்பிக்கைகள். முட்டாள்தனமான எதிர்பார்ப்புக்கள். காறித்துப்பும் காத்திருப்புக்கள். எதிராளி ஏன் இவர்களை இப்படி ஆட்டுவிக்கின்றான் என்பது இவர்களது இந்த மன ஓட்டத்தினால்தான் என்பது புரிந்துவிடும். நான் எனது தீர்ப்புக்களை தீர்க்கமாக சொல்லிவிட்டு வந்துவிடுவேன். உடன் செயற்படுத்தியவன் நிம்மதியாக இருக்கின்றான். மற்றவர்கள் இன்னும் குனிந்தபடி... எதிரியிடம் எதையோ தேடியபடி..?

உங்கள் நண்பர் வந்தாலும், என்னைப்போல் அவரும் பைத்தியக்காறனாகிவிடுவார். :(

Share this post

Link to post
Share on other sites

ஒரு பெற்றோருக்கு 2 ஆண் பிள்ளைகள்

அதில் மூத்தவன் அடிதடி செய்யும் ஒரு குழுவில் இருந்தார். அதைக்கண்ட தம்பியும் அவரது குழுவில் இணைந்தார்.

இந்த இருவரும் அடிதடியில் இறங்கியதால் தகப்பனுக்கு தெம்பு வந்தது. எங்கு போனாலும் வலிய சண்டையை தொடங்குவார். சண்டை ரெடி என்றதும் மக்களுக்கு தொலைபேசியில் அறிவிப்பார். வந்து வெட்டும் கொத்தும் விழும். இதனால் தம்பி மாட்டுப்பட்டு உள்ளே உள்ளார். தற்போதும் தகப்பனார் தன் சேட்டைகளைத்தொடர்கிறார். மீண்டும் ஒரு மகனை வைத்து வெட்டுக்கொத்து தொடர்கிறது.

இதில் எவர் குற்றவாளி?

அப்பனா மகனா?

Share this post

Link to post
Share on other sites

தண்டித்து கண்டிக்கவேண்டியவர் அப்பா தான். இதில் முதல் குற்றவாளி அப்பா தான். அவரே பிள்ளைகளுடன் இணைந்து அடிதடிக்கு உதவும் போது பிள்ளைகளை குற்றம் கூறி பலனில்லை. ஒரு பிள்ளை உள்ளே போயும் திருந்தாதவர்களை என்னவென்று சொல்வது?

Share this post

Link to post
Share on other sites

ஒரு குடும்பம்

ஆணும் பெண்ணுமாக சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினர். அங்குவரும்பெண்களுடன் அவர் தவறான உறவுகளை வளர்த்துக்கொண்டார். அதை கண்ட அவரது மனைவி உனக்கு காட்டுகின்றேன் எனக்கும் செய்யத்தெரியும் என்று அங்குவரும் ஆண்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டார். தொழில் நட்டமடைந்து இருவரும் விவாகரத்து செய்து நாகமாகிப்போயினர்.

அந்த பெண் செய்தது சரியா?

இதில் யார் நல்லவர்....?

Share this post

Link to post
Share on other sites

இது நாம் எதிர்பார்க்க வேண்டிய விடயம்தான்.இங்கு யாரை பிழை சொல்வது?பெற்றோர் நாம் இங்கு ஏன் வந்தோம் ? நாங்கள் எதிர்பார்ப்பது நம் பிள்ளைகள் நமதுகலாச்சாரத்துடன் வாழவேண்டுமென்பது.அது தவறு அப்படியானால் நாம் நமது இடங்களுக்கே போகவேண்டும்.அல்லாதுபோனால் இப்படியான விடயங்களை சந்தித்தேயாகவேண்டும்.

ஒரு பெற்றோருக்கு 2 ஆண் பிள்ளைகள்

அதில் மூத்தவன் அடிதடி செய்யும் ஒரு குழுவில் இருந்தார். அதைக்கண்ட தம்பியும் அவரது குழுவில் இணைந்தார்.

இந்த இருவரும் அடிதடியில் இறங்கியதால் தகப்பனுக்கு தெம்பு வந்தது. எங்கு போனாலும் வலிய சண்டையை தொடங்குவார். சண்டை ரெடி என்றதும் மக்களுக்கு தொலைபேசியில் அறிவிப்பார். வந்து வெட்டும் கொத்தும் விழும். இதனால் தம்பி மாட்டுப்பட்டு உள்ளே உள்ளார். தற்போதும் தகப்பனார் தன் சேட்டைகளைத்தொடர்கிறார். மீண்டும் ஒரு மகனை வைத்து வெட்டுக்கொத்து தொடர்கிறது.

இதில் எவர் குற்றவாளி?

அப்பனா மகனா?

விசுகு வேறவேலை இல்லையா உங்களுக்கு,

Share this post

Link to post
Share on other sites

இவ்வளவு விசயமும் தமிழ்க் குடும்பத்திலையா? வேறை நாட்டவர் குடும்பத்திலையா நடந்தது?

Share this post

Link to post
Share on other sites

விசுகு வேறவேலை இல்லையா உங்களுக்கு,

தங்கள் கேள்வி சரிதான்

அவர்களை பழிப்பது எனது நோக்கமல்ல. இதற்குள் இருந்து எமது உறவுகளையும் வருங்கால சந்ததியையும் மீட்பது....?

இது போன்ற பிரச்சினைகள் எனக்கும் வரக்கூடும். தங்களுக்கும்வரக்கூடும். அந்த நேரத்தில் இதில் பட்ட காயங்கள் அல்லது அனுபவங்கள் எமக்கு உதவக்கூடும். எங்கோ தப்பு நடந்திருக்கிறது இவர்களது முடிவுகளில்....?

அது எங்கு..?

அதை நாம் தவிர்க்கமுடியுமா....?

முடிந்தால் அது தான் எனது நோக்கம்.

தங்களது இந்த கேள்விக்கு விழும் பச்சைகளைப்பொறுத்து இதை தொடர்வதை நான்ஆலோசிப்பேன்.

இவ்வளவு விசயமும் தமிழ்க் குடும்பத்திலையா? வேறை நாட்டவர் குடும்பத்திலையா நடந்தது?

வேற்று நாட்டவர் பற்றி எனக்கு என்ன அக்கறை....?

Share this post

Link to post
Share on other sites

இன்று என்னிடம் ஒரு அறிவித்தல் வந்தது. அதை அச்சிட்டுத்தரும்படி.

அதை எழுதியவர் எனக்கு தொலைபேசியில் இப்படி ஒன்றை ஒருவர் கொண்டுவருவார். அதை அச்சிட்டு அவரிடம் கொடுக்கும்படி சொன்னார். விடயம் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளம் பற்றியது. எனக்குத்தெரியும் இது என்னிடம் வருவது இது போன்ற விடயங்களுக்கு நான் பணம் வாங்குவதில்லை என்பதால் என்று. விடயத்தை வாசித்துப்பார்த்தேன். அவசர உதவி தேவை. தாமதிக்காதீர்கள் என 4 பக்க படங்களுடன் 6 பக்கங்கள் கொண்ட உதவி கேட்கும் சுற்றறிக்கை அது. அச்சிடும் முன் கீழே கேட்பவர் யார் என்று பார்த்தேன். ஒன்றுமில்லை. எழுதியவருடன் தொடர்பு கொண்டு கேட்டேன். ஏதாவது போடும்படி சொன்னார். என்ன விளையாடுகிறீர்களா? என்று ஏசியபோது பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் என்று போடுங்கள் என்று பதில்வந்தது. சம்பந்தப்பட்டவர்களுடன்கதைத்தீர்களா ..? அவர்களுடைய அனுமதி கிடைத்ததா என்று கேட்டபோது அவர்களை தொடர்பு கொண்டோம் அவர்களைச்சந்திக்க முடியவில்லை. ஆனால் இது அவசரமாக செய்ய வேண்டியது. எனவே உடனே செய்து தாருங்கள் என்று கேட்டார். மறுத்து திருப்பி அனுப்பிவிட்டேன்இதை வேறு எங்கும் செய்யக்கூடாது என்றும் சொல்லி அனுப்பினேன்.

சரியா பிழையா?

தவறு யாரிடம்?

இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா?

Share this post

Link to post
Share on other sites

தமிழர் எப்போது புலம் பெயர்ந்தார்களோ அன்றிலிருந்து எல்லாம் தலை கீழ். சுதந்திரம்......பணம் ..

...தனிமை .....வசதி வாய்ப்புக்கள் ....தட்டிக்கேட்க ஆளில்லை என்றார் திமிர் ....எல்லாம் கூடி வர, வீடுக்கு வீடு வாசல்படிக்கு பதில் பிரச்சினைகள். மனக்கட்டுப்பாடும் நல் ஒழுக்கமுமே வழி நடத்தும். கணவனால் பிரச்சினை படும் பெண் துணிவிருந்தால் (தன காலில் நிற்க தைரிய யமானவள் என்றால் ) தாய் தந்தை யுடன் சேருதல் நன்று.. அல்லது அவள் மன நோயாளியாகி விடுவாள். பிள்ளிகளின் எதிர்காலம் ....? இப்படி புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் ஏத்தா நடக்கிறது ..............தமிழனை யார் காபாற்றுவார்....... இறுதியில் வாழ்க்கையே தொலைந்துபோகும்.......

தொடருங்கள்..........முடிந்தவர்கள் எழுதுவார்கள்.........

...............................................................................................................................................................

கை எழுத்து இல்லாத கடிதம் எரியும் வீட்டில்" பிடுங்க" பார்கிறார்கள். இந்நாளில் போலிகளை இனம் காண்பது அவசியம் நீக்கள் முன் யோசினையாக் செயற்பட்டது நன்று ...........

Share this post

Link to post
Share on other sites

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_5/Koondukili/sariya.mp3&OBT_fname=sariya.mp3

இது வெளிநாட்டு சிக்கல் இதை நீங்களே பைசல் பண்ணிவிடுங்கள் தோழர் விசுகு..

டிஸ்கி :

எனக்கு வெளிநாட்டு நில்வரம் தெரியாது.. :(

Share this post

Link to post
Share on other sites

இது எல்லாவற்றிக்கும் காரணம் பெற்றோர் தான்.அவர்கள் நினைப்பது தங்கட பிள்ளைகள் தானே தப்பு செய்ய மாட்டார்கள் என நினைப்பது முதல் காரணம்,கல்வியையும்,பணத்தையும்,வசதி வாய்ப்புகளையும் தேடிக் கொடுக்கும் பெற்றோர் நல்ல ஒழுக்கத்ததையும்,பண்பையும்,கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுப்பதில்லை அதனால் அதன் பலனை அவர்களே அனுபவிக்கிறார்கள்.

விசுகு அண்ணா நீங்கள் ஒரு திறந்த புத்தகம் . உங்களிடம் வந்தால் பிரான்சில் யாருக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.[இதைத் தானே கிருபன் சொல்ல வந்தனீங்கள் நான் வடிவாய் சொல்லிட்டன்.]

Share this post

Link to post
Share on other sites

இங்கு நீங்கள் எழுதி இருக்கும் விடயங்களும் கேட்டிருக்கும் கேள்விகளும் ஆண் - பெண் உறவு வகைகளை மையப்படுத்தி அமைந்திருக்கிறது. அதுதான் இந்தக் கேள்விகளின் அடிப்படை என்றும் நினைக்கிறேன்.

நான் அறிய இன்று ஆண்களுக்கு ஈடாக பெண்களும் பல ஆண்களோடு பல வகை நடத்தைகளை காண்பிப்பதையே விரும்புகின்றனர். பள்ளியில் படிக்கும் போது ஒருத்தன்.. யுனியில் சுத்தித் திரிய ஒருத்தன்.. வேலை தேடிப் போற இடத்தில ஒருத்தன்.. வேலை இடத்தில ஒருத்தன்.. இறுதியில கலியாணம் கட்ட ஒருத்தன்.. இப்படி பலருடன் வாழ்வதையே இன்றைய பெண்கள் தங்களின் வாழ்வியல் சுகம் என்று நினைக்கின்றனர். இப்படியானவர்களுக்கு புத்தி சொல்லப் போய் நீங்கள் தான் கெட்ட பெயர் எடுப்பீர்கள். அவர்கள் சொல்வார்கள் தங்கள் சுதந்திரத்தை தடுக்கினம் என்று.

மேயவிட்டு வேடிக்கை பார்ப்பதோடு தனி மனித ஒழுக்கத்தை விரும்பிறவங்க.. இப்படியான பெண்களையோ ஆண்களையோ சந்திக்க நேர்ந்தால்.. அவர்களை இனங்கண்டவுடன்.. விட்டு விலகி உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதே சிறப்பு.. புத்திசாலித்தனம்.

காதல்.. கறுமாந்திரம் என்று கொள்கை வளர்க்கப் போனீங்கள்.. இறுதியில் சீரழிய வேண்டியதுதான். உங்கள் மீது உண்மையான நம்பிக்கை வைப்பவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.. அன்பு செலுத்துங்கள்.. உங்களுக்கு அவர்கள் உண்மையாக இல்லை என்று அறியும் அந்தத் தருணத்தோடு அவர்களை உதறிவிடுவதே இன்றைய உலகில் உங்களைத் தக்க வைக்கும்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது தேவையற்றது. வருமுன் காருங்கோ. யார் நல்லம் கெட்டது என்ற ஆராய்ச்சிக்கு முன்.. நீங்கள் இன்னொருவரால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இதைத்தான் நான் சொல்வேன் இவர்களுக்கு புத்திமதியாய்.

ஒரு அளவீடின்றி ஒரு மனிதனிடத்தில் அதிக நெருக்கம் காட்டுவது நம்பிக்கை வளர்ப்பது ஆபத்தானது. எதுவும் அளவோடு கொஞ்சம் தூரத்தோடு அமையின் நாம் எம்மை ஆபத்துக்களில் இருந்து இலகுவாக விடுவித்துக் கொண்டு முன்னேற முடியும். எப்போதும் ஒரு மனிதன்.. தான் தன் வழியில் தன்னில் தங்கி வாழத் தெரிந்தவன் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவரில் அதிகம் தங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். இவையே இன்றைய உலகில் துன்பங்களில் இருந்து உங்களை ஓரளவு என்றாலும் விடுவிக்கும். ஏமாற்றுக் காரர்கள்.. பல ரூபங்களில் அலைகின்ற உலகம் இது. எனவே நாம் அவதானமாக நடந்து கொண்டால் இருந்து கொண்டால்.. சூழலை கற்றுக் கொண்டால்.. அதுவே போதும் 75% ஆபத்துக்கள் எம்மைவிட்டு தூர ஓடிவிடும்.

உங்களை திட்டமிட்டு ஏமாற்றுபவர்களுக்கு அவர்கள் உணர அதையே திருப்பிச் செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களைப் போல இன்னொருவரை ஏமாற்ற முதல் கொஞ்சம் என்றாலும் யோசிப்பார்கள். திருந்த முயல்வார்கள்.

Share this post

Link to post
Share on other sites

எது சரி?

எது பிழை?

நல்லவனா கெட்டவனா?

யாரையும் தாக்குவதற்காகவோ அவமானப்படுத்துவதற்காகவோ அல்ல இது. அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்லது கெட்டதை தெரிந்து கொள்வதற்கு.

தங்கள் பாடங்களை நீங்களும் எழுதலாம்.

.

யார் தப்பு இது...?

இவன் நல்லவனா கெட்டவனா?

தனிப்பட்டவர்களின் குடும்ப விடயங்களை சந்திக்குக் கொண்டு வருவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் மனம் இதை அறிந்து கொண்டால் புண்படும்

ஆராய்வதற்கு நமக்கு எத்தனையோ நாட்டுப் பிரச்சனைகள் இருக்கும் போது இப்படி ஒரு ஆராய்ச்சி தேவையா?????

வாத்தியார்

**********

Share this post

Link to post
Share on other sites

தனிப்பட்டவர்களின் குடும்ப விடயங்களை சந்திக்குக் கொண்டு வருவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் மனம் இதை அறிந்து கொண்டால் புண்படும்

ஆராய்வதற்கு நமக்கு எத்தனையோ நாட்டுப் பிரச்சனைகள் இருக்கும் போது இப்படி ஒரு ஆராய்ச்சி தேவையா?????

வாத்தியார்

**********

வெள்ளையள்.. இப்படியான விடயங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளூடாக சம்பந்தப்பட்டவர்களையும் நேரடியாக அழைத்து பேசி.. தீர்வுகளை ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நாமோ.. இன்னும் குடும்ப விவகாரம் என்று மூடிமறைக்க நினைக்கிறம்.

குடும்பம் சமூகத்தின் அலகு. அந்த வகையில் இப்படியான குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகளின் பொதுவடிவம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன என்ற வகையில் இவை சமுகத்தோடு பகிரப்பட்டு தீர்வுகளும் ஆலோசனைகளும் முன் வைக்கப்படும் போது தவறு செய்பவர்கள் திருந்தவும்.. செய்ய இருப்பவர்கள்.. பாடம் பயிலவும் உதவும். அப்பாவிகள் காக்கப்படவும் அறிவூட்டும்.

பாதிக்கப்பட்டவன் முன்வந்து பகிர்ந்து கொள்வதற்கும் பக்கத்து வீட்டுக்காரன் பகிர்ந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு நெடுக்ஸ் ஐயா!!

வாத்தியார்

**********

Share this post

Link to post
Share on other sites

வெள்ளையள்.. இப்படியான விடயங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளூடாக சம்பந்தப்பட்டவர்களையும் நேரடியாக அழைத்து பேசி.. தீர்வுகளை ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நாமோ.. இன்னும் குடும்ப விவகாரம் என்று மூடிமறைக்க நினைக்கிறம்.

குடும்பம் சமூகத்தின் அலகு. அந்த வகையில் இப்படியான குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகளின் பொதுவடிவம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன என்ற வகையில் இவை சமுகத்தோடு பகிரப்பட்டு தீர்வுகளும் ஆலோசனைகளும் முன் வைக்கப்படும் போது தவறு செய்பவர்கள் திருந்தவும்.. செய்ய இருப்பவர்கள்.. பாடம் பயிலவும் உதவும். அப்பாவிகள் காக்கப்படவும் அறிவூட்டும்.

அப்ப இனி வாற காலங்களிலை எங்கடை வீட்டுப்பிரச்சனையளை ரிவியிலையும் தியேட்டரிலையும் போட்டுக்காட்டி சமாளிச்சு நடக்கோணும்.

ஒருசில வீட்டுப்பிரச்சனைகளை அவரவர் தாங்களாகவே சிந்தித்து தீர்க்கப்படவேண்டும்.இதற்கு எல்லாம் பாடம் எடுக்கக்கூடாது.உளரீதியாகவே சோம்பேறியாகிவிடுவார்கள்.

நல்லதுகளையும்,தேவையானதுகளையும் விவாதிக்க வக்கில்லாத பொழுதுபோக்கு ஊடகங்கள் செய்யும் வேலை அது.

Share this post

Link to post
Share on other sites

எது சரி எது பிழை என்பதை காலமும், அதன்போதான முடிவுகளுமே தீர்மானிக்கின்றன...

குழந்தை இருக்கும் வெள்ளைப் பெண்ணை கட்டியவர் நல்லாக வாழ்திருந்தால், அவரின் முடிவை சரி என்போம்..அதுவே பிழைத்தமையால் அது பிழையாக தெரிகின்றது ...

பெண்ணுடன் ஓடிப் போனவர் அவவுடன் வாழ்திருந்தால் அவரின் முடிவும் சரியாக தெரிந்து இருக்கும்

இதனைவிட பல விதமாக; எம் பார்வைக்கு நெருடலாக வாழ்பவர்களின் வாழ்கை மிகவும் நன்றாக இருப்பதை கண்டுள்ளேன்

இதனைப் போல்தான் எல்லாமே... சரி தவறு எல்லாம் காலம் சார்ந்த விடயங்கள்

:)

Share this post

Link to post
Share on other sites

இது எல்லாவற்றிக்கும் காரணம் பெற்றோர் தான்.அவர்கள் நினைப்பது தங்கட பிள்ளைகள் தானே தப்பு செய்ய மாட்டார்கள் என நினைப்பது முதல் காரணம்,கல்வியையும்,பணத்தையும்,வசதி வாய்ப்புகளையும் தேடிக் கொடுக்கும் பெற்றோர் நல்ல ஒழுக்கத்ததையும்,பண்பையும்,கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுப்பதில்லை அதனால் அதன் பலனை அவர்களே அனுபவிக்கிறார்கள்.

விசுகு அண்ணா நீங்கள் ஒரு திறந்த புத்தகம் . உங்களிடம் வந்தால் பிரான்சில் யாருக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். [இதைத் தானே கிருபன் சொல்ல வந்தனீங்கள் நான் வடிவாய் சொல்லிட்டன்.]

நீங்கள் எந்த நோக்கத்தில் இதை எழுதியிருந்தாலும்

நாங்கள் ஒன்றையும் பார்க்கவில்லை கேட்கவில்லை என்று நானும் மூடிக்கொண்டு இருக்கமுடியும். ஆனால் இதேநிலையை நாமும் சந்திக்கக்கூடும். எனக்கும் வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே சூழ்நிலைகள் வரக்கூடும். அந்த வேளைகளில் இந்த வரலாறுகள் இந்த படிப்பினைகள் என்னையும் தங்களையும் ஒரு சிறு முன் யோசனையைத்தரலாம். அதுவே எனது நோக்கம்.

Share this post

Link to post
Share on other sites

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது தேவையற்றது. வருமுன் காருங்கோ.

வெள்ளையள்.. இப்படியான விடயங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளூடாக சம்பந்தப்பட்டவர்களையும் நேரடியாக அழைத்து பேசி.. தீர்வுகளை ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நாமோ.. இன்னும் குடும்ப விவகாரம் என்று மூடிமறைக்க நினைக்கிறம்.

குடும்பம் சமூகத்தின் அலகு. அந்த வகையில் இப்படியான குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகளின் பொதுவடிவம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன என்ற வகையில் இவை சமுகத்தோடு பகிரப்பட்டு தீர்வுகளும் ஆலோசனைகளும் முன் வைக்கப்படும் போது தவறு செய்பவர்கள் திருந்தவும்.. செய்ய இருப்பவர்கள்.. பாடம் பயிலவும் உதவும். அப்பாவிகள் காக்கப்படவும் அறிவூட்டும்.

இது தான் எனது நோக்கமும்

பிரெஞ்சு தொலைக்காட்சியில் மற்றும் தமிழ் தொலைக்காட்சியில் (உதாரணமாக நீயா ? நானா?) பார்த்த இது போன்ற கருத்துக்களுக்கான விவாதங்களே இதை இங்கு எழுதத்தூண்டியது.

அப்ப இனி வாற காலங்களிலை எங்கடை வீட்டுப்பிரச்சனையளை ரிவியிலையும் தியேட்டரிலையும் போட்டுக்காட்டி சமாளிச்சு நடக்கோணும்.

ஒருசில வீட்டுப்பிரச்சனைகளை அவரவர் தாங்களாகவே சிந்தித்து தீர்க்கப்படவேண்டும்.இ தற்கு எல்லாம் பாடம் எடுக்கக்கூடாது. உளரீதியாகவே சோம்பேறியாகிவிடுவார்கள்.

நல்லதுகளையும்,தேவையானதுகளையும் விவாதிக்க வக்கில்லாத பொழுதுபோக்கு ஊடகங்கள் செய்யும் வேலை அது.

உண்மைதான் குமாரசாமியண்ணா

நானும் அப்படித்தான் எவரது தனிப்பட்ட விடயங்களையும் தொடுவதில்லை. அவரவர் எடுக்கும் முடிவுகளே அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. ஆனால் இதற்கு முதல் நடந்த சில வாழ்க்கை பாடங்களை நாம் பாடமாக எடுத்துக்கொள்வது நல்லது என்பதே எனது கருத்து.

எது சரி எது பிழை என்பதை காலமும், அதன்போதான முடிவுகளுமே தீர்மானிக்கின்றன...

குழந்தை இருக்கும் வெள்ளைப் பெண்ணை கட்டியவர் நல்லாக வாழ்திருந்தால், அவரின் முடிவை சரி என்போம்..அதுவே பிழைத்தமையால் அது பிழையாக தெரிகின்றது ...

பெண்ணுடன் ஓடிப் போனவர் அவவுடன் வாழ்திருந்தால் அவரின் முடிவும் சரியாக தெரிந்து இருக்கும்

இதனைவிட பல விதமாக; எம் பார்வைக்கு நெருடலாக வாழ்பவர்களின் வாழ்கை மிகவும் நன்றாக இருப்பதை கண்டுள்ளேன்

இதனைப் போல்தான் எல்லாமே... சரி தவறு எல்லாம் காலம் சார்ந்த விடயங்கள்

நிழலி

காலமும் சந்தர்ப்பங்களுமே இதை தீர்மானிக்கின்றன. வெற்றியடைந்தவனை நாம் விமர்சிப்பதில்லை ஏனெனில்அவன் நமது சமுதாயத்துக்கு பிரச்சினையாக இல்லை. தோற்கும் போதே தவறு புரிகிறது. அதிலிருந்து மீளமுடியாது போகிறது. அதற்கான முன் ஜாக்கிரதைக்கு சில பட்டுதல்கள் பாதை காட்டலாம் இல்லையா?

மகனை வாளால்வெட்டிய குடும்பத்தில் வந்தவன் தான் நானும். எனது முடிவும் அதுவாகத்தானிருக்கும் இந்த பட்டறிவு இல்லை என்றால். ஆனால் இன்று அதே அளவு படிக்கும் எனது மகனுடன் நான் நண்பனாக பழகவும் அவனது நடவடிக்கைகளை வேறு விதமாக நோக்கவும் வழி அமைத்தது இந்த பட்டறிவுதான். அதேபோல் இங்கு எவருக்காவது அது ஒரு குறி சொல்லுமாயின் அதுவே எனக்கு வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites