Jump to content

வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்...

Posted by: on Jan 16, 2011

வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்...

''அப்புக்குட்டி... எட அப்புக்குட்டி...'' என்று குரல் கொடுத்தவாறே வந்து சேர்ந்தார் முகத்தார்.

''எடி செல்லமணி, முகத்தார் குடும்ப சமேதரராய் வாறதைப் பார்த்தால்... மாட்டுப் பொங்கல் கொண்டாட வாற மாதிரி இருக்கு. நம்மட வீட்டில மாடு இல்லையெண்டு மனுசனுக்குத் தெரியாது போல கிடக்குது... இண்டைக்கு என்ன வில்லங்கத்தோட வாறரரே தெரியாது... நான் ஒளிச்சிருக்கிறன். வெளிய போயிட்டன் எண்டு சமாளி...'' என்றவாறே அப்புக்குட்டி உள்ளே சென்றார்.

''இஞ்ச நில்லுங்கோ... நீங்கள் ஒளிக்கிறதும்... முகத்தார் அண்ணன் தேடிப் பிடிக்கிறதும் எப்பவும் நடக்கிற சங்கதிதானே... அவர் உங்கட மணத்தை வைச்சே பிடிச்சிடுவார்.'' என்று செல்லமணி தடுத்து நிறுத்தினார்.

''எடி பிள்ளை... உவன் என்னக் கண்டவுடன் நழுவப் பாத்தானோ... எடே அப்புக்குட்டி... நான் பாத்திட்டனடா... பாத்திட்டனடா... நீ ஓடி ஒளிச்சாப் போல நான் உன்னை விட்டுடுவனா...?'' என்றவாறே அப்புக்குட்டிக்குக் கடிவாளம் போட்டு, பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

''அத்தாருக்கு எப்பவும் என்னோட பகிடிதான்... கொஞ்சம் வயித்தக் கலக்கிச்சுது... அதுதான் போயிட்டு வரலாமெண்டு...''

''ஓமடா...ஓமடா... என்னைக் கண்டாத்தான் உனக்கு வயித்தக் கலக்கும்... எனக்கு உன்னைத் தெரியாதோடா...'' என்று முகத்தார் எரிச்சலுடன் கூறினார்.

''அது சரி அத்தார்... என்ன அக்கவையும் கூட்டிக்கொண்டு சோடியாக வெளிக்கிட்டிட்டீங்கள்... இங்க ஒருத்தரும் மாட்டுப் பொங்கல் பெங்கிறதாகத் தெரியேல்லை...''

''எட அப்புக்குட்டி... நீ தானேயெடா சொன்னாய்... அந்த எட்டுப்பேரையும் கண்டுபிடிக்கலாம் எண்டு... இண்டைக்கு அவங்களின்ர கூட்டம் ஒண்டு நடக்குதாம்... அதுதான் அந்த எட்டுப்பேரையும் கண்டுபிடிக்கலாம் எண்டு வெளிக்கிட்டனாங்கள்...'' என்றார் முகத்தார்.

''என்ன முகத்தாரண்ணை... அதென்னண்ணை எட்டுப் பேர்...? எனக்கெண்டா ஒண்டுமாய் விளங்கயில்லை...'' என்று செல்லமணி கழுத்தை நீட்டினார்.

''எல்லாம் உன்ர மச்சாளின்ர கூத்துத்தானடி பிள்ளை... உவளின்ர கையில ஒரு நோட்டீஸ் கிடைச்சுது... அதிலதானடி பிள்ளை ஆரம்பிச்சுது இந்தப் பிரச்சினை...''

''என்ன நோட்டீஸ்...? அதில என்ன கிடந்தது...?'' என்று செல்லமணி ஆவலாகக் கேட்டார்.

''உவன் அப்புக்குட்டி உனக்கு ஒண்டும் சொல்லயில்லையே... அதடி பிள்ளை... அந்த நோட்டீசில ஒரு படம் போட்டிருந்தது. மஞ்சள் நிறத்தில ஒரு மேசை... நடுவில, இரத்தம் தோஞ்ச தமிழீழம்... சுத்தி அதைப் பிச்சுத் தின்னுகிறது மாதிரி எட்டுப்பேர் இருக்கிறாங்கள். அந்த எட்டுப்பேரும் ஆர் எண்டு என்னைப் போட்டு இவள் குடைஞ்சு எடுத்துப்போட்டாள்... அந்த நோட்டீசை விட்டவங்கள் இண்டைக்கு ஒரு கூட்டம் போடுறாங்கள்... அதுதான் அங்க போனால் அந்த எட்டுப்பேரையும் கண்டு பிடிச்சுப்போடலாம் எண்டு வெளிக்கிட்டம்'' என்று முகத்தார் செல்லமணியின் சந்தேகத்தைப் போட்டு உடைத்தார்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்புக்குட்டியார் அடக்க முடியாத சிரிப்பால் அந்த இடத்தையே அதிர வைத்தார்.

''என்னடா... அப்புக்குட்டி... உனக்கு நக்கலாயிருக்குதோடா...?'' என்று கோபித்துக்கொண்டார்.

''அத்தார்... வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்... போங்கோ... போங்கோ... அங்க அடையாள அட்டையும் குடுக்கப்போறாங்களாம்... அதையும் வாங்கிச் சொருகிக்கொண்டு வாங்கோ... பிறகு தெரியும், வேட்டியுக்குள்ள ஓணான் என்ன செய்யுமெண்டு...'' என்று அடக்க முடியாத சிரிப்பினால் அந்த இடத்தையே அதிர வைத்தார்.

''எடேய் அப்புக்குட்டி... என்னை மாங்காய் மடையனெண்டு நினைச்சிட்டியோடா...? முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து வரிசம் ரெண்டாகப் போகுது... அந்தச் சனங்களுக்கும் ஒண்டும் செய்ய இல்லை... இந்தச் சனங்களையும் ஒற்றுமையாக இருக்க விடயில்லை... இந்த லட்சணத்தில உப்புக்கும் பெறாத அடையாள அட்டையை என்ர தலையில கட்டிக் காசு பிடுங்க முடியுமோடா...? இப்பவே, ஆளை ஆள் காட்டிக்குடுக்கிறதில போட்டி போடுகிறாங்கள்... அடையாள அட்டை தாறன் எண்டு விவரங்களை எடுக்கிறவங்கள் ஒரு விலையைப் பேசி, கோத்தபாயவிட்ட வித்துப்போட மாட்டாங்கள் எண்டு எப்பிடி நம்பிறது...?''

''முகத்தாரா... கொக்கா... அத்தார்... எட்டுப்பேரையும் தேடுகிற பிராக்கில அதுக்குள்ள சறுக்கி விழுந்துடுவீங்களோ... எண்டு நினைச்சன்... நீங்கள் விசயகாறன்தான்...'' என்று முகத்தாருக்குச் சான்றிதழ் கொடுத்தார் அப்புக்குட்டி.

''எடி பிள்ளை... செல்லமணி... இவன் அப்புக்குட்டி அசையமாட்டான். அவன் புலியளை விட்டு வெளிய வரமாட்டான். நீ வாவனடி பிள்ளை... உன்ர மச்சாளுக்கும் பிராக்காக இருக்கும்...''

''ஐயோ முகத்தாரண்ணை... என்னையும் விட்டிடுங்கோ... பாக்கிற சனங்கள் என்னையும் இவங்கட கோஸ்டி எண்டு வறுத்து எடுத்துப்போடுங்கள்...'' என்று அப்புக்குட்டியின் பின்னால் ஒதுங்கிக்கொண்டார் செல்லமணி.

- சிரித்திரன்

www.tamilkathir.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பாரப்பா சிரித்திரன் விவரமாய்த்தான் சிந்திக்க வைக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை. இப்பிடி ஆசை காட்டி எங்கட வெளிநாட்டு சனத்திட்ட பிடுங்கிறவை நிறைய பேர் இருக்கினம்.

எங்கட தமிழ் ஆக்களிலும் நிறைய பேர் சொற்ப காசுக்கு ஆசைப்பட்டு விலை மதிப்பில்லாதா மண்ணை விற்கினம்.

எங்கட தீவிலிருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீர்வழி வட்டாரத்தில் மக்கள் தொகையில் அறுபது விகிதம் இருக்கிறது.

மூன்று இலட்சம் ஆக்கிரப்பு படை பிடித்து வைத்திருக்கும் யாழில் ஏக்கர் எண்பதாயிரம் பவுண்ட்சுக்கு போகிறது.

தமிழ் ஈழம் கிடைத்தால் ஏக்கர் ஐந்து மில்லியன் பவுண்ட்ஸ் இலகுவாக தாண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.