Jump to content

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கில்ஸ்பரி பகுதியில் வாழ்ந்த டக்ளஸ் யோகராஜா (24) எனும் வாலிபர் கடந்த ஞாயிறு இரவு 9.00 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் இவர் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவரது கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வரும் போலீசார் இவரை கொலையாளிகள் நான்கு முறை சுட்டதில் இவரது உடலில் 4 குண்டுகள் துளைத்திருப்பதாகவும்

மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர் இரவு தான் தங்கியிருந்த வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே

காத்திருந்த கொலையாளிகள் இவரை சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • Replies 116
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கடவுளே :cry:

இந்த செய்தியை எப்படி அறிந்தீர்கள் அஜீவன் அண்ணா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொடர்கிறது. :cry:

Link to post
Share on other sites

என்ன மதன் அண்ணா நாட்டிலை நடக்குது?

இறந்த அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு சம்பவம்.

கடந்த வெள்ளிக்கிழமை (09-12-05) London Streatham Odeon சினிமாவிற்கு ஆறு படம் பார்க்க போயிருந்தேன். படம் இரவு 11.30 அளவில் ஆரம்பித்தது. படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடமளவில் உள்ளே வந்த பொலிசார் பின் வரிசையில் இருந்த சிலரை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்த்து சென்றார்கள். ஏறத்தாள அரைமணி நேரம் நீடித்த இந்த கைது நடவடிக்கையின் போது பின் வரிசையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் பொலீசாருக்கு எதிராக மிக கடுமையான எழுத்தில் தரமுடியாத வார்த்தைகளை உபயோகித்தார்கள்.

இவர்களை என்ன காரணதுக்காக கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் இளைஞர் குழு (Gang) ஒன்றை சேர்ந்தவர்கள் என்றும் ஆட்களை தாக்க கூடிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும் பின்னால் இருந்த ஒருவர் சொன்னார் .... சரிவர தெரியவில்லை. வழக்கமாக விஜய் படம் போன்ற பெருமளவில் மக்கள் வரக்கூடிய படங்களிற்களிற்கு அனைவரையும் Odeon Cinema Security Officers செக் பண்ணிய பின்பே உள்ளே அனுமதிப்பார்கள். அன்றைய தினம் சோதனை ஏதும் நடக்கவில்லை என்பதால் அதனை பயன்படுத்தி ஆயுதங்களை உள்ளே கொண்டு வந்திருக்க வாய்ப்பு உண்டு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே :cry:

இந்த செய்தியை எப்படி அறிந்தீர்கள் அஜீவன் அண்ணா?

இதுபற்றிய மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.

இப்போதைக்கு ...................

இவர் முன்னர் ஒரு (Gang) குழுவாக இருந்து சண்டைகளில் ஈடுபட்டு வந்ததாகவும்

பின்னர் இதிலிருந்து விடுபட்டு கடந்த காலங்களில் அமைதியாக வாழ்ந்து வந்ததாகவும் நண்பர்கள் வழி விபரங்கள் கிடைத்தன.

பெற்றோர்கள் உடலை வவுனியாவுக்கு அனுப்புமாறு வேண்டிய போதிலும்

போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் வரையும் பூதவுடலை கொடுக்க மாட்டார்கள்.

பெற்றோர் மிகவும் மன வேதனையோடு வவுனியாவில் இருக்கிறார்கள்.

பூதவுடல் ஆகக் குறைந்தது ஒரு மாதமாவது போலீசார் வசமே இருக்கும்.

லண்டனில் வாழும் அவரது நெருங்கிய உறவினர்களை விசாரித்த போலீசார் பூதவுடலை அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பார்ப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அனுமதியளித்தனர்.

வேறு எவரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

அக் கொலை நடைபெற்ற சுற்று வட்டார ஒளிப்பதிவுக் கருவிகளின் பதிவுகளை எடுத்துக் கொண்ட போலீசார்

கூடிய விரைவில் கொலையாளிகளை பிடித்துவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Link to post
Share on other sites

எங்கள் சனத்துக்குள்ளே இப்படியும் வீரம் பேசி மரியாதையைக் கெடுக்கும் ஆட்களும் இருப்பது வேதனை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு ஏதோ இஞ்சை இருக்கத்தான் பயமெண்டு லண்டனுக்கு ஓடின ஆட்கள் இனி அங்கை இருக்கேலாது எண்டு ஊருக்கு வருகிற நிலை கிட்டடிலை வரும் போல கிடக்கு...........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டில்தான் நிம்மதியாக வாழ்வது எங்குதான் பிரச்சனன இல்னல அதுவும் எங்கட பசங்க. பேசாமல் ஊருக்கு போகலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவுக்கு வரும் இளைஞர்கள்

எதோ ஒரு சில காரணங்களால் குழுவாக இயங்கத் தொடங்குகிறார்கள்.

லண்டனில் பல குழுக்கள் இயங்குகின்றன.

இவர்கள் ஒன்று சேரும் இடங்களில் குழுச் சண்டைகள் மூளுகின்றன.

இது பற்றி ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இளைஞர்கள் ஆரம்பத்தில் தவறானவர்களே இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலைகளே இவர்களை இந்நிலைக்கு தள்ளியிருக்கின்றன.

அதை தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இவர்களுக்கு எப்போது ஆபத்து வருகிறது?

இவர்கள் குழுவாக இருக்கும் போது

பாதுகாப்பாகவே இருக்கிறது..

ஒரு நாள் இவர்கள்

மனம் மாறியோ

மனம் திருந்தியோ

வெறுத்தோ வெளியேறிய பின்னர்

இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இந்த தனிமையை பயன்படுத்துகிறது இன்னுமொரு குழு.

இது இளைஞர்களிடம் பேசும் போது தெரிகிறது.

ஆரம்ப காலத்தில் பழி வாங்க முடியாததை

தனியான போது செய்து முடிக்கிறார்கள்.

எனவே

பெற்றோர்களே

இளைஞர்களே

நாளை

உங்களுக்கும் மேலே உள்ள நிலை

ஏற்படலாம்.

முடிவு செய்ய வேண்டியது உங்கள் கைகளில்

கொலை செய்யப்பட்ட டக்ளஸ்

கடந்த காலங்களில் இருந்து மீண்டு

சம்பாதிக்க வேண்டும்

பெற்றோரைப் பார்க்க வேண்டும்.

திருமணம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்று கூறி வந்தாராம்.

இருந்தாலும் மனதில் பயம் கலந்த மிரட்சியை அவரது

கண்களில் காணக் கூடியதாக இருந்தது என நெருங்கிய உறவினர்கள் கூறுகிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இளைஞர்கள் தவறு செய்ய வில்லை. எங்கள் சமூகம் இளைஞர்களை தூண்டி விட்டு அதில தாமும் குளிர் காய்ந்து பின்னர் அவர்களே இளைஞர்களை குற்றம் சொல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி திருந்தும் இளைஞர்களுக்கும் திருந்த நினைக்கும் இளைஞர்களுக்கும் சமூகம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அப்போது தான் வன்முறையை கட்டுப்படுத்த முடியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும். சும்மா இளைஞர்களை குற்றம் சொல்வதிலும், அவர்களை திருந்த சொல்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்நிலை இப்போ ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பரவி வருகின்றது. இங்கு சுவிசிலும் பல குழுக்கள் இயங்கி வருகின்றது. இதில் தற்போது முன்னனியில் பாசலில் இயங்கும் ஒரு குழுவும் அடுத்ததாக சொலத்து}ணில் இயங்கும் ஒரு குழுவும் வருகின்றன. சமீபத்தில் இந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் செயற்பாட்டினால் ஒரு குடும்பமே சீரளிந்துள்ளது.

நிதர்சன் சொல்வது போல் இவர்களைச் சமுதாயம் சீரளிக்கவில்லை. இவர்கள் இங்கு கிடைக்கும் சுதந்திரமும் சட்டமும் துணை போவதால் இப்படிச் சீரளிகின்றார்கள். இவர்களைத் திருத்த முயன்றவர்களைத் தம்மைக் கொல்ல முயல்பவர்களாக பொலிசில் முறைப்பாடு செய்கின்றார்கள். இதனால் பெற்றோரும் வேதனையுடனேயே வாழ்கின்றனர். தம்மோடு சேராத சக இளைஞனை தொலைபேசியில் அழைத்து மிகவும் கெட்ட வார்த்தையில் திட்டுவதுடன் மிரட்டவும் செய்கின்றார்கள். இந்த இளைஞர்களுடன் இளம் பெண்களும் சேர்ந்து கூத்தடிப்பதுதான் வேதனையின் உச்சக் கட்டம். அத்துடன் இப்பெண்கள் பகிரங்கமாகவே பணப்பசையுள்ள வேற்று நாட்டு இளைஞர்களோடு பாலியல் விடயங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை எனும் தலைப்பில் சிறீலங்காவிலிருந்து வெளிவரும் லங்காதீப பத்திரிகையின் செய்தி தினக்குரல் பகுதியல் காணக் கிடைத்தது.

இதுபோன்ற பொய்யான செய்திகளை இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் வந்துள்ளதாக குடும்பத்தினர் கூறினர்.

கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது இன்டர்போல் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸின் உடலை இலங்கை வவுனியாவுக்கு கொண்டு செல்ல இன்னும் லண்டன் போலீசார் அனுமதியளிக்கவில்லை.

இருப்பினும் நெருங்கிய சிலருக்கு உடலை பார்வையிட அனுமதியளித்த போது அதைவிட கூடுதலானவர்கள் வைத்தியசாலைக்கு போய் அசெளரியங்களை அங்கு உண்டாக்கியதால் யாரையும் அனுமதிப்பதில்லை எனும் முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

தவிர

இலங்கையின் பத்திரிகைகளில் வந்த செய்திகள் காரணமாக உடலை வவுனியாவுக்கு கொண்டு செல்வதை விட லண்டனிலேயே ஈமக்கிரிகைகளை செய்யலாம் எனும் நிலைக்கு குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கு லண்டன் வர போலீசார் அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது.

இதோ அந்த தவறான செய்தி:

புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை

விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவர் எனத் தெரிவிக்கப்படும் யோகராஜா டக்ளஸ் எனப்படும் நபர் லண்டன் நகரில் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சூட்டுக் கொலைச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி நிகழ்ந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட யோகராஜா டக்ளஸ் 28 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஷ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செய்தி வட்டாரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி யோகராஜா புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவராக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்து வந்த உதவி நிதிகளை நிர்வகிக்கும் நிதித் தலைவர் பொறுப்பிலிருந்து வந்தார் எனவும், மேலும் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் மற்றும் புலிகள் இயக்க பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இவர் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதி நிர்வாக விடயத்தில் செய்துள்ள மோசடி காரணமாகவே புலிகள் இயக்க உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.

மேற்படி யோகராஜா டக்ளஸ் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் இவரது உடலை ஈமக்கிரியைகளுக்காக ஷ்ரீலங்காவுக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை அவருடைய உறவினர்கள் செய்திருந்தார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலை சம்பந்தப்பட்ட மேலதிக விசாரணைகளை புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-லங்காதீப:17.12.2005-

http://www.thinakural.com/New%20web%20site...20/Shinhala.htm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில ஒன்று இப்படி நடக்குது.. இங்க புலத்தில எல்லாத்துக்கும் உழைப்பாளிகளின் பணத்தை வரியாக உறிஞ்சி பெனிபிட் என்று காசு கொடுக்கினம்..! அதை எப்படி செலவு செய்யுறது என்று தெரியாம இளசுகள்..போதைப் பொருள் மதுபானம் என்று சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினம்...! உழைக்க படிக்கத் தேவையில்லை என்று பலர் சிந்திக்கினம்..! அதால அவைக்கு பொழுதுபோக்க சண்டித்தனம்..பெண்கள் ஆண்களோடும் ஆண்கள் பெண்களோடும் சுத்துறது என்று இருக்கினம்..! லண்டனில் இது ஓவர்...! புறநகரங்களில் இப்படி பெரிய அளவில இல்லை..! அதால அங்க பொலீசுக்கு இப்படியான குழுக்களைக் கட்டுப்படுத்திறதில சிரமமில்லை..! லண்டன் சனத்தொகை அடர்த்தியான இடம் ஆகையால்... குற்றவாளிகள் பதுங்கவும் ஒழித்து வேறு நாடுகளுக்கு ஓடவும் வசதியா இருக்கு..! அடிப்படையில் மேற்கத்தைய அரசின் நிதி வழங்கல் முறைமைதான் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பாகி விடுகிறது..! பாவம் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது..! அதுவும் படிச்சு வேலை எடுத்தா 30% ரக்ஸ்...படிக்காம குந்திட்டு இருந்தா சும்மா காசு...! :wink: :) :idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் சொல்வது உண்மை.

வேலை செய்து வரிப் பணம் (Tex) கட்டி வாழ்வதை விட

அரசு கொடுக்கும் இலவச மானியப் பணத்தில் வாழும் போது தவறான வழிகளில் செல்ல காலமிருப்பதும் உண்மையே.............

இவர்கள் மத்தியில்

எதிர்காலத்தை நினைத்து கல்வி கற்போரும்

நல்ல முறையில் வாழ்வில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சிலரால்

முழு சமூகத்துக்கே கெட்ட பெயர் உண்டாவது என்னவோ வேதனைக்குரியதுதான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோகரா! அரோகரா!!

உந்த போடப்பட்டவரைப்பற்றி நல்ல செய்திகள்தான் வந்து கொண்டிருக்கிறது! மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம்! அதைவிட அத்தியடிக்குத்தி டக்கிலஸின் அதே குணாம்ஸங்களும் கொண்டவராம்!

*கொலைகள்! *வாள்/கத்தி/கோடாரி/துப்பாக்கி வீச்சுக்கள்! *வழிப்பறிப்புக்கள்! *.. போன்ற அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனாம்!! எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிருகத்தினால் பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் தமிழ்ப்பெண்களின் பெற்றார்கள் வெளியே சொல்ல முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்திரிக்கிறார்களாம்!!!

ஓ... ஈழ்பதீஸ்வரா! இந்த அரக்கனை அழித்து அற்புதத்தைச் செய்தவன் நிச்சயமாக ஒரு சமூக விரோதியாக இருக்கமாட்டான்!!!!

ரோகரா!!! .... கனக்கக் கதைக்கிறன்போல .... ரோகரா! அரோகரா!!!

http://www.nitharsanam.com/?art=13870

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ,, நம்மட கூட்டாளியை போட்டாச்சோ?? அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது? :lol: :? :shock:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரோகரா! அரோகரா!!

உந்த போடப்பட்டவரைப்பற்றி நல்ல செய்திகள்தான் வந்து கொண்டிருக்கிறது! மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம்! அதைவிட அத்தியடிக்குத்தி டக்கிலஸின் அதே குணாம்ஸங்களும் கொண்டவராம்!

*கொலைகள்! *வாள்/கத்தி/கோடாரி/துப்பாக்கி வீச்சுக்கள்! *வழிப்பறிப்புக்கள்! *.. போன்ற அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனாம்!! எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிருகத்தினால் பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் தமிழ்ப்பெண்களின் பெற்றார்கள் வெளியே சொல்ல முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்திரிக்கிறார்களாம்!!!

ஓ... ஈழ்பதீஸ்வரா! இந்த அரக்கனை அழித்து அற்புதத்தைச் செய்தவன் நிச்சயமாக ஒரு சமூக விரோதியாக இருக்கமாட்டான்!!!!

ரோகரா!!! .... கனக்கக் கதைக்கிறன்போல .... ரோகரா! அரோகரா!!!

http://www.nitharsanam.com/?art=13870

vavuniyab.JPG

மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் எழுதுங்கள்.

Link to post
Share on other sites

ஐயோ ஐயோ,, நம்மட கூட்டாளியை போட்டாச்சோ?? அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது? :lol: :? :shock:

அது பிறப்பில் ஏற்படுகின்ற பிரச்சனை :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குழுக்களிலிருந்து விலகி வாழ நினைப்பவர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் ரொறன்டோ இளைஞர்களால் நடாத்தப்படும் 'ToTamil' என்ற சஞ்சகையில் "சிறையிலிருந்து" என்று அகில் என்பவர் எழுதுகிறார்.

www.totamil.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தேடி பார்த்தேன் அதில் அந்த பத்திரிகையின் அனைத்து பக்கமும் pdf வடிவில் இருக்கிறது. கனக்க பக்கங்கள் இருப்பதால் எது என்று தேடி கண்டு பிடிக்கணும். சினேகிதி நேரடி லிங் இருந்தால் தாங்களன்

Link to post
Share on other sites

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தினால் தான் சாவான் என எங்கேயோ படித்த ஞாபகமாயிருக்கிறது. எல்லை தாண்டி எதிரி எமது நிலத்தை ஆக்கிரமிக்கும் போது அங்கு வாலை சுருட்டிக்கொண்டு பூனைமாதிரி ஓடி ஒழிந்தவர்கள் இங்கு புலம் பெயர்ந்த தேசத்தில் சமூக உதவிப்பணத்தில் கஞ்சாவை புகைத்ததும் காற்றில் பறக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் பலர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவதாகும் அது ஒரு வீரமா? :P :P இதைதான் கூறுவது செத்த பாம்பு அடிப்பது என...... கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு குழு இங்கு எஸன் நகரத்திலும் இருக்கிறது. இவர்களில் பல கட்டாக்காலிகள் விசா இலாத காரணத்தால் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸிக்கும் குடி பெயர்ந்து விட்டனர். ஒரு குழு எமது அடுத்த நகரத்தில் இருக்கிறது விரும்பியவர்கள் இந்த இணைப்பில் சென்று படங்களை மாத்திரம் பாருங்கள். தயவு செய்து அவர்களின் பாடல்களை கேளாதீர்கள் அது மிகவும் ஆபாசம் நிறைந்தது. இதில் வேதனைக்குரியது என்னவென்றால் இவர்களுடன் சேர்ந்து சிறிய தமிழ்ப்பெண்கள் கூத்தடிப்பது தான். 12 - 13 வயது மத்திக்கத்தக்க சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இவர்களுடன் நட்புகொண்டிருக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் தேடி பார்த்தேன் அதில் அந்த பத்திரிகையின் அனைத்து பக்கமும் pdf வடிவில் இருக்கிறது. கனக்க பக்கங்கள் இருப்பதால் எது என்று தேடி கண்டு பிடிக்கணும். சினேகிதி நேரடி லிங் இருந்தால் தாங்களன்

அது அப்பத்திரிகையில் தொடராக வருகிறது..

முதற்பகுதி 7வது பதிப்பின் 3ம்4ம்பக்கத்தில்.

இறுதிப்பகுதி கீழே உள்ள இணைப்பில்

http://www.totamil.com/current%20issue/04%20copy.pdf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊமை,, நீங்கள் கொண்டுவந்து போட்ட இனையத்தளத்தின் முகவரியை நீக்கிவிடுங்கள்,,தேவையில்லாத குப்பைகளை இங்க கொண்டு வந்து போட்டிருக்கிறீங்க? மனிசர்களா அதுங்க,,, :evil: :evil: :evil:

அட தங்கட வீரவசனங்களை ஊர் உலகம் அறியட்டுமெண்டு ஒரு இனையத்தளம் வேறையா? மட்டுறுத்தினர்களே, அந்த இனையத்தளமுகவரியை உடனடியாக நிக்கிவிடுங்க,, :idea:

ஆப்பிரிக்கன் கூட ஐரோப்பியன் ஸ்ரலைக்கு மாறிக்கொண்டு வாரான்,, இலங்கையில இருந்து வந்த சில வலசுகள் ஆப்பிரிக்கன் காட்டுக்க இருக்கிற வேடர்கள்மாதிரி மாறிக்கொண்டு வருகுதுகள்.... :evil: :evil: :evil: :evil:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.