Sign in to follow this  
Eas

வ.ஐ.ச.ஜெயபாலன் ஐயா அவர்களின் பேட்டி

Recommended Posts

கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’!

'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர்.

''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார். ஜிம்மில் கொண்டுபோய் விட்டு, 'பேட்டைக்காரன்’ பாத்திரம் எப்படி நடக்கணுமோ அதுபோல நடக்கப் பழக்கினார். 'பிராக்டிக்கலா விளக்குறதுக்கு முன்னால் நடிப்புன்னா என்னன்னு எனக்கு தியரிட்டிக்கலா சொல்லுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு வாரம் வகுப்பு எடுத்தார். உரைநடையில் எழுதுவதை உடல்மொழியில் கொண்டுவர்றதுதான் நடிப்புங் குறது புரிஞ்சுது. அதுக்குப் பிறகு நடிக்கிறது கஷ்டமா இல்லை.

எனக்கு ஒரே இடத்தில் இருந்து பழக்கம் இல்லை. ஆனால், இந்தப் படத்துக்காகத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தேன். என் மனைவி வாசுகிதான் எனக்கு ஸ்பான்சர் செய்து தமிழ்நாட்டில் தங்கவைத்தாள். ஊர் ஊராக சுற்றித் திரிந்ததால் நாவலோ, கதைகளோ எழுத முடியவில்லை. கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரண்டு வருடங்கள் ஒரே ஊரில் இருந்ததால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது’ என்ற குறுநாவலை எழுதிவிட்டேன்!''

''இலங்கையில் சேவல் சண்டை எல்லாம் உண்டா?''

''ஒரு காலத்தில் நடந்ததா கேள்விப்பட்டு இருக்கேன். இலங்கையில் உடுவில் தொடர் புள்ள நெடுந்தீவு என் சொந்த ஊர். சின்ன வயசில் இருந்து, மனிதர்களுக்கு இடையிலான சண்டைகளைத்தான் நேருக்கு நேரா பார்த்து வளர்ந்தேன். 96-ம் வருடத்தில் இருந்து நான் தொடர்ச்சியாக விடுதலைக்காகவும், சமாதா னத்துக்காகவும் வேலை செய்தேன். அவ்வப் போது போராளிகள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். முள்ளிவாய்க்கால் போரின் கடைசி கட்டத்தில் இதே நிலைமை தொடர்ந் தால், இறுதியில் சுற்றி வளைக்கப்படலாம் என்பதை முன்கூட்டியே சொன்னேன். ஆனால், என் வார்த்தைகள் செவி மடுக்கப்படவில்லை. கடைசியில், பெருந்தொகை மக்கள் கொல்லப்பட்டார்கள். வன்னி வடகாட்டில் இருக்கும் என் காணியும், என் அம்மாவின் சமாதியும் ராணுவத்தின் பிடிக்குள் போனது. அந்தக் காலகட்டத்தில் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளா னேன். சொல்ல இயலாத அந்த மனத் துயரில் இருந்து மீண்டு வரவே நான் 'ஆடுகளம்’ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அது பெரிய ஆசுவாசமாக இருந்தது!''

''படத்தில் உங்களுக்கு ராதாரவிதான் டப்பிங் பேசி இருக்கார். இருந்தாலும், படப்பிடிப்பில் மதுரை வட்டார வழக்கைப் பேசி நடிப்பது சுலபமாக இருந்ததா?''

''சிங்களப் பெண் பூஜா தமிழ் சினிமாவில் வந்து தமிழ் பேசி நடிக்கும்போது, தமிழனான எனக்கு என்ன மொழிப் பிரச்னை? தவிரவும், ஈழத் தமிழர்களான எங்களுக்கு சினிமா, தொலைக்காட்சி வழியாக தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்கும் பல காலமாகப் பழக்கமான ஒன்றுதான். இந்தியத் தமிழர்களுக்குத்தான் ஈழத் தமிழ் விளங்குவது இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்குகளையும் புரிந்து கொள்ள முடியும். ஆடுகளத்தில் நான்தான் டப்பிங் பேச விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. டப்பிங் பேசிய ராதாரவியே, 'நீங்கள் பேசி இருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று சொன்னார். அவரே ஏற்பாடு செய்து, நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்து இருக்கிறார். என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!''

நன்றி - ஆனந்த விகடன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’!

என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!''

நன்றி - ஆனந்த விகடன்.

ஒரு படத்தில நடிச்சிட்டதால.. ஈழத்துக்கும் இந்திய துணைக்கட்டத்துக்கும் இடையிலான முரண்பாட்டை களைய முடியுமாமில்ல...??!

தயவுசெய்து கலையை அரசியலாக்கி கொள்ளாதீங்க. கலையால் அரசியல் வளரலாம். ஆனால் கலைக்குள் அரசியலை திணிக்க.. வைக்காதீர்கள்.

முரண்பாடுகளைக் களைய செய்ய எவ்வளவோ இருக்கு..! ஈழத்துத் துயரங்கள் அடங்கிய படங்களையே தடை செய்யும் தென்னிந்திய சினிமா உலகில்.. கலையால்.. முரண்பாடுகளை களைவது என்பது வாய்சவடால் ஆகவே இறுதியில் முடியலாம்.

ஒரு படத்தோடு நீண்ட கனவு காண்பதிலும் கொஞ்சம் யதார்த்தத்தோடு அதில் நிலைப்பது எப்படி என்று கனவு கண்டுவிட்டு.. அது நனவானால் மிகுதி பற்றி பின்னர் சிந்திக்கலாம்.

ஈழத்தமிழர்களிடையே கலைஞர்கள் என்று உச்சரிக்கப்படுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அதற்கான தகுதியை பெறுவதில் சிரமப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவரை அதற்காக பாராட்டலாம். ஆனால் கனவுகளை நீட்டிக் கொள்வது..????! அளவுக்கு மிஞ்சிய முதிர்ச்சி இன்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Edited by nedukkalapoovan
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’!

'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர்.

இதற்கு முன் நடித்த அனுபவம் உண்டா?

''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார்.

ஜிம்மில் கொண்டுபோய் விட்டு, 'பேட்டைக்காரன்’ பாத்திரம் எப்படி நடக்கணுமோ அதுபோல நடக்கப் பழக்கினார். 'பிராக்டிக்கலா விளக்குறதுக்கு முன்னால் நடிப்புன்னா என்னன்னு எனக்கு தியரிட்டிக்கலா சொல்லுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு வாரம் வகுப்பு எடுத்தார். உரைநடையில் எழுதுவதை உடல்மொழியில் கொண்டுவர்றதுதான் நடிப்புங் குறது புரிஞ்சுது. அதுக்குப் பிறகு நடிக்கிறது கஷ்டமா இல்லை.

எனக்கு ஒரே இடத்தில் இருந்து பழக்கம் இல்லை. ஆனால், இந்தப் படத்துக்காகத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தேன். என் மனைவி வாசுகிதான் எனக்கு ஸ்பான்சர் செய்து தமிழ்நாட்டில் தங்கவைத்தாள். ஊர் ஊராக சுற்றித் திரிந்ததால் நாவலோ, கதைகளோ எழுத முடியவில்லை. கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரண்டு வருடங்கள் ஒரே ஊரில் இருந்ததால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது’ என்ற குறுநாவலை எழுதிவிட்டேன்!''

''இலங்கையில் சேவல் சண்டை எல்லாம் உண்டா?''

''ஒரு காலத்தில் நடந்ததா கேள்விப்பட்டு இருக்கேன். இலங்கையில் உடுவில் தொடர் புள்ள நெடுந்தீவு என் சொந்த ஊர். சின்ன வயசில் இருந்து, மனிதர்களுக்கு இடையிலான சண்டைகளைத்தான் நேருக்கு நேரா பார்த்து வளர்ந்தேன். 96-ம் வருடத்தில் இருந்து நான் தொடர்ச்சியாக விடுதலைக்காகவும், சமாதா னத்துக்காகவும் வேலை செய்தேன். அவ்வப் போது போராளிகள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள்.

முள்ளிவாய்க்கால் போரின் கடைசி கட்டத்தில் இதே நிலைமை தொடர்ந் தால், இறுதியில் சுற்றி வளைக்கப்படலாம் என்பதை முன்கூட்டியே சொன்னேன். ஆனால், என் வார்த்தைகள் செவி மடுக்கப்படவில்லை. கடைசியில், பெருந்தொகை மக்கள் கொல்லப்பட்டார்கள். வன்னி வடகாட்டில் இருக்கும் என் காணியும், என் அம்மாவின் சமாதியும் ராணுவத்தின் பிடிக்குள் போனது. அந்தக் காலகட்டத்தில் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளா னேன். சொல்ல இயலாத அந்த மனத் துயரில் இருந்து மீண்டு வரவே நான் 'ஆடுகளம்’ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அது பெரிய ஆசுவாசமாக இருந்தது!''

''படத்தில் உங்களுக்கு ராதாரவிதான் டப்பிங் பேசி இருக்கார். இருந்தாலும், படப்பிடிப்பில் மதுரை வட்டார வழக்கைப் பேசி நடிப்பது சுலபமாக இருந்ததா?''

''சிங்களப் பெண் பூஜா தமிழ் சினிமாவில் வந்து தமிழ் பேசி நடிக்கும்போது, தமிழனான எனக்கு என்ன மொழிப் பிரச்னை? தவிரவும், ஈழத் தமிழர்களான எங்களுக்கு சினிமா, தொலைக்காட்சி வழியாக தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்கும் பல காலமாகப் பழக்கமான ஒன்றுதான். இந்தியத் தமிழர்களுக்குத்தான் ஈழத் தமிழ் விளங்குவது இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்குகளையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆடுகளத்தில் நான்தான் டப்பிங் பேச விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. டப்பிங் பேசிய ராதாரவியே, 'நீங்கள் பேசி இருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று சொன்னார். அவரே ஏற்பாடு செய்து, நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்து இருக்கிறார். என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!''

ஆடுகளம் இலங்கைத் தமிழரின் ஒரிஜனல் புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பார்க்க....

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6024

Share this post


Link to post
Share on other sites

வன்னி வடகாட்டில் இருக்கும் என் காணியும், என் அம்மாவின் சமாதியும் ராணுவத்தின் பிடிக்குள் போனது. அந்தக் காலகட்டத்தில் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளா னேன். சொல்ல இயலாத அந்த மனத் துயரில் இருந்து மீண்டு வரவே நான் 'ஆடுகளம்’ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அது பெரிய ஆசுவாசமாக இருந்தது!''

:(

Share this post


Link to post
Share on other sites

அருமையாக கூறியுள்ளீர் nedukkalapoovan நன்றி :)

Share this post


Link to post
Share on other sites

. என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!''

நன்றி - ஆனந்த விகடன்.

எமக்கு சிங்களத்துக்கும்தான் முறன்பாடு ......

எமக்கு இந்தியா துணைக்க கண்டத்திற்க்கும் முறன்பாடு இல்லையே.....

அடுத்து சிங்கள படத்தில் நடித்து சிங்களத்துக்கும் எமக்கும் உள்ள முறன்பாட்டை தீர்ப்பார்....என்று எதிர் பார்ப்போம்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ஜயா.........

Share this post


Link to post
Share on other sites

பொயட்

திரையுலகத்தில் நல்ல கலைஞராகத் தொடர்ந்தும் வலம்வர வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ஜெயபாலன் ! உங்களுக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கும் நன்றி! :D

Share this post


Link to post
Share on other sites

Yaz kudumpa Nanparkalukku NanrikaL. Thanks Suvay, Valvaisagara, Thepa, jill, netfriend, visukku, easyjobs, Nedukkalapovan, eas anaivarukkum en puththaNdu Nal vazththukkaLum Nanriyum

Yaz kudumpa Nanparkalukku NanrikaL. Thanks Suvay, Valvaisagara, Thepa, jill, netfriend, visukku, easyjobs, Nedukkalapovan, eas anaivarukkum en puththaNdu Nal vazththukkaLum Nanriyum

Share this post


Link to post
Share on other sites

ஆடுகளமும் அருமை உங்கள் நடிப்பும் அதில் அருமை.

.

Edited by arjun

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this