Jump to content

எகிப்தில் மக்கள் போராட்டம்


akootha

Recommended Posts

  • முக்கிய சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்
  • அண்ணளவாக **பத்தாயிரம் மக்கள் என கணிக்கப்படுள்ளது
  • முபாரக் இன்றே பதவியை விட்டு விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்
  • அதில் தாம் உறுதியாக உள்ளதாக சொல்லியுள்ளார்கள்
  • சதுக்கத்தில் இருந்து சில வீதிகள் தள்ளி முபாரக்கின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு / கைகலப்பு நடக்கின்றது
  • நாளொன்றுக்கு எகிப்திய பொருளாதரம் 300 மில்லியன் டாலர்களை இழப்பதாக கணிக்கப்பட்டுள்ளது

** மாற்றம் ** மொத்தம் இரண்டு இலட்சம் மக்கள் வரை பங்குபற்றியுள்ளார்கள் என இப்பொழுது சொல்லப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

எகிப்த்தில் இந்த முபாரக் போனால் இன்னுமொரு முபாரக் தான் ஆட்சிக்கு வருவார். அவர் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருப்பார்.ஜனநாயக ஆட்சிக்கும் முஸ்லிம் உலகுக்கும் வெகுதூரம்.

Link to comment
Share on other sites

  • இன்றைய ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவான அமைதியுடன் முடிவடைந்துள்ளது
  • ஆர்ப்பாட்டத்தில் பல அரச ஊழியர்களும் இணைந்திருந்தனர். இது அரசுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக கூறப்பட்டுள்ளது
  • பாதுகாப்பு அமைச்சரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து அங்குள்ள இராணுவத்தினரை பார்த்ததுடன், ஆர்ப்பாட்ட மக்களுடனும் கைகுலுக்கி அளவளாவினார்
  • இடைக்கால அரசு சம்பந்தமான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளதாக முபாரக் தெரிவித்தார்
  • உப சனாதிபதியுடன் மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் பேச்சுக்களை இராணுத்தின் உதவியுடன் ஆரம்பித்துள்ளனர் - வெள்ளை மாளிகை
  • மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் ஒரு குழுவை அமைத்துள்ளனர்
  • இவர்களுடன் சம்பந்தப்பட்ட முப்பது மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர்
  • இந்த குழுவுக்கு தலைமை தாங்கும் எல்பரடே, மக்கள் விரும்பினால் தான் சனாதிபதி தேர்தலுக்கு நிற்க விரும்புவதாக தெரிவித்தார்

எவ்வாறு வளைகுடா யுத்தத்தில் அமெரிக்காவின் சி.என்.என் மணி நேர ஒளிபரப்பின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கை பெற்றதோ அதே மாதிரி கட்டாரை தலைமையகமாக கொண்டியங்கும் அல்ஜசீரா இந்த மக்கள் எழுச்சியை ஒளிபரப்பி அரபு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுகின்றது என கூறப்படுகின்றது.

அதேவேளை அல்ஜசீரா, எகிப்திய அரசின் பலத்த கோபத்திற்கும் உள்ளாகி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் அமெரிக்காவுக்கு சரியாய் வயித்தை கலக்கும்.

ஏனெண்டால்?????

இப்ப குழம்புற முஸ்லீம் நாடுகளெல்லாம் ஈரான் மாதிரி ஆகிட்டால்?

உலகவரைபடத்திலையிருந்து இஸ்ரேலை தூக்க வேண்டி வந்துடும்!

ஆனால்....

அதுதான் நடக்காது :lol:

Link to comment
Share on other sites

இப்பதான் அமெரிக்காவுக்கு சரியாய் வயித்தை கலக்கும்.

ஏனெண்டால்?????

இப்ப குழம்புற முஸ்லீம் நாடுகளெல்லாம் ஈரான் மாதிரி ஆகிட்டால்?

உலகவரைபடத்திலையிருந்து இஸ்ரேலை தூக்க வேண்டி வந்துடும்!

ஆனால்....

அதுதான் நடக்காது :lol:

இன்று முதல் முறையாக ஈரானின் அயத்துல்லா - "சுப்ரீம்" மதத்தலைவர் கொமெய்னி எகிப்திலும் மற்றைய அரபு நாடுகளிலும் நடக்கும் மக்கள் எழுச்சி பற்றி மத தொழுகையின் பின்னர் கதைத்தார்.

அதில், இந்த எழுச்சி மேலுள்ள களஉறவு கூறியது போல, "இது அமெரிக்காவின் 'விருப்பங்களை' மத்திய கிழக்கில் பாதிக்கும்" என்றார். இதன் பொது ஈரானின் அதிபர் அஹ்மடினஜாத் கூடவே இருந்தார்.

யாசீர் அரபத்துடான் ஒரு சமாதனத்தை செய்ய விரும்பிய இர்சாக் ரபீனை கொலை செய்த இஸ்ரேலியா தீவிரவாதி தொடக்கம் இன்றைய பலஸ்தீன தலைமையை எமாற்றி வரும் இஸ்ரேல் கவலைப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன.

Iran's supreme leader calls uprisings an 'Islamic awakening'

Ayatollah Ali Khamenei says the upheaval in the region is a defeat for the U.S., and a 'liberating Islamic movement.' But Egypt's Muslim Brotherhood rejects his statement, calling it the 'Egyptian people's revolution.'

http://www.latimes.com/news/nationworld/world/la-fg-khamenei-iran-egypt-20110205,0,3601046.story?track=rss

Link to comment
Share on other sites

இப்படி தான் கருணாவும் எதை செய்வது என்றாலும் கேட்டு செய்து செய்து பழகிவிட்டது என்பான்.

எல்லாத்தையும் கேட்டு செய்த கருணா கேக்காமல் செய்துதானே நசலை பிரட்டினவன்...

Link to comment
Share on other sites

இன்று முதல் முறையாக ஈரானின் அயத்துல்லா - "சுப்ரீம்" மதத்தலைவர் கொமெய்னி எகிப்திலும் மற்றைய அரபு நாடுகளிலும் நடக்கும் மக்கள் எழுச்சி பற்றி மத தொழுகையின் பின்னர் கதைத்தார்.

அதில், இந்த எழுச்சி மேலுள்ள களஉறவு கூறியது போல, "இது அமெரிக்காவின் 'விருப்பங்களை' மத்திய கிழக்கில் பாதிக்கும்" என்றார். இதன் பொது ஈரானின் அதிபர் அஹ்மடினஜாத் கூடவே இருந்தார்.

யாசீர் அரபத்துடான் ஒரு சமாதனத்தை செய்ய விரும்பிய இர்சாக் ரபீனை கொலை செய்த இஸ்ரேலியா தீவிரவாதி தொடக்கம் இன்றைய பலஸ்தீன தலைமையை எமாற்றி வரும் இஸ்ரேல் கவலைப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன.

Iran's supreme leader calls uprisings an 'Islamic awakening'

Ayatollah Ali Khamenei says the upheaval in the region is a defeat for the U.S., and a 'liberating Islamic movement.' But Egypt's Muslim Brotherhood rejects his statement, calling it the 'Egyptian people's revolution.'

http://www.latimes.com/news/nationworld/world/la-fg-khamenei-iran-egypt-20110205,0,3601046.story?track=rss

எகிப்தில் இருந்து இஸ்ரேலுக்கு போகும் ஒரு காஸ் லைன் மீது திவிரவாத தாக்குதல் என்று சொல்ல படுகிறது( ஜரோப்பாவில் இது தான் முக்கிய செய்தி) இது திசை திருப்பும் தாக்குதலாக இருக்காலாம் என்று நினைக்கிறேன்.

எல்லாத்தையும் கேட்டு செய்த கருணா கேக்காமல் செய்துதானே நசலை பிரட்டினவன்...

அதுக்கு மாற்று மருத்து அவனை வளர்ததவர்களிடம் தான் இருந்து இருக்க வேண்டும்.

கருணா போராட்டத்துக்கும், மக்களுக்கும் பிரச்சனை என்று தெரிந்ததுமே *** இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

எகிப்தின் அரசியல் சாசனமும் நிலமையும் :

  1. எகிப்தின் அரசியல் சாசனப்படி ஒரு கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம்
  2. எகிப்தின் அரசசாசனப்படி சனாதிபதியால் மட்டுமே அரசியல் சாசனம்மாற்றப்படலாம்
  3. அதாவது, (முபராக்) சனாதிபதி இல்லாவிடில், இன்னொரு தேர்தல் நடாத்தப்பட்டு சனாதிபதி தெரியப்படல் வேண்டும், ஆளும் கட்சியே போட்டியிடலாம்
  4. சனாதிபதி இல்லாத இடத்தில் சபாநாயகர் அந்த சனாதிபதி இடத்தை நிரப்புவார் தேர்தல் மூலம் சனாதிபதி தெரியப்படும் வரை

ஹோஸ்னி முபாரக்

முப்பது வருடமாக சனாதிபதியாக இருக்கும் இவர் இராணுவத்தை சேர்ந்தவர் ( விமானப்படை). இவரை நேரடியாக கண்டு கதைத்த ஊடகவியலாளர் கிஸ்ரியான் அமம்பூரின் கருத்துப்படி இவர் மிகவும் பெருமை கொண்டவர் எனவும், துனிசியா அதிபர் போல நாட்டை விட்டு ஓட விரும்பவில்லை என்றும் சொன்னார்.

இதை எதிர்த்தரப்புகளும் உணர்ந்து அவரை ஒரு "கௌரவமான முறையில்" பதவியில் இருந்து இறங்க ஏற்றுகொண்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அடுத்து என்ன நடக்கலாம்?

இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்ட மக்களுக்கு எதிராக அரசால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தோல்வியடைந்து, அவர்கள் எதிர்பார்த்தமைக்கு மாறாக மக்கள் பெரியளவில் பங்கு பற்றியதும்; மக்களின் அசாத்திய துணிவை குறைவாக எடை போட்ட முபாரக் தரப்பும்; எகிப்திய இராணுவம் மக்கள் சார்பாக மாறி முபாரக்கை கைவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குலகமும் இதையே விரும்புகின்றது. ஆனால், அவர்கள் முபாரக்கால் நியமிக்கப்பட்ட உப சனாதிபதியை (சுலைமான்) எதிர்க்கட்சிகளுடன், இராணுவமும் இணைந்து, ஒரு சுயாதீனமான ஒரு தேர்தலை "செப்டெம்பர்" மாதம் நடத்த விரும்புகிறார்கள்.

எகிப்திய மக்கள் பன்னிரண்டாம் நாளாகும் இந்த போராட்ட நிகழ்வில் தமது அன்றாட வாழ்கையையும் தங்கள் நாட்டின் எழுச்சி போராட்டத்தையும் சேர்த்து கவனிக்கப்பட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் மக்கள் எவ்வாறு கொண்டுசெல்வார்கள் என்பதில் முபாரக்கின் மற்றும் எகிப்தின் எதிர்காலங்கள் தங்கியுள்ளன.

Link to comment
Share on other sites

  • இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் நிலவாயு கொண்டு செல்லும் குழாய் வெடிப்பு (வடக்கு சினாயில்)
  • முதலில் இது "ஒரு பயங்கரவாதிகளின் தாக்குதல்" என வர்ணிக்கப்பட்டது
  • பின்னர் இது "விபத்து" என சொல்லப்படுகின்றது

Head of Egyptian gas co. says explosion caused by leak

Blast in El-Arish that caused shut off of natural gas flow to Israel and Jordan was originally called terror attack.

http://www.jpost.com/MiddleEast/Article.aspx?id=206919

Link to comment
Share on other sites

அதுக்கு மாற்று மருத்து அவனை வளர்ததவர்களிடம் தான் இருந்து இருக்க வேண்டும்.

கருணா போராட்டத்துக்கும், மக்களுக்கும் பிரச்சனை என்று தெரிந்ததுமே *** இருக்க வேண்டும்.

உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா....?? :lol: :lol: :lol:

எப்பவுமே நடை முறை சாத்தியமான விடயங்களை அல்லது ஜதார்த்தத்தை பேசுங்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய புரட்ச தோல்வியில் முடிவடையும். துனீசியாப் புரட்சியின் வெற்றிக்குப்பின்னர் கனன்று கொண்டிருக்கும் பரட்சிகர சிந்தனாவாதிகள் அனேகமாகக் காணப்படும் தேசங்களில் தாங்களாகவே புரட்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கி அதைத்தோல்வியடையப் பண்ணி மக்களது உத்வேகத்தை மழுங்கடிக்கச்செய்யும் கைங்கரியமே இப்போது நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியான செய்திகளுக்கு நன்றி அகூதா! :)

Link to comment
Share on other sites

  • இன்றும் (சனிக்கிழமை) ஆயிரக்கணக்கில் மக்கள் தாகிர் (விடுதலை) சதுக்கத்தில் கூடினர்
  • மேற்குலக நாடுகள் தமது படிப்படியான ஆட்சி மாற்றத்திற்கு மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளன
  • முபாரக்கால் நியமிக்கப்பட்ட உப சனாதிபதி, ஓமர் சுலைமான், மீது மேற்குலகம் நம்பிக்கை
  • ஓமர் சுலைமான் எதிர்க்கட்சிகளுடன் விரைவில் பேச சம்பந்தம், ஆனால் முபாரக் "செப்டெம்பர்" வரை பதவியில் இருப்பார்
  • ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் இவர் "விரைவில்" பதவியை விட்டு செல்ல வேண்டும் என கோரியவண்ணம் உள்ளனர்
  • ஆளும் கட்சியில் பல மாற்றங்கள் வந்துள்ளன. பல இளையவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மூன்றாவது நாளாக மின்வலை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • எகிப்திய உப அதிபர் ஓமார் சுலைமான் எதிரணியுடன் பேச்சு
  • அமெரிக்காவின் கைகளை விட்டு விலகிச் செல்லும் எகிப்து?
  • மேற்குலக ஆய்வாளர்கள் இது ஒரு "முகம் அற்ற" (faceless revolution) புரட்சி என வர்ணித்துள்ளனர் (அதாவது தனிப்பட்ட ஒருவராலோ இல்லை ஒரு தனிப்பட்ட கட்சியாலோ நடாத்தப்படவில்லை இந்த ஆர்ப்பாட்டங்கள்)
  • எகிப்திய உப அதிபர் ஓமர் சுலைமான் எதிரணியினரையும், இஸ்லாமிய சகோதரத்துவ குழுவினரையும் (Muslim Brotherhood) பேச்சுக்களுக்கு அழைத்துள்ளார்
  • இஸ்லாமிய சகோதரத்துவ குழு - எகிப்தில் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு
  • இந்த பேச்சுவார்த்தைகள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமா? இல்லை தொடருமா??
  • இந்த பேச்சுவார்த்தை அழைப்புக்கள் நேரத்தை வாங்கும் ஒரு தந்திரமா?
  • எகிப்தின் பிரதான வருமானம் உல்லாசப்பயண தொழிலாகும். அன்றாட வாழ்வு அடியோடு குலைந்து போகக்கூடிய ஆபத்து
  • முபாரக் அவசரமாக மத்திய வங்கி ஆளுனர், நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரையும் பின் மந்திரிசபையையும் அழைத்து பேசியுள்ளார்

Link to comment
Share on other sites

  • தாம் தொடர்ந்தும் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப்போவதாக கூறப்பட்டுள்ளது
  • எதிர்க்கட்சிகளூடான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என அரசும் பெரிதாக வெற்றியளிக்கவில்லை என எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன
  • 1981ஆம் ஆண்டிலிருந்து வரும் அவசரகாலச்சட்டத்தை நீக்க அரசு ஒத்துக்கொண்டுள்ளது
  • எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அல்பரடேய் அவர்களை அரசு ஒதுக்கியது

Link to comment
Share on other sites

  • "சர்ரலைட்" தொலைக்காட்சியான அல்ஜசீராவின் ஒளிபரப்பு காரணமாக முழு அரபு நாடுகளிலும் எகிப்தின் தாக்கம் தொடர்ந்த வண்ணம் உள்ளது
  • சிரியாவில் சமூகவலை இணையங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர் சிரியர்கள் பேஸ்புக் மூலம் சதுக்கத்திற்கு வரச்சொன்னார்கள். அதை தொடர்ந்து அங்கு போலீசார் / இரகசிய பொலிசாரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது
  • அடக்குமுறைக்குள்ளான பலஸ்தீனத்திலும் மக்கள் ஒன்று கூட தடை செய்யப்பட்டுள்ளது
  • ஈராக்கிலும் மக்கள் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட முயல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன
  • லிபியாவின் கடாபியும் எகிப்தின் விளைவுகளை எண்ணி கவலை கொண்டுள்ளதாக சொல்லப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • தனது பிரித்தாளும் கொள்கையை (divide and conquer) மீண்டும் அமுலாக்கினர் முபாரக்!
  • ஆறு மில்லியன் அரச ஊழியர்களுக்கு 15 வீத சம்பள உயர்வை அறிவித்தார்
  • எதிர்க்கட்சிகளுக்குள் பிளவுகளை உருவாக்கினார்

  • அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது
  • தாகீர் சதுக்கத்தில் எல்லாவற்றையும் மீறி முபாரக் பதவியை விட்டு விலகினால் மட்டுமே நகருவோம் என கூறி தொடர்ந்தும் மக்கள் கூடியுள்ளனர்
  • நாட்டில் ஒருவித "அமைதி" திரும்பியுள்ளது

  • "எகிப்து திரும்பி பழைய அரசியலுக்கு செல்ல முடியாது" - ஒபாமா
  • பல மேற்கத்தைய ஊடகவியலாலர்களும் நாடு திரும்பி உள்ளனர்

http://finance.yahoo.com/news/Mubarak-Divides-Egypt-bloomberg-3980010665.html?x=0&sec=topStories&pos=4&asset=&ccode=

http://www.guardian.co.uk/world/2011/feb/07/egypt-cabinet-announces-salaries-pensions-rise

Link to comment
Share on other sites

  • வரும் நாட்களில் முபாரக் ஜெர்மனி செல்வார் என எதிர்பார்கப்படுகின்றது
  • இடைக்கால அரசை உப சனாதிபதி ஓமர் சுலைமானிடம் கொடுத்து விட்டு முபாரக் செல்லக்கூடும்
  • ஏற்கனவே ஜெர்மனியில் புற்றுநோயுக்கு சிகிச்சை பெற்றவர் மீண்டும் அந்த சிகிச்சைக்கு வரக்கூடும்
  • ஜேர்மனிய அரசும் முபாரக்கை வரவேற்பதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

  • Der Spiegel Online reports that Mubarak could use a scheduled health check in Germany to transition out of power
  • German politicians appear open to having the Egyptian leader spend his retirement in their country
  • Talks are being held with the Max-Grundig-Klinik Bühlerhöhe hospital in the southwestern town of Bühl near Baden-Baden to receive the Egyptian president
  • Mubarak has been treated in Germany on several occasions, having his gallbladder and an intestinal polyp removed there last year

http://www.thestar.com/news/world/article/934330--mubarak-could-use-a-health-check-in-germany-to-leave-power-reports?bn=1

Link to comment
Share on other sites

  • வயல் கோனிம் - எகிப்திய இளையவர், கூகிளின் பிரதேச விற்பனை முகவர்
  • இவர் எகிப்திய இளையவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு "புளக்" (blog) ஒன்றின் மூலம் சமூகவலையில் ஒருங்கிணைத்தவர்
  • இவர் இரண்டு கிழமைகளுக்கு "காணமல்" போயிருந்தார்
  • மீண்டும் இன்று "தோன்றியுள்ளார்" இந்த செய்தியுடன்: @ghonim: "Freedom is a bless that deserves fighting for it"

http://english.aljazeera.net/news/middleeast/2011/02/20112722535988460.html

Link to comment
Share on other sites

  • சற்றுதொய்ந்து போயிருந்த ஆர்ப்பாட்டம் புதியவர்களால் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது
  • மக்கள் முபாரக் பதவிவிலகல் வேண்டும் என வலியுறுத்தியவண்ணம் உள்ளனர்
  • ஆர்ப்பாட்டம் நின்றால் முபாரக் பதவி விலகாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் கொலை செய்யக்கூடும் என நம்பப்படுகின்றது
  • கிட்டத்தட்ட நாலு இலட்சம் இரகசிய காவல்துறையினர் உள்ளனர் எகிப்தில்
  • முப்பது வருடமாக அவசரகால சட்டமும் அமுலில் உள்ளது, நீக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது
  • உப சனாதிபதி முபாரக் அரசியல்யாப்பில் திருத்தங்களை கொண்டுவர உள்ளார் என அறிவித்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • வரும் நாட்களில் முபாரக் ஜெர்மனி செல்வார் என எதிர்பார்கப்படுகின்றது
  • இடைக்கால அரசை உப சனாதிபதி ஓமர் சுலைமானிடம் கொடுத்து விட்டு முபாரக் செல்லக்கூடும்
  • ஏற்கனவே ஜெர்மனியில் புற்றுநோயுக்கு சிகிச்சை பெற்றவர் மீண்டும் அந்த சிகிச்சைக்கு வரக்கூடும்
  • ஜேர்மனிய அரசும் முபாரக்கை வரவேற்பதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

  • Der Spiegel Online reports that Mubarak could use a scheduled health check in Germany to transition out of power
  • German politicians appear open to having the Egyptian leader spend his retirement in their country
  • Talks are being held with the Max-Grundig-Klinik Bühlerhöhe hospital in the southwestern town of Bühl near Baden-Baden to receive the Egyptian president
  • Mubarak has been treated in Germany on several occasions, having his gallbladder and an intestinal polyp removed there last year

http://www.thestar.com/news/world/article/934330--mubarak-could-use-a-health-check-in-germany-to-leave-power-reports?bn=1

உவன் சும்மா தலையிடி காச்சல் எண்டாலே ஜேர்மனிக்குத்தான் ஓடிவாறவன்.

அதுவும் இப்ப சொல்ல வேணுமே

Link to comment
Share on other sites

  • வயல் கோனிம் - கூகிளின் பிரதேச விற்பனை முகவர், இரண்டு கிழமை கைதுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர், இன்று தாரிக் சதுக்கத்தில் உரையாற்றினார். இது புது உத்வேகத்தை தந்துள்ளது.
  • தொடரும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ளமுடியதவை - உப சனாதிபதி ஓமர் சுலைமான்
  • எகிப்திய இராணுவம் கடைப்பிடிக்கும் பொறுமைக்கு அமெரிக்கா பாராட்டு
  • தொடரும் ஊடகவியலார்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது
  • எவ்வாறு ஒரு அரசு மூன்று கிழமைகளாக மில்லியன் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கின்றது? எவ்வாறு பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்கின்றது? யார் இதற்கு பின்னால் நிற்பவர்கள்? - அமெரிக்கா சனநாயகத்திற்கு எதிரானது என்கிறது அல்ஜசீரா!
    http://blogs.aljazeera.net/middle-east/2011/02/08/america-enemy-democracy
  • ஈரான், துநூசிய மற்றும் எகிப்திய மக்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடாத்த திட்டமிட்டுள்ளது

Link to comment
Share on other sites

எகிப்திய இராணுவம் கடைப்பிடிக்கும் பொறுமைக்கு அமெரிக்கா பாராட்டு

எகிப்தின் இராணுவத் தளபதி அமெரிக்க சார்பானவர் என்பது உலகம் அறிந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.