• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில்,  நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி டெல்லி  சி.பி.ஐ. மற்றும் இன்ரர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில பொலிஸார் கடிதம் எழுதியிருந்தனர். குறித்த கடிதங்களை ஏற்றுக்கொண்ட இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நித்தியானந்தாவை-கைதுசெய/
    • காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ட்ரம்ப்பின் சமரச முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்சினை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடமுடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாகிஸ்தான் கை விடட்டும். அதன் பின்னர் எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்சினையைத் தீர்க்க தயாராக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே ட்ரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்தபோதும் மீண்டும் ட்ரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையிலேயே இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. http://athavannews.com/காஷ்மீர்-விவகாரத்தில்-ட்/
    • கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு! கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மருத்துவச் சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கனடாவில்-வறுமை-காரணமாக-40-இ/
    • டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் ஆரம்பம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் இடம்பெற்று வருகின்றது. தலைமை நீதிபதி ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ஜோ பிடெனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது. இதையடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கம் கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செனட் சபையில் தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சி நடைபெற்று வருகின்றது. எனினும் செனட் சபையில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே தீர்மானம் நிறைவேறுவது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/டொனால்ட்-ட்ரம்ப்-மீதான-ப/
    • Katja வுக்கு.... இன்னும் இரண்டு சோதனைகள் உண்டு.  1)  58 வயதான தொழிலதிபரின் மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைககள் சம்மதிக்க வேண்டும்.  2)  ஜேர்மனியில்  நடக்க இருக்கும்... கன்னித் தன்மை 👓 பரிசோதனையில்... Katja பாஸ் பண்னினால் தான், காசு கையிலை வரும். 😋 Katja வெற்றி பெற... நாம் எல்லோரும் சேர்ந்து, பிரார்த்திப்போம்.