Jump to content

ஒளடதம்

Recommended Posts

ஒளடதம் என்றால் என்ன?

இலக்கியத்தில் அதன் பயன்பாடு ....

"நைடதம் புலவர்க்கு ஒளடதம்" (முன்பு தமிழ் கற்கப் புகுவோர் முதன்மையாகக் கற்பது நைடதம் என்ற நூலாகும்)

"ஒளடதம் கொடுக்கும் தாதி நீ:ஒளதகம் காக்கும் ஆதி நீ;"(ஒளதகம் - உலகம்)

மருந்து, மாற்று மருந்து எனவும் கொள்ளலாம் என்று ஒரு அகர முதலியில் கண்டேன்.

நீண்ட நாட்களுக்கு முன்பே "ஒள' வின் பயன்பாடுகள் குறைந்துவிட்டன. எட்டாம் நூற்றாண்டில் இருந்து "ஒள' எழுத வேண்டிய இடத்தில் "அவ்' என்று எழுதப்பட்டுள்ளதாக கல்வெட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். இலக்கண விதிப்படி ள் + அ = ள என்றுதான் வரவேண்டுமாம். எனவே "அவ்" என்பது தான் சரியானதாக இருக்ககூடுமாம். "ஒள"ப் பற்றி மற்றவர்களின் கூற்றை அறிய ஆவலாக உள்ளேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திற்கு நன்றி.

புதிய ஆத்தி சூடியில் "ஔடதங் குறை" என்று இருக்கிறது. பொருள் தெரியாமல் மகனை பாடமாக்க வைக்க விருப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்கு முன்பே "ஒள' வின் பயன்பாடுகள் குறைந்துவிட்டன. எட்டாம் நூற்றாண்டில் இருந்து "ஒள' எழுத வேண்டிய இடத்தில் "அவ்' என்று எழுதப்பட்டுள்ளதாக கல்வெட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். இலக்கண விதிப்படி ள் + அ = ள என்றுதான் வரவேண்டுமாம். எனவே "அவ்" என்பது தான் சரியானதாக இருக்ககூடுமாம். "ஒள"ப் பற்றி மற்றவர்களின் கூற்றை அறிய ஆவலாக உள்ளேன்..

"ஔ" க்கும், "அவ்" க்கும் அடிப்படை உச்சரிப்பிலேயே வித்தியாசம் உள்ளதே.. பிறகு எப்படி ஒன்றுக்கு மற்றொன்றை மாற்றீடாகப் பயன்படுத்த முடியும்..? :unsure::blink:

Link to comment
Share on other sites

"ஔ" க்கும், "அவ்" க்கும் அடிப்படை உச்சரிப்பிலேயே வித்தியாசம் உள்ளதே.. பிறகு எப்படி ஒன்றுக்கு மற்றொன்றை மாற்றீடாகப் பயன்படுத்த முடியும்..? :unsure::blink:

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை.ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும். 'ஔ'காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : ஔவையார் = அவ்வையார்; ஔடதம் = அவ்டதம்

http://azahumozi.blogspot.com/search?q=%E0%AE%94

மேலும் எழுத்து சீர்திருத்தம் பற்றி பெரியார் காலம் தொட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாறுபட்ட கறுத்தையும் இங்கே காணுங்கள் http://www.tamileluthu.org/nolaivayil/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஔடதம் என்பது தூய தமிழ்ச்சொல் அல்ல. வடமொழியில் "ஔஷதம்" என்பதன் தமிழ் வடிவமே ஔடதம் ஆகும். "மருந்து" என்பது இதற்கு ஒப்பான தமிழ்ச்சொல் ஆகும்.

புராண இதிகாசங்களில் பச்சிலைகள், அவற்றை பிழிந்து பெறப்படும் சாறு என்பன ஔடதமாக பயன்பட்டதாக அறிகின்றோம். இராமாயணத்தில் அனுமன் "ஔஷதங்களை" பறித்துவர சென்றதாக குறிப்பு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை.ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும். 'ஔ'காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : ஔவையார் = அவ்வையார்; ஔடதம் = அவ்டதம்

http://azahumozi.blogspot.com/search?q=%E0%AE%94

மேலும் எழுத்து சீர்திருத்தம் பற்றி பெரியார் காலம் தொட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாறுபட்ட கறுத்தையும் இங்கே காணுங்கள் http://www.tamileluthu.org/nolaivayil/

நீங்கள் சொல்வது சரி தான்.அதேவேளையில் மொழியில் அழகு சேர்ப்பது ஒலியமைப்பு அல்லவா?அழகை குலைத்து மொழியைச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்ற முற்படுவது சரியானதாகப் படவில்லை.இந்த அறிவுரையை யாழ் இந்துகல்லுரியில் நான் படிக்கும் காலங்களில் ராமுப்பிள்ளையர் சொன்னதாக நினைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.