Jump to content

யாழ். புனித பத்திரிசியர் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட திடல் (காணொளி படங்கள் இணைப்பு)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சா எங்கை நீங்களும் என்னை *தூ என்று ஆக்கி விட்ட்டிங்களோ என்று பயந்து போனேன் :D

நீங்களே ஒரு இடத்தில்குறிப்பிட்டிருந்தீர்கள்

விசுகு அண்ணா எல்லோருடனும் சுமுகமாக போக விரும்புகிறார் என்று.

அப்படியாயின் தங்களை இழக்கவிரும்புவேனா...?

அதேவகையைச்சார்ந்ததுதான் மற்றவர்களுடனுமான எனது பார்வையும் கேள்விகளும் தேடல்களும் பேச்சுவார்த்தைகளும். இன்றுவரை எவரையும் நீங்கள் குறிப்பிடும் சொல் கொண்டு நான் அழைத்ததில்லை. அங்கு வாங்குகின்றீர் இவரிடம் வேலை செய்கின்றீர் நக்குகின்றீர் என்றெல்லாம் நான் எழுதுவதில்லை. அதற்கு எனக்கு அருகதையில்லை. ஒவ்வொருத்தருக்கும் தேசியத்துக்காக பாடுபடவும் அதனை விமர்சிக்கவும் அதனூடு பயணிக்கவும் உரிமையுண்டு. ஆனால் அவர்களாகவே அதை தமக்கு சூட்டிக்கொள்கின்றனர். அது முரளிதரன் வரை.........

யாழ் களத்திலும் அவர்கள் எழுதும் கருத்துக்களின் அடிப்படையில் அவர்களின் தற்போதைய செயற்பாடுகளை அறியநேரிட்டால் அதை தப்பா சரியா என்று சொல்வதே என் நோக்கமே தவிர பட்டம் கொடுப்பதல்ல. உங்களைப்போல் பலர் எமது நோக்கங்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் எதிர்கால பாதைகளையும் செப்பனிடுவதை நான் என்றும் வரவேற்கின்றேன். ஆனால் இதில் எதுவுமே இல்லாத வெறும் வாய்ச்சாடல்களை வெறுக்கின்றேன். அதை செய்பவர்களை களத்தில் மட்டுமல்ல தனிப்படட முறையிலும் வெறுக்கின்றேன். என் இனத்தின் இன்றைய நிலையைப்புரிந்து கொள்ளாது அதில் தமது வாய்ச்சாடல்களை புரிபவர்களை மன்னிக்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கே பி மீதும் புலி விமர்சனம்,

கே பி மீது விமர்சனம் வைத்த்து யார்? தலைவரால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவரை பற்றி விமர்சனம் வப்பவர்கள் யார் என்று உலகிக்கே தெரியும்.

என்னை பொறுத்த மட்டில் கே பீ நல்லவாரா கெட்டவரா என்ற கேள்வியே வேண்டாம் . இனி கே பி நமக்கு வேண்டாம்.

தமிழீழக் கொள்கை மீது புலி விமர்சனம்.

எல்லா இயக்கங்களும் தமிழீழக் கொள்கையுடன் தான் போராட்டம் ஆரம்பித்தது பின் ஒரு காலத்தில் அவர்கள் பின் வாங்கி விட்டார்கள் ஆனால் புலிகள் தமிழீழம் பெற்று தருவார்கள் என்று மக்கள் நம்பினார்கள் இந்த நம்பிக்கையை புலிகளும் கொண்டு இருந்தார்கள் ஆனல பேச்சுவார்த்தையின் போது தனித் தமிழீழம் சார்த்தியம் இல்லை என்று ஓரளவுக்கு அன்ரன் பாலசிங்கம் புரிந்து கொண்டு ஓஸ்லோ ஒப்பந்ததில் கைஎழுத்து வைத்தார்( பின் விளைவு வேற மாதிரி நடந்தது அவருக்கு)

தமிழ் தேசியம் மீதும் புலித் தேசியம் என்ற விமர்சனம்.

தமிழ்த் தேசியம் தமிழர்களினது அதையாரும் விமர்சனம் வைக்கலாம். புலிகள் தங்கள் மீது விமர்சனம் வைக்க கூடாது என்று சொன்னதாக நான் அறியவில்லை( புலத்து பூனைகளை தவிர)

புலம்பெயர் மக்கள் மீதும் புலிக் கொடி விமர்சனம்.

புலிக் கொடி பிரச்சனை புலிகளின் புலம்பெயர் புண்ணாக்குகளின் பிரச்சனை. ஒரு பகுதி கொண்டு செல்லலாம் என்றும் ஒரு பகுதி கொண்டு செல்ல கூடாது என்று பிரிந்து நின்றார்கள்.

நான் அறிந்த வரை ஒட்டுக் குழுக்களீன் தலைவர்களோ அல்லது அவர்களின் எடுபிடிகளோ புலிக் கொடி கொண்டு செல்லலாம் ,செல்ல கூடாது என்ற பிரச்சனையில் தலையிடவில்லை.

மாவீரர் இல்லங்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

[இடிச்சவன் சிங்களவன் . இதுக்கும் நான் எம்மை நாமே சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்றதுக்கு என்ன தொடர்பு என்று சொல்லவும்.

எழுதவேனும் என்றதுக்காக எழுதினதா?

எதிரிக்கு காட்டிக் கொடுத்து விட்டு அங்கும் புலி விமர்சனம்.

புலிகள் வளர்த்த கருணாவும் காட்டி கொடுத்தவன், மாத்தியாவும் காட்டிக் கொடுக்க துணிந்தவன்.

அது புலிகள் பிரச்சனை

பெண்களை கெடுத்து அழித்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

இசைப்பிரியாவைன் நிர்வண வீடியோஅவை கூடுதலாக வெளீயிட்டது புலிகளுக்காக புலத்து பூனைகள் நடத்தும் இனையத்தலங்கள் வெளியிட்டது(ஏன் யாழ்களத்தில் கூட லிங் இனைக்க பட்டு இருந்த்து அதை யாழ்களம் தனிக்கைச் செய்யவில்லை.

கொள்ளை கொலைகளைச் செய்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

கொள்ளை கொலை அனைத்து இனங்களும் செய்கிரார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

வேண்டாத கப்பம் வரி எல்லாம் வாங்கிப் போட்டு அங்கும் புலி விமர்சனம்.

இதுக்கு பதில் சொல்ல வெக்கமாக இருக்கு. கண்காணிப்பு குழுவில் இருந்து எல்லாரும் தலையில் அடிச்சு அடிச்சு சொனனர்கள் ஏ9தில் வரி வசூலிக்க வேண்டாம் என்று கேட்டால் தானே.

மேலே சொல்லப் பட்ட அனைதும் கேள்விகளும் உங்களை நோக்கி நீங்களே கேக்கப்பட்ட கேள்வி....... :):lol::D :D

என்னுடைய கருத்தையோ அல்லது இன்னொருவருடைய கருத்தையோ அப்படியே ஏற்கவேண்டும் என்ற எந்த அவசியமும் உங்களுக்கு இல்லை. அதுபோல்தான் எனக்கும் இன்னொருவருக்கும்.

ஆனால் இன்னொருவருடைய கருத்தை நான் மறுக்கும்போது............. எந்த வகையில் அது ஏற்புடையதற்றது என்ற ஒரு சிறிய விளக்கத்தையாவது கொடுத்தே அதை நிராகரிக்க முடியும். அதுவே ஒரு கருத்தாடலாக அமையும். ஒரு கருத்துகளத்தில் கருத்தாட அதுவே விதிமுறையும் கூட.

நான் எனது கருத்தை உங்கள் மீது திணிப்பது என்பது ஒரு பொது கருத்துகளத்தில் தவறானது.

ஆனால் எனது கருத்தின் மெய்பொருளும் எனது திணிப்பிற்கு நீங்கள் தேர்வான காரணமும் சில வேகைளில் கருத்து திணிப்பையும் நியாயபடுத்துகின்றது.

அதை எதிர்மறையாக பார்த்தால் ஒரு இந்திய உளவுதூறையின் கையாட்டகள் புலி எதிர்ப்பு கருத்துக்களை வாந்தியெடுக்கின்றார்கள்..... அதாவது அந்த வாந்திகளை எங்கள் மீது திணிக்கின்றார்கள். அவர்களைபொறுத்தவரை அது நியாமானது ஏனெனில் புலிகள் அவர்களது எஜமானியின் வேண்டாதவர்கள் ஆக புலிகளை பற்றி எல்லோரும் ஒரு அவமதிப்பை கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய நியாபாடு.

அதுவே ஒரு அறிவுசார் விடயமாக எடுத்தால்............. பல நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் ஒருவன் பூமி உருண்டை என்று கண்டுகொள்கிறான் ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை ஆனால் தனது கருத்தை எப்படியாவது மக்ளுக்குள் திணிக்க வேண்டும் என்று அவன் விரும்பி திணிக்க முயற்சித்தால் அது நியாமானதே.

ஆனால் சில தவாறன புரிதல்கள் பல தவறான கருத்தாடல்களுக்கு வழிசமைக்கின்றன....

அதை நாம் புரிதல்களின் மூலம் ஏற்றுகொள்ள முயற்சி எடுத்தாலே அதை தவிர்த்து கொள்ளலாம்.

விமர்சனங்கள் என்பதற்கும் பொய்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு என்பதை நான் சொல்லி நீங்கள் தெவதற்கு இல்லை.

புலிகள் தவறே செய்யவில்லை என்று இந்த களத்தில் யாரும் எழுதியதாக நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால் சிலருடைய தனிபட்ட முடிவுகள் சில சூழ்நிலைகள் என்பன அந்த தவறுக்கு புலிகளை பொறுப்பாக்கியுள்ளன என்ற மெய்படுதலின் காரணமாக சிலர் புலிகளை விமர்சிப்பதை ஒரு வில்லங்கமானதான கொள்கிறார்கள். ஆனாலும் விமர்சனங்களை அவர்கள் ஏற்றுகொள்கிறார்கள் வீண்பழிசொற்களை வெறுக்கிறார்கள். என்னுடைய நிலைபாடு இதுதான் இதுதான் என்று நீங்கள் பல முறை கோடுபோட்டு காட்டிவிட்டு பின்பு பல இடங்களில் கோட்டைதாண்டி நீங்கள் எங்கோயோ போய் நிற்பதை உங்களுடைய பல கருத்துக்கள் காட்டி நிற்கின்றன. அது ஒருவருடைய கருத்தை தவறான கண்ணோட்டத்துடன் நீங்கள் எடுப்பதாலேயே நடப்பதாக நான் கருதுகிறேன் அதனால்தான் இக்கருத்தையும் எழுதிகொண்டிருக்கிறேன்.

நான் பனங்காய் என்று எழுதினால் இல்லை இல்லை என்று மறுத்து இது பனைமரத்தில் இருந்து வரும் காய் என்று எழுதுவதில் என்ன கருத்தாடல் இருக்கபோகின்றது??

Link to comment
Share on other sites

மேலே கேக்க பட கேள்விகள் நெடுக்ஸ் அண்ணையின். பதில் சொன்னது நான் ஆனால் 2 க்கும் தொடபு இல்லாமல் நீங்கள் எழுதி இருப்பது தான் புரியவில்லை.

ஆயுத போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதே அதன் காரணம் என்ன என்று கண்டு பிடிப்போம் என்றால் இல்லை நீ புலிஎதிர்ப்பு க் காஞ்சலோடு பேசுகிறாய் என்ர கிழ்த்தரமான அருவ்ருடிகளை நம்பு புலிகள் போராட்டத்தை முனெடுக்க சொல்லி மாண்டது தான் கவலை.

ஒரு இனம் எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றால் அதுக்கு உதாரனம் யூதர்கள்.

ஒரு இனம் ஒற்றுமையில்லாமல் சீரழிந்து போகுறது என்றாது அதுக்கு உதாரனம் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்துக்களை விளங்கிகொள்ளுவதர்ற்கு அதில் உள்ள எழுத்து பிழைகள் தடையாக இருந்ததென சுட்டிக்காட்டின அவனைவரும் நன்றியையும் அதேநேரத்தில் அவ்வாறு எழுதியமைக்காக வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.

இதிலே நான் சொல்லுவதர்கேன்று பெரிதாக இல்லை. அப்போ ஏன் எழுதுதுகிறாய் என விரல் நீளுவதை தடுக்க என்னிடம் ஏதும் இல்லை. பழைய பச்சோந்திகள் இப்பவும் அப்படிதான் என்றோ அல்லது அவர்கள் மாறி மனிதர்களாகவோ வரக்கூடாது என நினைபவனோ அல்ல. ஏனெனில் அவர்களை பச்சோந்தி என அழைத்துக்கொண்டு அவர்கள் நிறம் மாறுவது தவறென்றோ அல்லது புதுமைஎன்ரோ கருதுதினால் அவர்களுக்கும்- ஆகக்குறைந்தது பச்சோந்தி வர்க்கம் என்று அழைக்க விரும்பும்பாத பிராணிகளுக்கு அழகல்ல.

மற்றது அதிக இணைப்புகள் இணைத்திருதார்கள் ஆறிவாளிகள் அனால் அவர்களின் அறிவு நான் என்ன சொல்லவந்தது என்பதை விளங்கிக்கொள்ளுவதர்ற்கு ஏற்றவகையில் இருக்காதை யாரும் அறிவில்லாவர்கள் அறிந்திருப்பார்கள். நான் சொல்லியிருந்தது , சண்டை நேரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு தனியே பிறேமதாசவையும், மற்றவர்களையும் நோக்கி விரலை நீட்டாமல், அதை விட பெரிய காரணம் சண்டை என்பதை உணராத மட்டும் காகித, இணைய வீரர்களின் போர் முரசு நிற்காது.

நான் நினைக்கிறன், சிங்களவன் எங்களுடன் சண்டை பிடிக்கும் போது தனியே புலியுடன் மட்டும் சண்டை பிடித்தாலோ, அல்லது புலி தனியே எல்லைகளில் நின்று போர் புரிந்தாலோ இந்தளவு சனம் இந்த போரின் மடிந்திருக்க தேவையில்லை, நாங்களும் "அகதி" என்று வெளியேறி இருக்க தேவையில்லை.

பிறகு வருகிறேன் ........

உங்களுடைய நிலைபாட்டடையும் அதற்கான காரணங்கiளுயும் நீங்கள் இப்போது மட்டுமல்ல பல தடவைகள் எழுதிய பின்பே மேலே உள்ள கருத்தை நான் எழுதினேன். அதற்கான காரணத்தையும் நான் எழுதினேன் ஆனாலும்.............

புலிகளுடைய வீழ்ச்சி என்று ஒரு கிணத்துக்குள் இறங்கியிருந்தால் அதன் தாக்கங்களை நாங்கள் இந்த கருத்து களத்தில் எல்லா தலைப்பின் கீழேNயும் அடியுமில்லாத முடியுமில்லாதைகளாக வாசிக்கிறோம்.

தமிழர்களுடைய தோல்வி என்ற நிலைபாட்டை கையில் எடுத்தாலே இன்றைய உலக நிலையுடன் ஒப்பிட்டு அதற்கான காரணங்களை கண்டறிய முடியும். அதைவிடுத்து காட்டுக்குள் நின்று லைற்அடிப்பதை விட்டுவிட்டு பகல் நேரங்களில் ஊர்களில் உலாவினால் பல உண்மைகள் புலப்படும்.

பலவீனமானவனை அடாவடிதனமானவன் அடிமைபடுத்திகொள்கிறான் இதை பலமுறை புலிகள் தெளிவாக கோடிட்டுகாட்டினார்கள். ஆனால் எல்லாம் முடிந்தபின்பு இப்போது புலிகளுக்கு அரசியல் வகுப்பெடுக்க வெளிக்கிடுவது பூதம் குளம் கிண்ட வெளிக்கிட்டதுபோல் உள்ளது.

இன்றைய நாளில் தென்சூடன் தனிநாடக அங்கிகாரம் பெற்றாலாம் மேற்குலகின் ஒரு அடிமைநாடாகவும் வடசூடான் மேல் அழுத்தங்களை பிரோயோகிக்கவும்தான் தென்சூடன் தோற்றம் கொள்கிறது. அதாவது வடசூடானிடம் இருந்து விடுதலைபெற்று மேலைநாடுகளிடம் அடிமையாகிறது என்பதே உண்மை. ஆனால் மேலைநாட்டு அடிமைவாதம் என்பது தற்போதைய நாட்களில் வித்தியாசமாக மாறுபட்டுள்ளது முன்னைய நாட்கள்போல் தனி சுரண்டல்களோடு இல்லாது சுரண்டுவதை சுரண்டிகொண்டு. சுரண்டியதின் ஒரு கணிசமானதை வேறு பொருட்களாக கொடுத்து அடிமைவாதத்திற்கு சாயம் பூசுகிறார்கள்.

வருடாவருடம் ஜி-8 ஜி-20 என்று பெயர்களை வைத்து முதலாலிகள் தமது அடிமைகளை எவ்வாறு கையாள்வது சுரண்டல்களை எவ்வாறு பகிர்வது என்று வகுத்துகொள்கிறார்கள்.

வடசூடானுடன் போராடிகொண்டு அழிந்துகொண்டிருப்பதைவிட இருப்பை தக்கவைக்க இந்த அடிமைவாத தனிநாட்டு சுதந்திரம் அரசியல் ரீதியாக மேன்மையானதும் தந்திரோபாயமாதுமாகும்.

முள்ளிவாய்க்காலின் முடிவிலேயும் இப்படியானதொரு முடிவிவை பார்க்க முடியும். ஆனால் அதற்கு கண்பார்வை அவசியமானது. சங்கிலி மன்னன் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு தனது படைகளையும் இழந்து தானும் இறந்துபோனான். ஆனால் பல சிங்கள மன்னர்கள் சரணடைந்து உயிரோடு வாழ்நதார்கள் வெள்ளையினத்தவரின் ஆயுதபலத்தின் முன் நாமொரு திணிசு என்று எண்ணினார்கள் அவர்கள்.

போரிலே அழிவும். சரணடைதலில் அடிமைவாழ்வும் நிச்சயமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தெரிந்தும் போராட புலிகளை அனப்பியது யார் தூண்டியது யார்? இப்போது எல்லாம் முடிந்தபின்பு அரசியல் சிர்த்தாhத்தங்களும்........... அழிவுகளை தோண்டி அனுபவம் பெற்றாலே இனி நகரமுடியும் என்ற பசப்பு வார்தைகளையும் பேசுபவர்களின் நிலைபாடு என்பது. ஏதோ புலிகள் நள்ளிராவில் மட்டுமே யாருக்கும் தெரியாது போர்செய்தார்கள் என்பதுபோல்தான் உள்ளது. அழிவுகளும் போரும் எமது கண்களின் முன்னாலேயே நடந்தது. இதில் ஆராய்ந்துபார்க்க இனி என்ன இருக்கின்றது?

நாங்கள் அறிந்திராத பல உண்மைகளை கோடிட்டு காட்டியுள்ள அதே நேரம்...... புலிகள் எல்லையில் நின்று போராடாது ஊருக்குள் நின்று போராடியதின் விளைவையும் விளக்கியிருந்தீர்கள். உண்மைதான் பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் தேவைபட்டிருந்தால்....... தானும் தனது படைகளான புலிகளையும் அதை தராது மறுத்துகொண்டிருந்த சிங்களவர்கள் வாழ்ந்துகொண்டிருந்து கொழும்பை நோக்கி சென்று அங்கேதான் போராடியிருக்க வேண்டும். ஆனால் கோட்டையில் நின்று போராடியதால்தான் அப்பாவி சிங்கள இராணுவத்தினர் கொடிகாமம் வரை செல் அடித்தனர் அதனால்தான் மக்கள் இறந்துபோனார்கள். அதிலும் இராணுத்தினர் செல்களை அடித்ததோடு சரி அந்த அனியாமான செல் வெடித்து தனது துண்டுகளை மக்களின் உடல்களின் மேல் புகுத்தியதால்தான் மக்கள் இறந்தார்கள். ஆனால் தமிழ்மக்கள் தமது கண்டனத்தை இதுவரை செல்களை நோக்கி இதுவரையில் வைக்காதது வியப்பானது.

நீங்கள் இன்னமும் தொடர்ந்து எழுதவேண்டும் நாங்கள் வாசித்து அறிய எவ்வளவோ இருக்கினற்து. நேரம் இருக்கும்போது ஒரு செவையாக கருதி உங்களால் முடிந்ததையும் தெரிந்தவைகளையும் தயவு செய்து தொடாந்தும் எழுதுங்கள். இதை வாசித்தாவது இந்த தமிழ்சாதி திருந்தட்டும்.

Link to comment
Share on other sites

உங்களுடைய நிலைபாட்டடையும் அதற்கான காரணங்கiளுயும் நீங்கள் இப்போது மட்டுமல்ல பல தடவைகள் எழுதிய பின்பே மேலே உள்ள கருத்தை நான் எழுதினேன். அதற்கான காரணத்தையும் நான் எழுதினேன் ஆனாலும்.............

புலிகளுடைய வீழ்ச்சி என்று ஒரு கிணத்துக்குள் இறங்கியிருந்தால் அதன் தாக்கங்களை நாங்கள் இந்த கருத்து களத்தில் எல்லா தலைப்பின் கீழேNயும் அடியுமில்லாத முடியுமில்லாதைகளாக வாசிக்கிறோம்.

தமிழர்களுடைய தோல்வி என்ற நிலைபாட்டை கையில் எடுத்தாலே இன்றைய உலக நிலையுடன் ஒப்பிட்டு அதற்கான காரணங்களை கண்டறிய முடியும். அதைவிடுத்து காட்டுக்குள் நின்று லைற்அடிப்பதை விட்டுவிட்டு பகல் நேரங்களில் ஊர்களில் உலாவினால் பல உண்மைகள் புலப்படும்.

பலவீனமானவனை அடாவடிதனமானவன் அடிமைபடுத்திகொள்கிறான் இதை பலமுறை புலிகள் தெளிவாக கோடிட்டுகாட்டினார்கள். ஆனால் எல்லாம் முடிந்தபின்பு இப்போது புலிகளுக்கு அரசியல் வகுப்பெடுக்க வெளிக்கிடுவது பூதம் குளம் கிண்ட வெளிக்கிட்டதுபோல் உள்ளது.

இன்றைய நாளில் தென்சூடன் தனிநாடக அங்கிகாரம் பெற்றாலாம் மேற்குலகின் ஒரு அடிமைநாடாகவும் வடசூடான் மேல் அழுத்தங்களை பிரோயோகிக்கவும்தான் தென்சூடன் தோற்றம் கொள்கிறது. அதாவது வடசூடானிடம் இருந்து விடுதலைபெற்று மேலைநாடுகளிடம் அடிமையாகிறது என்பதே உண்மை. ஆனால் மேலைநாட்டு அடிமைவாதம் என்பது தற்போதைய நாட்களில் வித்தியாசமாக மாறுபட்டுள்ளது முன்னைய நாட்கள்போல் தனி சுரண்டல்களோடு இல்லாது சுரண்டுவதை சுரண்டிகொண்டு. சுரண்டியதின் ஒரு கணிசமானதை வேறு பொருட்களாக கொடுத்து அடிமைவாதத்திற்கு சாயம் பூசுகிறார்கள்.

வருடாவருடம் ஜி-8 ஜி-20 என்று பெயர்களை வைத்து முதலாலிகள் தமது அடிமைகளை எவ்வாறு கையாள்வது சுரண்டல்களை எவ்வாறு பகிர்வது என்று வகுத்துகொள்கிறார்கள்.

வடசூடானுடன் போராடிகொண்டு அழிந்துகொண்டிருப்பதைவிட இருப்பை தக்கவைக்க இந்த அடிமைவாத தனிநாட்டு சுதந்திரம் அரசியல் ரீதியாக மேன்மையானதும் தந்திரோபாயமாதுமாகும்.

முள்ளிவாய்க்காலின் முடிவிலேயும் இப்படியானதொரு முடிவிவை பார்க்க முடியும். ஆனால் அதற்கு கண்பார்வை அவசியமானது. சங்கிலி மன்னன் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு தனது படைகளையும் இழந்து தானும் இறந்துபோனான். ஆனால் பல சிங்கள மன்னர்கள் சரணடைந்து உயிரோடு வாழ்நதார்கள் வெள்ளையினத்தவரின் ஆயுதபலத்தின் முன் நாமொரு திணிசு என்று எண்ணினார்கள் அவர்கள்.

போரிலே அழிவும். சரணடைதலில் அடிமைவாழ்வும் நிச்சயமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தெரிந்தும் போராட புலிகளை அனப்பியது யார் தூண்டியது யார்? இப்போது எல்லாம் முடிந்தபின்பு அரசியல் சிர்த்தாhத்தங்களும்........... அழிவுகளை தோண்டி அனுபவம் பெற்றாலே இனி நகரமுடியும் என்ற பசப்பு வார்தைகளையும் பேசுபவர்களின் நிலைபாடு என்பது. ஏதோ புலிகள் நள்ளிராவில் மட்டுமே யாருக்கும் தெரியாது போர்செய்தார்கள் என்பதுபோல்தான் உள்ளது. அழிவுகளும் போரும் எமது கண்களின் முன்னாலேயே நடந்தது. இதில் ஆராய்ந்துபார்க்க இனி என்ன இருக்கின்றது?

[/quote

வரலாறு எல்லாம் எழுதி சமனிலையாக்கி இருக்கிறிங்கள்.

மேலெ எழுதப்பட்ட அனைத்து வாழ்வதுக்குரியது அழிவதுக்கு இல்லை.

மாறாக புலிகளுக்கு வகுப்பு எடுக்க யாரும் வரவில்லை ஏன் எனில் அதை புலிகள் விரும்பினாலும் புலிகளோடு ஓட்டி இருந்த ஓட்டுண்ணிகள் விடமாட்டார்கள்.

கினறு வெட்ட பூதம் வந்த பிரச்சனை இல்லை ஆனால் புலிகள் என்ரு நினைத்து இருந்த புலத்தில் பூனைகள் வந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் தான் தற்ப்போது புலிகளை வாழ்வைத்து கொண்டு இருக்கிறார்கள். ஏன் எனில் இவைக்கு புலிகள் தேவை புலிகள் இல்லை என்றால் இந்த பூனைகளால் வாழமுடியாது.

சூடனில் என்ன நடந்தது? இன்று தனிநாடாக உலகில் பிறந்துவிட்டார்கள். கறுப்பர்களுக்கு தெரிந்த ராஜதந்திரம் ஆசியாவில் படித்த யாழ்ப்பாணிகளுக்கு தெரியாமல் போய்விட்டதே?

சங்கிலியன்:

ஆக தலைவரும் போராளிகளும் மாண்டதுக்கு சில ' மனந்தால் மாகாதேவி இல்லையேல் மரணதேவி ' என்ற மோட்டு மேதாவிகள் தான் காரணம்!

ஒரு போராட்டத்துக்கு அதன் ஆணிவேரான தலைமயும் அதன் கட்டமைப்பும் தேவை, ஆனால் சில சங்கிலியன் வரலாறு சுயலவிரும்பிகளுக்கு தேவை அடிபனியா வீரமரணம்?

சரி ஏன் போராட்டம் தோற்றது?

அல்லது பின்னடைவு வந்தது?

எழுத வந்தால் தேவையானதை எழுதவேண்டும். அதை விடுத்து நீயூட்டன் புவி ஈர்ப்பை கண்டு பிடித்தார், கிராம்பெல் போன் கட்னு பிடித்தார் என்று வாலுக்கும் தலைக்கும் முடிச்சு போடாமல் எழுதனும்.

சரி பிழைகளை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த கட்டத்துக்கு போவோம் என்றால் உடனே ஆளுக்கு ஆள் கருணா அப்படி செய்கிறான், டக்கிளஸ் இப்படி செய்கிறான் . புலிகளை குறை கூற நீ யார் என்று திசைதிருப்பும் பச்சோந்திகளை போல் எழுதுவதை நிறுத்தி ஆக வேண்டியதை பார்க்க வேண்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டம் என்பது என்ன? அதற்கு முந்தைய கட்டம் என்ன?

யார் நகருவது?

யாருக்காக நகருவது?

ஏன் நகர வேண்டும்?

என்று விளக்கம் இன்றி உங்ளுகடைய கேள்விள் விக்கலும் விழுங்கலுமாக இருக்கிறதே?

வினாக்களை விளக்கமாக கேட்டால்தான் உங்களுடைய கேள்விகளை புரிந்து அதற்கான விடைகளை தேடி கண்டுபிடிக்க முடியும்.

இன்னொருவனுக்கு இருக்கும் அதே கடமையும் தேவையும் தங்களுக்கில்லையா? ஆக இன்னொருவனே தூற்றுதல்களையும் அவமதிப்புகளையும் அள்ளி தின்ன தேவைபடுகிறான். தூற்றுவதற்கு மட்டும் நாம் தயாராக இருக்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி, சொல்லவாறதை விளங்கவே மாட்டியள் என்பது நன்றாக தெரிகிறது..அது எப்படி நான் சொல்லுவது சரி எதிரான கருத்தை உள்வாங்குகிரீகள் என்பதுதான் விளங்கவில்லை..நான் சொல்லவருவது சண்டை என்றால் அது பிரமேதாச என்றால் என்ன பிரபாகரன் என்றால் என்ன அதனோடு இணைந்த பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை..தவிர்க்கக்கூடியது சண்டையே..அதற்குத்தான் பலரும் சமாதானங்களும், யுத்த நிறுத்தங்களும் ஆயுதமௌனிப்புகளும் செய்கிறவை. ஆனால் நீங்கள் சொல்வருவது, இழப்புகளுக்கு காரணம் வெடித்த செல் சிதறல், அது காயப்படுத்திய பகுதி, மருத்து சரியாக கட்டாத வைத்தியர்..............நீங்கள் நக்கலாவும் நளினமாயும் எழுதினாலும் நான் சொல்லவந்தது அதுவல்ல..ஏனெனில் நான் சொல்ல வருவதை நீங்கள் விளங்ககூடது என்று முடிவெடுத்தால் எல்லாம் பிழையா த்தான் இருக்கும். இந்த இடத்தில அர்ஜுன் சொன்னதொன்று.."நாங்கள் என்ன புலிக்கு பரம்பரை எதிரிகளோ" என்று. என்னுடைய கருத்துக்கு முரணாக எழுதுறீர்கள் என்றால் நீங்கள் எழுதுவது முழுக்க குப்பை என்று நினைத்தால், என் இதில் எழுதி நேரத்தை வீணாக்குவான். நானே எழுதி நானே படித்து அல்லது என்னை மாதிரி 2 பேரிட்ட காட்டி இதுதான் நடந்ததது , இதுதான் நடக்க போகுது என்று இருக்கலாம்.

இப்படி எல்லாம் எழுதினால் உடனே பதில் வரும் சண்டை இல்லை முதல் காரணம், சண்டைக்கு காரணம் தரபடுத்தல் பேரினவாதம் குடியேற்றம் .............................. ஆதனால்தான் போரிட்டது என்று, அதன் முதல் பழி அமிர்தலிங்கத்திலும் மற்ற மற்ற தமிழ் கட்சிக்கர்ரரும்தான், அவர்கள் தான் முதல் ஆட்கள் என்று. நிச்சயமாக அவர்களும்தான் அவர் முதல் ஆர் முடிவு?...இப்ப சனம் இருக்கிற நிலைக்கு யார் பதில் சொல்லுவார்?

சாந்தி ஒரு முறை இணைத்த இணைப்பில் இருந்தது, தமிழ் பகுதியில் பரவும் எய்ட்ஸ் வியாதி என்பது போன்ற தலையங்கத்துடன் வந்த செய்தி..முதலும் ஒரு முறை பதிந்திருந்தேன், பக்தாத்தேலே இதுதான் நிலை என்றால் அது எங்கள் இடங்களுக்குள் வர எவ்வளவு காலம் எடுக்கும் என?

நாங்கள் சண்டை பிடித்தோம், முடிவுகள் நாங்கள் விரும்பியது போல வரவில்லை என்றால் அதில் என்ன பிழை என்று பார்க்கவேண்டும்..பார்ப்பதே பிழை என்றால், உண்மையில் அவர்கள் தோற்றுப்போன யுத்தத்திலும் பலன் அடைபவர்களே தவிர வேறுயாருமல்லர். துரதிச்டசமாக உலகம் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளது. கொலை செய்தால்தான் கசாப்புகடைக் காரனின் வீட்டில் வயிறு நிரம்பும்புவது போல.

கேள்வி, சண்டை முடிந்துவிட்டது, என் இன்னும் அமைதி இல்லை? யாரை நோக்கி கேட்டலும், யாருக்கும் தெரியுமோ பதில் தெரியாது? ஆனால் இந்த பதில் வரும் மட்டும் ஆளை ஆள் புழுதி வாரி கொட்டிக்கொண்டு எங்கள் பணி தொடர்வோம்.

விசு நீங்கள் ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள், நீங்கள் போடர் கடக்கையில் வரி கட்டுவதாக, நான் நினைக்கிறன், நீங்கள் இன்னும் அந்த "நடைமுறை அரசு" இருந்து வரவில்லை என்று. நாங்கள் அதற்குள்தான் இன்னமும் நிற்கிறோம் என்றால் அல்லது அப்படியான ஒன்றை நோக்கித்தான் பயணிக்க போகிறோம் என்றால் .. உண்மையில் அது இறந்த காலம் என்றாலும், அந்த நடை முறை அரசை விட இப்ப உள்ள நாடுகடந்த அரசு வலியதென நான் நினைகிறேன். அந்த நடை முறை அரசுக்கு இருந்த ஒரே பலம் ஆயுதம்,- நோர்வே பேசினது, யப்பான் பேசினது.........என்று நீட்டி சொல்லலாம் ஆனால் நடைமுறையுள் நடத்தது என்னவோ, அதுவல்ல..அதனுடைய முழு அத்தியாங்களும் வரும் மட்டும் இன்று நான் தூ, நாளை நீ தூ, நாளை மறுநாள் அவன் தூ அல்லது வேறு அடைமொழி.

சுபம்..

Link to comment
Share on other sites

இவர்களுக்கு தெரிந்ததொன்றுதான்.விமர்சனம் வைப்பவர்கள் ஒன்றில் இலங்கை அரசின் கூலிகள்,அல்லது றோ.

இதனாலேயே நீங்கள் அழிந்தீர்கள்.நங்களும் வீடு வாசல் குடும்பம் என்று வில்லங்கம் இல்லாமல் இருக்கலாம் கொஞ்சம் நாட்டுப்பற்று இருப்பதால் இன்னமும் அலட்டிக்கொள்வதால் தான் இந்தபிரச்சனை.

இவர்கள், அவர்கள் எல்லாருமே நாங்கள் தான். இந்த களத்திற்கு வரும் அனைவருமே நாட்டுப்பற்று உள்ளவர்கள்தாம். கருத்துக்களால் நாம் வேறுபடலாம், ஆனால் எமது தாயக பற்றையும், அந்த மக்கள் மீதும் மண்ணின் மீதும் பாசம் உள்ளவர்கள். இதில் எனக்கு - உனக்கு பற்று கூட - குறைவு என்பது விவாதத்திற்கு தேவையில்லாதது.

தனிப்படவர்களை தாக்காமல், கருத்தை நேர்த்தியாக விவாதித்தால், இந்த தளத்தில் இன்னும் மேலும் பலர் உரிமையுடன் தமது கருத்துக்களை முன்வைப்பார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, சொல்லவாறதை விளங்கவே மாட்டியள் என்பது நன்றாக தெரிகிறது..அது எப்படி நான் சொல்லுவது சரி எதிரான கருத்தை உள்வாங்குகிரீகள் என்பதுதான் விளங்கவில்லை..நான் சொல்லவருவது சண்டை என்றால் அது பிரமேதாச என்றால் என்ன பிரபாகரன் என்றால் என்ன அதனோடு இணைந்த பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை..தவிர்க்கக்கூடியது சண்டையே..அதற்குத்தான் பலரும் சமாதானங்களும், யுத்த நிறுத்தங்களும் ஆயுதமௌனிப்புகளும் செய்கிறவை. ஆனால் நீங்கள் சொல்வருவது, இழப்புகளுக்கு காரணம் வெடித்த செல் சிதறல், அது காயப்படுத்திய பகுதி, மருத்து சரியாக கட்டாத வைத்தியர்..............நீங்கள் நக்கலாவும் நளினமாயும் எழுதினாலும் நான் சொல்லவந்தது அதுவல்ல..ஏனெனில் நான் சொல்ல வருவதை நீங்கள் விளங்ககூடது என்று முடிவெடுத்தால் எல்லாம் பிழையா த்தான் இருக்கும். இந்த இடத்தில அர்ஜுன் சொன்னதொன்று.."நாங்கள் என்ன புலிக்கு பரம்பரை எதிரிகளோ" என்று. என்னுடைய கருத்துக்கு முரணாக எழுதுறீர்கள் என்றால் நீங்கள் எழுதுவது முழுக்க குப்பை என்று நினைத்தால், என் இதில் எழுதி நேரத்தை வீணாக்குவான். நானே எழுதி நானே படித்து அல்லது என்னை மாதிரி 2 பேரிட்ட காட்டி இதுதான் நடந்ததது , இதுதான் நடக்க போகுது என்று இருக்கலாம்.

இப்படி எல்லாம் எழுதினால் உடனே பதில் வரும் சண்டை இல்லை முதல் காரணம், சண்டைக்கு காரணம் தரபடுத்தல் பேரினவாதம் குடியேற்றம் .............................. ஆதனால்தான் போரிட்டது என்று, அதன் முதல் பழி அமிர்தலிங்கத்திலும் மற்ற மற்ற தமிழ் கட்சிக்கர்ரரும்தான், அவர்கள் தான் முதல் ஆட்கள் என்று. நிச்சயமாக அவர்களும்தான் அவர் முதல் ஆர் முடிவு?...இப்ப சனம் இருக்கிற நிலைக்கு யார் பதில் சொல்லுவார்?

சாந்தி ஒரு முறை இணைத்த இணைப்பில் இருந்தது, தமிழ் பகுதியில் பரவும் எய்ட்ஸ் வியாதி என்பது போன்ற தலையங்கத்துடன் வந்த செய்தி..முதலும் ஒரு முறை பதிந்திருந்தேன், பக்தாத்தேலே இதுதான் நிலை என்றால் அது எங்கள் இடங்களுக்குள் வர எவ்வளவு காலம் எடுக்கும் என?

நாங்கள் சண்டை பிடித்தோம், முடிவுகள் நாங்கள் விரும்பியது போல வரவில்லை என்றால் அதில் என்ன பிழை என்று பார்க்கவேண்டும்..பார்ப்பதே பிழை என்றால், உண்மையில் அவர்கள் தோற்றுப்போன யுத்தத்திலும் பலன் அடைபவர்களே தவிர வேறுயாருமல்லர். துரதிச்டசமாக உலகம் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளது. கொலை செய்தால்தான் கசாப்புகடைக் காரனின் வீட்டில் வயிறு நிரம்பும்புவது போல.

கேள்வி, சண்டை முடிந்துவிட்டது, என் இன்னும் அமைதி இல்லை? யாரை நோக்கி கேட்டலும், யாருக்கும் தெரியுமோ பதில் தெரியாது? ஆனால் இந்த பதில் வரும் மட்டும் ஆளை ஆள் புழுதி வாரி கொட்டிக்கொண்டு எங்கள் பணி தொடர்வோம்.

விசு நீங்கள் ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள், நீங்கள் போடர் கடக்கையில் வரி கட்டுவதாக, நான் நினைக்கிறன், நீங்கள் இன்னும் அந்த "நடைமுறை அரசு" இருந்து வரவில்லை என்று. நாங்கள் அதற்குள்தான் இன்னமும் நிற்கிறோம் என்றால் அல்லது அப்படியான ஒன்றை நோக்கித்தான் பயணிக்க போகிறோம் என்றால் .. உண்மையில் அது இறந்த காலம் என்றாலும், அந்த நடை முறை அரசை விட இப்ப உள்ள நாடுகடந்த அரசு வலியதென நான் நினைகிறேன். அந்த நடை முறை அரசுக்கு இருந்த ஒரே பலம் ஆயுதம்,- நோர்வே பேசினது, யப்பான் பேசினது.........என்று நீட்டி சொல்லலாம் ஆனால் நடைமுறையுள் நடத்தது என்னவோ, அதுவல்ல..அதனுடைய முழு அத்தியாங்களும் வரும் மட்டும் இன்று நான் தூ, நாளை நீ தூ, நாளை மறுநாள் அவன் தூ அல்லது வேறு அடைமொழி.

சுபம்..

பலவீனமானவனை அடாவடிதனமானவன் அடிமைபடுத்திகொள்கிறான் இதை பலமுறை புலிகள் தெளிவாக கோடிட்டுகாட்டினார்கள். ஆனால் எல்லாம் முடிந்தபின்பு இப்போது புலிகளுக்கு அரசியல் வகுப்பெடுக்க வெளிக்கிடுவது பூதம் குளம் கிண்ட வெளிக்கிட்டதுபோல் உள்ளது.

இன்றைய நாளில் தென்சூடன் தனிநாடக அங்கிகாரம் பெற்றாலாம் மேற்குலகின் ஒரு அடிமைநாடாகவும் வடசூடான் மேல் அழுத்தங்களை பிரோயோகிக்கவும்தான் தென்சூடன் தோற்றம் கொள்கிறது. அதாவது வடசூடானிடம் இருந்து விடுதலைபெற்று மேலைநாடுகளிடம் அடிமையாகிறது என்பதே உண்மை. ஆனால் மேலைநாட்டு அடிமைவாதம் என்பது தற்போதைய நாட்களில் வித்தியாசமாக மாறுபட்டுள்ளது முன்னைய நாட்கள்போல் தனி சுரண்டல்களோடு இல்லாது சுரண்டுவதை சுரண்டிகொண்டு. சுரண்டியதின் ஒரு கணிசமானதை வேறு பொருட்களாக கொடுத்து அடிமைவாதத்திற்கு சாயம் பூசுகிறார்கள்.

வருடாவருடம் ஜி-8 ஜி-20 என்று பெயர்களை வைத்து முதலாலிகள் தமது அடிமைகளை எவ்வாறு கையாள்வது சுரண்டல்களை எவ்வாறு பகிர்வது என்று வகுத்துகொள்கிறார்கள்.

வடசூடானுடன் போராடிகொண்டு அழிந்துகொண்டிருப்பதைவிட இருப்பை தக்கவைக்க இந்த அடிமைவாத தனிநாட்டு சுதந்திரம் அரசியல் ரீதியாக மேன்மையானதும் தந்திரோபாயமாதுமாகும்.

முள்ளிவாய்க்காலின் முடிவிலேயும் இப்படியானதொரு முடிவிவை பார்க்க முடியும். ஆனால் அதற்கு கண்பார்வை அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு தெரிந்ததொன்றுதான்.விமர்சனம் வைப்பவர்கள் ஒன்றில் இலங்கை அரசின் கூலிகள்,அல்லது றோ.

இதனாலேயே நீங்கள் அழிந்தீர்கள்.நங்களும் வீடு வாசல் குடும்பம் என்று வில்லங்கம் இல்லாமல் இருக்கலாம் கொஞ்சம் நாட்டுப்பற்று இருப்பதால் இன்னமும் அலட்டிக்கொள்வதால் தான் இந்தபிரச்சனை.

கூலிகள் என்று மட்டமாக கூறுவது தவறு என்றே நானும் கருதுகிறேன் ஒரு வேளை அவர்கள் கூலியின் கூலியாக கூட இருக்கலாம். யார் யார் என்பதை அவர்கள் பதிந்து செல்லும் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டியபின் மேற்கிலே சூரிய உதயத்தை காட்ட முற்படுவது என்பது செவிடன் காதில் சங்குஊதுவது போன்றது.

"விமர்சனங்கள்" என்பதற்கும்

"விசம கருத்துக்கள்" என்பதற்கும்

"வீண் பழிசொற்கள்" என்பதற்கும் இடையில் தமிழிலே வேறுபட்ட அர்த்தங்களே உள்ளன. அதை சாராசாரியாக தமிழில் தனது பெயரை உச்சரித்து எழுத தொடங்கும் போது உள்ள அறிவே இவற்றுக்கு இடையிலான வித்தியாசங்களை கண்டறிய போதுமானது. இங்கே கருத்து எழுதும் அனைவரும் அதினிலும் மேலானவர்கள் எனபதற்கு அவர்களின் எழுத்து சாட்சியம்.

புலிகள் மீது விமர்சனங்களை புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களில் வாழ்ந்த காலங்களிலேயே வைத்தவர்கள் நாம். அவர்கள் எங்களுக்கு சகோதரர்கள் போலே மட்டும் தெரியவில்லை........... சகோதரர்களே. பிழைகளை காணும்போதெல்லாம் சுட்டிகாட்டினோம் சிலருடைய அறிவீனம் காரணமாக அவற்றை புறந்தள்ளி எமது விமர்சனங்களையும் புறந்தள்ள எத்தணிக்கும்போது அதை உரியவர்களிடம் எடுத்து சென்று அதற்கான பலன்களையும் அனுபவித்தே நாம் வந்தோம்.

இப்போது புலிகள் என்றால் ஏதோ ஆப்பிரிக்காவிழல் போர் செய்த ஒரு குழுபோலவும்............. நாம் எமது வாழ்கையிலேயே கண்டிராத ஒரு குழுவை பற்றி எழுதுவது போலவும் பூச்சாண்டி காண்டிகொண்டு. அதற்கு விமர்சனம் என்று பெயரையும் சூட்டிவிட்டால்...................?

நாம் கண்களை மூடிகொண்டு மூக்கையும் பொத்திகொண்டு அப்படியே அந்த வாந்திகளை அள்ளி தின்ன வேண்டும். நல்ல எதிர்பார்ப்புத்தான்.............. ஆனால் நாற்றம் கொடியதாக இருப்பதால் மூக்கை பொத்தியும் எங்களால் முடியவில்லை என்தை நாட்டாமைக்கு தெரியபடுத்திகொள்கிறோம்.

இனி நாட்டாமையின் முடிவை தொடர்ந்து அதெற்கேற்ப பஞ்சாயத்தை தொடரவும் முடிவுகொண்டுள்ளோம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.