Jump to content

Nano technology படிப்பது எதிர்காலத்துக்கு நல்லதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

Nano technology படிப்பதால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி?

எந்த வகையான இடங்களில் இதற்குரிய வேலை கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

அல்லது Medical technology ஐ பற்றியும் அறிந்திருந்தால் கூறுங்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nano technology படிப்பதால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி?

எந்த வகையான இடங்களில் இதற்குரிய வேலை கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

அல்லது Medical technology ஐ பற்றியும் அறிந்திருந்தால் கூறுங்கள்..

Nanotechnology

நனோ தொழில்நுட்பம் என்பது பென்சில் கரி (கிரபைட்) இன் ஒற்றை காபன் படையை பாய் போல் சுருட்டி உருவாக்கும் மிக நுண்ணிய நனோ (10^-9 m) விட்டம் கொண்ட மின்சாரத்தை மற்றும் வெப்பத்தை கடத்தக் கூடிய உறுதியான பாரம் குறைந்த இழைகளைக் குறிப்பது.

இலத்திரனியல் உலகில் இதன் பாவனை ஏலவே பெரிய பங்காற்ற ஆரம்பித்துவிட்டது. இரசாயனவியலிலும்.. உயிரியலிலும்.. பெளதீகவியலிலும்.. பொருள் வடிவமைப்பு, உருவாக்கதிலும் இவற்றின் பங்களிப்பு இருக்கின்றன.

இன்று உலோகக் கடத்திகள் கொண்டு உருவாக்கப்படும் ஒப்பீட்டளவில் பெரிய இலத்திரனியல் சுற்றுகளை இந்த நனோ கடத்திகள் கொண்டு ஒரு கைவிரல் அளவில் உருவாக்கி விட முடியும். அப்பிள் நிறுவனம்.. இதனை பாவிக்க ஆரம்பித்துவிட்டது.

nanotechnology.jpg

இத்துறையில் படிப்பது விஞ்ஞானம் சார்ந்த எல்லோ துறைகளிலும் பயனளிக்கும். குறிப்பாக இலத்திரனியல் சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்கள் எதிர்காலத்தில் போட்டிபோட்டு அமுல்படுத்தும் அரிய கண்டுபிடிப்புக்களை.. வடிவமைப்புக்களை இந்த தொழில்நுட்பம் உருவாக்கும் என்பது நிச்சயம். அதேவேளை மருத்துவ உலகிலும் இதன் பாவனை அதிகரிப்பதோடு உடலுக்குள் இயங்க வைக்கப்படும் வைத்தியர் கூட இதன் மூலம் உருவாக்கப்படலாம்.

Medical technology..

இது விரிந்த ஒரு பாடப்பரப்பு.

இதில் மருத்துவப் பெளதீகவியல் (Medical physics) மருத்துவப் பொறியியல் (Medical Engineering).. மருத்துவ உயிரியல் தொழில்நுட்பம் (bio technology), ஜெனெரிக் பொறியியல் (Genetic engineering) , மருத்துவ உயிரியல் விஞ்ஞானம் (Biomedical science) என்று பிரிவுகள் உண்டு.

மருந்து தயாரிப்பு, வடிவமைப்பு.

medical_equipment.jpg

மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிப்பு வடிவமைப்பு மேம்பாடு இவை தொடர்பான படிப்புகள். (X-ray,, NMR, CT scanner, Ultra sonic, UV therapy, Endoscope, Dental technology and so on)

உயிரியல் பிறப்புரிமை சிகிச்சைகள் மூலம் நோய்களை இல்லாது ஒழித்தல் (ஜீன் தெரபி -Gene therapy)

இப்படி நிறைய 21/22 ம் நூற்றாண்டிற்குரிய பாடப்பரப்புக்கள் இதில் உள்ளன.

நான் இத்துறையில் மூன்று (Medical biotechnology, Genetic engineering and Bio medical science) பிரிவுகளை தேர்வு செய்து படித்திருக்கிறேன். அந்த வகையில் இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதை உணர முடிகிறது. ஆனால் இத்துறையில் உள்ளவர்கள் தங்களின் அறிவை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். காரணம்.. விரைவான மாற்றங்களும் வளர்ச்சிகளும் இங்குண்டு. அதற்கு அத்தத்துறையில் இருக்கும் துறை அங்கீகாரம் அளிக்கும் நிறுவனங்களில் (Professional body eg: Institute of Biomedical Science) உறுப்பினராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இவை இருக்கின்றன. அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப உங்கள் அறிவை அவை மேம்படுத்த உதவுவதோடு நிபந்தனைகளையும் இடும்.

நான் பார்த்த அளவில் தமிழ் மாணவர்கள் இந்த Professional body களில் அங்கத்துவம் பெறுவது குறைவு. ஆனால் நிறைய உள்நாட்டு வெள்ளைகளும் மற்றவர்களும் அங்கத்துவத்தை பெற்று மேலதிக சலுகைகளையும் பெறுகின்றனர். இந்த வாய்ப்புக்களை பாவிக்க வேண்டும்.

new-medical-technology-stopping-stroke-02-af.jpg

(எவ்வாறு குருதிக் குழாயில் கொலஸ்ரோல் படிவால் ஏற்படும் அடைப்பை சத்திரசிகிச்சை இன்றி தொழில்நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி நீக்குதல் என்பதற்கான விளக்கம்.)

மருத்துவ உலகில் (MRCP, FRCP, MRCS, FRCS) இருப்பது போல.. விஞ்ஞானத்தின் இதர பிரிவுகளிலும் இவ்வாறான Professional qualifications மேற்படி நிறுவனங்கள் உங்களின் கல்வித் தகமை.. அனுபவம்.. துறைசார்ந்த அறிவு புதுப்பிப்பு என்பன போன்ற விடயங்களை அளவிட்டு தரும். இவற்றைப் பெறுவது சம்பள உயர்விற்கு மட்டுமன்றி உங்களின் அறிவின் உயர்விற்கும் பயன்பாட்டு விருத்திக்கும் உதவும்.

எனவே நனோ.. மற்றும் மெடிக்கல் தொழில்நுட்பங்களில் உங்கள் நேரத்தை அறிவாற்றலை முதலீடு செய்வது வீணாகாது.

மேலதிக விபரங்கள்:

http://www.howstuffworks.com/nanotechnology.htm/printable

http://www.medicaltechnology.org.uk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

எனவே நனோ.. மற்றும் மெடிக்கல் தொழில்நுட்பங்களின் உங்கள் நேரத்தை அறிவாற்றலை முதலீடு செய்வது வீணாகாது.

மேலதிக விபரங்கள்:

http://www.howstuffworks.com/nanotechnology.htm/printable

http://www.medicaltechnology.org.uk/

உங்களது விரிவான பதிலுக்கு, மிக்க நன்றி நெடுக்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்

எம் மக்கள்மீதான தங்கள் கரிசனைக்கும் நேரத்துக்கும்

Link to comment
Share on other sites

எல்லோரும் விளங்கக்கூடியதாக எளிய முறையில் எழுதியதிற்கு நன்றிகள் நெடுக்ஸ்.

சில காலங்களுக்கு முன் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவன் எதிர்காலத்தில் 'நானோ' தொழில்நுட்பத்தின் முக்கியத்தைப் பற்றி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அவரைப் பற்றிய இணைப்பு.

http://www.annaunivedu.net/2010/10/280000-to-nano-student-srm-university.html

Link to comment
Share on other sites

நானோ டெக்னாலஜி பற்றியது கதை ஒன்று இதையும் கொஞ்சம் பாருங்கள்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79699

.அடுத்த 10 ஆண்டுகளில் அஞ்சத்தக்க வளர்ச்சி பெறும் துறையாக நானோ டெக்னாலஜி (Nano technology) கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 1985ஆ‌‌‌ம் ஆ‌ண்டு உருவான இந்தத் தொழில்நுட்பம், இன்று வரை அதன் துவக்க கால வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் நானோ டெக்னாலஜி தொடர்பான ஆய்வுகளும், படிப்புகளும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன.

அப்துல் கலாம் கூட நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்றி விரிவாக விவரித்துள்ளார். மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி மாபெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும், மனிதன் நோயின்றி வாழ்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்றும் கலாம் தெரிவித்துள்ளார். மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது,அதுதான்

நானோ டெக்னாலஜி என்பது,

இதை

நாம் தெரிந்துகொள்ளாவிட்டால் அதைவிட பெரியநஷ்டம் ஏதும்மில்லை,இதை பிரபல

எழுத்தாளர் சுஜாதா மிக அருமையாக கூறி இருக்கிறார்,இந்த புதிய

தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டால் சதா மெகா சீரியலில்

அரை மயக்க நிலையிலும்,நடிகைகளின் இடுப்பளவிலும் தான் ஆழ்ந்து

இருப்பீர்கள்,உலகம் நம்மை

புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய் விடும்" என்று எழுத்தாளர் சுஜாதா கூறி

இருப்பது

நூற்றுக்கு நூறு சத்தியமான உண்மை

நானோ

டெக்னாலஜி என்பது மிக சிக்கலான தொழில்நுட்பம் தான் என்றாலும்,அதன்

அடிப்படை என்ன, என்ற ஆரம்ப அடிச்சுவடியையாவது தெரிந்துகொண்டே ஆக வேண்டும்

அதை தெரிந்து கொள்ள ஓரளவு கவனம் செழுத்தினால் போதும்

அனைத்து எலக்ட்ரானிக் கருவிகள்

எரிசக்தி

கம்ப்யூட்டர்

மருத்துவம்

விவசாயம்

கார் பாகங்கள்

ஆடை தயாரிப்பு

என்று

ஒரு துறையை கூட பாக்கி இல்லாமல் அனைத்துமே இனிமேல் நானோ தொழில்நுட்பத்தை

தான் நம்பி இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

எனவே,மிகப்பெரிய எதிர்காலத்தின் ஆரம்பவாசல் கதவான நானோ தொழில்நுட்பம் பற்றி

ஓரளவு தெரிந்துகொள்வதற்காத்தான் இந்த கட்டுரை.

ஏதோ

தொழில்நுட்பம்தானே? இந்த அறுவை நமக்கு எதற்கு என்று நினைத்து வேறு தளம்

போய் விடாதீர்கள்,இந்த தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்வது துப்பறியும்

கதை போல சுவாரசியமாக இருக்கும்

சரி நானோ என்பது என்ன?

எந்த பொருளையும் நீள அகலத்தால் அளப்பதற்கு மில்லி

மீட்டர்,சென்டிமீட்டர்,மீட்டர் என்ற அளவு முறையை நாம் பயன்படுத்துகிறோம்

அல்லவா?

அதாவது ஒரு மீட்டரில் நூறில் ஒரு பங்கு ஒரு சென்டிமீட்டர் ஆகும்.

ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மில்லிமீட்டர் ஆகும்

ஒரு

மீட்டரில் நூறு கோடில் ஒரு பங்கு தான் நானோ மீட்டர் எனப்படுகிறது,ஓரளவு

புரியும்படி கூறுவது என்றால் குண்டூசி முனையுல் லட்சத்தில் ஒரு பங்கு

எனலாம்,இந்த மிக சிறிய அளவை நம்மால் சாதரணமாக பார்க்கமுடியாது.

அணு

அளவில் கையாளாப்படும் இந்த தொழில்நுட்பம்தான் நானோ தொழில்நுட்பம்

எனப்படுகிறது,இந்த தொழில்நுட்பத்தின் ஆதாரம்,அணு அளவில் எந்த ஒரு

செயலையும் செய்யமுடியும் என்பதுதான்,

எல்லா பொருட்களுக்கும் ஆதரமாக

இருப்பது அந்த பொருட்களின் அணு கட்டமைப்பு,அந்த பொருள் இப்படித்தான்

இருக்க வேண்டும் என்ற ரகசியம் அதன் அணு கட்டமைப்பில் இருக்கிறது,அந்த அணு

கட்டமைப்பை மாற்றினால் அந்த பொருள் வேறு வடிவம் பெறுகிறது.

மண்ணுக்குள்

பல ஆண்டுகளாக வெப்பத்திலும் அடர்த்தியுலும் புதைந்து கிடக்கும்

கரிக்கட்டையின் அணுவில் மாற்றம் ஏற்படும்போது அது வைரமாக மாறுகிறது.

காற்று,தண்ணீர்,மண் ஆகியவற்றின் அணுக்களின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும்போது

அது செடி,கொடி,மரம் ஆகிறது

இதுவரை

இயற்கை மட்டுமே அரங்கேற்றிய இது போன்ற அதிசிய மாற்றத்தை ஆராய்ச்சி

சாலையில் அமர்ந்தபடி நம்மாலும் செய்யமுடியும் என்று கண்டுபிடித்து

இருக்கிறார்கள்,அணுகட்டமைப்பை நமது தேவைக்கு தகுந்தபடி எப்படி மாற்றுவது

என்பது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்கிறது,நமது உடலுக்கு ஆதாரமாக

இருப்பது ந்மது "டி.என்.ஏ"எ

எனப்படும் மரபு அணு.

நடிகை நமீதா

இவ்வளவு உயரமாக,இந்த அளவு கவர்ச்சியான கண்களுடன் இந்த மாதிரி

மூக்குடன்,இந்த மாதிரி பொன் நிறத்துடன் இருக்க வேண்டும் என்பது அவரது மரபு

அணுவில் எழுதப்பட்டு இருக்கும்

ஒவ்வொருவர் உடலில் இருக்கும் இந்த மரபு

அணு ரகசியம் தான் அவர்களை அதற்கு தக்க உடல் அமைப்புடனும்

குணாதிசயங்களுடனும் அவர்களை உருவாக்கிறது

அவ்வாறு எழுதப்பட்டு

இருக்கும் கட்டளை போல அணு அளவில் நம்மாலும் எழுத முடியும் அல்லது ஏற்கனவே

எழுதப்பட்ட கட்டளைகளை மாற்றி அமைக்க முடியும் என்று முயற்சிக்கிறார்கள்

நமது விஞ்ஞானிகள்,

உடல் அமைப்பு மட்டும் அல்லாமல்,எல்லா

பொருட்களின் அணு கட்டமைப்பையும் மாற்றி இயற்கையோடு இணைந்து

பிரமிப்பூட்டும் வளர்ச்சியை காண ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று

வருகின்றன,

இவ்வாறு அணு அளவில் எதையும் செய்ய முடியும் என்பதில் ஓரளவு

வெற்றிகண்டதன் தொடர்ச்சியாக நானோ தொழில்நுட்பம் இப்போது சில பொருட்களில்

அறிமுகம் ஆகிவிட்டது நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி முழு ழ்ளவில்

வெற்றிபெறும் போது அதன் பயன்கள் அளவிட முடியாததாக இருக்கும்

ஆச்சிரியமான தயாரிப்புகள்

நானோ தொழில்நுட்பம் இப்போதே பல துறைகளில் வந்துவிட்டது

கார் கண்ணாடி வழியாக சூரிய வெளிச்சம் ஊடுருவும்,இரவில் எதிரே வரும் வாகனங்களில்

இருந்து வரும் வெளிச்சத்தால் கண்கள் கூசும்

இதை

தவிர்க்க நானோ தொழில் நுட்பம் மூலம் புதிய வகை சன் கிளாஸ் தயாரித்து

இருக்கிறார்கள் இந்த கண்ணாடி பர்ப்பதற்கு வெண்மையாக இருக்கும்,ஆனால்

சூரிய வெளிச்சத்தையும்,எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்தையும்

கட்டுப்படுத்துகிறது

நானோ

துகள்கள் கொண்ட கலவை மூலம் தயாரிக்கப்படும் கார் பம்பர்கள் எடை அதிகம்

இல்லாமல் இருக்கின்றன,ஆனால் இபோதைய கார் பம்பர்களை விட அதிக உறுதியாக

இருக்கின்றன

நானோ துகள் கலவை கொண்டு தயாரிக்கப்படும் நூல் இழைகளில்

கறை படிவதில்லை,இதன் மூலம் அழுக்கு அல்லது எந்த கறையும் அண்ட முடியாத

ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன,

எளிதில் உடையாத டென்னிஸ்,மற்றும் கோல்ப் பந்துகள் ,டென்னிஸ் ராக்கெட்டுக்கள்

ஆகியவை தயாரிக்கப்படுகின்றன

மிக குறைந்த மின்சக்தியில் அதிக வெளிச்சம் கொண்ட பல்புகள் தயாரிக்கப்படுகின்றன

கம்பியூட்டர்களில் குறைந்த இடத்தில் மிக அதிக அளவில் தகவல்களை சேமித்து

வைத்துக்கொள்ளும் கருவிகள் செய்து இருக்கிறார்கள்

இது

போல இன்னும் பல துறைகளில் நானோ தொழிநுட்பம் மிக அதிக அளவில் புரட்சி செய்ய

இருப்பது மருத்துவம்,தகவல் தொழில் நுட்பம்,கம்பியூட்டர்,எரிசக்தி

ஆகியவற்றில்தான்

மருத்துவத்தில் செய்ய இருக்கும் புரட்சியால் கத்தி

இன்றி ரத்தம் இன்றி உடனடியாக நோயை கண்டுபிடித்து குணப்படுத்தும் காலம்

விரைவில் வர இருக்கிறது

கம்ப்யூட்டர்,தகவல் தொழில்நுட்ப புரட்சியால்

இப்போது இருக்கும் கம்ப்யூட்டர்கள் எதிர்காலத்தில் அளவில் மிக மிக

சிறியதாகவும் ஆற்றலில் பல மடங்கு வேகமாக செயல்படவும் ஆகிவிடும்

எரிசக்தியில்

நிகழ இருக்கும் புரட்சியால் சூரிய ஒளியை கொண்டு பல மடங்கு எரிசக்தியை

உருவாக்கி எதிர்காலத்தில் மின்சாரமோ பெட்ரோல் டீசலோ தேவையே இல்லை என்ற

நிலையை உருவாக்கலாம்

இதுபோல எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இருக்கும் நானோ தொழில்நுட்பம் வெறும்

கனவல்ல,எதிர்கால சத்தியம்.

பார்க்கின்சன்ஸ் (Parkinson's) எனப்படும் மூளை செயல்பாடுகளை மட்டுப்படுத்தும் அபாயகரமான நோயின் பாதிப்பைக் குறைக்கும் சிகிச்சை முறையில் கூட நானோ டெக்னாலஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.நுண்ணிய அளவிலான ரோபர்ட்கள், சென்சார்கள், கேமரா மற்றும் இதர பல சாதனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துவது, உடலை துளையிடாமல் சிகிச்சை அளிப்பது, நோயாளி உடலின் உட்புறத்தை பாதுகாத்து சிகிச்சை அளிப்பது மற்றும் தனிப்பட்ட செல்களை மட்டும் பாதுகாத்து சிகிச்சை அளிப்பது என பல்வேறு வகையான வருங்கால தொழில்நுட்பம் குறித்து இப்படிப்பில் (மெடிக்கல் நானோ டெக்னாலஜி) ஆய்வு செய்யப்படுகிறது.

மெடிக்கல் நானோ டெக்னாலஜி

மூலமாக எதிர்காலத்தில் நினைத்ததை செய்யலாம். உதாரணமாக நோயாளியின் உடலில், குறிப்பிட்ட பகுதியில் நானோ அளவுடைய துகள் மூலமாக மருந்து பொருட்களை செலுத்தி குணமடையச் செய்யலாம். உயிரியல் மண்டலங்களில் உள்ள மூலக்கூறுகளை கண்காணித்தல், புதிதாக

உருவாக்குதல், சரி செய்தல், கட்டுப்படுத்துதல் என அனைத்து செயல் முறைகளையும் மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளலாம்.

இதேபோல் சளித் தொந்தரவு போன்ற அன்றாட நோய்களுக்கும் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரியமான மருந்துகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக தற்போதைய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தாலும் சளித் தொந்தரவு 3 முதல் 4 நாட்களுக்கு நீடிக்கும்.

ஆனால் நானோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஒரே நாளில் நிவாரணம் பெற முடியும் என இத்துறை வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Link to comment
Share on other sites

நனோ எல்லா துறைகளிலும் உதவ கூடியது. வைத்திய கலாநிதி பட்டம் வரை படித்தால் நல்ல வேலை கிடைக்கும். விரல் விட்டு எண்ணக்கூடிய பல்கலைக்கழகங்கள் இந்த துறையில் மேற்படிப்பை வழங்குகின்றன. "சோலார்" தொழில்நுட்பத்தில் அதிகம் பாவிக்கப்படும். ஐ.பி.எம் . பெரிய முதலீடு செய்துள்ளது.

http://domino.research.ibm.com/comm/research.nsf/pages/r.nanotech.html

சில நனோ நிறுவனம் (நிறுவனங்கள் என்ன மாதிரி வெளி வாய்ப்பு உள்ளன என தெரியத்தரும்)

  1. http://www.nanometrics.com/ - ஒரு முன்னணி நிறுவனம்
  2. http://www.altairnano.com/profiles/investor/fullpage.asp?f=1&BzID=546&to=cp&Nav=0&LangID=1&s=0&ID=10724
  3. http://www.nanophase.com/
Link to comment
Share on other sites

நன்றி நெடுக்ஸ்...நல்லதொரு விளக்கம்...நீங்கள் ஒரு அறிவுக் களஞ்சியம் !!

Link to comment
Share on other sites

நல்லதொரு விளக்கம் நெடுக்ஸ்..! நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

மேலே பலராலும் தரப்பட்ட பயனுள்ள தகவல்களுடன்:

1. நானோ தொழில்நுட்பம் எனப்படுவது : 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

2. நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது.

3. அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலச்சி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications." நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

4. கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப் புறவிசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

5. நனோ தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்ட நிலையிலும் மக்கள் மத்தியில் அவை தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகிறது.

காபன் அணுவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காபன் நனோ குழாய்கள், டென்னிஸ் மட்டைகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செயப்பட வழிவகுக்கின்றன

நனோ தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்படும் துணிவகைகளின் நுண்ணிய இழைகள் காரணமாக, அவற்றில் அழுக்குகள் தங்குவதில்லை. அதே சமயம் அவை கசங்கும் தன்மையற்றன. இதனால் அத்துணிவகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை சலவை செய்யவோ அழுத்தவோ வேண்டியதில்லை.

நனோ தொழில்நுட்பத்தாலான குளிர்சாதனப் பெட்டிகளின் அறிமுகம், எந்த ஒரு உணவையும் மிக நீண்ட நாட்களுக்குப் பழுதடையாமல் பேண வழிவகுத்துள்ளது. இவை தவிர உறுதிமிக்க கட்டடப் பொருட்கள் மற்றும் டயர்களை உருவாக்கவும் நனோ தொழில்நுட்பம் பயன்படுகிறது.

நனோ தொழில்நுட்பத்தால் உருவான நுண்ரோபோக்களை உடலினுள்ளே செலுத்தி தொற்று நோய்க்கிருமிகளையும் நோய்க்கலங்களையும் கண்டறிய வைக்கும் முயற்சிகள் ஆராய்ச்சி மட்டத்திலுள்ளன

http://www.thinakaran.lk/2009/11/02/_art.asp?fn=d0911024

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு & வீணா நல்ல விளக்கங்கள். பலருக்கும் உதவியானது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தலைப்பும்,அதற்கேற்ற விளக்கவுரைகளும், இணைப்புகளும்....

நன்றிகள்.

Link to comment
Share on other sites

தலைப்புப் பதிந்து ஒரு மணி நேரத்தில் அதற்கு போதிய அறிவியல் விளக்கங்களையும் இணைப்புகளையும் சேர்த்துப் பதிந்துள்ளீர்கள். நீங்கள் படித்ததை/ தெரிந்தததை மற்றவருக்கும் பயனுள்ளதாக விளங்க வைக்கும் நல்ல ஆற்றல் & மனம் உங்களுக்கு நிறையவே இருக்கு நிச்சயம் பலர் பயனடைவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானோ தொழில்நுட்பம் பற்றி, மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்ட... தப்பிலி, வீணா, அகூதாவிற்கு மிக்க நன்றி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.