Jump to content

ஷோபாசக்தி - டிசே தமிழனின் கேள்விகள்


Recommended Posts

ஓ. இவர் கண்ணதாசன் ரேஞ்சுக்கு பெரிய திறமையாளரா? அப்ப படிக்கத்தான் இருக்கு..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்தியின் ஆக்கங்களில் எவை பாலியல் வக்கிரம் நிறைந்தவை என்று உங்களுக்கு தோன்றின? நான் அவரின் அநேக ஆக்கங்களை வாசித்தவன் என்ற ரீதியில் எனக்கு அப்படி எவையும் தோன்றவில்லை. என் பார்வையும் உங்கள் பார்வையும் வேறு வேறு தளங்களில் பயணிப்பதை இருக்கலாம்

..அத்துடன் கிருபனை நோக்கி "சில விஷயங்களில்" வறுமை கொண்டவரா என்ற கேள்வியில் இருக்கும் வக்கிரமே மற்றவர்களின் வக்கிரத்தை குறையாக கேட்க உங்களுக்கு இருக்கும் தகுதியை கேள்வி கேட்கின்றது :)

அவசரப்பட்டு வாசிக்காமல் எழுதிகிறீர்கள்:

1. தமிழச்சி பிரச்சினையும் அதில் சோ.ச பற்றி வெளிவந்த அந்தரங்கத் தகவல்களுமே நான் சொன்ன வக்கிரம். அவரது எழுத்தை நான் வாசித்ததில்லை-பிறகெப்படி அவரது எழுத்து பாலியல் வக்கிரம் என நான் சொல்ல இயலும்? நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.

2. "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்று கிருபன் சொன்னார். "அப்ப யாழ் களத்தினர் பிச்சைக்காரர்களா என்று"இன்னொருவர் கேட்டார். அதற்கு "இல்லை அவர்கள் பணக்காரர்கள், சில விஷயங்களில் அவர்கள் வறியவர்கள்" என்று கிருபன் சொன்னார். இது இதே திரியில வந்து மட்டூஸ் நீங்கள் வெட்டினதா அல்லது சோ.ச பற்றி சமாந்தரமாக நடக்கும் இன்னொரு திரியில் வந்ததா எனக்கு நினைவில்லை. ஆனால் கிருபன் மற்றவர்களை வறியவர்கள் என நினைக்கிறார் என்பது மட்டும் வெளிபட்டது. ஏன் அவரிடம் அவரது தகுதி பற்றிக் கேட்கவில்லை அப்போது? நீங்கள் தான் விளங்கப் படுத்த வேணும்.

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் தமிழிச்சி என்பவர் தெருவில் கிடக்கும் ஒரு கறிச்சட்டி எந்த நாயும் நக்கலாம் அதனை வைத்து கருத்துக்களை முன்வைக்காதீர்கள். இரண்டு வருடங்களிற்கு முன்னர் வலைப்பதிவுகளிகளில் எங்கள் முரண்பாட்டை படித்திருந்தால் புரியும். மேலும் விபரமாக புலிகளை எதிர்க்கிறோம் என்று சோபாவுடன் உயிரும் ஊடலுமாய் ஒண்றிணைந்தவர் ரயா காப்பாத்தினார் பின்னர் இப்:பொழுது புலம்புறார் காரணம் சேபா அதுவாம் :o

Link to comment
Share on other sites

சாத்திரி எப்படி உங்களால் இப்படி எழுதமுடிகின்றது.இது முன்னர் ஒரு பேப்பரிலும் பார்த்ததுதான்.

புலிகள் எங்களுக்கு விட்டுசென்றது இதுதான்.தமக்கு எதிரானவர்களை துகிலுரிவது.அதனால் தானோ என்னவோ உலகம் அவர்களை துகிலுரிந்தது.

சங்கரி செய்யவும் அரசியல் இருக்கு டக்கிலஸ் செய்யவும் அரசியல் இருக்கு அதை மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும் அதை எப்ப நீங்கள் எல்லோரும் உணர்கின்றீர்களோ அன்றுதான் தமிழனுக்கு முதல் சுதந்திரம்.

Link to comment
Share on other sites

சாத்திரி எப்படி உங்களால் இப்படி எழுதமுடிகின்றது.இது முன்னர் ஒரு பேப்பரிலும் பார்த்ததுதான்.

புலிகள் எங்களுக்கு விட்டுசென்றது இதுதான்.தமக்கு எதிரானவர்களை துகிலுரிவது.அதனால் தானோ என்னவோ உலகம் அவர்களை துகிலுரிந்தது.

சங்கரி செய்யவும் அரசியல் இருக்கு டக்கிலஸ் செய்யவும் அரசியல் இருக்கு அதை மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும் அதை எப்ப நீங்கள் எல்லோரும் உணர்கின்றீர்களோ அன்றுதான் தமிழனுக்கு முதல் சுதந்திரம்.

ஆக நீங்கள் சொல்ல வாறது புலிகளை பற்றி என்ன கோதாரியும் யாரும் எழுதலாம்... காரணம் உங்களுக்கு காச்சல் இருக்கிறதாலை... ஆனால் மற்றவை பிழையே விட்டு இருந்தாலும் அதை பற்றி வாய் கூட திறக்க கூடாது காரணம் புலியின் பழக்க வழக்கம் எண்டு பறை சாத்தப்படும்...

கேழுங்கப்பா புலிக்கு எதிரானவை என்ன தான் பிழை விட்டாலும் வாயை திறக்காதேங்கோ திறந்தால் சர்வதேசம் அழிச்சு போடுமாம்.... அண்ணை சாபம் போடுறார்...

சரி மேலை எங்கை புலி வந்தது...??? எதுக்கை இதுக்குள் புலியை இழுக்கிறீயள்....??

Link to comment
Share on other sites

சாத்திரி எப்படி உங்களால் இப்படி எழுதமுடிகின்றது.இது முன்னர் ஒரு பேப்பரிலும் பார்த்ததுதான்.

புலிகள் எங்களுக்கு விட்டுசென்றது இதுதான்.தமக்கு எதிரானவர்களை துகிலுரிவது.அதனால் தானோ என்னவோ உலகம் அவர்களை துகிலுரிந்தது.

சங்கரி செய்யவும் அரசியல் இருக்கு டக்கிலஸ் செய்யவும் அரசியல் இருக்கு அதை மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும் அதை எப்ப நீங்கள் எல்லோரும் உணர்கின்றீர்களோ அன்றுதான் தமிழனுக்கு முதல் சுதந்திரம்.

உடை அணிந்திருந்தால்தான் உரியலாம்..உடுப்பே இல்லாதவர்களை எப்படி உரியிறதாம்..?? புலிகள் அமைப்பு நடவடிக்கை பற்றி எனக்கும் ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கு ஆனால் ஈழம் பற்றியோ போராட்டம் பற்றியோ எந்த அடிப்படை அறிவுமே இல்லாமல் தமிழிச்சி புலியை எதிக்கிறேன் என்று தொடங்கி அதற்குள் கொளத்துர் மணி ராசேந்திரன் என்று ஈழத்தமிழ் ஆதரவாளர்களையும் இழுத்து வேடிக்கை காட்டியவர். அதனால்தான் அவரிற்கும் எனக்கும் மோதல் தொடங்கியது மேலும் அவரைப்பற்றி இங்கு எழுதிக்கொண்டிருக்க விருப்பம் இல்லை மற்றும்படி தமிழிச்சியை கறிச்சட்டி என்று எழுதியதால் உங்கள் மனம் நொந்திருப்பின் மன்னிக்கவும் இங்கு உங்களுடன் முரண்படுவது எனது நோக்கம் அல்ல நன்றி வணக்கம் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிப்பை உங்களிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை. "நீங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இந்தக் கண்ணதாசன் ஒரு உதாரணம்" என்று எழுதியவர் தான் கண்ண தாசன். இந்த சத்திய சோதனைக்கும் பாலியல் சுதந்திரம்/பெண் விடுதலை கோஷங்களின் பின்னால் சோ.ச. மறைத்து வைத்திருக்கும் சுய நலம் மிக்க பாலியல் வக்கிரத்திற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரியவில்லையா? நீங்களும் "சில விஷயங்களில்" வறுமை கொண்டவரா?

நான் எதையும் திரிக்கவில்லை. என்னைப் பற்றிய மாயவிம்பத்தை தாங்கள் உருவாக்கியிருந்து, அந்த விம்பத்துடன் எனது கருத்து ஒத்துப்போகாவிட்டால் அது என்னுடைய தவறில்லை.

நான் ஷோபாசக்தியின் ஆக்கங்களைத்தான் அதிகம் படித்தேனே தவிர அவரது நடத்தைகளைப் பற்றிய இணைய அரட்டைகளை அல்ல. அவரது ஆக்கங்கள் எல்லாம் இணையத்தில் கிடைக்காததால், இணையங்களை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு அவர் என்னத்தைப் பற்றி எழுதியிருக்கின்றார் என்று படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

மேலும் நான் சிலவற்றில் அல்ல, பலவற்றில் வறுமையாகத்தான் இருக்கின்றேன். எல்லோராலும் எல்லாவற்றையும் அறியமுடியும் என்று நான் எண்ணவில்லை. அதேநேரத்தில் தெரியாததைப் தெரிந்துகொள்ளமுடியாமல் தனக்குத் தெரிந்திருக்காவிட்டால், தெரியாதவை அற்பம் என்று இறுமாப்பும் கொள்வதில்லை. இப்படியான சில கருத்துக்கள் "லைலா" கதையில் கீழ் இருந்ததனால்தான் "பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்" என்று எழுதினேன்.

Link to comment
Share on other sites

அவசரப்பட்டு வாசிக்காமல் எழுதிகிறீர்கள்:

1. தமிழச்சி பிரச்சினையும் அதில் சோ.ச பற்றி வெளிவந்த அந்தரங்கத் தகவல்களுமே நான் சொன்ன வக்கிரம். அவரது எழுத்தை நான் வாசித்ததில்லை-பிறகெப்படி அவரது எழுத்து பாலியல் வக்கிரம் என நான் சொல்ல இயலும்? நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.

எனக்குத் தெரிந்து யாழில் புத்தகங்களை தேடி வாசிக்கும் நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்பதால், அவரின் எழுத்துகளை வாசித்த பின்பே கருத்தை தெரிவித்தீர்கள் என்று நினைத்தேன்.

பொதுவாக ஒவ்வொரு மனிதரின் அந்தரங்கள் இப்படி கேள்விகள் மூலம் வெளிப்படுமாயின், வக்கிர மனம் அன்ற ஒருவரை தேடிக் கண்டு பிடிப்பது பகலில் வெள்ளி பார்க்கும் செயலுக்கு சமன் என நினைக்கின்றேன்

2. "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்று கிருபன் சொன்னார். "அப்ப யாழ் களத்தினர் பிச்சைக்காரர்களா என்று"இன்னொருவர் கேட்டார். அதற்கு "இல்லை அவர்கள் பணக்காரர்கள், சில விஷயங்களில் அவர்கள் வறியவர்கள்" என்று கிருபன் சொன்னார். இது இதே திரியில வந்து மட்டூஸ் நீங்கள் வெட்டினதா அல்லது சோ.ச பற்றி சமாந்தரமாக நடக்கும் இன்னொரு திரியில் வந்ததா எனக்கு நினைவில்லை. ஆனால் கிருபன் மற்றவர்களை வறியவர்கள் என நினைக்கிறார் என்பது மட்டும் வெளிபட்டது. ஏன் அவரிடம் அவரது தகுதி பற்றிக் கேட்கவில்லை அப்போது? நீங்கள் தான் விளங்கப் படுத்த வேணும்.

கிருபன் எழுதியது "லைலா" என்ற சிறுகதை திரியில் வந்த கருத்துக்கு இந்த திரியில் பதில் எழுதினால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியின் பதில்கள்: சில அவதானங்கள்

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பகுதி 03

ஷோபாசக்தி எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களை முன்வைத்து சில குறிப்புக்களை எழுதுகின்றேன். கேள்வி பதில்...பிறகு பதிலுக்கு மேலும் கேள்விகள் என ஒரு முடிவுறாத வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பதற்காய் சில அவதானக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.

(1) ஷோபா குறிப்பிட்ட‌ மாற்ற‌ம்/மாற்ற‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ள் என்ப‌வ‌ற்றையும் நானும் ஒப்புக்கொள்கின்றேன். கால‌ச்சுவ‌டு, இந்தியா ரூடே போன்ற‌வ‌ற்றில் எழுதிக்கொண்டிருந்த‌ ர‌விக்குமார்,ராஜ்கெள‌த‌ம‌ன் போன்ற‌வ‌ர்க‌ளையும் அதே நிலைப்பாட்டிலேயே நானும் ஆத‌ரித்து வ‌ந்திருக்கின்றேன். அதை என‌து த‌ள‌த்திலும் எழுதியுமிருக்கின்றேன்.

நான் சுட்ட‌ விரும்பிய‌து, மாற்ற‌த்தைய‌ல்ல‌. புல‌ம்பெய‌ர் சூழ‌லில் இல‌க்கிய‌ச் செய‌ற்பாடுக‌ளுக்கும், ச‌ஞ்சிகைக‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கும் எவ்வ‌ள‌வு அல்லாட‌ வேண்டியிருக்கிற‌து என‌ நாமெல்லோரும் அறிவோம். ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில் என‌க்கும், ந‌ண்ப‌னொருவ‌ருக்கும் ச‌ஞ்சிகை வெளியிடும் ஆசை வ‌ந்து, அப்போது இங்கு வ‌ந்திருந்த‌ 'உயிர்நிழ‌ல்' க‌லைச்செல்வ‌னோடும் இது ப‌ற்றி உரையாடியிருந்தோம். அவ‌ர் தான் 'உயிர்நிழ‌ல்' வ‌ருவ‌த‌ற்காய், தான் வேலை செய்துவ‌ரும் ப‌ண‌ம் முழுவ‌தையுமே செல‌விட‌வேண்டியிருக்கிற‌தென‌ அது குறித்த‌ இட‌ர்க‌ளை எங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்திருந்தார். மேலும் 'உயிர்நிழல்' ச‌ஞ்சிகையை இல‌ங்கை/இந்தியாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விற்ப‌தில்லையென்ற‌ முடிவில் அவ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌வே அனுப்புவ‌தாய்க் குறிப்பிட்ட‌தும் நினைவு. என‌வே உயிர்நிழ‌லோ, எக்ஸிலோ பிற‌ ச‌ஞ்சிகைக‌ளோ புக‌லிட‌ சூழ‌லிருந்து மிகுந்த‌ நெருக்க‌டிகளிலிருந்தே வெளிவ‌ந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். எக்ஸில் ச‌ஞ்சிகையின் ஆசிரிய‌ர் குழுவில் இருந்த‌வ‌ர்க‌ளின்(?) அர‌சிய‌ல் என‌க்கு உட‌ன்பாடில்லாவிட்டாலும், அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகையில் பிர‌சுரிக்கும்போது, சாதி வெறிய‌ர்க‌ளிட‌மோ/ம‌த‌ வெறிய‌ர்க‌ளிட‌மோ போக‌மாட்டார்க‌ள் என்ப‌தை நிச்ச‌யமாக என்னைவிட‌ ஷோபாச‌க்தி ந‌ன்கு அறிவார். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகைக‌ளில் சேர்ப்ப‌தை விம‌ர்சித்த‌ ஷோபா, த‌ம‌து வியாபார‌ நோக்க‌ங்க‌ளுக்காய் எந்த‌ அடிப்ப‌டை அற‌முமில்லாது விள‌ம்ப‌ர‌ங்க‌ளைப் பிர‌சுரிக்கும் நிறுவ‌ன‌ங்க‌ளின் சஞ்சிகைக‌ளில் எழுத‌ப்போகும்போது, எக்ஸில் ச‌ஞ்சிகை ந‌ட‌த்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் த‌ன‌து த‌வ‌றை உண‌ர்ந்து ம‌ன்னிப்புக் கேட்டிருப்பாரா என்ப‌து கேள்விக்குரிய‌து. நாம் யாரை விம‌ர்சிக்கின்றோம் என்ப‌தையோ அல்ல‌து எப்போது நாம் மாறுகின்றோம் என்ப‌தையோ த‌வ‌றென‌ச் சொல்ல‌ வர‌வில்லை. ஆனால் கால‌நேர‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ ந‌ம‌க்கு எது சாத‌க‌மாக‌ இருக்கின்றோமே அதைச் செய்துவிட்டு 'சும்மா சாட்டு' பிற‌கு சொல்வ‌த‌ற்கு இன்னொரு பெய‌ர் ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம் என்ப‌தையும் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.

இந்த‌ விட‌ய‌த்துக்கு இன்னொரு உதார‌ண‌த்தையும் பார்ப்போம். புதிய‌ பார்வை என்றொரு ச‌ஞ்சிகையை எல்லோருக்கும் தெரியும். அந்த‌ ச‌ஞ்சிகையின் ப‌திப்பாசிரிய‌ர் ந‌ட‌ராஜ‌ன். அவ‌ரின் சாதி எதுவென‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதே ச‌ஞ்சிகையில் அ.மார்க்ஸ் ப‌த்திக‌ள் எழுதிவ‌ருகின்றார். முத்துராம‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளின் நூற்றாண்டுவிழாவில் அது ஒரு சிற‌ப்பித‌ழ் வெளியிடுகின்ற‌து. அ.மார்க்ஸை ஷோபாவைப் போல‌ எல்லாப்பொழுதும் ஆத‌ரிக்கும் சுகுணாதிவாக‌ரிட‌ம், இதே கால‌ப்ப‌குதியில், 'முத்துராம‌லிங்க‌த்தை வித‌ந்தோத்தும் ஒரு இத‌ழில் அ.மார்க்ஸ் எழுதுவ‌து என்ன‌ நியாய‌ம்?' என‌ ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அத‌ற்கு அவ‌ர், 'ஆமாம். இனி அ.மார்க்ஸ் புதிய‌ பார்வையில் எழுத‌மாட்டார்' என‌ப் ப‌தில் சொல்கின்றார்.

த‌லித்திய‌ அர‌சிய‌லை முன்னெடுத்த‌ அ.மார்க்ஸுக்கு ந‌ட‌ராஜ‌ன் ப‌ற்றி எதுவுமே தெரியாம‌லா அங்கே எழுத‌த் தொட‌ங்கினார் என்ப‌து முத‌ற்கேள்வி. ந‌ட‌ராஜ‌ன் த‌ன் சாதி நீக்க‌ அர‌சிய‌லை எங்கேயாவ‌து முன்வைத்து அதை ந‌ம்பித்தான் அ.மார்க்ஸ் போனார் என்ப‌த‌ற்கு ஏதாவ‌து ஆதார‌முண்டா? ஆக, அ.மார்க்ஸ் புதிய‌பார்வையில் எழுதிய‌தை எத‌ன் அடிப்ப‌டையில் புரிந்துகொள்வ‌து?

இதே ச‌ம்ப‌வ‌த்தை என‌து ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரின் கேள்வியோடும் ஒருவ‌ர் ஒப்பிட்டுப் பார்க்க‌லாம். அங்கே நான் குறிப்பிட்ட‌து 'சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல?' என்ப‌து. இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாய் ந‌ட‌ராஜ‌ன் இருக்கின்றார். இங்கே நாம் ந‌ட‌ராஜ‌னை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா அல்ல‌து அய்ய‌ர் என்ற‌ பெய‌ரை ம‌ட்டும் வைத்திருப்ப‌த‌ற்காய் ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா? இந்த‌ 'வித்தியாச‌ங்க‌ளை' நாம் க‌ண‌க்கிலெடுக்க‌ வேண்டுமென‌த்தான் திரும்ப‌த் திரும்ப‌ ஷோபாவிட‌ம் வ‌ற்புறுத்துகின்றேன்.

(2) ஒரு முக்கிய விட‌ய‌த்துக்கு அது நிக‌ழ்ந்த‌ நேர‌த்தில் ஏன் ஷோபா எதிர்வினையாற்றவில்லை என்ற‌ என‌து முக்கிய‌கேள்வியைச் ஷோபா மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோகின்றார். ஷோபா ஏன் எல்லாவ‌ற்றுக்கும் எதிர்வினை செய்ய‌வேண்டுமா என‌ ஒருவ‌ர் கேட்க‌வும் கூடும். முத‌லாவ‌து இது ஷோபா அதிக‌ம் புழ‌ங்கும் இல‌க்கிய‌வெளி. இர‌ண்டாவ‌து ஷோபா த‌லித்திய‌ச் செய‌ற்பாடுக‌ளில் அதிக‌ம் ஈடுபாடுடைய‌வ‌ராக‌க் காட்டிக்கொள்ப‌வ‌ர். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலாய் ஷோபாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் குறித்த‌ ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் இருந்த‌தோட‌ன்றி, அவ‌ர்க‌ளில் ஒருசில‌ர் மீதும் சுகிர்த‌ராணியால் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒன்றுமேயில்லாத‌ சீமானின் 'த‌ம்பி' ப‌ட‌த்துக்கு வ‌ரிந்து வ‌ரிந்து எழுதுகின்ற‌ ஷோபா இந்த‌ விட‌ய‌த்தில் ம‌வுன‌மாக‌ ஏன் இருந்தார் என்ப‌தும் முக்கிய‌ கேள்வி. அந்த‌ வ‌கையில் ஷோபாவினதும் சுக‌னின‌தும் ம‌வுன‌ம் 'க‌ள்ள‌ம‌வுன‌மே' என்ப‌தை இங்கே ம‌ன‌வ‌ருத்த‌துட‌ன் ப‌திவு செய்கின்றேன். (சுகிர்த‌ராணியின் இக்க‌ட்டுரைக்கான‌ ஒரு விவாத‌ம் என‌து பேஸ்புக்கில் நிக‌ழ்ந்த‌தையும் ஒரு குறிப்பாக‌ இங்கே விட்டுச்செல்கின்றேன்)

(3) கால‌ச்சுவ‌டு/உயிர்மை/கிழ‌க்குப் ப‌திப்ப‌க‌ங்க‌ளை நாடி புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் செல்வ‌து என‌க்கும் வ‌ருத்த‌ம‌ளிக்கும் விட‌ய‌ந்தான். ஆனால் அவ்வாறு போகும் எல்லோரும் எம்மைப் போல‌ இணைய‌க்க‌ட‌லில் எப்போதும் மூழ்கிக்கிட‌ப்ப‌வ‌ரும் அல்ல‌ர். ந‌ட‌ப்ப‌வை அனைத்தையும் அறிந்த‌வ‌ர்க‌ளும் அல்ல‌ர். என‌வே தொட‌ர்ந்து ப‌ல‌ர் இவ்வாறான‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளைத் தேடிச் செல்ல‌த்தான் போகின்றார்க‌ள். அவ்வாறு செல்கின்ற‌வ‌ர்க‌ளைப் பார்த்து வ‌ருத்த‌ங்க‌ளையும், 'பாம்பென்றால் ம‌னித‌னைக் க‌டிக்கும்' என்று 'த‌த்துவ‌ங்க‌ளை'ப் பேசிக்கொண்டிருந்தால் ம‌ட்டும் போதுமா? தொட‌ர்ந்து பாதிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் நாம் ஒரு சொல் ஆத‌ர‌வு அளித்தோ அல்ல‌து குறிப்பிட்ட‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளை அம்பல‌ப்ப‌டுத்தி எழுதுத‌லுமே நியாய‌மாகும். ஷோபா அண்மையில் ப‌ட்டிய‌லிட்ட‌ ந‌ம்பிக்கையான‌ ப‌டைப்பாளிக‌ளில் ஒருவ‌ர் மெலிஞ்சிமுத்த‌ன். அவ‌ர் ஒரு ப‌திப்ப‌க‌த்துட‌னான த‌ன் க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌த்தைக் கூறும்போது நாம் அத‌ற்குத் தார்மீக‌ ஆத‌ரவு கொடுக்க‌வேண்டிய‌து நம் அனைவ‌ரின‌தும் க‌ட‌மைய‌ல்ல‌வா?

'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது' என்கின்ற‌ உதார‌ண‌ம் எவ்வ‌ள‌வு அபத்த‌மான‌து என்ப‌தைப் பாருங்க‌ள். எப்போதும் 'க‌வ‌ன‌த்தை ஈர்க்கும்' விட‌ய‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே குர‌ல் கொடுப்பேன் என்கின்ற‌ ம‌றைமுக‌ குர‌ல் இத‌ற்குள் ஒலிக்கிற‌தா இல்லையா ஷோபா? பாம்பு எப்போதும் பாம்புதானே? ம‌னித‌ன் பாம்பைக் க‌டித்தான் என்றால் எத‌ற்கு இவ்வ‌ள‌வு ப‌த‌ற்ற‌ப்ப‌டுகின்றீர்க‌ள்? ந‌ச்சில்லாத‌ ம‌னித‌ன் க‌டித்து பாம்புக்கு என்ன‌ பாதிப்பா வ‌ர‌ப்போகின்ற‌து என‌ நானொரு புதிய‌ வியாக்கியான‌ம் சொன்னால் அதுவும் ச‌ரியாக‌ வ‌ரும‌ல்ல‌வா? இதைத்தான் ஏற்க‌ன‌வே (1)ல் குறிப்பிட்ட‌மாதிரி த‌ன‌க்கேற்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வ‌ருகின்ற‌போது ம‌ட்டும் த‌ன்னை வெளிப்ப‌டுத்தும் ஷோபாவின் ம‌னோநிலை என்கின்றேன்.

(4) நீங்க‌ள் இந்த‌க் கேள்விக்கு நேர‌டியாக‌ப் ப‌தில் சொல்லாத‌வ‌ரை, நீங்க‌ள் அருந்த‌தி ரோயின் மீது வைக்கும் விம‌ர்ச‌ன‌ம் வேறு உள்நோக்கை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌து என்றே இப்போதும் ச‌ந்தேகிக்கின்றேன்

(5)ஆங்கில‌ம் தெரியாத‌து ஒரு குறையேய‌ல்ல‌. நீங்க‌ள் பிரெஞ்சில் இர‌ண்டுவ‌ரி கேட்டால் என‌க்கும் ப‌தில் கூற‌த் தெரியாதுதான். ஆனால் அந்த‌ மோச‌டிக் க‌ட்டுரை குறித்து நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌ அந்த‌க் கால‌ப்ப‌குதியிலேயே ம‌ன்னிப்புக்கேட்டிருக்க‌வேண்டும். எனெனில் அதை வைத்தே 'பின் ந‌வீன‌த்துவ‌ம் பேசுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே போலிக‌ள்' என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌தை அறிவீர்க‌ள். பின் ந‌வீன‌த்துவம் குறித்து தேட‌லும்,அறிய‌ ஆர்வ‌மும் உடைய‌ ஒருவ‌ருக்கு இத்த‌கைய‌ விட‌ய‌ங்க‌ள் எவ்வாறான‌ ஒரு மன‌ப்ப‌திவைக் கொடுக்குமென்று நினைக்கின்றீர்க‌ள்? எனெனில் அந்த‌ப்ப‌குதியிலேயே நானும் பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிய‌ ஆவ‌ல் கொண்டிருந்தேன் என்ப‌தால் அந்த‌ நிலைமைக‌ள் என‌க்குப் புரியும். இன்று கூட‌ அதேமாதிரியான‌ சில‌ பிம்ப‌ங்க‌ளைச் சும‌ந்துகொண்டு பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து கேலி செய்துகொண்டிருக்கின்ற‌ சில‌ 'புர‌ட்சிவீர‌ர்க‌ளை' நீங்க‌ள் அறியாத‌தும‌ல்ல‌. த‌வ‌றுக‌ள் செய்யாத‌ ம‌னித‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ளா என்ன‌? அறிந்தே எத்த‌னையோ த‌வ‌றுக‌ளைச் செய்து ம‌ன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அறியாம‌ல் செய்த‌ த‌வ‌றுக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌ நாம் ஏன் த‌ய‌ங்க‌வேண்டும்?

(6) ஷோபா உங்க‌ளுக்கு த‌மிழ் ம‌ட்டுமேய‌ல்ல‌ பிரெஞ்சும் ந‌ன்கு தெரியுமென‌ என‌க்குத் தெரியும். என‌வே அதை ஒரு விட‌ய‌மாக‌ச் சொல்ல‌த் தேவையில்லை. சாருவின் 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌ம்' ந‌ல்ல‌ க‌தை என‌ச் சான்றித‌ழும் த‌ருகின்றீர்க‌ள். ந‌ன்று. ஆனால் பெண்க‌ள் ச‌ந்திப்பு ம‌ல‌ரில் (ஆதார‌ம் காட்ட‌ என்னிட‌ம் பிர‌தி வ‌ச‌மில்லை) ப‌ல‌ பெண்க‌ள் இக்க‌தை குறித்து வைத்த‌ எதிர்வினைக‌ளுக்கு, ஒரு தொகுப்பாள‌ன் என்ற‌வ‌கையிலும், க‌தை பிடித்த‌து என்ற‌வ‌கையிலும் எங்கேயாவ‌து விரிவாக‌ எழுதியிருக்கின்றீர்க‌ளா? இன்றுவ‌ரையும் அதுகுறித்து ஒரு இறுகிய‌ ம‌வுன‌த்தைத்தானே ப‌திலாக‌த் த‌ந்திருக்கின்றீர்க‌ள்? சாரு த‌ன் உனன‌த‌ச‌ங்கீத‌த்தை நியாய‌ப்ப‌டுத்த‌ தொட‌ர்ந்து ழார் ப‌த்தாயின் 'விழியின் க‌தை'யையும், ஷேக்ஸ்பிய‌ரின் 'ரோமியோ ஜூலிய‌ட்டை'யும் உதார‌ண‌ம் காட்டிக்கொண்டேயிருப்பார். ஆனால் விழியின் க‌தை தொட‌ங்கும் இட‌த்தைப் பாருங்க‌ள், 'I was nearly sixteen when I met Simone, a girl my own age, at the beach in X.' என்றே ப‌தின்ம‌வ‌ய‌துகார‌ன் சொல்ல‌க் க‌தை தொட‌ங்கும். அதேபோன்று ரோமியோ ஜூலிய‌ட்டில், 13 வ‌ய‌தில் இருந்து 14ற்கு வ‌ய‌துக்கு மாறுகின்ற‌ ஜூலிய‌ட்டுக்கு அவ‌ள் வ‌யதைவிட‌ ஒன்றிர‌ண்டு வ‌ய‌து கூடிய‌ ரோமியோவே காத‌ல‌ன்.

18வ‌ய‌துக்கு மேற்ப‌டாத ஒரு பெண்ணோடு. 18வ‌ய‌தைத்தாண்டிய‌ ஒரு ஆண் உற‌வுகொள்வ‌தென்ப‌து ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம்; ஆனால் அதேச‌ம‌ய‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தின்ம‌வ‌ய‌து பெண்ணோடு அவ‌ள் வ‌ய‌தையொட்டிய‌ ஆண் உற‌வில் இருப்பது குறித்துப் பிர‌ச்சினையில்லை. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளையும், தான் காட்டும் உதார‌ண‌ங்க‌ளுக்குள் இருக்கும் முர‌ண்க‌ளையும் தெரியாதுதான் சாரு தன்னை நியாயப்படுத்துகிறார் என்ப‌து இன்னொரு விவாத‌த்திற்கான‌ புள்ளி. புனைவில் எதை எழுத‌லாம்/எழுத‌க்கூடாது என‌ நாம் ச‌த்த‌ம் போட‌முடியாதுதான். ஆனால் சாருவின் 'நோநோ' சிறுக‌தைத் தொகுப்பையெல்லாம் வாசித்துவிட்டு, 'உன்ன‌த‌ச‌ங்கீத‌ம்' போன்ற‌ த‌ட்டையான‌ க‌தையைச் 'சிற‌ந்த‌ க‌தை' என‌ப் பாராட்டும் உங்க‌ள் வாசிப்பை எப்ப‌டிப் புரிந்துகொள்வ‌தென‌ யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

இர‌ண்டாவ‌து இந்த‌க்க‌தையை முன்வைத்து வைக்க‌ப்ப‌டும் குற்ற‌ச்சாட்டு, இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ளப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உட்ப‌டுத்துவ‌து குறித்து. இப்ப‌டியொரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உண்மையில் ந‌ட‌ந்திருக்கிற‌தா? ச‌ரி புனைவுதானே அங்கே எதையும் எப்ப‌டியும் முன்வைக்க‌லாம் என்ற‌ வாத‌த்தை நீங்க‌ள் முன்வைப்பீர்க‌ளாயின், நீங்க‌ள் எழுதிய‌ ஒரு சிறுக‌தையில் ர‌ஞ்சி(சுவிஸ்)யின் பெய‌ரையும், ஊரையும் குறிப்பிட்டு எழுதிய‌த‌ற்கு அவ‌ர் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌போது அவ‌ரின் பெய‌ரை அக‌ற்றியிருந்தீர்க‌ள். அந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ஏன் நீங்க‌ள் புனைவில் வ‌ரும் க‌தைசொல்லி அதைச் ச‌ரியாக‌வோ பிழையாக‌வோ சொல்லியிருக்க‌லாம், அதை மாற்றுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என‌க்கில்லையென‌ச் சொல்ல‌வில்லை? இந்த‌ இரு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் முன்வைத்து உங்க‌ளை எந்த‌வ‌கையில் புரிந்துகொள்வ‌து?

(7) எஞ்சியிருப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்வுக்காய் ப‌கை ம‌ற‌ப்பும், மீளிண‌க்க‌மும் முக்கிய‌ம் என்ப‌தே என‌தும் நிலைப்பாடு. ஆனால் அதேச‌ம‌ய‌ம் வெற்றிபெற்ற‌வ‌ர்க‌ள் திணிக்கின்ற‌தாய் இந்த‌ விட‌ய‌ங்க‌ள் இருக்கக்கூடாது என்ப‌தோடு, தோற்ற‌வ‌ர்க‌ள் வென்ற‌வ‌ர்க‌ள் மீது ந‌ம்பிக்கை கொள்வ‌த‌ற்கான‌ ந‌க‌ர்வுக‌ளை வென்ற‌வ‌ர்க‌ளே செய்ய‌வேண்டும் என்ப‌தையும் நாம் வ‌ற்புறுத்தியாக‌ வேண்டியிருக்கிற‌து. இந்த‌ வெற்றி எப்ப‌டிப் பெற‌ப்ப‌ட்ட‌து என்ப‌து குறித்த‌ கேள்விக‌ளையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. மேலும் வென்ற‌வ‌ர்க‌ள் எழுதும் ச‌ரித்திர‌மே 'வ‌ர‌லாறாக‌'ப் போய்விடுவ‌து குறித்தும் அவ‌தான‌மாக‌ இருக்க‌வேண்டும்.

இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாக‌ போல‌ந்தில் ந‌ட‌ந்த‌ Katyn ப‌டுகொலைக‌ளைக் குறிப்பிட‌ விரும்புகின்றேன். போல‌ந்தை ஆக்கிர‌மித்திருந்த‌ நாசிப்படைக‌ளை வெற்றிகொண்ட‌ சோவிய‌த் ப‌டைக‌ள் நாசிக‌ளே இதைச் செய்தார்க‌ள் என‌ நெடுங்கால‌மாக‌க் கூறிவ‌ந்திருக்கின்ற‌ன‌ர். அண்மையிலேதான் ‍ இத்த‌னை வ‌ருட‌த்துக்குப் பிற‌கு தாங்க‌ளே ப‌டுகொலைக‌ளைச் செய்த‌தாக‌ ர‌ஷ்ய‌ அர‌சு வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிற‌து. காலம் கடந்த தீர்ப்புகளுக்கு சிலவேளைகளில் அர்த்தமேயிருப்பதில்லை என்பதையும் நாமறிவோம். என‌வே 'ப‌கை ம‌ற‌ப்பு' ம‌ற்றும் 'மீளிண‌க்க‌ம்' என்ப‌வ‌ற்றை முன்வைத்து நாம் வென்ற‌வ‌ர்க‌ளின் ப‌க்க‌ம் முற்றுமுழுதாக‌ச் சாய‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என‌ச் சொல்ல‌ விரும்புகின்றேன். கால‌ம் தாண்டி வெளிவ‌ந்த‌ உண்மைக‌ளுக்கு ஒரு உதார‌ணமாய் இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இருப்ப‌துபோல‌ ஈழ‌ப்போரிலும் புதைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கும் என்ப‌தை ஷோபாவும் நினைவில் கொள்ள‌வேண்டுமென‌ விரும்புகிறேன்.

ப‌கை ம‌ற‌ப்பை முன்னிறுத்தி இல‌ங்கையில் ந‌ட‌க்கும் விட‌ய‌ங்க‌ளுக்கு ஆத‌ரவு கொடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே எப்ப‌டி இல‌ங்கை அர‌சின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இல்லையோ, அப்ப‌டியே இல‌ங்கை அர‌சின் செய‌ற்பாட்டை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌கை ம‌ற‌ப்புக்கும், மீளிண‌க்க‌த்திற்கும் எதிரான‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இல்லை என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வேண்டும்.

((8) இந்த‌க் கேள்வியின் முக்கிய‌மே, சாதிப்பெய‌ர்க‌ளை நீக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி நீக்க‌ம் செய்த‌வ‌ர்க‌ளும‌ல்ல‌, சாதிப்பெய‌ர்க‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி வெறிய‌ர்க‌ளும் அல்ல‌ என்ப‌தே. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளை அறியாது 'பெய‌ர்க‌ளை' ம‌ட்டும் க‌ருத்திற்கொண்டு ந‌ட்பு ச‌க்திக‌ளையும் எதிர்த்திசையில் வைத்து உரையாடுவ‌து எந்த‌ள‌வில் ச‌ரியென்ப‌தை யோசிக்க‌வேண்டும். இன்று ஹ‌ரி த‌ன‌க்குப்பின்னால் வ‌ரும் பெய‌ரை எடுத்துவிட்டார், அவ‌ர் அதை எடுக்காதுவிட்டிருந்தால், ஷோபா எவ்வாறான‌ உதார‌ண‌த்தைச் சொல்லித் த‌ப்பித்துக்கொண்டிருப்ப்பார் என‌வும் யோசிக்கின்றேன்.

(9)'தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.'

இவ்வாறான‌ பிர‌க‌ட‌ன‌ங்க‌ளும், சூளுரைப்புக்க‌ளும் ந‌ல்ல‌தே. எனினும் ஷோபா நீங்க‌ள் இந்தியாவிற்குப் போக‌ விஸா எடுக்கும்போது இவை உங்க‌ளுக்கு உத‌வி புரியாது. நீங்க‌ள் உங்க‌ளை இல‌ங்கைய‌னாக‌வோ அல்ல‌து பிரெஞ்சுக்கார‌னாக‌வோ அடையாள‌ங்காட்டினால்தான் விஸா த‌ருவார்க‌ள் அல்ல‌வா? இவ்வ‌கையான‌ தேர்வுக‌ள் தான் இல‌ங்கையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இருக்கும் என்ப‌தை எப்ப‌டி மறுத‌லிப்பீர்க‌ள்?

போர் துர‌த்திய‌ கால‌ந்தொட்டு ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை ஏன் நான் த‌மிழ‌னாய் பிற‌ந்தேன் என‌க் க‌வ‌லைப்ப‌ட்டிருக்கின்றேன். போருக்குள் அக‌ப்ப‌ட்டிற‌ந்தால் அடுத்த‌ பிற‌ப்பு என்று ஒன்றிருந்தால் த‌மிழ‌னாய் அல்லாது பிற‌க்க‌ வேண்டுமென‌வே பிரார்த்தித்துமிருக்கின்றேன். நான் என‌து அடையாள‌ங்க‌ளைத் துற‌க்க‌ விரும்பிய‌போதும் என் மீது த‌மிழ‌ன் என்ற‌ அடையாள‌ம் ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளிலும் திணிக்க‌ப்ப‌ட்ட‌து.

அவ்வாறு ஒரு அடையாள‌த்தை வைத்து ஒடுக்க‌ப்ப‌டும்போது, அந்த‌ அடையாள‌த்தை வைத்து கிள‌ர்ந்தெழுவ‌து த‌விர்க்க‌முடியாது. வ‌ர‌லாறு முழுதும் அதுவே நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. த‌லித் என்ற‌ அடையாள‌த்தை வைத்து ஒடுக்குத‌ல்க‌ள் நிக‌ழும்போது த‌லித்துக்க‌ள் அத‌ன் பெய‌ரிலே கிள‌ர்ந்தெழுவ‌து எவ்வாறு த‌விர்க்க‌முய‌லாதோ, அவ்வாறே த‌மிழ‌ர் என்ற‌ பெய‌ரில் ஒடுக்க‌ப்ப‌டும்போது த‌ங்க‌ளை ஒரு இணைந்த‌ ச‌க்தியாக‌ ஒடுக்க‌ப்ப‌டுவ‌தற்கு எதிராக‌ப் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்துவ‌தையோ நாம் ஒதுக்கிவிட‌ முடியாது. ந‌ம‌க்கு வ‌ழிகாட்டிக‌ளாக‌ இருந்த‌வ‌ர்க‌ளும், ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளும் த‌வ‌றாக‌ இருந்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ நம் மீது நட‌ந்த‌ ஒடுக்குமுறைக‌ள் இல்லை என்றாகிவிடாது.

உங்க‌ளைப் போல‌வே தேசிய‌த்தின் மீது ந‌ம்பிக்கை என‌க்கில்லையென‌ வெளிப்ப‌டையாக‌க் கூறியிருக்கின்றேன். அவை இறுதியாய் எங்கே போய் முடியுமென்ப‌தையும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் த‌ன் தேசிய‌ அடையாள‌த்தின் பெய‌ரால் ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ ஒரு இன‌ம், த‌ன் தேசிய‌த்தின் பெய‌ரால் ஒருங்கிணைவ‌தை நாம் த‌வ‌றென்றும் கூறிவிட‌முடியாது. இவ்வாறான‌ உங்க‌ள் சூளுரைப்புகளுக்கு அப்பால் இருக்கும் ய‌தார்த்தையும் புரிந்துகொள்ள வேண்டுகின்றேன். உங்க‌ளைப் போல‌வே என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியார், (இப்போது இருந்தால்) தான் வெளிநாடு செல்லும்போது த‌ன்னை இந்திய‌ன் என‌ பாஸ்போட்டில் குறிப்பிட்டிருப்பாரா அல்ல‌து தேச‌த்துரோகியென‌க் குறிப்பிட்டிருப்பாரா என‌வும் யோசித்துப் பார்க்க‌வும்.

(10) சுக‌னைப் ப‌ற்றிக் கேட்ட‌ கேள்விக்கு இப்ப‌டி விர‌லைச் சூப்புகின்ற‌ குழ‌ந்தையாய் அப்பாவித்த‌ன‌மாய் திருப்பிக் கேள்வி கேட்கின்றீர்க‌ளே ஷோபா? இணைய‌த்தில் சும்மா தேடினாலே சுக‌ன் ப‌ற்றிய‌ விமர்சனங்கள் நிறைய‌க் கிடைக்குமே? நீங்க‌ள் இப்ப‌டி 'அப்பாவி'க்குழ‌ந்தையாய்தான் இருப்பீர்க‌ள், ஆனால் எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வ‌ள‌ர்ந்து தொலைந்துவிட்டாலும், இந்த‌விட‌ய‌த்தை அறிய‌வேண்டுமென்ப‌த‌ற்காய்தானே பானுபார‌தியின் பேஸ்புக்கையும் உதார‌ண‌ம் காட்டியிருந்தேன். 'உயிரெழுத்தில்' எழுதுவ‌தால் அவ‌ர்க‌ள் உங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திற்குள்ளே இருப்பார்க‌ள் என‌ ந‌ம்புகின்றேன். ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கும்போது அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள், ஏன் சுக‌னிட‌ம் உங்க‌ளுக்கு இப்படி க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌ம் இருக்கிற‌தென்று. என்னாலான‌ உத‌வி இப்போதைக்கு இவ்வ‌ள‌வுதான்.

(11)'தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு'

நான் அவ‌தானித்த‌வ‌ரை நீங்க‌ள் பேஸ்புக்கில் அக‌ற்றிய‌வ‌ர்க‌ள் எல்லாம் உங்க‌ள் மீத‌ல்ல‌வா விம‌ர்ச‌ன‌ம் வைத்திருந்தார்க‌ள். இறுதியில் நேற்றுக்கூட‌ ஒருவ‌ரை அக‌ற்றியதாக என் ஃபேஸ்புக் மூலம் அறியமுடிந்திருந்தது.

நுண‌லும் த‌ன் வாயால் கெடும் என்று சும்மாவா கூறினார்க‌ள். இப்ப‌டி நீங்க‌ள் எழுதிய‌தையே சற்று விரித்துப் பார்ப்போம். இதையே ஒரு இய‌க்க‌ம் அல்ல‌து த‌லைமை தாங்குப‌வ‌ர், நான் என் இய‌க்க‌த்தில் இருப்ப‌வரைச் சித்திர‌வ‌தை செய்வேன், விரும்பினால் போட்டுக்கூட‌த் த‌ள்ளுவேன், எனெனில் இது என் இய‌க்க‌ம், நீ வாயைப் பொத்திக்கொண்டு போ' என்று சொல்வ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு நேர‌ம் எடுக்கும் என‌ நினைக்கின்றீர்க‌ள். அவ‌ர்க‌ளும் யாரையும் போட்டுத்த‌ள்ளிவிட்டு, 'இந்த‌ நப‌ர் எங்க‌ள் இய‌க்க‌ம் ப‌ற்றி அவ‌தூறு ப‌ர‌ப்புகின்றார்' என‌ச் சொல்லிவிட்டுப் போக‌லாம் அல்ல‌வா? இதுதானே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நிக‌ழ்ந்தும் இருக்கிற‌து அல்ல‌வா ஷோபா? இதைத்தான் ஏற்க‌ன‌வே சொன்னேன், எங்க‌ளிட‌ம் எத்த‌கைய‌ ச‌கிப்புத்த‌ன்மையும், பொறுப்புண‌ர்ச்சியும் இல்லாத‌போது நாம் ச‌ன‌ங்க‌ளுக்காய் பேசுவ‌து என்ப‌து சுத்த‌ ப‌ம்மாத்து என்கின்றேன். எங்க‌ளை ந‌ம்பி ச‌ன‌ம் வ‌ருகின்ற‌து என்றால், அது அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ள் கழுத்தில் தூக்குக் க‌யிற்றைப் போட்ட‌மாதிரியே என‌ இப்போதும் தெளிவாக‌ச் சொல்கின்றேன்.

(13) புலிக‌ள் எப்போதும் ஆயுத‌ப்போராட்ட‌ம் அத‌ன் மூல‌ம் த‌மிழீழ‌ம் என்ற‌வ‌கையில் மட்டுமே சிந்தித்த‌வ‌ர்க‌ள் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். அவ‌ர்க‌ள் சாதி ஒழிப்பு ம‌ட்டுமின்றி பிற‌ எந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கும் ஒருபோதும் வேலைத்திட்ட‌த்தை முன்வைத்த‌தோ ந‌டைமுறைப்ப‌டுத்திய‌தோ இல்லை என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே. இன்குலாப் போன்ற‌ புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே, புலிக‌ள் எழுச்சியுட‌ன் இருந்த‌ கால‌த்திலேயே, 'த‌மிழீழ‌ம் கிடைத்தால்கூட‌ அத‌ன்பிற‌கும் அங்குள்ள‌ ம‌க்க‌ள் இன்னொரு போராட்ட‌த்திற்குத் த‌யாராக‌வேண்டும். அது சாதிக்கு எதிரான போராட்ட‌ம்' என‌ எப்போதோ கூறியுமிருக்கின்றார்கள். ஆக‌ உங்க‌ளைப் போன்ற‌ 'மாற்று' அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமின்றி புலிக‌ளைத் தீவிர‌மாக‌ ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் கூட‌ இதைச் சொல்லியிருக்கின்றார்க‌ள்.

ஆனால் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ஏதோ புலிக‌ள் ம‌ற்ற‌ எல்லாவ‌ற்றையும் செய்துவிட்டு சாதியை ம‌ட்டும் வ‌ள‌ர்க்க‌த் துணைபோகின்றார்க‌ள் என்ற‌ ப‌ர‌ப்புரையைச் செய்துகொண்டிருந்தீர்க‌ள் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். இப்போது ' புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன்' என‌ நீங்க‌ள் கீழிறங்கி வ‌ந்திருப்ப‌தே வ‌ர‌வேற்க‌க்கூடிய‌ விட‌ய‌ந்தான். எனெனில் இப்ப‌டி நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌க் முன்பு கூறி நான் வாசித்த‌ நினைவும் இல்லை.

இது ஒருவ‌கையில் புரிந்துகொள்ள‌க்கூடிய‌ ம‌னோநிலைதான் ஷோபா. எனெனில் புலி அல்லாத‌வ‌ராய் இருப்ப‌வ‌ரைவிட‌ புலிக்குள் இருந்து வெளியே வ‌ந்து, புலியை விம‌ர்சிப்ப‌வ‌ர்க்கு நிறைய‌ பிர‌ச்சினைக‌ள் உண்டு. த‌ன‌து விம‌ர்ச‌ன‌த்தைக் காட்ட‌மாய் க‌ண்மூடித்த‌ன‌மாய் வைத்தாலான‌றி அவ‌ர் த‌ன்னை நிலை நிறுத்திக்கொள்ளுத‌ல் க‌டின‌ம். இது உங்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌ நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. வேறு இய‌க்க‌ங்க‌ளில் இருந்து புலிக‌ளோடு பிற்கால‌த்தில் சேர்ந்த‌வ‌ர்க‌ளும் -சாதார‌ண‌மான‌வ‌ர்க்கு இருக்கும் புலி ஆத‌ர‌வை விட‌- க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி ஆத‌ர‌வைக் காட்டுவார்க‌ள். ஷோபா இதுவே உங்க‌ளுக்கு க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்தென‌ உறுதியென‌ ந‌ம்புகின்றேன், அதாவ‌து க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி எதிர்ப்பு. அதுவேதான், இன்று ஈழ‌த்தில் புலிக‌ள் இல்லாத‌ கால‌த்தில், உங்க‌ள் நிலைப்பாடுக‌ளைப் படுகுழிக்குள் த‌ள்ளிக்கொண்டிருக்கின்ற‌து. முறையான‌ மாற்ற‌ர‌சியல் செய்திருந்தீர்க‌ளாயின் இப்ப‌டித் த‌டுமாற்ற‌ங்க‌ளோ ச‌ரிவுக‌ளோ வ‌ந்திருக்காது.

(14) முழுப்பூச‌ணிக்காயைச் சோற்றில் கூட‌ ம‌றைக்கலாம்; ஆனால் நான் விரிவாக‌ விப‌ரித்து எழுதிய‌ கேள்விக்கு தொட‌ர்பின்றிப் ப‌தில் சொல்கின்றீர்க‌ளே ஷோபா. நேர‌டியாக‌க் கேள்வி கேட்டும் உங்க‌ள் 'விவாத‌த் திற‌மை'யை இங்கும் செருகிவிடுத‌ல் நியாய‌மா?

இன்றைய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையில் நான் நேர‌டியாக‌க் கேட்ட‌து, நாளை புலிக‌ள் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியாகி, அங்கிருக்கும் ம‌க்க‌ளின் ஆத‌ர‌வோடு த‌னித் த‌மிழீழ‌மும் பெற்றால் ஆத‌ரிப்பீர்க‌ளா அல்ல‌து புலிக‌ள் என்ற‌ கார‌ண‌த்திற்காய் எதிர்ப்பீர்க‌ளா என்ப‌து... ஏன் இப்ப‌டிச் சுற்றிவ‌ளைத்துப் ப‌தில் கூறுகின்றீர்க‌ள்.

உங்க‌ளைப் போல‌வே நானும் ' தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன்' என‌வே கூற‌விரும்புகின்றேன். உதார‌ண‌த்திற்கு க‌ன‌டாவிலிருக்கும் கியூபெக் மாகாண‌ம் த‌னி நாட்டுக்கான‌ கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிற‌தென‌ வைப்போம் (ஏற்க‌ன‌வே அருந்த‌ப்பில் த‌னிநாடாகாம‌ல் இருக்கிற‌தென்ப‌தை நீங்க‌ளும் அறிவீர்க‌ளென‌ ந‌ம்புகிறேன்). அங்கிருக்கும் மக்கள் த‌னிநாட்டுக்கு ஆத‌ர‌வ‌ளிக்கின்ற‌ன‌ர். அப்போதும் நான் 'தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்' என‌க் கூறிக்கொண்டிருப்ப‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மாக‌ இருக்கும்? அவ்வாறாக‌ அல்ல‌வா உங்க‌ளின் ப‌திலும் இருக்கிற‌து.

அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் நான் கேள்வி (9)ல் 'தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.' என‌க் கேட்க‌ ஏதோ புத்திசாலித்த‌ன‌மாக‌ப் ப‌தில‌ளிப்ப‌தாய் நினைத்து தொட‌ர்பிலாது ஏதோ ப‌தில‌ளித்துவிட்டு இப்போது 'தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ம்' குறித்துப் பேசுகின்றீர்க‌ளே? இதைத்தான் க‌ட‌ந்த‌ ப‌குதியில் கூறினேன் ஸ்பைட‌ர்மான் மாதிரி தாவித் தாவிப்பாயும் உத்தி.

ச‌ரி உங்க‌ளின் குயுக்தி முறைக‌ளையாவ‌து விடுவோம். நீங்க‌ள் கார்ல் மார்க்ஸையும் ஆசானாக‌ வைத்திருக்கின்றீர்க‌ள் அல்ல‌வா? உங்க‌ள் அள‌வுக்கு மார்க்ஸை லெனின் முறையாக‌க் க‌ற்றிருக்காவிட்டால் கூட‌, லெனின் ஒரு தேசிய‌ இன‌ம் அது தான் விரும்பினால் த‌னிநாடாக‌ப் பிரிந்துபோகின்ற உரிமை அத‌ற்கு உரிய‌து என‌வும் கூறியிருக்கின்றார் அல்லவா? அதைக்கூடவா ஞாபகம் வைக்காமல் இருக்கின்றீர்கள்?

'நான் ஒரு தேசத்துரோகி, நான் எப்போதும் தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்... 'என எப்போதும் எல்லாவற்றுக்கும் ஒன்றையே கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமென்பதைத்தான் மேலேயுள்ள கேள்விகளின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஏற்கனவே தயாரித்த விடைகளை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்த்துக்கொண்டு உங்களை ஒரு பின் நவீனத்துவத்தில் ஆர்வமுள்ள ஒருவராய் எப்படி இனங்காட்ட முயல்கின்றீர்களென வியப்பாகவே என்னால் இப்போதும் பார்க்க முடிகின்றது.

-------------------

இறுதியாய் என‌க்கிருக்கும் ச‌ந்தேக‌ம். நீங்க‌ள் ஊரில்/உல‌க‌த்தில் இருக்கும் ப‌ல‌ருக்கு சுவ‌ரொட்டிக‌ளும் எதிர்வினைக‌ளும் செய்திருக்கும்போது த‌மிழ்ச்சூழ‌லில் பெரும் பாதிப்பை ஏற்ப‌டுத்தும் ஜெய‌மோக‌ன் ப‌ற்றி எதுவுமே எழுத‌வில்லை? உங்க‌ளுக்கும் என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியாரை ம‌ட்டுமின்றி, உங்களில் அதிக‌ம் பாதிப்புச் செலுத்தும் அ.மார்க்ஸையும் அவ‌ர் நேர‌ங்கிடைக்கும்போது அடித்துத் துவைக்கிறாரே? ஏன் ஒரு சொல் அது குறித்து நீங்க‌ள் பேசுவ‌தில்லை? சில‌வேளை இத‌ற்கும் 'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம்' என‌ப் பெரும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருக்கின்றீர்க‌ளோ தெரியாது? இதைவிட‌ நீங்க‌ளும் அ.மார்க்ஸும் திட்டித்தீர்க்கின்ற‌ ய‌முனா ராஜேந்திர‌ன்தான், உங்க‌ள் மார்க்ஸையும் காப்பாற்ற‌ வ‌ர‌வேண்டியிருக்கிற‌து என்ப‌து இன்னொரு முர‌ண்ந‌கை.

கடந்த இரண்டு வாரங்களாய் இந்த விடயங்களோடு ஈடுபட்டிருந்ததால் என்னால் ஃபேஸ்புக்கில் நடக்கும் பிறவற்றை தொடர்ந்து வாசிக்கமுடியவில்லை. இன்று காலை இதை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இதில் கூறப்படும் விடயங்களை ஆழமாகக் கவனிக்காததால் உள்நுழைந்து கருத்துச் சொல்ல இப்போது விருப்பம் இல்லை. ஆனால் இக்கட்டுரையில் உங்களை ஒரு தலித்தாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. அடையாளங்களை மறுதலிப்பது தவறேயல்ல, ஆனால் உயர்சாதி அடையாளங்களை மறுப்பதால் அதன் நிகர் தலித் என்றாகிவிடாது. அது மிகப்பெரும் மோசடி. இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல் நீங்கள் உங்களை ஒரு 'தலித்' எனக் கூறியிருப்பின் எனது கண்டனங்களைப் பதிவு செய்துகொள்கின்றேன்.

-----------------

இத்துட‌ன் ஷோபாச‌க்தியுட‌னான‌ விவாத‌த்திலிருந்தும் இத்தொடரிலிருந்தும் வில‌கிக்கொள்கின்றேன். ஷோபாச‌க்தி த‌ன‌து த‌ள‌த்தில் வ‌ள‌ர்ம‌தியின் (என‌துமான‌) 6 கேள்விக‌ளுக்குப் ப‌தில் அளித்திருக்கின்றார். அந்த‌ப் ப‌தில்க‌ளை இன்னும் ஆற‌ம‌ர‌ இருந்து வாசிக்க‌வில்லை. அவ‌ற்றைப் ப‌ற்றி ஏதேனும் எழுத‌வேண்டியிருப்பின் எப்போதாவ‌து ஒருநாள் எழுத‌ முய‌ற்சிக்கிறேன்.

(இறுதியாய் நிதான‌மாய் உரையாட‌வ‌ந்த‌ ஷோபாவிற்கும் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனெனில் என் அனுப‌வ‌ங்க‌ளின்ப‌டி ப‌ல‌ருக்கு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி சின்ன‌ விம‌ர்ச‌ன‌த்தை வைத்தாலே, தொட‌ர்பேயின்றி எதையெதையோ கோப‌த்தில் பேசிவிட்டு அதுவ‌ரைகால‌ ந‌ட்பையே முறித்துவிட்டுச் சென்றுவிடுப‌வ‌ர்க‌ளாக இருந்திருக்கின்றார்க‌ள். அந்த‌வ‌கையில் என்னைவிட‌ தெளிவாக‌வே இது த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்பின் அடிப்ப‌டையிலான‌ உரையாட‌ல் இல்லை என்ப‌தைக் கூறி தொட‌ர்ந்து உரையாடிய ஷோபாவிற்கு நன்றி. ஷோபா எப்ப‌டி எள்ள‌ல்க‌ளாய் எனக்குப் ப‌தில் அளித்தாரோ அதைவிட‌ எள்ள‌லாக‌வே நானும் ம‌றுமொழிந்திருக்கின்றேன். என‌க்கு எப்ப‌டி சில‌வேளைக‌ளில் ஷோபாவின் எள்ள‌ல் எரிச்ச‌லைத் த‌ந்திருக்குமோ அதையள‌வுக்கு அவ‌ருக்கு என‌து எள்ள‌ல்க‌ள் எரிச்ச‌ல்க‌ளைக் கொடுத்திருக்கும் என்ப‌தை என்னால் உணர‌முடிகின்ற‌து. அத‌ற்கு ம‌ன்னிப்பும், இதுவும் விவாத‌த்தின் ஒருப‌குதியே என‌ப் பெரிதுப‌டுத்தாதுவிட்ட‌ ஷோபாவிற்கு ந‌ன்றியும்.)

http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_19.html

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசு

- ஷோபாசக்தி

மே 17 - 19ம் தேதிகளில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடந்து முடிந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. நாடு கடந்த அரசின் இடைக்கால நிறைவேற்று இயக்குனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது அவர்கள் தமிழீழ அரசுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது.

படித்துக்கொண்டிருந்த நான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போனதால் என் அப்பாவுக்கு என்மீது கோபம் ஏற்பட்டிருந்தது நியாயமானதுதான். தனது மகனைச் சேர்த்து வைத்திருந்த இயக்கத்தின்மீது அவருக்கிருந்த கோபத்தையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் என் அப்பாவின் கோபம் ஒட்டுமொத்தத் தமிழீழப் போராட்ட இயக்கங்களின் மீதான பெருங்கோபமாக விரிவடைந்தது. போதாததற்கு 1985 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரவும் அவருக்குச் சினம் தலைக்கேறியிருக்க வேண்டும். ஏனெனில் போராளிகளின் சட்டதிட்டங்களும் தண்டனை வழங்கும் முறைகளும் மன்னர் காலத்தைச் சேர்ந்ததாயிருந்தன. ஏறுமாறாய் கதைத்தால் மண்டையில் போட்டுவிட்டுப் போய்க்கொண்டேயிருப்பார்கள். முன்னர் ஏதாவது பிரச்சினையென்றால் இலங்கைப் பொலிஸாரை அய்ந்து, பத்து ரூபா கொடுத்துச் சமாளிக்கலாம். போராளிகள் அதற்கெல்லாம் மசியமாட்டார்கள். அவர்களை மசியச் செய்வதென்றால் இலட்சக் கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏழைச் சண்டியரான எனது அப்பா இலட்சங்களிற்கு எங்கே போவார். எனவே அவர் வேறொரு திட்டத்தைக் கையாண்டு இயக்கங்களைச் சரிக்குச் சரியாக எதிர்கொள்வது என முடிவெடுத்தார்.

அப்போது சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. எனது அப்பாவும் தனது இரண்டொரு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்திற்கு பெயர் பூனைப்படை. தலைவர், செயலதிபர், இராணுவத் தளபதி ஆகிய பொறுப்புகளுக்கு அப்பாவும் அவரின் கூட்டாளிகளுமிருந்தாலும் அரசியல் ஆலோசகர் பதவிக்கு பூனைப்படைக்கு யாருமே கிடைக்கவில்லை. அப்பா சற்றும் யோசியாமல் எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் குடியிருந்த தமிழாசிரியரை ஆசிரியரின் அனுமதியில்லாமலேயே பூனைப்படையின் அரசியல் ஆலோசகராக நியமித்துவிட்டார். எங்கள் வீட்டு வேலியில் ஒரு பெரிய அட்டையில் பூனைப்படைக்கான அறிவித்தலும் பதவி வரிசைகளும் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தன. பயந்துபோன தமிழாசிரியர் பதறியடித்து என்னைத் தேடி எங்களின் முகாமுக்கு வந்து முறையிட்டார். தனக்கும் பூனைப்படைக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என ஒரு நீண்ட மறுப்புக் கடிதத்தை எழுதி அதை அவர் தன்னோடு எடுத்து வந்திருந்தார்.

எனக்கு அவமானமாய் போய்விட்டது. ‘பூனைப்படை’ என்ற பெயரே நேரடியாக எங்களது இயக்கத்தைக் கிண்டல் செய்வதாகயிருந்தது. உடனடியாகவே பூனைப்படையைத் தடைசெய்ய வேண்டும் என்று நான் எனது பொறுப்பாளரிடம் சொன்னேன். பொறுப்பாளருக்கோ சிரிப்புத்தாங்க முடியவில்லை. எனினும் எனது நச்சரிப்புத் தாங்காமல் பொறுப்பாளர் பூனைப்படையைத் தடைசெய்ய முடிவெடுத்தார். கடுமையான போதையில் கள்ளுத் தவறணையிலிருந்து அலம்பிக்கொண்டிருந்த பூனைப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டார்கள். தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதலாவதாகத் தடை செய்யப்பட்ட இயக்கம் பூனைப்படைதான். தடை செய்ய எடுத்த நடவடிக்கையில் அப்பாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து நமது பொடியன்கள் அவரை ‘சும்மா’ மிரட்டியிருந்தார்கள். அதை ஒரு பெருத்த அவமானமாக எனது அப்பா இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எனது அப்பா பூனைப்படை அமைத்ததிற்கும் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைத்ததிற்கும் கால, இட, உருப்படி வித்தியாசங்கள் இருக்கின்றனவே அல்லாமல் தத்துவரீதியான வித்தியாசங்கள் எதுவுமில்லை. அப்படியிருந்தால் கூட எனது அப்பாவின் பக்கமே நியாயமிருக்க வாய்ப்புள்ளது.

மே 2 ம் தேதி நடந்த நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக அவர்களது தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கள்ள வாக்குகள் போடப்பட்டதாகவும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் வாக்குப் பெட்டிகள் கடத்தப்பட்டதாகவும் அவர்களே அறிவித்திருக்கிறார்கள். இலண்டனில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இரு வேட்பாளர்கள் முடிவுகள் அறிவிக்கப்பட முன்னரே தேர்தலிலிருந்து விலகினார்கள். இன்னும் எத்தனை எத்தனை தேர்தல் ஊழல்கள் கண்டுபிடிக்கப்படாமலிருக்கின்றன, மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் தேர்தல் ஆணைக் குழுவுக்கே வெளிச்சம். அவர்கள் சுயாதீன விசாரணையொன்றை இம்முறைகேடுகள் மீது நடத்தப் போகிறார்களாம். யாரந்த ஆணைக்குழுவினர்? யார் இவர்களை நியமித்தார்கள்? யார் இவர்களிடம் இந்த அதிகாரங்களைக் கையளித்தார்கள்? இவர்கள் எந்த அதிகாரத்தின் பெயரால் தமிழ் மக்களுக்கு அதிகாரிகளானார்கள் என்பதற்கெலாம் விடையெதுவும் கிடையாது. இந்த ஆணைக் குழுவினரே ஊழல்கள் செய்தால் அதை யார் விசாரிப்பது?

தேர்தல் நடத்தப்பட்ட முறையே நாடு கடந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் சனநாயகப் பண்பின்மையையும் தில்லுமுல்லுகளையும் காட்டி நிற்கிறது. இவர்களது முப்பது வருட அரசியலே இதே தில்லுமுல்லுகள்தான். இம்முறை தில்லுமுல்லுகள் அவர்களுக்குள்ளேயே நடந்திருப்பதால் அவை வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

இந்தத் தேர்தல் முறைகேடுகளின் லிஸ்ட் அளவுக்கு கூட நீளமானதல்ல இந்த நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் வாக்களித்தவர்களின் லிஸ்ட். எடுத்துக்காட்டாக இருபதாயிரம் ஈழத்தமிழர்கள் வாழும் பாரிஸ் நகரத்தில் இரு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் வாக்களித்தவர்களின் தொகை வெறும் எண்ணூறு மட்டுமே. தேர்நதெடுக்கப்பட்ட முதலாவது உறுப்பினரான மகிந்தனுக்கு 547 வாக்குகளும் இரண்டாவது உறுப்பினரான சிவகுரு பாலசந்திரனுக்கு 165 வாக்குகளும் கிடைக்க அவர்கள் வெற்றிக்கனியைத் தட்டிப் பறித்தார்கள். 165 வாக்கோடு தமிழீழ அரசுக்கு ஒரு பிரதிநிதி. நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் பிரான்ஸில் 10 வீதத்துக்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளார்கள். இந்தப் பத்து வீதத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த கள்ள வாக்குகளும் அடக்கம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானமா? அல்லது நாடு கடந்த அரசா என்று புலிகளின் அடிப்பொடிகளுக்குள் நடந்த வெட்டுக் குத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாறி மாறித் தமக்குள்ளேயே துரோகிப் பட்டங்களை அவர்கள் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸில் க. வாசுதேவன் என்றொரு கவிஞர் இருக்கிறார். பெரிய கவிஞர். கவிதைக்காக கனடா தமிழ்த் தோட்டத்தின் விருதெல்லாம் பெற்றவர். விடுதலைப் புலிகளின் புகழ்பாடிக் கவிஞரான அவர் சில வருடங்களுக்கு முன்பு இன்னொரு புலிகள் புகழ்பாடிக் கவிஞரான கி. பி. அரவிந்தன் நடத்திய ‘அப்பால் தமிழ்’ என்ற இணையத்தில் ‘துரோகத்தின் பரிசு’ என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். துரோகிகளைக் கொல்ல வேண்டும் என்பது அவரது கட்டுரையின் சாரம். கவிஞரின் கருத்தை நடைமுறைப்படுத்தினால் இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் முழுப் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கொல்லப்பட வேண்டும். ஏனெனில் புலிகளினது அணிகள் ஒருவர்மீது மற்றவர் வைக்கும் துரோகிக் குற்றச்சாட்டிலிருந்து எவருமே தப்பிக்கவிலை. நெடியவனை ஏற்றுக்கொள்பவர்கள் உருத்திரகுமாரன் கும்பலுக்கு துரோகிகள். உருத்திரகுமாரனை ஏற்றுக்கொண்டவர்கள் நெடியவன் கும்பலுக்குத் துரோகிகள். குமரன் பத்மநாதன் துரோகி! ராம் துரோகி! கி.பி. அரவிந்தன் துரோகி! நெடியவன் துரோகி! சிவாஜிலிங்கம் துரோகி! தொல் திருமாவளவன் துரோகி!! எல்லாவிதமான அரசியல் முரண்களையும் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டிக் கொன்றொழிப்பதின் மூலம் தீர்த்து வைத்த புலிகளின் அரசியல் இன்று அவர்களையே பழிவாங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் குத்துவெட்டுக்குள்தான் நாடு கடந்த தமிழீழ அரசு இவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சரி, நாடு கடந்த தமிழீழ அரசின் வேலைத் திட்டம் என்ன என்றால் எவரிடமும் திட்டவட்டமான பதிலில்லை. உருத்திரகுமாரனோ இராசதந்திரரீதியில் செயற்படுவது என்கிறார். அதுவென்ன இராசதந்திரம் எனக் கேட்டால் அதற்குப் பதில் கிடையாது. இவர்களின் இராசதந்திரம் முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்த பேரழிவின் இரத்த வெடில் மறையும் முன்பே மறுபடியும் வெட்கமில்லாமல் இராசதந்திரம் என்று பிதற்றத்தொடங்கியிருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

புலிகள் அறிவித்த அதே தமிழீழப் பிரதேசம்தானா இவர்கள் இப்போது முன் வைக்கும் தமிழீழம்? அதை அடைவதற்கான உங்களது வேலைத்திட்டம் என்ன? அப்படியானால் அந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் நிலையென்ன? உங்கள் அரசின் அரசியல் பண்பென்ன? திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த உங்கள் நிலைப்பாடென்ன? தமிழ் சமூகத்தின் முதன்மை முரண்பாடான சாதியம் குறித்த உங்கள் நிலைப்பாடென்ன? என்று ஆயிரம் கேள்விகளுள்ளன. இவை குறித்தெல்லாம் நாடு கடந்த அரசாங்கத்தினர் பேசுவதில்லை. சன்னி பிடித்தவர்கள் மாதிரி இராசதந்திர நகர்வு என்று ஆள்மாறி ஆள்மாறிப் பிதற்றிக்கொண்டுள்ளார்கள்.

நடந்துகொண்டிருப்பது ஊடும் பாவுமாக ஆயிரம் பிரச்சினைப்பாடுகளைக்கொண்ட இனமுரண் அரசியல். பிரச்சினையில் உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளும் ஏதோவொருவிதத்தில் தலையைப் போட்டுள்ளன. அந்நிய மூலதனமும் பன்னாட்டு நிறுவனங்களும் இலங்கை அரசின் இயங்குதிசையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பாத்திரங்களை வகிக்கின்றன. சர்வதேச அரசுகளிடம் பெருமளவு ஆதரவைப் பெற்ற சனாதிபதியாக மகிந்த ராஜபக்ச மிருக பலத்துடன் இருக்கிறார். இதற்குள் உருத்திரகுமாரனும் ஈழநாடு பாலச்சந்திரனும் என்ன இராசதந்திரத்தை நிகழ்த்தப் போகிறார்கள்? ராஜபக்சவை சவால் செய்ய இவர்களிடம் என்ன அரசியல் வேலைத்திட்டம் உள்ளது? அமெரிக்கா அதிபருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் ‘பெட்டிசம்’ அனுப்புவதெல்லாம் ஒரு இராசதந்திரமா என்ன? இவர்களின் தந்திரத்தைப் பரிசோதிப்பதற்கு இது சீட்டு விளையாட்டல்ல. இது ஒரு இனத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் தனது கால்களைப் புகலிடத்தில் ஆழ ஊன்றிவிட்டது. சரிபாதித் தொகையினர் புலம் பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்க மறுபாதித் தொகையினர் குடியுரிமை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஈழத்து அரசியல்மீது இணையத்தில் செய்திகளைப் படிப்பது என்பதைத் தாண்டி வேறெந்த ஈடுபாடும் கிடையாது. அரசியல் ஈடுபாடுள்ளவர்களில் மிகப் பெரும்பகுதியினர் தமிழ்த் தேசிய உணர்வால் உந்தப்பட்டிருப்பவர்களே தவிர இவர்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட அணிகள் கிடையாது. இவர்கள் நெஞ்சார மனமுருகி வடிக்கும் கண்ணீருக்கு தார்மீகப் பெறுமதி மட்டுமேயுள்ளது. அரசியல்ரீதியாக இவர்கள் திறனற்றவர்கள். இவர்கள் தமது குற்ற உணர்ச்சியைத் தணிக்க எடுக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகள் ஈழத்தில் பாரம் சுமக்கும் மக்களை மேலும் அழுந்தவே வழிவகுப்பவை.

நாடு கடந்த அரசால் தமிழ் மக்களுக்கு எதுவும் விடியப்போவதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. எதையாவது செய்ய வேண்டுமென்ற ஆவலாதியில் மிகச் சிறுபகுதி மக்கள் நாடு கடந்த அரசுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் நாடு கடந்த அரசு என்ற நாடகத்தை அரங்கேற்றுபவர்களுக்குத் திட்டவட்டமான நலன்களுள்ளன. அவை பொருளியல் மற்றும் சமூக மதிப்பு சார்ந்த நலன்கள். இவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கப்போகிறவர்கள் ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் மட்டுமே.

“புலிகளுக்கு எதிரான முதற்கட்டப் போர் முள்ளிவாய்க்காலில் முடிந்துவிட்டாலும் அடுத்தகட்டப் போரை புலம் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது” என்கிறார் கோத்தபய ராஜபக்ச. இங்கே வெறும் விளையாட்டுக்கு நடத்தப்படும் நாடு கடந்த அரசு நாடகத்தை ஒரு காரணமாக வைத்து மேலும் ஈழத்தில் அடக்குமுறைச் சட்டங்களை வலுப்படுத்தத் திட்டமிடுகிறது இலங்கை அரசு. வெளிநாட்டிலுள்ள கொஞ்சப் பேரின் கௌரவ மயிருக்காக சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான போராளிகள் காலம் முழுதும் சிறையிலேயே கிடக்க வேண்டியிருக்கும்.

போராட்டங்களை நடத்தினால் அரசு அடக்குமுறையை அதிகரிப்பது இயல்புதானே, அதற்காக போராட்டத்தை விட்டுவிட முடியுமா என ஒருவர் கேட்கலாம். இல்லை விட்டுவிட முடியாது. கண்டிப்பாக போராட வேண்டும். அதற்கான விளைவைப் போராடுபவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்க நாடகம் ஒரு போராட்டம் கிடையாது. இது வெறும் ஏமாற்று வித்தை. இதன் விளைவுகள் இந்த நாடு கடந்த அரசுக்காரர்களை நேரடியாகப் பாதிக்கப் போவதுமில்லை. விளைவுகளை ஈழத்தில் வாழும் மக்களே சுமக்க நேரிடும்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் நோகாத விருப்புகளை ஈழத்திலே மக்கள் செத்துச் சுமக்க முடியாது. உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்காலத்து ஈழத் தமிழர்களின் அரசியல் விருப்பும் இயங்குதிசையும் அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவர்களுக்கு உறுதுணை செய்வது மட்டுமே உங்களது வேலை. நீங்கள் உறுதுணை நிற்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களிற்கு உபத்திரமாய் இராதீர்கள். உங்களுக்கு போராட்டம் என்பது இடது கையில் கொக்கோ கோலாவுடனும் வலதுகையில் சாண்ட்விச்சுடனுமான ஒரு மாலை நேர ஒன்றுகூடல். நந்திக் கடலின் கரைமுழுதும் மார்பில் ஆமி சுட முதுகில் புலி சுட போராட்டத்தை வாழ்ந்து பார்த்தவர்களிற்கும் தங்களது மழலைகளை இராணுவத்திடமும் புலிகளிடமும் பறிகொடுத்த தாய்மார்களுக்கும் நீங்கள் அரசியல் பிரதிநிதிகளல்ல, வழிகாட்டிகளுமல்ல.

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வின் சிறப்புப் பிரதிநிதி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி க்ளார்க் என்பதிலிருந்தே நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். புலிகளின் அத்தனை பாஸிசச் செயற்பாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்திவந்த பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் நாடு கடந்த அரசுக்கான மதியுரைஞர்கள். கடந்த முப்பது வருட அழிவுகளிலிருந்து நமது நாடு கடந்த அரசுக்காரர்கள் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பிறகும், பிறகும் அவர்கள் வல்லாதிக்க நாடுகளின் தொங்குசதைகளாகவே கிடக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த அழிவுகளிலிருந்து நமது மக்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டேயாக வேண்டும். புலிகள் பாணியிலான வலதுசாரி அரசியலோ மாற்றுத் தரப்புகளைச் செவிமடுக்காத அரசியலோ நமது மக்களுக்கு மேலும் மேலும் அழிவையே உண்டுபண்ணும்.

பெயருக்காவது ஒரு அரசு, ஒரு மாநிலம், ஒரு முனிஸபலிட்டி எங்கேயாவது இதுவரை நாடு கடந்த அரசுக்கு நல்லெண்ண சமிக்ஞை காட்டியுள்ளதா? நாடு கடந்த அரசாங்கம் அங்கீகாரத்தைப் பெறும் என்று எந்த நம்பிக்கையில் மக்களின் பணத்தில் இந்தக் கூத்துகள் அரங்கேறுகின்றன? ‘எங்களுக்காகத் தலைவர் சிந்திக்கிறார்’ என்று மூட நம்பிக்கையில் அழுந்திய காலங்கள் போய் எங்களுக்காக உருத்திரகுமாரன் அண்ணா சிந்திக்கிறார் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையுடன் கேட்டுக் கேள்வியில்லாமல் அடங்குவதாக இனிக் காலம் அமையக் கூடாது.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டவுடன் சர்வதேசமெங்கும் சிதறிக்கிடந்த புலிகளின் பில்லியன் கணக்கான சொத்துக்களைக் கைப்பற்றவும் புலிகள் இருக்கும்வரை அவர்களின் பெயரால் மக்களிடையே அனுபவித்துவந்த சமூக மதிப்பைக் காப்பாற்றவும் புலிகள் இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு அரசியல் சக்திகள் தலையெடுக்காமல் செய்யவும் நடத்தப்படும் நாடகமே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு. எனது அப்பா ஆரம்பித்த பூனைப்படை கிறுக்குத்தனமான ஒரு செயலாயிருக்கலாம், ஆனால் உருத்திரகுமாரன் தலைமை தாங்கும் நாடு கடந்த தமிழீழ அரசு போல அது கபடச் செயலல்ல, கயமை வழியல்ல.

அடுத்தமுறை அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதற்காக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=648

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து யாழில் புத்தகங்களை தேடி வாசிக்கும் நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்பதால், அவரின் எழுத்துகளை வாசித்த பின்பே கருத்தை தெரிவித்தீர்கள் என்று நினைத்தேன்.

பொதுவாக ஒவ்வொரு மனிதரின் அந்தரங்கள் இப்படி கேள்விகள் மூலம் வெளிப்படுமாயின், வக்கிர மனம் அன்ற ஒருவரை தேடிக் கண்டு பிடிப்பது பகலில் வெள்ளி பார்க்கும் செயலுக்கு சமன் என நினைக்கின்றேன்

கிருபன் எழுதியது "லைலா" என்ற சிறுகதை திரியில் வந்த கருத்துக்கு இந்த திரியில் பதில் எழுதினால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? :D

இடம் மாற்றி எழுதியது என் பிழை தான். மன்னிக்கவும்.

எல்லோருக்கும் அந்தரங்கம் ஊத்தை தான். நானும் சுத்தமான சூசைப் பிள்ளை இல்லை. ஆனால் அதற்காக குளிக்காமல் ஊத்தையிலேயே கிடக்கும் ஒருவனுமில்லை. ஆனால் எல்லாரும் மற்றவர்களுக்கு "முற்போக்கு" வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டா தமது ஊத்தைகளை மறைக்கிறார்கள்? புலிகளை "கலாச்சார அடிப்படை வாதிகள்" என்று சொல்லும் தகுதி சோ.ச வுக்கு இருக்க வேண்டுமெனில் தானும் புலிகளை அளக்கும் அதே அளவு கோலினால் தன்னையும் அளந்து கொள்ள வேணும் என்பதே எனது எதிர் பார்ப்பு. இவரைக் கலாச்சாரப் புரட்சி வாதி என்பதா அல்லது புரட்டிப் போடுபவர் என்பதா? அது தான் என் யோசிப்பு. சோ.ச வின் எழுத்து எனக்கு ஒரு பொருட்டே இல்லை,ஏனெனில் புனைகதைகளில் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லை இப்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு வாசிக்காமல் எழுதிகிறீர்கள்:

1. தமிழச்சி பிரச்சினையும் அதில் சோ.ச பற்றி வெளிவந்த அந்தரங்கத் தகவல்களுமே நான் சொன்ன வக்கிரம். அவரது எழுத்தை நான் வாசித்ததில்லை-பிறகெப்படி அவரது எழுத்து பாலியல் வக்கிரம் என நான் சொல்ல இயலும்? நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.

2. "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்று கிருபன் சொன்னார். "அப்ப யாழ் களத்தினர் பிச்சைக்காரர்களா என்று"இன்னொருவர் கேட்டார். அதற்கு "இல்லை அவர்கள் பணக்காரர்கள், சில விஷயங்களில் அவர்கள் வறியவர்கள்" என்று கிருபன் சொன்னார். இது இதே திரியில வந்து மட்டூஸ் நீங்கள் வெட்டினதா அல்லது சோ.ச பற்றி சமாந்தரமாக நடக்கும் இன்னொரு திரியில் வந்ததா எனக்கு நினைவில்லை. ஆனால் கிருபன் மற்றவர்களை வறியவர்கள் என நினைக்கிறார் என்பது மட்டும் வெளிபட்டது. ஏன் அவரிடம் அவரது தகுதி பற்றிக் கேட்கவில்லை அப்போது? நீங்கள் தான் விளங்கப் படுத்த வேணும்.

நீங்கள் எவ்வளவுதான் பந்தி பந்தியாக எழுதினாலும், மட்டூஸ் எழுதிய கருத்துக்கு எதிராக கருத்து வைத்தால் அது வெட்டப்படும், அக்கருத்துக்கு சார்பாக கருத்து வைத்தவரின் கருத்துக்கு எதிராக கருத்து வைத்தாலும், வெட்டபடும், அதுதான் மட்டூஸாக இருந்து கருத்து எழுதுவதின் லாபம், பந்தி பந்தியாக எழுதுறதுதான் கஸ்டம், வெட்டுறது வெரி ஈஸி. நீங்கள்தான் உங்களுக்கு பிடிக்காத கருத்துக்கு எதிராக சிவப்பு புள்ளிகளை வழங்குவதை தடை செய்து இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்கு அவர் எச்சரிக்கை சிவப்பு புள்ளி வழங்குவார். இதுதான் உலகம் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எவ்வளவுதான் பந்தி பந்தியாக எழுதினாலும், மட்டூஸ் எழுதிய கருத்துக்கு எதிராக கருத்து வைத்தால் அது வெட்டப்படும், அக்கருத்துக்கு சார்பாக கருத்து வைத்தவரின் கருத்துக்கு எதிராக கருத்து வைத்தாலும், வெட்டபடும், அதுதான் மட்டூஸாக இருந்து கருத்து எழுதுவதின் லாபம், பந்தி பந்தியாக எழுதுறதுதான் கஸ்டம், வெட்டுறது வெரி ஈஸி. நீங்கள்தான் உங்களுக்கு பிடிக்காத கருத்துக்கு எதிராக சிவப்பு புள்ளிகளை வழங்குவதை தடை செய்து இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்கு அவர் எச்சரிக்கை சிவப்பு புள்ளி வழங்குவார். இதுதான் உலகம் :lol: :lol: :lol:

நிழலி கூடுதலாக எழுதவேண்டும் என்று விரும்புபவனின் நானும் ஒருவன்.

அந்தவகையில் இந்த கருத்து சரியாகப்படவில்லை.

மட்டுனராக இருந்து கொண்டும் அவர் எழுதவேண்டும்.

மட்டுனர் என்பதைத்தாண்டி அவரது கருத்துக்கள் விமர்சிக்கப்படணும் என்பது எனது வேண்டுகோள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எப்படி உங்களால் இப்படி எழுதமுடிகின்றது.இது முன்னர் ஒரு பேப்பரிலும் பார்த்ததுதான்.

புலிகள் எங்களுக்கு விட்டுசென்றது இதுதான்.தமக்கு எதிரானவர்களை துகிலுரிவது.அதனால் தானோ என்னவோ உலகம் அவர்களை துகிலுரிந்தது.

ங்கரி செய்யவும் அரசியல் இருக்கு டக்கிலஸ் செய்யவும் அரசியல் இருக்கு அதை மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும் அதை எப்ப நீங்கள் எல்லோரும் உணர்கின்றீர்களோ அன்றுதான் தமிழனுக்கு முதல் சுதந்திரம்.

அரசியல் என்றால் என்ன என்ற வரவிலக்கணம் தெரியாது இருந்தால்?

டக்ளஸ் சங்கரி இல்லை............. இந்திய சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து பாலியல் துஸ்பிரயோகங்களையும் களவையும் மட்டுமே செய்துவிட்டு இப்போது கொழும்பில் வசிக்கும் நாதாரிகள் செய்யவும் அரசியல் இருக்கும்.

ஆனால் மக்கள் வசிக்க கூடியதாக நாடுதன் இல்லை. நாதாரிகள் வசிக்கவும் வாழவும் மட்டுமாகவே தற்போது நாடு உள்ளது.

உண்மைதான்............. டக்ளசு செய்யவும் சங்கரி செய்யவும் அரசியல் இருக்கு.

இது புலிகள் தமது உயிர்களை கொடையாக்கி வாழந்துகொண்டிருந்த காலத்தில் ஈழ தமிழனுக்கு விளங்கவில்லை. இனி போக போக விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி கூடுதலாக எழுதவேண்டும் என்று விரும்புபவனின் நானும் ஒருவன்.

அந்தவகையில் இந்த கருத்து சரியாகப்படவில்லை.

மட்டுனராக இருந்து கொண்டும் அவர் எழுதவேண்டும்.

மட்டுனர் என்பதைத்தாண்டி அவரது கருத்துக்கள் விமர்சிக்கப்படணும் என்பது எனது வேண்டுகோள்.

நன்றி.

மட்டூஸாக இருந்து கொண்டு, மதனுடனும்,இளைஞனுடனும்,வலைஞனுடனும்,தமிழினியுடனும்,ஏன்மோகன் அண்ணாவுடனும்கூட நாம் கருத்தாடல் செய்து இருக்கிறோம்,தமக்கு எதிரான கருத்துகளை அவர்கள் ஒரு போதுமே வெட்டியது இல்லை. தேள்வை ஏற்பட்டால் வேறு ஒரு மட்டுறுத்தினர்தான் மட்டுறுத்தி இருப்பார், சொந்த பெயரில் மட்டுறுதாமல் கருத்தாடல் செய்ய முடியாதவர்கள், வேறு புனை பெயர்களில் கருத்தாடல் செய்யமுன்வரலாமே.

Link to comment
Share on other sites

மட்டூஸாக இருந்து கொண்டு, மதனுடனும்,இளைஞனுடனும்,வலைஞனுடனும்,தமிழினியுடனும்,ஏன்மோகன் அண்ணாவுடனும்கூட நாம் கருத்தாடல் செய்து இருக்கிறோம்,தமக்கு எதிரான கருத்துகளை அவர்கள் ஒரு போதுமே வெட்டியது இல்லை. தேள்வை ஏற்பட்டால் வேறு ஒரு மட்டுறுத்தினர்தான் மட்டுறுத்தி இருப்பார், சொந்த பெயரில் மட்டுறுதாமல் கருத்தாடல் செய்ய முடியாதவர்கள், வேறு புனை பெயர்களில் கருத்தாடல் செய்யமுன்வரலாமே.

எழுதப்படும் கருத்துகளுக்கு தகுந்த பதில் கருத்து எழுத முடியாத கருத்து பஞ்சத்தில், எழுதியவர்களின் மனைவியை / குடும்ப உறவுகளை மற்றவர்களுடன், (உங்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால்) "புணர" வைக்க சொல்கின்ற அருவருப்பு கருத்துகளை நீக்குவதற்கு எல்லா மட்டுக்களுக்கும் மாற்று கருத்து கிடையாது

நான் நிழலி என்ற பெயருடன் தான் தொடர்ந்து எழுதுவேன்.. இதில் உங்களைப் போன்ற குடும்ப உறவுகளை இழுத்து கேவலமாக எழுத முனையும் உறுப்பினர்களுக்காக வேறு பெயர்களில் வர வேண்டிய தேவை எனக்கு இல்லை

மற்றும், உங்களுக்கு மட்டுறுத்தப்பட்ட ஒரு விடயம் அல்லது அவர்களின் நடவடிக்கையுடன் உடன்பாடு இல்லை எனில் நேரடியாக மோகனுக்கு தனி மடலில் தெரிவிக்கலாம்..அல்லது உறவோசையில் சுட்டிக் காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிழலி என்ற பெயருடன் தான் தொடர்ந்து எழுதுவேன்..

இதில் உங்களைப் போன்ற குடும்ப உறவுகளை இழுத்து கேவலமாக எழுத முனையும் உறுப்பினர்களுக்காக வேறு பெயர்களில் வர வேண்டிய தேவை எனக்கு இல்லை

அது.....................

இதுவும் எனக்கு பிடித்துள்ளது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதப்படும் கருத்துகளுக்கு தகுந்த பதில் கருத்து எழுத முடியாத கருத்து பஞ்சத்தில், எழுதியவர்களின் மனைவியை / குடும்ப உறவுகளை மற்றவர்களுடன், (உங்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால்) "புணர" வைக்க சொல்கின்ற அருவருப்பு கருத்துகளை நீக்குவதற்கு எல்லா மட்டுக்களுக்கும் மாற்று கருத்து கிடையாது

நான் நிழலி என்ற பெயருடன் தான் தொடர்ந்து எழுதுவேன்.. இதில் உங்களைப் போன்ற குடும்ப உறவுகளை இழுத்து கேவலமாக எழுத முனையும் உறுப்பினர்களுக்காக வேறு பெயர்களில் வர வேண்டிய தேவை எனக்கு இல்லை

மற்றும், உங்களுக்கு மட்டுறுத்தப்பட்ட ஒரு விடயம் அல்லது அவர்களின் நடவடிக்கையுடன் உடன்பாடு இல்லை எனில் நேரடியாக மோகனுக்கு தனி மடலில் தெரிவிக்கலாம்..அல்லது உறவோசையில் சுட்டிக் காட்டலாம்.

அடுத்தவன் மனவியை தான் புணர்ந்ததாக சோபாசக்தி வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார், அது பற்றி கதைத்தபோதே புணர்தல் பற்றி கதைக்க நேர்ந்தது, ஏன் புணர்தல் என்ற தமிழ் சொல் கெட்ட வார்தையா, நல்ல தமிழ் சொல்லுதானே, நீங்கள் எந்த பெயரில் வேண்டும் என்றாலும் கருத்தை எழுதுங்கள் கருத்தாடலில் கருத்து வறுமை ஏற்படும் போது, எதிர்கருத்து வைப்பவர்களின் கருத்தை, நீங்களே வெட்டி, நீங்கள் வைத்த கருத்துக்கு வலுச்சேர்கவேண்டாம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.