சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழ் சிறி

அவசர உதவி...... SOS

Recommended Posts

அவசர உதவி....

மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது.

computer.gifஎனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது.internet.gif

இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. :lol:

வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை.

இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். :)

எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) :lol:

உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

சிறி மைக்ரோசொப்ட் இன் இந்த இணைப்பில் இலவசமாக தரவிறக்கலாம். இதைப்பாவித்த நண்பர்கள் நல்லது எனச் சொன்னார்கள்.

http://www.microsoft.com/security_essentials/support.aspx?mkt=en-us

http://www.avg.com/gb-en/buyav-ppc_1?ctype=ppc_uk_gs_0002_buyav_1&wm_crID=5035958&wm_lpID=28518107&wm_ctID=383&wm_kwID=17360839&wm_mtID=3&wm_content=0&wm_g_crID=6597716679&wm_g_kw=a+v+g&wm_g_pcmt=&wm_g_cnt=0&wm_kw=a+v+g&wm_sd=1

AVG இதுவும் இலவசமானது.

Share this post


Link to post
Share on other sites

இலவச வைரஸ் மென்பொருட்களில் தப்பில்லி கூறிய மைக்ரோசொப்ட் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கொஞ்சம் பறவாய் இல்லை சிறி அண்ண.

இருப்பினும் இலவசமான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கொஞ்ச நாளைக்கு உங்கள் கணணியை பாதுகாக்கலாம், ஆனால் கால வரைத் திகதி அண்மிக்கும் போது அவர்களே வைரஸ் அனுப்பிவார்களாம் என்று முன்பு ஒருதரம் கேள்விப் பட்டேன். அப்போது தான் இலவசமாக தரவிறக்கம் பணியத்தை விலை கொடுத்து வாங்குவார்கள் என்ற அடிப்படையில்... முன்பு எனக்கும் எனக்கும் அப்படியான சம்பவங்கள் நடந்தது.

காசைப் பார்க்காமல் McAfee வைரஸ் மென்பொருள் இணையத்தில் வாங்கினீர்கள் என்றால் 3 வெவ்வேறு கணனிகளுக்கு நீங்கள் அந்த மென்பொருளை பாவிக்கலாம். (வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கணனிகள் இருந்தாலோ அல்லது நண்பர்கள் உறவினர்களின் கணனிக்கும் கொடுத்து உதவலாம். அதே போல் அடுத்த தரம் அவர்களை கொண்டு வாங்கி நீங்களும் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளலாம் :wub: )

இணையத்தில் உங்கள் கணனிக்குப் பாது காப்பில்லாத தளத்திற்கு நீங்கள் போகும் போது சிவப்பு நிறத்தில் ஒரு அறிவுறுத்தல் வரும், போன போக்கில குதிக்கால் பிடரியில் அடிபட நீங்க வருவதற்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ^_^

Share this post


Link to post
Share on other sites

McAfee anti-virus மென்பொருளை விட மைக்கிராசொவ்ட் இலவச மென்பொருள் பொதுவான றோஜன் வைரசுகளுக்கு எதிராக நன்கு செயற்படுகிறது. நான் இரண்டையும் நிறுவி வைச்சிருக்கிறன். முதலில் McAfee வைச்சிருந்தனான். அது வைச்சிருந்த வேறு சிலரின் கணணிகள் மோசமாக வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானதை அடுத்து மைக்கிராசாவ்ட் இலவச பாதுகாப்பை கொண்டு வந்தேன். அது McAfee கண்டுபிடிக்கத் தவறிய சுமார் 6 மென்பொருட்களை கண்டுபிடித்து அகற்ற உதவியது.

மைக்கிராசாவ்ட் போட்டு வையுங்கோ. பொதுவான பாதுகாப்புக்குச் சிறந்தது. விசேட பாதுகாப்பிற்கு வங்கிகள் பயன்படுத்தச் சொல்லும் அன்ரி - வைரஸ்களை பயன்படுத்துவது சிறந்தது.

Share this post


Link to post
Share on other sites

சுறா படம் உங்கள் கணனியில் இருக்குமென்றால் அதை ஒரு முறை போட்டு விடவும். வைரஸ் தானாகவே ஓடி விடும்.

அது வேலை செய்யவில்லை என்றால் இந்த இலவச மென்பொருளை ஒரு முறை முழுதாக ஓடி பாக்கவும். கொஞ்சம் நேரம் எடுத்தாலும், பிரச்சினைக்குரிய வைரஸை கண்டு பிடிக்க, அழிக்க உதவும்.

http://www.malwarebytes.org/ (You only need the free version)

Share this post


Link to post
Share on other sites

டாக்ஸ் மேனேஜரில் உள்ள exe பைல்களை இஙக எடுத்து போடுங்கள் தோழர் தமிழ்சிறி.. :)

Share this post


Link to post
Share on other sites

McAfee anti-virus மென்பொருளை விட மைக்கிராசொவ்ட் இலவச மென்பொருள் பொதுவான றோஜன் வைரசுகளுக்கு எதிராக நன்கு செயற்படுகிறது. நான் இரண்டையும் நிறுவி வைச்சிருக்கிறன். முதலில் McAfee வைச்சிருந்தனான். அது வைச்சிருந்த வேறு சிலரின் கணணிகள் மோசமாக வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானதை அடுத்து மைக்கிராசாவ்ட் இலவச பாதுகாப்பை கொண்டு வந்தேன். அது McAfee கண்டுபிடிக்கத் தவறிய சுமார் 6 மென்பொருட்களை கண்டுபிடித்து அகற்ற உதவியது.

மைக்கிராசாவ்ட் போட்டு வையுங்கோ. பொதுவான பாதுகாப்புக்குச் சிறந்தது. விசேட பாதுகாப்பிற்கு வங்கிகள் பயன்படுத்தச் சொல்லும் அன்ரி - வைரஸ்களை பயன்படுத்துவது சிறந்தது.

உண்மையாகவா நெடுக்ஸ்? :o microsoft free anti virus programme போட்டு இருந்த போது தான் எனது online banking account-க்கு ஆப்பு வைக்கப் பட்டது. அதன் பிறகு தான் macfeeக்கு மாத்தினேன். அதுவும் பாதுகாப்பு இல்லையா? :blink::o

Share this post


Link to post
Share on other sites

உண்மையாகவா நெடுக்ஸ்? :o microsoft free anti virus programme போட்டு இருந்த போது தான் எனது online banking account-க்கு ஆப்பு வைக்கப் பட்டது. அதன் பிறகு தான் macfeeக்கு மாத்தினேன். அதுவும் பாதுகாப்பு இல்லையா? :blink::o

உண்மையாகவே நடந்தது. இணையவழி இன்னொருவரின் வங்கிக் கணக்கு விபரங்கள் திருடப்பட்டு.. வங்கியில் இருந்து யாரோ பணத்தையும் பரிமாற்றம் செய்து விட்டனர். ஆனால் வங்கி எப்படியோ கண்டறிந்து குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை அனுப்பியதை அடுத்து திருட்டு வங்கியால் முறியடிக்கப்பட்டது. macfee எதையும் புடுக்க முடியல்ல.

நான் macfee உட்பட 3 வெவ்வேறான பாதுகாப்பு வலை அமைப்பை செய்து வைச்சிருக்கிறன். இருந்தும்.. சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் போறது. :)

Share this post


Link to post
Share on other sites

உண்மையாகவே நடந்தது. இணையவழி இன்னொருவரின் வங்கிக் கணக்கு விபரங்கள் திருடப்பட்டு.. வங்கியில் இருந்து யாரோ பணத்தையும் பரிமாற்றம் செய்து விட்டனர். ஆனால் வங்கி எப்படியோ கண்டறிந்து குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை அனுப்பியதை அடுத்து திருட்டு வங்கியால் முறியடிக்கப்பட்டது. macfee எதையும் புடுக்க முடியல்ல.

நான் macfee உட்பட 3 வெவ்வேறான பாதுகாப்பு வலை அமைப்பை செய்து வைச்சிருக்கிறன். இருந்தும்.. சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் போறது. :)

நன்றி நெடுக்ஸ்!

தற்போது online banking முற்றிலும் நிறுத்திவிட்டேன். (ஏதும் முக்கியம் என்றால் மட்டும் வங்கி அட்டை online இல் பாவிப்பேன்)

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட anti -virus programme பாவிக்கலாமா? ஒன்றில் virus-ஐ recognise பண்ணாவிட்டால் மற்ற anti -virus programme இல் அந்த virus recognise பண்ணுமா? 2 anti virus programms பாவிப்பதால் கணனியின் வேகம் குறைய வாய்ப்புகள் உள்ளதா?

Share this post


Link to post
Share on other sites

நன்றி நெடுக்ஸ்!

தற்போது online banking முற்றிலும் நிறுத்திவிட்டேன். (ஏதும் முக்கியம் என்றால் மட்டும் வங்கி அட்டை online இல் பாவிப்பேன்)

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட anti -virus programmes பாவிக்கலாமா? ஒன்றில் virus-ஐ recognise பண்ணாவிட்டால் மற்ற anti -virus programme இல் அந்த virus recognise பண்ணுமா? 2 anti virus programms பாவிப்பதால் கணனியின் வேகம் குறைய வாய்ப்புகள் உள்ளதா?

உண்மையில் நான் ஒன்றுக்கும் மேற்பட்ட anti -virus programmes பாவிக்கிறேன். அதில் சில நேரம் இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான சந்தர்ப்பத்தில் ஒன்றை தற்காலிகமாக நிறுத்தி மற்றதை பாவிப்பேன்.

வங்கிகள் சொன்ன சில பராமரிப்பு முறைகளையும் கையாள்கிறேன். பிராட் இன்சூரன்ஸ் செய்தும் வைத்திருக்கிறேன். இப்படிப் போகுது.. ஆன் லைன் வாழ்க்கை..! றிஸ்க் தான் என்ன செய்வது..! நான் வழமையாகவே ஆன் லைன் வர்த்தகம் பாவிப்பது குறைவு. நல்ல நம்பிக்கைக்குரிய சில தளங்களை மட்டும் பாவிப்பேன். அத்தியாவசியம் என்றால் மட்டும். :)

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் நான் ஒன்றுக்கும் மேற்பட்ட anti -virus programmes பாவிக்கிறேன். அதில் சில நேரம் இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான சந்தர்ப்பத்தில் ஒன்றை தற்காலிகமாக நிறுத்தி மற்றதை பாவிப்பேன்.

வங்கிகள் சொன்ன சில பராமரிப்பு முறைகளையும் கையாள்கிறேன். பிராட் இன்சூரன்ஸ் செய்தும் வைத்திருக்கிறேன். இப்படிப் போகுது.. ஆன் லைன் வாழ்க்கை..! றிஸ்க் தான் என்ன செய்வது..! நான் வழமையாகவே ஆன் லைன் வர்த்தகம் பாவிப்பது குறைவு. நல்ல நம்பிக்கைக்குரிய சில தளங்களை மட்டும் பாவிப்பேன். அத்தியாவசியம் என்றால் மட்டும். :)

றிஸ்க் எடுக்கிறது றஸ்க் சாப்பிடுகிற மாதிரி போல.. ^_^

கருத்திற்கு நன்றி நெடுக்ஸ்! :)

Share this post


Link to post
Share on other sites

ஆலோசனையும், அதற்குரிய வழிகளையும் தெரிவித்த தப்பிலி, குட்டி, நெடுக்ஸ், நாடோடி, புரட்சி, நுணா ஆகியோருக்கு நன்றி. :)

சந்தேகம் ஒன்று.... அழையாவிருந்தாளியாக, Smart internet Protection என்னும் வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் வந்து குந்தியிருந்து கொண்டு என்னை வெருட்டுகின்றது. உதாரணத்துக்கு... microsoft anti virus programme அல்லது McAfee anti-virus மென்பொருட்களை தரவிறக்கம் செய்தால்...... Smart internet Protection என்னும் அழையா விருந்தாளி காணாமல் போய்விடுவாரா? அல்லது அவருக்கு ஏதாவது வெடி வைச்சுத்தான்.... கிளப்ப வேண்டுமா?

Share this post


Link to post
Share on other sites

ஆலோசனையும், அதற்குரிய வழிகளையும் தெரிவித்த தப்பிலி, குட்டி, நெடுக்ஸ், நாடோடி, புரட்சி, நுணா ஆகியோருக்கு நன்றி. :)

சந்தேகம் ஒன்று.... அழையாவிருந்தாளியாக, Smart internet Protection என்னும் வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் வந்து குந்தியிருந்து கொண்டு என்னை வெருட்டுகின்றது. உதாரணத்துக்கு... microsoft anti virus programme அல்லது McAfee anti-virus மென்பொருட்களை தரவிறக்கம் செய்தால்...... Smart internet Protection என்னும் அழையா விருந்தாளி காணாமல் போய்விடுவாரா? அல்லது அவருக்கு ஏதாவது வெடி வைச்சுத்தான்.... கிளப்ப வேண்டுமா?

ஆகா.. நீங்களும் மாட்டுப்பட்டிட்டீங்களோ. கண்ட கண்ட சிமைலிஸ்.. இந்திய நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் போடேக்கையே நினைச்சனான்.. இவர் உதுகளில் மாட்டுப்படுவார் என்று.

Smart internet Protection இது அன்ரி - வைரஸ் மென்பொருள் அல்ல. இது ஒரு வைரஸ் ஆகும்.

கீழுள்ள விபரங்களை முழுமையாக ஒரு தடவை படியுங்கள். பின்னர் இதனை அகற்றும் வழிமுறையை செயற்படுத்துங்கள்.

முதலில் கீழுள்ள இணைப்பில் SUPERAntySpyware தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை ஸ்கான் செய்தால் அது வைரஸை கண்டுபிடித்து தரும்.. பின்னர் அதனை அகற்றுங்கள்.

மிச்ச சொச்சத்துக்கு.. மருந்து தருவார்.. spyware doctor... எனும் மென்பொருளை கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை முழு ஸ்கேன் செய்யுங்கள். அவர் இந்த வைரஸின் மிச்சக் கூறுகளை கண்டுபிடித்து உங்களுக்கு தருவார். நீங்கள் அவற்றை அவர்கள் கூறும் படி அழித்து விடுங்கள்.

http://www.cleanpcguide.com/remove-smart-internet-protection-2011-how-to-remove-smart-internet-protection-2011/

(தேவையான எல்லாப் படிமுறைகளும் இந்த இணைப்பில் உள்ளது. இருந்தாலும் இயன்ற வரை தமிழில் கீழே எழுதி இருக்கிறேன்.)

{இந்த வைரசின் தொற்றால்.. உங்களால் இணைய உலாவிக்கு செல்ல முடியவில்லை என்றால் உங்கள் கணணியை safe mode ல் (கணணியை றீ ஸ்ராட் பண்ணும் போது f8 கீயை அழுத்தி பின்னர் அரோ கீயை பாவித்து safe mode தெரிவு செய்து Enter பண்ணுங்கோ.) வைத்து இயக்கி அதன் வழி இணைய இணைப்பிற்கு சென்றும் இந்த மென்பொருளை இறக்கிப் பாவிக்கலாம்.

safe mode இல் இணைய உலாவி வேலை செய்யவில்லை என்றால்.. மீண்டும் கணணியை றீஸ்ராட் பண்ணி f8 கீயை பாவித்து safe mode networking என்பதை தெரிவு செய்து போங்கள். நிச்சயம் வேலை செய்யும்.}

இந்த வைரஸை அகற்றிய பின் SUPERAntySpyware மற்றும் spyware doctor மென்பொருட்களை தரவிறக்கம் செய்த போது சேமித்த கோப்புக்களை அழித்துவிடுங்கள். அத்தோடு மேலதிகமாக control panel வழி மற்றும் C:// புரோகிராம் போல்டரில் உள்ள இவற்றின் பைல்களையும் அழித்துவிடுங்கள்.

அதன் பின்னர் microsoft anti virus programme தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை மீண்டும் முழுமையான ஸ்கான் செய்தால்.. அது வைரசின் மிச்ச சொச்சங்களையும் ஏனைய ஆபத்தான புரோகிராம் பைல்களையும் கண்டுபிடித்து அழிக்கும்.

அதன் பின்னர் உங்கள் கணணி இந்த வைரஸின் தொற்றில் இருந்து முற்றாக விடுபட்டு விடும்.

மீண்டும் உங்கள் கணணியை வழமை போல் றீஸ்ராட் செய்து பாவிக்க வேண்டியதுதான்.

இதில் McAfee யால் ஒன்றும் புடுக்க முடியாது. அது சும்மா முழிச்சுக் கொண்டிருக்கும். :D:)

எச்சரிக்கை:

மேற்படி இணைப்பில் SUPERAntySpyware மற்றும் spyware doctor என்ற மென்பொருட்களை இறக்கிப் பாவித்துவிட்டு அழித்துவிடுங்கள். ஆன்லைனில் வைத்து ஸ்கான் செய்யவோ.. வைரஸை அகற்றவோ வேண்டாம்.

எனிமேல் சிமைலிஸ் தேடி.. மற்றும் கவர்ச்சி நடிகைகளின் படம் தேடி கண்ட கண்ட இந்திய இணையப் பக்கங்களுக்குப் போகக் கூடாது. தட்ஸ்தமிழ்.. தினமலர் போன்ற இணையத்தளங்களுக்கு விசிட் அடிப்பவர்களுக்கும் இக்கதி நேர்ந்துள்ளது.

முன்னர் ஒரு முறை தட்ஸ் தமிழ்.. சி என் என் (cnn) இணையத்தளங்களுக்கு சென்ற போது எனக்கும் இவ்வாறான ஒன்று வந்து நான் பின்னர் அழித்துக் கொண்டேன். :D:)

Share this post


Link to post
Share on other sites

ஆகா.. நீங்களும் மாட்டுப்பட்டிட்டீங்களோ. கண்ட கண்ட சிமைலிஸ்.. இந்திய நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் போடேக்கையே நினைச்சனான்.. இவர் உதுகளில் மாட்டுப்படுவார் என்று.

இதற்கு மருந்து தருவார்.. spyware doctor... எனும் மென்பொருளை கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை முழு ஸ்கேன் செய்யுங்கள். அவர் இந்த வைரஸின் கூறுகளை கண்டுபிடித்து உங்களுக்கு தருவார். நீங்கள் அவற்றை அவர்கள் கூறும் படி அழித்து விடுங்கள்.

--------

விரிவான தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

வாற ஞாயிற்றுக்கிழமை அன்று, கணனியில் ஏற்பட்ட வைரஸ் தொற்றை அழிக்கலாம் என்று இருக்கின்றேன்.

என்ன... செய்யிறது, வயதுக் கோளாறால்... இந்திய நடிகைகளின் படங்களை :wub: பார்க்காமல் இருக்க முடியவில்லையே... :D:lol:

Share this post


Link to post
Share on other sites

என்ன... செய்யிறது, வயதுக் கோளாறால்... இந்திய நடிகைகளின் படங்களை :wub: பார்க்காமல் இருக்க முடியவில்லையே... :D:lol:

எனது கணனியில் 2 hard disk பொருத்தி இரண்டு operating system வைத்துள்ளேன். ஒன்றுக்கு தீர்க்க முடியாத வைரஸ் பிரச்சனை என்றால் அதில் உள்ள தேவையான தரவுகளை மற்றயதற்கு பிரதி பண்ணி விட்டு பாதிக்கப்பட்ட hard டிஸ்க் ஐ format பண்ணி மீளவும் windows install பண்ணுவேன்.

ஏதோ மடிக்கு வந்தது மடிக்கனணியோடு போய்விட்டது என்று ஆறுதல் பட்டுட்டு நல்ல ஆன்டி வைரஸ் மென்பொருளை பாவித்து உங்கள் சேவையை தொடருங்கள். :lol:

Share this post


Link to post
Share on other sites

கணணி விஷயத்தில் நான் ஒரு அரி வரிக் காரன், ஆனால் சில எளிய வழிகள் மூலம் (கடவுளின் கருணையாலும்!) வைரஸ் தாக்கங்களில் இருந்து தப்பி வருகிறேன்:

1. கஸ்பர்ஸ் ஸ்கை (Kasper's Sky) மென்பொருள் இப்போது பிரபலம் என்று கேள்விப் பட்டேன். ரஸ்ய நாட்டினன் செய்வதால் அவன் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளிலேயே ஏதாவது வைத்து எமக்கு விக்கிறானோ என்று சந்தேகப் பட்டேன். ஆனால் நல்ல பாதுகாப்புப் போல தெரிகிறது. ஒரு வருட சந்தா மலிவு விலையில் நாற்பது டொலர்கள் என்பது மட்டும் தான் கசப்பான செய்தி. மேலும் இது பாவித்தால் வேறு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை செயல் படவும் விடாது.

2. வங்கிக் கணக்குகளை பாதுகாக்க, ஒன்லைன் பாங்கிங் பாவித்த உடனேயே இன்டெர்னெட் ஒப்ஷன் (Internet options)பகுதியில் சென்று உங்கள் தற்காலிக இன்ரர்னெட் கோப்புகள் (temporary internet files), சங்கேதச் சொல் (pass words) என்பவற்றை அழித்து விடுங்கள்.இப்படி அடிக்கடி செய்வது உங்கள் கணணியின் வேகத்தையும் கூட்ட உதவும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

3. மேலும் ஒன்லைன் பாங்கிங் போன்றவற்றை இடத்துக்கிடம் காவிச் செல்லும் மடிக்கணணியில் செய்வதை இயலுமானவரை தவிருங்கள் (கணணி தொலைந்தால் உங்கள் தகவல்களும் சேர்ந்து போய் விடும் திருடனிடம்).

4. ஒன்லைன் பாங்கிங் வேலைகளை வயர்லெஸ் நெட்வேர்க்கில் செய்வதும் ஆபத்தானது. Ward driving எனும் முறை மூலம் சைபர் கொள்ளையர்கள் மில்லியன் கணக்கானவர்களின் கடனட்டைத் தரவுகளைத் திருடியிருக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

1. கஸ்பர்ஸ் ஸ்கை (Kasper's Sky) மென்பொருள் இப்போது பிரபலம் என்று கேள்விப் பட்டேன்.

இந்த Kasper's Sky மென்பொருளை Barclays வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். நானும் எனது கணனியின் ஒரு இயங்குதளத்திற்கு பாவிக்கிறேன். நல்லதுபோலத்தான் தெரிகிறது. ஆனால் கணணியை மிக மெதுவாகத்தான் இயங்கவிடுகிறது. புதிய கணனிகளுக்கு பாவித்தால் பிரச்சனையில்லையோ தெரியாது.

Share this post


Link to post
Share on other sites

இந்த Kasper's Sky மென்பொருளை Barclays வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். நானும் எனது கணனியின் ஒரு இயங்குதளத்திற்கு பாவிக்கிறேன். நல்லதுபோலத்தான் தெரிகிறது. ஆனால் கணணியை மிக மெதுவாகத்தான் இயங்கவிடுகிறது. புதிய கணனிகளுக்கு பாவித்தால் பிரச்சனையில்லையோ தெரியாது.

நான் Kasper's Sky இன் நீண்ட நாள் வாடிக்கையாளன். அது RAM இல் அதிக நினைவிடத்தை எடுத்து இயங்குவதால் கணணி செயற்பாடுகள் மெதுவாகின்றன என்று நினைக்கிறேன். அதனால் அதை நான் கைவிட்டு விட்டேன். அதுவும் 100% பாதுகாப்பானதல்ல. :)

Share this post


Link to post
Share on other sites

நான் Kasper's Sky இன் நீண்ட நாள் வாடிக்கையாளன். அது RAM இல் அதிக நினைவிடத்தை எடுத்து இயங்குவதால் கணணி செயற்பாடுகள் மெதுவாகின்றன என்று நினைக்கிறேன். அதனால் அதை நான் கைவிட்டு விட்டேன். அதுவும் 100% பாதுகாப்பானதல்ல. :)

உண்மை. Kasper's Sky நினைவிடத்திலிருந்தே (RAM ) அதிகளவு சக்தியை பெற்று இயங்குகிறது. Task Manager ஐ ஒரு தரம் கவனித்தால் தெரியும். இந்த மென்பொருளின் செயற்பாடுகள் நினைவிடத்தின் முக்கால்வாசியை பாவிக்கிறது. Norton 360 மென்பொருள் என்னிடமுள்ளது. இன்னும் கணனிக்கு தரவு ஏற்றவில்லை. அதுவும் என்ன பிரச்சனை தருமோ தெரியாது? Anti Virus மென்பொருள் செய்பவர்களே இந்த வைரஸ்களையும் உருவாக்கி வியாபாரம் செய்கிறார்கள்.

நான் வேலையில் உள்ள கணனியில் மாத்திரமே (எல்லாம் ஒரு நம்பிக்கை) online banking செய்வேன். அதுவும் கட்டாய தேவைஎன்றால் மாத்திரமே.

Share this post


Link to post
Share on other sites

Norton 360 ஐ தான் நான் பாவிகின்றேன். கொஞ்சம் விலை தான் அதிகம் ஆனால் குறிப்பிடதக்க அளவு பாதுகாப்புகள் கூடியது. விரிவாக வாசிக்க மேலுள்ள சுட்டியை அழுத்தவும்.

ஜேர்மனில்

Share this post


Link to post
Share on other sites

அவளைத்தொடுவானேன்? அவலப்படுவானேன்? சிற்பம் சின்னமோளங்களை தேடினால் பிரச்சனை குடுப்பாங்கள். :)

Share this post


Link to post
Share on other sites

கூகிளினால் அங்கீகரரிக்கப்பட்ட Pctools ஐ பாவிச்சு பாருங்கள்... நான் இதைத்தான் பெரிதும் நம்பிறது...

கணனிகளில் இப்போதைய முக்கிய பிரச்சினை வைரசுகளை விட அதிகமாக Spywear கள் தான்... உங்கள் கணனியில் இருந்து தகவல்களை திருடுவதுக்கு வசதியாக உங்களது கணனிக்கு மென்பொருளை தாங்கி வருவதும் அதுதான்... இதை Pctools நண்றாக கையாள்கின்றது...

http://www.pctools.com/performance-toolkit/download/

Share this post


Link to post
Share on other sites

.

Task manager இல் பார்த்தால் என்னென்ன .exe 's ஓடுகின்றன என்று தெரியும்.

அதில் உங்கள் ஆள் smart internet protection இருப்பார். அவரின் சரியான .exe file name ஐ குறித்துக்கொண்டு. start >> search இல் போய் search செய்யுங்கள்.

அது எந்த folder இல் உங்கள் ஆள் இருக்கிறார் என்பதைக் காட்டும். பின் Reboot the system in command prompt. then type del C:\\foldername\smarprotec*.exe

அதன் பின் வழமையான முறையில் start செய்யவும். (Windows).

Share this post


Link to post
Share on other sites

அவளைத்தொடுவானேன்? அவலப்படுவானேன்? சிற்பம் சின்னமோளங்களை தேடினால் பிரச்சனை குடுப்பாங்கள். :)

சரியாக சொன்னீர்கள் குமாரசாமி அண்ணா. சின்ன மேளங்களை பார்ப்பவர்களின் கணனிகளே பெரும்பாலும் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகின்றன.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • எமது  அரசியல் தலைவர்களின் 70களுக்கு பின்னரான வாய்ச்சவால்களும்,உசுப்பேத்தல்களுமே  ஈழத்தமிழின அழிவுக்கான காரணங்கள்.   இந்தா மாவை இப்பவும் போராட்டம் வெடிக்கும் எண்டு கத்திக்கொண்டு திரியுது. இதை கேட்ட சிங்களவன் என்ன செய்வான்?????????
  • மலையக தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு வடிவேல் சுரேஷ் கோரிக்கை (ஆர்.விதுஷா) ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மலையகத்தின் சில பகுதிகளில்  தமிழ் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை  எடுத்து தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.   ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து நாடு  பூராவும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  அதிலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் எமது மக்கள் மீதான  தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.  தேர்தல் வெற்றியை கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை.  ஏனைய  இனத்தவருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்  செயற்படுதல் காட்டுமிராண்டிதனமான செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/69262
  • வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் Published on 2019-11-19 15:26:50   கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.   அவர் மேலும் குறிப்பிடும் போது..  தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அடிப்படையில் பெருபான்மை மக்களின்ஆணித்தரமான ஆணையினைப் பெற்ற ஜனாதிபதிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கும் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்களுக்குமான இடைவெளியினை குறைத்து தன்னுடைய வரலாற்றுச் சாதனையாகச் செயற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். போர் முடிவுக்கு கொண்டுவந்த பிறகும்கூட இந்த இடைவெளியினை அன்றைய அரசு காலத்தில் நிரப்ப முடியவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது.  இன்று வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்கு வழங்கி இல்லாது போனது அந்த மக்கள் போர் முடிந்த பிறகு இருந்த சூழ்நிலையினால் ஏற்பட்ட அவநம்பிக்கையை மட்டுமே காட்டுகிறது. ஆகவே ஒரு நாட்டின் தலைவராக இந்த மக்களின் அவநம்பிக்கையினை இல்லாமல் செய்வதற்கு பெருபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும் உதவும் என்று நம்புகிறோம்.  இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் தலைமைகளின் கோரிக்கைகளுக்கு உட்படாமல் தமது சொந்த முடிவில் தங்கள் அவநம்பிக்கையின் வெளிப்பாட்டையே வாக்குகளாக வழங்கிஉள்ளார்கள் என்பதை ஆட்சி அமைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  அதேவேளை மீண்டும் தமிழ் பேசும்மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைமைகளை புதிய அரசின் பக்கம் முழுமையாக உள்வாங்கப்பட்டால் மக்களின் அவநம்பிக்கை தொடரும் என்பதையும் அதனால் நாம் இலங்கையர் என்ற எண்ணம் தமிழ் பேசும்மக்கள் மத்தியில் உருவாவது மந்தம் அடையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  இதே சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்தளத்தினூடாக இந்த புதிய ஜனாதிபதி மீதோ அல்லது அமையப்போகும் அரசாங்கத்தின் மீதோ வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அச்சமோ அவநம்பிக்கையோ அடைய வேண்டிய அவசியமில்லை எனக்குறிப்பிட்டதை வரவேற்க வேண்டும். இளைய தலைமுறை இரண்டு பக்கத்திலும் முற்போக்குடன் சிந்திப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.  மேலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையினை இந்த தேர்தலில் வலிமையாகக்காட்டியுள்ளார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய வெற்றியாகப் பார்க்குமானால் அதற்கானபதிலையும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர்குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/69254
  • பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு  ஐதேக எதிர்ப்பு Nov 19, 2019 | 1:56by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ”  நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு அளிக்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும், பொதுத் தேர்தலை பெப்ரவரி 15 அல்லது அதற்குப் பின்னர் நடத்துவதற்கு உடன்பட்டால், ஐதேக நாடாளுமன்றக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும். தேர்தலுக்கான நாள் குறித்து அடுத்த சில நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார். இதன்போது நாங்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அவரிடம் கூறுவார். முன்னதாக 24 மணிநேரத்துக்குள் பிரதமர் பதவி விலகுவார் என்று கூறியிருந்த போதிலும், இதில் தாமதம் ஏற்படக் கூடும். ஏனெனில், சிறிலங்கா அதிபரைச் சந்திப்பதற்கான நேரம் இதுவரை பிரதமருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பெரும்பானலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பம் வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக, பதவிகளை விட்டு விலகி எதிர்க்கட்சியில் அமர நாங்கள் முடிவு செய்து விட்டோம். ஐதேக பிளவுபடப் போகிறது என்பது வெறும் வதந்தி தான். அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் ஐதேக ஆதரவாளர்கள் துன்புறுத்தல்களையும், தாக்குதல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விடயம் சிறிலங்கா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். அதேவேளை, ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை. எனினும், அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. http://www.puthinappalakai.net/2019/11/19/news/41298
  • மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா Nov 19, 2019 | 1:59by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல் போன்ற சிறிலங்காவின் கடப்பாடுகளை உறுதிப்படுத்த சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு ஏற்ற, ஒரு சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான அதிபர் தேர்தலின் மூலம் சிறிலங்கா  தனது ஜனநாயகத்தின் வலிமையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான தேர்தலை ஊக்குவித்ததற்காக சிறிலங்கா  தேர்தல் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை நாங்கள் பாராட்டுகிறோம். சிறிலங்கா ஒரு மதிப்புமிக்க பங்குதாரராக உள்ளது. அனைத்து நாடுகளும் வளரக் கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வளர்ப்பது, நல்லாட்சியை ஆழப்படுத்துவது மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன்  இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalakai.net/2019/11/19/news/41300