Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காதலர்

தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான

ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம்

தெரிவித்துள்ளனர். 'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்'

'உத்தமபுத்திரன்' போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா.

இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும்

மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும்

நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார்

எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக

கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும்

மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர் இருவரும்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு

செய்துள்ளனர்.

இவ்வருடத்திலேயே

இந்த திருமணம் நடைபெற உள்ளது, ஒரு நிபந்தனையுடன். 'திருமணத்துக்கு பின்

நடிக்கக் கூடாது' என்பதுதான் அந்த நிபந்தனை. இதற்கு ஜெனிலியாவும் ஒப்புக்

கொண்டுள்ளார். இப்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக ஜெனிலியா முடிக்கிறார்.

படங்கள் ரிலீசான கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு

திருமணம் செய்கிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதித்ததைத்

தொடர்ந்து ஜெனிலியாவும், ரிதேஷும் நேற்று காதலர் தினத்தை பார்ட்டி வைத்துக்

கொண்டாடியுள்ளனர்.

படித்தது ..........பகிர்வுக்காக . .

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

:lol::lol:

ராகு புதனின் எட்டாம் இடத்திலிருந்து கேதுவைப் பார்ப்பதால் அவரது மடிக்கும் இதயத்திற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று ஜோதிடர் சொல்லியிருந்தாராம். பரிகாரமாக ஜெனிலியாவின் படத்தை ஒவ்வொருநாளும் தரவிறக்கி ஒம்பது முறை ஜொள்ளுவிட்டால் பரிகாரம் உண்டு என்றும் சொன்னாராம். அதில்தான் ஏதோ பிழை விட்டிட்டார் போல கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

மருத்துவமனையில் இருந்து ஆசாமி தப்பியோட்டம். போலீசார் அதிர்ச்சி.

பிராங்ஃபோர்ட்: மாசி 17 2011

இதய வெடிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈழத்து ஆசாமி திடீரென தலைமறைவு ஆகிவிட்டார். இவரை பிராங்ஃபோர்ட் நகரப் பொலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். :unsure:

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள். :blink:

இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாகத் தமக்கு தகவல் தெரிவுக்குமாறும், காட்டுக்குள் வேட்டைக்குச் செல்பவர்கள் மூஸ் என்று நினைத்து இவரை பட்டு பட்டு என்று சுட்டுவிட வேண்டாமென்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்..! :lol: :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

luck1.gifavatar21592_1.gif

Hey.... ஜெனிலியா.. எங்கம்மா ஓடிறே.. என்னை விட்டிட்டு எங்க ஓடிறே... லுக் பேபி.. லுக்.. ஐ ஆம் பிகைன்ட் யு பேபி.... டோன்ட் லீவ் மீ அலோன் பேபி....! :lol::D

** (Just for Joke)

Link to comment
Share on other sites

மருத்துவமனையில் இருந்து ஆசாமி தப்பியோட்டம். போலீசார் அதிர்ச்சி.

பிராங்ஃபோர்ட்: மாசி 17 2011

இதய வெடிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈழத்து ஆசாமி திடீரென தலைமறைவு ஆகிவிட்டார். இவரை பிராங்ஃபோர்ட் நகரப் பொலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். :unsure:

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள். :blink:

இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாகத் தமக்கு தகவல் தெரிவுக்குமாறும், காட்டுக்குள் வேட்டைக்குச் செல்பவர்கள் மூஸ் என்று நினைத்து இவரை பட்டு பட்டு என்று சுட்டுவிட வேண்டாமென்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்..! :lol: :lol:

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சாத்திரி எழுதிய பின்னர் தான் இதன், "சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும்", அர்த்தம் புரிந்தது :D:rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிராங் ஃபெட் நகரின் சூரியஒளியே உட்புகாத அடர்காட்டினுள் அதிரடியாக வரும் இந்த பாடலைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சியில் விறைத்துப்போயுள்ளனர்.விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அத்துடன் பிராங்ஃபெட் புகைரதநிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரைபொலிசார் கைதுசெய்து சோதனை செய்தபோது அவரின் பயண பொதிகளில் பீற்றூட் அளவுக்கதிகமாக இருப்பதையிட்டு...அங்கேயும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜெனிலியாவின் காதலில் திடீர் திருப்பம்.

கோடம்பாக்கம்: மாசி 18. 2011

நேற்று ஜெனிலியாவின் கைப்பையை தற்செயலாகப் பார்த்த ரிதேஷ் தேஷ்முக்கிற்கு, ஜெனிலியா ஜேர்மனியை சேர்ந்த ஈழத்து வாலிபருக்கு எழுதிய காதல் கடிதம் சிக்கி விட்டது. அதில் ஜெனிலியா தனது தாயின் வற்புறுத்தலின் பேரிலேயே தேஷ்முக்கை காதலித்ததாகவும், ஆனால் தனது உண்மைக்காதல் ஜேர்மனியை சேர்ந்த ஐந்தெழுத்து வாலிபருடன் தான் என்றும் கண் கலங்கியவாறு கூறினார். அவரின் பெயர் என்ன என்று ஜெனிலியாவிடம் கேட்ட போது..... வருங்கால கணவரின் பெயரை சொல்லக் கூடாது என்று நாணத்தால் முகம் தக்காளிப் பழமாக சிவந்து விட்டது. தான் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது..... பிராங்ஃபேட் நகரினூடாகவே தனது பயணத்தை ஒழுங்கு செய்யும் படி படத் தயாரிபாளர்களை கேட்டு... அதன் படி, தனது ஜேர்மனிய ஈழத்துக் காதலருடன் உல்லாசமாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். நமிதா வழியில், ஜெனிலியாவும் ஈழத்து வாலிபரை காதலித்ததை கண்டு இந்திய வாலிபர்கள் விரக்தியில் உள்ளார்கள் என்று கோடம்பாக்கத்து பட்சி சொல்கின்றது.

-நன்றி சினிக்கூத்து-

Link to comment
Share on other sites

காதலில் திடீர் குழப்பம். கண்கலங்கினார் ஜெனிலியா.

கீழ்ப்பாக்கம்: மாசி 18, 2011

நடிகை ஜெனிலியா ஜேர்மனியில் வசிக்கும் ஐந்தெழுத்து ஈழத்து தமிழ் ஆசாமியைக் காதலித்து வந்தது தெரிந்ததே. ஆனால் இந்தக் காதலில் இப்போது திடீர் திருப்பமாக யார் அந்த ஆசாமி என்பதில் பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. :unsure:

இதுவரையில் டிஷ் அன்ட்டனா ஆசாமிதான் காதலர் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது ஒரு கள்ளுக்கொட்டில் ஆசாமியும் ஜெனிலியாவுக்கு உரிமை கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது. :blink: தன்னுடைய நிலையை எண்ணி மனம் கலங்கிய ஜெனிலியா தாயின் விருப்பத்திற்கேற்ப தேஷ்முக்கையே மணமுடிக்க முடிவெடுத்துவிட்டதாக இன்று பத்திரிகையாளர்களிடம் முக்கினார். :lol: :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு ஒருபாராட்டு. பழசுக்கு என்றும் மவுசு உண்டு................பகிர்வுக்கு நன்றி

சிறீயுடன் சேர்ந்து கேட்டு மகிழ்வோம். சோகத்திலும் ஒரு சுகம்...... :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்! இப்ப ஜெனி யார் பக்கம்! :unsure:

Link to comment
Share on other sites

அத்துடன் பிராங்ஃபெட் புகைரதநிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரைபொலிசார் கைதுசெய்து சோதனை செய்தபோது அவரின் பயண பொதிகளில் பீற்றூட் அளவுக்கதிகமாக இருப்பதையிட்டு...அங்கேயும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தன்னுடைய நிலையை எண்ணி மனம் கலங்கிய ஜெனிலியா தாயின் விருப்பத்திற்கேற்ப தேஷ்முக்கையே மணமுடிக்க முடிவெடுத்துவிட்டதாக இன்று பத்திரிகையாளர்களிடம் முக்கினார்

அவரின் பெயர் என்ன என்று ஜெனிலியாவிடம் கேட்ட போது..... வருங்கால கணவரின் பெயரை சொல்லக் கூடாது என்று நாணத்தால் முகம் தக்காளிப் பழமாக சிவந்து விட்டது.

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர்

பர்வதம் பாட்டியிடமிருந்து

உலக்கையடி வாங்கிக்கொடுக்காமல் ஓய மாட்டீர்கள் போலும் :lol::D:D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Once upon a time, in their dreamland...

(0.25- 0.33 நிமிடங்கள்) இந்தப் பாடலின் ஹீரோ சிறி அண்ண (நடுவில் வருபவர்),

இடது பக்கம் தொப்பியோடு வருபவர் கு.சா. அண்ண,

கு.சா. அண்ணைக்குப் பின்னால் கண்ணாடியுடன் சாத்திரி அண்ண,

சாத்திரி அண்ணைக்குப் பக்கத்தில் இசைக்கலைஞன்,

கையில்லாத பனியனுடன் சிறி அண்ணைக்கு வலது பக்கத்தில் வருபவர் தப்பிலி,

இவர்களுடன் இவர்களின் கனவுக் கன்னி ஜெனிலியா...

மலரும் நினைவுகள்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அது சட்டியில்லை, ஜட்டி தான் என்பதை ஜேர்மனியின் பிரபல நாளிதளான Bild செய்தியார் ஆஷ்மான் தெரிவிக்கின்றார் Zeitung.gif

உடம்பில் போட்டிருந்த ஜட்டியை தொட்டால் சுடும். கொடியில் காயப் போட்டிருந்த ஜட்டியை தொட்டால் குளிரும்.

இது...கூட விளங்காமல், ஊரில் இருந்து என்ன லாபம்.. என்று பழைய தமிழ் சினிமா பாடலையும், மேற்கோழ் காட்டினார்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதை பாக்க.....பாக்க..... இஞ்சை ஒருத்தருக்கு உடம்பெல்லாம் பத்தி எரியப்போகுது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்! by கதிர் September 22, 2021 காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்! காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலமாக, காணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றேன்” என்று, ஐ.நா. பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரென்று அவரது ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அவர் இலங்கை திரும்பியவுடனேயே இத்தகைய அறிவிப்பை முதலில் திட்டவட்டமாக, பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். இலங்கை அரசின் தகவல்படி வடக்கு கிழக்கில் 16ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் இலங்கையின் முப்படைகளாலும் பொலிஸாராலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதிவேண்டி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக உறவுகள் போராடிவருகின்றனர். ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் அவர்களை ஒருமுறையேனும் பேச்சுக்கு அழைத்திராத இலங்கை ஜனாதிபதி, உள்ளகப் பொறிமுறையில் பேச்சில் ஈடுபடப்போகின்றேன் என்று அறிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரையும் சர்வதேசத்தையும் இதன்மூலம் ஏமாற்ற முற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. ஆனால், ஐ.நா. பொதுச்செயலாளரோ அல்லது சர்வதேச சமூகமோ காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலில்லை என்பதை முதலில் இலங்கை ஜனாதிபதி புரிந்துகொள்ளவேண்டும். காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்பதை இலங்கை ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக அறிவிக்கட்டும். அதன்பின்னர் இலங்கை அரச படைகளாலும் பொலிஸாராலும் காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளமை பற்றி நாம் சர்வதேசத்திடம் நீதி கோருவோம். – என்றார்.   https://newuthayan.com/875-3/
  • அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிக்க தீர்மானம்! அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மேலெழுந்துள்ள நிலைமையில் அரச வருமானம் குறைவடைந்தமையும், சுகாதாரத் துறையின் செலவும் சமூகத்தில் வருமானம் இழந்தவர்களின் சமூகப் பாதுகாப்பு, தமது வருமானத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இழக்கப்பட்டமையால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு நேரிட்டமையாலும், இதர துறைகளில் ஏற்பட்ட செலவு அதிகரிப்பாலும் 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபாய்கள் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் ;  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.samakalam.com/அரசாங்கத்தின்-கடன்-பெறும/  
  • அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் September 22, 2021 அவுஸ்திரேலியாவின்  கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்நாட்டு நேரப்படி  புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார்.   https://globaltamilnews.net/2021/166331    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.