Jump to content

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்

வீரகேசரி இணையம் 2/17/2011 10:35:33 AM

லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை கைப்பற்றினார்.

அவரின் ஆட்சியில் வேலையின்மை பெருகிவிட்டதாகவும், விலை உயர்வு ஆகிய போன்றவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை கடாபியின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை குதிப்பிடத்தக்கது.

எகிப்தின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தே லிபியாவிலும் அதே பாணியிலான போராட்டங்கள் வலுப்பெறத்துவங்கியுள்ளன. _

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடாபியை லிபிய மக்கள் தூக்கி கடாச வேண்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ம யாழ்கள அகூதாவுக்கு திரும்பவும் வேலை வந்துட்டுது எண்டு சொல்லுங்கோ. :D

அகூதாவை, மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம். :)

Link to comment
Share on other sites

கடாபியை லிபிய மக்கள் தூக்கி கடாச வேண்டும். :D

கடாபியைக் கடாசுவது அவ்வளவு சுலபமான காரியமா.

Link to comment
Share on other sites

லிபியா வட ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு. அண்மையில் சர்வாதிகளை வெற்றிகரமாக "விரட்டிய" நாடுகளை எல்லையில் கொண்டது.

இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும், கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.

இரு நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியால் (எகிப்து, துனீசியா) ஆப்பிரிக்கா, மற்றும் அரபு நாடுகள் பலவற்றில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், பக்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் கலவரம் பரவி உள்ளது.

ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் அதன் மேற்கத்திய நாடுகள் உடனான உறவு, பூகோள/பொருளாதார முக்கியத்துவம் மற்றும் சுனி - சியா பிரிவினை என பல காரணிகள் உள்ளன. எல்லாத்துக்கும் மேலாக மக்களின் "பயத்தை முறியடிக்கும்" வலிமை, நாட்டின் இராணுவம் - காவல்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அது ஒரு பக்கம் தானே உண்மையான மக்களாட்சியின் ஆதரவாளன் என காட்டிக்கொண்டு மறுபக்கத்தில் பல சர்வாதிகாரிகளை தனது கைக்குள் வைத்துள்ளது. இந்த கொள்கைக்கு முக்கிய காரணம் அமெரிக்கவின் மசகு எண்ணெய் மீதான தீராத காதலும் இஸ்ரேலும்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை மேற்குலகம் விரும்புகின்றது. முல்லாக்களையும் ஈரானின் அணு ஆயுத விருப்பும் சவாலாக உள்ளது.

பகரேய்னில் விரும்பவில்லை. பஹ்ரெய்ன் நாடு, 18 ஆம் நூற்றாண்டில் இருந்து, சுனி முஸ்லிம் அரச குடும்பம் ஒன்றால் ஆளப்படுகிறது. ஆனால், அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குறை கூறுகிறார்கள். அங்கு அமெரிக்கவின் கடற்படை பிரிவு உள்ளது. அங்கு இராணுவமும் காவல்துறையும் மக்களை அடக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என சொல்லுகின்றது. அதேவளை பதவியில் சுனி இனத்தவர் இல்லாமல் சியா பதவிக்கு வந்தால், இங்கு ஈரானின் (அவர்களும் சியா) கரம் வலுவடைந்து விடும் என அமெரிக்கா பயப்படுகின்றது.

லிபியாவில் கூட மாற்றத்தை பெரிதாக விரும்பவில்லை. அண்மைக்காலமாக மேற்குலகம் கடாபியுடனான லிபியாவுடன் உறவுகளை மேம்படுத்தி வந்துள்ளது (லோக்கபி குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்கப்பட்ட இணக்கத்தின் பின்னர்) .

Link to comment
Share on other sites

  • வியாழக்கிழமை லிபியாவின் பல நகரங்களிலும் மக்கள் போராட்டங்கள் நடந்தன
  • தலைநகர் திரிப்பொலி, பெங்க்காசி உட்பட பல நகரங்களில் நடந்தது போராட்டம்
  • இந்த நாள் "கோப நாள்" (Day of rage) என அழைக்கப்பட்டது
  • 4-20 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது
  • ஆனால் அரச தொலைக்காட்சியில் கடாபிக்கு ஆதரவான போராட்டம் பற்றி மட்டுமே கூறப்பட்டது

Deadly 'day of rage' in Libya : http://english.aljazeera.net/news/africa/2011/02/201121716917273192.html

Libyan Unrest Highlights Uneasy U.S. Alliance : http://www.foxnews.com/politics/2011/02/17/libyan-unrest-highlights-uneasy-alliance/

Popular Rage Is Met With Violence in Mideast: http://www.nytimes.com/2011/02/18/world/middleeast/18protests.html

Link to comment
Share on other sites

  • கடாபி சர்வதேச ஊடகங்களை நம்ப வேண்டாம் என இன்றைய வெள்ளிகிழமை பிரார்த்தனைகளின் அரச ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொண்டார்
  • சகல சுயாதீன ஊடகங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன
  • எதிர்க்கட்சியினர் குறைந்தது 61 பேர் படுகொலை செய்ப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்
  • இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ளது என இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்
  • நேற்று வியாழக்கிழமை பெங்காசியில் 38 பேர் படுகொலை செய்ப்பட்டுள்ளதாக ஒரு மனித ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்
  • மனித உரிமைகள் காப்பகம் (HRW) நேற்று வியாழக்கிழமை வரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சொல்கின்றது

http://www.guardian.co.uk/world/2011/feb/18/libya-protests-massacres-reported

http://english.aljazeera.net/news/africa/2011/02/20112187102317748.html

Link to comment
Share on other sites

  • இன்று பரவலாக பல நாடுகளிலும் (வெள்ளிக்கிழமை) பெரியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது, உயிரிழப்புக்களும் ஏற்பட்டன
  • பல இடங்களிலும் மதிய நேர மத உரை மக்களை மேலும் கிளர்ந்தெழுக்க செய்தது
  • யேமனில் குறைந்தது நால்வர் இறந்தனர்

  • எகிப்தைபோல லிபியாவிலும் இராணுவமும் காவல்துறையும் மக்கள் பக்கம் இருப்பதாக சொல்லப்படுகின்றது
  • எனவே, உக்ரேன், சியராலியோன் போன்ற கடாபி ஆதரவு நாடுகளிலிருந்து ஆட்களை வரவழைக்க உள்ளதாக அறியப்படுகின்றது
  • இவர்கள் மூலம் ஆர்ப்பாட்ட மக்களை அடக்க கடாபி எண்ணுகின்றார்

ஆப்ரிக்காவின் வடபகுதியில் உள்ள எகிப்தின் அண்டை நாடான லிபியாவில், 1969ல் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த கடாபி அன்று முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத தலைவராக இருந்து வருகிறார்.

3 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=191173

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியைக் கடாசுவது அவ்வளவு சுலபமான காரியமா.

"எறும்பு ஊர கற் குவியும்" என்று ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

அதன் அர்த்தம் பாறாங்கல்லின் மீது..... எறும்பு தனது சின்னப் பாதங்களால்.... தொடர்ச்சியாக நடக்கும் போது....

அந்தப் பாதையில் உள்ள, பாறையிலும் வழி கிடைக்கும்.

ஆனா... நமக்குத் தான்..... அந்த கொடுப்பனையில்லை. லிபிய மக்களின் ஒற்றுமை தான்.... கடாபியை கம்பி என்ண வைக்கும்.

Link to comment
Share on other sites

இன்றுமுதல் லிபியாவிற்குள் இன்ரநெற் தடை..

இன்றைய உலக சர்வாதிகார அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இணையமே. லிபியாவும், எகிப்தும், சிறீலங்காவும், சீனாவும் இந்த நோக்கில் இடம் பெறுகின்றன.

கடந்த 40 வருடங்களாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடாத்தி வருகிறார் கேணல் கடாபி. நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தில் 90 வீதத்திற்கு மேல் இராணுவத்திற்கு கொட்டி, அதன் மூலம் தன் அதிகார நாற்காலியைப் பாதுகாத்தும் வருகிறார். இவ்வளவு வலு இருந்தும் கேணல் கடாபி போரைப் பிரகடனப்படுத்தியிருப்பது இணையத்திற்கு எதிராகத்தான்.

காரணம்,

இப்போது வடக்கு ஆபிரிக்காவில் தொடங்கியுள்ள மக்கள் போராட்டங்கள் மிகப்பெரியளவில் தீவிரம் பெறுவதற்கு இணையமே ஆதார சுருதியாக இருந்து வருகிறது. ஒரு நாட்டில் ஆர்பாட்டத்தில் குதித்துள்ள உணர்வாளர்கள் மற்றய நாடுகளின் சகோதரர்களுடன் இணைந்து கொள்ள ஆதாரமாக இருப்பது இணையமே.

இன்று, அதிகார வர்க்கம் அச்சப்படுவது அணுகுண்டிற்கல்ல.. ஆயுதப் புரட்சிக்கல்ல.. மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் இணையத்திற்கே..

லிபியாவில் ஆரம்பித்துள்ள கடாபிக்கு எதிரான போராட்டங்களில் பேஸ்புக் மிக முக்கியமான பாத்திரம் வகித்து வருகிறது. கடந்த வியாழன் லிபிய ஆர்பாட்டக்காரர் , உலக தினம் , என்ற தலைப்பின் கீழ் நடாத்திய போராட்டத்தில் சுமார் 22.000 பேரை கொத்தாக ஆர்பாட்டக் களமிறக்க பேஸ்புக் உதவியாக இருந்திருக்கிறது.

ஆக, கடாபியின் கண்ணுக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டத் தொடங்கிவிட்டது இணையம்.

லிபியாவில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் கடும் வன்முறையால் அடக்கப்படும், இன்று முதல் லிபியாவிற்குள் இன்ரநெற் தொடர்பே இருக்காது என்று சற்று முன் கடாபி கொக்கரித்துள்ளார். இதுபோல எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்திகளைக் கூட அனுப்ப முடியாது தடை செய்தார். வடக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் வெடித்துள்ள அத்தனை மக்கள் போராட்டங்களும் ஆயுதம் இல்லாத புரட்சிகளாக இருந்தாலும், அத்தனைக்கும் வலுவூட்டும் பிரதான ஆயுதமாக இருந்து வருவது இணையமே.

இன்று..

பஃரினில் வெளியான செய்தி ஏடுகளை புரட்டினால் அவை இற்றுப்போன மன்னருக்காக செய்தி எழுதுவதைப் படிக்க முடிகிறது. இணையம் மட்டும் இல்லை என்றால் பஃகரினில் புரட்சி கைகூடியிருக்காது.

பத்திரிகைகள், சஞ்சிகைகளை ஆதாரமாகக் கொண்ட கடந்தகால ஊடகபலம் ஆட்சியாளருக்கு சாதகமாக அமைந்தது. பத்திரிகைகளுக்கு விளம்பரம் வழங்கி அவற்றைக் கைக்குள் போட்டு, பொய்ச் செய்தி வெளியிட்டு வந்த அதிகார வர்க்கம் இன்று இணையத்தின் வரவால் குலுங்கிப்போயுள்ளது.

யாருக்கும் பயப்படாத சீனாவின் கருங்காலிச் சர்வாதிகாரிகளே பயந்து நடுங்கியது இணையத்திற்குத்தான். அவர்கள் கூகுளை தடை செய்தது இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதுபோல உலகின் ஊழல்கள் எல்லாம் விக்கிலீக்ஸ் வழியாக கசிந்து நாற்றமடிக்கவும் இணையமே மேடை போட்டுக் கொடுத்தது. இதனால்தான் இன்று எங்கெல்லாம் போலி ஒட்டுண்ணி அதிகார வர்க்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் இணையத்திற்கு எதிரான போர்ப் பிரகடனத்தைக் கேட்க முடிகிறது.

இணையத்திற்கு எதிராக எந்த அரசு திரும்புகிறதோ.. அந்த அரசில் பாரிய ஓட்டை இருக்கிறது என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

இனி சிறீலங்காவிற்குள் வருவோம்…

சிறீலங்கா என்றதும் இந்த இழவிற்குள் சிறீலங்கா என்ற ஏழை நாட்டையும் ஏன் இணைக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழும். இருப்பினும் தற்போது சிறீலங்கா அரசுக்கு ஆதரவற்ற பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதால் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இணைய மையத்திடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் நமக்கு அவசியமானவை.

இணையத்தை வைரஸ் அனுப்பி, கேக் (hack) பண்ணி நிறுத்தும் காலத்தைத் தாண்டி, உத்தியோக பூர்வ இலச்சினையுடன் சில இணையப்பக்கங்களை நிறுத்தும் படி கடிதங்கள் எழுதப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் பல தமிழ் இணையங்கள் வெளியாகும் தலைமைக் காட்டிஸ்க் பெட்டியையே அவை வெளிவர முடியாதபடி பூட்டப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது. பொய்யான தகவல்களைக் கொடுத்து இந்தக் கடிதங்கள் புனையப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

இதைக் கேட்டதும் ஆகா பார்த்தீர்களா இது தப்பல்லவா..? என்று யாரும் அலற வேண்டிய தேவையில்லை, உண்மையில் இதை யார் செய்தாலும் அவர்களுக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதுமில்லை.

ஏன்..?

தற்போது பிரான்சில் நடக்கும் ஜீ 20 நாடுகளின் மாநாடு வறுமையும், பொருட்களின் விலையேற்றமும் மேலும் பல நாடுகளில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தும் என்று துல்லியமாகத் தெரிவிக்கிறது. சிறீலங்காவில் வெளியாகியுள்ள 5000 ரூபா நோட்டுக்கள் ஒவ்வொன்றுமே அந்த அரசை ஆடவைக்கப்போகும் கடதாசி இணையப்பக்கங்களே என்பதை காலம் விரைவாக உணர்த்தும். இதை ஜீ – 20 மாநாட்டின் குரல்களில் இருந்து எடைபோட முடிகிறது. ஆகவே சிறீலங்கா அரசுக்கு எதிராக எழுத வேண்டிய தேவையும், அந்த நாட்டு செய்திகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டிய தேவையும் எதிர்கால இணைய உலகிற்கு இருக்கும் என்றும் கூறமுடியவில்லை.

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடும்போது மற்றவரும் அதன் தலையில் மண் அள்ளிக் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஒரு சில தமிழ் இணையப் பக்கங்களை, பொய்க் கடிதம் எழுதி இழுத்து மூடினால்போல் இலங்கையில் பாலும் தேனும் ஆறாக ஓடப்போவதுமில்லை..

ஏனென்றால்..

இணையம் என்பது உலகம் கடந்த அரசாக இருக்கிறது, அது எதிர்கால உலகத்தை மாற்றிப் போடப்போவதை இனி யாராலும் தடுக்கவும் முடியாது.

மாற்றங்களை ஏற்று அதற்கமைய மாறிச் செல்வதே இப்போதைக்கு சிறந்த வழியாகும். எந்த நாட்டில் இருந்தாலும் போலி அதிகார வர்க்கத்தினர் இன்று கிளம்பியுள்ள மக்கள் சக்திக்கு வழிவிட வேண்டும், இல்லையேல் காலம் அவர்களைக் கைவிட்டு புதிய வழியை வரைந்து செல்லும்.

இணையப்பக்கங்களை மூட வேலை செய்வோர் தமது கதிரையும் கேணல் கடாபியின் ஆட்டங்காணும் நாற்காலியையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் ஒன்றென்பதை எளிதில் உணரலாம்.

http://www.alaikal.com/news/?p=57788#more-57788

Link to comment
Share on other sites

  • கடாபியின் ஆட்சியும் அவரின் இரும்பு பிடியும் தளரத்தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது
  • கடாபி தான் இன்னும் பதவியில் உள்ளதாக, நாட்டில் உள்ளதாக தெரிவித்தவண்ணம் உள்ளார்
  • கடாபியின் இராணுவம் இரண்டாகப் பிளவுபடுகிறது?, கடாபிக்கு ஆதரவாக பாதுகாப்பு பிரிவும், வெளிநாட்டு பாதாள குழுக்களும் (mercenaries) ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது
  • நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளது
  • விமானத்தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளன

  • கடாஃபியின் ஆதரவாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தலைநகரில் வன்முறையை கையாண்டதை தொடர்ந்து கடாஃபி அரசாங்கத்தின் மீது உள்நாட்டளவிலும் சர்வதேச அரங்கிலும் அழுத்தம் அதிகரித்துள்ளது
  • பென்காஸி நகரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

சீனாவில் உள்ள லிபிய தூதரக தலைமை அதிகாரி சாடிக் அல் முஸ்ராட்டி தனது பதவியைத் தூக்கி எறிந்துள்ளார்

இந்தியாவில் உள்ள லிபிய தூதரக அதிகாரியும் பதவி விலகியுள்ளார்

அமெரிக்காவில் உள்ள லிபிய தூதுவரும் கடாபிக்கு எதிராக கருத்து தெரிவித்தார்

இதற்குள் கடந்த சனிக்கிழமை (Feb 20) கலவரத்தில் இறந்த ஒருவருடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களை கொல்வதில் லிபிய இராணுவம் இறங்கியது. ஒரேதடவையில் 15 பேரை சுட்டுக் கொன்று மக்களை விரட்டியது. இதுவரை குறைந்தது 200 பேரை கொன்றுதள்ளியுள்ளது லிபிய இராணுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 22, பிப்ரவரி 2011 (13:7 IST)

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி

லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். தமிழக வாலிபரும் பலியாகியுள்ளார்.

நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தில் உள்ள சன்மையாதேவர் மகன் முருகையா(40) திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருடன் 26 பேர் லிபியாவில் உள்ள ஹோண்டாய் மின்சாரகம்பெனியில் பணிபுரிந்து வந்தனர்.

தற்போது நடைபெற்று வரும் புரட்சியில் பணிக்கு செல்லமுடியாததால் தங்களது அறையில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென்று புகுந்த அதிபர் ஆதரவு படையினர் உடனே காலி செய்யுங்கள் என்று எச்சரித்தனர்.

அவர்கள் இடத்தை காலிசெய்யும் முன்னரே குண்டு வைத்து தகர்த்திறுக்கிறார்கள். இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் முருகையாவும் ஒருவர். இந்த தகவலை லிபியாவில் இருந்து தெரிவித்தது நிர்வாகம்.

மேற்கொண்டு விபரம் அறிய நெல்லை கலெக்டரிடம் சன்மையா தேவர் மனு கொடுத்துள்ளார்.

நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நடைபெற்று வரும் புரட்சியில் பணிக்கு செல்லமுடியாததால் தங்களது அறையில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென்று புகுந்த அதிபர் ஆதரவு படையினர் உடனே காலி செய்யுங்கள் என்று எச்சரித்தனர்.

அவர்கள் இடத்தை காலிசெய்யும் முன்னரே குண்டு வைத்து தகர்த்திறுக்கிறார்கள். இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் முருகையாவும் ஒருவர்.

லிபியாவிலும் குண்டுக்கு பலியானது தமிழன் என்னும் போது..... தமிழனின் தலைவிதியை என்னவென்பது. :(

Link to comment
Share on other sites

லிபியாவில் மானிடப் படுகொலை பதவி விலகும்படி ஐ.நா செயலர் அவசர கோரிக்கை

இலங்கை விவகாரத்தில் மானிடப் படுகொலைகள் பற்றி அதிகமாகப் பேசி பின்னர் அடக்கி வாசித்த ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவிற்கான தலைவர் நவி பிள்ளை இப்போது குரல் கொடுத்துள்ளார்.

கேணல் கடாபி மக்கள் மீது தாக்குதல் நடாத்த போட்டுள்ள உத்தரவும் கொல்லப்பட்ட 260 ற்கும் மேற்பட்ட மக்களின் மரணங்களும் ஐ.நாவால் தடை செய்யப்பட்ட மானிடப் பெரும் படுகொலைகளின் குற்றப்பிரிவிற்குள் வரக்கூடியவை என்று நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமுதாயம் இதற்கான நீதி நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஐ.நாவின் பாதுகாப்புச் சபை இன்று மூடிய கதவுகளுக்குள் லிபிய விவகாரம் குறித்து பேசுகிறது. நேற்று கடாபியுடன் தொலைபேசி வழியாக சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஐ.நா செயலர் பான் கி மூன் அவரை பதவி விலகும்படி வலியுறுத்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் நவி பிள்ளையின் குரல் கேட்பதால் லிபியாவின் மானிடப் படுகொலைகளும் சிறீலங்காபோல ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகிப் போய்விடுமோ என்ற நடுக்கமும் ஏற்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=58029

Link to comment
Share on other sites

கடாபிக்கு சிறிலங்கா ஆதரவு

உலகில் எந்த நாடும் லிபிய ஜனாதிபதிக்காக குரல் எழுப்பாத நிலையில், கடாபிக்கு உதவ தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்தி அனுப்பி உள்ளதாக சிறிலங்கா கார்டியன் தகவல் வெளியிட்டுள்ளது .

லிபியாவில் இடம்பெற்று வரும் ஜனாயக கிளர்ச்சியாளர்கள் மீது விமான குண்டுத்தாக்குதல் நடத்துமாறு பணிக்குமளவுக்கு கடாபி சென்றது சர்வதேச மட்டத்திலும் மற்றும் அவரது படை அதிகாரிகள், இராஜதந்திரிகள், மந்திரிகள் உட்பட பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மத்திய கிழக்கில் இடம்பெறுவது போன்று 1848ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட இத்தகைய மக்கள் எழுச்சிதான் ஐரோப்பாவில் ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலியது. அந்த எழுச்சி முதலில் பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் பரவி, ஐரோப்பாவில் நிலவிய அனைத்து மன்னர் ஆட்சிகளுக்கும் முடிவுகட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7C369004-F2C0-469D-9BDF-E8CDA28582E9}

லிபிய விமானிகள் மோல்ராவில் அடைக்கலம், மக்கள் மீது தாக்குதல் நடாத்த பணிக்கப்பட்டதால் விமானங்களுடன் தப்பி வந்ததாக தெரிவிக்கின்றனர்.

http://www.alaikal.com/news/?p=58033

Link to comment
Share on other sites

தப்பியோடவில்லை என கடாபி அதிரடி அறிவிப்பு _

வீரகேசரி இணையம் 2/23/2011 10:18:05 AM 5

லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் "நான் நாட்டை விட்டு தப்பியோடவில்லை" என அந்நாட்டு அரச தொலைக்காட்சி சேவையில் தோன்றிய கடாபி தெரிவித்துள்ளார்.

தான் வெனிசூலாவிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுபவை பொய்யென்றும் ஒருபோதும் பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடாபிக்கு ஆதரவான இராணுவத்தினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்படுவதாகவும் சடலங்கள் வீதிகளில் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகள் பல கடாபிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

Link to comment
Share on other sites

லிபிய உள்நாட்டமைச்சர் பதவி விலகினார்- கடத்தப்பட்டார்

February 23, 2011

கேணல் கடாபியின் இரும்புக் கரங்களுக்கு அஞ்சாமல் அந்த நாட்டின் உள்நாட்டு அமைச்சர் அபிடில் பாத் யூனஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மாசி 17 புரட்சி என்று பெயரிடப்பட்டுள்ள லிபிய மக்கள் புரட்சி இயக்கத்தில் தானும் சங்கமமாவதாக அவர் அறிவித்தார். இவருடைய பிரகடனம் தனியார் விடியோவில் ஒளிப்பதிவு செய்து வெளியிடப்பட்டுள்ளது. லிபிய மக்களின் சட்டரீதியான கோரிக்கைக்கு இணங்காது அவர்கள் மீது இராணுவத்தை பிரயோகித்த குற்றத்திற்காக தான் பதவி விலகியதாக தெரிவித்தார். கடாபியின் ஆட்சியில் அவருக்கு எதிராக அவரையே எதிர்த்து பதவி விலகும் முதலாசது அமைச்சர் இவராகும். சர்வதேச சமுதாயம் கடாபிக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதோடு தற்போது கடாபிக்கு எதிராக திரும்பி வரும் இராணுவத்தினருக்கும், போராடும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பந்திய செய்தி பதவி விலகி போராட்டத்தில் ஈடுபட்ட இவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி: அலைகள்

Link to comment
Share on other sites

  • பன்னாட்டு மக்கள் வெளியேறுகின்றனர்
  • லிபிய மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர்

  • தனது மக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களை பாவிப்பது ஒரு போர்க்குற்றமாக பார்க்கப்படலாம் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

  • தலைநகர் திரிப்பொலியில் கடாபியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிரான ஒரு கலவரத்திற்கு / போருக்கு தயாராகி வருகின்றார்கள்
  • யார் இதில்வெல்லுவார்கள் என கூற முடியாமல் உள்ளதாக சொல்லப்படுகின்றது
  • ஆனால், கடாபி பதவியில் தொடர்ந்தும் இருப்பார் எனில், பல மக்களும் ஆர்ப்பாட்டகாரர்களும் கொல்லப்படுவார்கள் என அஞ்சப்படுகின்றனர்

  • பல பெரிய நகரங்கள், கிழக்கு மேற்ரும் தெற்கு லிபியாவில் அரச கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
  • மேற்கு பகுதிகளும் அரச கட்டுப்பாட்டை விரைவாக இழக்கின்றன

இன்று மத்தியகிழக்கில் நடப்பவை அமெரிக்காவுக்கு, அதன் மசகு எண்ணெய் மீதான மாற்று மூலங்களை அதன் தேடல்களை ஊக்குவிக்கவேண்டும். இல்லையெனில், அமெரிக்காவின் பொருளாதாரம் மத்தியகிழக்கின் மசகு எண்ணெய்க்கு ஒரு அடிமையாக இருக்கும் - தாமஸ் பிரைட்மேன், நியூயார்க் டைம்ஸ்.

If Not Now, When?

“America, you have built your house at the foot of a volcano. That volcano is now spewing lava from different cracks and is rumbling like it’s going to blow. Move your house!” In this case, “move your house” means “end your addiction to oil.”

http://www.nytimes.com/2011/02/23/opinion/23friedman.html?_r=1&hp

Link to comment
Share on other sites

லிபியாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா புதிய தடைகள்

கேணல் கடாபி ஆர்பாட்டம் செய்யும் மக்களுக்கு எதிராக நீட்டியுள்ள துப்பாக்கி அவருடைய ஆட்சிக்கு பெரும் தலைவலியாக வந்து இறங்கியுள்ளது. லிபியாவிற்கு எதிரான தடைகளை போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. லிபியாவிற்கு எதிராக என்னென்ன தடைகளைப் போடலாம் என்ற விபரங்களை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் இந்தத் தடைகள் குறித்த ஆலோசனைகள் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் பார்வைக்கு வருகிறது. லிபியா மீள முடியாத நெருக்கடிக்குள் மாட்டுப்படப் போகிறது.

இது இவ்விதமிருக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லிபியாவுக்கு எதிராக எத்தகைய உயர்மட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதுபற்றி சிந்திக்கும்படி அமெரிக்கப் பாதுகாப்பு சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். லிபியாவில் நடைபெறும் பொது மக்கள் படுகொலைகளை தடுத்து அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த வழி என்ன என்ற முடிவுக்கு விரைவாக வரும்படி அவருடைய உத்தரவு தெரிவிக்கிறது.

அதேவேளை இன்று வெளியான அல் குவைடா அமைப்பின் அறிக்கை லிபியாவில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது. ஆறு மில்லியன் மக்கள் கொண்ட பாலைவனங்கள் நிறைந்த லிபியா இப்போது இரண்டாகப் பிளவுபடக்கூடிய நிலையும் காணப்படுகிறது. கிழக்கே கடாபியும், மேற்கே ஆர்பாட்டக்காரரும் ஆட்சியை தக்க வைக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. அல் குவைடாவின் அறிக்கை அமெரிக்காவை வேகமாக திசை திருப்பும் விசையையும் கொடுக்கலாம்.

http://www.alaikal.com/news/?p=58363

கடாபியின் அடக்குமுறைக்கு பதிலடி தரப்படும்: ஒபாமா

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிபியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தண்டிக்கும் நடவடிக்கையில் அதிபர் கடாபியின் அரசு இறங்கியுள்ளது. இந்தச் செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. நாகரீகமற்ற செயலும் கூட. லிபியா அரசின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு,தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என, உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். லிபியா மக்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். லிபியாபில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி எனது நிர்வாகத்தையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மற்ற கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற உலக நாடுகளைப் போல, லிபியா அரசும் வன்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். இதுவரை கடமைகளைச் செய்யத் தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=194770

Link to comment
Share on other sites

லிபியா கலவரம்: மேலும் ஒரு தமிழர் பலி!

நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தில் இருந்து லிபியாவில் 30 பேர் ஹுண்டாய் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். லிபியாவில் ஏற்பட்ட கலவரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இவர்கள் தங்கியிருந்த இடத்தின் மீது குண்டு வீசப்பட்டது. அதில் முருகையா என்பவர் பலியானார். அதில் காயமடைந்த அசோக்குமார் என்ற இளைஞர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்து போனார்.

மற்ற 28 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=10804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gaddafi.jpg

Gaddafi_Italien_1.jpg

என்னத்தை சொன்னாலும் தன்ரை மெய்ப்பாதுகாப்பு ஆக்களை ஒரே பொம்புளை கூட்டமாய் வைச்சிருந்ததெண்டால் கடாபிதான்.சிங்கன் பயங்கர விசயகாரன்.

28ddec4f.jpg

கடாபியோடை நிக்கிற அரை மொட்டையரும் மினைக்கட்டு பாக்கிறார் ஒண்டும் சரிவருதில்லை.இவரும் அஞ்சாறு ரிவி ஸ்ரேசனை திறந்து வைச்சுக்கொண்டு சனத்தையும் ஊரையும் பேக்காட்டி சம்பாதிச்சுக்கொண்டு திரியுறார் அதுதான் எங்கடை கருணாநிதிமாதிரி

Joko_Londo-gaddafi-female-bodyguards2.jpg

Joko_Londo-356926.jpg

gaddafi_with_women_bodyguard1.jpg

Link to comment
Share on other sites

டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடியாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி ஒழியப் போவது நிச்சயமாகிவிட்டது.

  • கடாஃபியின் கையைவிட்டு நழுவுகிறது லிபியா
  • உள்நாட்டுப் போர் மூளும் சூழல்
  • அதிபர் மம்மர் கடாஃபியின் 41 ஆண்டுக்கால ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
  • லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது.
  • பல ராணுவத் தளபதிகளே கடாஃபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டுவிட்டனர்.
  • லிபியாவின் தூதரக அதிகாரிகள் ஒவ்வொருவராக பதவி விலக ஆரம்பித்துவிட்டனர்.

தடைகள் விதிக்கப்படும்:

முதல் கட்டமாக லிபியா மீது ராணுவ, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அதன் பிறகும் நிலைமை சீரடையவில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சியாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினரும் கூலிப்படையினரும் தலைநகர் திரிபோலியில் மக்களைக் கொடூரமாக அடக்கி ஒடுக்குகின்றனர்.

மேற்கிலும் பரவியது கலகம்:

அதிபர் கடாஃபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம், கடாஃபி கட்டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.

மிசுராடாவில் ராணுவம் சுட்டது:

அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.

விலகிய அமைச்சர் கடத்தப்பட்டார்?

கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை பிடிக்காமல் பதவியை ராஜிநாமா செய்வதாக உள்துறை அமைச்சர் அப்துல் ஃபதா யூனஸ் அல் அபிதி அறிவித்திருந்தார். அவரைத் தனக்கு விசுவாசமான ராணுவத்தார் மூலம் அதிபர் கடாஃபி எங்கோ கடத்திச் சென்றுவிட்டார் என்பது வியாழக்கிழமைதான் தெரிந்தது. அவர் உயிரோடு இருக்கிறாரா, சித்திரவதை செய்யப்படுகிறாரா அல்லது சுட்டுக்கொன்றுவிட்டார்களா என்று எதுவுமே தெரியவில்லை.

மேஜர் ஜெனரல் மக்களுடன் சேர்ந்தார்:

டொப்ருக் என்ற நகரில் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுலைமான் மெஹ்மூத் என்பவர் கடாஃபியின் பக்கமிருந்து விலகி மக்கள் பக்கம் சேர்ந்துகொண்டுவிட்டார். கடந்த காலத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்தோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, கடாஃபி இரக்கமற்ற சர்வாதிகாரி என்று கூறினார் சுலைமான் மெஹ்மூத்.

திரிபோலியில் ராணுவம் ரோந்து:

தலைநகர் திரிபோலியில் கடாஃபிக்கு விசுவாசமான ராணுவ வீரர்களும் கூலிப்படையினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்பவர்கள் கெஞ்சினாலும் அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிபருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர்.

தகவல் தொடர்பு துண்டிப்பு:

லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்களுடன்கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

விமான நிலையங்களில் மக்கள் வெள்ளம்:

நிலைமை மேலும் மோசமாவதற்குள் லிபியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட்டனர். இதனால் விமான நிலையங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின்றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்து வர விமானங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கிவிட்டன.

1,000 பேர் சாவு:

கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி கூறுகிறார்.

பெங்காசியிலிருந்து பரவியது:

கடாஃபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கியது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது. தொலைபேசி, கைபேசி, இணையதள தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும் அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதிராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.

பெங்காசி, டொப்ருக் நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாஃபிக்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத்தாடுகின்றனர். பாட்டுப்பாடி நடனம் ஆடுகின்றனர்.

ஒபாமா தீவிர ஆலோசனை:

கடாஃபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்திராமல் ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருதுகிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இது தொடர்பாக முதலில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடுகளின் தலைவர்களுடைய கருத்துகளையும் அவர் கேட்டு வருகிறார்.

கடாஃபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடைபெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கள்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு வெளிநாடுகளின் அமைச்சர்கள் வருகின்றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கடாஃபி மகள் பதவி பறிப்பு:

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெண்ணத் தூதராக கடாஃபியின் மகள் ஆயிஷா அல் கடாஃபி நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. மன்றம்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D&artid=381867&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Link to comment
Share on other sites

  • ஆபிரிக்காவில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஆறு மில்லியன் மக்களே வாழ்கின்றனர். பெரும்பகுதி பாலைவனமாக உள்ளது.

  • பெங்க்காசி உட்பட பல கட்டுப்பாட்டுக்களை இழந்த நகரங்களுக்கு இராணுவத்தை, விமானப்படையை, கடற்படையையை அனுப்ப முயற்சித்துள்ளார். பலரும் ஆணையையை ஏற்றுள்ளார்கள், ஏற்க மறுத்தால் கொல்லப்படுவார்கள் என்பதால். ஆனால், மக்களுக்கு எதிராக செயற்படவில்லை. பலரும் மக்களுடன் இணைந்துள்ளார்கள்.

  • யாராவது ஒரு புலனாய்வுத்துறை அல்லது முப்படை உறுப்பினர் கடாபியை கொலையை செய்யும்பொழுது மேலதிக இரத்தக்களரி தவிர்க்கப்படலாம் என எண்ணப்படுகின்றது.

  • நாடு இரண்டாக பிரியலாம் எனவும், ஒருபகுதி சோமாலி போன்று ஒரு கட்டுப்பாடு இல்லாத நாடாகலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. இந்த நிலை வந்தால் இங்கிருக்கும் எண்ணெய் வளம் பற்றி மேற்குலகம் கவலை கொண்டுள்ளது.

  • திரிப்பொலி (தலை நகரில்) இறுதி சண்டைகள் நடக்கலாம் என சொல்லப்படுகின்றது. தான் தன்னை கொலை செய்யும் பொழுது எண்ணெய்கிணறுகளை தீயிடலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

  • தன்னை ஒரு அரச பரம்பரை ( பிரித்தானியா இராணி போன்று) லிபியாவில் வாழவிடுமாறு தொலைக்காட்சி மூலம் வேண்டினார் கடாபி. இது அவரின் பிடி தளருவதற்கான அறிகுறி என சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites



  • அமெரிக்க பொருளாதார தடையை லிபியா மீது அமுல்படுத்த உள்ளது. தனது தூதுவராலயத்தினை மூடவும் முடிவு செய்துள்ளது.
  • பல மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவை பின்பற்ற உள்ளன.
  • ஐ. நா. கூட பொருளாதார தடையை லிபியா மீது அமுல்படுத்த கோரியுள்ளது.
  • பல மனித உரிமை ஆர்வலர்களும் "பறக்கமுடியாத வான் பரப்பை" "No Fly Zone"அறிவிக்க வேண்டுகோள் விடுக்கின்றனர்

  • இலங்கையர் பேர் உள்ளனர். இவர்களை இந்திய உதவி மூலம் லிபியாவில் இருந்து அழைக்க உதவி கோரியுள்ளது.

  • பதவி விலக மறுத்து வரும் லிபியா அதிபர் முகமத் கடாபியின் லண்டன் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
  • உலக வங்கிகளில் பில்லியன் டாலர்கள் உள்ளதாக சொல்லப்படுகின்றது. அனைத்தும் கடாபியின் ஆதரவாளர்கள் பெயரிலேயே உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

  • தலைநகர் திரிப்பொலியில் கடாபியின் ஆதரவாளர்கள் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்
  • கனரக ஆயுதங்கள், டாங்கிகள் மக்கள் மீது பாவிக்கப்படுவதால் மக்கள் பெருமளவில் வீதிகளில் இறங்குவதை தவிர்த்தனர்
  • ஐ. நா.வுக்கான லிபியாப்பிரதிநிதி அவரை ஒரு "புத்தி சுவாதீனம் அற்றவர்" (Mad man) என இன்று வர்ணித்தார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.