Jump to content

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்


Recommended Posts

  • லிபியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் ஆயிரக்கணக்கான லிபியர்கள் உயிரை விட நேரிடும் என்று உலக நாடுகளை லிபிய அதிபர் கடாபி நேற்று கடுமையாக எச்சரித்தார்.

  • லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த சில வாரங்களுக்கு முன் போராட்டம் வெடித்தது. அதிபரின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு பகுதியை சேர்ந்த சில நகரங்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

  • ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு, வான்வழி குண்டு வீச்சில் 1,000 பேர் பலியானதாக கூறப்பட்டது.ஆனால், பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டி விட்டதாக அதிபர் ஒபாமாவுக்கு லிபியாவுக்கான அமெரிக்க தூதர் தகவல் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • இதையடுத்து, லிபியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, கடாபியை எச்சரிக்க மத்திய தரைகடல் பகுதிக்கு ராணுவ கப்பலை ஒபாமா அனுப்பியுள்ளார். அதில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.இதையறிந்த, கடாபி மேலும் ஆவேசம் அடைந்தார்.

  • இதற்கிடையே, இருதரப்பு மோதல் தீவிரம் அடைந்து வருவதால் உயிருக்கு பயந்து 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட லிபியர்கள் எல்லை தாண்டி எகிப்து, துனிசியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் வெளியேற தயாராக எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா. அகதிகள் கண்காணிப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

  • கச்சா எண்ணெய் நிறைந்த நாடு மட்டுமல்ல லிபியா. அதில் மிகத் தரமான எண்ணெய் கிடைக்கும் நாடு என்பதால் ரூ.2.7 லட்சம் கோடிக்கு உயர்ந்த பொருளுக்கான நிதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், லிபியா முதலீட்டு ஆணையம்தான் இன்று உலகின் மிகப் பெரிய நிதியை நிர்வகிக்கும் அமைப்பாக விளங்குகிறது என்று அமெரிக்க மீடியாவான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.கச்சா எண்ணெய் மீதான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை லிபிய மத்திய வங்கியும், லிபிய அன்னிய வங்கியும் நிர்வகிக்கின்றன. ஜனவரி 2010ம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்க வங்கிகளில் லிபியா ரூ.14.4 லட்சம் கோடி முதலீடுகளை வைத்துள்ளதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

http://www.dinakaran.com/worlddetail.aspx?id=30750&id1=7

கடாஃபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

  • லிபிய அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • லிபியாவில் ராணுவ விமானங்கள் மூலம் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களை கடாஃபி கொலை செய்து வருவதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&artid=384818&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply

மகிந்தவிடம் தஞ்சம் கோர ஆலோசித்தாரா கடாபி? - இருவரும் தொலைபேசியில் ஆலோசனை

இவ்விரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு இருப்பதால், லிபிய நிலைமைகள் மோசமடைந்தால் சிறிலங்காவின் அடைக்கலம் புகுவதற்கு கேணல் கடாபி ஆலோசித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={1A13FF21-0731-4B7C-8B61-DBC2F9A0A45E}

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பியச் சக்திகள் இராணுவ நடவடிக்கை உட்பட லிபியாவில் தங்கள் தலையீட்டிற்கான தயாரிப்புக்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

விமானத் தளத்தைக் கொண்டுள்ள USS Enterprise மற்றும் நீரிலும் தரையிலும் செல்லும் ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ள இரு கப்பல்களான USS Kearsarge மற்றும் USS Ponce ஆகியவை தென்மேற்கு மத்தியதரைக்கடலில் நிலை கொண்டுள்ள நேரத்தில் அவருடைய அறிக்கை வந்துள்ளது. இதன் நோக்கம் லிபியாவிற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் “அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அதில் வளைந்து கொடுக்கும் தன்மையை அளிப்பதுதான்” என்று ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி கூறினார்.

லிபியக் கடலோரப் பகுதியையோட்டி கடலில் பிரிட்டன் ஒரு கடற்படை அழிப்புக்கப்பல் மற்றும் பிரிகேட்டை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈராக் மற்றும் முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடந்த தலையீடுகளில் இருந்தது போலவே, “மனிதாபிமானம்” பற்றிய கவலைகள்தான் காலனியப் படையெடுப்பிற்கு ஒரு முறைப்பு கொடுப்பதற்கு முன் வைக்கப்பட்டுள்ளன. லிபியாவில் இருந்து தப்பியோடிச் செல்லும் பல்லாயிரக்கணக்கான குடியேற்ற தொழிலாளர்கள் துனிசியாவில் நுழைந்துள்ளனர், அதைத்தவிர பலரும் எல்லையில் எவருக்கும் உரிமை இல்லாத இடத்தில் தற்பொழுது பொறியில் அகப்பட்டுள்ளது போல் உள்ளனர். உறைவிடம் இல்லாமல், குறைந்த அளவு பொருட்களே உள்ள நிலையில், பங்களாதேசம், கானா மற்றும் எகிப்தில் இருந்து பெரும்பாலும் வந்துள்ள தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு அதிக ஆதரவு அல்லது வழிவகையைக் கொண்டிருக்கவில்லை.

கடாபியின் படைகள் குடிமக்களைத் தாக்கும் முயற்சியை நிறுத்துவது என்ற பெயரில் லிபிய வான்பகுதியில் ஒரு “பறக்கக் கூடாது” வலயப் பகுதியை நிறுவுதலை விவாதிப்பதற்காக பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி ஆகியோருடன் பேசிய பின் “மேசையில் முடிவுகள் ஏதும் அகற்றப்படவில்லை” என்றார் கிளின்டன்

சமீபத்திய நாட்களில் எதிர்ப்புச் சக்திகள் கைப்பற்றி இருக்கும் அஜ்டபியா, மிஸ்ரடா, மற்றும் திரிப்போலிக்கு மேற்கேயுள்ள மூலோபாயத் துறைமுக நகரான ஜவியா ஆகிய பகுதிகளை மீட்க கடாபி முற்பட்டுள்ளார். இம்முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன போல் தோன்றுகிறது. லிபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் மீதான கட்டுப்பாட்டின் பெரும் பகுதியையும் கடாபி எதிர்க்கட்சிகளிடம் இழந்துவிட்டார்.

http://www.ilankainet.com/2011/03/blog-post_3533.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபிக்கு புகலிடம் அளிக்கும் முடிவை மகிந்த எடுப்பாரேயானால் அதுவே எமது போராட்டத்தை உலகத்துக்கு வெளிச்சமாக்க உதவும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • லிபியாவில் உள்நாட்டுப் போர் நடப்பதை தடுக்கவும் லிபிய பிரச்சனைக்கு முழு தீர்வு காணவும் சர்வதேச அமைதி அமைப்பு ஒன்றை உருவாக்கி சமரசம் செய்து வைக்க தான் தயார் என்று வெனிசூலா அதிபர் ஹக்கோ சாவேஸ் அறிவித்தார். பிரிட்டனும், பிரான்சும் இக்கோரிக்கையை நிராகரித்தன.

  • வெனிசூலா அதிபர் மற்றும் லிபியா அதிபர் அமெரிக்காவிவை எதிர்த்து கண்டனக் குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்கர்களுக்கு ஒரு படிப்பினை தருவோம். சுதந்திர லிபியா நீண்டு வாழ வேண்டும் எனவும் சாவேஸ் தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

http://www.newsonews.com/view.php?20edBnZ5dbc43QCAA234eaC608Eae020TlOmYcddc4mOldT220egE806dae42OUMQo4cbdcZnBdp02

  • போராட்டக்காரர்கள் வசம் உள்ள லிபியாவின் எண்ணெய் வள பகுதிகளை மீட்க ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

  • தாக்குதல் தொடர்ந்தால் கடாபி கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள பிரெகா, அஜ்படியா உள்ளிட்ட பகுதிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இப்பகுதியை மீட்பதற்காக, இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

  • பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக, கடாபி, அவரது மகன்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் கடாபி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinakaran.com/worlddetail.aspx?id=30828&id1=7

  • தமது நாட்டு மக்கள் மீதே வானிலிருந்து குண்டுவீச்சுக்களை நடத்த கட்டளையிட்டதாக, கடாபிக்கு நெதர்லாந்து ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

  • இந்நிலையில் தொலைபேசியில் கடாபியை தொடர்பு கொண்ட ராஜபக்ச, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாக தெரிவித்ததாகவும் லிபியாவில் விரையில் சமாதானம் நிலைக்க வேண்டிக்கொள்வதாக கூறியதாகவும், அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

  • இதன் மூலம் கடாபிக்கு பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களின் ஆதரவு இன்னமும் இருக்கிறதென அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/srilanka/3192-2011-03-04-16-23-10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[*]லிபியாவில் உள்நாட்டுப் போர் நடப்பதை தடுக்கவும் லிபிய பிரச்சனைக்கு முழு தீர்வு காணவும் சர்வதேச அமைதி அமைப்பு ஒன்றை உருவாக்கி சமரசம் செய்து வைக்க தான் தயார் என்று வெனிசூலா அதிபர் ஹக்கோ சாவேஸ் அறிவித்தார். பிரிட்டனும், பிரான்சும் இக்கோரிக்கையை நிராகரித்தன.

-------

இது எல்லாம்... ஸ்ரீலங்கா, இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் கொடுத்த ஐடியாவாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய தலைநகரில் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து பெரும் பதற்ற நிலை _

வீரகேசரி நாளேடு 3/5/2011 9:23:59 AM Share

லிபிய தலைவர் கேணல் மும்மர் கடாபியின் கட்டுப்பாட்டிலுள்ள திரிபோலி நகரில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகையையடுத்து பெரும் பதற்ற நிலை நிலவியது.

தொழுகையையடுத்து பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில் எந்நேரமும் அங்கு வன்முறை மோதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் திரிபோலி நகரின் பாதுகாப்பு கடாபியின் ஆதரவு படையினரால் என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாட்டின் கிழக்குப் பிராந்திய நகர்களில் வெள்ளிக்கிழமை விமானங்கள் புதிதாக குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளன.

கேணல் கடாபியின் 41 வருடகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பெப்ரவரி மத்தியில் அந்நாட்டில் வெடித்த புரட்சி தற்போது உக்கிர நிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திரிபோலி நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்கு பின்னர் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் இரவோடிரவாக அந்நகரிலுள்ள பள்ளிவாசல்களை கடாபியின் ஆதரவாளர்கள் மூடியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் இணையத்தளங்களின் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதை தடுக்கும் முகமாக இணையத்தள சேவைகளும் நிறுத்தப்பட்டதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நகரில் வகை தொகையின்றி கைதுகளும் இடம்பெற்றுள்ளன. திரிபோலி நகருக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் இரு சோதனைச் சாவடிகளை ஸ்தாபித்த கடாபியின் ஆதரவாளர்கள், அவ்வழியாக செல்லும் வாகனங்களில் தேடுதல் நடத்தினர்.

அத்துடன் திரிபோலி நகரிலுள்ள பிரதான ஹோட்டலொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் பிற்பாடு இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் செய்திகளை சேகரிக்க வெளியில் செல்வதற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் விபரிக்கையில், அல்கொய்தா போராளிகளுடன் தொடர்புடையவர்களால் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்பதால் ஊடகவியலாளர்களின் சொந்தப் பாதுகாப்பிற்காகவே அவர்களை ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லையென்று கூறினார். _

Link to comment
Share on other sites

இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி!!

லிபியாவில் கலவரக்காரர்களுக்கபு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மொம்மர் கடாபி.

http://www.alaikal.com/news/?p=59580

லிபியாவில் கடும் மோதல் – இழந்த பிரதேசங்களை மீட்க கடாபி கடும் முயற்சி

லிபியாவில் கேணல் கடாபியின் படையினருக்கும், எதிர்த்தரப்பு மக்கள் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்பும் கனரக ஆயுதங்கள் கொண்டு மோதி வருகின்றன. லிபிய தலைநகர் றிப்போலிக்கு மேற்காக 30 மைல் தொலைவில் உள்ள சவியா பகுதியிலேயே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இரு தரப்பும் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்த்தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பென்காசி பகுதியில் உள்ள ஆயுதங்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினாலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

http://www.pathivu.com/news/15530/57/.aspx

Libya rebels repel Gaddafi forces

More than 30 people killed as opposition fighters force back government troops in western town of Az Zawiyah.

http://english.aljazeera.net/news/africa/2011/03/201135125535120828.html

Link to comment
Share on other sites

லிபியாவில் பிரிட்டன் படைகள் சிறைப்பிடிப்பு

UK negotiating to free captured troops, Libya rebels say ( http://www.cnn.com/2011/WORLD/africa/03/06/libya.british.troops/index.html?hpt=T1 )

பிரிட்டன் படைகளைச் சேர்ந்த நால்வர் லிபியா இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக சன்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை மிகவும் இரகசியமாகப் பேணிய பிரிட்டன் தனது அதிகாரிகள் அடங்கிய குழுவினரை தற்போது லிபியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் செய்திகள் அகப்பட்டவர்களின் தொகையை அம்பலப்படுத்தாவிட்டாலும் அல் ஜஸீரா செய்திகள் நால்வர் என்கிறது. இதுபோல சில தினங்களுக்கு முன்னர் கொலன்ட் படையினர் மூவர் கைது செய்யப்பட்டனர். லிபிய விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமல் இருந்த பிரிட்டனின் கையில் லிபிய இராணுவத் தேள்கள் கொட்டிய இரகசியம் இப்போதுதான் கசிய ஆரம்பித்துள்ளது. கடாபியை ஏற்கவும் முடியாது வலிக்கு அலறவும் முடியாத அவலத்தில் பிரிட்டன் சிலரை அனுப்பியுள்ளது. பிரிட்டனிடம் கடாபி மிகப்பெரிய கோரிக்கையை முன் வைக்க வாய்ப்புள்ளது.

http://www.alaikal.com/news/?p=59770

Gadhafi proclaims victories as battles continue

http://www.cnn.com/2011/WORLD/africa/03/06/libya.conflict/index.html?hpt=T2

Gunfire erupts in Libyan capital

Heavy shooting reported in Tripoli, as protests against Muammar Gaddafi's more than 41-year-old rule continue.

http://english.aljazeera.net/news/africa/2011/03/2011366229544277.html

கடாபி படைகள் பெரும் முன்னேற்றம்

கடாபியின் படைகள் போராட்டக்காரர்களை ஒடுக்கி பெருமளவு முன்னேறி உள்ளதாக லிபியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஜவயா ராஸ் லனப் மற்றும் மிஸ்ரட்டா டோப்ருக் நகரங்களில் போராட்டக்காரர்களை ஒடுக்கியதாக லிபிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் திரிபோலியாவில் அதிகாலை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. இந்த துப்பாக்கிச் சூடு மோதல் அல்ல. வெற்றிக் கொண்டாட்டம் என அரசு செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறினார்.

நேற்று திரிபோலிக்கு மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள ஜவயா நகரில் கடாபியின் துருப்புகள் மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர் என அவர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் ராஸ்லனப்பில் உள்ள எண்ணெய் முனைய துறைமுகத்தை கைப்பற்றிய பின்னர் பின் ஜவாத் நகரில் நுழைந்தனர்.

http://panipulam.net/?p=10228#more-10228

லிபியாவின் ஸாவியா நகரத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை முறியடித்திருக்கின்றது கிளர்ச்சிக் குழு

லிபியாவின் ஸாவியா என்ற நகரத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை முறியடித்திருப்பதாக கிளர்ச்சிக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று காலை அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று, அரச படைகள் நகர மத்தியிலிருந்து பின்வாங்கச் செய்யப்பட்டன.

எனினும், அரச படைகள் ஒன்றிணைந்து மீண்டும் மற்றுமொரு தாக்குதலை ஆரம்பிக்கலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.இன்றைய தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6783

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய துறைமுக நகரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்

வீரகேசரி இணையம் 3/6/2011 4:17:57 PM

லிபிய கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ராஸ் லனாப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நகருக்கு வெளியே உள்ள இராணுவ தளம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி நகரத்தை கைபற்றியுள்ளனர்.

இராணுவ வீரர்கள் அனைவரும் நகரை விட்டு ஓடிவிட்டார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள அஸ் சவ்வியா நகரை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காக இராணுவம் நடவடிக்கை கடாபி எடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றிய இராணுவ தளங்கள் மீது கடாபியின் போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. இதில் 30 அப்பாவிகள் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந் நிலையில் சர்வதேச பொலிஸ் கடாபிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது. _

Link to comment
Share on other sites

லிபிய எண்ணெய் குதங்களை பறக்கப்பறக்க விற்கும் கடாபி !

லிபிய எண்ணெய்க் குதங்களை தோண்டி அவசர அவசரமாக விற்று, பணத்தை அள்ளிக் குவிக்கும் வேலையில் கேணல் கடாபி தீவிரமாக ஈடுபட்டு வருவதாக இன்றைய பைனான்ஷியல் ரைம்ஸ் எழுதியுள்ளது.

ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ள கடைசிக்கட்டத்தில் நாட்டின் எண்ணெய்க் குதங்களை எல்லாம் சூறையாடி வேறு நாடுகளின் தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையில் விற்க ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கிறது.

போராளிகள் பல எண்ணெய் குதங்களை கைப்பற்றினாலும் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய்க்குதம் கடாபியின் கைவசமே இருக்கிறது. ஐ.நாவின் வர்த்தகத் தடை விதிக்கப்பட்டாலும் அதை கடுகளவும் கருத்தில் கொள்ளாது சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனக் கப்பல்கள் அவசர அவசரமாக கடாபியின் மசகு எண்ணெயை வாங்கிக் கொண்டிருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. தினசரி 570.000 தொன் ஓயில் ஏற்றுமதியாகிறது. இரண்டு வாரங்களில் மட்டும் கடாபி 770 மில்லியன் டாலர்களை பையில் இறைத்துப் போட்டுள்ளார். மார்ச் மாதம் பிரச்சனை ஆரம்பித்த நாளில் இருந்து இந்த விற்பனை அமோகமாகியுள்ளது. கடாபி ஆட்சியில் தாக்குப் பிடிக்கும் ஒவ்வொரு நாளும் 570.000 தொன் ஓயிலை விற்று பணத்தை சூறையாடிக் கொண்டேயிருப்பார். இப்பணம் லிபிய வங்கிகளுக்கே செல்லும். லிபிய வங்கிகளின் செயற்பாடு இன்னமும் ஐ.நாவால் உறைய வைக்கப்படவில்லை.

எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கும் 18 நாட்கள் பதவியில் தாக்குப் பிடித்தபோது அவர் முக்கியமாக செய்தது நாட்டில் உள்ள பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடும் வேலையைத்தான். இப்போது கடாபியின் கைவரிசை ஆரம்பமாகியுள்ளதாக பைனான்ஷியல் ரைம்ஸ் கூறுகிறது.

http://www.alaikal.com/news/?p=59905

Fierce fighting rages in Libya

Opposition forces across the country are battling forces loyal to Muammar Gaddafi in their bid to overthrow his regime.

There has been fierce fighting in Misurata, located between Tripoli and Gaddafi's hometown Sirte, with reports of at least 18 people killed.

However, Al Jazeera's Jacky Rowland, reporting from the town of Brega, said that the opposition forces had advantages in terms of "their sheer number, patriotism and enthusiam".

http://english.aljazeera.net/news/middleeast/2011/03/20113711929686158.html

Map of How the Rebellion Is Unfolding in Libya

http://www.nytimes.com/interactive/2011/02/25/world/middleeast/map-of-how-the-protests-unfolded-in-libya.html?ref=middleeast

Link to comment
Share on other sites

லிபியாவுக்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை ஐக்கிய நாடுகள் அமைப்பு நியமதித்தது.

ஜோர்டானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்தெலிலா அல் கரிபை (Abdelilah Al-Khatib) சிறப்புத் தூதுவராக நியமிப்பதாகவும், லிபியாவில் ஏற்பட்டுள்ள அவசர மனிதாபிமான நெருக்கடி குறித்து ரிறிப்போலியிலும், அந்தப் பிராந்தியத்திலும் உள்ள அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்துவாரெனவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் குழுவொன்றை ரிறிப்போலிக்கு அனுமதிப்பதற்கு லிபியத் தலைவர் மோமர் கடாபி இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.

தேவைக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுது;துமாறும் அரசிடம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்தார்.

ரிறிப்போலியில் இருந்து 200 கிலோ மீற்றர் கிழக்கில் அரச படைகளின் தாக்குதல் இடம்பெற்ற மிஸ்றாடா (Misrata) நகரில் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுதாகவும், உதவிப் பணியாளர்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவேண்டுமெனவும் நிவாரண நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் இணைப்பாளர் வலறி ஏமோஸ்(Valerie Amos) கேட்டுக் கொண்டார்.

அங்குள்ள மருத்துவமனையில், 21 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை மீது அரச படைகள் தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6814

லிபியா அதிபருக்கு ஒபாமா எச்சரிக்கை

லிபியாவில் தொடர்ந்து ‌பொதுமக்களுக்கு ‌எதிரான வன்முறையை தூண்டிவிடுவதை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என அமெரிக்க அதிபர் ஒபாமா, எச்சரித்துள்ளார். இதனால் அங்கு அமெரிக்க மற்றும் அதன் நேட்டோ படைகள் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=201812

பின் ஜவாத் நகரத்தை மீட்டது கடாஃபி படை

நாட்டின் கிழக்கில் உள்ள பின் ஜவாத், ராஸ் லானஃப் நகரங்களை போராட்டக்காரர்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

ஆனால், கடாஃபியின் படைகள் ஆப்பிரிக்க கூலிப்படையினர் உதவியுடனும், ரஷிய ஆயுதங்கள், போர் விமானங்களைப் பயன்படுத்தியும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தின.

இதில் போராட்டக்காரர்கள் 6 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88&artid=387162&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Link to comment
Share on other sites

லிபியாவின் எதிர்க்கட்சிகள் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கடாபியுடன் இல்லை எனவும் காசை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு போகும் படியும் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மாட்டோம் எனவும் கூறுகிறார்கள்.

கடாபியின் வெளிநாட்டு அமைச்சர் பிரான்ஸ்,அமெரிக்கா, ஐக்கியராட்சியம் (uk)என்பன லிபியாவின் கடாபிக்கு எதிராக போராடும் குழுவுக்கு உதவுவதாக குற்றம் சாட்டுகிறார்.

Link to comment
Share on other sites

பதவி விலக கடாபி திடீர் நிபந்தனை

தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு ஆபத்தில்லை, வழக்கு விசாரணை வராது என்ற உத்தரவாதம் அளித்தால் பதவி விலகத் தயார் என லிபியா அதிபர் கடாபி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி அல்ஜசீரா சேனல் வெளியிட்ட செய்தியில், தனது எதிர்ப்பாளர்கள் லிபிய நாடாளுமன்றத் தை கூட்டி அதில் இந்த உத்தரவாதங்களை அளித்தால் பதவியில் இருந்து விலகுவதாக கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதை ஏற்றால் ஊழலில் திளைத்த கடாபியை கவுரவமாக விடுவிப்பதாகி விடும் என்பதால் அவரது எதிர்ப்பாளர்கள் இந்த யோசனையை நிராகரித்து விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/worlddetail.aspx?id=31075&id1=7

லிபிய வான் பரப்பில், விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் திட்டம் குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

லிபிய வான் பரப்பில், விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் திட்டம் குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

லிபிய கிளர்ச்சிளாயர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது மோமர் கடாபியின் ஆதரவுப் படைகள் வான் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், வான் பறப்புக்களை தடை செய்ய வேண்டுமென கிளர்ச்சியாளர்கள் கேட்டுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிப்பதற்கென, வான் பறப்புக்களைத் தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை பிரித்தானியாவும், பிறான்சும் தயாரித்து வருகின்றன.

எதிர்வரும் வியாழக்கிழமை, நேற்றோ அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் அது ஆராயப்படும். அரபு நாடுகள் ஏற்கனவே, அந்தத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

லிபியக் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவது உட்பட்ட பல்வேறு திட்டங்களை அமெரிக்க அரசு ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்ணி (Jay Carney) கூறினார்.

இதேவேளை, லிபியாவில் இருந்து தனது பணத்துடன் வெளியேறிச் செல்வதற்கு மோமர் கடாபி திட்டம் ஒன்றை முன்வைத்தாரென வெளியான செய்திகளை, மோமர் கடாபியின் அரசு நிராகரித்தது. ஆனால், நிபந்தனைகளுடனான பதில் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மீது, வான்படையின் உதவியுடன், மோமர் கடாபியின் ஆதரவுப் படைகள் இன்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6832

Rebels set demands for Gaddafi exit

Head of Libyan rebels tells Al Jazeera Gaddafi "will not be pursued" if he quits within 72 hours and ends the fighting.

72 மணித்தியாலங்களுக்குள் வெளியேறி, சண்டையை நிற்பட்டினால், கடாபியை வெளியேற அனுமதிப்பதாக போராளிகள் கூறியுள்ளார்கள் .

http://english.aljazeera.net/news/africa/2011/03/201138133847222111.html

Opposition denies exit deal talks with Gadhafi

எதிர்க்கட்சிகள் கடாபி வெளியேற நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது என்பதினை மறுத்துள்ளன

http://www.cnn.com/2011/WORLD/africa/03/08/libya.civil.war/index.html?hpt=T2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, March 9th, 2011 | Posted by thaynilam

லிபியாவை விட்டு வெளியேறுகிறார் கடாபி

கடாபியும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.வில் கொண்டு வந்துள்ளன.

லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப்பவர்களை தற்போது, கடாபி ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இச்சண்டையில், எத்தனை பேர் பலியாயினர் என்பது தெரியவில்லை. எனினும் கணிசமான அளவு பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இருதரப்பு சண்டையில், கடாபி ராணுவம், போர் விமானங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் போர் விமானங்கள் எதுவும் இல்லாததால், இதுவரை அவர்கள் பிடியில் இருந்த நகரங்கள் கடாபி வசமாகி வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள எதிர்ப்பாளர்கள் விடுத்த அறிக்கையில், லிபிய விவகாரத்தில் அன்னிய நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்தால் அதுவே எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று சர்வதேசத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3574

Link to comment
Share on other sites

லிபிய அதிபர் ஒரு உயர் அதிகாரியை தூதுவராக எகிப்துக்கு அனுப்பியுள்ளார்.

Three of Libyan leader Muammar Gaddafi's private planes have taken off from a military airstrip near Tripoli.

One of them has landed in the Egyptian capital, Cairo, carrying on board Abdelrahman al-Zawi, the Libyan deputy defence minister, who is also an army general in charge of logistics and supplies.

There were reports that he was to meet with Amr Moussa, head of the Arab league.

http://english.aljazeera.net/news/africa/2011/03/20113911921436551.html

லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: விரைவில் ஐநா தீர்மானம்

போராட்டக்காரர்கள் மீது லிபிய அரசு போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் விதமாக அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானம் கொண்டு வர ஐ.நா. திட்டமிட்டு வருகிறது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88:+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&artid=387601&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Link to comment
Share on other sites

பிரான்ஸ் கிளர்ச்சியாளர்களின் "அரசை" இராசதந்திரரீதியாக ஆதரிக்க முன்வந்துள்ளது. இது ஆர்ப்பாட்டத்தில். போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.

France supports Libya rebel council

Paris becomes first major European power to recognise National Council as country's legitimate representative.

http://english.aljazeera.net/news/europe/2011/03/2011310101413705407.html

Link to comment
Share on other sites


  • -- அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் கடாபி இந்த கிளர்ச்சியில் இருந்து தப்புவார் என சொல்லியுள்ளார்.
    -- அதேவேளை மற்றைய அதிபர்கள் போல இல்லாமல் காலம் தாழ்த்தி தனக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரையும் கொல்லப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகின்றது

  • கடாபியின் மிகச்சிறந்த படையணிகள் இன்று சவாய்யா நகரத்தை மீட்டெடுத்தன. இந்த நகடில் கிட்டத்தட்ட மக்கள் வாழ்ந்திருந்தனர். இன்று வெறுச்சோடி இருந்தது. இந்த நகரின் தலைமை மசூதியும் முற்றாக அழிக்கப்பட்டது.

  • கிடத்தட்ட ஒரு சதுர மைல் பரப்பளவில் இந்த சண்டைகள் நடந்தன. கடாபி ஆதரவாளர்கள் சகல போர்குற்ற தடயங்களையும் அழிப்பதில் மும்மரம் காட்டினர்.

  • இந்த இழப்பின் பின் கடாபியின் கை ஓங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Libyan government forces retake Zawiya

Libya's ragtag rebels in Zawiya succumbed Thursday to better armed and organized government soldiers after enduring a week of attacks that left the coastal city strewn with the debris of war.

http://www.cnn.com/2011/WORLD/africa/03/10/libya.civil.war/index.html?hpt=T2

Gadhafi likely to survive revolt, U.S. intelligence chief says

The United States plans to send "purely humanitarian" disaster relief teams into eastern Libya, where rebels battling longtime strongman Moammar Gadhafi may be losing ground in that country's civil war, top U.S. officials said Thursday.

http://www.cnn.com/2011/POLITICS/03/10/us.libya/index.html?hpt=T2

Link to comment
Share on other sites

புறுக்சல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் விசேட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் லிபியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பெரும் தயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் காட்டிய காரணத்தால் கூட்டம் பெரும் பின்னடைவுடன் முடிவடைந்துள்ளது.

மேலும் ஒரு இஸ்லாமிய நாட்டின் மீது மேலை நாடுகள் தாக்குதலை நடாத்தினால் ஆபிரிக்க வட்டகையிலும் புதுப்புதுத் தலைவலிகளை சுமக்க நேரிடும் என்ற அச்சம் இவர்களிடையே காணப்பட்டுள்ளது. ஆனாலும் லிபியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கு பிரான்ஸ் தயார் என்று அறிவித்தது. ஆனால் மறுபுறம் ஜேர்மனி முற்றாகவே மறுத்துள்ளது.

ஒபாமாவும் லிபியாவில் விமானத்தாக்குதலை தமது படைகள் நடாத்தும் சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளார்

வன்பரப்பில் கடாபியின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கும் பூரண உடன்பாடு காணப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு ஏற்பவே நேட்டோவும் தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதேவேளை நாளை அரபுலீக்கின் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. அவர்கள் தரப்பில் இருந்து ஏதாவது நகர்வு வரும் என்று எதிர்பார்த்துள்ளனர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள். இதற்கிடையில் கடாபிக்கு வழங்கிய 72 மணி நேரங்கள் முடிவடைந்து அவருடைய படைகள் கிழக்கு லிபியாவின் முக்கிய நகர் பெங்காஸி நோக்கி விரைவதாகவும், தமது சகோதரர்களை மீட்கப்போகிறோம் என்று கடாபியின் மகன் தெரிவித்துள்ளார். வாரோட்டம் போல இரு தரப்பிற்கும் இடையே முன்னேறுவதும் பின்னேறுவதுமாக படை நடவடிக்கை உள்ளது.

சி.என்.என். ஊடகவியலாளர் நிக் ரோபட்சன் அவரது குழு கடாபி ஆதவாலர்களால் தடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

http://www.alaikal.com/news/?p=60474

http://news.blogs.cnn.com/2011/03/11/gadhafi-thugs-grab-cnn-crew/?hpt=T2

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/obama-rules-out-libyan-air-strikes/article1939521/

Link to comment
Share on other sites

உலகிலுள்ள ஒருசில பயங்கரவாத அரசுகளுக்கு ஆதரவளிப்பதும், ஒருசில பயங்கரவாத அரசுகளை எதிர்ப்பதும் ஆகிய இரட்டை வேடம் இல்லாதொழியும் போது உண்மையான ஜனநாயம் மிளிரும்.

Link to comment
Share on other sites

லிபியாவில் விமானங்கள் பறக்க தடை விதிக்க அரபு லீக் ஆதரவு

Arab states seek Libya no-fly zone

Regional bloc calls on UN Security Council to take steps to protect civilians from air attack by Gaddafi forces. ( http://english.aljazeera.net/news/africa/2011/03/201131218852687848.html )

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வாரங்களாக கேட்டு வந்த தடையை பல காரணங்களுக்காக மேற்குலகம் ( நேட்டோ ) மறுத்து வநதுள்ளது. அதில் ஒன்று அரபு நாடுகள் , அரபு லீக், அதற்கு ஒத்தாசை வழங்க வேண்டும் என்பதே. இப்பொழுது அரபு லீக் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது கடாபிக்கு ஒரு பின்னவடைவாக இருக்கலாம். ஆனால் இதை மேற்குலகம் செய்யுமா என்பது கேள்வியே. அவர்கள் இன்னும் ஐ.நா., சீனா, உருசியா ஆதரவுகள் தேவை என சொல்லுகிறார்கள். அதற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் பலமாக இருக்கும் பெங்க்காசி நகரத்தை கடாபி விட்டு வைப்பாரா என்பது கேள்வியாக உள்ளது. ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக அடக்கும் தருணத்தில் ஒரு பெரிய அழிவை இவருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் சந்திக்க நேரும்.

Al Jazeera staffer killed in Libya

Cameraman Ali Hassan Al Jaber was returning to eastern city of Benghazi from filing report when he was shot and killed.

அல்ஜசீரா ஊடகத்தின் ஒளிப்பதிவுக்காரர் தனது அறிக்கையை பாத்து செய்து திரும்புகையில் சுட்டு கொல்லப்பட்டார்.

http://english.aljazeera.net/news/africa/2011/03/2011312192359523376.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல் ஜசீரா டி வி., நிருபர் சுட்டுக் கொலை : லிபியாவில் கடாபி அரசின் வெறித்தனம்

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011,11:36 IST

பெங்காலி: லிபியாவின் செய்திகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதில் முதன்மை நிறுவனமாக இருந்து வரும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வரும் லிபியாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்றும் இந்த டி.வி., நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார் என்ற செய்தி மட்டும் பரவி வருகிறதேயொழிய அவர் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவும், காப்பாற்றவும் தொடர்ந்து உழைப்பேன் என்றார். மக்கள் என்மீது பாசமுள்ளவர்கள் அவர்களை போதைக்கு அடிமைப்படுத்தி தமக்கு எதிராக திசை மாற்றப்பட்டுள்ளனர் என்றார் கடாபி.

இதற்கிடையில் இங்கு நடக்கும் போராட்டம், கடாபியின் படை பல தாக்குதல்களை முழு அளவில் கவரேஜ் செய்து வருகிறது அல் ஜசீரா டி.வி., நிறுவனம். மற்றும் உள்ளூரில் உள்ள அல்ஜசீரா அராபிக் சேனலையும் இப்பகுதி மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த நிறுவன லிபியாவின் காமிராமேன் அலிஹசன் அல் ஜாபர் செய்திகளை வழங்கி விட்டு திரும்பும் போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தை செய்தியாக வழங்கி விட்டு லிபியாவின் கிழக்கு பகுதியான பெங்காலிக்கு காரில் திரும்பி கொண்டிருக்கும் நேரத்தில் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டனர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்கு அல்ஜசீரா நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது போன்ற கோழைத்தனமான மிரட்டலுக்கு அஞ்சாமல் எங்கள் பணி தொடர்ந்து நடக்கும் என்றும் குற்றவாளிகள் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் கடாபியின் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

கத்தார் நாட்டை சேர்ந்தவர்: கத்தார் நாட்டை சேர்ந்த அல்ஜாபர் (வயது 55). கெய்ராவில் சினிமா போட்டோகிராபியில் பட்டம் பெற்றவர். கத்தாரில் உள்ள சி.என்.பி.சி., அரேபிய தொலைக்காட்சியில் இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் பத்திரிகையாளர் எங்கே ? : பிரேசில் நாட்டு செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஆன்டிநேட்டோ என்பவரை கடாபி அரசு கைது செய்து வைத்திருந்து 10 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்ததது. ஆனால் இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=204961

Link to comment
Share on other sites

.

சவூதியிலும் சிறு கொந்தளிப்புகள் ஏற்பட்டது மேற்குலகை அச்சத்தில் ஆள்தியிருக்க வேண்டும். இந்த மிகப் பெரிய எண்ணை ஏற்றுமதி நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் உலகப் பொருளாதாரம் பாரிய அடியை வாங்க வேண்டி வரும். குறிப்பாக மேற்குலக பாதிப்பு அதிகம்.

ஆகவே மத்திய கிழக்கு புரட்சி அலையை கட்டுப் படுத்த வேண்டிய தேவை மேற்குலகிற்கு வந்துள்ளது.

எனவே இவர்கள் லிபிய புரட்சிக்கு ஆதரவளிப்பதாக பாசங்கு காட்டிக் கொண்டே அதனை சாகடிக்க விடவும் கூடும்.

லிபியாவில் புரட்சி செய்யும் மக்களுக்கு ஏற்படும் அழிவைப் பார்த்து ஏனைய நாட்டு மக்கள் அச்சம் காரணமாகவே புரட்சி செய்யும் எண்ணத்தை கைவிட வைப்பது ஒரு தந்திரமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.