Jump to content

காதல் குவிஸ் 10

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா?

2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது?

3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்?

5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்?

6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி கல்யாணத்திற்குப் பின் தான் காதலித்த கணவன் பிற பெண்களோடு கதைத்தால் மட்டும் தப்பாக எடுப்பதேன்?

7)காதலிக்கும் போது காதலனா/காதலியா அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும்?

8)காதலில் ஈகோ பார்க்கலாமா?

9)காதலர்கள் தனியாக சந்திக்க செல்லும் போது தங்களது நண்பர்களை கூட்டிச் செல்லலாமா?

10)காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது திருமணத்தின் பின் காதலிப்பது நல்லதா?

யாழ்கள ரசிக பெருமக்களே இந்த காதல் குவிஸ்சில் பங்கு பற்றி உங்கள் காதல் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் :lol: ...இது முற்று முழுதான நகைச்சுவைப் பதிவு...நன்றி

Link to comment
Share on other sites

யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது?

இடம் தெரியல தனிமைதான் எண்டு நினைக்கிறன்.

3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மலர்கள்.

4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்?

யார் பணப்பையில் காசு இருக்கிறதோ அவர்கள்

5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்?

காதல் பித்தம் தெளிவதாக இருக்குமோ

6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி கல்யாணத்திற்குப் பின் தான் காதலித்த கணவன் பிற பெண்களோடு கதைத்தால் மட்டும் தப்பாக எடுப்பதேன்?

எல்லாம் பாழாய்ப்போன சந்தேகமாக இருக்குமோ.

7)காதலிக்கும் போது காதலனா/காதலியா அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இருவருமேதான்.

8)காதலில் ஈகோ பார்க்கலாமா?

ஈகோ இல்லாமல் ஒரு காதலா

9)காதலர்கள் தனியாக சந்திக்க செல்லும் போது தங்களது நண்பர்களை கூட்டிச் செல்லலாமா?

தாராளமாய்

10)காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது திருமணத்தின் பின் காதலிப்பது நல்லதா?

இதுக்கு ஏதுங்கோ கஞ்சத்தனம். எப்போதும் காதலிக்கலாம்.

காதலில்லாமல் வாழ்வது ஒரு வாழ்வா?

Link to comment
Share on other sites

1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா?

மற்றவரிடம் என்று இங்கு யாரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்? மூன்றாமவறையா? யார் தைரியமான புத்திசாலியோ அவர்கள் முதலில் சொல்லலாம். (தைரியம் இருக்கென்பதற்காக ஒருத்தர் நட்பாக பழகும் போது அதை காதலாக மற்றவர் நினைத்து குழம்பிக் கொள்ளக் கூடாது இல்லையா, அதற்காகத் தான் தைரியம் மட்டும் போதாது, புத்திசாலித்தனமும் வேணும்)

2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது?

கடவுளின் சந்நிதானமாக இருக்கலாம் அல்லது தனிமையான இடமாக இருக்கலாம். (அது அவரவர் காதலின் ஆழத்தைப் பொறுத்தது)

3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அது அவரவர் வசதியைப் பொறுத்தது. (உண்மையான காதலுக்கு ஒரு புன்னகை போதும்)

4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்?

இருவரும் பகிர்ந்து கொள்ளவது நல்லது (ஒருவரில் ஒருவர் முழுமையாகத் தங்கி இல்லை என்பதை உணர்த்தும். அல்லது முதல் தரம் ஆண் காசு கொடுத்தால், அடுத்த தரம் பெண் காசு குடுப்பதே சமநிலையாக இருக்கும்.)

5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்?

காதலிக்கும் போது தனது காதலி கவர்ச்சியாக பார்க்க காதலனுக்கும் ஆசை இருக்கும், திருமணமான பின்பு தனது காதல் மனைவி தனக்கு மட்டும் கவர்ச்சியாக இருக்க வேணும் என்று நினைப்பதால்.

(அல்லது நெடுக்ஸ் சொன்னது போல், 'காதல் ஒரு போதை, போதையில் பண்ணிக் குட்டி கூடத்தான் அழகாகத் தெரியும்... ' :lol: )

6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி கல்யாணத்திற்குப் பின் தான் காதலித்த கணவன் பிற பெண்களோடு கதைத்தால் மட்டும் தப்பாக எடுப்பதேன்?

காதலிக்கும் போது கூட மற்றைய பெண்களோடு தமது காதலன் கதைத்தால் காதலி தப்பாக எடுப்பார். கலியாணத்தின் பிறகு தம்மேல் தமது காதல் கணவனுக்கு ஈடுபாடு குறைந்து விட்டதோ என்று ஒரு தாழ்மை உணர்வு (inferiority complex) (காதலிக்கும் போது முளைவிடும் சந்தேகம் கலியாணத்தின் பின்பு விஸ்வரூபம் எடுத்து ஆடும்.)

7)காதலிக்கும் போது காதலனா/காதலியா அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும்?

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே எந்த இடத்தில் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது இருவருக்கும் தெரியவரும்.

8)காதலில் ஈகோ பார்க்கலாமா?

தற்பெருமை (ஈகோ) எல்லாரிடமும் உள்ள ஒன்று. குறைந்தால் லூசு என்பார்கள், கூடினாலும் சைகோ என்பார்கள். அளவோடு இருப்பது நல்லது.

9)காதலர்கள் தனியாக சந்திக்க செல்லும் போது தங்களது நண்பர்களை கூட்டிச் செல்லலாமா?

காதலர்களின் மனநிலையைப் பொறுத்தது. காரணம் தனித்துச் செல்வதால் ஒருவரின் கவனம் மற்றவரில் இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

10)காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது திருமணத்தின் பின் காதலிப்பது நல்லதா?

காதலிக்கவேணும் என்று முடிவு எடுத்தால் எப்படி என்றாலும் காதலியுங்கோ. ஆனால் ஒருத்தர் மேல் ஒருத்தர் உண்மையான அன்பாகவும் நேர்மையாகவும் கடைசி வரைக்கும் இருக்கப் பாருங்கோ.

யாழ்கள ரசிக பெருமக்களே இந்த காதல் குவிஸ்சில் பங்கு பற்றி உங்கள் காதல் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் :lol: ...இது முற்று முழுதான நகைச்சுவைப் பதிவு...நன்றி

காதல் பற்றிய அறிவு ஒவ்வொருத்தார் மனதிலும் தாராளமாகவே இருக்கும். ஆனால் ஒவ்வொருத்தரும் என்ன நோக்கத்திற்காக காதலிக்கிறார்கள் என்று போகப் போகத்தானே அடுத்தவருக்குப் புலப்படுகிறது... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குவிஸ்ஸில் பங்கு பற்றுவதற்கு வயது எல்லை உண்டோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா?

யார் வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

( ஆனால் பெண்கள் சொன்னால் எங்கே தன்னை நடத்தை சரியில்லை என்று நினைத்து விடுவார்களோ என்று

தயங்குவார்கள்.

2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது?

எந்த இடம் போவதற்கு வசதியாக,வாய்ப்பாக இருக்கிறதோ அங்கே போகலாம்.

(கேட்குறா பாரு கேள்வி) :lol:

3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முத்தம் :unsure:

4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்?

யார் என்றாலும்(காசு இருக்கிறவர் குடுக்க வேண்டியது தான்.)

5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்?

காதலிக்கும் போது பொதுவுடமை...கலியாணத்துக்கு பிறகு தனியுடமை :lol:

6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி கல்யாணத்திற்குப் பின் தான் காதலித்த கணவன் பிற பெண்களோடு கதைத்தால் மட்டும் தப்பாக எடுப்பதேன்?

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று புரிஞ்சிருக்குமோ என்னவோ :rolleyes:

7)காதலிக்கும் போது காதலனா/காதலியா அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும்?

குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்றால் இருவருமே விட்டுக்குடுக்க வேண்டும்.

8)காதலில் ஈகோ பார்க்கலாமா?

ஈகோ இல்லாமலா?

என்ன தான் இருந்தாலும் அவளுக்கு முன்னாடி ஹீரோ ல்ல.. ^_^

9)காதலர்கள் தனியாக சந்திக்க செல்லும் போது தங்களது நண்பர்களை கூட்டிச் செல்லலாமா?

இதென்ன சின்னபுள்ளை தனமா இருக்கு?

தனிய சந்திக்கும் போது எதுக்கு நடுவிலை நந்தி மாதிரி? :unsure:

10)காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது திருமணத்தின் பின் காதலிப்பது நல்லதா?

கட்டிப்போட்டு அடிச்சாலும் , அடிச்சுப்போட்டு கட்டினாலும்

ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி.

(மாட்டை சொன்னேன்.) :rolleyes:

யாழ்கள ரசிக பெருமக்களே இந்த காதல் குவிஸ்சில் பங்கு பற்றி உங்கள் காதல் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் :lol: ...இது முற்று முழுதான நகைச்சுவைப் பதிவு...நன்றி

நான் ரெடி..நீங்க ரெடியா????(காதலிக்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குவிஸ்ஸில் பங்கு பற்றுவதற்கு வயது எல்லை உண்டோ? :D

அப்படி எல்லாம் வயதெல்லை இல்லை புத்தன்...இது ஒரு நகைச்சுவைப் பதிவு...நீங்களும் பங்கு பற்றுங்கள் அத்தோடு உங்கள் மருமகனையும் பங்கு பற்ற சொல்லுங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நெடுக்கரை காணோம்????????????????????????? ... ரதி, நெடுக்ஸ் வந்து சொல்லுவார்!

இதற்கு எதற்கு நெடுக்கரை கூப்பிடுகிறீர்கள் அவர் எப்படி பதில் சொல்லுவார் என நான் சொல்கிறேன் கேளுங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் வயதெல்லை இல்லை புத்தன்...இது ஒரு நகைச்சுவைப் பதிவு...நீங்களும் பங்கு பற்றுங்கள் அத்தோடு உங்கள் மருமகனையும் பங்கு பற்ற சொல்லுங்கள் :D

1..காதலன்(காதலி வெட்கம் காரணமாக உடனே சொல்ல மாட்டா)

2..தனிமையான ஒர் இடம்

3..முத்தம்

4..பணம் இருப்பர் கொடுக்க வேண்டியதுதான்...

5..மற்றவன் பிறகு காதலிச்சிப்போடுவான் என்ற எரிச்சல்

6.. என்னுடைய பொக்கிசத்தை அவள் தட்டிக்கொள்வாள் என்ற பயம் :lol:

7..பெண்கள்தான் ....ஏன் என்றால் நான் ஒரு ஆண்

8..சும்மா ஜாலியாக இருக்க என்றால் பார்க்க தேவை இல்லை

9..நிச்சமாக இல்லை பிறகு அவன் தள்ளி இட்டு போயிடுவான்(எனக்கு நடந்த சம்பவம்) :lol:

10..அது சரி காதலுக்கும் ..கலியாணத்திற்கும் என்ன தொடர்பு :D

என்னுடைய மருமகன் அச்சா பெடியன் உப்படியான சில்லறைதனதிற்க்கு போகமாட்டான்...கி...கி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா?

இருவரில் யார் விரும்பினாலும் சொல்லலாம்

2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது?

எங்கேயாவது றோட் ஓர‌ம்

3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

என்னத்திற்கு கிப்ட் தேவையில்லாமல்

4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்?

இன்றைக்கு காதலன் கொடுத்தால் நாளைக்கு காதலி[உணவகத்திற்குப் போவதே விருப்பமில்லை.]

5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்?

நான் அப்படி தடை சொல்ல மாட்டேன்

6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி கல்யாணத்திற்குப் பின் தான் காதலித்த கணவன் பிற பெண்களோடு கதைத்தால் மட்டும் தப்பாக எடுப்பதேன்?

இதற்கு என் காதலி தான் பதில் சொல்ல வேண்டும்

7)காதலிக்கும் போது காதலனா/காதலியா அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இருவரும்

8)காதலில் ஈகோ பார்க்கலாமா?

இல்லை

9)காதலர்கள் தனியாக சந்திக்க செல்லும் போது தங்களது நண்பர்களை கூட்டிச் செல்லலாமா?

என்னத்திற்கு தேவையில்லாமல் அவர்கள் இடையில்

10)காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது திருமணத்தின் பின் காதலிப்பது நல்லதா?

காதலித்து திருமணம் செய்வதே சிறந்தது

யாழ்கள ரசிக பெருமக்களே இந்த காதல் குவிஸ்சில் பங்கு பற்றி உங்கள் காதல் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் :lol: ...இது முற்று முழுதான நகைச்சுவைப் பதிவு...நன்றி

:Dஇது நெடுக்ஸ்சின் பதிலாக இருக்கும் தப்பாக இருந்தால் அவர் வந்து திருத்துவார்

Link to comment
Share on other sites

1)ம்ம்ம்...என்ன தான் பிடித்திருந்தாலும் நானா இருந்தா வாயை திறந்து சொல்ல மாட்டன்..அப்படி நாம கீழ இறங்கினா ஓவரா பிலிம் காட்டுவீனம்.. :blink: (ஏன் தான் இவையள் இப்படியோ)..

2)நீங்க தனிய தான் வீட்டில இருந்தீங்க எண்டா உங்க வீfடு..அப்படி இல்லாம நீங்க அப்பா.அம்மா இல்லாட்டி யாரோடையும் இருந்தா இருக்கு நண்பர்களிண்ட ரூம்..(எவ்வளத்தை செய்யிற நண்பர்கள் கட்டாயமா இருக்கும் உதவுவாங்க)... :lol:

3)பிகருகளை பொறுத்து கிவ்ட் மாறுபடலாம் அதாவது சப்பை பிகருக்கு கனக்க செலவழிக்க ஏலாது அல்லோ கூடுதலா "வொட்கா" வாங்கினா காணும். :huh:

4)என்ன ரதி அக்கா..நாங்க தான் வாங்கி கொடுக்கனும் அதில பிரச்சினை இல்ல அவையள் கனக்க சாப்பிட மாட்டீனம் "டயட்" எண்டு பிலிம் காட்டுவீனம்.. ^_^

5)உது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு காதலி என்ன உடுப்பு போட்டாலும் அவள கல்யாணம் கட்டுறவர் தானே பீல் பண்ண வேண்டும்.. :lol:

6)மேல கூறின விடை தான் இதுக்கும்..(காதலிமாருக்கு தெரியும் நாங்களே எத்தனை பேரோட கதைக்கிறோம் பேஸ்புக்கில ஆனபடியா இவையளும் கட்டாயம் செய்வீனம் எண்டு).. :wub:

7)யார் விட்டு கொடுத்தா என்ன கடசியா இரண்டு பேரும் விடுபடுறது தானே..

8)ம்ம்ம்...பார்காட்டி மட்டும் என்னவாக போது ஒன்றுமே இல்லாத சப்பை மாட்டருக்கு போன் எடுத்தா ஆன்சர் பண்ணாம பிலிம் காட்டுவீனம் நீங்களும் விட்டிட்டா அவையளா எடுப்பீனம்...

9)முதலில கூட்டி கொண்டு போக கூடாது..(அவங்க நல்லவங்க தான் பொண்ணுகளை கண்டா நம்மள மறந்திடுவாங்க பாருங்கோ)..எல்லாம் முடிந்தா பிறகு தாராளமாக கூட்டி கொண்டு போகலாம் அப்ப தான் அவையள் பிக்கப் பண்ண ஏலுமா இருக்கும்.. :lol:

10)ரதி அக்கா "காதல்" எண்டா நீங்க நினைக்கிற ரேஞ்சில ஒண்ணுமில்ல கொஞ்ச நாளா ஒருத்தனோட சுத்த அவைக்கும் ஆசை நம்மளிற்கும் ஆசை சுத்தி போட்டு கழற்றிட்டு "பிரெகப்" எண்டிட்டு அடுத்த ஆளை பார்பது தான் காதல் இந்த காதல் தான் பொண்ணிகளிற்கும் பிடிக்கும் எங்களிற்கும் பிடிக்கும்..

என்ன யாரையும் காதலிக்காம முதல் காதல் பண்ணும் போது அநுபவங்கள் வித்தியாசமா இருக்கும் அப்படியான ஆட்கள் தான் புனிதம்,கினிதம் எண்டு ஏதோசொல்லுவீனம் பிறகு பிறகு போக எல்லாம் பழகிடும் இது தானா காதல் எண்டிற அளவிற்கு...! :wub:

அப்ப நான் வரட்டா..!!

Link to comment
Share on other sites

காதல்களம் கண்டு திரும்பிய ஜம்மு பேபியே..!! :rolleyes::wub:

வருக.. வருக..!!! :D

Link to comment
Share on other sites

1)எவராவது சொல்லலாம்

2)ரூம் என்றுதான் சொல்ல விருப்பம் ஆனால் முதன்முதல் என்றபடியால் பார்க் பீச் ஓகே

3)இறுக்கி அனைத்து ஒரு உம்மா

4)ரெஸ்டொரன்ட்டுக்கு போக கூப்பிட்டவர்

5)குட்டியின் பதில் ரிப்பீட்டு (நன்றி நெடுக்ஸ்)

6)என் புருசன்தான் அவன் எனக்கு மட்டும்தான் என்னும் சுயநலம்

7)இருவரும்

8)காதலில் ஈகோ பார்த்தால் இபிகோ விவாகரத்தில்தான் கொண்டுமுடியும்.

9)சிவ பூசையில் கரடிகள் எதற்கு?

10)திருமணத்தின் பின் சண்டைதானே பிடிக்கப்போறம். எப்பிடியும் ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ம்ம்ம்...என்ன தான் பிடித்திருந்தாலும் நானா இருந்தா வாயை திறந்து சொல்ல மாட்டன்..அப்படி நாம கீழ இறங்கினா ஓவரா பிலிம் காட்டுவீனம்.. :blink: (ஏன் தான் இவையள் இப்படியோ)..

2)நீங்க தனிய தான் வீட்டில இருந்தீங்க எண்டா உங்க வீfடு..அப்படி இல்லாம நீங்க அப்பா.அம்மா இல்லாட்டி யாரோடையும் இருந்தா இருக்கு நண்பர்களிண்ட ரூம்..(எவ்வளத்தை செய்யிற நண்பர்கள் கட்டாயமா இருக்கும் உதவுவாங்க)... :lol:

3)பிகருகளை பொறுத்து கிவ்ட் மாறுபடலாம் அதாவது சப்பை பிகருக்கு கனக்க செலவழிக்க ஏலாது அல்லோ கூடுதலா "வொட்கா" வாங்கினா காணும். :huh:

4)என்ன ரதி அக்கா..நாங்க தான் வாங்கி கொடுக்கனும் அதில பிரச்சினை இல்ல அவையள் கனக்க சாப்பிட மாட்டீனம் "டயட்" எண்டு பிலிம் காட்டுவீனம்.. ^_^

5)உது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு காதலி என்ன உடுப்பு போட்டாலும் அவள கல்யாணம் கட்டுறவர் தானே பீல் பண்ண வேண்டும்.. :lol:

6)மேல கூறின விடை தான் இதுக்கும்..(காதலிமாருக்கு தெரியும் நாங்களே எத்தனை பேரோட கதைக்கிறோம் பேஸ்புக்கில ஆனபடியா இவையளும் கட்டாயம் செய்வீனம் எண்டு).. :wub:

7)யார் விட்டு கொடுத்தா என்ன கடசியா இரண்டு பேரும் விடுபடுறது தானே..

8)ம்ம்ம்...பார்காட்டி மட்டும் என்னவாக போது ஒன்றுமே இல்லாத சப்பை மாட்டருக்கு போன் எடுத்தா ஆன்சர் பண்ணாம பிலிம் காட்டுவீனம் நீங்களும் விட்டிட்டா அவையளா எடுப்பீனம்...

9)முதலில கூட்டி கொண்டு போக கூடாது..(அவங்க நல்லவங்க தான் பொண்ணுகளை கண்டா நம்மள மறந்திடுவாங்க பாருங்கோ)..எல்லாம் முடிந்தா பிறகு தாராளமாக கூட்டி கொண்டு போகலாம் அப்ப தான் அவையள் பிக்கப் பண்ண ஏலுமா இருக்கும்.. :lol:

10)ரதி அக்கா "காதல்" எண்டா நீங்க நினைக்கிற ரேஞ்சில ஒண்ணுமில்ல கொஞ்ச நாளா ஒருத்தனோட சுத்த அவைக்கும் ஆசை நம்மளிற்கும் ஆசை சுத்தி போட்டு கழற்றிட்டு "பிரெகப்" எண்டிட்டு அடுத்த ஆளை பார்பது தான் காதல் இந்த காதல் தான் பொண்ணிகளிற்கும் பிடிக்கும் எங்களிற்கும் பிடிக்கும்..

என்ன யாரையும் காதலிக்காம முதல் காதல் பண்ணும் போது அநுபவங்கள் வித்தியாசமா இருக்கும் அப்படியான ஆட்கள் தான் புனிதம்,கினிதம் எண்டு ஏதோசொல்லுவீனம் பிறகு பிறகு போக எல்லாம் பழகிடும் இது தானா காதல் எண்டிற அளவிற்கு...! :wub:

அப்ப நான் வரட்டா..!!

உந்த ஜம்மு பேபியை போட்டியில் இருந்து விளத்த வேண்டும் இவ்வளவு நாளும் கருத்து எழுதாமல் இப்ப காத என்றவுடன் ஒடி வந்து கருத்து சொல்லுறார் நோட்டி போய்.....

Link to comment
Share on other sites

:Dஇது நெடுக்ஸ்சின் பதிலாக இருக்கும் தப்பாக இருந்தால் அவர் வந்து திருத்துவார்

அட இது நெடுக்ஸ்ஸிற்கு என்று திறக்கப் பட்ட திரியா? :unsure: சிவபூசையில கரடி நுழைஞ்சது மாதிரி நாங்க தான் நுளைஞ்சிட்டமோ... சும்மா பகிடிக்குத் தான்... ^_^:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஜம்மு பேபியை போட்டியில் இருந்து விளத்த வேண்டும் இவ்வளவு நாளும் கருத்து எழுதாமல் இப்ப காத என்றவுடன் ஒடி வந்து கருத்து சொல்லுறார் நோட்டி போய்.....

மருமகன் மாமாவின் சொல்லை கேட்க மாட்டார் போல :D

அட இது நெடுக்ஸ்ஸிற்கு என்று திறக்கப் பட்ட திரியா? :unsure: சிவபூசையில கரடி நுழைஞ்சது மாதிரி நாங்க தான் நுளைஞ்சிட்டமோ... சும்மா பகிடிக்குத் தான்... ^_^:lol::D

நீங்கள் வேற குட்டி, நெடுக்ஸ்சுக்கு திருமணம் நடக்கப் போற நேரத்தில போய் அவர் குடும்பத்தில குளப்பத்தை உண்டாக்கிக் கொண்டு :rolleyes:

இப் பதிவில் வந்து தைரியமாய் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நியாணி முக்ப்பில் இந்த திரியைப் போட்டு இருந்தார்.இத் திரியைத் தொடங்கியது நான் தான் :) என்று வேற போட்டு இருந்தார்.நான் எப்ப இப்படியொரு திரியைத் திறந்தனான் என்று போய் பார்த்தேன் இப்ப வாசிச்சுப் பார்க்கும் போது முழு மொக்கைத் திரி மாதிரித் தெரியுது :D நியாணி அதனை ஏன் முன்னுக்கு எடுத்துப் போட்டாரோ தெரியல்ல :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே ஏன் மொக்கை என்று முடிவெடுக்கிறீர்கள். பம்பலாய் இருக்கும் தொடருங்கோ.

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.