Jump to content

நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி

Recommended Posts

நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி

நேசக்கரமும் வேண்டாம் மக்கள் பணியும் வேண்டாமென்று ஒதுங்கிப்போகும் முடிவை 06.01.2011 அன்று அறிவித்துவிட்டு ஒதுங்கிய எங்களை மீண்டும் வெள்ள அனர்த்தமும் நேசக்கரம் பயனாளர்களின் வேண்டுகைகளும் எல்லாச் சவால்களையும் அரசியல் தலையீடுகளையும் உதைத்துக் கொண்டு எழ வேண்டுமென்ற சக்தியைத் தந்தது. இனி எந்தக் கொம்பனுடனும் நேரில் நின்று போராடுவதென்று முடிவெடுக்க வைத்தது. அதன்படி மீளவும் எழுந்தோம்.

எந்த அரசியல்வாதியின் தலையீடு எம்மை நிறுத்தியதோ எந்த அரசியல்வாதியின் குடும்பத்தின் அச்சுறுத்தல் எங்களை பின்தள்ள எண்ணியதோ அத்தடைகளாக நின்ற தலைகளின் அறியாமைகளையும் மன்னித்து மெளனமாக மீண்டும் எங்களது பணியை ஆரம்பித்தோம். ஆனால் புதியகாளானாக வன்னிமைந்தன் என்ற நாமம் பூண்ட தனபாலசிங்கம் தயாளன் அவர்களாலும் அவர் பின்னர் சில விசமிகளின் தலையீட்டிலும் நேசக்கரம் புதிய சவால்களை எதிர் நோக்க வேண்டிய அபாயத்தில் வந்து நிற்கிறது.

தனபாலசிங்கம் தயாளன் என்ற வன்னிமைந்தன் யார் என்பதனை முதலில் தெரிவிக்க வேண்டும்.

நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்து போயிருக்கிறார். காசு உழைக்கப்போன மைந்தன் தனக்குப் பொழுது போக இணைத்தளங்கள் சிலவற்றை உருவாக்கி தமிழ் மொழியை எப்படிக் கொல்வதென்பதை அழகிய தமிழ்மொழியை அபத்தம் பண்ணிக் கொண்டிருந்தார். கொலைத்தமிழில் கவிதைகளும் எழுதினார் பாடல் எழுதி பாணர் தேனிசை செல்லப்பாவிடம் பாலவர் வன்னி மைந்தன் என்ற பெறுதற்கு அரிய பட்டமொன்றையும் பெற்றார்.

யாழ் கருத்துக்களத்தில் கருத்தாளனாக வந்து தனது தமிழ்மொழிக் கொலைக்கான விமர்சனங்களையும் வாங்கியதில் கடுப்பாகி யாழ் இணையத்தை அதன் அங்கத்துவர்களையெல்லாம் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் செய்து தனது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தவர். ஊடகம் அல்லது ஊடகம்பற்றிய அடிப்படை விதிகளையோ அறிவினையோ பெற்றிருக்காதவர் பணமிருந்தால் தானும் ஊடகன் ஆகலாம் என்று புறப்பட்ட அதிரடிக்கலகம்.

4வருடங்கள் முன்னர் யாழ் இணையத்தில் சில நண்பர்களின் துணையோடு ஆரம்பிக்கப்பட்ட நேசக்கரத்தின் செயற்பாடுகள் யாழ் இணையத்தில் வளர்ச்சியடைந்தமையைப் பொறுக்க முடியாமல் நேசக்கரத்தின் பெயரில் பல மோசடிகளில் ஈடுபட்டது மட்டுமன்றி நேசக்கரம் உதவிய பள்ளிச் சிறுவர்களின் படங்களைப் போட்டு ஒரு பாடசாலை அதிபரின் பெயரால் பணம் சேர்த்தவர் பாவலர் கலைக்கோவலர் வன்னிமைந்தன்.

நாம் உதவிய பாடசாலையினதும் மாணவர்களது படங்களும் செய்தியும் கீழ் உள்ள இணைப்பில் பாருங்கள்.

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?option=com_content&view=article&id=13%3A-11&catid=4%3A-2010&Itemid=8&lang=ta

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?option=com_content&view=article&id=13%3A-11&catid=4%3A-2010&Itemid=8&lang=ta

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?option=com_content&view=article&id=14%3A2010-01-23-11-51-12&catid=4%3A-2010&Itemid=8&lang=ta

இச்செயற்பாட்டை அவதானித்த நேசக்கரம் உறவுகள் நேசக்கரம் நிர்வாகத்திடம் முறையிட்டதனைத் தொடர்ந்து வீரம் விளைந்த வன்னியைத் தனது பெயரில் ஒட்டிய மானமும் வீரமும் நிறைந்த வன்னி மைந்தனுக்கு குறிப்பிட்ட மாணவர்களின் படங்கள் நாம் உதவி வழங்கிய விபரங்கள் செய்திகளையும் வழங்கினோம். உதவிகள் கிடைக்காத மாணவர்களின் விபரங்களையும் அனுப்பினோம். உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட வன்னிமைந்தன் குறித்த பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசனே தன்னிடம் உதவி கோரியுள்ளதாகவும் நாம் உதவியது தனக்குத் தெரியாதெனவும் தான் 300€ பணம் அப்பாடசாலை அதிபருக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறி அதிபர் கொள்வனவு செய்து விநியோகித்த பொருட்களுக்கு தனக்கு பற்றுச்சீட்டுகள் தந்திருப்பதாகவும் பற்றுச்சீட்டுகளையும் தந்திருந்தார்.

அப்பற்றுச்சீட்டுகள் நாம் வழங்கிய பொருட்களுக்கான பற்றுச்சீட்டுகள் என்பதனை நாம் தெரிவித்ததுதும் தன்னால் மக்களிடம் சேர்க்கப்பட்ட நிதி பிழையான வழியில் போயிருப்பதை எம்மை வெளியிட வேண்டாமென வேண்டிக் கொண்டார் பாவலர் கலைக்கோவலர் வன்னிமைந்தன். (குறித்த பாடசாலை அதிபர் நாகப்பர் கண்ணதாசன் பற்றிய பல முரண்களும் உதவிகள் துஸ்பிரயோகம் தொடர்பான விபரங்களை இங்கு தவிர்க்கிறேன். இன்னொரு தருணத்தில் கண்ணதாசன் அதிபர் பற்றி எழுதலாம்.)தனது இணையம் மீதும் தன்மீதும் நம்பிக்கையற்றுப் போய்விடும் என்று கூறி எம்மிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். பின்னர் தொடர்பு கொண்டு தான் நேசக்கரத்துடன் இணைந்து உதவவிரும்புவதாகக் கோரியிருந்தார். பணம் சேகரிக்க எமது இலச்சினையினையும் கோரியிருந்தார்.

நேசக்கரம் நிதி சேகரிக்கும் அமைப்பு அல்ல உதவிகளை நேரடியாகச் செய்ய விரும்பும் உறவுகளை உறவுகளுடன் இணைக்கும் பணியையே செய்கிறது என்பதனையும் தெரிவித்து நேரடியாக அனுப்ப வசதியற்ற அல்லது உறவினர்கள் அல்லாதவர்களது உதவிகளையே நேசக்கரம் வங்கியூடாக அனுப்புகிறோம் என்பதனைத் தெளிவுபடுத்தினோம்.

எம்மிடம் இருந்த பல உதவிகோரிய குடும்பங்களின் விபரங்கள் சிலவற்றையும் வழங்கினோம். இவ்விபரங்களில் நவம் அறிவுக்கூடத்தில் வாழ்ந்த ஊனமுற்ற போராளிகள் சிலரும் அடங்கியிருந்தனர். ஏற்கனவே இருந்த பணம் சேகரிப்பு நடைமுறையிலிருந்து விலகி நேசக்கரத்தின் கணக்கறிக்கைகள் வெளிப்படையாக இணையத்தில் பதிவிட்டுவருவதையும் தெரிவித்தோம். மற்றும் உதவிய உறவுகளுக்கு நேரடியான உதவிபெற்றவர்களின் விபரங்களையும் கொடுப்பதனையும் தெளிவுபடுத்தி எமது நிறுவனத்தின் பெயரால் நிதிசேகரிப்பதற்கான அனுமதியினையும் மறுத்திருந்தோம்.

எமது இலச்சினையினை விளம்பரப்படுத்தி பணம் சேகரிக்க நாம் மறுத்ததில் நேசக்கரம் மீது கோபித்துக் கொண்டார் வன்னிமைந்தன். இதனைத் தொடர்ந்து தனிப்பட்ட சாந்தி சிறி ஆகியோர் மீது அவதூற்றுப் பிரச்சாரங்களை ஆரம்பித்து கடந்த வருடம் தனது இணையத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார். சாந்தி , சிறி ஆகியோரின் சொந்தத் தேவைகளுக்கே நேசக்கரம் நிதி சுருட்டப்படுவதாகவும் எழுதியிருந்தார்.

இவ்விடத்தில் இன்னொருவரையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலானய்வுப்பிரிவில் இருந்து பின்னர் 2005ம் ஆண்டு சமாதானகாலத்தில் இயக்கத்தைவிட்டு விலகி இந்தியா தாய்லாந்து உட்பட பலநாடுகளிலும் இருந்து இறுதியில் இத்தாலியில் வந்து குடியேறிய ஒரு முன்னாள் புலானய்வுப்போராளி 2000ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் அதிக வெளித்தொடர்புகள் வாயிலாக இணையப்பாவனையின் அதிகரிப்பில் தனது பதவியின் பலத்தால் வெளிநாட்டில் இயங்கிய வானொலிகள் தொலைக்காட்சிகள் மற்றும் மறுகருத்தாளர்களை பாலியல் ரீதியான அவதூறுகளைப்பரப்பி வந்தார்.

மறுத்துப் பேசினால் அல்லது உண்மையைப் பேசினால் அவர்களை இந்த நபர் பெண்களாயின் பல ஆண்களுடன் தொடர்புபடுத்தல் ஆண்களாயின் பல பெண்களுடன் தொடர்புபடுத்தல் என தனது கட்டுப்பாட்டில் இயங்கிய இணையங்களில் பலரை துரோகியாக்கி அவர்களுக்கு தகாத உறவு வைத்திருந்தோர் என முத்திரை குற்றியவர். அந்த மூத்த புலனாய்வுப்போராளி ஆரம்பித்து வைத்த பொய்யான எதற்கெடுத்தாலும் சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டு அனைத்துலகப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் வரையும் தொற்றியது. இத்தகையதொரு பழிசுமத்தும் வேலையை அகரம் எழுதி ஆரம்பித்து வைத்தவரின் வழியில் இன்றுவரை பாலியல் குற்றச்சுமத்தல் மேற்படி நபரால் இயக்கப்பட்டவர்களால் செய்யப்பட்டு வருகிறது.

இச்செயல்பற்றி புலிகள் அமைப்பிற்கு பலதரப்பிலிருந்தும் பலரால் தெரிவித்தும் இத்தகைய பழிசுமத்தல் பல ஆதரவாளர்களை இழக்க நேரிடும் என்பதனையும் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அந்நேரம் குறித்த நபர் அவரது வன்னிக்குள்ளிருந்த அரசியல் ஞானத்தை வைத்து இப்படித்தான் புலனாய்வு செய்ய வேணுமென தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி தனது வேலைகளை செய்து வந்தார். இதனால் புலனாய்வுப்பிரிவினருக்காக இயங்கிய பலர் மெளனமாகினர் பலர் ஒதுங்கிக் கொண்டனர். அப்படி ஒதுங்கியவர்களுக்கும் மேற்படி நபர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியே தள்ளிவைத்ததார். பல போராளிகள் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த பெண்களை அவர்களது காதலிகள் என இணையங்களிலும் எழுத ஆரம்பித்தார். தனது மனைவியையும் மகளையும் தவிர மற்றைய பெண்கள் யாவரும் பலருக்கு காதலிகள் என்று கற்பிதம் செய்திருந்தார். மே2009இன் முடிவுகளின் பின்னர் பல பெயர்களில் வந்த புலனாய்வுப்பிரிவென்ற அறிக்கைகளின் நாயகன் இவரே. இவரும் இவரது குழுவும் மிரட்டல் மின்னஞ்சல்கள் அவதூற்றுக் குற்றச்சாட்டுகளை அஞ்சல் செய்யத் தொடங்கிவிடுவார்கள். தனியொருவர் அமைத்த குழுவும் அதன் குற்றங்களும் புலிகள் என்ற மாபெரும் கட்டமைப்பின் மீது கரும்புள்ளியானது. இந்த நபர் கடந்த வருடம் இன்ரபோல் தேடும் வரிசையில் போக அந்த அண்ணன் காட்டிய வழியில் பல தம்பிகள் வன்னிமைந்தனாகவும் மேத்தாக்களாகவும் உருவாக வழிவகுத்துச் சென்றுள்ளது.

நேசக்கரத்தை கையகப்படுத்த புலனாய்வுப்பிரிவினர் அனைத்துலகச் செயலகம் என்று பல மிரட்டல்கள் எச்சரிக்கைகள் எம்மீது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நமது உதவிகள் நேரடியாக உதவி தேவைப்படுவோரைச் சென்றடைவதன் நம்பத்தினைப் புரிந்திருந்தமையால் இவர்களது அவதூறு குற்றச்சாட்டுக்கள் எடுபடவில்லை. நேசக்கரம் படிப்படியான தனது முயற்சியில் முன்னேறிக் கொண்டிருந்தது.

எமது நேர்மையான கணக்கறிக்கை வெளிப்படைத்தன்மை எமது உண்மையான செயற்பாடுகளைத் தனது வக்கிரம் பிடித்த குணங்களால் தோற்கடிக்க முடியாது போக, எனது தொலைபேசிக்கு வந்த தொடர் தொல்லைகள் மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் பரிசிலிருந்து சில முக்கிய புலிப்பிரமுகர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் எம்மை ஈபிடிபியின் கூலிகள் மகிந்தவின் உளவாளிகள் என்றெல்லாம் குற்றம்சாட்டினர்.

மற்றும் வானொலிகளில் பணியாற்றிய காலங்களில் என்னுடன் பணியாற்றிய அறிவிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களுடன் தகாத உறவுகள் வைத்திருப்பதாக எழுதப்போவதாகவும் பலவகையான தொல்லைகளை இந்த வன்னிமைந்தனும் இன்னும் பலரும் மேற்கொண்டிருந்தனர். மற்றும் எனது புகைப்படங்களில் வேறு முகங்களை ஒட்டி வெளியிடப்போவதாகவும் தொடர்ந்த தொல்லைகளிலிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

கடந்தவருடம் இத்தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க யேர்மனிய குற்றத்தடுப்புப் பொலிசாரின் உதவியை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்மீது பாலியல் வக்கிரம் மிகுந்த பேச்சுக்கள் கொலைமிரட்டல்கள் மின்னஞ்சல்கள் யாவும் Rheinlandpfalz Trier குற்றத்தடுப்புப் பொலிசாருக்கு வழங்கி என்மீதும் எனது குடும்பம் மீதும் தொடர்ந்த தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளிட வேண்டிய நிலமை வந்தது.

வன்னிமைந்தன் தனது இணையத்தில் கடந்தவருடம் யாழ்இணையம் மற்றும் சாந்தியென்கிற என்மீதும் நேசக்கரம் அமைப்பின் மீதும் பல குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார்.

பின்னர் சிலகாலங்களில் தானாகவே தொடர்பு கொண்டு தான் நேசக்கரம் செய்கின்ற பணிகளை சரியாக அறிந்து கொள்ளாமல் எழுதியதாகவும் கூறினார். புலிகளின் உத்தியூகபூர்வ பேச்சாளர் போல பேச ஆரம்பித்தவர், நாம் உதவும் போராளி குடும்பங்களின் விபரங்களை வெளியிட வேண்டுமெனவும் நாங்கள் உதவிகொடுக்கும் போராளிகளின் படங்கள் விபரங்களை வெளியிடாவிடில் நேசக்கரம் என்ற அமைப்பின் ஊடாக உதவப்படுகிற நிதி தனிப்பட்ட சாந்தி சிறி ஆகியோருக்கு பயன்படுவதாக எழுதப்போவதாக மிரட்டினார்.

அதற்கு நாம் வழங்கிய பதில், நாம் உதவிகோருவோரின் அனுமதியுடன் அவர்களது குரல்களைத்தான் பதிவுசெய்வோம். அவர்களது துயரங்களை அறியத்தருவோம். அவர்களுக்கான உதவிகளைச் செய்வோருக்கு அவர்களது முழு விபரங்களையும் கொடுப்போம். உதவி செய்யாமல் வெறுமனே ஊடகவிளம்பரம் செய்ய எவருடைய படங்களையும் கொடுக்கமாட்டொமெனக் கூறியிருந்தோம்.

எங்களது போராளிகளும் மக்களும் எம்மிடம் உதவியையே கேட்கிறார்களே தவிர எம்மிடம் பிச்சை கேட்கவில்லையென்பதனையும் தெளிவுபடுத்தினோம். மற்றும் நாம் செய்கின்ற உதவிகள் அதன் செய்திகளை இணையத்தில் வெளியிடுவோம் உதவிகள் செய்கின்ற உறவுகளுக்கு மின்னஞ்சல் வசதியுள்ளவர்களுக்கு அஞ்சலிடுவோம் அல்லது கடிதத்தில் அனுப்புவோம். உதவி செய்யாத ஒருவருக்கு எவ்வித விபரங்களையும் தரமாட்டோம் என்பதனை உறுதியாகவும் இறுதியாகவும் தெரிவித்தோம். ஆனால் பயனில்லை. தொடர்ந்தும் மின்னஞ்சல் தொலைபேசித் தொல்லைகள் முடியவேயில்லை. நாம் நேசக்கரத்தை மூடிவிட்டுப் போக வேண்டுமென்பதே இவரது கனவாயிருந்தது.

நேசக்கரம் உதவிகள் பற்றி குற்றம் வைக்கிறவர்கள் சட்டப்படி எம்மை அணுகுங்கள். இதுவொரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு. ஒரு உதவி அமைப்பிற்கான சகல விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு இயங்குகிறது. வரித்திணைக்களம் வரிச்சலுகையை வழங்கியுள்ளது. எமது வங்கியூடாக போகும் ஒவ்வொரு சதத்துக்கும் கணக்குக்காட்ட வேண்டும். அதனையெல்லாம் சட்டத்திற்கு அமைய சரியாகவே செய்கிறோம். நாம் தவறுவிட்டால் எம்மைத் தண்டிக்க சட்டமும் நேசக்கரம் உறவுகளும் இருக்கிறீர்கள். இதில் ஏன் புலிகளின் பெயரையும் தாயகத்தின் பெயரையும் சொல்லி இடைத்தரகர்கள் வருகிறார்கள் ?

உதவுகிற பல உறவுகள் தமக்கு அங்கிருந்து வருகின்ற படங்களை அவர்களது கடிதங்களை பார்க்கும் தைரியமில்லையென தமக்கு ஆதாரம் வேண்டாம் நேசக்கரத்தின் உண்மையான செயற்பாட்டை நம்புகிறோம் எங்கள் உதவிகளை அவர்களிடம் சேருங்கள் எனவும் கூறி எமது மின்னஞ்சல்களையே தவிர்த்திருக்கின்றனர். இந்த உதவும் உறவுகளில் ஒரு சிலர் தவிர மற்றும் எவரையும் எனக்கு முகமோ குரலோ தெரியாதவர்கள். ஆனால் எதுவித உதவிகளையும் செய்யாமல் என்னை தொடர்ந்து தொல்லைப்படுத்தும் வன்னிமைந்தன் மற்றையவர்களுடன் எத்தனைதரம் தான் மல்லுக்கு நிற்பது ?

அண்மைய காலங்களில் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் றெஜி , நெடியவன் , லண்டன் தனம் , கமல் ,யேர்மன் பரணி போன்றோரின் எச்சரிக்கை கோரிக்கையென்றெல்லாம் தொடர்ந்து தொல்லைகளாக இருக்கிறது. மேற்படி பெயர்களுக்கு உரியவர்களின் ஆட்களென பலர் தொலைபேசி மின்னஞ்சல் ஸ்கைப் வழியாக தொடர்ந்த எமது செயற்பாட்டை இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட பிரமுகர்களே உங்களிடம் கேட்கிறோம். நாங்கள் உங்களுடன் எந்தவித முரண்பாடுகளுக்கும் வரவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான வேலைகளைச் செய்கிறோம். ஏன் எங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்கிறீர்கள் ? நேசக்கரம் செய்கின்ற உதவிகள் சிறு அணில் உதவிதான். ஆனால் அதனைப் பெறுகின்ற குடும்பங்கள் குழந்தைகள் பெறுகின்ற பலன் பெரிது. இதனை ஏன் தடுக்க முனைகிறீர்கள் ? நீங்களும் நாங்களும் நட்புரிமையுடன் பழகியிருக்கிறோம். ஆனால் ஏன் இந்த முரண்பாடு ?

30வருட ஆயுதப்போராட்டம் முடிந்து இன்று தெருவில் நிற்கிற மக்களைக் கைதூக்கிவிடுவதே இப்போதைய தேவை. அழிந்து போன எமது கல்விச்சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவோம். அங்கிருந்து எமக்காக விடியலை முகம்கொள்ள வைப்போம். ஏன் சில்லறைத்தனமானவர்களை வைத்து எம்மை எதிரிகள் ஆக்குகிறீர்கள் ?

இப்போது வன்னிமைந்தன் என்ற தனபாலசிங்கம் தயாளன் ஒரு மின்னஞ்சலைப் பரப்பிவருகிறார். நேசக்கரம் பற்றி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நமது கணக்கறிக்கை செய்திகள் தரவுகள் யாவும் பொய்யொன்று புலம்புகிறார்.

இன்று ஸ்கைபில் தொடர்பெடுத்து எதூவெல்லாம் பேசியிருக்கிறார். தான் பரப்பும் மின்னஞ்சல் தான் எழுதவில்லையெனவும் அதனை நெடியவன் எழுதுவதாகவும் நெடியவனைப் புதிதாகக் கூட்டாக்கி பல குற்றச்சாட்டுகளை தனது குரலிலே வைத்திருக்கிறார். மற்றும் விடயங்களை புரிந்து கொள்ளாமல் பேசியவர் தானாகவே தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். அதனை இங்கு இணைக்கிறோம். இதற்கான பதில்களை உறவுகளே உங்களிடம் எதிர்பார்க்கிறோம். உதவிகளை வழங்கும் நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

எங்கள் குடும்பம் குழந்தைகள் வேலை நேசக்கரம் என இயந்திரமாக சில மணித்தியால நித்திரையுடன் சிரமப்படுகிற எங்களின் நிலமையிலும் எங்களால் இயன்ற உதவிகளை கொண்டு செல்ல முனையும் எங்களை தடையிடும் இவர்களை மக்களே கேள்வி கேளுங்கள் ? நேசக்கரம் நிர்வாக மற்றும் தாயகத்து உறவுகளுடனான தொடர்புக்கான தொலைபேசிச்செலவு எல்லாம் எமது வாழ்வுக்காக உழைக்கும் உழைப்பிலிருந்துதான் செலவளிக்கிறோம். உதவிகளாக கிடைக்கிற ஒவ்வொரு துளியையும் உறவுகளே உங்கள் சாட்சியாக எமது மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குற்றமா ? அப்படி உதவும் நாங்கள் சதிகாரர்களா ? சொல்லுங்கள்.

இன்று ஸ்கைபில் வன்னிமைந்தன் என்பவர் கதைத்த குரலின் பதிவு இது.

இணைப்பில் அழுத்தி குரலை கேளுங்கள்.

பிற்குறிப்பு:-

எம்மை முடக்கிய தொடர்ந்து தொல்லை தருகின்ற அரசியல்வாதிகள் மற்றும் பலரது தலையீடுகளை இனி வெளியில் சொல்லும் நேரம் எமக்கு வந்துவிட்டது. தொடரும் தொல்லைகளை மக்கள் முன்னிறுத்த வேண்டிய நிலமையில் உண்மைகளை வெளியில் எழுதவுள்ளோம். எமது மெளனம் பலருக்கு வாய்ப்பாக உள்ளது. இனி அதனை அனுமதிக்கமாட்டோம். திறந்த மனசோடு பேசத்தைரியமில்லாமல் சில அரசியல்வாதிகள் வன்னிமைந்தன் போன்றவர்களை வைத்து எம்மீது சேறடிக்கிறார்கள். அவர்களுக்கான பதிலையும் சொல்லவே போகிறோம்.

உண்மைகள் தொடரும்…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எதிரியால் தொல்லையில்லை என்பது மீண்டும் ...........புரிகிறது

போராட்டமே தமிழனுக்கு வாழ்க்கையாச்சு. இது என்ன சாபமா...?

Link to comment
Share on other sites

விசுகு,

நீங்களும் நீண்டகால நேசக்கரத்தின் உறவு. எவ்வளவோ உதவியிருக்கிறீர்கள். அவை எப்படி போய்ச்சோ்ந்தது பாதிக்கப்பட்டவர்களையென்பதை நீங்கள் அறிவீர்கள். இதுபோல இங்கு உதவும் பலரும் அறிவார்கள் ஆனால் இந்தச் சாபத்தை கொண்டு வருவோரை எப்படி எதிர்கொள்ள ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் இதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள சிலரை எனக்குத்தெரியும். பார்க்கலாம். என்னால் முடிந்த அழுத்தத்தை நான் கொடுப்பேன்.

Link to comment
Share on other sites

எதிர் பாராமல் அமைந்த அலைச்சலும் செலவாலும் என்னாலை உடனடியாக நேசக்கரத்துக்கு பணத்தை குடுக்க முடியவில்லை...( காசு கையிலை இருந்தாலும் இன்னும் எவ்வளவு முடியும் என்பது தெரியாததால் இந்த நிலை...) இருவாரங்களிலை போட்டு விடுகிறன்...

Link to comment
Share on other sites

... நான் நினைக்கிறேன் சாந்தி, நீங்கள் தேவையில்லாமல் அலட்டிக் கொள்வதாக??? ... இப்படி இடையூறுகள் வரும் என்பதனை எதிர்பார்க்க வேண்டும் ... எறிவார்கள், கண்டு கொள்ள வேண்வாம், உந்த குப்பைகளுக்கு பதில் சொல்ல வெளிக்கிட, அவர்களின் வலையில் வீழ்கிறீர்கள்! ... அதனை தவிர்த்தல் நன்று!!

வன்னி மைந்தன்: ... அண்மையில் இவரது இணையங்களும், திருவிளையாடல்களும் பற்றி ஓர் நண்பர் குறிப்பிட்டார். ... விபரங்கள் பின்பு ....

Link to comment
Share on other sites

தேசியம் என யார் காட்டுக் கத்தல் கத்துகின்றார்களோ அவர்கள் தான் அடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தனை மேடைக்கு வரும்படி அன்பாக அழைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

'பிச்சைப் பெட்டிக்குள் பேய் பூந்த மாதிரி' என்பது இதைத்தான்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழனே தடையா? சிங்கள அரசு கூட இப்படிக் கஷ்டம் தராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பிச்சைப் பெட்டிக்குள் பேய் பூந்த மாதிரி' என்பது இதைத்தான்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழனே தடையா? சிங்கள அரசு கூட இப்படிக் கஷ்டம் தராது.

சரியாகச் சொன்னீர்கள் தப்பிலி.

வாய் நிறைய தமிழ் தேசியம் பேசிய, "வன்னி மைந்தனா" என்னும் போது......

எந்தப், "புத்துக்குள்ளை எந்தப் பாம்பு இருக்கும்" என்று, எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

அண்மைய காலங்களில் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் றெஜி , நெடியவன் , லண்டன் தனம் , கமல் ,யேர்மன் பரணி போன்றோரின் எச்சரிக்கை கோரிக்கையென்றெல்லாம் தொடர்ந்து தொல்லைகளாக இருக்கிறது. மேற்படி பெயர்களுக்கு உரியவர்களின் ஆட்களென பலர் தொலைபேசி மின்னஞ்சல் ஸ்கைப் வழியாக தொடர்ந்த எமது செயற்பாட்டை இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

:D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எம்மிடையேதான் எட்டப்பர்களும் , காக்கை வன்னியன்களும் நிறைந்திருக்கின்றனர்! இவர்கள் வைக்கற் போரில் மாட்டின் பசிக்கு தின்ன விடாமல் இடைஞ்சலாய் இருப்பவர்கள்!

நீங்கள் என்னைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு சேவை செய்கின்றீர்கள்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி!

Link to comment
Share on other sites

சாந்தி,

உங்கள் சேவை மீது எந்த சந்தேகமும் இல்லை...தொடர்ந்து இணைந்து இருப்போம்

இத்தகைய கேவலமான கயவர்களை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

வன்னியிலிருந்து வல்வெட்டித்துறைக்கு அகதியாக வந்திருக்கும் உறவுகளுக்கான உதவியை வல்வை நலன்புரிச்சங்கத்தை அணுகினால் பெற்றுக் கொள்ளலாம் அப்படியிருக்கும்போது வல்வை ரோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் கண்ணதாசன் எனக்குத் தெரிய பல புலம் பெயர்ந்த உறவுகளிடம் தொடர்பை ஏற்படுத்தி உதவி கேட்டு வருகிறார். வன்னி மைந்தன் பற்றிய உங்கள் குற்றச்சாட்டை இந்த அதிபர் கண்ணதாசனைத் தவிர்த்து வேறுவிடயங்களில் வைத்தால் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும் என்பது எனது கருத்து.

இக்கருத்தை பார்த்தவுடன் உடனடியாக என்மீது கோபம் கொள்ளவேண்டாம். இங்கு எழுதப்படும் பல விடயங்களுக்குக் கருத்து எழுதி மனஸ்தாபப்படுவதைக்காட்டிலும் தவிர்த்துவிட்டால் நல்லது என்று ஒதுங்கி இருக்கின்றேன். இப்போதும் இதற்கு நான் கருத்தெழுத வந்த காரணம் வல்வெட்டித்துறையில் இயங்கும் ஒரு பாடசாலை மாணவர்களுக்கான உதவியில் இருந்தே இக்குற்றச்சாட்டு தொடர்ந்து இருப்பதனால்.

நன்றி வாதத்திற்கு வரவில்லை.

Link to comment
Share on other sites

சகாரா இதில் கோபப்பட எதுவுமில்லை. கண்ணதாசன் அதிபர் பற்றி இங்கு குறைசொல்லவில்லை.

வல்வை ஒன்றியத்தின் ஊடாக அவர் உதவிகோரி கிடைக்கவில்லையென்று கடிதம் எழுதித்தான் அந்தப்பிள்ளைகளுக்கான உதவியை வழங்கினோம். பின்னர் எமது பணியாளர்கள் அதிபரின் இடத்திற்கு சென்று நிலமைகளை நேரடியாக பார்வையிட்டு தந்த தரவுகளின் அடிப்படையில் அப்பாடசாலைகளுக்கான உதவிகளை தவிர்த்திருந்தோம். மற்றும் இவ்வுதவி கடந்த வருடம் தைமாதம் மாசிமாதங்களில் செய்திருந்தோம்.

கண்ணதாசன் அதிபர் இப்போதும் உதவிகேட்டு எல்லாருக்கும் எழுதும் கடிதங்கள் நேசக்கரத்துக்கும் வந்து கொண்டுதானிருக்கிறது. அதை நீங்கள் கண்ணதாசனிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். தற்போது கண்ணதாசன் மேற்படி பாடசாலையில் இல்லை. இன்னொரு பாடசாலையின் அதிபராக மாற்றம் பெற்று போயிருக்கிறார். இப்போதைய பாடசாலைக்கான உதவிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் ரங்கா ஊடாக பெற்றிருந்த படங்கள் செய்திகளும் அனுப்பியிருந்தார்.

இங்கு கண்ணதாசன் பற்றி எதையும் எழுத வேண்டி வந்தது வன்னிமைந்தன் மின்னஞ்சலில் பரப்பும் குற்றச்சாட்டில் கண்ணதாசனின் பெயரும் இருப்பதாலேயே. கண்ணதாசன் பற்றி இதில் விவாதித்து கருத்தை திசைதிருப்பவில்லை. அதற்கும் ஒரு தேவை வருகிற போது அதையும் எழுதலாம்.

நீங்கள் நம்பிக்கைக்கு உரியதாக எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை.

குறித்தபாடசாலை மாணவர்கள் உதவிகள் பற்றிய விபரங்கள் ஏன் தொடர்ந்து உதவி நிறுத்தப்பட்டது போன்ற விபரங்கள் இதில் எழுத நேரமில்லை. தேவையானால் தொலைபேசியில் விளக்கலாம். நேரம் கிடைக்கிற போது தொடர்பு கொள்கிறேன்.

மற்றும் வல்வெட்டித்துறை வன்னி முல்லைத்தீவென்றெல்லாம் பேதம் பார்த்து உதவிகளை நாம் யாருக்கும் வழங்கவில்லை. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முன்னாள் பெண் போரளிகள் சிலர் தற்போது உதவிகள் கேட்டு செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்காக தங்களை இழந்தார்கள் என்பதற்காகவும் செய்கிறோம்.

சகாரா இது கருத்துக்களம் தானே. கருத்தாடுவோம். இதில் நாம் மனஸ்தாபப்பட எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

எதிர் பாராமல் அமைந்த அலைச்சலும் செலவாலும் என்னாலை உடனடியாக நேசக்கரத்துக்கு பணத்தை குடுக்க முடியவில்லை...( காசு கையிலை இருந்தாலும் இன்னும் எவ்வளவு முடியும் என்பது தெரியாததால் இந்த நிலை...) இருவாரங்களிலை போட்டு விடுகிறன்...

கருத்துக்களில் எவ்வளவோ தடவைகள் முரண்பட்டிருக்கிறோம். ஆனால் நேசக்கரம் செய்கிற உதவிகள் சரியாக செல்கிறதென்பதைப் புரிந்து கொண்டு உதவியை வழங்கும் உங்களுக்கு நன்றிகள். கருத்தால் முரண்பட்டால் கோவித்துக்கொண்டு ஒதுங்குகிற நிலமையிலிருந்து விலகாதிருப்பதற்கு நன்றிகள் தயா.

Link to comment
Share on other sites

... நான் நினைக்கிறேன் சாந்தி, நீங்கள் தேவையில்லாமல் அலட்டிக் கொள்வதாக??? ... இப்படி இடையூறுகள் வரும் என்பதனை எதிர்பார்க்க வேண்டும் ... எறிவார்கள், கண்டு கொள்ள வேண்வாம், உந்த குப்பைகளுக்கு பதில் சொல்ல வெளிக்கிட, அவர்களின் வலையில் வீழ்கிறீர்கள்! ... அதனை தவிர்த்தல் நன்று!!

வன்னி மைந்தன்: ... அண்மையில் இவரது இணையங்களும், திருவிளையாடல்களும் பற்றி ஓர் நண்பர் குறிப்பிட்டார். ... விபரங்கள் பின்பு ....

நெல்லையன்,

அலட்டிக்கொள்ள வேண்டாமேயென்றுதான் 2வருடங்கள் மெளனம் காத்தேன். ஆனால் புதியபுதிய அவதாரங்களாக வீடுவரை குடும்ப அங்கத்தவர்களையும் உழைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு போகின்றோம் என்பதற்காக சிலுவை சுமக்க வைக்கிறார்களே ? அதுதான் பேசாமல் இருக்க முடியவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா இதில் கோபப்பட எதுவுமில்லை. கண்ணதாசன் அதிபர் பற்றி இங்கு குறைசொல்லவில்லை.

வல்வை ஒன்றியத்தின் ஊடாக அவர் உதவிகோரி கிடைக்கவில்லையென்று கடிதம் எழுதித்தான் அந்தப்பிள்ளைகளுக்கான உதவியை வழங்கினோம். பின்னர் எமது பணியாளர்கள் அதிபரின் இடத்திற்கு சென்று நிலமைகளை நேரடியாக பார்வையிட்டு தந்த தரவுகளின் அடிப்படையில் அப்பாடசாலைகளுக்கான உதவிகளை தவிர்த்திருந்தோம். மற்றும் இவ்வுதவி கடந்த வருடம் தைமாதம் மாசிமாதங்களில் செய்திருந்தோம்.

கண்ணதாசன் அதிபர் இப்போதும் உதவிகேட்டு எல்லாருக்கும் எழுதும் கடிதங்கள் நேசக்கரத்துக்கும் வந்து கொண்டுதானிருக்கிறது. அதை நீங்கள் கண்ணதாசனிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். தற்போது கண்ணதாசன் மேற்படி பாடசாலையில் இல்லை. இன்னொரு பாடசாலையின் அதிபராக மாற்றம் பெற்று போயிருக்கிறார். இப்போதைய பாடசாலைக்கான உதவிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் ரங்கா ஊடாக பெற்றிருந்த படங்கள் செய்திகளும் அனுப்பியிருந்தார்.

இங்கு கண்ணதாசன் பற்றி எதையும் எழுத வேண்டி வந்தது வன்னிமைந்தன் மின்னஞ்சலில் பரப்பும் குற்றச்சாட்டில் கண்ணதாசனின் பெயரும் இருப்பதாலேயே. கண்ணதாசன் பற்றி இதில் விவாதித்து கருத்தை திசைதிருப்பவில்லை. அதற்கும் ஒரு தேவை வருகிற போது அதையும் எழுதலாம்.

நீங்கள் நம்பிக்கைக்கு உரியதாக எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை.

குறித்தபாடசாலை மாணவர்கள் உதவிகள் பற்றிய விபரங்கள் ஏன் தொடர்ந்து உதவி நிறுத்தப்பட்டது போன்ற விபரங்கள் இதில் எழுத நேரமில்லை. தேவையானால் தொலைபேசியில் விளக்கலாம். நேரம் கிடைக்கிற போது தொடர்பு கொள்கிறேன்.

மற்றும் வல்வெட்டித்துறை வன்னி முல்லைத்தீவென்றெல்லாம் பேதம் பார்த்து உதவிகளை நாம் யாருக்கும் வழங்கவில்லை. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முன்னாள் பெண் போரளிகள் சிலர் தற்போது உதவிகள் கேட்டு செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்காக தங்களை இழந்தார்கள் என்பதற்காகவும் செய்கிறோம்.

சகாரா இது கருத்துக்களம் தானே. கருத்தாடுவோம். இதில் நாம் மனஸ்தாபப்பட எதுவுமில்லை.

சாந்தி நீங்கள் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள். வல்வெட்டித்துறையில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டிய கடமை வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்திற்கு இருக்கிறது. இந்த நலன்புரிச்சங்கம் மட்டுப்படுத்தப்பட்டது தனது ஊருக்கு அப்பால் பரந்துபட்டுச் செயலாற்ற முடியாதது. தனது ஊருக்குள் தஞ்சமென்று வந்தவர்களை தாங்கவேண்டிய பொறுப்பைத் தார்மீகமாகக் கொண்டது. ஊருக்குள் அகதியாக வந்தவர்கள் ஊரவர்களாக மட்டுமில்லை தமிழீழத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளார்கள். அவர்களை அரவணைக்கவேண்டிய தேவை நலன்புரிச்சங்கத்திற்கு இருக்கிறது. இதை பிரதேச வாதமாகக் கருதமுடியாது. நீங்கள் புலம்பெயர்ந்த ஒரு அமைப்பு நீங்கள் மட்டுப்படுத்தப்படாதவர்கள் பரவலாக செய்யக்கூடியவர்கள். ஒரு ஊரின்நலன்புரிச்சங்கத்தையும் நேசக்கர அமைப்பையும் ஒப்பீட்டில் வைத்து உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

அடுத்து அதிபர் கண்ணதாசனைப் பற்றி நான் உங்கள் கருத்தைத் திசைதிருப்பவில்லை. வன்னி மைந்தன் தொடர்பான குற்றச்சாட்டில் வல்வை ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபரான கண்ணதாசன் இடம்பெற்றிருந்தார். நான் வல்வெட்டித்துறையைச் சார்ந்தவள் ஆதலாலேயே அதிபர் கண்ணதாசன் சரியான முறையில் ஊருக்குள் இருக்கும் அகதிக்களுக்கான உதவியை நலன்புரிச்சங்கத்தை அணுகிப் பெற்றிருக்கவேண்டும். இதில் எங்கேயோ முரண்பாடு தென்படுகிறது. எனக்கு அதிபர் கண்ணதாசனின் அணுகுமுறையில் ஏதோ தவறுள்ளது போல் இருக்கிறது. இத்தகைய தவறுதல்தான் நீங்கள் வன்னியையும் குற்றஞ்சாட்ட ஏதுவாகியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவுதான் மேற்படி வேறு குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கூடுதலான நம்பிக்கையைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தெளிவான பதிலுக்கு நன்றிகள் சகாரா. வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்தின் உதவிகள் பற்றி வல்வெட்டித்துறையில் இருந்து உதவிகோருவோருக்கு பலதரம் சொல்லியிருக்கிறேன். அதையும் மீறி நாங்களும் உதவ வேண்டியிருக்கிறது. உங்கள் ஊர் சங்கம் ஒரு எல்லைக்கு உட்பட்டு செயற்படுகிறது என்பது இன்று உங்கள் கருத்தில் இருந்து தான் அறிந்து கொண்டுள்ளேன்.

கண்ணதாசனின் அணுகுமுறை செயற்பாடுகள் திருப்தியின்மையால் தான் நாம் உதவிகளை நிறுத்தினோம். அவர் பற்றிய தவறான விநியோகங்கள் தொடர்பில் கடந்தவருடம்எமது பணியாளர்கள் நேரில் சென்று கதைத்திருந்தார்கள். அவரது விடயங்கள் பற்றி இங்கு எழுதி அவரது ஆயுதக்குழுவின் செல்வாக்கால் நம்மால் மீண்டும் தொல்லைப்பட முடியாதுள்ளது. ஊரவர்கள் இவ்விடயத்தில் கவனம் எடுத்து நடவடிக்கை எடுத்தல் சிறந்தது. கண்ணதாசன் நெல்லியடியைச் சேர்ந்தவர் என்றே எம்மிடம் அறிமுகமானார். அவர் தொடர்பாக நாம் நிதானமாகவே கையாண்டோம்.

இங்கு வன்னியின் மறுபக்கத்தை புரிந்து கொள்ளாமல் நீங்கள் அதீத நம்பிக்கையில் அவரைப் புரிந்துள்ளீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. வன்னிமைந்தனின் தொடர் மெயில் ஸ்கைப் தொல்லையுரையாடல்கள் காலக்கிரமத்தில் அனுப்புகிறேன். பாருங்கள். தொடர்ந்த அவரது தொல்லைகள் தாங்க முடியாத கட்டத்தில் தான் எழுத நேர்ந்தது.

Link to comment
Share on other sites

இன்று ஸ்கைபில் வன்னிமைந்தன் என்பவர் கதைத்த குரலின் பதிவு இது.

இணைப்பில் அழுத்தி குரலை கேளுங்கள்.

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதையும் அவ்வாறு பதியப்பட்ட உரையாடல்களை ஆதாரமாக பாவிப்பதையும் கண்காணிக்கும் கடுமையான சட்டவிதிகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ளன!

அல்லலுறும் நமது மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட எவரும் தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்கி கொள்ளாது தமது பணியை மென்மேலும் சிறப்புற செய்வது இன்றைய மிகப்பெரிய தேவையாகும்!

இது பற்றி திருமதி சாந்தி அவர்கள் கவனம் எடுப்பாராக!

German Laws on Recording Telephone Conversations (from Wikipedia - it is found in other references too)

Germany is a two party consent state. Telephone recording without two or more parties consents is a criminal act according to Sec. 201 to German Criminal Code [1] -

violation of the confidentiality of the spoken word. Telephone tapping by authorities has to be approved by a judge. For the discussing about the lawful interception in Germany please see here de:Telefonüberwachung(German language).

http://en.wikipedia.org/wiki/Telephone_recording_laws

இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் உரையாடல்களை மூன்றாவது நபர் ஒட்டுக்கேட்டு பதிவுசெய்வது தான் தண்டனைக்கு உரிய குற்றம்.

எமது உரையாடலை நாம் எந்த ஒருவிதத்திலும் பதிவு செய்யலாம். இது குற்றமில்லை.

எனவே சாந்தி அவர்கள் தனது உரையாடல்களை, தனக்கு வரும் தொல்லைபேசி அழைப்புக்களை பதிவு செய்வது எந்த விதத்திலும் குற்றமாகாது.

திருட்டுக் கும்பலுக்கு இத்தகைய பதிவுகள் நடுக்கத்தை ஏற்படுத்தும். நேர்மையாக நடப்பவர்கள் பயப்படத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பு தாயக மக்களின் தேவைகளில் சிறிய அளவையேனும் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு.

இதை வன்னி மைந்தன் உட்பட்ட அனைத்து கள உறவுகளும் அறிவார்கள்.

நேசக்கர அமைப்பிற்காக உதவிகள் பெறுதல்.. உரியவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தல் தொடர்பான விடயங்களை சாத்திரி மற்றும் சாந்தி இருவரும் தன்னார்வ அடிப்படையில் யாழ் கள உறவுகள் என்ற வகையில் அதன் ஆரம்ப காலம் தொட்டு செய்து வருகின்றனர்.

தயவுசெய்து.. சாந்தி அல்லது சாத்திரியோடு உங்களுக்குள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை நேசக்கரத்தின் பிரச்சனையாக உருவகிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் எவராகட்டும் எல்லோரும் மக்களின் பணிக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பொதுப்பணியை செய்யும் போது அவர்களுக்கு இடையூறாக இருப்பது நல்லதல்ல. பொதுப் பணியாளர்கள் பற்றிய தனிப்பட்ட விடயங்களை தனிப்பட்ட வகையில் பேசியோ அல்லது சட்ட நடவடிக்கை மூலமோ தீர்த்துக் கொள்ளுங்கள். நேசக்கரம் சார்ந்து பணியாளர்களை.. பங்காளிகளை.. மக்களை தண்டிக்கவோ.. குற்றம்சாட்டவோ சரியான காரணம் இருப்பின் அவற்றை தெளிவாக எவரும் இங்கு முன் வைக்கலாம்.

காரணம் நேசக்கரத்தின் தோற்றுவாய்கள் யாழ் களத்தில் இருந்து தான் எழுந்தன. அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அளிப்பார்கள்.

அப்படி எவராவது நேசக்கரம் தொடர்பாக ஐயுறவு.. ஐயம்.. கொண்டிருந்தால்.. தயவுசெய்து.. பணியாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை விடுத்து நேரடியாக யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களை ஆதாரங்களை முன் வையுங்கோ. நேசக்கரத்துக்கு யாழ் கள நிர்வாகம் பொறுப்பல்ல. ஆனால் யாழில் உள்ள உறவுகள் அதன் தோற்றுவாயாக செயற்பாட்டாளர்களாக பங்காளிகளாக இன்றும் இருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

சாந்தி அல்லது சாத்திரியை தண்டிக்க நேசக்கரத்தை அதன் நாமத்தை பாவிப்பதை நிறுத்திக் கொள்வது தேச மக்களின் நலனுக்கு உதவும். உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நேசக்கரத்தை கருவியாக பாவிப்பதை நிறுத்திக் கொள்வதும் மக்களுக்கு உதவி நிற்பதற்கு சமன் என்று நினைக்கிறோம்.

Link to comment
Share on other sites

என்ன செய்வது எம்மிடையேதான் எட்டப்பர்களும் , காக்கை வன்னியன்களும் நிறைந்திருக்கின்றனர்! இவர்கள் வைக்கற் போரில் மாட்டின் பசிக்கு தின்ன விடாமல் இடைஞ்சலாய் இருப்பவர்கள்!

நீங்கள் என்னைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு சேவை செய்கின்றீர்கள்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி!

உங்கள் நம்பிக்கையே மீளவும் இயங்க வைக்கிறது சுவி.

சாந்தி,

உங்கள் சேவை மீது எந்த சந்தேகமும் இல்லை...தொடர்ந்து இணைந்து இருப்போம்

உங்கள் தொடர்ந்த ஆதரவோடு நிமிர்கிறோம் நிழலி. பெற்றோர் மாவீரர்களாகிய பிள்ளைகள் இருவரை பொறுப்பேற்று உதவுவது மட்டுமில்லாமல் மேலும் 3பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவிக்கு வழி தந்து உங்கள் நண்பர் உறவினரையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

நேசக்கரம் அமைப்பு தாயக மக்களின் தேவைகளில் சிறிய அளவையேனும் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு.

இதை வன்னி மைந்தன் உட்பட்ட அனைத்து கள உறவுகளும் அறிவார்கள்.

நேசக்கர அமைப்பிற்காக உதவிகள் பெறுதல்.. உரியவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தல் தொடர்பான விடயங்களை சாத்திரி மற்றும் சாந்தி இருவரும் தன்னார்வ அடிப்படையில் யாழ் கள உறவுகள் என்ற வகையில் அதன் ஆரம்ப காலம் தொட்டு செய்து வருகின்றனர்.

தயவுசெய்து.. சாந்தி அல்லது சாத்திரியோடு உங்களுக்குள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை நேசக்கரத்தின் பிரச்சனையாக உருவகிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் எவராகட்டும் எல்லோரும் மக்களின் பணிக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பொதுப்பணியை செய்யும் போது அவர்களுக்கு இடையூறாக இருப்பது நல்லதல்ல. பொதுப் பணியாளர்கள் பற்றிய தனிப்பட்ட விடயங்களை தனிப்பட்ட வகையில் பேசியோ அல்லது சட்ட நடவடிக்கை மூலமோ தீர்த்துக் கொள்ளுங்கள். நேசக்கரம் சார்ந்து பணியாளர்களை.. பங்காளிகளை.. மக்களை தண்டிக்கவோ.. குற்றம்சாட்டவோ சரியான காரணம் இருப்பின் அவற்றை தெளிவாக எவரும் இங்கு முன் வைக்கலாம்.

காரணம் நேசக்கரத்தின் தோற்றுவாய்கள் யாழ் களத்தில் இருந்து தான் எழுந்தன. அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அளிப்பார்கள்.

அப்படி எவராவது நேசக்கரம் தொடர்பாக ஐயுறவு.. ஐயம்.. கொண்டிருந்தால்.. தயவுசெய்து.. பணியாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை விடுத்து நேரடியாக யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களை ஆதாரங்களை முன் வையுங்கோ. நேசக்கரத்துக்கு யாழ் கள நிர்வாகம் பொறுப்பல்ல. ஆனால் யாழில் உள்ள உறவுகள் அதன் தோற்றுவாயாக செயற்பாட்டாளர்களாக பங்காளிகளாக இன்றும் இருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

சாந்தி அல்லது சாத்திரியை தண்டிக்க நேசக்கரத்தை அதன் நாமத்தை பாவிப்பதை நிறுத்திக் கொள்வது தேச மக்களின் நலனுக்கு உதவும். உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நேசக்கரத்தை கருவியாக பாவிப்பதை நிறுத்திக் கொள்வதும் மக்களுக்கு உதவி நிற்பதற்கு சமன் என்று நினைக்கிறோம்.

நெடுக்ஸ்,

உங்கள் உதவியும் நேசக்கரத்தின் தோற்றுவாயிலிருந்து இன்றுவரை இருக்கிறது. இங்கு அங்கத்தவர்களாக இருக்கிற பலரது உதவிகளே பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைகிறது. உதவுவோர் யாவருக்கும் அதுதொடர்பான விபரங்களை இந்த இணையத்திலேயும் நேசக்கரம் இணையத்திலும் வெளியிடுகிறோம்.

தனிப்பட்ட எம்மீது ஏதும் பிரச்சனைகள் இருப்பின் அதனையும் பொதுமேடையில் கேள்வி கேட்கும் உரிமையும் உறவுகளாகிய உங்களுக்க இருக்கிறது. ஆனால் நான் தான் காவலன் சேவகன் என்ற அடிப்படையில் தேவையற்ற குற்றச்சாட்டுகளையும் மோசமான கட்டுக்கதைகளையும் புனையும் தனபாலசிங்கம் தயாளன்(வன்னிமைந்தன்) தனது வக்கிரபுத்தியை தொடர்ந்து பல வகையில் வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். இது எமது செயற்பாட்டுக்கு இடைஞ்சலாகவே இருக்கிறது. ஒருவருடத்துக்கு மேலாக இவரது தொல்லைகள் தொடர்கின்றமையாலே பொதுமேடைக்கு கொண்டுவர நேர்ந்தது.

பல முகம் தெரியாத நண்பர்கள் நேசக்கரத்தின் ஊடாக உதவுவோர் இத்தகைய சலசலப்புகளுக்கு பதில் எழுதாமல் வேலையைச் செய்யும்படி உரிமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களது மெளனம் சிலருக்கு வாய்ப்பாகி அமைந்துவிட்டது. அதனாலேயே எழுத நேர்ந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.