Jump to content

100பேர் முன்வந்தால் இக்குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாகும்.


Recommended Posts

இப்படியும் தமிழ்க் கிராமங்களும் குழந்தைகளும் இருக்கின்றவா ?

இப்படியும் ஊர்கள் இருக்கின்றனவா ? என ஆச்சரியப்பட வைக்கும் கதைகள் நிறைந்தது தான் திருகோணலை மாவட்டம் , மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களான கடற்கரைச்சேனை , நீனாக்கேணி (மலைமுந்தல்), நல்லூர் ஆகிய கிராமங்கள்.

இந்தக் கிராமத்தினர் ஆதிவாசிகள் வம்சத்தைச் சேர்ந்த குடிகளின் சமூகம். தமிழ்பேசும் தமிழர்கள் இவர்கள். மின்னொளி வெளிச்சத்தை , தொலைக்காட்சியை இல்லது இக்காலத்தில் நமது குழந்தைகள் காணும் இணையம் எதனையும் இந்தக்கிராமத்தின் குழந்தைகளும் அறியவில்லை பெரியவர்களும் அறியவில்லை.

10ம் வகுப்பைத்தாண்டி பிள்ளைகளைக் கல்வியில் முன்னேற்றவோ அல்லது மேற்படிப்பு படிப்பிக்கவோ இந்த மக்களால் முடியாத வறுமையினால் இளவயதுத் திருமணங்களும் சமூக விழுமியங்களை மீறிய உறவுகளும் வலுப்பெற்றுள்ளது.

38951_147886185223259_100000056368074_411337_4471859_n.jpg

இக்கிராமங்களின் குழந்தைகளுக்கு எழுதும் வாசிக்கும் அறிவையே தம்மால் வழங்க முடிகிறதாகவும் , 10ம் வகுப்பை பிள்ளைகள் அடைந்ததும் அவர்கள் திருமணமாகிப்போக அவர்களது குழந்தைகள் இப்பள்ளிகளுக்கு படிக்க வருவதாகவும் ஆசிரியர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார். கல்வியறிவாலும் வாழ்வாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய இக்கிராமங்களின் பிள்ளைகள் படிப்பது படித்து உயர் நிலையை அடைவதென்பது பெரும் சவாலாகவே இருக்கிறது.

பலஏக்கர் வயல்களுக்கும் நிலங்களுக்கும் சொந்தமாயிருந்த இவர்களது சொத்துக்கள் கல்வியறிவற்றவர்கள் என்ற காரணத்தால் பணக்கார சமூகத்தினரால் 5ஆயிரம் 10ஆயிரம் ரூபாய்களுக்கு பெறுமதிமிக்க நிலங்கள் ஏமாற்றிச் சொந்தமாக்கப்பட்டுள்ளது. மற்றும் இளம் சிறுமிகள் தகாத உறவுகளுக்குப் பலியிடப்பட்டும் உள்ளனர். இன்றும் அங்கங்கு இத்தகைய சிறுமிகளை நாசம் செய்யும் நிகழ்வு சத்தமின்றி இப்பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது.

40764_147885835223294_100000056368074_411332_1756390_n.jpg

அடிப்படை வசதிகளான மலசலகூடங்களோ நல்ல தண்ணீர் கிணறுகளோ அல்லது கல்வீடுகளோ இவர்களுக்கு எட்டாக்கனிதான். காடுகளிலும் கடற்கரைகளிலும் தற்காலிக கொட்டகைகளிலும் தான் இவர்களின் வாழ்வு எழுதப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலிருந்து புதிதாய் எமது உதவிகளை வேண்டிய கிராமங்கள் வரிசையில் இந்த 3கிராமங்களும் வந்திருந்தன. யுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு சுனாமியாலும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்திருந்த கிராமங்கள் 2011இல் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமான நிலமையில் பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இவர்களது வாழ்வு சிதைந்துபோயுள்ளது. அதிலும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தேவைகள் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது. கற்கை உபகரணங்கள் , பள்ளிச்சீருடைகள் , பாதணிகள் , புத்தகப்பைகள் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலமையில் நிறுவனங்களாலும் கைவிடப்பட்ட நிலமையில் உள்ளார்கள்.

இக்கிராமங்களிலிலிருந்து முதலாவதாக நீனாக்கேணி கிராமத்தில் தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்டிருக்கும் மலைமுந்தல் மலைமகள் வித்தியாலயத்தின் பிள்ளைகளின் விபரங்களைச் சேகரித்தோம். அப்பாடசாலையில் கற்கின்ற 50ஆண்பிள்ளைகளும் 47 பெண் பிள்ளைகளுமாக மொத்தம் 97 மாணவர்களின் தரவுகளைப் பார்த்த போது இந்த நூற்றாண்டில் இப்படியும் கிராமங்களும் குழந்தைகளும் உள்ளார்களா என்ற எண்ணமே வருகிறது.

இப்பிள்ளைகள் தமக்கான சத்தான உணவுகளையோ சரியான சுகாதார வசதிகளையோ பெறாதவர்களாகவும், அவர்கள் அணிவதற்கான பொருத்தமான ஆடைகளை தங்கள் பாதங்களை சுகாதாரத்துடனும் சுடுவெயிலில் இருந்து பாதுகாக்கவும் பாதணிகளைக்கூட அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். வேலிகள் அற்ற குடிசையும் இயற்கைக்கடன்களைக் கழிக்க மலசலகூட வசதிகள் இல்லாத தற்காலிக கொட்டில்களிலேயே வாழ்கின்றனர். குப்பி விளக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது இருள் வந்தால் இவர்களது தற்காலிக கொட்டகைகளும் இருண்டுவிடுகிற துயரமான வாழ்வைவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்படுகின்ற மதிய உணவுபோசனம் கூட இம்மாணவர்களுக்கு கடந்த வருட இறுதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் பள்ளிக்கு வரும் பிள்ளைகள் வெறும் வயிற்றுடன் பசியுடன் வருகிற நிலமையும் 11மணியுடன் பசிக்கிறதென பிள்ளைகள் வீட்டுக்குப் போக விரும்புவதும் தினமும் நடக்கிறது.

இப்பிள்ளைகளுக்கான கல்வியை உணவைக் கொடுத்து உயர்த்த வேண்டிய கடமையை நேசக்கரம் பொறுப்பேற்றுள்ளது. எங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிற வசதிகளிலிருந்து ஒரு துளியை இக்குழந்தைகளுக்காக வழங்குவோமா ? ஒரு பிள்ளையை ஒவ்வொருவர் பொறுப்பேற்று உயர்த்தி விடுவோமா ?

ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் 5,00€வை உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். உதவவிரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கான விபரங்களைத் தந்துதவுவோம்.

இப்பிள்ளைகளுக்கான முதற்கட்டமாக கற்கை உபகரணங்களை வழங்கவும் இவர்களுக்கான காலையுணவையும் வழங்க விரும்புகிறோம். மாதாந்தம் இவர்களுக்கான உணவை வழங்க இலங்கைரூபா 20000/=(இருபதாயிரம் ரூபா) தேவைப்படுகிறது.

மாதாந்தம் இப்பாடசாலைக்கு அண்ணளவாக 500,00€தேவைப்படுகிறது. 100பேர் முன்வந்தால் இக்குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாகும்.

உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் ஞாபகமாக உங்கள் உறவுகளின் நினைவுநாட்களின் ஞாபகமாக ஒரு சிறு பங்களிப்பினை இம்மாணவர்களின் எதிர்காலம் சிறக்க உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

உதவ விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்:-

Contact:-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Link to comment
Share on other sites

நீனாக்கேணி மலைமுந்தல் வித்தியாலயத்தில் கற்கும் பிள்ளைகளுக்கு உதவியாக 138,50€டுபாயிலிருந்து மதுரன் (தமிழகம்) அவர்கள் வழங்கியுள்ளார். 100பேர் முன்வந்தால் இக்குழந்தைகள் கல்வியில் முன்னேறுவார்கள். உதவுவீர்களாக உறவுகளே ?

மதுரன் - 138,50€

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.