Jump to content

ஜப்பானில் அணுக்கசிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mar 15, 2011 / பகுதி: செய்தி /

4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!

ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் அது வெடித்தது. இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.

இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன. முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.

இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர். டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 4வது அணு உலை... இந்த நிலையில், ஃபுகுஷிமாவின் நான்காவது அணு உலையில் பெரும் தீ ஏற்பட்டது. இதை அணைக்க முடியாமல் தவித்தனர் ஊழியர்கள். இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் இந்த அணு உலை வெடித்துச் சிதறியது.

இதனால் ஃபுகுஷிமோ நகரமே வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்துள்ளது. வெடித்த நான்கு அணு உலைகளிலிருந்தும் கதிர்வீச்சின் அளவு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு பரவியுள்ளதாக ஜப்பான் அரசே அறிவித்துள்ளது.

மேலும், கதிர்வீச்சில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.

உதவுங்கள்....

இந்த நெருக்கடியைச் சமாளிப்பது மிக சவாலாக உள்ளதாகவும், அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என்றும் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி...

ஃபுகுஷிமா டாய்ச்சியிலிருந்து பரவும் அணுக்கதிர் வீச்சு, மியாமி வரை உணரப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கதிர்வீச்சின் முதல் தாக்கம் மியாமியில் தரையிறங்கு முன் விமானத்தில் உணரப்பட்டதாகவும், இது 2 புள்ளிகள் வரை இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

pathivu

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

இலங்கை வான் பரப்பு கண்காணிக்கப்படும்

ஜப்பானில் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சு கசிவினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என இலங்கை அணுசக்தி முகவரகம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் இலங்கை வான் பரப்பில் கதிர்வீச்சு பொருட்கள் எதுவும் காணப்படுகிறதா என்பதை அறிவதற்காக  நாளை முதல் வான்பரப்பை காண்காணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்காண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என இலங்கை அணுசக்தி முகவரகத்தின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18118-2011-03-15-10-43-30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

டிஸ்கி: ஜப்பானில் அணுக்கசிவு எண்டவுடனே செக்ஸ் டாக்டர் நெடுக்காலபோவான் வந்து பதில்சொல்லுவார் எண்டு பார்த்தால் ஆளைக் காணமே..! :unsure:

நான் மலைப் பாம்பைப் பார்த்தே பயந்து போயிருக்கன்... அதுக்க அணு உலை வேற வெடிக்குது. :unsure::o

அணு சக்தி மின்சாரம் எப்போதும் அபாயம் என்பது கிரீன் பீஸ் மற்றும் எங்கள் கிரீன் பிரிகேட்டின் நிலைப்பாடு. ஏற்கனவே இவை பற்றி எச்சரித்தும் தலைக்கணம் பிடிச்சவை மாற்று சுற்றுச் சூழலுக்கு ஆபதற்ற குன்றா வளங்கள் கொண்டு மின்சாரத்தை பெற முன் வர மாட்டம் என்றிட்டினம். இப்ப அப்பாவி மக்களை மீண்டும் கதிர்வீச்சுக்கு உள்ளாக்கி அழிக்கப் போகினம். :unsure::rolleyes:

கதிர்வீச்சு இயற்கையாகவும் உள்ளது. வாயு மண்டலத்தில் ரடொன் (Rn) வாயு வடிவிலும் அது காணப்படுகிறது. மற்றும் பாறைகளில் வீடுகள் கட்டப் பயன்படும் பொருட்களில் எல்லாம் இவை காணப்படுகின்றன. பலருக்கு தெரியாது மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ரடொன் ஆபத்தான அளவில் கதிர்வீச்சோடு பூட்டப்பட்டுள்ள வீடுகளுக்குள் அடைந்து கிடப்பது. அவையும் புற்றுநோயை குறிப்பாக சுவாசப்பை புற்றுநோயை ஏற்படுத்தும்.

இப்போ இயற்கையாக உள்ள கதிர்வீச்சோடு செயற்கையாக உருவாக்கப்படும் கதிர்வீச்சும் சேரப் போகிறது. தற்போதைய கணிப்பின் படி 400 millisieverts அளவு கதிர்வீச்சு ஜப்பானில் பதிவாகியுள்ளது. 100 millisieverts நீண்ட காலம் எதிர்கொண்டால் கொஞ்சம் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். 1000 millisieverts க்கு அதிகமாக எதிர் கொண்டால் தான் உடனடி உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் தாக்கத்தை அதிகரிக்கும் விளைவுகள் தோன்றும்.

கதிர்வீச்சில் இருந்து தப்ப.. அடைக்கப்பட்ட வீடுகளுக்குள் இருப்பது.. சுவாசத்தின் வழி கதிர்வீச்சுக் கூறுகளை உடலுக்குள் எடுக்காமல் இருக்க சுவாச பாதுகாப்பு மூக்கு மூடி.. மற்றும் கண்களை பாதுகாக்க கண்ணாடி மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புள்ள அங்கிகள் அணிவது சிறந்தது.

வருமுன் காப்பதை விட்டு வந்த பின் எல்லாரும் பதறி அடியுங்கோ. வருமுன் காக்க குரல் கொடுங்கோ என்றா கொடாதேங்கோ. இப்ப வாங்கோ.. விழுந்தடிச்சுக் கொண்டு. :o:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் கொஞ்சநாளைக்கு மழையில் நனையாமல் திரிவது நல்லது. அடிக்கின்ற காற்றைப் பார்த்தால், கனடா அமெரிக்காவிலும் குறைவான தாக்கத்தை உணரலாம் போலுள்ளது.

இருப்பினும், சிலர் சந்தோசப்படுவது போலல்ல. ஒரு இடத்தில் இயற்கையழிவால் பாதிப்பு வந்தால் நிச்சயம் அதற்கான தாக்கத்தையும் அனைவரும் உணரவேண்டித் தான் வரும்.

மீண்டும் ஒரு தடவை தமிழர் பகுதிகளுக்கு சுனாமி வந்தால் அதில் இருந்து பாதுகாக்கின்ற சக்தி எம்மிடம் இருக்கின்றதா??

Link to comment
Share on other sites

- The rods are still radioactive and potentially as hot and dangerous as the fuel rods inside the reactors if not kept submerged in water.

- “The only ideas we have right now are using a helicopter to spray water from above, or inject water from below,” a power company official said at a news conference.

- “We believe action must be taken by tomorrow or the day after.”

- The explosion released a surge of radiation 800 times more intense than the recommended hourly exposure limit in Japan.

- At least 750 workers evacuated, but 50 workers stayed behind ('Heroes' battle to control nuclear plant )

- "It's pretty clear that they will be getting very high doses of radiation. There's certainly the potential for lethal doses of radiation. They know it, and I think you have to call these people heroes."

- By early afternoon radiation levels had plunged, according to the International Atomic Energy Agency in Vienna

- but the reactors are not yet releasing high levels of radiation on a sustained basis, Japanese officials said.

- In Tokyo the metropolitan government said Tuesday it had detected radiation levels 20 times above normal over the city, though it stressed that such a level posed no immediate health threat and that readings had dropped since then.

http://www.nytimes.com/2011/03/16/world/asia/16nuclear.html?hp

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/15/japan.nuclear.reactors/index.html?hpt=T1&iref=BN1

Link to comment
Share on other sites

பண இலாபம் கருதியும் அணு உற்பத்தியின் எதிர்காலம் குறித்தும் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வுடன் விளையாடுகிறார்கள் - செர்நோபல் அணு அழிவில் சுத்திகரிப்பில் ஈடுபட்ட வல்லுனர்

Chernobyl clean-up expert slams Japan, IAEA

- Greed in the nuclear industry and corporate influence over the U.N. watchdog for atomic energy may doom Japan to a spreading nuclear disaster, one of the men brought in to clean up Chernobyl said on Tuesday.

- Corporations and the United Nations' International Atomic Energy Agency (IAEA) of wilfully ignoring lessons from the world's worst nuclear accident 25 years ago to protect the industry's expansion.

- "After Chernobyl all the force of the nuclear industry was directed to hide this event, for not creating damage to their reputation. The Chernobyl experience was not studied properly because who has money for studying? Only industry.

- "But industry doesn't like it," he said in an interview in Vienna where the former director of the Soviet Spetsatom clean-up agency now teaches and advises on nuclear safety. Austria's environment ministry has used him as an adviser.

- Andreev said a fire which released radiation on Tuesday involving spent fuel rods stored close to reactors at Fukushima looked like an example of putting profit before safety:

- "The Japanese were very greedy and they used every square inch of the space. But when you have a dense placing of spent fuel in the basin you have a high possibility of fire if the water is removed from the basin," Andreev said.

- The IAEA should share blame for standards, he said, arguing it was too close to corporations building and running plants. And he dismissed an emergency incident team set up by the Vienna-based agency as "only a think-tank not a working force":

- "This is only a fake organization because every organization which depends on the nuclear industry - and the IAEA depends on the nuclear industry - cannot perform properly. "It always will try to hide the reality.

http://www.reuters.com/article/2011/03/15/us-chernobyl-clean-up-expert-slams-japan-idUSTRE72E7AL20110315

Link to comment
Share on other sites

- New fire reported at Fukushima reactor No. 4

- புதிய நெருப்பு உலை 4 இல் ( மூன்றாவதில் ஏற்பட்ட தீ முன்னர் அணுக்கசிவை காற்றில் விட்டது. தீ அணைந்து அதன் தாக்கமும் குறைந்திருந்தது)

http://content.usatoday.com/communities/ondeadline/post/2011/03/new-fire-reported-at-fukushima-reactor-no-4/1

- 'அணுக் கதிர் வீச்சு காற்றில் கலந்தது'

- ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் இருந்து டோக்கியோ செல்லும் பல விமானங்கள் ஓடவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110315_japanupdate.shtml

- அணுக்கதிர்வீச்சு அச்சம் ஏற்பட்ட நிலையில், ரோக்கியோ பங்குச் சந்தை, இன்று இரண்டாவது நாளாகப் பெரும் சரிவைச் சந்தித்தது.

- நேற்று 6 சதவீதம் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தையின் பங்குகளின் பெறுமதிகள், இன்று 10.55 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

- இதேவேளை, நிலநடுக்கம், மற்றும் சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, மற்றும் உதவி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

- இரண்டாயிரத்து நானூறு பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை, பத்தாயிரத்தை விட அதிகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- ஐந்து லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளார்கள்.

- 80,000 வீடுகள் வரை பாதிக்கபட்டுள்ளன .

- 700,000 வீதிகள் பாதிக்கபட்டுள்ளன .

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6960

"பூகம்பமும், சுனாமியும் ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய போதும், ஜப்பானியர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றனர்' என, ஜப்பான் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=206776

Link to comment
Share on other sites

ஜப்பானின் கடைசி முயற்சி - அந்த ஐம்பது "தியாகிகள்"

- ஜப்பானின் ஒரு பெரிய அழிவுக்கு குறுக்காக கடைசி ஐம்பது தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளார்கள். ஏற்கனேவே கடைசி தொகுதியாக பேர் அணு ஆலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்

- இந்த ஐம்பது பெரும் தாமாக முன்வந்தர்களா இல்லை மேலிடத்தால் பணிக்கப்பட்டர்களா என தெரியவில்லை.

- முதுகில் பாம் கூடிய "ஒக்சிஜன் சிலிண்டர்களை" சுமந்தபடி இருளில், கையில் உள்ள ஒளிப்பாய்ச்சல் உடன் உள்ளே செல்கிறார்கள்

- அவர்களின் நோக்கு - கடல் தண்ணீரை ஊற்றி, அணுக்கதிர் கசிவை தடுத்து, தமது சக மக்களை, மில்லியன்கள் மக்களை, காப்பாறுவதே!

- உள்ளே சென்ற அனைவரும் 250 millisieverts from 100 millisieverts கதிர்வீச்சுக்கு உள்ளாகலாம், அதாவது தமது உயிரை நாட்டுக்காக தரலாம்.

[size="3"]Last Defense at Troubled Reactors: 50 Japanese Workers

A small crew of technicians, braving radiation and fire, became the only people remaining at the Fukushima Daiichi Nuclear Power Station on Tuesday — and perhaps Japan’s last chance of preventing a broader nuclear catastrophe.

They crawl through labyrinths of equipment in utter darkness pierced only by their flashlights, listening for periodic explosions as hydrogen gas escaping from crippled reactors ignites on contact with air.

They breathe through uncomfortable respirators or carry heavy oxygen tanks on their backs. They wear white, full-body jumpsuits with snug-fitting hoods that provide scant protection from the invisible radiation sleeting through their bodies.

They are the faceless 50, the unnamed operators who stayed behind. They have volunteered, or been assigned, to pump seawater on dangerously exposed nuclear fuel, already thought to be partly melting and spewing radioactive material, to prevent full meltdowns that could throw thousands of tons of radioactive dust high into the air and imperil millions of their compatriots.

The company continued to fight problems in several reactors on Wednesday, including a fire at the plant.

The workers are being asked to make escalating — and perhaps existential — sacrifices that so far are being only implicitly acknowledged: Japan’s Health Ministry said Tuesday that it was raising the legal limit on the amount of radiation exposure to which each worker could be exposed, to 250 millisieverts from 100 millisieverts, five times the maximum exposure permitted for nuclear plant workers in the United States.

http://www.nytimes.com/2011/03/16/world/asia/16workers.html

Link to comment
Share on other sites

கடைசி செய்திகளின் படி, அந்த ஐம்பது பெரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளர்கள். அதாவது அந்த ஆலைகளில் இப்பொழுது ஒருவரும் இல்லை என அரசு கூறியுள்ளது.

ஆனால் மேலதிக தகவல்களை பின்னர் தருவதாக சொல்லியது.

இது பெரும் அழிவின் அறிகுறியா என வினவப்பட்டுள்ளது.

Breaking News : Workers at Japan's damaged nuclear power plant have suspended operations and evacuated, chief Cabinet secretary says. (CNN)

Link to comment
Share on other sites

ஜப்பானில் தொடர்கிறது துயரம் : 3வது அணுஉலை வெடித்தது!

டோக்கியோ : பயங்கர பூகம்பம், அதைத் தொடர்ந்த சுனாமியால் ஏற்பட்ட பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஜப்பானில், வெடித்த அணுஉலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் ஏற்படும் அபாயம் பல மாதங்கள் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, 3வது அணுஉலை இன்று வெடித்தது. மேலும் ஒரு அணு உலை வெடிக்கும் அபாயத்தில் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு அமைச்சர்களுடன் ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் பேசிய ஜப்பான் பிரதமர், நாடு மிக மோசமான அழிவை சந்தித்துள்ளதாக கூறிய அவர், அணு உலையில் அருகே தங்கியிருக்கும் மக்கள் (சுமார் 30 கி.மீ., தொலைவு வரை) பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து, பியூகுஷிமா டைச்சி அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பல லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பூகம்பம் - சுனாமி - எரிமலை சீற்றம் - அணு உலையில் வெடிப்பு என அடுக்கடுக்காக ஜப்பானை ஆபத்து சுற்றி வளைத்துள்ளது. தொடரும் இந்த ஆபத்துகளால் வெளிநாட்டினர் தாயகம் திரும்ப விமான நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிக மோசமான அழிவை ஜப்பான் இப்போது சந்தித்துள்ளது. அப்போது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் பாதிப்பு, ஜப்பானில் இன்றும் தொடரும் நிலையில், பூகம்பத்தால் வெடித்த அணுஉலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் ஆபத்து அதிகரித்துள்ளது.

அணுஉலையை குளிர்விப்பதில் முயற்சி!

மியாகி மாநிலம், பியூகுஷிமா டைச்சி அணுஉலையின் அணுவை பிளக்கும் கருவிகள் (ரியாக்டர்ஸ்) பூகம்பத்தின் சக்தியால் அதிக வெப்பம் அடைந்தன. அவற்றை குளிர்விப்பதில் ஜப்பான், அமெரிக்க அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

எனினும், நேற்று முன்தினம் வெடித்த ஒரு கருவியில் இருந்து கதிர்வீச்சு நீடிக்கிறது. அதனால், பூகம்பம், சுனாமிக்கு அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜப்பானி யர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலி அல்லது நிரந்தர செயலிழப்பை சந்திக் கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஆய்வு: அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குழு, ஜப்பானின் பியூகுஷிமா டைச்சி அணுஉலை பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்து கதிர்வீச்சின் தீவிரம் பற்றி நேற்று கணக்கிட்டது.

உலையில் இருந்து சுமார் 100 கி.மீ. தள்ளி பறந்தபோது காற்றில் சேகரிக்கப்பட்ட கதிரியக்க துகள்களில் உடல்நலனை பாதிக்கும் சீசியம்-137, அயோடின்-121 என்ற அளவில் பரவியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பூகம்பத்தால் அதிக வெப்பமடைந்த டைச்சி அணுஉலை உடனடியாக மூடப்பட்ட நிலையில், முதல் அணுஉலை கடந்த 11ம் தேதி வெடித்தது. அதனால் கதிரியக்கம் வெளிப்பட்டு பெரும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், 3வது அணுஉலையின் வெப்பம் அதிகரித்ததால் அது வெடிக்கக்கூடும் என்று நேற்று எச்சரிக்கப்பட்டது. அதை குளிர்விக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

உலை வெடித்தது: எனினும், பூகம்பத்தால் ஏற்பட்ட வெப்பம் கட்டுப்படாமல் இன்று காலை 3வதாக ஹைட்ரஜன் அணுஉலை வெடித்துச் சிதறியது. அது வெடித்த சத்தம் 40 கி.மீ. தூரம் கேட்டது. அங்கிருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ள ரீகன் விமான தளத்தில் அதன் கதிர்வீச்சு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுஉலையில் இருந்து வெண்புகை வெளிப்பட்டு அந்தப் பகுதியை மூடியது.

வெடிக்கும் நிலையில் ஒரு அணு உலை: யூனிட் 2ன் மேலும் 1 ரியாக்டர்களின் எரிபொருள் கம்பிகள் (கோர்) வெப்பம் குறையாமல் வெடிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை உருகி விரைவில் வெடித்து சிதறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுபற்றி பியூகுஷிமா டைச்சி அணுமின் நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘’மேலும் 1 ரியாக்டர்களின் எரிபொருள் கடத்தும் கம்பிகளின் வெப்பம் கடல் நீரால் குளிரவில்லை. அவை தொடர்ந்து அதிக வெப்பத்துடன் உருகும் நிலையில் உள்ளன’’ என்றார்.

மயான பூமி போல் காட்சியளிக்கும் டைச்சி

பியூகுஷிமா டைச்சி பகுதியில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியே மயான பூமி போல் காட்சியளிக்கிறது.

அணுஉலைகளின் வெப்பமூட்டு கருவிகள் கடல் நீரால் தொடர்ந்து குளிர்விக்கப்பட்டு வந்தாலும், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க பல மாதங்கள் ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அணுஉலையின் வெப்பத்தைக் குறைக்க, தொடர்ந்து கடல் நீரை ரியாக்டர் கருவியில் செலுத்துவார்கள். வெப்பத்தில் அது கொதித்து ஆவியாகும். அதன் அழுத்தத்தால் கருவி வெடிக்காமல் தடுக்க, ஆவியை வெளியேற்றுவார்கள். அதில் அணுக்கதிர்கள் வெளியாகும். கருவி முற்றிலும் குளிரும் வரை இந்த பணி தொடரும். இதற்கு சில வாரங்கள் பிடிக்கும். அதுவரை வெளியேற்றப்படும் கதிரியகத்தின் பாதிப்பு, ஜப்பானில் நீண்ட காலம் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சமாளிப்பாரா பிரதமர்

ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத அழிவில் இருந்து நாட்டை மீட்பதில் பிரதமர் நவ்டோ கான் சமாளிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி குறைவு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு ஆகியவற்றை கான் சந்தித்து வந்தார். பிரதமரின் செயல்பாடு குறித்து வெளியான ரேட்டிங்கிலும் அவரது செல்வாக்கு கடும் சரிவில் இருந்தது.

இந்த நிலையில், பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமிக்கு கிழக்கு ஜப்பான் சின்னாபின்னமாகி இருக்கிறது. சர்வதேச உதவிகளைப் பெறுதல், மிக விரைவாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுதல், குறுகிய காலத்தில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் அவரது பங்கு பற்றி ஒட்டுமொத்த நாடே கண்காணிக்கிறது.

விமான நிலைய நெரிசல்

ஜப்பானைத் துரத்தும் பேரழிவுகளால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அணுஉலைகள் வெடித்து பேராபத்து ஏற்பட்டு வருவதால் தாயகம் திரும்ப விமான நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் டோக்கியோ, ஹனேடா விமான நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என்றும், அங்கிருக்கும் தங்கள் நாட்டினரும் உடனடியாக தாயகம் திரும்புமாறும் பல நாடுகள் தூதரகங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றன.

http://dinakaran.com/bannerdetail.aspx?id=31525&id1=12

Link to comment
Share on other sites

அணு தொழில்நுட்பங்கள் மனித குலத்திற்கு தீமை பயற்பன. இந்த விடயத்தில் ஜப்பான் முழு விடையத்தையும் வெளியே கூறவில்லை. சராசரியாக ஒரு அணு உலை அமைக்க 10 பில்லியன் டொலர்கள் வரை செலவாகும். எனவே இந்த அணு உலைகளை காங்கிறீட் இனால் ஆழப்புதைக்க ஜப்பான் முன்வராது. இது தொடர்ந்தும் ஒரு தலைவலியாகவே இருக்க போகிறது.

Link to comment
Share on other sites

- ஜப்பானிய அரசர் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என வேண்டினார்

- கதிர் வீச்சு கூடியதால் திருப்பி அழைக்கப்பட்ட நிபுணர்கள் மீண்டும் ஆலைகளில்

- உலங்குவானூர்தி மூலம் நீரை ஆலைகள் மீது போடும் முயற்சி கைவிடப்பட்டது

- இரண்டாவது ரியாக்டர் மூலமும் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்றாவது ரியாக்டர் கசிவை ஏற்படுத்தியுள்ளது.

http://www.nytimes.com/

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/second-reactor-at-nuclear-plant-may-have-ruptured-officials-say/article1943790/

Link to comment
Share on other sites

Japan’s earthquake shifted balance of the planet

By Liz Goodwin | US News - The Lookout – Mon, 14 Mar, 2011 9:56 AM EDTShareretweetEmailPrint

AP110311126962

Last week's devastating earthquake and tsunami in Japan has actually moved the island closer to the United States and shifted the planet's axis.

The quake caused a rift 24 kilometres below the sea floor that stretched nearly 300 kilometres long and 150 kilometres wide, according to the AP. The areas closest to the epicenter of the quake jumped a full 13 feet closer to the United States, geophysicist Ross Stein at the United States Geological Survey told The New York Times.

The world's fifth-largest, 8.8 magnitude quake was caused when the Pacific tectonic plate dived under the North American plate, which shifted Eastern Japan towards North America by about 13 feet (see NASA's before and after photos at right). The quake also shifted the earth's axis by 6.5 inches, shortened the day by 1.6 microseconds, and sunk Japan downward by about two feet. As Japan's eastern coastline sunk, the tsunami's waves rolled in.

Why did the quake shorten the day? The earth's mass shifted towards the center, spurring the planet to spin a bit faster. Last year's massive 8.8 magnitude earthquake in Chile also shortened the day, but by an even smaller fraction of a second. The 2004 Sumatra quake knocked a whopping 6.8 micro-seconds off the day.

After the country's 1995 earthquake, Japan placed high-tech sensors around the country to observe even the slightest movements, which is why scientists are able to calculate the quake's impact down to the inch. "This is overwhelmingly the best-recorded great earthquake ever," Lucy Jones, chief scientist for the Multi-Hazards project at the U.S. Geological Survey, told The Boston Herald.

The tsunami's waves necessitated life-saving evacuations as far away as Chile. Fisherman off the coast of Mexico reported a banner fishing day Friday, and speculated that the tsunami knocked sealife in their direction.

http://ca.news.yahoo.com/blogs/dailybrew/japan-earthquake-shifted-balance-planet-20110314-065608-417.html

Link to comment
Share on other sites

புதிய மின்சார இணைப்புக்களை வழங்குவதன் மூலம் அணுக்கசிவை தடுக்க முடியும் என அணு ஆலைகளை நிர்வகிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.

தாம் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மட்டுமே வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும் என ஒரு சாரார் நம்புகின்றனர்.

Japan's nuclear plant operator says new power line may prevent meltdown

The operator of Japan's tsunami-crippled nuclear plant says it has almost completed a new power line that could restore electricity to the complex and solve the crisis that has threatened a meltdown.

Tokyo Electric Power Co. spokesman Naoki Tsunoda said early Thursday the power line to Fukushima Daiichi is almost complete. Officials plan to try it “as soon as possible” but he could not say when.

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/japans-nuclear-plant-operator-says-new-power-line-may-prevent-meltdown/article1943790/

Link to comment
Share on other sites

ரியாக்டர் 4 இல் உள்ள அணுக்கலம் முற்று முழுதாக நீரில்லாமல் காற்றுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளது - அமெரிக்க அதிகாரி.

இது முழுக்கசிவுக்கு வழிகோலும் என அவர் கூறினார்.

Official: Spent fuel rods exposed, heightening concerns

Spent fuel rods in Unit 4 of Japan's stricken Fukushima Daiichi nuclear plant have been exposed, resulting in the emission of "extremely high" levels of radiation, the head of the U.S. Nuclear Regulatory Commission said Wednesday.

"What we believe at this time is that there has been a hydrogen explosion in this unit due to an uncovering of the fuel in the fuel pool," Gregory Jaczko told a House energy and commerce subcommittee hearing. "We believe that secondary containment has been destroyed and there is no water in the spent fuel pool, and we believe that radiation levels are extremely high, which could possibly impact the ability to take corrective measures."

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/16/japan.nuclear.reactors/index.html?hpt=T1

U.S. Calls Radiation ‘Extremely High’ and Urges Deeper Caution in Japan

The chairman of the United States Nuclear Regulatory Commission gave a significantly bleaker appraisal of the threat posed by Japan’s nuclear crisis than the Japanese government, saying on Wednesday that the damage at one crippled reactor was much more serious than Japanese officials had acknowledged and advising Americans to evacuate a wider area around the plant than the perimeter established by Japan.

http://www.nytimes.com/2011/03/17/world/asia/17nuclear.html?_r=1&hp

Link to comment
Share on other sites

- உலங்குவானூர்தி மூலம் மூன்றாம் நாலாம் ரியாக்க்டர்கள் மீது தண்ணீர் வீசப்பட்டது.

- எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என சொல்லப்படுகின்றது

- கிட்டத்தட்ட நூறு தடவைகள் வீசினால் மட்டுமே எதிர்பார்த்த விளைவுகள் பெறப்படலாம்

- இராணுவமும் நிலத்தால் தண்ணீரை எடுத்து செல்வதாக சொல்லப்படுகின்றது

Helicopters dump water on nuclear plant in Japan

Initially, just a few drops were carried out before the operation was suspended. An NHK commentator said about 100 would be needed for the operation to succeed.

During the afternoon, engineers were planning to begin the process of restoring power to the stricken nuclear complex, a government official said. The complex lost its power Friday, when a 9.0 earthquake followed by a tsunami hammered northeastern Japan.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/16/japan.nuclear.reactors/index.html?hpt=T1

Reactor 1:

CURRENT STATUS: The outer building is damaged and it is presumed that there was a partial meltdown. Small amounts of radioactivity have been vented.

MARCH 12, 8:20 PM: Workers start flooding the reactor with seawater in a desperate effort to cool it.

MARCH 12, 5:00 PM: Radioactive materials, including an isotope of iodine, are detected.

MARCH 12, 3:36 PM: An explosion blows the roof and top walls off the reactor building. The reactor containment vessel is not significantly damaged.

MARCH 12, 5:22 AM: The pressure-suppression pool stops working properly.

MARCH 12, 3:48 AM: Operators start injecting water into the reactor to cool it.

Reactor 2:

CURRENT STATUS: A partial meltdown is presumed to have occurred. The containment vessel has been breached and some radioactivity has vented.

MARCH 15, 6:14 AM: An explosion near the pressure suppression pool damages the containment vessel around the reactor.

MARCH 12, 3:48 AM: Operators start injecting water into the reactor to cool it.

MARCH 11, 3:41 PM: Backup diesel generators for running the plant's cooling systems fail.

MARCH 11, 2:46 PM: An earthquake sparks a tsunami. The reactor shuts down automatically, though its fuel continues to produce large amounts of heat.

Reactor 3:

CURRENT STATUS: The reactor building has been damaged, the containment vessel may have ruptured and radioactive steam may be being released.

MARCH 17, 11:00 AM: Helicopters begin dumping water on the building in an effort to cover the spent fuel, which may have been exposed to the air.

MARCH 14, 11:01 AM: An explosion damages the reactor building and the primary containment vessel. Eleven workers are injured.

MARCH 13, 9:00 AM: Plant operators detect increasing levels of radioactive material.

MARCH 13, 6:00 AM: Injection of water fails and officials warn that an explosion is possible.

MARCH 12, 8:25 PM: A safety valve is opened to reduce pressure and seawater containing boric acid is injected in the reactor.

MARCH 12, 3:48 AM: Operators start injecting water into the reactor to cool it.

MARCH 11, 3:41 PM: Backup diesel generators for running the plant's cooling systems fail.

MARCH 11, 2:46 PM: An earthquake sparks a tsunami. The reactor shuts down automatically, though its fuel continues to produce large amounts of heat.

Reactor 4:

CURRENT STATUS: Spent fuel rods in a water pool may have become exposed to air, emitting radioactive gases. An explosion and fire have damaged the building.

MARCH 17, 5:00 AM: The chairman of the U.S. Nuclear Regulatory Commission says the water covering the spent fuel rods may have boiled off.

MARCH 16, 5:45 AM: A fire is reported in the building. An inspection 30 minutes later finds no sign of a fire.

Reactor 5:

CURRENT STATUS: The reactor is shut down and the building is not damaged. But there is concern that spent fuel in the building may become exposed to air.

MARCH 11, 2:46 PM: An earthquake hits just off the coast, sparking a tsunami. The reactor was already shut down for maintenance.

Reactor 6

CURRENT STATUS: The reactor is shut down and the building is not damaged. But there is concern that spent fuel in the building may become exposed to air.

MARCH 11, 2:46 PM: An earthquake hits just off the coast, sparking a tsunami. The reactor was already shut down for maintenance.

http://www.nytimes.com/interactive/2011/03/16/world/asia/reactors-status.html?hp

Link to comment
Share on other sites

- அமெரிக்கா உட்பட பல நாடுகள் தமது பிரசைகளை ஜப்பானில் இருந்து அழைத்து வர பிரத்தியேக விமானங்களை அனுப்பியுள்ளன

- 50 தொன் தண்ணீர் வரை இதுவரை ஊற்றப்பட்டுள்ளது

- The military also announced that it had postponed plans to drop water on Reactor No. 4, which Gregory Jaczko, the chairman of the United States Nuclear Regulatory Commission, on Wednesday pinpointed as a cause for serious alarm.

http://www.nytimes.com/2011/03/18/world/asia/18nuclear.html?hp

Is the U.S. more worried about nuclear crisis than Japan?

he United States showed increasing alarm about Japan's nuclear crisis Wednesday and urged its citizens to stay clear of an earthquake-crippled power plant, going further in its warnings than Japan itself.

The State Department said the United States has chartered aircraft to help Americans leave Japan and had authorized the voluntary departure of family members of diplomatic staff in Tokyo, Nagoya and Yokohama — about 600 people.

"The State Department strongly urges U.S. citizens to defer travel to Japan at this time and those in Japan should consider departing," it said.

http://www.thestar.com/news/world/article/955395--is-the-u-s-more-worried-about-nuclear-crisis-than-japan?bn=1

Link to comment
Share on other sites

Forecast for Plume's Path Is a Function of Wind and Weather

எவ்வாறான பாதையில் கதிர்வீச்சு செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் சொடுக்கவும்.

http://www.nytimes.com/interactive/2011/03/16/science/plume-graphic.html?ref=science

Link to comment
Share on other sites

ஜப்பானில் பூகம்பத்தால் பாதிப்பிற்குள்ளாகி செயலிழந்த அணு உலைகளில் எரிபொருள் கற்றைகள் வெப்பமடைந்து வெடித்துச் சிதறுவதைத் தடுக்க ஹெலிகாப்டர் மூலம் அவைகளின் மீது நீரை ஊற்றி தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜப்பான் இராணுவத்தின் சினூக் ஹெலிகாப்டர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சினூக் ஹெலிகாப்டர்கள் கடலின் மீது பறந்து நீரை கொண்டு வந்து, அணு உலைகளின் மீது ஊற்றுகின்றன. ஆனால் அங்கு அடிக்கும் காற்றினால் நீர் முழுவதும் அணு உலைகளின் மீது விழவில்லை.

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.ஆயினும் இம்முயற்சி பெரிய பலனை அளிக்காததால் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அணு உலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அணுக் கதிர் வீச்சு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக ஜப்பான் அரசு செயலர் யூகியோ ஈடானோ கூறியுள்ளார்.

இதற்கிடையே கதிர் வீச்சு தாக்கத்தால் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைப் போன்று ஜப்பானிலும் பெரும் அணு விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது என்று பிரான்ஸ் நாட்டு அணு விஞ்ஞானி கூறியுள்ளார்.

பிரான்சின் அணுக் கதிர் வீச்சு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தியரி சார்ல்ஸ், “அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது. ஞாயிற்றுக் கிழமை முதல் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் தீர்வைத் தரவில்லை. எனக்கு நம்பிக்கையில்லை” என்று கூறியுள்ளார்.

அப்படி ஒரு விபத்து ஏற்பட்டால் எந்த அளவிற்கு கதிர் வீச்சு அபாயம் இருக்கும் என்று கேட்டதற்கு, “செர்னோபில் விபத்தில் வெளியான கதிர் வீச்சிற்கு இணையாக இருக்கும்” என்று சார்ல்ஸ் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜப்பான் பூகம்பத்திலும், ஆழிப்பேரலைத் தாக்குதலிலும் உயரிழந்தோர் எண்ணிக்கை 5,178 பேர் என்றும், மேலும் 8,606 பேர் காணவில்லை என்றும் ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/17/1110317019_1.htm

Link to comment
Share on other sites

- அணு ஆலைகளை நிர்வகிக்கும் நிறுவனம் முதல் தடைவையாக இந்த ஆலைகளை மண்ணாலும் சீமந்து மூலமும் மூடி விடுவதும் ஒரு தெரிவு என கூறியுள்ளது. இதர தெரிவுகள், முயற்சிகள் பயனளிக்காதா நிலையில் செர்நோபால் மாதி ஒரு அழிவை தடுக்க இதுவே இறுதி முயற்சியாக அமையலாம்.

- இரண்டாவது ரியாக்டருக்கு மின்சாரம் வழங்கும் முயற்சி தொடருகின்றது. அதேவேளை மூன்றாவது ரியாக்டர் மீது தண்ணீர் ஊற்றும் முயற்சியும் தொடருகின்றது.

Japanese engineers conceded on Friday that burying a crippled nuclear plant in sand and concrete may be the only way to prevent a catastrophic radiation release, the method used to seal huge leakages from Chernobyl in 1986.

Officials said they still hoped to fix a power cable to at least two reactors to restart water pumps needed to cool overheating nuclear fuel rods. Workers also sprayed water on the No. 3 reactor, one of the most critical of the plant’s six.

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/japan-weighs-need-to-bury-nuclear-plant/article1946938/

Link to comment
Share on other sites

செர்நோபால் அணு ஆலைக்கு ச்சிமெந்தினால் கட்டப்பட்ட சமாதி நிரந்தரமானதல்ல. அதனுள் இருக்கும் கதிரணுக்கள் தாமாகச் செயலிழந்து போக பல நூறு ஆண்டுகள் ஆகும். அதுவரை அவை வெப்பமடைந்து கொண்டே இருக்கும். ஆகவே பாதுகாப்பிற்காக ஏற்கனவே கட்டப்பட்ட சமாதிக்கு மேலாக கைன்னொரு உறுதியான சமாதியை இப்பொது கட்ட வேண்டும். அதற்கான செலவு பில்லியன் டொலர்களாகும். இப்பணம் அவர்களிடம் இல்லாததால் இழுத்தடிக்கிறார்கள்.

சுனாமி தாக்கிய அன்றே பிரெஞ்சு அரசாங்கம் யப்பானுக்கு உதவுவதாகக் கேட்டது. அதை யப்பான் அப்போது மறுத்து விட்டது. நேற்று பிரான்ஸிலிருந்து ஒரு விமானத்தில் acide borique என்ற அமிலத்தையும் பாதுகாப்பு ஆடைகளையும் கொண்டு செல்லப்பட்டது. இந்த அமிலம் கதிர்வீச்சைக் கட்டுப் படுத்தும் என்று கூறப்படுகிறது. சுமார் 100 தொன் வரையிலான இந்த அமிலம் அங்கு கொண்டுசெல்லப் படவுள்ளது.

Link to comment
Share on other sites

ஜப்பானியர்களுக்கு தங்களால் எதுவும் முடியும் என்கிற எண்ணம் அதிகம். சிங்கப்பூரில் அவர்களது நிறுவனங்களுடன் வேலை செய்தபோது நான் அறிந்துகொண்டது. இங்கு சிலருடன் கதைத்தபோது அதையே சொன்னார்கள்.

அவர்களது வழிமுறைகள் சிறிது வித்தியாசமானவை. ஒருவருக்கு ஒரு சில வேலைகளைக் கொடுத்து அறிவுறுத்தல்களையும் கொடுத்துவிட்டால் அவர் அதையே செய்து கொண்டிருப்பார். மேலதிகாரியிடம் ஆலோசனை வேறுவிதமான யோசனை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். அவரவர் அவரவர் வேலையைச் செய்வதனால் அதிக முன்னேற்றம் கண்டார்கள். :unsure:

ஆனால் அவர்களது வேலைத்திட்டமிடல் வடிவமைப்பு போன்றவற்றில் குறைகள் அமைந்திருக்கும் பட்சத்தில் பிரச்சினைகள் பாரதூரமாகிவிடுகின்றன. ஏனென்றால் அவை போதுமான அளவுக்கு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

பின்புல மின்பிறப்பாக்கியை பாதுகாக்கத் தவறியமை திட்ட வடிவமைப்பின் கோளாறே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.